
பெண்ணவளுக்கு தாலி கட்டியதிலிருந்து பாதி நாட்கள் வாகினி அப்பார்ட்மெண்ட்டில் டேரா போட்டவன், காலை பெண்ணவளிடம் செல்ல கொஞ்சல்கள் செய்தப்படியே அலுவலகத்திற்கு தயாராகி அவளுடன் வந்து சேர்வான்.
ஆனால், ரெண்டு நாட்கள் முன் வழக்கு விஷயமாக மேல் அதிகாரி ஜோஸப்பை டெல்லி அனுப்பிருக்க, அவன் இல்லாமல் வெறுமையாக உணர்ந்த வாகினி பணிக்கு செல்ல வேண்டா வெறுப்பாக படுக்கையை விட்டு எழுந்தவளுக்கு தலை சுற்றி விட்டது.
பின் சுவற்றை பிடித்து தன்னை ஆசுவாசப்படுத்தி நிமிர்ந்தவளின் கண்ணில் நாட்காட்டி பட, நாட்கள் தள்ளியதை நினைத்து பெண்ணவளின் இதழ்கள் விஷயத்தை யூகித்து விரிந்து கொண்டது.
அதுவரை இருந்த சோர்வு நீங்கி அதனை உறுதி செய்ய மருத்துவமனைக்கு சென்று விட்டாள்.
தன் அழுவலகத்திற்கு செல்வதற்கு முன் மருத்துவரிடம் வாய் மூலம் கர்ப்பம் என்று உறுதிப்படுத்தி கொண்டவளின் கரு உருவாகி இருபது நாட்கள் ஆகிவிட்டது என்ற தகவலை அவர் அளித்திருக்க,
தன்னவனின் உயிரின் வரவை எண்ணி சந்தோசமாக அலுவலகம் வந்து சேர்ந்தவளுக்கு கணவனின் எண்ணமே எழ அழைப்பு விடுத்து சொல்லலாம் என்று நினைத்தவள் நேரியில் வந்ததும் அதிர்ச்சி கொடுக்கலாம் என்று காத்திருக்க எண்ணியவளுக்கு தெரியவில்லை தனக்கே வீதி அதிர்ச்சி வைத்திருப்பது.
கடந்த மாதம் தியாவிற்கு மாதவிடாய் அதிக ரத்தபோக்கு காரணத்தால் முகம் வாடியப்படியே சுற்றி திரிந்தவள், சில நேரம் விடுப்பு கூட எடுத்து விடுவாள். மற்ற மூவரும் கூட அவளின் நிலை புரிந்து வழக்கு பற்றின விஷயங்களில் அவளை தொந்திரவு செய்யாமல் விட்டு விட, ஆடவனோ வீட்டில் இருக்கும் நேரங்களில் பெண்ணவளை தாங்கியவன் அவளை சிரமப்படுத்தாமல் வீட்டு வேலையை தானே செய்வான்.
இன்றும் அதுபோல் பெண்ணவள் விடுப்பெடுத்திருக்க அவளுக்கு ஆயிரம் பத்திரம் கூறிவிட்டு வேலைக்கு வந்த ரேயன், நேற்று வாடிய கொடி போல் சுருங்கியிருந்த வாகினி இன்று பிராகசமாக ஜோலிப்பதை கண்டு “என்னடி விஷயம் ஒரே நாள்ல ஒரு சுத்து கூடியிருப்ப போல” என்று அமர்ந்து வழக்கான கோப்புகளை ஆடவன் திரட்ட,
அவனின் வெளிப்படையில் திகைத்த தியா, பின் இனியும் மறைப்பது தனக்கும் குழந்தைக்கும் நல்லதில்லை என்ற காரணத்தால் தயங்கியப்படி “ரேயா.. ஐ அம் ப்ரெக்னன்ட்டா”
“ஓ..” என்றவன் பின் விழிவிரித்து கையிலிருந்த கோப்புவை ஓரம் வைத்துவிட்டு “வாகி ஆர் யூ சீரியஸ்” என்றதை கேட்டு பெண்ணவள் ஆமென்று தலையாட்ட,
அதில் முறைத்தவன் “வாகி உனக்கு பைத்தியமா.. கல்யாணம் பண்ற வர வெயிட் பண்ண முடியாதா அப்படி என்ன அவசரம்” என்றவனுக்கு பெண்ணவள் தாலி வாங்கும் முன் குழந்தையை வாங்கி விட்டாளே என்று கோவம் எழ,
அதன் பின்னே அவனின் கோவத்தை உணர்ந்த வாகினி மறைத்து வைத்திருந்த தன்னவன் கட்டிய தாலியை எடுத்துக்காட்டி தன்னவன் தாலி கட்டிய நிகழ்வை அவனிடம் கூறி முடித்தாள்.
ஏனோ முன்னமிருந்த கோவம் பெண்ணவளின் தாலியை கண்டு மறைந்து விட, ஆழ்ந்த மூச்சை எடுத்து கொண்டவன் இனியும் தாமதிப்பது நல்லதில்லை என்றதால் “ஒன் மந்த் டைம் தாடி.. சீக்கிரம் வீட்டுல பேசி எல்லாம் சரி பண்றேன்” என்று தன்னுடைய காதல் பற்றியும் வீட்டியில் கூற நினைத்தவன், இப்போதும் கூட தன்னவளின் கழுத்தில் கட்டிய தாலியை பற்றி மூச்சு விடவில்லை.
இப்படியே நேரங்கள் கடக்க ரேயனின் திறன்பேசி அலற, தொடுதிரையில் வந்த பெயரை கண்டு ‘மாமா இந்நேரத்துல எதுக்கு அடிக்கார்’ என்று எண்ணி வாகினியை பார்த்துவிட்டே அழைப்பை ஏற்று “சொல்லுங்க மாமா” என்க, மாமா என்றதும் பெண்ணவளும் குழப்பமாக நோக்க,
அவனின் மாமா கூறியதை கேட்டு பதறி “இதோ உடனே நாங்க வருகிறோம்” என்றவன் “வாகி அம்மாவ ஹாஸ்பிட்டல் அட்மிட் பண்ணியிருக்காங்க” என்று பெண்ணவளை இழுத்து கொண்டு மருத்துவமனை வந்து சேர்ந்திருக்க,
சோகமாக அமர்ந்திருந்த வாகினியின் தந்தை அருகில் சென்று என்னவென்று கேட்க, அவரும் பதிலெதும் கூறாமல் இருவரையும் தன் தமக்கையை இருந்த அறைக்கு அழைத்து சென்றார்.
அங்கோ மருத்துவர் அவரிடம் மல்லு கட்டிக்கொண்டிருக்க, படுக்கையில் வாடி கிடந்த அன்னையை பார்த்துவிட்டு “என்னாச்சி டாக்டர் அம்மா எப்படி இருக்காங்க”
“அத நீங்களே கேளுங்க மிஸ்டர்.. உங்க அம்மாக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கு ஃபர்ஸ்ட் அட்டம்ப்ட் தான்.. ஆனா அதுக்கான ப்ரொசீஜர் பண்ணினா தான் அவங்கள நார்மலாக்க முடியும்.. இவங்க வந்ததுலயிருந்து நெஞ்ச புடிச்சிட்டு ட்ரீட்மெண்ட் பண்ண விட மாட்டிக்காங்க இல்ல சீவியர் கண்டிசன் ஆகும்.. சொன்னா புரிஞ்சக்க மாட்டிக்காங்க” என்று ரேயனிடம் விஷயத்தை கூற,
அன்னைக்கு நெஞ்சு வலி என்றதில் அதிர்ந்தவன், அன்னையின் கைப்பிடித்து “அம்மா அதான் டாக்டர் சொல்லுறாங்கள.. எதுக்கு பிடிவாதம் பிடிக்குறீங்க” என்றவனின் கன்னத்தை வருடியவர் “நரேன் நான் பிழைக்க மாட்டேன் தோணுது.. ஆனா அதுக்கு முன்ன உன்னோட கல்யாணத்த பாக்க ஆசைப்படுறேன்” என்று தன் முந்தானையில் முடிஞ்சி வைத்திருந்த தாலியை ஆடவனின் கையில் வைத்து “இத என் மருமக வாகி கழுத்துல கட்டுடா அதுக்கு அப்புறம் ட்ரீட்மெண்ட் சம்மதிக்குறேன்.. அப்போ என் உயிர் போனா கூட கவல இல்ல” என்று சாதரணமாக இருவரின் தலையில் இடியை இறக்கியிருக்க,
அவரின் வார்த்தையில் இருவரின் உடலும் ஒரு சேர உதறல் எடுக்க, நிலைமை மாற்ற எண்ணிய ரேயன் “அம்மா உங்களுக்கு ஒன்னும் ஆகாது நீங்க ட்ரீட்மென்ட் முடிச்சிட்டு வாங்க.. அப்புறம் உங்க பையன் கல்யாணத்த ஊர் அறிய நடத்தலாம்” என்க,
மகனின் பேச்சில் பிடிவாதமாக மறுத்த ரங்கநாயகி “நீ தாலி கட்டினா தான்.. நான் டாக்டர என்ன தொட அனுமதிப்பேன்.. உனக்கு அம்மா வேணும்ன்னா அவ கழுத்துல தாலி கட்டு” என்றவரின் கண்கள் ஏக்கத்தில் கலங்க,
செய்வதறியாமல் விழித்த ரேயனோ பெண்ணவளை நோக்க, அவளோ தலையை கவிழ்த்து இதழ் கடித்து நின்றாள்.
அவன் தயங்குவதில் வாகினியின் தந்தை “என்ன மாப்பிளை யோசிக்குறீங்க.. ஏற்கனவே உங்களுக்கு நிச்சயம் ஆயிடுச்சே பிறகு என்ன தயக்கம் கட்டுங்க” என்றதை பெருமூச்சு இழுத்து விட்டவன்,
தாலியை வாகியின் கழுத்தே அருகே கொண்டு வந்து “ஐ அம் சாரி வாகி.. என்ன புரிஞ்சிக்க இப்போ நான் தாலி கட்ட வேண்டிய சூழ்நிலைல இருக்கேன்.. ஆனா ஒரு முடிச்சி தான் போடுவேன் நீ யாரும் பாக்காத நேரம் இது அறுத்து வீசிரு” என்று பெண்ணவளின் காதில் ரகசியமாக கடித்து விட்டே,
மூன்று முடிச்சி போடுவது போல் பாவலாம் காட்டி ஒற்றை முடிச்சிட்டு திரும்பியவன் வாசலில் தன்னையே சலனமற்று வெறித்தப்படி நின்ற தியாழினியை கண்டு அதிர்ந்து விட்டான்.
****
உடல் சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனைக்கு வந்திருந்த தியா, வந்த வேலை முடித்து கிளம்பும் வேலையில் வாசலில் நின்ற காரை கண்டு ‘ரே ஹாஸ்பிட்டல என்ன பண்றான்’ என்றப்படி உள்ளே மறுபடியும் மருத்துவமனைக்குள் நுழைந்தவள்,
ஒரு அறையிலிருந்து செவிலியர் வந்த கணம் அதில் தெரிந்த இடை வெளியில் தெரிந்த தன்னவனை கண்டு உள்ளே வந்தவள் கண்ட காட்சியில் அதிர்ந்து உயிர் பிரிந்த கூடாக தன்னவன் இன்னொருத்தி கழுத்தில் தாலி கட்டுவதை வெரித்தப்படி நின்றிருந்தாள்.
தன்னை கண்டு பார்வையால் ஏதோ சொல்ல வருபவனின் பொருள் புரியாமல் உடைந்தவள் வாகினி கழுத்தில் தொங்கிய தாலியை கண்டு இருவரையும் குற்றபார்வை பார்க்க,
அவளின் பார்வை சந்திக்க ஏழாமல் இருவரும் தலை கவிழ்த்து நின்றார்கள்.
அவர்களின் அருகில் வந்து இருவரின் கையை குலுக்கிய தியா “ஹேப்பி மேரிட் லைஃப் காய்ஸ்” என்று வாழ்த்து கூற, அவனோ “யாழி..” என்று இதழ் அழைத்ததில் பளாரென்று அவனின் கன்னத்தில் ஒன்று வைத்தவள் “கடைசில நீயும் அந்த ஆள் ரத்தம்ன்னு நல்லாவே ப்ரூஃப் பண்ணி.. என் முதுகுல குத்திட்ட ரே” என்று வாகினியின் தந்தையை காட்டி கூற,
சினம் கொண்டவரோ “ஆமா யாரு நீ.. என் மருமகன அடிக்கிற.. என்ன மரியாதை இல்லாம பேசுற” என்று முன்னே வந்தவரை தீ பார்வையால் தடுத்தவள் “யோவ் நீ பக்கத்துல வந்த பெருசுன்னு கூட பாக்காம செவியிலேயே விடுவேன்.. ஆமா உன் குடும்பத்துல எல்லாரும் ஏன்யா பொண்ணுங்க பாவத்த சுமக்குறீங்க.. எங்கள பாத்தா யூஸ் அண்ட் த்ரோ போல இருக்கா.. நீங்க பண்ணின காரியத்த வெளிய சொன்னா எல்லாரும் கேக்குற கேள்வில நாண்டுக்கிட்டு சாக வேண்டிய தான்” என்க,
ஏனோ கோவம் இருந்தாலும் தன் தந்தையை ஒருத்தி இழிவாக பேசுவதை ஏற்க முடியாத வாகி “தியா மைண்ட் யூவர் வேர்ட்ஸ்”
“என்னடி மைண்ட்.. இவ்வளவு நாள் இல்லாத அப்பா பாசம் பொத்துக்கிட்டு வருதோ.. ஆனா நீயெல்லாம் யோக்கியம் மாதிரி பேசாத ஜோஸப் பாக்கும் போதெல்லாம் வெட்கப்பட்டு பல்ல இளிச்சிட்டு எப்படிடி இன்னொருத்தி புரோபர்ட்டிகிட்ட தாலிய வாங்கி நிக்கிற உனக்கு அசிங்கம் இல்ல” என்க,
அவள் கையை அழுந்த பற்றிய ரேயன் “தியா யூ கிராஸ் லிமிட்.. வாகி பத்தி இதுக்கு மேல ஒரு வார்த்தை தப்பா பேசின மனுஷனா இருக்க மாட்டேன்”
“இப்போ மட்டும் நீ மனுஷனா இருந்து கிழிச்ச.. உங்க ரெண்டு பேருக்கும் ஏமாத்த நாங்க தான் கிடைச்சோம்ல..” என்க,
இடை புகுந்த வாகினி தந்தை விஜயன் “ஏய் யாருக்குடி அசிங்கமா இருக்கணும் ஏற்கனவே என் பொண்ணுகூட நிச்சயம் பண்ணின ஒருத்தன தான் நீ காதலிச்சுருக்க உனக்கு அசிங்கமா இல்ல..” என்றதில் உடைந்தவளின் இதழ்கள் “நிச்சயம்” என்று இதழ் முணுமுணுக்க,
அடுத்த கணம் தடுமாறியவளை பிடிக்க வந்த இருவரையும் தள்ளி நிறுத்தி ஆடவன் சட்டைய பற்றியவள் “ரே அந்த ஆள் சொல்லுறது உண்மையா நமக்குள்ள உறவு ஏற்படுற முன்னாடி உனக்கும் வாகினிக்கும் நிச்சயமானது உண்மையா.. பதில் சொல்லுடா” என்று உலுக்க, ஆமென்று ஆடவன் தலையை கவிழ்த்து விட,
பெண்ணவளுக்கோ இப்படியே உயிரை மாய்த்து விட கூடாதா என்று தான் இருந்தது,
அப்படியே உடைந்து பின்னே சென்றவளின் பார்வை தன்னை கேலியாக சிரித்தப்படி பார்க்கும் படுக்கையிலிருந்த ரங்கநாயகி மேல் படிய,
அனைத்தும் அவரின் நாடகம் என்பதை புரிந்து கொண்டவள் வேகமாக ஆடவனின் சட்டையை கொத்தாக பிடித்து கன்னத்தை மாறி மாறி பதம் பார்க்க,
அவனின் அன்னை ரங்கநாயகியோ “என் பையன விடு இப்போ எதுக்கு டிராமா பண்ணிட்டு இருக்க.. அன்னைக்கு கூட இப்படி தான் தாலி கட்டிட்டான் பொய் சொன்ன இப்படி நடிச்சி என் மகன மயக்குறதுக்கு தூக்கல தூங்கி சாக வேண்டியது தான”
“ஏய்.. உன் நடிப்ப உன் மகன் நம்புவான் நான் இல்ல.. என்ன சொன்ன நான் தூக்குல தொங்கனுமா.. உன்மேல மரியாதை வச்சிருந்தேன் இப்படி நடிச்சி ஒருத்தியோட புருஷன இன்னொருத்தி கூட்டி கொடுக்குற நீ தான் தூக்குல தொங்கனும்” என்றதை கேட்டு ஆடவனின் முகம் கோவத்தில் சிவக்க,
இழுத்து ஒன்று விட்டவன் “என் அம்மா பத்தி ஒரு வார்த்தை பேசின பல் தெரிச்சிரும்” என்க,
அவரோ நெஞ்சை பிடித்து கண்ணீர் வடித்தப்படி “என்ன நரேன் இதெல்லாம்” என்றதை கேட்டு பதறியவன் “அம்மா நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க.. நீங்க ஆசைப்பட்ட போல எனக்கும் வாகிக்கும் கல்யாணம் ஆயிடுச்சு தான.. நீங்க முத ட்ரீட்மென்ட் போங்க” என்று அங்கிருந்த மருத்துவருக்கு கண்ணை காட்ட,
அவரும் பரிசோதனைக்காக அழைத்து சென்றுவிட, போகும் போது அவரின் பார்வை பெண்ணவளை குரூரமாக பார்த்துவிட்டு கடந்தது.
அவரின் முகத்தை அருவெறுப்பாக பார்த்துவிட்டு செல்ல போன தியாவின் கையை பற்றிய ரேயன் “யாழி நான் சொல்லுறது கொஞ்சம் கேளு அம்மாக்கு” என்று முடிக்கும் முன்
“உன் அம்மா நடிக்கிறாங்க ரே.. அது கூட தெரியாம ஒருத்தி கழுத்துல தாலி கட்டிட்ட எல்லாம் முடிஞ்சி போச்சு.. அவள நிச்சயம் பண்ணிட்டு எப்படிடா காதல்ன்னு என் பின்னாடி சுத்தின..” என்று தன் உடலை காட்டி “எல்லாம் இதுக்கு தான்ல முடிஞ்சி போனதும்.. அந்த ஆள போல கழட்டி விட்டுட்ட தான”
“யாழி வார்த்தைய விடாத..”
“என்ன வேணாலும் நடந்திருக்கட்டும் ஆனா நீ வேற ஒருத்தி நிச்சயம் பண்ணி எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டு அவ கழுத்துல தாலி கட்டிட்டியே எல்லாமே முடிஞ்சி போச்சு” என்று செல்ல போனவளை வழிமறித்த வாகினியின் தந்தை “இங்க பாரு.. நீ என் மருமகன லவ் பண்ணியிருக்கலாம் ஆனா இப்போ என் மக கழுத்துல தாலி கட்டிட்டார்.. என் மக வாழ்க்கைககுள்ள எதாவது செய்ய நினைச்ச இந்த பூமில ரொம்ப வருஷம் இருக்க மாட்ட” என்றதில் கேலியாக சிரித்த தியா
“என்ன மிரட்டுறீங்களா மிஸ்டர் விஜயன்.. எப்படி எப்படி உங்க மகளா எத்தனாவது மக.. சாருக்கு சமூகம் பெருசுல.. ஊரு உலகத்துல நிறைய பொண்டாட்டி இருக்குமே” என்றதை கேட்டு அதிர்ந்த விஜயன் “தியா” என்று அழைக்க,
“பார்டா பேருலாம் ஞாபகம் இருக்கே அப்போ ரெண்டு டிராக் தான் ஒட்டிருக்கீங்க போல” என்றதில் ஒரு நொடி தடுமாறிய விஜயன் முகத்தை இறுக்கமாக மாற்றி “நீ எப்படி உயிரோட”
“எதுக்கு நான் உயிரோட இருக்கேன் தெரிஞ்சிருந்தா வீட்ட கொழுத்த ஆள் அனுப்பின போல.. என்ன கொழுத்த ஆளு அனுப்பிருப்பீங்களோ” என்க,
இத்தன நாட்கள் தந்தைக்கு வேறு ஒரு குடும்பம் இருக்கிறது என்று தெரிந்து விலகியிருந்த வாகிக்கு தியாவின் பேச்சில் தான் நிதர்சனம் உரைக்க, தமக்கையை கண்ணீர் பெருக பார்த்தாள்.
“சொந்த அக்காக்கே சக்காலத்தியான தங்கை” என்று செய்தி வாசிப்பது போல் வாசிக்க, தன்னை இந்நிலையை நிற்க வைத்த சூழ்நிலையை கண்டு நொந்த வாகி இதழ் கடித்தப்படி நிற்க,
மேலும் ரேயனிடம் அர்த்த பார்வை வீசிய தியா “இட்ஸ் ஆல் ஓவர்” என்று திரும்பியவளுக்கு கண்கள் கலங்கி விட துடைத்தப்படியே வெளியே வந்து சேர்ந்தாள்.
*****
அதன் பின் மருத்துவமனையில் யாரும் தன்னை பார்க்காத சமயம் கழிவறை சென்ற வாகி, ரேயன் ஒரு முடிச்சிட்ட தாலியை தூக்கி வீசிவிட்டு தன்னவன் கட்டிய தாலியை வெளியே தொங்கவிட்டவள் அழுது முடித்தே வெளியே வந்தாள்.
அதன் பிறகு அன்னைக்கு உரிதான பரிசோதனை முடிந்து வீட்டிற்கு வந்துவிட, ஒரு பக்கம் யாழினியை தேடியவன் மறுபக்கம் வேலை விஷயமாக சென்ற ஜோஸப்பை காணாமல் அவனை தேடினான்.
திருமண முடிந்த நிலையில் வீட்டியிலே அத்தைக்கு உதவியாக இருந்த வாகினிக்கும் தன்னவன் காணவில்லை என்ற செய்தி தெரிந்தாலும் வேதனையை வெளியே காட்டமால் குடும்பத்தாரின் முன் ரேயன் மனைவியாகவே வலம் வந்தாள்.
மறுமாதம் பெண்ணவள் கரு பற்றின செய்தியை வீட்டியில் தெரிவிக்க, ரங்கநாயகியோ சந்தோசத்தில் துள்ளி குதித்து விட்டார்.
இப்படியே தன்னுடைய பணியுடன் இருவரையும் தேடி திரியும் ரேயன், வாகினிக்கு இந்நேரம் துணையாக இருக்க வேண்டுமென்று எண்ணி வழக்கத்தை விட விரைவாக வீட்டிற்கு வந்தவன், தன் மாமனும் அன்னையும் பேசி கொள்வதை கேட்டு உறைந்தவனுக்கு அவனின் யாழியின் முகமே கண் முன்வந்து சென்றது.
அதன் பின் தன் மாமனிடம் தனியாக பேச காத்திருந்தவன், இரவு அனைவரும் தூங்கும் வேலையில் மாமனின் அறைக்குள் நுழைந்திருக்க, அவரோ அப்போது தான் மதுவுடன் அமர்ந்திருந்தார்.
அதை கண்டவனுக்கு, அப்போது தான் அவருக்கு குடிக்கும் பழக்கம் இருக்கு என்பது கூட தெரியும் அதோடு அதற்கான காரணமும் தெரிந்து விட, அந்த மனிதன் மேல் அவனுக்கு பாவம் மட்டுமே பட முடிந்தது.
ஏதோ அரவம் கேட்டு திரும்பிய விஜயன் வெளியே நின்றிருந்த ரேயன் கண்டு அதிர, அவனோ கதவை தாழிட்டு விட்டு சாதரணமாக அருகில் அமர்ந்தவன் “என்ன மாமா இந்த பழக்கம் வேற இருக்கா.. சரி அதுவும் நல்லது தான் நமக்கு ஒரு பெக் ஊத்து” என்றதை கேட்டு அதிர்ந்தவரை கண்டு “என்ன மாமா பாக்குற அதெல்லாம் சில டைம் குடிக்கிற பழக்கம் இருக்கு.. இப்போ நானும் லவ் பெலியர் நீயும் லவ் பெலியர்” என்றவன் தானே தனக்கு ஊத்தி ஒரு மிடர் குடித்து “இன்னும் எத்தன நாளைக்கு இந்த வேஷம் மாமா.. யாழி உங்க பொண்ணுன்னு தெரிஞ்சதும் உங்க கண்ணுல ஒரு செகண்ட் வந்து போன ஏக்கத்த நான் பாத்தேன் மாமா.. பின்ன எதுக்கு டிராமா” என்க,
தன்னை மருமகனை தனக்குள் மெச்சி கொண்ட விஜயன் “என்ன பண்றது மாப்பிளை காதல்ன்னு வரும் போது.. காதலிக்கூட இருக்கிறத விட அவ உயிர் தான் முக்கியமா படும்.. அந்த நேரம் மனச கல்லாக்கிட்டு காதலிச்சவ கிட்ட தன்னையே பொறுக்கி போல காட்டிட்டு விலக வேண்டிய சூழ்நிலை.. ஆனா பொண்ணுங்களுக்கு கஷ்டம் இருந்தாலும் தான் காதலிச்சவன் கேடுக்கெட்டவன்னு வெறுத்துட்டு போயிடுவாங்க..
அவங்கள காப்பாத்த நினைச்ச பசங்க தான் காதலை மறக்க முடியாம நித்தமும் சாவாங்க.. அப்படி தான் மாப்பிளை என் சூழ்நிலையும் என் அன்னத்துக்கிட்ட பொம்பள பொறுக்கி போல என்ன காட்டிக்கிட்டு நித்தம் அவ நினைப்புலயே வாழ்ந்துட்டு இருக்கேன்” என்றவருக்கு தன் மனபாரத்தை இறக்க தோல் கிடைத்ததில் ஆடவணை கட்டிக் கொண்டு கதறினார்.
ஆனால், ரேயனுக்கு தான் அவரின் நிலை அதிர்ச்சியை கொடுத்தது, தான் சிறு வயதில் மாமனை விறப்பாக பார்த்ததிலிருந்தே அவரின் கெத்து மற்றும் தொழிலை ஆளும் திறமையில் வியந்தாலும் மறுபக்கம் அவர் ஜாதி வெறியர் மட்டுமே தெரியும்.
ஆனால் காதல் வலியில் குழந்தை போல் அழுவதை பார்த்து, தன்னையும் காதல் ஆட்டி வைத்ததில் அவனுக்கும் மாமனின் நிலை புரிய ஆதரவாக முதுகை தடவிய ரேயன் “என்ன மாமா நீ உன்ன எவ்வளவு கெத்துன்னு நினைச்சேன் தெரியுமா”
“நீ வேற மாப்பிளை வெளிய கெத்து தான்.. ஆனா உண்மையான அவதாரம் எனக்கு தான தெரியும் இதுலயும் உன் அம்மா என்ன ஜாதி வெறியன் போல வெளிய கிரீயட் பண்ணி வச்சிருக்கா.. எனக்கு சொந்த பொண்ணுங்க ரெண்டு இருந்தும் ஒருத்தி இருந்தது தெரியாம இருந்துருக்கேன் இன்னொருத்திக்கு பக்கத்துல இருந்தும் தேவையில்லாதவனா இருந்துருக்கேன் மொத்தம் லைஃப்லயும் உன் மாமன் தோத்துட்டன்டா”
“என்ன தான் மாமா நடந்துச்சு என்கிட்ட மறைக்காம உண்மை சொல்லுங்க” என்றதை கேட்டு பெருமூச்சு விட்டு தன் படுக்கையிலிருந்து புகைப்படத்தை அவனின் கையில் கொடுத்த விஜயன் “இது தான் என் காதல் மனைவி அன்னலக்ஷ்மி பேரு போல குணமும் அன்னம்.. இது தான் தியாழினி என் பொண்ணுக்கு நான் ஆசையா வச்ச பெயரு..” என்றதும் தன்னவளின் முகத்தை வருடிய ரேயனின் எண்ணம் முழுவதும் பெண்ணவள் இங்கு இருக்கிறாள் என்று தவிப்பே இருந்தது.
உண்மை அறியும் பொருட்டு அனைத்தையும் ஒதுக்கி வைத்தவன் “மாமா.. உங்களுக்கு ஒரு பையன் இருக்கான் பெயரு ஆர்யன.. நானும் தியாழினியும் லவ் பண்ணினோம்” என்றவன் தங்கள் காதல் கதையோடு ஜோஸப் வாகினியின் காதல் கதையும் கூறியிருக்க, கண்கள் கலங்க அவனை பார்த்தவர் “தியா சொன்னதெல்லாம்” என்று கேட்டவருக்கு தானும் இரு மகள்களின் வாழ்க்கை அழிய காரணமாகி விட்டோம் என்ற குற்றயுணர்சியில் வார்த்தைகள் தண்டியடிக்க,
அவரை தோலோடு அணைத்து பிடித்திருந்த ரேயன் “உண்மை தான்” என்பது போல் தலையாட்டி “உண்மைய மறக்காம என்கிட்ட சொல்லுங்க” என்றதும் பெருமூச்சு விட்டவர்
“என் அப்பாவோட பிசினஸ்.. நான் பாத்துக்குறேன் எங்களோட பிராஞ்ச் சென்னை கோயம்புத்தூர்ல மெயின் அப்போ கோவை பிராஞ்ச் என்கிட்ட ஹேன்ட் ஓவர் பண்ணியிருந்தாங்க உன் அப்பா சென்னை பிராஞ்ச்ல இருந்தார்.. அப்போ தான் கோவைல அன்னம் பாத்தேன்.. காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் தான் படிச்சிட்டு இருந்தா பிடிச்சிது யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டோம் அவங்க வீட்ட எதிர்த்த என்னால என் அப்பாவையும் அக்காவையும் எதிர்க்க தைரியம் இல்ல..
ரெண்டு பேருக்குமே ஜாதி பற்று அதிகம் அதுனால நான் கம்பனி பாத்துட்டு அவ கூடவே வாழ்ந்துட்டு சந்தோசமா தான் போயிட்டு இருந்துச்சு மறு வருஷம் தியாழினி பிறந்தா அப்புறம் நாங்க மூணு பேருமே சந்தோசமா தான் இருந்தோம் தியாவுக்கு என்ன ரொம்ப பிடிக்கும்.. நான் ஆபீஸ் வருர டைம் என்ன தேடி அழுவா” என்றவருக்கு மகள் தன்னை பேசியதை நினைத்து கலங்கி விட,
பின் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு “தியாவுக்கு ஆறு மாசம் இருக்கும் போது வீட்டுல மாமா பொண்ணு வனிதா கட்டிக்க சொல்லி டார்ச்சர் பண்ணினாங்க.. நான் காதலிக்குறேன் சொல்ல வீட்டுல முடிவே முடியாது இந்த பொண்ண கட்டிக்க இல்லன்னா உன் காதலிய தேடி பிடிச்சி கொன்னுடுவேன் மிரட்டினாங்க.. அதோட எங்கேயும் அனுப்ப மாட்டேன் சொல்லிட்டாங்க.. நான் பிடிவாதமா மறுத்து ரூமுக்கு வந்துட்டேன் அப்போ தான் வனிதா வந்தா” என்றவரின் எண்ணம் அன்றைய நிகழ்வை நினைத்தது.
விஜயன் தந்தை தமக்கையிடம் திருமணத்தில் இஷ்டம் இல்லையென்று முடிவாக சொல்லிவிட்டு தன் அறைக்குள் நுழைந்து விட,
அப்போது உள்ளே வந்த வனிதா பட்டென்று, அவர் காலில் விழுந்து “என்ன கட்டிக்கங்க மாமா.. என்னோட உசுரோட என் குழந்தை உசுரும் சேத்து நீங்க தான் காப்பாத்தனும்” என்றதும் அதிர்ந்த விஜயன் பெண்ணவளை நிமிர்த்தி “என்ன வனி சொல்லுற குழந்தை எப்படி”
“மாமா நான் படிக்கும் போது ஒருத்தர விரும்பினேன்.. ரெண்டு பேருமே விருப்பட்டு தான் ஒன்னா இருந்தோம் அப்புறம் எப்படியோ அப்பாக்கு நான் வேற ஒருத்தர விரும்புகிறேன் தெரிஞ்சி அவன ஆக்சிடென்ட் பண்ணி கொண்ணுட்டு உங்களுக்கு கட்டி வைக்கிறாங்க..
என் காதல் தான் கை கூடல மாமா அவர் நினைவா குழந்தையாவது இருக்கட்டுமே.. நம்ம கோவைல தான இருப்போம் நீங்க தாராளமா உங்களுக்கு பிடிச்சவங்க கூட இருங்க.. நான் தடையா இருக்க மாட்டேன்..
எனக்கு என் குழந்தைக்கும் ஒரு கார்டியனா இருந்தா போதும்” என்றதும் வேறு வழியின்றி திருமணம் முடித்து அவளுடன் கோவை வந்து சேர்ந்தவர் தன்னவளுடன் நேரத்தை கழித்தாலும் வனிதாவையும் பொறுப்பாகவே கவனித்து கொண்டார்.
அதன் பின் வாகியும் பிறந்து விட, அடுத்த ரெண்டு வருடத்தில் அன்னம் ஆர்யனை சுமந்து கொண்டிருந்த தருணம் தான் வீட்டியில் எப்படியோ விஷயம் தெரிந்து வேலை விஷயம் என்று கூறி வனிதா வாகி விஜயன் மூவரையும் சென்னை கடத்திருக்க,
அந்த நாட்களை பயன்படுத்தி ரங்கநாயகியின் ஆட்கள் பெண்வளை மிரட்டி சென்றிருக்க, அவர்களின் குழந்தை விஷயம் அறிந்து கொதித்த விஜயன் தமக்கை மற்றும் தந்தை வேற ஜாதிகாரி குழந்தை என்ற எண்ணத்தில் மொத்தமாக கொழுத்கி விட்டிருந்தார்கள்.
விஜயன் மறுபடியும் கோவை திரும்பவதற்குள் நடந்த கொலையை விபத்தாக பூசி மொழுகி விட, குடும்பத்தை நம்பியவன் வனிதா வாகியை பார்த்துக்கொள்ளும் பணியில் இறங்கியவன் தன் காதலின் நினைவிலே இத்தன வருடங்கள் கழித்திருந்தார்.
அவரின் பழைய நினைவிலிருந்து வெளியே வந்தவர் “அப்புறம் வனிதா அவ காதலன் பத்தின நினைப்புல உடம்பு முடியாம செத்து போயிட்டா.. அடுத்து வாகிய என் மகளா தான் வளத்தன் எப்போ அவளுக்கு எனக்கு இன்னொரு குடும்பம் இருக்குன்னு தெரிஞ்சிதோ.. என் மூஞ்ச பாக்குறதே குறைச்சிட்டா..
அடுத்து வேலைக்கு சேந்து கொஞ்ச நாள்ல வாகிகூட ஜோஸப் அப்பார்ட்மெண்ட் போகிறத கவனிச்சேன் அதுக்குள்ள அக்காக்கும் விஷயம் தெரிய.. நான் அவங்க காதலாவது சேத்து வைங்கன்னு கேட்கும் போது
அப்படி நடந்தா உன் பொண்ணு பிணம் தான் வரும் சொல்லிட்டாங்க.. நானும் என் பொண்ணுக்கு கால் பண்ணி இப்படி நடந்துக்காதன்னு காட்டமா பேசினேன்.. அப்போ கொஞ்சம் நாள் கழிச்சி அக்காவுக்கு நீ தியா கூட பழகுறதும் வாகி ஜோஸப் கூட பழகிறதும் தெரிய வந்துச்சு உடனே நெஞ்சு வலி டிராமா போட்டு உனக்கும் வாகிக்கும் கல்யாணம் பண்ணிட்டாங்க என்னால எதுவுமே பண்ண முடியாத நிலையில இருக்கேன்,” என்று முடித்திருக்க, இருவரிடமும் ஆழ்ந்த மொளனம் பின் ரேயன் தான் “அன்னம் அத்தைக்கு தீ விபத்து வச்சி கொல்ல பாத்தது உங்களுக்கு எப்போ தெரிஞ்சிது”
“அது எதற்சியா அப்பாவும் அக்காவும் பேசிட்டு இருக்கும் போதே தெரிஞ்சிது.. ஆனா அந்த நேரம் கோவத்த காட்டி வாகினிய இழக்க விரும்பல.. அதோட செத்துட்டாங்க நினைச்சிட்டு அவங்க நினைப்போட வாழ்ந்துட்டன்” என்று அவனின் கையை பற்றியவர் “மாப்பிளை நான் அன்னம் வனிதாவும் தான் காதலை இழந்துட்டோம்.. ஆனா எங்க பசங்க அப்படி வருத்தப்பட கூடாது.. ரொம்ப வலிக்குது மாப்பிளை என் ரெண்டு பொண்ணுங்க பிடிச்ச வாழ்க்கையும் சந்தோசமா வாழனும்”
“கண்டிப்பா மாமா என் யாழிய கண்டுபிடிச்சி.. எனக்குள்ள பொத்தி வச்சிப்பன் சீக்கிரமே ஜோஸப்பும் கண்டு பிடிச்சி வாகி கூட சேத்து வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு” என்று அவரின் கையில் சத்தியம் செய்து எழுந்தவனின் கையை பற்றி அமர வைத்து “சின்ன வயசுல உன் அப்பா பத்தி கேட்டுட்டு இருப்ப தான.. இது தான் உன் அப்பா” என்று ஒரு புகைப்படத்தை காட்டியவர் “உன் அம்மா பண்ற ஜாதி வெறி பிடிக்காம உன் அம்மாக்கு டிவோர்ஸ் கொடுத்துட்டார்.. ஆனா உன்ன எப்போவுமே பொறுப்பான அப்பாவா கண்காணிச்சிட்டு தான் இருப்பார்” என்று கூறியிருக்க,
தந்தையை கண்டு ஆனந்தமடைய வேண்டிய ரேயன் அதிர்ந்தான். அதோடு தந்தையின் அன்பு சிறு வியப்பையும் கொடுத்தது.
பின் மாமனை அணைத்து விடுவித்தவன், வாகினி கையை பற்றி கொண்டு அன்னையின் அறைக்குள் செல்ல, அவனின் சத்தம் கேட்டு அப்பாவியாக எழுந்தவர் “என்னடா நரேன் கண்ணா”
“போதும் அம்மா.. உங்க டிராமா நீங்க நெஞ்சு வலின்னு பொய் சொன்னீங்கன்னு பேசிக்கிட்டத உள்ளே வரும் போது நானும் கேட்டேன்.. என்ன யாழிக்கிட்டயிருந்து பிரிச்சிட்டீங்க தான.. உங்க மேல உயிரையே வச்சிருந்தேன் ஆனா இப்போ இப்படியொரு சுயநலமான உயிரு உங்களுக்கு தேவையானன்னு யோசிக்கிறேன்.. ஃபைன் இனி நீங்க எக்கேடும் கெட்டு போங்க.. என் வாழ்க்கைய நான் பார்த்துக்கிறேன்.. யாரும் குறுக்க வந்தீங்க” என்று விரல் நீட்டி எச்சரித்த ரேயன், மாமன் அர்த்த பார்வை பார்த்து தலையாட்டி விட்டே வாகினியை இழுத்து கொண்டு சென்றான்.
தொடரும்…
– ஆனந்த மீரா 😍😍

