Loading

வாகினியுடன் வீட்டை விட்டு வெளியேறியவன் தெரிந்த நண்பன் ஒருவன் மூலம் வேறொரு வீட்டியில் குடியிருந்தான்.

 

அதோடு பெண்ணவள் கேட்கும் போது, தன் அன்னை நெஞ்சு வலியென்று செய்த குளறுப்படி மட்டும் கூறியிருந்தவன், பெண்ணவள் நிலையை கருத்தில் கொண்டு அவளின் தந்தை பற்றின ரகசியத்தை ரகசியமாக தனக்குள்ளே வைத்து கொண்டான்.

 

இப்படியே நாட்களும் செல்ல நிஷாவும் பூமியில் பிறந்தாள்.

குழந்தையை தன் மகள் போலவே கையில் வைத்து தாங்கினான்.

அவ்வப்போது மாமனிடம் பேசி கொண்டும் இருந்தவன், கிடைக்கும் நேரங்களில் இருவரையும் தேடும் பணியை தொடர்ந்தான்.

 

அதில் ஒரு வழியாக யாழினி இருக்கும் இடத்தை கண்டறிந்து மாமனின் காதிலும் விஷயத்தை போட்டு விட்டே பெண்ணவளை காண தன் பணிக்கு மாற்றல் வாங்கி பெங்களூர் வந்து சேர்ந்தான்.

 

இவ்வாறு மூவரும் நிகழ்காலத்திற்கு வந்து நடந்ததை அனைவரிடமும் கூறி முடித்திருக்க,

 

தியாவிற்கு அதிர்ச்சியாக இருந்தாலும் சந்தேகத்தை தீர்க்கும் பொருட்டு “என்ன ரே உன் மாமன் சொன்ன உண்மைன்னு நம்பி வந்து எங்ககிட்ட அளந்து விடுறியா.. இந்த விஷயம்லாம் என் அன்னத்துக்கு தெரியாமலா இருந்துருக்கும் எதுக்கு என்கிட்ட சொல்லல”

 

“தெரியாது.. வனிதா அத்தைக்கு அன்னம் அத்தை பத்தி எல்லாம் தெரியும்.. ஆனா தான் புருஷன் இன்னொரு பொண்ணுக்கு தாலிக்கட்டி இருக்கிறது தெரிஞ்சா நியாமான காரணம் இருந்தாலும் யாரலையும் ஏத்துக்க முடியாது சோ நண்பன் மனைவியை பாத்துக்குறதா உன் அம்மாகிட்ட பொய் சொல்லிருக்கார்..

 

அதோட தீ விபத்து நடக்குறது ஒரு வாரம் முன்னாடியே மாமாக்கு அவர் அப்பா கால் பண்ணி உன் அம்மாவ கொல்லுறதா மிரட்டிருக்கார்.. மாமாவும் என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்ன்னு தைரியத்துல இருக்க.. ஒன்ஸ் உன் அம்மா தூங்கிட்டு இருக்கும் போது ஒருத்தன் கத்தியோட நுழைஞ்சு இருக்கான்.. மாமா சரியான நேரத்துல உள்ள போய் உன் அம்மா கிட்ட நெருங்குறதுக்குள்ள அவங்கள காப்பாத்திட்டாங்க

 

ஆழ்ந்த தூக்குத்துல இருந்த உன் அம்மாக்கு இந்த விஷயம் தெரியாது.. அதோட தான் இல்லாத நேரம் எதாவது நடந்துருமோன்னு பயத்துல ‘வனிதாவ நண்பன் மனைவின்னு பொய் சொன்னேன் அவ என்னோட மனைவி.. என் அப்பா இவள கட்டிக்கிட்டா தான் சொத்தும்ன்னு சொல்லிட்டார் கல்யாணம் பண்ணிட்டேன்.. ஆனா என்னோட உடம்பு உன்ன தேடுச்சு அதான் உன்கிட்ட சுகத்துக்காக வந்தேன்..

 

இந்த விஷயம் என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சிட்டு இனி நீ இங்க இருக்க கூடாது குழந்தை பிறந்ததும் இங்க இருந்து போயிடு.. அப்புறம் குழந்தைங்க உசுரோட இருக்க மாட்டாங்க’ அப்படின்னு தன்ன தானே கெட்டவன் போல டிராமா போட்டுட்டு வெளிய வந்துட்டார் அதுக்கு அப்புறம் தான் மாமா சென்னை வந்தது வீடு எரிஞ்சது எல்லாம் நடந்துருக்கு” என்று பெண்ணவள் கேட்டதற்கான விளக்கத்தை கொடுக்க, அனைவருக்குள்ளுள் பேரமைதி பரவியது.

 

அதிலும் இரு பெண்களுக்கும் விஜயன் ரகசியம் தெரிந்து உள்ளுக்குள்ளே துடித்து விட்டனர்.

 

வாகிக்கோ தன் பிறப்பின் ரகசியம் தெரிந்ததில் தவறே செய்யாத நல்ல மனிதனை தண்டித்து காயப்படுத்திவிட்டோமே என்ற குற்றயுணர்சி கொல்லாமல் கொள்ள, தியாவின் மனநிலையும் கூட அதுவாக தான் இருந்திருக்கும்.

 

யாருக்கு யாரை சமாதானப்படுத்துவது என்று கூட தெரியவில்லை, தியாவோ உணர்வுகளை அடக்கி பழகி கொண்டதால் வெளியே எந்த உணர்வுகளையும் காட்டாமல் சிலையென அமர்ந்திருக்க, அவளின் உணர்வுகளை படிக்க நினைத்த மற்றவர்கள் தான் அறியாமல் அவளை பார்த்திருந்தனர்.

 

வாகினியோ, அதற்கு எதிர்மறையாக சத்தமாக அழுதவளுக்கு ஜோஸப்பின் நினைவுகள் வேறு வந்து நிலை குலைய வைத்தது.

 

ஒரு பக்கம் பெண்கள் இடிந்து அமர்ந்திருக்க, ஆர்யனோ உணர்வை வெளிப்படுத்த தெரியாமல் அழும் தமக்கையை வெறிக்க, மற்றவர்களோ என்ன சொல்லி யாரை சாமதனப்படுத்த என்று தெரியாமல் மூவரையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தனர்.

 

அனைவரின் மனநிலையை மாற்ற ருத்ரன் தான் “ஆமா ரேயா.. உன் அப்பா யாரு” என்றதை கேட்டு புன்னகைத்தவன் “வேற யாரு நம்ம டைரக்டர் சார் தான்” என்று தான் பெங்களூர் வர வழி செய்து தன்னவளுடன் வழக்கில் இணைத்த மேல் அதிகாரி என்று கூற,

 

அதிர்ந்த ருத்ரன் “எந்த டைரக்டர் சொல்லுற.. நம்மோட ஹெட் ஆபீசரா” என்றதுக்கு ஆமென்று தலையாட்ட, அதிலே தன்னிடம் ஆடவன் இணைய அவரும் கூட்டு என்று உணர்ந்து கொண்ட தியா அமைதிக்கு விடுப்பு அளிக்கவில்லை.

 

தன்னவளை பார்த்துவிட்டு மேலும் தொடர்ந்த ரேயன் “என் அப்பா நம்ம பதவில இருக்கும் போது தான் என் அம்மாக்கும் அவருக்கும் கல்யாணம் ஆகியிருக்கு.. கொஞ்ச நாள் கழிய அவங்க ஜாதி வெறி பத்தி தெரிஞ்சதும் எல்லாத்தையும் விட சொல்லி வார்ன் பண்ணியிருக்கார் அம்மா கேக்குற போல இல்ல..

 

அப்புறம் தான் நான் பிறந்தேன்.. எனக்கு ரெண்டு வயசு இருக்கும் போது தான் அன்னம் அத்தைக்கு என் தாத்தாவோட சேத்து அம்மா பண்ணின கொடுமை அவருக்கு தெரிஞ்சிது ஒரு கட்டத்துக்கு மேல என் அம்மா அராஜகம் தாங்க முடியாம விவாகரத்து கொடுத்துட்டு கிளம்பிட்டார்.. ஆனா எனக்கு ஒரு நல்ல அப்பாவா என்ன கண்காணிச்சிட்டே இருந்துருக்கார்” என்று இறுதியில் தந்தையை நினைத்து ஆடவனுக்கு கர்வம் எழுந்தது.

 

பின் நேரம் சென்றதை உணர்ந்த ரேயன் “தியா கேஸ் விஷயமா தர்மராஜ் பாக்க போகனும்.. மச்சி நீயும் வா” என்று இருவருடன் காரில் தர்மராஜ் காண புறப்பட்டான்.

 

மூவரும் சென்றது மருத்துவமனைக்கு அல்ல, ஏனென்றால் இன்று அவரின் விடுமுறை நாள் ஆதலால் நேராக வீட்டிற்கே வந்து விட்டார்கள்.

 

ருத்ரன் தொடர்ந்து அழைப்பு மணியடிக்க, ஐந்து நிமிடங்கள் பின் தான் கதவு திறக்கப்பட்டது.

 

கதவை திறந்த தர்மராஜ், அவர்களை கண்டு இயல்பாக புன்னகை முகமாக “சாரி மாடில வொர்க்அவுட்ல இருந்தேன் சோ காலிங் பெல் சத்தம் கேக்கல ரொம்ப நேரமா நிக்குறீங்களா” என்க,

 

ட்ராக் டீ- ஷர்ட்டில் பயிற்சி செய்ததில் வியர்த்திருந்த, அவரை பார்வையால் அளந்த ரேயன் “இல்ல ஜஸ்ட் இப்போ தான் வந்தோம்” என்றதும் தர்மராஜ் மூவரையும் உள்ளே அழைக்க, ஏனோ அன்று தியா பேசியதை நினைவில் வைத்து அவளை மட்டும் வேண்டா வெறுப்பாக பார்த்து வைத்தார்.

 

அப்பார்வை ரேயன் மற்றும் தியா இருவருக்கும் புரிந்தும் கண்டு கொள்ளாமல் விட்டிருக்க, தேனீர் எடுத்து வருகிறேன் என்று எழுந்தவரை தடுத்த ரேயன் “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. நாங்க சத்யாக்கிட்ட விசாரிக்கணும்”

 

“சாரி சார்.. அவங்க டெலிவரி டேட் நெருங்கிட்டு இருக்கு.. இந்த மாதிரி நேரத்துல நீங்க போய் கேஸ் விஷயமா விசாரிக்குறது அவங்களுக்கு பயத்த கொடுக்கும்.. டிரை டூ அண்டர்ஸ்டன்ட்” என்றதை கேட்டு சிந்தித்த ரேயன் “நீங்க சொல்லுறது புரியுது டாக்டர்.. பட் இது நிறைய பொண்ணுங்க சம்பந்தப்பட்ட கேஸ் சத்யாக்கிட்ட பேசினா தான் எங்களுக்கு தெளிவு கிடைக்கும்”

 

“சாரி சார்.. அவங்க ரெண்டு உயிர் லைட்டா அவங்க டிஸ்டர்ப் ஆயிட்டாலும் குழந்தைய பாதிக்கும் சோ கண்டிப்பா இதுக்கு நான் அனுமதிக்க மாட்டேன்” என்றவர் உறுதியாக மறுத்து விட,

 

அவரை நக்கலாக ஏறிட்ட தியா “ஓகே மிஸ்டர் டாக்டர்.. பட் மந்தாகினி மூலமா உங்ககிட்ட வந்த சத்யா தான் ஹோம்லயிருந்த சத்யான்னு எங்களுக்கு ப்ரூஃப் பண்ணுங்க”

 

“என்ன மிரட்டுறீங்களா.. நேத்து தான் கூட்டிட்டு போய் அவங்கள முழுசா காட்டினேன்ல” என்றதை கேட்டு கண்களை சுருக்கி பார்த்த தியா “நான் சொன்ன கேள்வி புரியலயா மிஸ்டர் டாக்டர்.. அவங்க தான் நிஜ சத்யான்னு ப்ரூஃப் பண்ண சொல்லுறேன்” என்க,

 

அவளின் சந்தேக பேச்சில் கடுப்பான தர்மராஜ் “என்ன மேடம் உங்களுக்கு கேஸ் ஆள் கிடைக்கலன்னு என்ன புடிச்சி உள்ள போட போறீங்களா.. நான் அன்னைக்கே தெளிவா காட்டிட்டன் அவங்க தான் சத்யான்னு.. கூட மந்தாகினியும் தான இருந்தாங்க.. சும்மா சும்மா என்மேல சந்தேகப்பட்டுட்டு இருக்கீங்க”

 

“இப்போ எதுக்கு கோவப்படுறீங்க டாக்டர் குத்தமுள்ள நெஞ்சி தான் குறுகுறுக்குமாம்.. அப்போ நீங்க எதுவும் தப்பு பண்றீங்களா டாக்டர்” என்றதில் நொந்தவர் ரேயனிடம் “என்ன சார் இவங்களுக்கு பிராப்ளம்”

 

“டாக்டர் அவ உங்கள சந்தேகம்லாம் படல அவ பேச்சே அப்படி தான் நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க.. நாங்க பாத்த பொண்ணு சத்யா போலவே இருந்தாங்க எங்களுக்கு குழப்பமா இருக்கு எங்களுக்கு ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்க.. அந்த பொண்ணோட பிளட் குரூப் மட்டும் போதும்” என்றதும் சிந்தித்து தன் கைபேசியை ஆராய்ந்தவர் “ஓ பாஸிட்டிவ் சார்” என்று அவனிடமே ஆதாரத்தை காட்ட,

 

அதனை பிடுங்கி பார்த்த தியா “இதெல்லாம் எங்களால நம்ப முடியாது.. அவங்களுக்கு எங்க கண்ணு முன்னாடியே டெஸ்ட் எடுத்து காட்டுங்க.. இல்லன்னா உங்கமேல நான் ஆக்ஷன் எடுப்பேன்” என்றதை பற்களை கடித்த தர்மராஜ் “சரி மேடம்.. நான் சம்மதிக்குறேன்”

 

“குட்.. அப்புறம் இன்னொரு விஷயம் டெஸ்ட் செக் பண்ண நாங்களே ஆள் கூட்டி வருவோம்” என்றதில் ஆத்திரத்தில் கை முருக்கிய தர்மராஜ் “ஓகே மேடம்.. உங்க இஷ்டம் போல பண்ணுங்க”

என்றதை கேட்டு தியா ஏதோ கூறும் முன்னே

 

ரேயனோ “தேங்க்ஸ் ஃபார் கோ ஆப்ரட் சார்.. ஒரு சின்ன வேலை இருக்கு அது முடியவும் இன்னும் ரெண்டு நாள்ல டெஸ்டிங்ல மீட் பண்ணலாம்” என்று கை குலுக்கி விடை பெற, மற்ற இருவரும் கூட அவன் பின்னே சென்றனர்.

****

 

அங்கிருந்து மூவரும் அலுவலகத்திற்கு வந்திருக்க ரேயனோ “மச்சி ரெண்டு நாள் தர்மராஜ ஃபாலோ பண்ணி அவர பத்தின இன்ஃபோ எனக்கு வேணும்” என்றதுக்கு ருத்ரன் சம்மதமாக தலையாட்ட, பின் ரேயன் “மச்சி மெயில் பத்தி வேற இன்ஃபோ கிடைச்சிதா”

 

“ஆமா ரேயா.. சதீஷ்க்கு வந்த மெயில் ஒவ்வொரு முறையும் வேற வேற மெயில்ல வந்திருக்கு.. அதோட யாரு என்னன்னு கண்டு பிடிக்க முடியல” என்று அவனிடம் மின்னஞ்சல் பரிசோதனையை கொடுக்க,

 

அதை வாங்கி நோட்டமிட்டவன் “sardy2308@” என்று அதில் முதலியிருந்த மின்னஞ்சல் முகவரியை சொல்லி பார்த்தவன் “2308.. இந்த நம்பர் ஆகஸ்ட் 23 இருக்குமோ” என்றதும் அவ்வளவு நேரம் வேற ஏதோ யோசனையில் உலன்று கொண்டிருந்த யாழினி முகமோ ஒரு நொடி இறுகி பின் இயல்பு நிலைக்கு மாறியது.

 

அவளின் ஒரு நொடி முகம் மாற்றத்தை கூட ஆடவன் கண்டு கொள்ள, ருத்ரனோ “மே பீ இருக்கலாம் ரேயா.. ஆனா அவனுங்க ஒவ்வொரு முறை வேற வேற மெயில் தான் யூஸ் பண்ணியிருக்காங்க சோ அவனுங்களே நம்ம குழப்ப அடிச்சி விட்டுருக்கலாம்ல” என்க,

 

அவன் கூறியதும் ஒப்புக்கொள்ளும் வகையில் இருந்ததால் தலையாட்டிய ரேயன் “கரெக்ட் தான் மச்சி.. ஆனா இந்த ஃபர்ஸ்ட் மெயில்ல தான் ஏதோ க்ளூ இருக்குன்னு என் மனசு அடிச்சி சொல்லுது” என்று அமைதியாக இருந்த தியாவிடம் “நீ என்னடி யோசனையா இருக்க.. உனக்கு இந்த மெயில்ல எதுவும் தோணுதா” என்றதும் அவனிடமிருந்த தாளை வாங்கி பார்த்தவளுக்கோ மறக்க நினைத்த கடந்த காலம் கண்முன் வந்து செல்ல முடிந்த மட்டும் கட்டுக்குள் கொண்டு வந்தவள் ‘sardy’ என்று தனக்குள் சொல்லி பார்த்த தியா “எனக்கு என்னமோ அந்த லெட்டர்ஸ் நம்ம சைக்கோ பெயரோட கனெக்ஷனா இருக்குமோன்னு தோணுது”

 

“இருக்கலாம்டி.. அப்புறம் மச்சி நீ தர்மராஜ் ஃபாலோ பண்ண வேண்டாம்.. எனக்கு நாளைக்குள்ள அவர பத்தின எல்லா இன்ஃபோ வேணும் ஒன்னும் மிஸ் ஆக கூடாது” என்றதும் அவனும் அப்பணியை பார்க்க சென்று விட்டான்.

 

பின் தியாவிடம் தேனீர் எடுத்து வர கூறிவிட்டு நாற்காழியில் கண்கள் மூடி இதுவரை தாங்கள் கண்டறிந்த வழக்கு சமந்தமான அனைத்தையும் அசை போட்டவன், அடுத்து தான் செய்ய வேண்டியதை முடிவு செய்து பெண்ணவள் கொண்டு வந்த தேனீரை குடித்தவன் “யாழி டூ டேஸ் கழிச்சி டெஸ்டிங் போகுற முன்ன மந்தாகினி அண்ட் சதீஷ தூக்கிரு” என்க,

 

அவனை கேள்வியாக பார்த்த தியா “எனக்கு புரியல தர்மராஜ் மேல ஸ்ட்ராங்கா டவுட்யிருக்கு பின்ன எதுக்கு ரெண்டு நாள் வெயிட் பண்ணனும்.. இன்னைக்கே டெஸ்ட் எடுத்தா ரிசல்ட் நமக்கு பாஸிட்டிவ் ஆர் நெகட்டிவ் எது வந்தாலும் மாட்ட போறது அவர் தான்.. சோ இன்னைக்கே எல்லாத்தையும் முடிச்சி அவர கேக்குற விதத்துல கேட்டா அவர் தலைவன் யாருன்னு சொல்லிட போறான்”

 

“இல்ல தியா.. அப்படி ஈஸியா முடிச்சிட முடியாது.. ஆனா மே பீ ரெண்டு நாள்ல கேஸ் க்ளோஸ் பண்ண வாய்ப்பு இருக்கு.. வெயிட் அண்ட் சீ” என்றவனின் இதழ் விஷம புன்னகை சிந்தியது.

 

அவனின் புன்னகை கண்டு கொண்ட தியா “டேய் யாருன்னு பைண்ட் பண்ணிட்டியா என்ன.. உன் சிரிப்பே சரியில்லையே” என்றதும் பெண்ணவளின் திறன் பேசி அலற,

 

தொடுதிரையில் வந்த பெயரை கண்டு மலர்ந்த தியா அழைப்பு ஏற்று “சொல்லுடா சர்வா”

 

“எங்கடி இருக்க உன் வீட்டுக்கு வந்தேன் பூட்டியிருக்கு.. ஊரவிட்டு மொத்தமா காலி பண்ணிட்டியா என்ன”

 

“இல்லடா ஆர்யா வீட்டுல இருக்கேன்.. ஒரு சின்ன இஸ்யூ அதான் ஆர்யா வீட்டுக்கு வந்திருக்கேன்.. நீ வீட்டுக்கு வந்திருக்கியா”

 

“ஆமாடி இந்த வழியா போனேன்.. அதான் அப்படியே பாக்கலாம்ன்னு..”

 

“சரிடா.. ஆர்யா லொகேஷன் செண்ட் பண்றேன் அங்க வந்திரு”

 

“இல்லடி எனக்கு ஒரு சின்ன சர்ஜெரி இருக்கு.. சோ நாளைக்கு பாக்கலாம்” என்று அழைப்பை துண்டிக்க,

 

பெண்ணவள் அவனிடம் பேச்சும் போது சிரிப்பதில் கடுப்பான ரேயன், அவளை இழுத்து மடியில் அமர்த்தி கொண்டு “ஏய்.. அவன்கிட்ட பேசும் போது மொத்தம் பல்லும் தெரியுது யாருடி அவன்.. அன்னைக்கு கூட கல்யாணம் பண்ணிக்க கேக்குறான்” என்றவனின் கைகள் பெண்ணவளின் இடையை அளக்க,

 

அதில் கூச்சம் கொண்டு நெளிந்த தியா “மிஸ்டர் நரேன் உங்க சந்தேகப்புத்திய கேஸ்ல மட்டும் காட்டினா போதும் என்கிட்ட இல்ல..” என்று அவன் கையை தட்டிவிட்டு வெடுக்கென்று எழுந்த தியா “இங்க பாரு நரேன் நீ பண்ணினது நியாமாவே இருந்தாலும் அன்னைக்கு உன் அம்மா பேச்சும் போது.. எந்த உறவ விட்டு கொடுத்தியோ அப்போவே எல்லாம் முடிஞ்சி போச்சு.. இட்ஸ் ஆல் ஓவர்” என்பதை அழுத்தி கூறிவிட்டு சென்றாள்.

****

இரவு போல தன்னவளுடன் அறைக்குள் வந்த ஆர்யா, பெண்ணவளை மார்பில் போட்டு தட்டி கொண்டிருந்தவனின் முகம் சோகத்தை தத்தெடுத்திருக்க,

 

அவனின் கன்னத்தில் முத்தமிட்ட யாழிசை “என்னாச்சி ஆரி.. காலைல ரேயன் அண்ணா சொன்னத நினைச்சி ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்களா”

 

“ஆமா இசை.. எனக்கு இதுக்கு எப்படி ரியாக்ட் பண்ண கூட தெரியல.. அதோட நான் பிறந்ததுலயிருந்து அப்பா ஃபோட்டோ தான் பாத்துருக்கேன்.. அம்மா அப்பா பத்தி பெருசா என்கிட்ட சொன்னதில்ல.. ஆனாலும் இப்படி விட்டுட்டு போயிட்டாரேன்னு கண்டப்படி திட்டிருக்கேன்.. ஆனா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்ல” என்றவனுக்கு தந்தை நினைத்து கண்ணீர் வர,

 

அதை துடைத்துவிட்ட யாழிசை “விடுங்க ஆரி.. நடந்தத மறந்துட்டு இனி மாமாவ நம்ம கூட எப்படி சேர்க்கலாம் யோசிக்கலாம்” என்றவள் பேச்சை மாற்றும் பொருட்டு “கேக்கணும் நினைச்சேன்.. நான் வந்த புதுசுல இந்த ரூமுக்கு வர கூடாதுன்னு சொல்லுவீங்க தான.. ஆனா இப்போ நீங்களே என்ன தங்க வச்சிருக்கீங்க” என்றவளின் கேள்வி விழித்தவன்

 

“ஹான் இங்க என்னோட பெயின்டிங் சம்பந்தப்பட்டது இருக்கும் யாரும் வந்தா பிடிக்காது.. ஆனா இப்போ ரூம் எல்லாருக்கும் தேவைப்படுதே.. சோ இங்க சீக்ரெட் ரூம் ஒன்னு இருக்கு அதுக்குள்ள எல்லாத்தையும் ஷிப்ட் பண்ணிட்டேன்”

 

“ஓ சில நேரம் எழுந்து பார்த்தா காணம போயிடுவீங்களே இதுக்குள்ள தான் இருப்பீங்களா”

 

“ஆமா இப்போ பெரிய பெயின்டிங் புராஜக்ட் போயிட்டு இருக்கு.. அதான் நீங்க தூங்கினதும் அந்த வேலைய பாத்துட்டு வந்து தூங்குவேன்”

 

“சரி தான்” என்றவள் ஆடவனின் வருடலில் உறங்கி விட, அதை உறுதிப்படுத்தி கொண்டு பெருமூச்சுடன் எழுந்த ஆர்யன் ‘இன்னும் எத்தன நாளைக்கு இந்த கண்ணாம்மூச்சு ஆட்டமோ’ என்று தனக்குள் புலம்பிவிட்டே தன் ரகசிய அறைக்குள் நுழைந்து கொண்டான்.

தொடரும்…

ஆனந்த மீரா 😍😍

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்