நேரம் – 4
பாரதியின் கரத்தை இழுத்துக் கொண்டு சென்று அந்த மற்றொரு கரம் அவளை ஜனக்கூட்டம் இல்லாத வயல்வெளிகளுக்கு மத்தியில் இருந்த ஒரு புளிய மரத்தின் அருகே வந்து நிறுத்தியது….
அந்த மற்றொரு கரம் இழுத்து சென்ற வேகத்தில் பாரதி மூச்சு வாங்கினாள்…
“என்ன பரத் எதுக்காக என் கைய புடிச்சு இப்படி இழுத்துட்டு வந்தீங்க!!! நான் என்ன கொலை குத்தமா பண்ணிட்டேன் !!!!!

“பாரதி நீ எதுக்காக நந்தினியும் அவங்க அம்மாவையும் அப்படி வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருந்த ????
“என்னது நந்தினியோட அம்மாவா ???? “யார் அந்த நந்தினி ????
யார் அந்த அம்மா ????”
என்று அவனையே திருப்பி கேட்டாள் பாரதி …..
“அப்போ உனக்கு அழுதுட்டு இருந்த அந்த பொண்ணு அவங்க அம்மா யாருன்னு உனக்கு தெரியாதா ????”
“அட அரை லூசு இந்த ஊர்ல எனக்கு உன்னையும் உன் பக்கத்து வீட்டு பொண்ணு சோப்னாவ மட்டும் தான் தெரியும் வேற யாரையும் தெரியாது !!!!”
“அப்போ நீ எப்படி கரெக்டா கிரைம்
ஸ்பாட்டுக்கு வந்த ????”
“உன்ன ஃபாலோ பண்ணி வந்தேன்!!!!”
“அடி சண்டாளி அப்ப நைட் எங்கடி போன ?????”
“அதான் உன் பக்கத்து வீட்டு தோழி இருக்காளே !!!!!! சோப்னா
அவ வீட்டு மொட்டை மாடியில் போய் நேத்து நைட் ஒரு ரெண்டு மணிக்கு உங்க வீட்ல இருந்து எழுந்து அங்க போய் படுத்து கிட்டேன் !!!!!!!”
“அப்புறம் காலைல யாராவது மாடிக்கு வந்து உன் தோழி வீட்ல யாராவது பாத்துட்டு என்னை ஏதாச்சும் கேப்பாங்கன்னு கொஞ்சம் சீக்கிரமாக எழுந்தேன் !!!!!!”
“நீ வெளியே வரியா இல்லையான்னு பாத்துட்டு இருந்தேன் !!!!
அதே நேரம் தான் நீ வெளியே வந்த எங்கேயோ போன உன்னை ஃபாலோ பண்ணி நானும் இங்க வந்தேன் !!!!”
“ஆமா சோப்னா என்னோட பக்கத்து வீடுனு உனக்கு எப்படி தெரியும் ????? அதுவும் இல்லாம சோப்புனா ஓட வீடு உனக்கு எப்படி தெரியும் முதல்ல சோப்னாவ உனக்கு எப்படி தெரியும் ?????”
“அய்யய்யோ விட்டா நந்தினி கூட தெரியுமா என்று கேட்பானே !!!!
வக்கீல் கரெக்டா பாயிண்டை புடிச்சுட்டான் !!!!இப்ப நான் என்னத்த சொல்ல ????
சரி ஏதோ ஒன்னு சொல்லி சமாளிப்போம் நமக்கு அது தான் நமக்கு கைவந்த கலையாச்சே !!!!!”
என்று நினைத்தவள் ,
“சோப்னா என் கூட செய்யார் கேர்ள்ஸ் ஸ்கூல்ல படிச்சவ நாங்க ரெண்டு பேரும் வேற வேற குரூப் அவ கம்ப்யூட்டர் சைன்ஸ் நான் பயோ மேக்ஸ் !!!”
“அவ உங்க ஊர் விநாயகபுரம் அப்படி என்றதுனால எனக்கு அவளை தெரியும் !!!!! அப்புறம் உங்கள பத்தி உன்கிட்ட நான் கேட்டு இருக்கேன் அவ தான் நீங்க அவளோட பக்கத்து வீடுன்னு சொன்னா அதனால எனக்கு அவளை தெரியும்!!!! அந்த வீட்டையும் எனக்கு தெரியும் போதுமா லாயர் சார் !!!! “
“இப்ப நீங்க உங்களோட இன்வெஸ்டிகேஷன் முடிச்சிட்டீங்களா இப்ப நாம அந்த கிரைம் ஸ்பாட்டை போய் பார்ப்போமா??????”
என்று அவள் சொன்ன பதிலை கேட்டு ஆசுவாசமடைந்தவன் அவளோடு நடந்து செல்ல தொடங்கினான் பாரதி தனக்கு நந்தினியை நன்றாக தெரிந்திருந்தாலும் அவளை தெரியாதது போல் தனது கேள்வியை பரத்திடம் கேட்டாள் ….
“ஆமா இறந்து போனாங்களே அவங்க யாரு?????எதுக்காக அவங்க அப்படி செத்து கெடக்குறாங்க ?????யார் அவங்களை கொலை பண்ணாங்க ????? அப்புறம் அங்க ஒரு பாப்பா ஒக்காந்து அழுதுட்டே இருந்த அந்த பாப்பா யாரு ????”
“இறந்து போன அந்த ஆன்ட்டி எங்க பக்கத்து தெருவுல சேர்ந்தவங்க நாங்க இருக்கறது மாரியம்மன் கோவில் தெரு அந்த கோவிலுக்கு பக்கத்து தெரு….
அழுதுட்டு இருந்த அந்த பொண்ணோட பேரு நந்தினி அவங்க அம்மா இப்ப இறந்து போய் இருக்காங்க !!!!!”
“இப்ப அந்த பொண்ணு நந்தினி என்ன பண்றாங்க ????”
“அந்த பொண்ணு இப்பதான் பிளஸ் டூ வே படிக்குது !!!!”
“சரி அவங்க அம்மா இப்படி செத்து கிடக்குறாங்களே நீங்க அடிச்சு புடிச்சு இந்த பக்கம் ஓடி வந்தீர்களே!!!!! உங்களுக்கு யாராவது இவங்க இறந்து போனதை சொன்னாங்களா என்ன ????”
“ஆமாண்டி எங்க அப்பா தான் சொன்னாரு!!!!”
” எங்க அம்மா இந்த பக்கம் வந்தாங்க!!!!
அப்படின்னு சொன்னாரு !!!
நான் என் அம்மா இந்த பக்கம் வராங்கன்னு கேட்டதுக்கு அப்பதான் அப்பா ரிவில் பன்றாரு!!!!
நந்தினியோட அம்மா இப்படி கொலை பண்ண பட்டு இருக்காங்கன்னு !!!!!”
“ஆமா நந்தினி ஓட அம்மா பாடி உங்களால பார்க்க முடிந்ததா அவங்க எப்படி மர்டர் பண்ணப்பட்டு இருப்பாங்கன்னு ஏதாவது உங்களுக்கு தெரிந்ததா ????”
“ஐயோ பாக்கவே அந்த பாடி கொஞ்சம் பயங்கரமா இருந்துச்சு!!! ஆனா அவங்க பாடில அந்த அளவுக்கு அதிகமாக காயும் இல்லை கழுத்து கீழே மட்டும் அதாவது வலது பக்கம் காது கீழே அங்க யாரோ எதையோ ஒரு கனமான பொருளை வச்சு அவங்கள அடிச்சிருக்காங்க!!!! அதனால அவங்க மண்ட கொலாப்ஸ் ஆகி 360 டிகிரி அளவுக்கு ஆடுற மாதிரி ஆகியிருக்கு !!!!”
“இந்த அளவுக்கு கொலை பண்ணி இருக்காங்க அந்த கொலையாளிக்கு நந்தினியோட அம்மா மேல அப்படி என்ன வெறி ????”
“மேபி இந்த மர்டர் பணத்துக்காக இல்லன்னா ரேப்ட்காக இந்த கொலை நடந்து இருக்குமோ ?????
“இல்ல அப்படி இருக்க வாய்ப்பு இல்ல ஏன்னா நந்தினி ஓட அம்மா அப்பா போலீஸ் ரெக்கவர் பண்ணிட்டாங்க!!!! அங்க எதுவுமே திருடு போகல!!!!
அது மட்டும் இல்லாம ரேப்டா இருந்திருந்தா அவங்க டிரஸ் அப்புறம் கொஞ்சம் அலங்கோலமா இருந்திருப்பாங்க !!!! அவங்க பாடில கொஞ்சம் காயங்கள் தெரிந்திருக்கும்
அப்படி ஒன்னும் தெரியல !!!!!”
அவன் இப்படி சொன்னதும் தனது தலையில் கை வைத்துக் கொண்டாள்.. பாரதி
” ஏண்டா உங்க ஊரு !!!எவ்வளவு அமைதியான ஊரு இந்த ஊர்ல முதல் முறையா கொலை விழுந்து இருக்கு இது உனக்கு விசித்திரமா தெரியல !!!!”
“எனக்கே டிஃபரண்டா தான் இருக்கு!!!!”
“எங்க ஊர்ல இப்படி எல்லாம் நடக்கிறதுக்கு வாய்ப்பே இல்ல முதல் முறையாக அப்படி நடந்து இருக்கு என்னத்த சொல்ல !!!!”
“ஒருவேளை நந்தினியோட அம்மாக்கு இல்லனா அவங்க குடும்பத்து மேல யாராவது விரோதம் இருக்கிறவங்க அவங்கள போட்டு தள்ளி இருக்கலாம் இல்லையா ?????”
“ஹேய் நீ வேற நந்தினி ஓட குடும்பம் ரொம்ப அமைதியான குடும்பம்…. அவங்க யார்கிட்டயும் வம்பு தும்பு வச்சு கிட்டது இல்லை !!!!
அவங்க குடும்பத்துல முன்பகை விரோதம் இதெல்லாம் கிடையவே கிடையாது !!!!!”
“அப்போ இதெல்லாம் யார் தான் பண்ணி இருப்பாங்க????”
என்று பாரதி அந்த மரத்தின் மீது கை வைத்து குனிந்தபடி யோசித்துக் கொண்டிருந்தாள் … தனது அருகில் இருந்த புளிய மரத்தின் மீது தனது வலது கையை வைத்து நின்றிருந்தாள்..
அப்பொழுது அவள் கையில் பிசுபிசுப்பாக ஏதோ ஒட்டியது அது என்னவென்று அவள் தனது கையை எடுத்து பார்த்தபோது….
அதிர்ந்து போனாள்!!!!!
உடனே அவர் சற்றும் தாமதிக்காமல் “பரத்!!!!” என்று கத்தினாள்..
அவளோடு நின்றிருந்த பரத் அவள் கத்திய கத்தில்
பரத் அவள் அருகே வந்து
“என்னாச்சு பாரதி????”
என்று கேட்டான் ..
தனது கையில் படிந்திருந்த பிசுபிசுப்பான திரவத்தை பரத்திடம் காண்பித்தவள்….
அதையே ஒரு வித அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.. பாரதியின் கையில் இருந்ததை வரட்டும் ஒரு அதிர்ச்சியோடு பார்த்தான் …
அது பிசுபிசுப்பான ரத்தம்…..

இதன் தொடர்ச்சி அடுத்த பகுதியில்….
ஹரிணியின் ……
“உண்மை வெளிப்படும் நேரம் “
எனது மற்ற படைப்புகளையும் வாசிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்…..
இந்த அத்தியாயத்தை வாசித்ததற்கு நன்றி !!!!!
அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்….