
ரேயன் கூறியதை கேட்டு இருவருக்கும் அவனை அடித்து கொல்லுமளவு ஆத்திரம் இருப்பினும் சரியாக காயை நகர்த்தி பிடிக்க வேண்டுமென்றதில் மூவரும் அடுத்ததாக செய்ய வேண்டியதை திட்டம் போட்ட சமயம், நீங்க என்னடா திட்டம் போடுறது என்பது போல் முதலில் ருத்ரனின் திறன்பேசி அலறியது.
தொடுதிரையில் புது எண் காட்டியதில் யோசனையுடன் அழைப்பை ஏற்றதும் மறுமுனையில் சிரிப்பு சத்தம், அதில் திறன்பேசியின் ஒலிபெருக்கியை ஆன் செய்தவன் “ஹலோ யாரு நீங்க” என்க,
மறுமுனையில் விடாமல் சிரிப்பு சத்தம் ஒலித்து “இவ்வளவு நேரம் யாரபத்தி பேசினீங்களோ அவன் தான்.. வாய்ஸ் தெரியலையே என்ன.. சரி விடுங்க சொல்ல வேண்டிய விஷயத்த சொல்லிடுறேன்.. மிஸ்டர் ருத்ரன் நீங்க கட்டிக்க போற பொண்ணு.. ஹான் அதான் பெயரு சித்திரா இப்போ அவளோட ஆசை அத்தான்கிட்ட பாதுக்காப்பா இருக்கா.. சீக்கிரம் கண்டுபிடிச்சிக்க இல்லன்னா உன் கைமீறி போயிடும்” என்றதை கேட்டு அவன் கோவத்தில் “ஏய்..” கத்தும் முன்னே அழைப்பு துண்டிக்கப்பட்டிருக்க,
சித்திராவை நினைத்து மூவரும் பதறி கொண்டிருக்க, அடுத்ததாக தியாவின் அழைப்பேசி அலறியது அதில் கைகள் தன்னை அறியாமல் பெண்ணவளுக்கு உதற,
அழைப்பை ஏற்று ஒலிபெருக்கியை அழுத்த, மறுமுனையில் “ஹாய் தியா பேபி.. எல்லாரும் ஒன்னா தான் இருப்பீங்கன்னு தெரியும் ஆனாலும் தனி தனியா சொல்லுறது தான் கிக்காயிருக்கு.. சரி உன் விஷயத்துக்கு வரேன்.. எனக்கு தேவைப்பட்ட ரெண்டு பேருக்கும் ரொம்ப பாதுக்காப்பா இருந்தியே ஆனா ஃபோர்ஸ் பத்தல போல தியா பேபி.. நான் எதுக்காக கடத்த நினைச்சனோ அதுக்கான வேலை சிறப்பா தொடங்க போகுது அண்ட் நீ பாட்டியா தத்தெடுத்து இருக்கியே பாவம் வயசானவங்க மூச்சு பிரச்சனை வேற இருக்கும் போல ஜன்னி வந்து டிக்கெட் எடுக்குறதுக்குள்ள வீட்டுக்கு போய் பெரிய மனுஷிய காப்பாத்து.. அடுத்து உன்னால பரலோகம் போக இருந்தவன காப்பாத்தி வச்சிருந்தியே ஜோஸப் தான பாவம் மரம் போல ஒரே இடத்திலிருந்து ரொம்ப கஷ்டப்பட்டிருகான்ல வேற உலகத்துக்கு அனுப்பி அவன சந்தோசப்படுத்திடுறேன் நீ மலர் வளயத்தோட செண்ட் ஆஃப் பண்ண வெயிட்டிங்ல இரு.. அப்புறம் உன் உடன்பிறப்பு மண்டைல அடி வாங்கி மயக்கதுல கிடைக்கான் தண்ணி தெளிச்சி எழுப்பிவிட்டு உனக்கு உதவிக்கு வச்சிக்க” என்று துண்டித்த மறுநிமிடம் ரேயன் திறன்பேசி அலறியது.
அவன் அழைப்பை ஏற்கவும் “அடடே ஹீரோ சார் உங்களுக்கு நிறைய ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு.. இப்போதைக்கு கொஞ்சம் சொல்லுறேன் மீதி நேருல காட்டுறேன் ஜோஸப் உனக்கும் ப்ரெண்ட் தான.. அதோட மாமா பொண்ணோட புருஷன் வேற சோ நீ அவனுக்காக பெரிய மாலை வாங்கி வச்சிக்க.. அதோட உன் அத்தை பொண்ணு செம ஸ்டராங்கா இருக்கா சோ என் பொண்ணுங்க லிஸ்ட்ல அடுத்த டார்கெட் , அந்த பியூட்டி தான்.. ஒரு அரைமணி நேரத்தில வந்தா உன் ஆசை மாமன் பொண்ண ஒரு தடவ பாக்க வாய்ப்பு கிடைக்கும்.. அதோட அவளுக்கு பொண்ணு ஒருத்தி இருக்காளே பாவம் ரொம்ப நேரமா அம்மா கேட்டு அழுதா இப்போ தான் தூங்க வச்சேன்.. எப்படியும் அடுத்து எழும்ப அரை மணிநேரம் ஆகும்
அதுக்குள்ள பால் புட்டியோட வந்து சேந்திரு.. அப்புறம் காய்ஸ் உங்க எல்லாருக்குமே ஒரு ஆஃபர் தரேன் அரை மணிநேரத்துல எல்லாரையும் கண்டுபிடிச்சா இந்த கார்த்திக்கைக்கு சூர்யவம்சம் சாங் பேக்கிரவுண்ட் போட்டு டான்ஸ் ஆடலாம் சாய்ஸ் ஸ் யூவர்ஸ்.. அப்புறம் ரேயன் உங்க ஸ்பெஷல் ஐட்டம் உங்க ஆசை பொண்டாட்டிக்கு தான் என்னன்னு சர்ப்ரைஸா சொல்லுறேன்..
அண்ட் இன்னொரு ஆஃபர் தரேன் ஒரு அரைமணி நேரத்துல நான் சொன்னதுல மூணு பேர சேப் பண்ணினா அடுத்த அரை மணி நேரம் இலவசம் இலவசம்.. அப்புறம் மிஸ்டர் ரேயன் எனக்கே கவுண்ட்டவுன் கொடுக்குறீங்களா இப்போ உங்க கவுண்ட்டவுன் ஸ்டார்ட் நொளவ்” என்று அழைப்பு துண்டிக்கப்பட்டது.
ருத்ரன் மற்றும் தியா இருவருமே சமநிலை இழக்க, ரேயன் தான் “காயஸ் இப்போ நம்ம வீட்டுக்கு போய் சிசிடிவி செக் பண்ணினா க்ளூ கிடைக்கும் கம் பாஸ்ட்” என்று இருவரையும் இழுத்து கொண்டு காரில் ஏற, அடுத்த ஐந்து நிமிடத்தில் கார் ரேயனின் கைகளால் மின்னல் வேகத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தது.
அவசரமாக காரைவிட்டு இறங்கியவர்கள் உள்ளே நுழையவும் ஆர்யன் மயங்கி கிடந்ததை கண்டு தியா பதறி அவனின் கன்னம் தட்ட,
ரேயன் தான் “தியா அவனுக்கு தண்ணி தெளிச்சி எழுப்பு.. ருத்ரா நீ போய் சிசிடிவி பாரு..” என்று உத்தரவிட்டு பட்டம்மாளை அவன் வீட்டை சுற்றி தேட,
தியாவும் தம்பியின் முகத்தில் தண்ணீர் தெளித்து நினைவுக்கு கொண்டு வந்திருந்தாள்.
மெல்ல கண்களை திறந்தவனோ “தியா இசை” என்று கூற வர,
“ரிலக்ஸ் ஆர்யா.. நீ ஓகே தான வா போய் பாட்டி தேடுவோம்” என்று எழுப்பி ரேயனுடன் சேர்ந்து இருவரும் வீட்டை முழுதும் சோதிக்க, காரில் வரும் பொழுதே தியா, சர்வாவின் உதவியை நாடி குறுஞ்செய்தி அனுப்பியிருக்க, அவனும் அவர்களுடன் இணைந்து தேடுதல் வேட்டையை தொடங்கினான்.
தொடர்ந்து பத்து நிமிடம் தேடியும் பட்டம்மாள் சிக்காமல் போக தன்னிடம் அவன் கூறிய தண்ணீர் என்ற வார்த்தையை மாறி மாறி சிந்தித்த தியா வேகமாக மாடி ஏறி செல்ல, அவளின் பின்னையே மூவரும் ஓடினர்.
மாடிக்கு வந்தடைந்த தியா அங்கிருந்த மூன்று தண்ணீர் டேங்கை திறக்க, மூன்றவாதாக திறந்ததில் பட்டம்மாள் கண்கள் சொருக மூச்சு வாங்கியப்படி மயக்க நிலைக்கு செல்ல தயாராக இருந்தார்.
பின் மூன்று ஆண்கள் உதவியுடன் அவரை வெளியே தூக்கியதும் பதறிய தியா “கிழவி கண்ண திறந்து பாரு.. இந்த அனாதை விட்டுட்டு போகாத கிழவி” என்று கண் கலங்கியவள் “ஆர்யா பாட்டி ஹாஸ்பிட்டல் அட்மிட் பண்ணு” என்றதும் அவரை தூக்கி கொண்டு தமக்கையை ஏக்கமாக பார்த்தான்.
அதன் அர்த்தம் புரிந்து தோலில் தட்டியவள் “யாழிக்கு எதுவும் ஆகாது.. நீ போய் கிழவிய ஹாஸ்பிட்டல அட்மிட் பண்ணு அடுத்து என்ன பண்ணனும் சொல்லுறேன்” என்றதும் தன்னுடைய காரில் பட்டாம்மாளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.
பின் மூவரும் ருத்ரன் இருந்த அறைக்கு செல்ல, அப்போது தான் பதிவுகளை ரேயனின் மடிக்கணினியின் மூலம் ஆராய்ந்தவன், யாருக்கோ அழைப்பு விடுத்து தன்னவள் கடத்தி சென்ற காரின் நம்பரை கொடுத்து அவர்கள் மூலம் இடத்தை கண்டறிந்து, அவ்விடம் வந்தவர்களிடம் “காய்ஸ் தேவி இருக்கிற இடத்துக்கு லொகேஷன் கண்டு பிடிச்சிட்டேன்.. அடுத்த பத்து நிமிஷத்துல தேவி என்கிட்டயிருப்பா நீங்க மத்தவங்க பத்தி அப்டேட் கிடைச்சதும்.. எனக்கு செண்ட் பண்ணுங்க” என்று பொரிந்து தள்ளிவிட்டு அங்கிருந்து வெளியேறியவன் தன்னவளை காக்க புயலாக கிளம்பினான்.
அவன் சென்றதும் பெருமூச்சு விட்ட தியா “ரே எப்படியும் ருத்ரன் சித்திராவ சேப் பண்ணிடுவான்.. சோ அவன் சொன்னது போல அடுத்து நமக்கு ஒரு அரைமணி நேரம் கிடைக்கும் மொத்தமா நமக்கிட்ட இப்போ 45 மினிட்ஸ் தான் இருக்கு சோ பீ குயிக்” என்க,
அதை கேட்டபடியே தன் மடிக்கணினியில் தெரிந்த வீடியோ பதிவை நோட்டமிட்டான் ரேயன்.
பின் சர்வா தியா இருவரும் அவனுடன் இணைந்து கொண்டனர்.
*****
மூவரும் மருத்துவமனையிலிருந்து பேசி கொண்டிருந்த நேரத்தில், ஆர்யனின் வீட்டியில் முகமுடியுடன் ஐந்து ஆறு பேர் நுழைந்திருக்க
அதில் இரண்டு பேர் ஜோஸப் அறையில் முதுகு காட்டியப்படி நின்ற, ஆர்யனின் தலையை தான் பதம் பார்த்தனர்.
பின் அவன் தலையை பிடித்தபடி சரிந்ததும், தங்களை தாக்க வந்த வாகினியை ஒருவன் செவியிலே அறை விட,
ஏற்கனவே தன்னவனை கண்டு சோகத்தில் சாப்பிடாமல் இருந்தவள் அவன் அடித்த ஒரு அடிக்கே மயங்கி விட்டாள்.
பெண்ணவளை ஒருவன் தூக்கி கொள்ள மற்றொருவன் ஜோஸப்பை தூக்கி கொண்டு தங்கள் காரை நோக்கி சென்ற சமயம் பட்டம்மாள் வந்து “டேய் யாருடா நீங்க அவங்ள விடுங்கடா” என்று கத்த,
அந்த கூட்டத்தில் இருந்த மற்றொரு இருவர்கள் முதிவரை பிடித்து அவர்களுக்கு வழி விட, இருவரையும் தூக்கி காரில் கிடத்தி காரில் ஏறி தங்களுடன் வந்தவர்களுக்காக காத்திருந்தார்கள் முதலில் சென்றவர்கள்.
பட்டம்மாளை பிடித்த இருவரும் தன்னுடைய தலைவனின் சொல்ப்படி அவரின் கை கால்கள் கட்டிய நிலையில் வாயில் பிளாஸ்டர் ஒட்டி மாடிக்கு இழுத்து சென்று தண்ணீர் தொட்டியில் போட்டு பணியை முடித்து விட்டிருக்க,
அதற்குள் மீதமிருந்த இருவர்களின் ஒருவன் யாழிசையை கதறவிட்டு இழுத்து செல்ல, பெண்ணவள் கதறல் கண்கள் சொருகிய நிலையிலிருந்த ஆர்யன் காதிற்கும் எட்டவே செய்ய, எதுவும் செய்ய முடியாத தன் நிலையை நினைத்தப்படியே மயக்கத்திற்கு சென்றான். பின் மற்றொருவன் தூங்கும் குழந்தைகள் இருவரையும் தூக்கி கொண்டு காரில் புறப்பட்டனர்.
அவர்கள் சென்ற ஐந்து நிமிடத்தில் இன்னொரு காரில் நாற்பது வயது கொண்ட ஒருவன் உள்ளே நுழைந்து மருந்து வீரியத்தில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த சித்திராவின் மூக்கில் வெள்ளை துணியை வைத்து அழுத்திவிட்டே பெண்ணவளை தோலில் போட்டு அங்கிருந்து காரில் பறந்தான்.
நடந்தவை எல்லாம் பதிவு மூலம் மூவரும் பார்த்து முடியவே ஐந்து நிமிடம் கடந்து விட, அவர்களிடம் கையில் 40 நிமிடமே பாக்கியிருந்தது.
தியாவோ “ரே உடனே அந்த கார் லொகேஷன் டிரேஸ் பண்ண சொல்லு” என்றதும் ரேயனும் யாருக்கோ அழைப்பு விடுத்து சித்திராவை தவிர மற்றவர்களை கடத்தி சென்ற காரின் தற்போதைய இடத்தை கேட்டு அறிந்தவன், மற்ற இருவர்களுடன் ஐந்து நிமிடத்தில் அவ்விடம் விரைந்தான்.
****
மயக்கத்திலிருந்த சித்திராவின் முகத்தில் தண்ணீரை தெளித்து விட்டு எதிரே கைகளை கட்டி நின்றிருந்தான் நாற்பது வயது கொண்ட அவளின் அத்தான் தர்மலிங்கம்.
ஏற்கனவே மருந்து வீரியத்தில் சோர்வாக இருந்தவள், மயக்கம் மருந்து அழுத்தியதில் வலுவற்று கண்களை திறந்த சித்திரா தன்னை குரூரமாக பார்த்த நின்றிருந்த தர்மலிங்கத்தை கண்டு பெண்ணவளின் உடல் உதறல் எடுத்து நடுங்கியது.
அதை உணர்ந்து அவள் கையை பற்றியவன் “ஏய் அத்தான் தான் டி செல்லம்.. எதுக்கு பதறுற” என்க,
வெடுக்கென்று அவன் கையை தட்டியவள் “என் கைய தொடுற வச்சுக்காத.. என் மாமா வந்தான் உன் கையே இல்லாம போயிடும்”
“அச்சோ செல்லம்.. இன்னும் அவன் வருவான் நம்பிட்டு இருக்கியா.. அவன் மட்டும் இல்ல உன்ன கும் ஃபிகர் ஒருத்தி காப்பத்தினாளே அவ கூட வர முடியாது..” என்று பெண்ணவளின் அருகில் அமர்ந்து, அவள் உணரும் முன்னே கையை கட்டியவன், அடுத்த கணமே பெண்ணவள் கழுத்தில் தாலியை கட்டினான்.
தன்னவன் கையால் வாங்கிய வண்டியதை கண்டவனின் கையால் வாங்கியதில் பெண்ணவளின் கழுத்தில் தீ பற்றியது போல் எரிய, அதில் கால் கொண்டு ஆடவனின் வயிற்றிலே எத்தி மிதித்தாள்.
பெண்ணவள் கோவத்தில் பலமாகவே மிதித்ததால் 40 வயது உடையவன் தூர சென்று விழுந்தான்.
விழுந்த வேகத்தில் எழுந்தவன் “என்னடி புருஷன மிதிக்குறியா.. இருடி” என்று பெண்ணவளின் ஆடையில் கை வைக்க போக, கதவை சில் சில்லாக உடைத்து புயலான உள்ளே நுழைந்தான் தேவியின் ருத்ரன்.
****
மற்றவர்களிடமிருந்து விடை பெற்று மின்னல் வேகத்தில் காரை ஒட்டியவன் ஐந்து நிமிடத்தில் தன்னவள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்திருக்க,
கதவு உடையவும் பதறிய தர்மா உள்ளே வந்தவனை கண்டு எச்சிலை கூட்டி விழுங்கி நின்றான்.
அவனை கண்டு “மாமா” என்று இதழயசைத்த சித்திராவின் கண்கள் கலங்கி விட்டது.
அவளின் உணர்வுகள் புரிந்து கண்ணடித்து இதழ் குவித்த ருத்ரன் ஒற்றை கையில் தர்ம லிங்கத்தின் முடியை கொற்றாக பிடித்து, மறு கையால் தன்னவள் கண்ணீரை துடைத்துவிட்டு கழுத்திலிருந்த தாலியை அறுத்து எரிந்தவன் “ஏன்டா கிழட்டு நாயே.. எவ்வளவு தைரியம் இருந்தா என் ஃபிகர் கழுத்துல தாலி கட்டுவ.. எப்போவுமே உயிரோட விடுவேன் நினைச்சியாடா வெண்ணெய்.. அன்னைக்கு நான் நல்லவனா இருந்தது காரணம் இருந்துச்சுடா.. ஆனா இப்போ நான் யாருன்னு நினைச்ச.. நானே டிபார்ட்மெண்ட் ஆளுடா உன்ன முடிச்சிவிட்டு சம்பவம் நடந்ததே தெரியாம ஆக்ட் கொடுத்து கேஸ் க்ளோஸ் பண்ணிடுவேன்” என்று அவனின் கையில் கத்தியால் வரிசையாக கோடு போட்டவன்,
தர்மாவின் கையில் கத்தியை வைத்து தன் கை தடம் தெரியாமல் இருக்க அதனை வெள்ளை துணியால் துடைத்து, பின் அவன் கையாலே கழுத்தை பதம் பார்த்தான் ருத்ரன்.
கையில் வடிந்த குருதியால் கதறிய தர்மா, தன் கையில் அவன் கத்தி வைத்து கழுத்து அருகே கொண்டு செல்லவும் “வேண்டாம் விட்ரு” என்றதும் தான் தாமதம் கழுத்தில் குருதி வழிய கழுத்தை தாங்கியப்படியே நிலத்தில் சரிந்தான்.
அதன் பின் தன்னவளின் கை கட்டை அவிழ்க்க, பெண்ணவளோ “மாமா” என்று கட்டிக் கொண்டாள்.
அவளுக்கு ஆதரவுப்படுத்தும் விதமாக நெற்றியில் முத்தமிட்டவன் தன்னுடைய மேல் அதிகாரியான ரேயனின் தந்தையிடம் விஷயத்தை கூற, முதலில் அவனின் செயலில் கடிந்தவரோ,
பின் தான் பார்த்து கொள்கிறேன் என்று கூறி அழைப்பை துண்டித்து அதற்கான வேலையில் ஈடுப்பட, இனி அவர் பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கையில் தியாவிற்கு அழைப்பு விடுத்தான்.
அவள் அழைப்பை ஏற்றதும் “ருத்ரா சித்திராவ பாட்டி கூட ஹாஸ்பிட்டல் விட்டுட்டு.. நான் அனுப்புற லொகேஷன் வந்து சேந்துரு” என்க,
அடுத்ததாக ஆர்யனிடம் எந்த மருத்துவமனை என்று தகவலை வாங்கியவன் பெண்ணவளை அங்கே கூட்டி சென்றான்.
பின் தியா அனுப்பிய இடத்திற்கு செல்ல எண்ணி ஆர்யனிடம் பார்த்து கொள்ள கூற, தன்னவளின் நினைவில் சுழன்று கொண்டிருந்த ஆர்யன் “நானும் வரேன் மாம்ஸ்” என்றான் ஏக்கமாக,
அவனின் உணர்வு புரிந்து மறுக்க மனமில்லாமல் தன்னுடன் பணி புரியும் ரெண்டு அதிகாரிகளை காவலுக்கு விட்டு அவர்களை பார்த்து கொள்ளும் படி கூறிவிட்டு தன்னவளிடமிருந்தும் விடை பெற்று ஆர்யனுடன் தியாயிருக்கும் இடத்திற்கு விரைந்தான்.
****
சர்வா தியாவுடன் கார் இருந்த இடத்திற்கு வந்த ரேயன், பதிவிலிருந்த எண்ணியிருந்த காரை கண்டு வேகமாக மூவரும் இறங்கி அந்த காரை நோட்டமிட, அவர்களை முதலில் வெற்று கார் தான் வரவேற்றது, அதில் கடுப்பானவர்கள் எதாவது தடையம் கிடைக்கிறதா என்று தேடி தோல்வியே தழுவி செய்வதறியாமல் நிற்க, தியாவின் திறன்பேசி அலறியது.
யாரென்று தெரிந்து அழைப்பு ஏற்று “தர்மராஜ் எதாயிருந்தாலும் நேரடியா மோது எங்ககிட்ட.. மத்தவங்கள விடு” என்று எச்சரிக்கை குரலில் கூற,
அதை கண்டு கொள்ளாது சிரித்த தர்மராஜ் “தியா பேபி.. அரை மணி நேரம் முன்னவே மூணு பேர கண்டுபிடிச்சி நாலாவது ரவுண்ட் வந்த உங்களுக்கு இன்னும் அரைமணி நேரம் இலவசம்.. அப்புறம் நீங்க இருக்கிற இடத்துல ஒரு பீஸ் இருக்கு.. அத கண்டுபிடிச்சா நானே உங்களுக்கு கார் அனுப்பி மத்தவங்க இருக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போறேன்.. அண்ட் உங்களுக்கான தடயம் கார்ல தான் இருக்கு சோ இந்த ஹாஃப் ஹவருக்குள்ள இந்த டாஸ்க் முடிச்சா அடுத்த நாலு பேரையும் சந்திக்க எந்த தடையும் இல்லாம ஃப்ரீ பாஸ் உங்களுக்கு.. சோ டோண்ட் வேஸ்ட் டைம் குயிக் பினிஷ் த டாஸ்க்” என்றுவிட்டு “மிஸ்டர் சர்வா உங்களுக்கும் நான் ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் வெயிட் அண்ட் சீ” என்று அழைப்பு துண்டிக்கப்படது.
அடுத்த கணம் மூவரும் காரில் தேடுதல் வேட்டையை தொடங்கினார்கள்.
எவ்வளவு தேடியும் எதுவுமே சிக்காமல் போக சற்று பதற்றமடைந்த தியா மூச்சை இழுத்து விட்டு கொண்டு நேரத்தை பார்க்க, இன்னும் அரை மணிநேரமே மீதிருந்தது ‘கடவுளே யாருக்குமே எதுவும் ஆகாம என்கிட்ட சேத்துரு’ என்று தன்னுக்குள்ளே வேண்டுதலை போட்டுவிட்டு இதழ் குவித்து ஊதி காரில் பார்வையை செலுத்த இருக்கைக்கு இடுக்கில் சுருட்டப்பட்ட தாள் ஒன்றிருந்தது.
அதை கைகள் நடுங்க எடுத்தவள் “சர்வா ரே” என்று இருவரையும் அழைத்து பிரிக்க,
அதிலோ “தியா பேபி நீ நிக்கிற இடம் என்னன்னு நினைச்சி பாரு.. அதுல உனக்கு அன்ஸ்ஸர் கிடைச்சா யூ கோ டூ லெஃப்ட் சைட்” என்று எழுதப்பட்டிருக்க, அதை பார்த்து குழம்பிய ஆடவர்கள் இருவரும் தியாவை கேள்வியாக நோக்க,
பாவம் பேதையவளுக்கு தான் பதறத்தில் சித்தம் கலங்கி விட்டது, இருப்பினும் சுற்றி பார்த்து சிந்தித்தவளின் மூளைக்கு எதுவும் எட்டாமல் போக, சர்வாவோ “தியா நல்லா திங்க் பண்ணுடி டைம் இல்ல உன்னால முடியும்..” என்க,
அதிலும் மேலும் பெண்ணவளுக்கு உடல் உதறல் எடுக்க, ரேயன் தான் பெண்ணவளை தோலோடு அணைத்து “யாழி.. நிதானமா யோசி யூ கேன் டூ இட் டி” என்று முதுகை நீவி விட்டான்.
தன்னவனின் அணைப்பில் சற்று ஆசுவாசமான தியா, கண்களை மூடி திறந்து சுற்றி ஒரு முறை நோட்டமிட்டவளின் எண்ணத்தில் அவளின் கடந்த காலத்தை நினைவில் கொண்டு வந்தது.
அதில் கண்கள் கலங்கியவளின் இதழ் “ஜோஸா” என்று முணுமுணுக்க, கால்களோ அணிசையாக இடது பக்கம் சென்றது, பின் ஒரு இடத்தில் நின்று கண்களை பெண்ணவள் மூடி எதையோ உணர முயன்றாள்.
அவளின் சில உணர்வு பூர்வமான கணிப்பு பற்றி இரு ஆடவர்களுமே அறிந்திருந்தால் அமைதியாகவே அவளின் பதிலுக்காக காத்திருந்தனர்.
ஆம் நம் நாயகிக்கு உணர்வு பூர்வமாக கண்டறியும் சக்தி இருக்கிறது, அதுவும் சில நேரம் அவளுக்கு நெருக்கமானவர்களுக்கு தவறு நடப்பதற்கு முன்னே அவளால் உணர முடியும், அதோடு அவர்கள் அருகில் இருந்து அவர்களுக்கு ஆபத்து என்றால் கூட சரியாக கணிப்பால், அதே போல் தான் அவளின் அன்னை இறப்பு முன் கூட அவளுக்கு அது உணர்த்தியது, அது போல ரேயனை விட்டு பிரிவதற்கு முன்னும் அவனிடம் கூட கூறி பயந்திருக்கிறாள்.
இரு ஆடவர்களுக்குமே அவளின் உணர்வு பற்றின சக்தி தெரிந்தேயிருந்தது.
ஐந்து நிமிடம் கண்கள் மூடியிருந்தவளின் இமைகள் கலங்கிய விழிகளுடன் பட்டென்று விழித்தது.
தொடரும்…
– ஆனந்த மீரா 😍😍

