Loading

மயக்க நிலையிலிருந்த தியாவின் முகத்தில் ஆடவன் தண்ணீர் தெளிக்க, அதில் முகத்தில்பட்ட தண்ணீரை கைக்கொண்டு வழித்து எடுத்தவள் தன்னையே முறைத்துக்கொண்டிருக்கும் ரேயனை கண்டு கொள்ளாமல் எழுந்து அமர,

 

அப்போது இருவருக்குமான பழச்சாறுருடன் உள்ளே நுழைந்த பட்டம்மாள் ஒன்றை ரேயணிடம் கொடுத்துவிட்டு மற்றொன்றை தியாவிடம் கொடுத்து அவளருகில் அமர்ந்து கட்டியிட்டிருந்த காலை வருடி “சாரிடி.. எனக்கு தம்பி கல்யாணமானவர்ன்னு தெரியாது.. இனி இப்படி பேச மாட்டேன்” என்றதுக்கு “ம்..” என்று மட்டுமே பெண்ணவளிடம் பதில் வர,

 

அதற்கு மேல் தொந்திரவு செய்ய விரும்பாதவர் “மதியம் சமைக்குறேன்.. எந்த வேலையிருந்தாலும் சாப்பிட்டுட்டு போ.”. என்று ரேயனிடமும் “தம்பி நீங்களும் சாப்பிட்டு தான் போகனும்” என்க, ஏனோ அவரிடம் மறுக்க தோன்றாமல் “கண்டிப்பா பாட்டி” என்று சம்மதித்து வைக்க, அவரும் அங்கிருந்து விடை பெற்று சமையல் வேலையை காண செல்ல,

 

எந்த உணர்வையும் வெளியே காட்டாமல் பழசாறு குடித்து கொண்டிருந்தவளை கண்டு “அவங்க வயசுக்கு எவ்வளவு பெருந்தன்மையா மன்னிப்பு கேட்டுட்டு போறாங்க.. திருப்பி மன்னிப்பு கேட்காம அலட்சியப் படுத்துற படிச்சவ தான நீ.. எப்போவுமே யாரையும் புரிஞ்சிக்காம இப்படி தான் நோகடிக்குற.. அப்போவும் இப்போவும் நீ மாறவே இல்ல தியா” என்றதை கேட்டு அழுத்தமான அர்த்த பார்வையை பதிலாக தந்த தியா “எனக்கு கமென்ட் கொடுத்து முடிஞ்சிட்டுன்னா வந்த வேலைய பாப்போமா..” என்று அவள் எழுந்து நடக்க,

 

அவள் காயத்துடன் நடப்பதில் பதறிய ரேயன் “தியா என்ன பண்ற.. காயமாறனும்ல அதுக்குள்ள எழும்பி நடந்தா எப்படி ரெஸ்ட் எடு” என்று அவள் கையை பற்ற போக,

 

அவனை தள்ளி நிறுத்தியவள் “மிஸ்டர் எக்ஸ் இதவிட ஆறாத பெரிய காயம்லாம் இருக்கு.. அதவிட இது பெருசா தெரியாது பழக்கப்பட்டு மரத்து போயிடுச்சு.. காயத்துக்கு ரெஸ்ட் எடுக்க நினைச்சா பாதி மாசம் நான் வீட்டுல தான் இருக்கணும்.. சோ வந்த கடமைய ஆற்றுவோம் வா மேன்” என்று கூறியவள் காயத்தை கூட பொருட்படுத்தாமல் சாதரணமாகவே நடந்து சித்திராவின் தேவியின் அறைக்குள் செல்ல, ஆடவனும் அவளை பின் தொடர்ந்தான்.

 

சித்திராவிற்கு மாதவிடாய் காரணமாக வலியில் அறைக்குள் இருந்தவள், வலியை மறைக்க காதில் ஒலிப்பான்களை வைத்து இசையில் கரைய தொடங்கி விட, ஆதனாலே தியா கீழே நிகழ்த்திய ஆர்ப்பாட்டம் பெண்ணவளின் காதில் விழாமல் போனது.

 

அவளின் நிலை அறியாமல் உள்ளே வந்த தியா “செமஸ்டர் லீவுக்கு படிக்காம குத்தடிச்சுட்டு இருக்க வேண்டியது” என்று முனுமுனுத்துவிட்டே பெண்ணவள் காதிலிருந்த ஒலிப்பான்களை இழுத்து வீசி “அடியே படிக்க லீவ் விட்டா.. பாட்டு கேட்டு சல்சா பண்ணிட்டுருக்க” என்றவாறு படுக்கையில் மறுபக்கம் அமர, ரேயனும் அவளைவிட்டு சற்று விலகி அமர்ந்தான்.

 

இசையில் கண்கள்மூடிய நிலையிருந்த சித்திரா, தீடீரென்று நிகழ்ந்த தியாவின் செயலில் பதறி எழுந்த பெருமூச்சு விட்ட சித்திரா “குடிச்சா குத்தடிச்சன்” என்றவள் ரேயனை பார்த்துவிட்டு மீண்டும் தமைக்கையின் புறம் பார்வையை செலுத்த, அவள் பேச்சில் முறைத்த தியா “வாய் பேசினா செவியிலயே விடுவேன்..”

 

“ப்ச்.. பீரியட்ஸ் எனக்கு அதுனால தான் கொஞ்சம் ரிலீப்பாக பாட்டு கேட்டேன்.. உடனே கொல குத்தம் பண்ணின போல விசாரிக்குற.. எதுக்கு வந்த அத சொல்லு”

 

“ம்ம் விசாரிக்க தான்” என்றதில் விழித்த சித்திரா “என்ன” என்று புரியாமல் வினவ, ரேயனோ “சாப்பிட்டியாடா” என்றவனின் அக்கறையில் புன்னகைத்த சித்திரா தமக்கையை முறைத்துவிட்டு “காலைல சாப்பிட்டேன் அண்ணா.. கொஞ்சம் நேரம் முன்னாடி கிழவி ஜுஸ் கொடுத்துச்சு”

 

“ஓகேடா.. கொஞ்சம் உன்கிட்ட சில டவுட்ஸ் கேக்கணும்.. நீ ஓகே தான பெயின் இருந்தா நாளைக்கு பாக்கலாம்”

 

“அதெல்லாம் பரவால அண்ணா.. நீங்க கேளுங்க என்ன விஷயம்” என்க, இவர்களின் பேச்சில் தியாவிற்கு வயிற்றில் தீ பற்றி எரிய “உனக்கு இந்த அக்கா ஒருத்தி மட்டும் போதும் கண்டவனலாம் அண்ணன் கூப்பிட உனக்கு தலையெழுத்து இல்ல.. இனி அவன அண்ணன்னு கூப்பிட்ட நாக்க இழுத்து வச்சி அறுத்துருவேன்” என்று பல்லை கடிக்க,

 

அதில் சலித்தவன் ‘இவ வேற பொறாமை புடிச்சவ’ என்று எண்ணி இதழ் குவித்து ஊதி இருபக்கமும் தலையை ஆட்டிக்கொண்டான்.

 

அவளின் கோவத்தில் உள்ளுக்குள் உதறல் எடுக்கும் மனதை அடக்கிய சித்திரா “அண்ணான்னு கூப்பிட்டா தான தப்பு. அப்போ மாம்ஸ்ன்னு கூப்பிட்டுக்கவா” என்று கூறி ரேயனை பார்த்து கண்ணாடிக்க,

 

மேலும் தமக்கையின் அனல் பார்வையில் “ஏன் முறைக்கிற எவ்வளவு ஹேன்ட்சமா இருக்கார்.. அண்ணன்னு கூப்பிடவே மனசு வரல தான்.. நானும் வயசு பிள்ள தான நீ இருக்கியேன்னு நல்ல பிள்ளையா அண்ணா கூப்பிட்டேன்.. உனக்கே பிடிக்கலயே சோ மாமா” என்று நிறுத்திவிட்டு “இல்ல இல்ல செல்லமா மாமுன்னு கூப்பிட்டுக்குறேன்” என்று ரேயனிடம் “என்ன மாமு.. உங்களுக்கு ஓகே தான”

 

“டபிள் ஓகே செல்லமே” என்று அவன் கண்ணடிக்க, இவள் பதிலுக்கு வெட்கப்பட, பொறுமையிழந்த தியா “ஸ்டாப் இட்.. ரேயன் வந்த வேலைய பாக்குறியா” என்க, அவளை முறைத்து இதழ் சுழித்த சித்திரா “நீங்க சொல்லுங்க மாமு.. என்கிட்ட என்ன கேக்கணும்”

 

“ஒரு கேஸ் விஷயமா உன்கிட்ட விசாரிக்கணும் செல்லமே”

 

“என்ன கேஸ்.. நான் எப்படி இதுல சம்பந்தப்பட்டவன்”

 

“ உனக்கு யாழிசைன்னு ப்ரெண்ட் இருக்கா தான”

 

“ஆமா மாமு.. என் காலேஜ் என்னோட டிபார்ட்மெண்ட் தான்.. ஏன் அவளுக்கு என்னாச்சி” என்றவளுக்கு தோழியை நினைத்து பதற்றம் எழ, அவளின் கையை பற்றி அழுத்தம் கொடுத்தவன் “ரிலக்ஸ்டா செல்லமே.. அவளுக்கு ஒன்னும் ஆகாது.. நீ என்கிட்ட அவள பத்தி எதையும் மறைக்காம சொல்லு”

 

“அவ அம்மா ரீசென்டா இறந்துட்டாங்க மாமு.. அவங்க அம்மா இறந்து கொஞ்ச நாள்லயே அவ அப்பா வேறொரு கல்யாணம் பண்ணிக்கிட்டார்.. ஏனோ வயசுக்கு வந்த பிள்ளை வச்சிட்டு இப்படியொரு காரியத்தை அப்பா பண்ணினதுல வெறுத்து வீட்ட விட்டு வந்தவ தான் எங்க போகன்னு தெரியாம ஆசிரமத்துல சேந்துக்கிட்டா.. அவ அப்பாக்கும் அவமேல பெருசா ஒட்டுதல் இல்லாம அவள தேட கூடயில்ல போல.. இப்போ வர ஹோம் செலவுல தான் படிக்கிறா அந்த ஹோம் நேம் கூட அன்பு இல்லம்ன்னு நினைக்கேன்.. அதோட ரொம்ப அமைதியான பொண்ணு பெருசா யார்கிட்டயும் பழகமாட்டா.. நான் தான் அவள இழுத்து பிடிச்சிவச்சி பேசுவேன்.. அப்படியே ரெண்டும் பேரும் க்ளோஸ் ஆயிட்டோம்”

 

“இத தவிர்த்து வேற எதுவும் அவள பத்தி.. அதாவது லவ் பாய் ப்ரெண்ட்ஸ் அந்த மாதிரி”

 

“நீங்க வேற மாமு.. அவளுக்கு அப்பா மேல உள்ள வெறுப்புல ஜென்ஸ் மேலலாம் அதிகம் இன்டர்ஸ்ட் இல்ல”

 

“சரி அந்த ஹோம்ல நடக்கிறது எதாவது உன்கிட்ட ஷேர் பண்ணியிருக்காளா”

 

“அங்கயிருக்கிற எல்லாருமே நல்லா பாத்துப்பாங்க இவள போல அங்கயிருக்குற பொண்ணுங்க எல்லாம் சிஸ்டர் போல பழகுறத தான் சொல்லுவா.. வேற எதுவும் நெகடிவ் கமென்ட் இருக்காது” என்க, அவளின் உரையாடலை கவனமாக கேட்டு கொண்டிருந்த தியா “அவ கூட டூ இயர்ஸ் மேல இருக்க தான.. அப்போவும் இப்போவும் அவளோட அக்டிவிட்டீஸ் சேஞ்சஸ் எதுவும் தெரியுதா”

 

“ஹான் ஆமாகா.. கொஞ்ச நாளாவே ஒரு மாதிரி இறுக்கமா எதையோ தொலைச்ச மாதிரியே சுத்திட்டு இருந்தா.. அதோட அடிக்கடி உடம்பு முடியாம அதிகமா லீவ் வேற எடுத்தா.. நானும் எதாவது பிராப்ளமான்னு கேப்பேன் அவ ஹெல்த் இஸ்யூஸ்ன்னு முடிச்சிடுவா.. அவளுக்கு எதுவும் இல்ல தான” என்க,

 

தீவிர சிந்தனையிலிருந்த ரேயன் “அதெல்லாம் ஒன்னுமில்லடா.. நீ அவகிட்ட நாங்க விசாரிச்சத பத்தி காட்டிக்காத.. அதோட வேற ஏதாவது அவள பத்தி தகவல் தெரிய வந்தா என்கிட்ட இன்பார்ம் பண்ணிடு” என்று கூறி முடிக்கவும் சித்திராவிற்கு ருத்ரனிடமிருந்து அழைப்பு வர,

 

தியா இருப்பதால் அழைப்பை ஏற்க அவஸ்தைப்பட்டு நிராகரித்துவிட்டாள். ஆனால், அவனோ மறுமுறை அழைத்ததில் பெண்ணவள் நொந்துவிட, தியாவோ “ரேயன் நம்ம போலாம்.. இனி சில பேருக்கு டிஸ்டர்ப்பாயிருக்கும்” என்று சித்திராவை அழுத்தமாக பார்த்துவிட்டு வெளியேற, சித்திராவிடம் தலையசைத்துவிட்டு அவனும் வெளியேறி விட்டான்.

 

தமைக்கை இறுதியாக பேசிய வார்த்தைகள் மற்றும் பார்வையிலே ஏதோ விலங்கத்தை உணர்ந்தவள், தன்னவன் மறுபடியும் அழைத்ததில் ஏற்று “யோவ் மாமா என்னயா உனக்கு.. ஒருத்தி ஃபோன் கட் பண்ணினா ஏதோ இக்கட்டுல இருக்கேன் புரிய வேண்டாம்.. அதவிட்டுட்டு நொய் நொய்ன்னு அடிக்கிற விவஸ்தை இல்ல.. பக்கத்துல அக்கா வேற இருந்தா கடைசியா பார்த்துட்டு போன பார்வையே சரியில்ல..” என்றவள் அவன் அமைதியாக இருப்பதில் “யோவ் என்ன விஷயம்ன்னு சொல்லுற எண்ணம் இருக்கா இல்லையா”

 

“எங்கடி சொல்ல விட்ட.. ஒரு ஆபத்துன்னு அலார்ட் பண்ண கூப்பிட்டா நீ தான் பட்டாசு மாதிரி சொல்ல விடாம பொரிஞ்சி தள்ளியிரியே..”

 

“சரி அலட்டிக்காதயா மாமா.. என்ன ஆபத்து உனக்கு ஒன்னும் இல்ல தான” என்று பதற,

 

“சிட்டுமா.. மாமாவுக்கு ஒன்னும் இல்லடி நான் சொன்ன ஆபத்து உன் அக்காவாள தான்.. அவளுக்கு நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சு” என்றதில் அதிர்ந்த சித்திரா

 

“என்ன சொல்லுற மாமா.. நம்ம விஷயம் எல்லாம் தெரிஞ்சிட்டா..”

 

“எல்லாம் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லன்னு நினைக்கிறேன்.. ஆனா நம்ம லவ் மேட்டர் தெரிஞ்சிட்டு” என்றதும் தான், அவள் கடைசியாக பேசிய வார்த்தை மற்றும் பார்வைக்கு அர்த்தம் புரிந்து கொண்டவள் “எனக்கு பயமாயிருக்கு மாமா.. அவளுக்கு எப்படி விஷயம் தெரியும்ன்னு தெரியாம நான் எப்படி பெர்பார்ம் பண்றது”

 

“கண்டிப்பா மத்த விஷயம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை.. நீயே பயந்து காட்டி கொடுத்து பிளான கெடுத்துறாதடி.. அப்புறம் அவன் என்ன தீயில போட்டு வாட்டிடுவான்”

 

“சரி மாமா நான் பாத்துக்கிறேன்.. நீ எங்க இருக்க”

 

“ஒரு பிள்ளைய ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன்டி” என்றதில் காய்ந்த சித்திரா “எதே.. யோவ்” என்று திட்ட வர,

 

அதை உணர்ந்து நிறுத்திய ருத்ரன் “அடியே நீ நினைக்கிற மாதிரி இல்ல.. கேஸ் விஷயமா உன் பிரென்ட் தான் ஃபாலோ பண்றேன்.. தியாவும் ரேயனும் சொல்லிருப்பாங்க தான”

 

“ம்ம் ஆமா இப்போ தான் என்கிட்ட எங்க்குயைர் பண்ணிட்டு போனாங்க.. எனக்கு பயமாயிருக்கு மாமா.. அவ ஓகே தான அவளுக்கு எதுவும் ஆயிடாது தான”

 

“அதெல்லாம் ஒன்னும் ஆக விட மாட்டோம்.. நீ பீரியட்ஸ் தான கண்டத யோசிக்காம ரெஸ்ட் எடு.. வொர்ரி பண்ணிக்காத டேக் கேர்.. லவ் யூ டி சிட்டு” என்று அழைப்பை துண்டிக்க, தமக்கையை எப்படி சமாளிப்பதென்ற சிந்தையிலே உறங்கி போனாள்.

******

பின் முதியவரின் பேச்சை மதித்து இருவரும் உணவு உண்டு முடித்து செல்ல போக, தியா என்ன நினைத்தால் என்று தெரியவில்லை வாசலை வரை போய் திரும்பி வந்து முதியவரை கட்டியணைத்தவள் “சாரி கிழவி” என்றவள் காலை பாத்திரத்தை தள்ளிவிட்டு அவரை காயப்படுத்தியதற்கு மன்னிப்பு யாசித்துவிட்டு முன்னே செல்ல, பின் தொடர்ந்த ரேயனின் இதழ்கள் அவளின் செயலில் ரகசியமாக விரிந்தது.

 

இங்கு பாட்டியில் நிலையோ மோசம் அவள் மன்னிப்பு கேட்டதை ஜீரணிக்க முடியாமல் நெஞ்சில் கைவைத்து தியா போன திசையையே பார்த்திருக்க, அருகிலிருந்த சித்திரா “ஏய் கிழவி அதிர்ச்சில அட்டாக் வந்து பரலோகம் போயிடாத இவகிட்ட நான் மட்டும் தனியா சிக்கி சின்னாபின்னமாக முடியாது.. முத தண்ணிய குடி” என்று தண்ணீரை எடுத்து கொடுத்தாள்.

 

அதை வாங்கி ஒரே மடக்கில் குடித்த முதிவருக்கோ, ஏனோ அவள் மாறிவிடுவாள் என்ற நம்பிக்கை பிறக்க “அடியே ஒரு சின்ன விஷயத்துக்கே ஹார்ட் இரயில் ஸ்பீட்ல துடிக்கு.. அப்போ அவ மொத்தமா மாறினா தாங்க முடியாம பூமிக்குள்ள போயிடுவேன் போல”

 

“அந்த அதிசயம் நடக்கும் போது பாக்கலாம்.. இப்போ அவளுக்கு என்னோட லவ் மேட்டர் தெரிஞ்சு போச்சு” என்றதில் மேலும் பதறி இன்னொரு டம்பளர் தண்ணீரை குடித்து மூச்சுவிட்ட பட்டம்மாள் “என்னடி சொல்லுற எல்லாமே தெரிஞ்சி போச்சா”

 

“நீ வேற கிளப்பாத கிழவி எல்லாம்லாம் தெரியல.. லவ் மேட்டர் மட்டும் எப்படியோ தெரிஞ்சிருக்கு” என்றதில் பெருமூச்சை விட்டவர் “இப்போ தான் உசுரே வந்துச்சு”

 

“தெரியும் போது தான் சம்பவம் இருக்கு.. அதுவரை உடம்ப மனசையும் தேத்தி கரெக்ட்டா பெர்பார்ம் பண்ணு” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

***

 

பெண்ணவளுடன் வண்டியில் போய் கொண்டிருந்தவன் மேல் அதிகாரியிடமிருந்து அழைப்பு பேசுவதற்காக வண்டியை நிறுத்த கூறி ஓரமாக நிறுத்திவிட்டு பேசி கொண்டிருந்தவனின் கண்ணில் எதிர் திசையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் பட, அதில் அதிர்ந்து அவளை தூக்கி கொண்டு மருத்துவமனை விரைந்தான்.

***

 

தொடரும்…

 

ஆனந்த மீரா 😍😍

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்