
மடிக்கணினியில் தேவையானதை குறிப்பிட்டு முடித்து இருக்கையில் சாய்ந்து கண் மூடியவனுக்கு முடிக்க வேண்டிய தனிப்பட்ட வேலை வேறு நிறையே இருக்க,
அதனை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று சிந்தனையிலே உலன்று கொண்டிருந்தவன் எதிரே நிழலாடுவதை உணர்ந்து இமைகளை திறந்து தனக்கு எதிரே நின்றிருந்த பெண்ணவளை கண்டு “என்ன தியா சைட் அடிக்குறியா” என்றதை கேட்டு கைகட்டி, அவனை நக்கலாக ஏறிட்ட தியாழினி “அய்யோ சீனியர் சார்.. நான் கல்யாணமான அங்கிள்ஸ்லாம் சைட் அடிக்குறது இல்ல”
“அடிங்.. நான் அங்கிளாடி உனக்கு” என்று பாய்ந்து பெண்ணவளின் கையை அவள் முதுகோடு பிடித்து உரசி நின்றவன் “நான் உனக்கு அங்கிள் போலவாடி தெரியுறேன்” என்றவனின் பிடியில் வலியிருந்தாலும் வெளியே காட்டி கொள்ளாத தியா “கல்யாணம் ஆயிடுச்சு தான”
“ஆமா.. குழந்தை கூட இருக்கு”
“அப்போ அங்கிள் தான” என்று கூறி அவனிடமிருந்து தன்னை விடுதலை செய்ய உடம்பை ஒரு சுற்று சுற்றியவள்,
இப்போது அவனின் கையை முதுகுக்கு பின் பிடித்து நின்று “மிஸ்டர் என்கிட்ட எவ்வளவு தள்ளி நிக்குறீங்களோ அது உங்களுக்கும் நல்லது உங்க ஒய்ஃப் தாலிக்கும் நல்லது..” என்க, அவளின் உடல் தன்னுடன் உரசியதில் உஷ்ண மூச்சை வெளியே விட்டவன் “உனக்கு வேணா ரூல்ஸ் இருக்கலாம்.. எனக்கு அப்படி எதுவும் இல்ல.. எனக்கு என்ன தோணுதோ அதான் பண்ணுவேன்.. சோ முதல நீ தள்ளி நில்லு.. அதான் உன்னோட கற்புக்கு நல்லது..” என்றதில் பெண்ணவளின் பிடி இறுக,
அப்போது கதவு திறக்கும் சத்தம் உணர்ந்து, அவனை விடுவித்து எதுவும் நடக்காதது போல் தள்ளி நின்றாள்.
உள்ளே வந்த ருத்ரனோ அவர்கள் இருவரையும் அழுத்தமாக பார்த்துவிட்டு “ரேயன்.. நீங்க கேட்ட அந்த ஆசிரமத்தோட ப்ளூ பிரிண்ட்ஸ்” என்று கொடுக்க, அதை கையில் வாங்கி ரேயன் நோட்டமிட, தியாவோ “ருத்ரா நான் சொன்ன வேலை என்னாச்சு”
“லேப்ல லெட்டர் கொடுத்துருக்கேன் மச்சி.. டூ டேஸ்ல இன்பர்மேஷன் கிடைக்கும்” என்றதுக்கு நெற்றியை நீவி “டூ டேஸ் ஆகுமா” என்று சலித்தவள் ரேயனிடம் “அங்கில் சார்.. சாரி சீனியர் சார் அந்த ரிப்போர்ட் கைக்கு கிடைக்குற வரை வெயிட் பண்ண முடியாது.. அடுத்த மூவ் என்ன” என்றவளின் நக்கலில் முறைத்தவன்,
பதில் ஏதும் கூறாமல் ருத்ரனிடம் “ப்ளூ பிரின்ட்ஸ் எப்படி கிடைச்சிது மச்சி”
“அந்த ஹோமுக்கு போனப்போ.. அங்க இன்ஃபெக்ஷன்காக வந்திருந்தாங்க.. அங்க வந்த ஆபீஸர் எனக்கு ப்ரெண்ட் தான்.. அவன் மூலமா உள்ள நுழைஞ்சு ப்ளூ பிரிண்ட சுட்டுட்டேன் மச்சி” என்று கலாரை தூக்கி விட,
தியாவோ “மேய்க்கிறது எருமை இதுல பெருமை வேற..” என்றவள் “அவன நீ மச்சின்னு கூப்பிட்ட நாக்க இழுத்து வச்சி அறுத்துருவேன்.. உனக்கு நான் மட்டும் தான்டா மச்சி” என்று நண்பனின் காதை ரகசியமாக கடிக்க, அவனின் பேச்சில் பீதியானவன் சம்மதமாக தலையையாட்டி வைத்தான்.
பெண்ணவளின் ரகசிய பேச்சை கூட உணர்ந்து கொண்ட ரேயன் “மச்சி.. நீ உள்ள போனது யாருக்கும் சந்தேகம் வரல தான.. அண்ட் உன் ஃபேஸ் கேமரா பதிஞ்சியிருக்கும்ல”
“நான் மாஸ்க் போட்டுட்டு தான் உள்ள போயிருந்தேன் சோ கேமரால என் ஃபேஸ் கவர் ஆகாது.. அண்ட் என் பிரென்ட்கூடவே போனதுல எல்லாருமே என்ன அவன் கூட வந்தவன் தான் நினைச்சிருப்பாங்க.. அதோட எல்லாரும் பரபரப்பா இருந்ததுல என்ன யாருக்கும் தனியா வாட்ச் பண்ண கூட நேரம் இல்ல மச்சி” என்று கூற வந்தவன் தியாழினி முறைப்பில் அசடு வழிந்து “ரேயன்” என்று முடித்திருந்தான்.
ருத்ரன் கூறியதை தன் செவியில் சேகரித்தவன், அவன் இறுதியில் மச்சி கூறிவிட்டு ரேயன் என்று மாற்றியதையும் கேட்டு கொண்டு “மச்சி இங்க சில பேர் அவங்களும் யார்கிட்டேயும் பழக மாட்டாங்க.. பழகுறவங்களும் விட மாட்டாங்க.. சோ அந்த மாறி ஆட்கள் விட்டு கொஞ்சம் தள்ளியே இரு.. அதான் உனக்கு நல்லது” என்று ருத்ரனின் தோலை தட்டினான்.
அவன் தன்னை சொல்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட தியாழினியோ “சில நெருக்கமான உறவுகள நம்ம தவிர்த்து யாரையும் பழக விட முடியாதே மிஸ்டர் ரேயன்.. அது ரொம்ப ஆபத்தானதும் கூட.. தெரியாமலே அந்த ஆபத்த தொட்டவ.. தெரிஞ்சும் தொட நான் முட்டாள் இல்ல..” என்று நக்கலாக புன்னகைத்துவிட்டு “உங்கள மாதிரி ஆளுங்களுக்கு என்ன மாதிரி உள்ளவங்க உணர்வுகள் எப்போவுமே புரியாதே மிஸ்டர் ரேயன்” என்றதில் ஆடவனின் முகம் இறுகி விட,
இவர்கள் பேச்சு எதற்கென்று புரியாமல் முழித்த ருத்ரன் நிலமையை மாற்றும் பொருட்டு “ரேயன்.. நீங்க சொன்ன மாதிரி அந்த ஹோம் சுத்தியுள்ள பிளேஸ் எல்லாம் நோட் பண்ணிட்டேன்” என்று அவற்றை எல்லாம் கூறிவிட்டு இறுதியாக “அந்த ஹோமுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு ரெஸ்டாரன்ட் இருக்கு” என்று முடித்தான்.
அதில் பெருமூச்சுவிட்டு தன்னை சமன்படுத்தி கொண்டே அவன் கூறியதை தன் மூளையில் ஏற்றி கொண்ட ரேயனோ “பைன் மச்சி.. அந்த ரெஸ்டாரன்ட்ல ஒன் ரூம் புக் பண்ணிடு நைட் எனக்கும் உன் ப்ரெண்டுக்கும் ஒரு வேலையிருக்கு.. அத முடிச்சிட்டு அப்புறம் என்ன பண்ணலாம் யோசிக்கலாம்” என்று கூறி கழுத்தை இரு பக்கமும் திருப்பி சுளுக்கெடுத்து ஹாயாக நாற்காலியில் அமர்ந்தவனிடம் ருத்ரன் “அங்க என்ன வேலை” என்று மார்க்கமாக பார்த்து வைக்க, கடுப்பான தியாவோ “என்னாலலாம் உன்கூட எங்கயும் வர முடியாது” என்க,
இருவரின் பார்வையை உணர்ந்த ரேயன் “ஹேய் நீங்க ரெண்டு பேரும் நினைக்கிற மாதிரி இல்ல.. மிட்நைட்ல ஹோம்க்குள்ள நுழைஞ்சு தேவையான ஆதாரம் எல்லாம் கலெக்ட் பண்ணனும்.. அதுக்கு தான் ரெஸ்டாரன்ட்ல ரூம் புக் பண்ண சொன்னேன்” என்க,
தவறாக எண்ணியதில் அசடு வழிந்த ருத்ரனிடம் “ஏன்டா உங்க ரெண்டு பேருக்கும் டர்ட்டி மைண்ட்ஸா இருக்கு.. உங்ககூட சேந்து நானும் கெட்டு போயிடுவேன் போல.. என் பொண்டாட்டிக்கு நான் துரோகம் பண்ண மாட்டேன்” என்றதுக்கு அவனை பார்த்து முகம் சுழித்த தியாழினி “இந்த மாதிரி யோக்கியன்னு பெருமையா கத கட்டுறவன நம்பிலாம் என்னால வர முடியாது.. சோ இந்த விஷயத்துல ருத்ரன் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவான்” என்றவள்,
நண்பனிடம் “ருத்ரா.. சார் கூட போய் என்ன உதவி தேவையோ சிறப்பா பண்ணி கூடு.. ஆனா பாத்து பொண்டாட்டி நினைப்புல உன்மேல பாஞ்சிட போறாரு” என்று நக்கலடிக்க,
அதில் திரு திருவென்று விழிக்கும் ருத்ரனிடம், ரேயன் “மச்சி.. உன்ன ரெஸ்டாரன்ட்ல ரூம் புக் பண்ண சொல்லி எவ்வளவு நேரம் ஆகுது.. இங்க என்ன படமா ஓடிட்டு இருக்கு.. சொன்ன வேலைய முடி..” என்க, அதை கேட்டு நண்பியை பாவமாக பார்த்த ருத்ரன் வெளியே சென்று அவன் கூறிய பணியை முடித்தான்.
*****
ருத்ரன் சென்றதும் அவனை முறைத்திருந்த தியா “உங்க மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்கீங்க ரேயன்” என்றதை இரு கைகளையும் தலைக்கு பின்னே வைத்து சாய்ந்து
“வேற யார நினைக்க என் பொண்டாட்டிய தான்” என்று புன்னகைக்க, அதில் பெண்ணவள் எரிச்சலடைந்ததில் குளிர் காய்ந்தவன் “என்ன மிஸ் தியாழினி என்கிட்ட மறுபடியும் விழுந்துருவன்னு பயமா”
“வாட்.. கம் அகைன்” என்றதை கேட்டு அவள் எதிரே வந்து நின்று
“எனக்கு தெரியும் தியா இன்னும் உன் மனசுல நான் தான் இருக்கேன்ன்னு.. எங்க என்கூட தனியா வந்தா உன்னையே இழந்துருவியோன்னு உனக்கு பயம்” என்றதில் பெண்ணவள் சத்தமாக சிரித்து “என்ன மேன் சொன்ன பயமா.. அதுவும் உன்மேல.. ஹாஹா.. நைஸ் ஜோக்.. ரொம்ப நாள் கழிச்சு ரொம்ப சத்தமா சிரிச்சிருக்கேன் தேங்க்ஸ் மேன்” என்று நிறுத்தியவள்
“அப்புறம் ஏதோ சொன்னியே ஹான் இன்னும் என் மனசுல நீ இருக்க.. என்ன நினைச்சிட்டுருக்க இன்னும் குட்டி போட்ட பூனை போல உன் பின்னாடி சுத்த நான் உன் எக்ஸ் தியா இல்ல மிஸ்டர் நரேன் சாரி ஆத்திரேயன் என்ற நரேன்..” என்று அழுத்தமாக முடித்திருக்க,
கையை இறுக மூடி கோவதத்தை கட்டுக்குள் கொண்டு வந்த ரேயன் “உன் தைரியம்லாம் பேசு தான தியா.. என்கூட தனியா வரவே பயப்படுறியே.. சரி விடு நீ எனக்கு சரிப்பட்டு வர மாட்டேன்னு நான் டைரக்டர்கிட்ட சொல்லிடுறேன்.. நீ அவர்கிட்ட பேசிக்க” என்று திறன்பேசியை தன்னுடைய மேல் அதிகாரியை அழைக்க போக, பொறுமையை இழுத்து பிடித்த தியாழினி “வரேன்”
“கேக்கல” என்றதில் பற்களை நற நறவென்று கடித்தவளோ “இனி நீ எங்க கூப்பிட்டாலும் வந்து தொலைக்குறேன்.. சார டிஸ்டர்ப் பண்ணாத” என்க,
அதில் நக்கலாக சிரித்து திறன்பேசியை கீழே வைத்தவன் “எங்க கூப்பிட்டாலுமா” என்று மார்க்கமாக கேட்டு வைக்க, அனல் தெறிக்க முறைத்த தியாழினி “நரேன் பிளீஸ் ஸ்டாப்.. நீ என்ன சொன்னாலும் கேட்க நான் உன் எக்ஸ் லவ்வர் இல்ல நரேன்.. டோண்ட் கிராஸ் யூவர் லிமிட் அண்ட் ஸ்டே அவே ஃப்ரம் மீ” என்றதை கேட்டு தாடையை தடவிய ரேயனோ “எக்ஸ் லவ்வர்” என்று அவளை அழுத்தமாக பார்த்து வைக்க,
அப்பார்வைக்கு தன் விரக்த்தி சிரிப்பை பதிலாக கொடுத்த தியாழினியை முறைத்தவன், இதற்கு மேல் நின்றால் பழசை கிளற வேண்டி வருமென்று, அவளிடம் சில உண்மைகளை கறக்கும் வரை பொறுமையாகயிருக்க எண்ணி கைமடக்கி கட்டுப்படுத்தியவன், அங்கிருந்து வெளியேறி வழக்கு சமந்தமாக ருத்ரனிடம் அந்த ஆசிரமம் பற்றின விளக்கத்தை பேச தொடங்கிவிட்டான்.
இரவு நேரம் ஆத்திரேயன் மற்றும் தியாழினியை ரெஸ்டாரன்டிற்கு அனுப்பி வைத்த ருத்ரனோ அவனின் சித்துவை பார்க்க சிட்டாக பறந்து வந்து விட்டான்.
*****
தியாழினி வீட்டிற்கு வந்தவன், ஹாலில் அமர்ந்து தொலைகாட்சி பார்த்து கொண்டிருந்த முதிவரை “பட்டு” என்று அழைத்து அவருகில் அமர,
“வாடா நல்லவனே.. என்ன இந்த பக்கம்”
“உன்ன பாக்க தான் வந்தேன் பட்டு” என்றதில் ஏற இறங்க பார்த்தவரோ “பால் குடிக்கிற பூனை மூஞ்ச பாத்தாலே தெரியாது எதுக்கு வந்திருக்கும்ன்னு.. இதுல என்கிட்டயே கத விடுற” என்றதில் அவனோ அசடு வழிய, தன் தலையில் அடித்து கொண்டவரோ “போதும் போதும் ரொம்ப வழியாத.. உன் நட்பு எங்க”
“அவ இன்னைக்கு வர மாட்டா.. முக்கியமான கேஸ் விஷயமா வெளிய போயிருக்கா”
“அதான பாத்தேன்..” எழுந்து சமையல் அறைக்குள் சென்றவள் இரு தட்டியில் சாப்பாடு வைத்து எடுத்து வந்து “இந்தாடா ரெண்டு பேரும் சேந்து சாப்பிடுங்க” என்று நீட்ட,
அதனை வாங்கியவன் “நீயும் சாப்பிட்டு தூங்கு பட்டு” என்று செல்ல போனவளை தடுத்தவர் “டேய் இன்னும் எத்தனை நாளைக்கு இந்த திருட்டு காதல்” என்றதை கேட்டு பெருமூச்சுவிட்ட ருத்ரன் தெரியவில்லை என்றவாறு இதழை பிதுக்கி தோலை குலுக்கிவிட்டு அவனின் சிட்டுவின் அறைக்குள் சென்றான்.
**********
ருத்ரன் பதிவு செய்த ரெஸ்டாரன்டியில் தங்களின் அறைக்குள் தியாழினியுடன் வந்த ருத்ரன் இரண்டடி தள்ளியிருந்த ஆசிரமத்திற்குள் நுழைய நேரம் பார்த்து காத்திருக்க,
அவளோ சாப்பிட்டு முடித்து உறங்க செல்ல, அதில் கடுப்பாகி தலையணை எடுத்து அவள்மேல் அடித்தவன் “அடியே நம்ம இங்க எதுக்கு வந்திருக்கோம்.. நீ என்னடான்னா அம்மா வீட்டுக்கு வந்த மாதிரி சாப்பிட்டு தூங்குற”
“இப்போ என்ன உனக்கு பிரச்சனை.. டைம் பாரு ஒன்பது தான ஆகுது.. நமக்கு மிட்நைட் மேல தான வேலை.. சோ எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணிட்டு.. அதுவர நல்ல ரெஸ்ட் எடுப்போம்.. இல்லன்னா தூக்கத்துல சுவர் ஏறி குதிக்கும் போது உயிருக்கு உத்திரவாதம் இல்லாம போயிடும் மிஸ்டர்..” என்று இழுத்து மூடி உறங்க, அவளின் பேச்சில் தலையில் அடித்து கொண்ட ரேயன் அங்கிருந்த சோஃபாவில் கண்மூடி சாய்ந்து விட்டான்.
*****
இரண்டு தட்டுடன் தன்னவள் அறைக்குள் வந்தவன், பெண்ணவள் படுக்கையில் சுருண்டு படுத்திருப்பதில் பதறி தட்டை ஓரமாக வைத்துவிட்டு அவளருகில் சென்று சிட்டு “என்னடி செய்து” என்றதும் அவனுக்குள் அடைக்கலமாகி “பீரியட்ஸ் மாமா” என்றவளை இறுக்கமாக பிடித்தவன் “ரொம்ப வலிக்குதாடி”
“எப்போவும் போல தான் மாமா சரியாயிடும். நீ இப்படியே என்கிட்டயிரு வலி தெரியாது” என்றவளின் நெற்றியில் இதழ் பதித்து “சாப்பிடலாமாடி.. நானே ஊட்டி விடுறேன் எழும்பு” என்று எழுப்பி தலையணையை பின்னால் கொடுத்து அமர வைத்தவன், பெண்ணவளுக்கு உணவு ஊட்டி தானும் சாப்பிட்டுவிட்டு பெண்ணவளை தன் மார்பில் போட்டு தட்டி கொடுக்க,
அவனின் காதலில் நெகிழ்ந்த சித்துவோ “மாமா”
“சொல்லுடி”
“கல்யாணம் பண்ணிக்கலாமா”
“முத படிச்சி முடிடி.. அப்புறம் உன் அக்கா கணக்க வேற முடிக்கணும்”
“ம்ம்.. உனக்கு என்ன எதுக்கு மாமா இவ்வளவு பிடிக்குது”
“என்னடி கேள்வி இதெல்லாம்”
“எனக்காக எவ்வளவு சாக்ரிபைஸ் பண்ற மாமா நீ.. “ என்றவள் பழையதை நினைக்க, அதை உணர்ந்த ஆடவனும்
“அத ஏன்டி சாக்ரிபைஸ்ன்னு சொல்லுற உன் மாமாவோட லவ்டி..” என்று இதழில் தன் இதழை ஒற்றி எடுத்தவன் “சிட்டு பழசலாம் பேசாம தூங்கு” என்று அவளை தட்டி கொடுத்து உறங்க வைத்து தானும் உறங்கி போனான்.
*****
சோஃபாவில் சாய்ந்தவாக்கில் கண் மூடி அமர்திருந்த ரேயனோ வந்த வேலையை நினைவு பெற்று கண் விழித்தவன் எதிரேயிருந்த கடிகாரத்தை பார்த்துவிட்டு இழுத்து மூடி நிம்மதியான உறக்கத்திலிருக்கும் பெண்ணவளை கண்டு “உன்னால என் நிம்மதியே போயிடுச்சுடி..” என்று பெண்ணவளின் மேல் தலையணையை வீச, அதில் பதறி எழுந்த தியா எதிரே தன்னை கண்டு சிரிப்பவனை முறைக்க,
ரேயனோ “என்ன முறைப்பு வந்த வேலைய மறந்துட்டு கும்பகரணி போல தூங்க வேண்டியது.. போய் ஃப்ரெஷ் ஆயிட்டு வா” என்க, அவனை உள்ளுக்குள் அர்ச்சித்தவாறே குளியல் அறைக்குள் நுழைந்து முகம் கழுவிட்டு வர, அதற்குள் ருத்ரன் கொடுத்த ஆசிரமத்தின் வரைப்படத்தை நோட்டமிட்டு எங்கு செல்ல வேண்டுமென்றும் எவ்வழியாக செல்ல வேண்டுமென்பதை தீர்மானித்து
முடிவு செய்தவன், தோல் பையை மாட்டிக்கொண்டு பெண்ணவளுடன் ரெஸ்டாரன்டை விட்டு வெளியே வந்தான்.
****
தொடரும்..
– ஆனந்த மீரா 😍😍

