Loading

தியா சென்றதும் பெண்ணவளின் பதிலை நினைத்து கடலை வெறித்து கொண்டிருந்தவனுக்கு அவள் தன்னவளாக மாட்டாளா என்று ஏக்கம் எழ, அவளின் நினைவுகளுடன் வண்டியில் தன்னுடைய இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தவனின் சிந்தை பாதையில் இல்லாதததால் சமநிலை தவறிய சர்வா இடையில் வந்த காரால் தூக்கி வீசப்பட்டான்.

 

தலையில் தலை கவசத்துடன் விழுந்து கிடந்தவனை அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி விட்டிருக்க, அவன் சென்றதும் கீழ கிடந்த அவனின் பையை எடுத்த ஒருவர் அதிலிருந்த ஆடவன் திறன்பேசியில் இருந்த முதல் எண்ணான தியாழினிக்கு அழைத்து கூறியிருந்தார்.

****

 

அன்று வீட்டியில் அன்னை தம்பி விருந்தினரின் விஷேச வீட்டிற்கு சென்றிருந்ததால் அறையில் சர்வாவின் நிகழ்வில் உலன்று கொண்டிருந்தவள் அழைப்பு வரவும் அதிர்ந்து பின் இதயம் படபடக்க மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள்.

 

அங்கு வரவேற்பு பகுதில் விசாரித்து அவனுக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்த அறை இருக்கும் திசைக்கு மூச்சை கையில் பிடித்தப்படி வந்தவள், மருத்துவர் வெளியே வர அவனிருந்த அறையை பார்த்தப்படி நின்றாள்.

 

பின் அரைமணி நேரத்தில் அவனுக்கு சிகிச்சை முடித்து வெளியே வந்த மருத்துவரின் முன் சென்று கண்கள் கலங்க “டாக்டர் சர்வா நல்லா இருக்கான் தான.. அவனுக்கு எதுவும் இல்ல தான” என்க,

 

மருத்துவரோ “நீங்க அவருக்கு யாரு”

 

“டாக்டர் அவன் என்னோட காலேஜ்மேட் ரெண்டு பேரும் ஒன்னா தான் படிக்கிறோம் ஹீ ஸ் மை பெஸ்ட் ப்ரெண்ட்”

 

“ஓகே பைன்.. உயிருக்கு இந்த ஆபத்தும் இல்ல அதோட ஹெல்மெட் போட்டுயிருந்ததால தலைலயும் பெருசா அடியிருக்காது தான்.. சோ ஓல் பாடி எம்ஆர்ஐ செக் பண்ணினா வேற எதுவும் பிராப்ளமான்னு எங்களால சொல்ல முடியும்.. இன்னும் கொஞ்சம் நேரத்துல கான்ஸ்கியஸ் வந்திடும் ஆக்சிடென்டானதுல சில இடத்தில அடிப்பட்டிருக்கு அதுக்கான ட்ரீட்மென்ட் மட்டும் இப்போ பண்ணியிருக்கோம்.. கான்ஸ்கியஸ் வந்ததும் மத்த டெஸ்ட் பாத்துட்டு சொல்லுறேன் பயப்பட வேண்டாம் டேக் கேர்” என்றுவிட்டு சென்றார்.

 

பின் அவனை காண அறைக்குள் நுழைந்தவள், ஆங்காங்கே சில இடங்களில் கட்டு போடப்பட்டு பொலிவிழந்த நிலையில் இருந்த சர்வாவை கண்டு வேதனையாகி விட, சில நிமிடங்கள் பிறகு கண்விழித்த ஆடவன் தனக்காக கண்ணீர் மல்க ஏக்கமாக பார்த்திருந்தவளை கண்டு அத்தனை வலியிலும் ஆடவனின் இதழ் விரிந்தது.

 

அன்று முழுவதும் மருத்துவமனையிலேயிருந்து தாய் போல் பார்த்து கொண்டிருந்தவளை கண்டு ஆடவனுக்கு காதல் பெருக்கெடுத்து ஓடியது. அதோடு இருவருமே கடற்கரையில் நிகழ்ந்த நிகழ்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு கல்லூரியில் பேசிக்கொள்வது சாதரணமாகவே பேசி பொழுதை கழிக்க, அவனுக்கு எடுக்க வேண்டிய பரிசோதனைகளும் அன்றே எடுத்து முடிந்திருந்தது.

****

மறுநாள் முதலில் கண்விழித்த சர்வா, நாற்காலியிலே சாய்ந்தப்படி உறங்கி கொண்டிருந்தவளை கண்டு ‘எனக்கு புரியுது தியா.. எனக்கு எதாவதுன்னா உனக்கு துடிக்குதுல கூடிய சீக்கிரம் என் காதல ஏத்துப்பன்னு எனக்கு நம்பிக்கையிருக்கு உனக்காக வெயிட் பண்றேன்.. லவ் யூ டி பம்பர கண்ணழகி’ என்று தன் மனதுக்குள்ளே நம்பிக்கை கோட்டையை ஆடவன் கட்டிக்கொண்டிருந்தான்.

 

பின் அவனுக்கு செய்ய வேண்டிய சேவையை பாவையவள் செய்து முடித்திருக்க, அப்போது மருத்துவர் அழைப்பதாக என்று செவிலியர் தியாவை அழைத்து செல்ல,

 

பெண்ணவளின் உணர்வுபூர்வமான சக்தி ஆடவனுக்கு ஏதோ தாங்க முடியாத ஒன்றை இருப்பதாக மருத்துவர் கூறுவது போல் அடித்து கூற, அப்படி எதுவும் நடந்த விடக்கூடாது என்ற வேண்டுதலுடனே மருத்துவரின் முன் அமர்ந்தாள்.

 

சர்வாவின் பரிசோதனையை ஆராய்ந்தவர் மருத்துவர் “மிஸ் தியா.. நான் சொல்ல போறது ரொம்ப கஷ்டமான விஷயம் தான்.. சோ தைரியமா கேளுங்க அவரையும் தைரியம் படுத்துங்க” என்றுவிட்டு “லூக் மிஸ் தியா ஆக்சிடென்டானதுல மிஸ்டர் சர்வாவுக்கு முதுகு தண்டுவடத்துல அடிப்பட்டிருக்கு இதோட விளைவுகள் அவரோட எதிர்காலத்த பாதிக்கும்.. அதாவது என்னன்னா தண்டுவடத்துல அடிப்பட்ட பாதிப்புல அவரோட விந்தணு வீரியம் குறஞ்சிட்டு இதுனால அவரால நேச்சர் அண்ட் ஆர்ட்டிஃபிஷியல் ரெண்டு முறையிலயும் குழந்தை பெத்துக்க வாய்ப்பே இல்ல..” என்க,

 

அதில் அதிர்ந்த பேதை “என்ன டாக்டர் சொல்லுறீங்க.. இதுக்கு வேற எதுவும் சொலுயூஷன் இல்லையா”

 

“இல்ல தியா.. இதுக்கு ஒரே வழி எதிர் காலத்துல அவர் குழந்தைய தத்தெடுத்து வளத்துக்கலாம்..” என்று சிலவற்றை பெண்ணவளுக்கு விளக்கிவிட்டே விடை கொடுத்தார்.

 

மூன்று நாட்கள் கழித்து வீட்டிற்கு அழைத்து வந்தவள் தன் அன்னையிடம் நண்பனுக்கு விபத்து ஏற்பட்டதை பற்றி கூறி அவனை தான் பார்த்து கொள்வதாக கூற, ஏற்கனவே சர்வாவுடன் அன்னத்திற்கு பழக்கம் இருந்ததால் அவரும் பெண்ணவளுக்கு அனுமதி வழங்கினார்.

 

பின் கல்லூரி தேர்விற்கும் அந்நேரம் விடுமுறை கிடைத்து விட, ஆடவனை பார்த்தப்படியே கல்லூரி தேர்விற்கு தயாரானவளுக்கு அவனின் நிலையை வருத்தம் எழ, எப்படி உண்மையை கூறுவது ஆடவன் இதை கேட்டு உடைந்து விட மாட்டானா என்ற பயத்திலே அவனிடம் மறைத்து கொண்டே தனக்குள் புழுங்கி கொண்டிருக்க,

 

அவன் உடல் நலம் தேறி வரவும் தேர்வும் வந்து சேர்ந்தது.

****

இறுதி தேர்வு முடிந்த மாலை வழக்கம் போல் அவளுக்காக காத்திருந்தவன், இன்று பெண்ணவளை காதலை சம்மதிக்க வைத்து விட வேண்டுமென்ற முடிவுடன், பெண்ணவளை தானே கடற்கரைக்கு அழைத்து சென்றான்.

 

கடற்கரை என்றதுமே காதல் பத்தி தான் பேசுவான் என்று யூகித்தவள், அமைதியாகவே கடலை வெறிக்க, மெல்ல அவளின் கையை பற்றிய ஆடவன் “பம்பர கண்ணு.. எனக்கு ஆக்சிடென்ட் ஆனதும் நீ துடிச்ச துடிப்பு எனக்காக கஷ்டப்பட்டு பாத்துக்கிட்டது நான் லேசா வலில முகம் சுணங்கினாலும் நீ வேதனைப்பட்டது எல்லாமே உனக்கு என்ன பிடிக்கும்ன்னு சொல்லாம சொல்லிடுச்சு.. பின்ன எதுக்கு வெயிட் பண்ண வைக்கிற” என்றதை கேட்டு பொறுமை இழுத்து பிடித்த தியா

 

“லூக் சர்வா.. நீ சொன்ன போல உன்ன பிடிக்கும் தான்.. ஆனா காதல் இல்லடா.. என் தம்பிக்கு இந்நிலைல இருந்தா எப்படி துடிப்பேனோ அது போல தான் நீ.. இதுக்கு மேல இதபத்தி பேசாத” என்றுவிட்டு செல்ல போனவளின் கரம்பற்றி “தியா ஐ லவ் யூடி.. நீ எனக்கு வேணும் உன்ன நான் இழக்க விரும்பல”

என்க,

 

அவனை அடிக்க கை ஓங்கியவள் வயிற்றில் சுருக்கென்று ஏற்பட்ட வலியில் இன்றைய மாத மாதவிடாய் வர போவதை உணர்ந்து கை இறக்கியவள் “இத பத்தி இனி பேசினா.. என் மூஞ்சில முழிக்காத சர்வா” என்று அவன் கையை உதறிவிட்டு வேகமாக நடந்தாள்.

 

அவனும், அவள் வழிமறித்து செல்ல, அவளோ ஆடவனை கண்டுகொள்ளாமல் கடந்து சென்று கொண்டிருக்க, மறுபடியும் அதே செய்வதில் கடுப்பானவள் சுற்றி யாரேனும் இல்லையென்பதை உறுதி செய்துவிட்டு “என்னடா வேணும் உனக்கு”

 

“நீ தான்டி வேணும்” என்று பெண்ணவள் உணரும் முன்னே இழுத்து இறுக்கமாக அணைத்து கொண்டான்.

 

ஏற்கனவே அவனின் ரகசியத்தை சொல்ல முடியாத மன அழுத்தத்தோடு வயிறு வலியும் சேர்ந்து கொள்ள, பொறுமையிழந்தவள், அவனை தள்ளிவிட்டு “ஏன்டா என்னோட உயிர வாங்குற எனக்கு உன் மேல காதல் இல்ல.. அதையும் மீறி நீ ஃபோர்ஸ் பண்ணினாலும் என்னால இம்போடெண்ட் உன் கூட சந்தோசமா வாழ முடியாதுடா புரிஞ்சிக்க” என்று வார்த்தை கொட்டி விட,

 

அவளின் பேச்சில் அதிர்ந்தவன் “தியா தியா.. நீ” என்க, அவனின் அதிர்வில் தான் உளறிவிட்டோம் என்று நொந்து மண்டியிட்டு கதறியவள், இனியும் மறைப்பது தவறு என்று மருத்துவர் அனைத்தையும் கூறி தரையில் மண்டியிட்டு அழுதாள்.

 

பின் அவனை சரி செய்யும் நோக்கியில் எழுந்து, அவன் கரம் பற்றியவள் “உன்ன ஹர்ட் பண்ண நினைக்கல சர்வா.. நீ இப்படி இல்லாத காதல ஃபோர்ஸ் பண்ணி கொண்டு வர டிரை பண்ணின கடுப்புல மறைச்சி வச்சிருந்த உண்மைய உளறிட்டேன் சர்வா.. சத்தியமா இந்த பிராப்ளம்னால உன்ன வேண்டாம்ன்னு சொல்லலடா.. எனக்கு உன்மேல காதல் இல்லடா” என்று தன்னிலை விளக்கத்தை கொடுத்தாள்.

 

அவனோ முகம் இறுகி பெண்ணவளின் கையை உதறி “போயிடு.. என் கண் முன்னாடி நிக்காத போயிடு போடி” என்று கற்ஜிக்க, வயிற்று வழி அதிகம் ஏற்பட்டதில் இனி இருப்பது சரியில்லை என்று அவனை ஏக்கமாக பார்த்தப்படி காயப்படுத்திய குற்றயுணர்சியில் விடை பெற்று சென்றாள்.

 

அதன் பின் ஒருவாரம், அவனை பெண்ணவளால் எங்கும் பார்க்க முடியவில்லை கல்லூரி வீடு என்று அவன் எங்கும் இல்லாததில், தன்னால் தான் என்று தூக்கம் தொலைத்துவிட்டாள்.

 

ஒரு நாள் வழக்கம் போல் கல்லூரி முடியும் வேலையில் அவளுக்காக வண்டியுடன் காத்து கொண்டிருக்க, அவள் வண்டியில் ஏறவும் அமைதியாகவே கடற்கரைக்கு வந்து சேர்ந்தான்.

 

இம்முறை ஆடவனிடம் அமைதி நிலவ, குரலை செருமிய தியா “சாரி சர்வா..” என்று முடிப்பதற்குள் ஆடவன் “சாரி தியா.. உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டன் இனி நான் இல்லாம நீ நிம்மதியா இருக்கலாம்” என்று தன்னை கேள்வியாக பார்பவளை கண்டு புன்னகைத்தவன் “ஆமா தியா.. இனி என் தொந்திரவு இருக்காது.. நான் லண்டன்ல மெடிக்கல் காலேஜ்ல அட்மிஷன் போட்டு இருக்கேன் இன்னைக்கு நைட் ஃப்ளைட்..”

 

“சர்வா நான் சொல்லுறது கேளு”

 

“நீ என் முடிவ மாத்த நினைக்காத.. நான் டாக்டர் ஆகனும் அதுவும் மகப்பேறு மருத்துவராகனும்.. என்னால குழந்தை பெத்துக்க முடியலனாலும் என் கையால குழந்தைகளுக்கு உயிர் கொடுக்கிற பாக்கியமாவது எனக்கு கிடைக்கணும் நினைக்கேன்.. அதோட குழந்தை இல்லாம கஷ்டப்படுறவங்களுக்கு நானே எதாவது ரிசர்ச் பண்ணி அவங்களுக்கு ஒளி கொடுக்க நினைக்கிறேன்.. பிளீஸ் தியா என்ன தடுக்காத” என்க,

 

முதலில் கலங்கியவள் நண்பனின் முதிர்ச்சியான பேச்சில் மெச்சும் பார்வை பார்த்த தியா “நீ போ சர்வா.. உன் லட்சியத்த அடைஞ்சிட்டு வா.. தோழியா உன் வளர்ச்சிய பாக்க வெயிட் பண்ணிட்டு இருப்பேன்” என்று அவனை அணைத்து விடுவிக்க,

 

சர்வாவோ “தேங்க்ஸ் தியா.. என்னால தொடர்ந்து கண்டாக்ட்ல இருக்க முடியாது பட் உனக்கு உதவி தேவைப்பட்டா எனக்கு அவசியம் கால் பண்ணு..” என்றான்.

 

பின் அன்றைய இரவே அவன் வானத்தில் பறந்து விட்டான்.

 

அதன் பின் பெண்ணவளுக்கும் அவனின் நினைவு அதிகம் வந்தாலும் ஏனோ அழைத்து அவனின் மனதை கெடுக்க விரும்பவில்லை, தொலைவில் இருந்தாலும் நலமாக இருக்க வேண்டி கொண்டாள்.

****

கதையை கூறி முடித்தவன் கல்லை முழங்கியவன் போல் பாறையாக அமர்ந்திருந்தான் என்றால் அவனின் முகத்தில் தெரிந்த இறுக்கம் எதிரே அவனையே பார்த்திருந்த தியாவிற்கு தான் வேதனையோடு குற்றயுணர்சியும் மேலோங்கியது.

 

அவனின் கதை கேட்டு மற்றவர்களுக்கும் பரிதாபமாகவே இருந்தது.

 

பின் அவனை அழுத்தமாக ஏறிட்ட தர்மராஜ் “இடியட் உன்ன இந்த நிலைமைல வேண்டாம் விட்டுட்டு போனவளுக்கு வரிஞ்சி கட்டிட்டு வர.. வேஸ்ட் பெல்லோ” என்று இதழை சுழித்தான்.

 

பின் தலை குனிந்திருந்த தியாவின் தாடையை தர்மா நிமிர்த்த பெண்ணவளுக்கோ ஏனோ அவனின் தொடுகை அறுவெருப்பாக இருந்தது, அததோடு எதையோ உணர்ந்த தியா “ச்சீ கைய எடு அருவெறுப்பா இருக்கு” என்றதை கேட்டு கோணலாக இதழ் வளைத்தவன் “ரியலி” என்று அவள் கன்னத்தை வருட,

 

அதில் ஏதோ உண்மை அவளின் உள் மனது உரைக்க, மனதில் உள்ளது சரியா என்பது தெரிந்துக்கொள்ள எண்ணி “கோழை மாதிரி நேருக்கு நேரா மோதாம மறைஞ்சி இருக்கியே.. நீ என்ன தொடுறது அசிங்கம் மிஸ்டர் ராகவேந்திரன்” என்றதும் சர்வா பட்டென்று அவன்மேல் பார்வையை பதித்த சர்வாவுக்கு குழப்பமே மிஞ்ச “தியா என்ன சொல்லுற.. இவன் ராகவ் இல்ல.. என்னோட ப்ரெண்ட் தர்மா”

 

“இல்ல சர்வா.. இவன் பேரு ராகவேந்திரன்.. வெளிய உண்மை தெரிய கூடாதுன்னு தன் முகத்தை மறைச்சு வேற பெயருல சுத்துற கோழை” என்று அருவெறுப்பாக கூற,

 

அவளை விழிகளால் பருகிய தர்மா “மிஸ்டர் ரேயன் எல்லாம் சொல்லிருப்பார் போல.. ஆனா எல்லாத்தையும் சொன்னவர் நான் யாருன்னு தெளிவா சொல்லல போல.. ஏன் உன் ப்ரெண்ட் ருத்ரன் கூட சொல்லயா.. சரி ரிவில் பண்ணிடலாம்” என்றுவிட்டு சர்வாவை பார்த்து “திஸ் சர்ப்ரைஸ் ஸ் கோஸ் டூ மை டிவின் பிரதர் சர்வேந்திரன்” என்று தன்னுடைய முகத்திலிருந்த தர்மா என்பவனின் முகத்தை கிழித்து எரிந்தான் ராகவேந்திரன்.

 

அதில் ருத்ரன் ரேயன் தவிர்த்து மற்றவர்கள் அதிர்ந்து விட, தன்னுடைய ரெட்டையனை எதிர்பாராமல் திகைத்த சர்வாவின் இதழ்கள் அதிர்ச்சியில் “ராகவா..” என்று அழைத்தது.

 

அதை கேட்டு, அந்த அழைப்பின் சொந்தகாரனோ “எஸ் பிரதர்” என்று கண்ணடித்து தியாவின் மேல் பார்வையை படரவிட்டு, அவள் உணர்கள் உணர்ந்த உண்மையை கண்டறிந்த தர்மாவாக இருந்த ராகவேந்திரனின் கண்கள் அவளை மெச்சி கொண்டது.

 

சர்வாவிற்கு ரெட்டையர் என்று தெரியாமல் முதலில் அதிர்ந்த பாவை உண்மை உணர்ந்து “டேய் நீ தான அப்போ அன்னைக்கு டான்ஸ் பிராட்டீஸ்ல என்கிட்ட தப்பா பீஹேவ் பண்ணினது” என்றவளின் குற்ற பார்வை இதற்கு நீயும் உதைந்தாயா என்று சர்வாவை சுட, அவனோ தலையை கவிழ்த்து விட்டான்.

 

அவளை பார்த்து கண்ணடித்த ராகவ்வோ “யூ ஆர் பிரிலியன்ட் டார்லிங் அப்போவும் சரி இப்போவும் சரி” என்றவனுக்கும் அவளின் உணர்வுகள் கண்டுபிடிப்பு தெரிந்த ஒன்று தான்.

 

ஆம் சர்வா கூறிய கதையில் கல்லூரி நடனம் பயிற்சியில், அவளுடன் இருந்தது சர்வேந்திரன் அல்ல அவனின் ரெட்டையன் ராகவேந்திரன் தான், பெண்ணவளுக்கு அவனின் தொடுகை மாற்றமே ஏதோ வித்தியாசத்தை உணர்த்தியது மாதவிடாய் காலம் என்பதால் தவறான எண்ணம் குழப்புகிறதோ என்று எண்ணி அவனிடம் மன்னிப்பு வேண்டினாள், ஆனால் அவன் ரெட்டையன் நோக்கம் புரிந்திருந்தால் கைகளால் அல்ல செருப்பால் தான் பதில் கொடுத்திருப்பாள்.

 

ஆனால், இப்போது அவன் தர்மராஜின் வேடத்துடன் தன்னை தீண்டியதிலே அப்போது உணர்ந்த அதே அறுவெருப்பே பெண்ணவளுக்கு சில விஷயம் உணர்த்தியது, இருப்பினும் உண்மை தெரியாமல் வாயை விட கூடாது என்றதில் அவனிடம் போட்டு வாங்கி வேஷத்தை கலைக்க வைத்தாள்.

 

அதிலும் மருத்துவமனையில் வெளியே மூவரும் பேசி கொண்டிருக்கையில் ரேயன், தர்மாராஜ் வேடத்தில் வேறு ஒருவன் இருக்கிறான் என்பதை சொன்னானே தவிர அது சர்வாவின் ரெட்டையன் அப்போது சொல்ல வேண்டாமென்று எண்ணி ரகசியம் காக்க, இப்போது ரகசியம் உடைந்தும் விட்டது.

 

இப்போது அனல் பார்வையால் சர்வாவை சுட்ட தியா “உண்மைய சொல்லு சர்வா காலேஜ் டான்ஸ் பயிற்சிக்கு லாஸ்ட் டே என்கூட இருந்தது இவன்னு உனக்கு தெரியும் தான.. நீன்னு நினைச்சி உன்கிட்ட மன்னிப்பு கேட்டேன்ல அப்போ கூட சொல்லல.. சோ உனக்கு பிரெண்ட்ஷிப் விட தப்பான உன் ரெட்டையன் தான் முக்கியம் ரைட்”

 

“தியா அது வந்து..” என்று காரணம் சொல்ல வந்தவனை பார்வையால் தடுத்தவள் “தயவு செஞ்சி உன் சப்பு இல்லாத ரீசன் சொல்லி என்ன அசிங்கமா பேச வைக்காத.. பிரெண்ட்ஷிப்க்கு நம்பிக்கை முக்கியம் அதையே சிதச்சிட்ட.. ஒருவேளை அவன் அன்னைக்கு ரேப் பண்ணியிருந்தா கூட பழிய நீ ஏத்துருப்பியே தவிர.. அவன காட்டி கொடுத்திருக்க மாட்ட தான” என்றதில் விலுக்கென்று நிமிர்ந்த சர்வா “தியா எனக்கு உன்மேல இருந்த நட்பு காதல் எல்லாம் உண்மை அத சந்தேகப்படாத.. அண்ட் அன்னைக்கு ஃப்ரெஷர் டேல உன்கூட எடுத்த பிக் பாத்து உன்மேல கிரஷ்ன்னு சொன்னான் நானும் லவ் பண்றதா சொன்னேன்.. அவன் தான் யாரு பெர்பார்மன்ஸ் சிக்கிறாளோ அவங்க கரெக்ட் பண்ணி லவ் பண்ணிக்கலம்ன்னு சொன்னான்.. நான் வேண்டாம் சொல்லியும் என்ன கன்வின்ஸ் பண்ணி சில நேரம் ஆள் மாறாட்டம் பண்ணிக்கிட்டோம்.. நீ கூட சில டிஃபரன்ஸ் ஃபீல் பண்ணி கேப்ப அந்த டைம் உன்ன டைவர்ட் பண்ணிடுவேன்.. ஆனா அவன் உன்கிட்ட தப்பான நோக்கத்துல பழகினான்னு நினைக்கல விஷயம் தெரிஞ்ச உடனே அவன அடிச்சி மூஞ்சில முழிக்காதன்னு பேசுறதே இல்ல” என்க,

 

அவனை கேவலமாக பார்த்த தியா *எனக்கு புரியல சர்வா.. நீ லவ் பண்ற பொண்ண இப்படி தான் இன்னொருத்தனுக்கு கூட்டி கொடுப்பியா.. ஒருவேளை நமக்கு கல்யாணமாகி என்மேல அவன் கிரஷ்ன்னு சொல்லி நானும் அவன்கூடவே போயிருந்தா வாழ்க வளமுடன் அனுப்பி வைப்பியா” என்றவளுக்கு அவனின் துரோகத்தை ஜீரணிக்க முடியவில்லை.

 

அவளின் ஈட்டியால் குத்திய வார்த்தையில் சினம் கொண்டவன் “தியா மைண்ட் யூவர் வேர்டஸ்”

 

“டாக்டர் சார் பண்ணினத விட.. நான் என்ன மைண்ட்டா பேசிட்டேன்* என்று அவனை பார்ப்பதை தவிர்த்து விட, இடை புகுந்த ராகவோ “ஹே காயஸ் சில்.. கடைசி நாள் ஆதுவுமா எதுக்கு இப்படி அடிச்சிக்குறீங்க.. ரிலாக்ஸ் இன்னும் நிறைய ரிவில் இருக்கு.. நெக்ஸ்ட் தியா பேபி நீ மறைச்சு வச்சிருக்குற உண்மைய ரிவில் பண்ணுடி செல்லம்” என்றதில் வெடுக்கென நிமிர்ந்து அவனை பாவை அதிர்ந்து பார்க்க,

 

அங்கிருந்த ஆடவர்களுக்கும் பெண்ணவளின் அதிர்ந்த பார்வையிலே ஏதோ கதை இருப்பது உணர்த்த, என்னவாக இருக்க கூடுமென்று அவளையே பார்திருந்தனர்.

 

அவளின் பாவனையில் சிரித்த ராகவ் “என்ன ஷாக் ஆகுற.. எனக்கு எப்படி உன் ரகசியம் தெரியும்ன்னா இல்ல எந்த உண்மைய கேக்குறான் ஷாக் ஆகுறீயா” என்றதை கேட்டு தன் உணர்வுகளை இதழ் கடித்து அடக்கிய தியாவின் பார்வை ரேயனில் தான் படிந்தது.

 

இருவரின் பார்வை சந்தித்து கொள்வதை கண்ட ராகவ் “தியா பேபி.. உன் புருஷன் உன்கூட தான் வர போறான் சொர்கத்துக்கு போய் கூட சைட் அடிச்சிக்க.. நீ சொல்ல வேண்டியத சொல்லிட்டேடா நானும் சொல்ல வேண்டியத சொல்லி உங்க கணக்க செட்டில் பண்ணிட்டு என் பொலப்ப பாப்பேன்ல” என்றும் பெண்ணவள் வாயை திறக்காததில் “இது வேலைக்கு ஆகாது” என்றுவிட்டு மடிக்கணினியின் வழியில் “மந்தாகினி சிஸ்டர்.. குட்டி பேபி தூக்கிட்டு வந்து ரெண்டு தட்டு தட்டுங்க” என்றதும் மந்தாகினியும் சமத்தாக தூங்கும் குழந்தையை தூக்கி வந்து அவர்கள் முன் வந்து குழந்தையின் பிஞ்சு தொடையில் ஒரு அடி போட,

 

குழந்தை வலியில் பதறி முழித்து “மா..” என்று கதறி அழுதது.

 

அதில் கண்கள் கலங்கிய தியா “ராகவ் உனக்கு குழந்தை என்னடா பாவம் பண்ணுச்சு” என்றதை காதில் வாங்காத ஆடவனோ மந்தாகினிக்கு கண்ணை காட்ட, அதின் அர்த்தம் உணர்ந்து கையை ஓங்கி குழந்தையை அடிக்க போக,

 

“ஸ்டாப் இட்.. நான் சொல்லுறேன்” என்று தியா கத்தலில் ராகவ் “தட்ஸ் சவுண்ட்ஸ் குட்ஸ்.. “ என்றவன் மந்தாகினிக்கு கண்ணை காட்ட, அவரும் அழும் குழந்தையை தட்டி கொடுத்து உறங்க வைத்துவிட்டு பழைய இடத்தில் குழந்தையை விட்டு வந்தார்.

 

தியாவோ கடந்த காலத்தை நினைத்து பார்த்து இதழ் கடித்து கலங்கி தலை கவிழ்த்திருந்தவள்,

 

“ஏய் சொல்லுடி” என்ற ராகவின் கத்தலில் தன்னவனை பார்த்தப்படி தன்னுடைய கருப்பு பக்கத்தை கூற தொடங்கினாள்.

****

 

ரேயனுடன் தியா ரகசியமாக திருமண வாழ்வு சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் வழக்கம் போல் வேலை முடித்து ஒன்றாகவே வீட்டிற்கு நுழைந்த கணம் பெண்ணவளை கையில் ஏந்தி குளியல் அறைக்குள் நுழைந்தான்.

 

அங்கே சில பல சில்மிஷங்கள் அரங்கேற்றி, ஒரு மணிநேரம் கழித்து கடினப்பட்டு அவனை அறையை விட்டு வெளியே தள்ளிவிட்ட தியா, உடையை மாற்றி கொண்டு அவன் கட்டிய தாலி வெளியில் தொங்கவிட்டு நெற்றி வகுட்டியில் குங்குமத்தை வைத்துவிட்டு வெளியே வந்தாள்.

 

இதுவே பெண்ணவளின் வாடிக்கையாகி போனது, வெளியே அல்லது அழுவலகம் சென்றால் அவன் கொடுத்த அடையாளத்தை ஆடைக்குள் மறைப்பவள் வீட்டிற்குள் வந்தால் ரேவின் ஆசை யாழியாகவே திகழ, ஆடவனும் ஒவ்வொரு நாளும் அவளில் தொலைந்து புது விதமான புதையலை அவளுக்குள் தேடி பெண்ணவளை காதலால் மூழ்கடித்து விடுவான்.

 

இப்போது அறையை விட்டு வெளியே வந்த தியா, சமையல் அறைக்குள் தோசை சுட்டப்படி நின்றிருந்தவனை அணைத்து தோல்பட்டையில் முத்தமிட, அதில் புன்னகைத்து பெண்ணவளை முன்னே இழுத்தவன் வீட்டியில் தன் மனைவியாக வளம் வரும் தியாவை ஆசை பார்வையால் வருடிவிட்டு இதழ் குவித்து ஊத, அதில் இதழ் சுழித்த பாவை கோவமாக முகத்தை திருப்பி கொண்டாள்.

 

அவளின் கோவம் எதற்கு என்று புரிந்தும் தெரியாதது போல் பெண்ணவளின் இதழை கடித்து இழுத்தவன் “இப்போ எதுக்குடி மூஞ்ச தூக்குற” என்றபடி தோசையை கவனிக்கவும் தவறவில்லை.

 

அதில் மேலாடை இல்லாமல் இருப்பவனின் மார்பில் கோலம் போட்ட தியா “நாளைக்கு உன் வீட்டுக்கு போய் தான் ஆகணுமா.. அதுவும் மூணு நாள் அங்க தான் இருப்பேன் சொல்லுற டூ மச் இதெல்லாம்”

 

“யாழி மாசம் மூணு நாள் வொர்க் லீவ் போட்டுட்டு வீட்டுல இருப்பேன்.. இந்த தடவ போகலன்னா என்ன ஏதுன்னு குடைஞ்சி ஆளு ஏவி வேவு பாக்க விட்ருவாங்கடி அப்புறம் நம்ம மேட்டர் தெரிஞ்சிடும்.. அதோட இந்த தடவ கொல சாமி கோவில் கொடைக்கு போறத பிளான் பண்ணியிருக்காங்க.. சோ கண்டிப்பா போயே ஆகனும்டி.. என் செல்ல சமத்து தான நீ.. மூணு நாள் தான் அத்தான் போயிட்டு வந்துருவேன்” என்க,

 

அதில் முறைத்து, அவனின் வாயில் அடிப்போட்ட தியா “செருப்பு பிஞ்சிடும் அத்தான்னு சொல்லாத எத்தன தடவ சொல்லியிருக்கேன்”

 

*அத்தான அத்தான் சொல்லாம சட்டை பொத்தான்னா சொல்ல முடியும்” என்று நகைசுவை செய்தவன் மனைவி முறைப்பதை கண்டு பம்மி “சரிடி கோச்சிக்காத மூணு நாள் நினைவு வைக்கிற மாதிரி நிறைய லவ் பைட்ஸ் கொடுத்துட்டு போறேன்” என்று குறு குருவென்று பார்க்க,

 

அதில் சிவந்தவள் “போடா.. இன்னைக்கு நைட் பொண்டாட்டி டூட்டிக்கு நான் லீவ் போடுறேன்..” என்று அவன் சுட்ட தோசையை பிய்த்து வாயேருகே கொண்டு செல்ல, அவள் கையை வைத்து அவளுக்கே ஊட்டியவன் பெண்ணவளை இழுத்து இதழ் வழியே உணவை எடுத்து கொண்டான்.

 

அதில் அவனின் தோலில் அடித்த தியா “இப்படிலாம் பண்ணி சமாதானம் பண்ண டிரை பண்ணாத.. நான் கோவம் தான” என்று முறுக்கி கொண்டவள், அவனின் இழுப்பில் தன் இதழ் வழியே உணவை ஊட்டவும் தவறவில்லை.

 

பின் சாப்பிட்டு முடிக்கவும் பெண்ணவளை கையில் அள்ளி கொண்டு படுக்கையில் கிடத்தியவன், பெண்ணவளின் மேல் படர்ந்து கழுத்தியில் வாசம் பிடித்த ரேயன் கோவத்தில் நடித்து கொண்டிருந்தவளை முனங்க வைத்து அதன் இசையில் அவளுள் கவி பாடினான்.

****

 

மறுநாள் ஆகஸ்ட் 23 தியாவின் கருப்பு பக்கம்

 

காலைலயே பெண்ணவளுடன் கட்டில் சண்டை பல சுற்றுகள் முடித்துவிட்டே குளித்து தயாராகி பெண்ணவளை விட்டு பிரிய மனில்லாமலே தன் வீட்டிற்கு சென்றான்.

 

அதே போல் வாகினியும் ஜோஸப்பிடம் கெஞ்சி கொஞ்சி சமதிக்க வைத்து ரேயன் தங்கள் வீட்டிலில் கால் வைத்த மறுநிமிடம் வாகினியும் வந்திருந்தாள்.

 

இருவருமே மாதம் மூன்று நாள் விடுப்பெடுத்து வீட்டிற்கு செல்வது உண்டு, ஆனால் ஒன்றாக அல்ல இருவரும் வெவ்வேறு நாளில் தான் செல்வார்கள் இன்று கொல தெய்வம் கோடை என்பதால் ஒன்றாகவே செல்ல வேண்டிய நிபந்தனை.

 

தன்னவன் சென்றதும் வெறுமையாக உணர்ந்த தியாவிற்கு ஏனோ வேலைக்கு போகவே சலிப்பாகவே இருக்க, வழக்கு நெருக்கடியான சூழ்நிலையில் போக வேண்டிய கட்டாயத்தில் வழக்கம் போல் ஷார்ட் பேண்ட் சகிதம் அழுவலகத்தை நோக்கி சென்றாள்.

 

ரேயன் இல்லா நேரம் அலுவலகத்திற்கு குறுக்கு பாதையில் சென்று நேரத்திற்கு செல்ல நினைப்பவள் இப்போதும் அதையே பின் பற்ற, அந்நேரம் ஆர்யாவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வர, வண்டியை ஓரமாக நிறுத்தி அழைப்பு பேசி முடித்த சமயம் பெண்ணவள் உணரும் முன்னே யாரோ இருவர் அவளின் மூக்கில் வெள்ளை துணியை வைத்து அழுத்த, மறுநொடி அவர்களின் கையிலே மயங்கி சரிந்தாள்.

 

தொடரும்…

– ஆனந்த மீரா 😍😍

 

 

 

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்