Loading

ஐந்து நிமிடம் கண்கள் மூடி தன்னுடைய முயற்சிக்கான பதிலை கண்டறிந்து அமைதியாக நடந்தவள் ரெண்டு நிமிடம் முடியவும் ஒரு இடத்தில் நின்று மறுபடியும் கண்களை மூடி திறந்து சுற்றி பார்வையை சுழலவிட்டவளின் கண்ணில் சோலைக்காட்டு பொம்மை பட, அதன் அருகில் விரைய, ஆடவர்களும் பின் தொடர்ந்தனர்.

பின் சோலைக்காட்டு பொம்மை தொட்டு பார்த்தவள் “ஜோஸா..” என்றாள்.

பானை கொண்டு மறைத்திருக்கும் அவன் தலையை கண்டு “ரே அந்த பானைய ரிமூவ் பண்ணு” என்று கூறிவிட்டு சர்வாவுடன் இணைந்து அவனை கட்டியிருந்த கட்டை மொத்தமாக அவிழ்த்திருக்க, அதில் பிடிப்பு இல்லாமல் ஜோஸப் விழ போக ஆடவர்கள் இருவரும் அவன் கையை தோல்மேல் போட்டு காருக்கு கொண்டு வந்தார்கள்.

சர்வா மருத்துவன் என்பதால் அன்று தான் காணும் போது திறந்திருந்த கண்கள் இப்போது மூடப்பட்டிருப்பதை கண்டு ஜோஸப்பின் கையை பிடித்து பரிசோதித்து பார்த்தவன் “தியா.. ஜோஸப் ஸ் பேக்” என்றதும் இதழ்கள் துடித்து நடுங்கியவள் “என்ன சர்..வா சொ..ல்லுற” என்றவளுக்கு வார்த்தை தண்டியடிக்க, ரேயன் அவளின் கையை பற்றி அழுத்தம் கொடுத்தான்.

பின் தொடர்ந்த சர்வாவோ “ஆமாடி நீ கவனிச்சியா ஓபன்ல இருந்த ஜோஸப் ஐ க்ளோஸ்ல இருக்கு.. அதோட அவரோட நரம்புகள் இப்போ வொர்க் பண்ணுது ஜோஸப் கோமா ஸ்டேஜ்ல இருந்து வெளியே வந்த சமயம் அவர சுத்தி இறுக்கி போடப்பட்டிருந்த கட்டு அப்புறம் மண்டைல வச்ச பானை இதுனால ப்ரீத் பண்ண சிரமப்பட்டு அன்கான்ஸ்கியஸ் ஆயிட்டார்” என்றதும் பெண்ணவளுக்கு அவன் கோமா செல்ல காரணமான காட்சிகள் கண்முன் வந்து போக, அடுத்த கணம் சர்வாவை அணைத்த பாவை “சர்..வா.. சர்..வா” என்றவளுக்கு, அவன் பெயரை கூட சொல்ல முடியாத உணர்ச்சி நிலையில் வாயிலிருந்து காற்று மட்டுமே வந்தது.

அவள் அணைத்ததும் அதிர்ந்த சர்வா பின் தன்னை சமன்படுத்தி அவளின் தலையை தடவி “பம்பர கண்ணு ரிலாக்ஸ்டி ஒன்னும் இல்ல” என்று தன்னிடமிருந்து அவளை விளக்க,

“தேங்க்ஸ் சர்வா” என்று மறுபடியும் அணைத்து கொண்டாள்.

அவளின் நிலை ரேயனுக்கு புரிந்தாலும் தன்னிடம் தேட வேண்டிய ஆறுதலை இன்னொருவனிடம் அவள் தேடியதில் முகம் இறுகிவிட்டது.

அதை கண்டு கொண்ட சர்வா “தியா.. உன்னோட உணர்வுகள அடக்கு.. இன்னும் அடுத்த நாலு பேர நம்ம கண்டு பிடிக்கணும்” என்று கூறும் போது சரியாக தியாவின் தொலைபேசி அலற, இவ்வளவு நேரமிருந்த நிம்மதி இழந்த தியா அடுத்து என்ன கூற போகிறான் என்ற பீதியுடன் அழைப்பை ஏற்றாள்.

மறுமுனையில் தர்மராஜ் “வாவ் வாவ் வாவ் தியா பேபி சொன்ன போலவே அரை மணிநேரத்துக்குள்ள டாஸ்க் முடிச்சிட்ட.. சூப்பர் இந்த பஞ்சுவலிட்டி தான் உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது அண்ட் உனக்காக ஃப்ரீ பாஸ் ரெடி இன்னும் பத்து நிமிஷத்துல உங்களுக்கு கார் வரும்.. அவங்க சொல்லுறத கேட்டு எந்த சண்டிதனமும் செய்யாம வரணும் அப்புறம் இன்னும் கொஞ்ச நேரத்துல உன் ஆசை தம்பியும் நண்பனும் வருவானுங்க.. அவனுங்களையும் பத்திரமா கூட்டிட்டு வா.. உங்கள வரவேற்க ஆவலா காத்திருக்கேன்.. ஹேப்பி ஜார்னி” என்று அழைப்பை துண்டித்தான்.

அதன் பின் மூவரின் மூளையுமே ஏதோ ஏதோ சிந்திக்க, தியா மற்றும் ரேயனக்கு சர்வாவை எதுக்கு இழுத்து விடுறான் என்று தான் தோன்றியது.

பின் தியாவோ “சர்வா.. ஜோஸப்ப ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகலாமா”

“இல்ல தியா.. இன்னும் பத்து நிமிஷத்துல கார் வந்துரும் நம்ம ஹாஸ்பிட்டல் போயிட்டா மத்த நாலு பேர் நினைச்சி பாரு”

“டேய் ஜோஸாக்கு.. இப்போ செக் பண்றது அவசியம் தான”

“டோண்ட் வொர்ரி தியா.. அவருக்கு தானவே கான்சிசியஸ் வரும் அண்ட் அதுக்குள்ள இந்த பிராப்ளம் சால்வ் பண்ணி மீதி உள்ளவங்களையும் சேப் பண்ணனும்” என்க,

அவன் கூற வருவது புரிந்தாலும் பயம் இருக்கவே செய்ய “சரி தான்.. ரே ஜோஸா கூட்டிட்டு போகிறது பாதுக்காப்பு இல்லையே” என்றதை கேட்டு,

இவ்வளவு பெண்ணவள் கண்டு கொள்ளாததில் கார பார்வை வீசிய ரேயன் “கார்லயே இருக்கட்டும் நான் அப்பாக்கிட்ட சொல்லி கூட்டிட்டு போக சொல்லுறேன்” என்று காட்டமாக பதில் அளித்து விட்டு தந்தைக்கு குறுஞ்செய்தி அனுப்ப போக,

அந்நேரம் தியாவின் திறன்பேசிக்கு குறுஞ்செய்தி வந்தது “ரேயன் தியா சர்வா ருத்ரன் ஆர்யன் ஜோஸப்.. இதுல ஒரு தல குறைஞ்சாலும் உங்க தேடுதல் வேட்டை மொத்தமும் வேஸ்ட்டாகி நாலு பேரும் இருக்கிறதயே மறந்துற வேண்டி தான்” என்று வந்திருக்க, அதில் பெண்ணவளுக்கு பயத்தில் மூச்சு வாங்க ரேயனின் கையை பற்றி தன்னை சமன் செய்து கொண்டாள்.

அதன் பின் கூறியது போல் ஆறு பேர் செல்லும் அளவிற்கு பெரிய காரே வந்திருக்க, ஜோஸப்பை கை தாங்கலாக அழைத்து வந்து வந்த காரில் கிடைத்த அதற்குள் ஆர்யன் ருத்ரன் இருவருமே வந்து சேர்ந்திருந்தார்கள்.

அதை கண்டு தியா கண்ணாலயே காரில் அமரும்படி செய்கை செய்ய, அவர்களும் புரிந்து கொண்டு அமைதியாக ஏறி கொண்டனர்.

பிறகு இவர்களை அழைத்து செல்ல முகத்தை மறைத்தப்படி வந்த தர்மராஜ் அனுப்பிய ஆட்கள் இருவரும் அனைவரின் கண்களை மட்டும் கட்டிவிட்டு காரை இயக்க, பயணமும் ஆரம்பமானது.
****
பின் கார் காட்டு பகுதியில் நிற்க, அடியாட்கள் இருவரும் ஜோஸப் தவிர கண்கட்டியப்படி இருந்த ஐவரையும் கீழே இறக்கியிருக்க, அதே சமயம் இன்னும் ரெண்டு அடியாட்டகள் வந்திருந்தனர்.

ஒருத்தரும் ரெண்டு ரெண்டு பேரை இழுத்து செல்ல, மீதமிருந்து ஜோஸப்பை இருவரும் கை தாங்கலாக கூட்டி கொண்டு முதல் போனவர்களின் பின் தொடர்ந்தனர்.

கண் கட்டப்பட்டு இருந்ததால் எங்கே இருக்கிறோம் என்று முழுதாக தெரியவில்லை என்றாலும் தாங்கள் நடக்கும் இடம் காட்டு பகுதி என்று மட்டும் அவர்களால் உணர முடிந்தது.

பின் ஆறுவரையும் காட்டியில் இதுவரை யாருக்கும் தெரியாத ரகசிய இடத்திற்கு அழைத்து வந்து ஒவ்வொருவருக்கும் தனி தனியாக நாற்காலியில் கட்டி போட்டு இடைவெளி விட்டே அமர வைக்க,

இதில் பெண்ணவளை மட்டும் ரேயன் எதிரே அமர வைத்திருந்தனர்.

ஒவ்வொருவர் மனதிலும் தனி தனி சிந்தனைகள் ஓடி கொண்டிருக்க, தங்களின் கண் கட்டு அவிழும் நேரத்திற்காக காத்திருந்தனர்.

அப்போது காலயடி ஓசை கேட்கும் படி அவ்விடம் வந்த தர்மராஜ் “உங்கள் ஆறுவரையும் என்னுடைய ரகசிய இடத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன் அதிலும் ஆறுவரையும் ஒரு சேர பார்ப்பதில் அடியேனுக்கு பரம திருப்தி” என்று வெற்றி மிதப்பில் சத்தமாக சிரித்தவன், சர்வா ஜோஸப் மற்றும் தியாழினி மூவரையும் தவிர்த்து மீதம் மூவரின் உடலில் ஊசியை செலுத்தினான்.

பின் ஐந்து நிமிடம் கழிய, அவர்கள் மூவரை சுற்றியிருந்த கட்டுகளை மட்டும் அடியாட்களிடம் அவிழ்க்க கட்டளையிட்டவன், அவர்கள் அவிழ்த்ததும் தானே ஆறுவரின் கண்களுக்கும் விடுதலை அளித்தான்.

ஆடவர்கள் மூவரும் தன் உடலில் உணர்ந்த வலியிலே தங்களின் உடலில் மருந்து செலுத்துவதை உணர்ந்திருந்தவர்கள் கண் கட்டை அவிழ்க்கவும் சுற்றி இருந்தவர்களை பார்த்து தாங்கள் மூவரும் மட்டும் மொத்தமாக விடுதலையாக இருந்ததில் ஏதோ விலங்கத்தை உணர்ந்தவர்களின் உடல் அசைய மறுத்து உணவற்ற நிலைக்கு சென்றது.

இதில் ஜோஸப் தவிர மீதி இருவருக்கும் கூட அவர்கள் மூவருக்கும் முழுவதுமாக விடுதலை இருந்தும் அவர்கள் அசைய மறுத்து இருந்ததில் நெஞ்சில் கலவரம் எழ, தியாவோ சுற்றி பார்வையை சுழலவிட்டு தப்பிக்க வழியை சிந்தித்தாள்.

இதிலும் ஆர்யன் தன் முன்னே குரூரமாக சிரித்தப்படி நின்ற தர்மராஜை யாரென்று புரியாமல் பார்க்க,

ஆர்யனோ “ஹலோ யாருடா நீ.. உனக்கு என்ன வேணும்.. என் இசைய எங்கடா வச்சிருக்க” என்றதை கேட்டு புன்னகை முகமாக, அவனின் அருகில் சென்ற தர்மராஜ் “ஹாய் ஐ அம் தர்மராஜ் மகப்பேறு மருத்துவர்.. நைஸ் டூ மீட்டிங் யூ” என்று அவனின் முன் கையை நீட்டியவன்,

பின் யோசனை வந்தவனாக “சாரி மிஸ்டர் உங்களால கை கொடுக்க முடியாதுல..” என்று தன் தாடையை தடவி தன்னை குழப்பமாக பார்ப்பவனிடம் “உங்களுக்கு என்ன தெரியாது தான மிஸ்டர் ஆர்யன்.. ஆனா எனக்கு இங்க இருக்கிற ஒவ்வொருத்தரையும் நல்லா தெரியும்.. ஃபார் யூ கைன்ட்லி இன்பர்மேஷன் உன் ஆசை பொண்டாட்டி என்ன நிலமைல உன்கிட்ட வந்தாளோ அந்த நிலமைக்கு காரணமானவன் நான் தான்..” என்றதை கேட்டு அறுவெருக்கும் பார்வை பார்த்தவனை கண்டு

“ஏய் மேன் நீ நினைக்கிற மாதிரி உன் பொண்டாட்டிய ரேப்லாம் பண்ணல ஏன்னா பேசிகல்லி ஐ அம் ய குட் வில்லன் யூ னோ.. ரொம்ப குழப்பிக்காத தெளிவாவே தெளியப்படுத்துறேன்” என்றுவிட்டு சர்வாவின் அருகில் வந்து “ஹாய் மச்சி” என்று அவன் தோலை தட்ட,

அவனை பார்வையால் எரித்த சர்வா “தர்மா.. இங்க நடக்கிற பிரச்சினைக்கு நீ தான் காரணமா இவங்க மூணு பேரும் தேடிட்டு இருந்த அக்யூஸ்ட் நீ தானா” என்க,

சர்வாவை பார்த்து புன்னகைத்த தர்மா “என்ன மச்சி நீ இவ்வளவு தத்தியா இருக்க.. கால் பேசும் போது குரல வச்சே கண்டுபிடிச்சுருப்பேன்ல நினைச்சேன் அந்த அளவு நம்ம ப்ரெண்ட்ஷிப் வீக்கா என்ன..” என்று உச்சு கொட்டிவிட்டு “ஆனா மச்சி ஒரு சின்ன திருத்தம் எல்லாத்தையும் நான் தான் பண்ணினேன்.. இல்ல இல்ல தர்மராஜ் பேர அடையாளமா வச்சி உள்ள இருக்கிற சைக்கோ பண்ணியிருக்கான்” என்றவனின் பார்வை குரூரமாக மாற,

“என்ன சிஐடி ஆபீஸர் ரேயன் நான் சொல்ல வருவது உங்களுக்கு தெரியும் தான.. மத்தவங்களுக்கு சொல்லி கூட்டிட்டு வரல போலவே” என்றவன் அர்த்த பார்வையை ரேயனிடம் நிலைக்க விட்டு “சரி விடுங்க ஆபீஸர் நானே ஒவ்வொரு சர்ப்ரைஸா ரிவில் பண்றேன்” என்றான்.

பின் அனைவருக்கும் நடுவில் ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன், முன்னிருந்த மேஜையிருந்த கணினி மூலம் மயக்கத்தில் படுத்து கிடந்த யாழிசை மற்றும் அதற்கு சற்று தள்ளி மயக்க நிலையில் நாற்காலியில் மயங்கி இருந்த வாகினி, பின் அவர்களுக்கு காவலாக நின்ற மந்தாகினியையும் மற்றவர்களுக்கு தெரியும்படி மேஜையை நகர்த்தி அதன் மேல் மடிக்கணினியை வைத்திருக்க,

ஆர்யன் தான் “இசை..” என்று அழைத்துவிட்டு “இசைய என்னடா பண்ணின” என்று குரலை சீர,

அவனை கண்டு கேலியாக இதழ் வளைத்த தர்மா “அது ஒன்னும் இல்ல.. உன் பொண்டாட்டிய நான் தூக்க நினைச்ச நோக்கம் பாதிலயே ட்ராப்பாகி கரு களைஞ்சி போச்சே.. அதான் மறுபடியும் புராசஸ் ஸ்டார்ட் பண்ணனும்ல சோ ரிலாக்ஸா தூங்க வச்சிருக்கேன்” என்றவனின் பார்வை மயக்கம் களைய இருந்த வாகினியில் படிந்தது.

மெல்ல கண்விழித்த வாகினியும், எதிரே மயங்கிய நிலையில் படுக்கையிலிருந்த யாழிசையை பார்த்துவிட்டு தனக்கு முன்னே வைக்கப்பட்டிருந்த மடிக்கணினியில் பார்வையை செலுத்தி மொத்த பேரையும் நோட்டமிட்டவளின் பார்வை, இறுதியில் அவளின் அவனிடம் நிலைத்து “ஜோ..” என்று இதழ்கள் அசைந்தது.

அதே நேரம் மந்தாகினியை கண்ட ரேயனின் பார்வை ‘உன்னை அவளை கடத்த கூறினேன் அல்லவா’ என்பது போல் தியாவில் படிய, அவனை காணததில் தவித்திருந்தவளுக்கு, அவன் கூறியதே இப்போது தான் சிந்தையில் எட்ட, தலையை குனிந்து அமர்ந்து விட்டாள்.

இப்படியே அவரவர் அவர்களின் இணையை பார்த்து கொண்டிருக்க, சர்வாவோ தன் நண்பன் தர்மாவை தான் அழுத்தமாக பார்த்திருந்தான்.

மூவரும் அவர்களின் துணையை பார்வையால் வருட, அதை பார்த்து நக்கலாக சிரித்த தர்மாராஜ் “என்ன மிஸ்டர் ருத்ரன் எல்லாரும் அவங்க அவங்க ஆள சைட் அடிச்சிட்டு இருக்காங்க.. நீ மட்டும் சிங்கிளா இருந்தா எப்படி உங்க ஆளையும் தூக்கிடுவோமா” என்றதில் “ஏய்..” என்று ஆடவன் கர்ஜிக்க,

“என்ன தான் உடம்புல உணர்வு இல்லாம கையாகத நிலைல இப்போ இருக்கோம் தெரிஞ்சும்.. மூணு பேருக்கும் அந்த திமிரு அடங்கல பாருங்களேன்” என்று ருத்ரன் ஆர்யனை வருடிய பார்வை தியாவை முறைத்து கொண்டிருந்த ரேயனில் படிந்து “மிஸ்டர் மிஸ்டரஸ் ரேயன் குழந்தைங்கள பத்தி கொஞ்சமும் அக்கறை இல்லயா” என்றதில் இருவரின் காரப்பார்வை அவனை சுட்டது.

அதனை சட்டை செய்யாத தர்மராஜ் மடிக்கணினியில் பார்வை பதித்து “சிஸ்டர் மந்தாகினி குழந்தைங்க பத்திரம் தான”

“ஆமா டாக்டர்” என்றதை கேட்டு தோலை குலுக்கியவன் “குழந்தைங்க பத்திரமா தான் இருக்காங்களாம்.. இப்போ ஒவ்வொரு ரிவிலும் உடைப்போமா.. முதல யார்கிட்ட ஸ்டார்ட் பண்ணலாம்.. உயிர் நண்பனே” என்று சர்வாவின் அருகே நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து “சொல்லுங்க டாக்டர் சர்வா உங்க ஒன் சைட் லவ்வர் தியாழினி பத்தி” என்றதும் நிமிர்ந்த சர்வா வேண்டாமென்று தலையசைக்க,

‘இது என்னடா புது புரளி’ என்பது போல் ஆடவர்கள் இருவரும் முழிக்க, ரேயனோ தன்னிடம் அவள் கூறாததில் குற்றப்பார்வை வீச, அவளோ குனிந்த தலை நிமிரவே இல்லை.

நண்பன் அமைதி காத்ததில் எழுந்து சென்று தியாவின் கன்னத்தில் அரைய, அதில் ரேயனுக்கு கைகளில் நரம்புகள் புடைத்து கிளம்பி “ஏய் யாழி மேல கைவச்ச கொன்றுவேன்டா.. உன்னை” என்றதும், மறுபடியும் தர்மராஜ் பெண்ணவளின் கன்னத்தை பதம் பார்க்க, தியாவோ ‘டேய் அவன் ஒரு தடவ அடிச்சிட்டு போயிருப்பான்.. நீ ஏன்டா சங்க ஊதுற’ என்பது போல் பார்த்து வைத்தாள்.

சர்வவோ “தர்மா அவகிட்ட நெருங்காத நான் சொல்லுறேன்” என்றவனின் நினைவு கல்லூரி காலத்தை நோக்கி சென்றது.
*****

சர்வேந்திரன் கல்லூரியில் ரெண்டாம் ஆண்டு முதல் நாள், அன்று தான் முதலாண்டு மாணவிகளும் வந்திருக்க,

சீனியர்ஸ் என்ற பெயரில் புதிதாக வந்தவர்களிடம் ராக்கிங் செய்து கொண்டிருந்தது சில கூட்டம், அதில் ஒரு கூட்டம் அப்பாவி போல் முழித்து கொண்டு உள்ளே நுழைந்த பெண் ஒருத்தியை கண்டு கூட்டத்திலிருந்த சீனியர் மாணவன் ஒருவன் “ஏய் பொண்ணு இங்க வா..” என்றதை கேட்டு அவள் சுற்றி தேடுவதில் “ஏய் ரெட் சுடி போட்ட பாப்பா உன்ன தான் வாடி” என்க,

துப்பாட்டவை திருகியப்படி அவர்கள் முன் சென்று பவ்யமாக “சொல்லுங்க அண்ணாஸ்”

“ஏய் அண்ணன் வெண்ணன் சொன்ன பல்ல உடைப்பேன் சீனியர்ன்னு சொல்லு” என்றதும் பெருமூச்சு விட்டு “சொல்லுங்க சீனியர்”

“எந்த ஊரு நீ”

“இந்த ஊர் தான்”

“ஓ மதுரைகாரியா” என்றதுக்கு பெண்ணவளும் ஆமென்று தலையசைக்க,

அவளை மேலும் கீழும் ஆராய்ச்சி செய்தவர்கள் அவ்வழியாக சென்ற நண்பனை இழுத்து “ஓகே ஜூனியர் இதோ நிக்குறான்ல இவன் என் ப்ரெண்ட் சர்வா.. உன் பொன்னான குரலால அலைபாயுதே மாதவன் மாதிரி ப்ரொபோஸ் பண்ணிட்டு போ” என்க,

சர்வாவோ “டேய் சும்மா இருடா” என்றதை கேட்டு, அவனை அடக்கியவர்கள் யோசனையாக நின்றவளிடம் “என்ன ப்ரொபோஸ் பண்ண மாட்டியா”

“இல்ல பழைய டயலாக்கா இருக்கே.. உங்களுக்கு தேவை ப்ரொபோஸ் தான பண்ணனும்.. நானே டயலாக் ரெடி பண்ணிக்கிறேன் வெயிட்” என்று கூறி சற்று தள்ளியிருந்த இடத்தில் பூவை பறித்து சர்வாவின் முன் வந்தவள்,

ஆடவனின் கண்களை நோக்கியப்படி “சர்வா எனக்கு உன்ன பிடிச்சிருக்கு.. அதுக்காக ஏழு ஜென்மம் நீ தான் வேணும்ன்னு கிரிஞ்ச் டயலாக்லாம் விட மாட்டேன்.. இப்போ இந்த நிமிஷம் உன் கண்ண பாத்து என் காதல சொல்ல தோணுது” என்று முட்டிபோட்டு பூவை நீட்டியவள் “ஐ லவ் யூ சர்வா” என்க,

ஆடவன் பெண்ணவள் கூறிய காதலில் தன்னை தொலைத்து உறைந்து நிற்க, அவனின் நண்பர்கள் கூச்சலிட்டு “மச்சி பாவம் அந்த பிள்ள எவ்வளவு நேரம் முட்டி போட்டுருக்கும் பூ வாங்கிக்க” என்றதும் நிதானத்திற்கு வந்தவன் அமைதியாக பூவை வாங்கிக்கொள்ள,

அவனை முறைத்தவள் “என்ன சீனியர் லவ் யூ டூலாம் இல்லையா” என்றதை கேட்டு, அவனின் நண்பர்கள் “என்னமா சீனியர்கிட்டயே லந்தா”

“இருந்தா என்ன.. நாங்க லவ் யூ சொல்லும் போது மட்டும் இனிக்குதுல.. அப்போ லவ் யூ சொன்னா லவ் யூ டூ சொல்லணும் அதான உலகம் வழக்கம்”

“இந்தம்மா பொண்ணே.. நாங்க சீனியர்ஸ் எங்களுக்கு தான் ராக்கிங் பண்ண முழு உரிமையிருக்கு”

“இருந்துட்டு போகட்டும் கொஞ்சம் டிஃபரண்ட்டா ஜூனியர் கூட ராக்கிங் பண்ணலாம்” என்று வாக்கு வாதம் செய்து கொண்டிருக்க, நண்பர்களை கை நீட்டி அமைதியாக இருக்கும்படி செய்கை செய்த சர்வா “லவ் யூ டூ பம்பர கண்ணழகி” என்க,

அதை கேட்டு கண் சிமிட்டி சிரித்த பாவை “தட்ஸ் சவுண்ட் குட்..” என்று புருவம் சுறுக்கியவள் “அது என்ன பம்பர கண்ணு”

“ஐ லைக் யுவர் ஐ.. வரும் போது கண்ண உருட்டி முழிச்சிட்டு இருந்தியே சோ அதுனால இந்த நிக் நேம்” என்றதை கேட்டு அசடு வழிந்தவள் “அது ஒன்னும் இல்ல சர்வா ஃபர்ஸ்ட் டே வேறயா அதான் கொஞ்சம் பாவப்பட்ட மாதிரி நடிச்சி பாத்தேன்..

ஆனா, நீங்களே வான்டட்டா வந்து தலைய கொடுக்கவும் என் வாயும் சும்மா இருக்க மாட்டிக்குது.. எனி வே தேங்க்ஸ் ஃபார் யூவர் மெமரோபில் ப்ரொபோஸ்.. வருங்காலத்துல எனக்கு ப்ரொபோஸல் வந்துச்சுன்னு கெத்தா சொல்லலாம்.. என் ஃபியூச்சர்கிட்ட” என்று புன்னகைத்தவள் “சரி நான் கிளாஸ்க்கு போறேன்” என்று சென்றவளிடம் “ஓய் உன் பெயர் என்ன”

“தியாழினி” என்றுவிட்டு செல்ல, அவளின் பாவனையில் தன்னையே தொலைத்து நின்றான் சர்வா.

இப்படியே ஒருவாரம் சென்றிருக்க முதலாம் ஆண்டு மாணவியவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது.

அன்று புடவையில் அவன் முன் வந்து தேவதையாக காட்சியளித்தவள் “ஹாய் சர்வா.. ஒரு வாரமா ஆளே பாக்க முடியல”

“ஆமா ஃப்ரெஷர் டே வொர்க் அண்ட் டான்ஸ் பிராக்டீஸ் இருந்துச்சு”

“வாவ்.. டான்ஸ் ஆட போறீங்களா வெயிட்டிங் வெயிட்டிங்” என்க, புடவையிலிருந்த அவளின் அழகை ரசித்தவன் “புடவைல செமயா இருக்க பம்பர கண்ணு”

“ரியலி.. அப்போ என்ன சைட் அடிச்சீங்களா” என்று முகத்தை மூடி வெட்கப்பட முயற்சிக்க, அவளின் சேட்டையில் சிரித்தவன் “யார பாத்து பயந்து முகத்த மூடுற”

“எதெய் பயந்தேனா வெட்கப்படுறேன்டா வெண்ணெய்” என்க,

அவளை மார்க்கமாக பார்த்து வைத்த சர்வா “எம்மா தெய்வமே.. அந்த கொடுமைய மட்டும் பண்ணாதமா சீரியஸலி பாக்க முடியல” என்றான்.

அதில் தன்னை பார்த்து முகத்தை சுழித்து செல்ல போனவளின் கரம்பற்றி தடுத்து “செல்ஃபி எடுக்கலாமா” என்று கேட்க,

அதில் முறைத்தவள் “பாக்க முடியலன்னு சொன்ன யாரு கூடவும் செல்ஃபி எடுக்க மாட்டேன் சீனியர்”

“ஏய் சும்மா உன்ன கிண்டல் பண்ணினேன் தெரியும் தான ரொம்ப பண்ற.. சரி சீரியஸ்லி ரொம்ப அழகா இருக்க சைட் அடிச்சேன் போதுமா” என்றதை கேட்டு வெண்பற்கள் தெரிய ஆடவனை பார்த்து கண்ணடித்துவிட்டு, அவனுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துவிட்டே விடை பெற்றாள்.

இப்படியே பெண்ணவளுக்கு அவன்மேல் நட்பு வளர்ந்து கொண்டே செல்ல, ஆடவனுக்கோ அவள் மேல் காதல் வளர்ந்து கொண்டேயிருந்தது.

அதனை வெளிப்படுத்த தக்க சமயம் எதிர்பார்த்து காத்திருந்தான்.

தியாவிற்கு முதலாம் ஆண்டு முடியும் வேலையில் கல்லூரியில் ஆண்டு விழாயிருக்க, அதில் நடனத்தில் இணைந்தவளுக்கு சர்வாவுடனே ஜோடியாகும் வாய்ப்பு அமைந்திருக்க, நண்பன் என்ற முறையில் பெண்ணவள் ஆட, சர்வாவிற்கு தான் தன்னவளுடன் இணைந்து டூயட் ஆட போகிறோம் என்று காதல் வானில் பறந்து கொண்டிருந்தான்.

ஆண்டு விழாவிற்கு முன்தினம் பயிற்சியிருக்க, பெண்ணவளுக்கு அன்று மாதவிடாய் வேறு பாடப்படுத்தி கொண்டிருந்தது.

அதோடு நாளைய நிகழ்வை உணர்ந்து ஆடவனுடன் பயிற்சியில் ஈடுப்பட்டு கொண்டிருந்தாள்.

ஆடவனுக்கு அவளின் அருகாமையில் ஏதோ ஏதோ செய்ய, ஆடுகிறேன் என்ற பேர்வழியில் பெண்ணவளின் இடையை கையால் அளந்தவன் சிறிது சிறிதாக அழுத்தத்தை கூட்ட,

அவனுக்கு இணையாக ஆடி கொண்டிருந்த தியாவிற்கோ ஏற்கனவே மாதவிடாய் எரிச்சலோடு ஆடவனின் தொடுகை வேறு அருவருப்பை தர
முடிந்த மட்டும் அவனிடமிருந்து விலக முயற்சித்தும், அவன் மாறி மாறி நெருங்கவும் பொறுமையிழந்து அவனை பளாரென்று அறைந்து தள்ளிவிட்டவள் “செருப்பு பிஞ்சிரும்டா பொறுக்கி நாயே” என்று கோவத்தில் வார்த்தைகளை விட,

அங்கு பயிற்சியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த மற்ற மாணவர்களும் இவர்களை தான் அதிர்ந்து நோக்க, அதில் இதழ் குவித்து ஊதியவள் “சாரி காய்ஸ் யூ கேரி ஆன்” என்றுவிட்டு சர்வாவை முறைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.
***

அன்று கல்லூரியிலிருந்து வெளியேறியவள் மாதவிடாய் ரத்த போக்கு காரணமாக மூன்று நாட்கள் கல்லூரி பக்கம் வரவில்லை. அதோடு போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை, பாவம் ஆடவன் தான் பெண்ணவள் நினைவில் துவண்டு போனான்.

விடுப்பு முடிந்து கல்லூரி வந்தவளுக்கு, அப்போது தான் சர்வாவை அடித்து விட்டோம் என்ற குற்றயுணர்சி எழ, அவனிடம் தன் நிலை கூறி மன்னிப்பு கேட்க நினைத்தவளுக்கு ஏனோ தர்மசங்கடமாகி விட, கல்லூரி முடியும் வரை அவனை பார்க்க முடியாமல் திண்டாடி போனாள்.

சர்வாவிற்கு கூட அன்று அவள் கல்லூரி வந்தது தெரிந்திருக்க, தன்னை தேடி வருவாள் என்று காத்திருந்து பொறுமையிழந்தவன், கல்லூரி நேரம் முடியவும் கல்லூரி வாசலில் அவளுக்காக காத்திருந்தான்.

அவனை கண்டு கொண்ட தியா எதுவும் பேசாமல் தலையை கவிழ்த்தப்படி “சர்வா..” என்றாள் தயக்கமாக,

அவள் தன்னை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை என்றதில் கடுப்பான சர்வா “என்னடி நினைச்சிட்டு இருக்க இப்போ எதுக்கு என்ன அவாய்ட் பண்ற” என்றதும் நிமிர்ந்தவளின் கண்கள் கலங்கி விட,

அதில் பதறி அவளின் கையை பற்றிய சர்வா “பம்பர கண்ணு எதுக்குடி அழுகுற”

“சாரி சர்வா.. அன்னைக்கு நான் உன்கிட்ட அப்படி நடந்துருக்க கூடாது.. ஆக்சுவலி அன்னைக்கு எனக்கு பீரியட்ஸ்டா சோ நானே ஒரு வித மூட் ஸ்விங்ல தான் இருந்தேன்.. அப்போ நம்ம டான்ஸ் பிராக்டீஸ்க்கு நீ டச் பண்ணும் போது அன்ஈஸியா ஃபீல்லாச்சு அதான் அடிச்சிட்டேன்டா.. சத்தியமா உனக்கு என்கிட்ட ப்ரெண்ட்ஷிப் தாண்டி தப்பான நோக்கம் இல்லன்னு எனக்கு தெரியும்.. இப்போ நீ என் கைய பிடிச்சது கூட பிரெண்ட்லி ஃபீல் தான் வருது.. அன்னைக்கு என்னோட சூழ்நிலை அப்படி பண்ண வச்சிடுச்சு அதோட வந்ததும் உன்கிட்ட சாரி கேட்க நினைச்சேன்..

பட் உன்ன பாக்க கில்ட்டா ஃபீல்லாச்சு அதான் உன்ன அவாய்ட் பண்ணினேன்” என்று அன்றைய நிகழ்வுகளை நினைத்து தன்னை நொந்து கொண்டவன் “சரி விடுடி.. நான் எதுவும் நினைக்கல ஃப்ரீயா விடு”

“ம்ம்.. இருந்தாலும் அன்னைக்கு எல்லார் முன்னாடியும் அடிச்சிருக்க கூடாது” என்றதும் அவளின் தோலில் கைப்போட்ட ஆடவன் “அத மறந்துரு.. இப்போ காபி சாப்பிடலாமா” என்றதும் புன்னகையுடன் தலைசாய்த்து கேட்க,

அவளும் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு கண்சிமிட்டி, அவனுடன் ரெஸ்டாரன்ட் சென்று காபி குடித்துவிட்டு ஆடவனுடன்
வீட்டிற்கு வண்டியில் போகும் வழியில் கடற்கரை கண்டு பெண்ணவள் “டேய் சர்வா வண்டி நிறுத்துடா பீச் போயிட்டு போகலாம்” என்க,

அவனும் மறுக்காமல் வண்டியை நிறுத்தி தியாவின் கையை பற்றி கடற்கரையில் கால்களை நனைத்தான்.

பின் அந்த ரம்மியான சூழ்நிலை கண்டு என்ன நினைத்தானோ தெரியவில்லை “பம்பர கண்ணு ஐ லவ் யூ டி” என்று பட்டென்று காதலை கூறிவிட்டு அவளின் முக பாவனைகளை அளக்க,

அலைகளுடன் துள்ளி குதித்து விளையாடி கொண்டிருந்தவளின் காதில் ஆடவன் கூறிய வார்த்தைகள் விழ, அதில் பசை ஒட்டி வைத்தாற் போல் ஒரே இடத்திலயே கால்கள் நின்று, குழந்தை போல் மலர்ந்த முகம் நொடியில் இறுகியது.

பின் சர்வாவை நோக்கி பார்வையை திருப்பிய தியா “சர்வா என்ன சொன்னா லவ் பன்றியா”

“ஆமா தியா.. எனக்கு அம்மா அப்பா இருந்தும் அந்த அன்ப அனுபவிக்க.. இத்தன வருஷம் தனிமை என்ன வாட்டி வதக்கிடுச்சு.. இந்த ஒரு வருஷம் உன்னோட கழிச்ச பொழுது தான் தாய் அன்பு தோழி அரவணைப்பு ரெண்டுமே உன்கிட்ட கிடைச்சது.. உன்னோட இருந்தப்போ தான் உயிர்ப்போட இருக்கிற போல ஃபீல் பண்றேன் தியா.. எனக்கு கிடைச்ச அன்ப இனி இழக்க விரும்பல.. என் ஆயுட்காலம் வரை தொடரனும் நினைக்கேன்.. டூ யூ லவ் மீ?” என்றதை கேட்டு பெண்ணவளுக்கு கோவம் வரவேயில்லை, அதோடு அவனின் நிலையை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

அவனின் கண்களில் பொய்மை இல்லை, அவன் அன்பிற்காக ஏங்குகிறான் என்று தெளிவாகவே புரிந்தது.

அதற்காக நண்பனாக நினைத்த ஒருவன் மீது காதலா? அப்படியென்றால் நண்பர்கள் காதலிக்க கூடாதென்பது அவளின் எண்ணமில்லை மாறாக அவனின் மேல் நட்பை தாண்டிய உணர்வுகள் ஒருபோதும் வந்ததில்லை இனியும் வாராதே, அவனிடம் பேசினால் புரிந்து கொள்வான் என்று நம்பியவள்

பெரு மூச்சுவிட்டு கொண்டு “சர்வா.. உன்னோட ஃபீலிங்ஸ் எனக்கு புரியுது.. அதோட பொதுவா எனக்கு பிடிச்ச பசங்கள சைட் அடிப்பேன் இன்கிளுடெட் யூ அல்சோ ஆனா அதுக்காக காதல் வரலடா.. உனக்கு ஒரு சத்தியம் பண்றேன் எப்போவும் ஒரு ப்ரெண்ட்டா உனக்கு பக்க பலமா இருப்பேன்.. உன் நிழலா இருப்பேன் யூ டிரஸ்ட் மீ.. பிளீஸ் காதல்ங்குற எண்ணத்த இந்த நிமிஷமே விட்டுட்டு என் கைய பிடி எப்போவுமே நட்பா அந்த பிடிப்பு தொடரும்.. உன்ன ஃபோர்ஸ் பண்ணல நல்லா யோசி டேக் யூவர் டைம்” என்றுவிட்டு செல்ல,

அவன் தான் காதல் கை சேராதோ என்று கடலை வெறித்து கொண்டிருந்தான்.

அவனைவிட்டு விடைபெற்று வீட்டிற்கு சென்ற தியா தன்னை சுத்தப்படுத்தி உடைகளை மாற்றிவிட்டு படுக்கையில் விழுந்தவளுக்கு சர்வாவின் நினைவுகளே தோன்ற,

என்ன செய்கிறான் என்று குறுஞ்செய்தி அனுப்பி தெரிந்து கொள்ள நினைத்த பெண்ணவள் திறன்பேசியை கையில் ஏந்திய கணம் சர்வாவிடமிருந்தே பெண்ணவளுக்கு அழைப்பு வந்து.

அதை ஏற்று காதில் வைத்த கணம் மறுமுனையில் கூறப்பட்ட செய்தியில் அதிர்ந்த பாவை அடித்து பிடித்து அறையை விட்டு வெளியே ஓடினாள்.

தொடரும்…

– ஆனந்த மீரா 😍😍

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்