
மறுநாளிருந்து பணியில் தன்னை ஈடுப்படுத்திய தியாழினி மூவருக்குமே புதிதாகவே தெரிந்தால், அதிலும் இரவு தூக்கம் தொலைத்த பெண்ணவள் காலையில் வேலைக்கு செல்வதுமாக இருந்து கொண்டாலும் மற்றவர்கள் பேச்சில் சிறு சிரிப்புடன் கடந்து விடுவாள்.
அதோடு வெளியே காலர் வைத்த சட்டையே அணிவதால் ஆடவன் கட்டிய தாலிக் கூட யாருமரியாத வண்ணம் ஆடைக்குள்ளே மறைந்திருக்கும்.
அவளின் கலையில்லா தோற்றம் கண்டு மூவருக்கும் தான் வருத்தமாக இருக்கும்.
அதோடு அவளை பழைய தியாவாக மாற்றும் பணியை மூவரும் தவறாமல் செய்ய, அதை தியா உணர்ந்தாலும் அவர்களின் சேட்டைக்கும் புன்னகையை பதிலாக கொடுத்து சென்று விடுவாள்.
ஆனால், அவளின் பழைய குணங்களை வெளி கொண்ட வர முடியாமல் அவர்கள் தான் வேதனையடைந்தார்கள்.
என்ன தான் தியாழினி ராத்திரி தூக்கம் தொலைத்து விட்டத்தை வெறிக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தாலும், இப்போதெல்லாம் வழக்கென்று வரும் போது பெண்ணவளின் ஆளுமை முன்பே விட அதிகமாக இருந்தது.
அதை, அவளின் கள்வன் ரசித்தாலும் அவள் இப்படியே இருந்து விடுவாளோ என்ற பயம் கணவன் அவனை மிகவும் வாட்ட, இரவு அவளின் அறைக்கு வெளியே காவல் இருப்பவன் இதை சிந்தித்து சில நாட்கள் தூக்கம் தொலைத்தும் உண்டு.
****
இப்படியே அவள் அன்னை இறந்தோடு ஆடவன் தாலி கட்டியும் ஒரு மாதம் முடிந்திருக்க,
அப்போது தான் பெரிய வழக்கு ஒன்றை முடிந்திருக்க, அதன் சம்பந்தப்பட்டதை மேல் அதிகாரியிடம் ஒப்படைக்க தியாழினி சென்றிருக்க, மற்ற மூவரும் வழக்கு முடித்த களைப்பில் அமர்ந்திருந்தனர்.
பின் ஜோஸப் தான் “மச்சான்.. தியா பேபி இப்படியே இருந்துருவாளாடா.. ரொம்ப கஷ்டமாயிருக்குடா.. என் பழைய தியா பேபி ரொம்ப மிஸ் பண்றேன்டா” என்றவனுக்கு கொஞ்சம் காலமே ஆனாலும் தியாழினி மேல் தனி அன்பு நிலைத்திருக்க, அதன் வெளிப்பாடு இன்று நண்பனிடம் சோகத்தை கொட்டி கொண்டிருந்தான்.
இவனின் நிலையே இப்படியென்றால் அவளின் உயிரானவனின் நிலை எப்படியிருக்கும்,
அவனும் பல முயற்சிகள் செய்து தன்னுடைய பழைய யாழியை பார்க்க தான் போராடுகிறான் பெண்ணவள் பிடி கொடுக்க மாட்டேன் என்றிருக்க, நண்பனின் தோலில் கைப்போட்ட ரேயன் “எனக்கும் அதே வருத்தம் தான்டா.. இதுல அவ வீட்டுல இருக்கேன் தான் பேரு என் மூஞ்ச பாத்து அவ பேசி கூட ரொம்ப நாளாகுதுடா” என்று வருந்தியவன், இன்று இரவு அவளிடம் எப்படியாவது பேசியாக வேண்டுமென்று முடிவெடுத்தான்.
****
இரவு வேலை முடித்து பெண்ணவள் வீட்டிற்கு வந்திருக்க, அவளுக்கு முன் ஆடவன் வந்து காத்திருந்தான்.
தன்னை பார்க்காது செல்ல போனவளின் கரம்பற்றிய ரேயன் “யாழி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”
“ஃப்ரெஷ்யாயிட்டு வரேன்” என்று அவனை பாராது கூறிவிட்டு தன் பணியை முடித்துவிட்டு வெளியே வந்தவள், அவனின் எதிரே அமர்ந்தாள்.
அவள் கேட்க மாட்டாள் என்பதை உணர்ந்து தானே தொடங்கியவன் “சாப்பிட்டியா”
“ம்ம்.. வரும் போது ஹோட்டல்ல சாப்பிட்டேன்” என்றவள் அவனை மட்டும் நிமிர்ந்து பார்க்கவில்லை.
அதில் கடுப்புடன், அவளின் அருகில் அமார்ந்தவன் “ஓ மேடமுக்கு என் முகத்த கூட பாக்க முடியல.. அந்தளவு அருவெறுப்பா போயிட்டேனா” என்றதை கேட்டு வெடுக்கென்று நிமிர்ந்தவள் “உனக்கு இப்போ என்ன ரேயா” என்க,
அவளின் அழைப்பு மாற்றம் உணர்ந்து பெண்ணவளை புருவம் சுருக்கி முறைத்தவன் “ஓ.. ரே உனக்கு இப்போ ரேயாவா மாறிட்டேன்ல.. சரி விடு இப்போ உனக்கு என்ன தான்டி பிரச்சனை.. எதுக்கு இறுக்கமாயிருந்து எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டு இருக்க..
உன்ன நினைச்சி வாகியும் உன் சைட்டும் ரொம்ப வருத்தப்படுறாங்க.. உன்ன பழையப்படி பாக்க மாட்டோமான்னு ஏங்குறாங்க உனக்கு புரியுதா இல்லையடி” என்றும் பெண்ணவள் பதில் அளிக்காமல் இருந்ததில் “இப்படி அமைதியா இருந்து என்னத்தடி சாதிக்க போற.. இறந்தவங்களுக்காக இருக்கிறவங்கள சாகடிக்காத யாழி நிதர்சனத்த புரிஞ்சிக்க டிரை பண்ணுடி.. உன் தம்பிய நினைச்சியா அமெரிக்காவுல இருந்தும் அவன் நினைப்பு முழுக்க நீ தான் இருக்க.. டெய்லி கால் பண்ணி விசாரிக்கான் அவனுக்கான லட்சியத்த அடைய போன இடத்தில கூட நிம்மதியில்லாம நீ சரியாகிட மாட்டியான்னு தான் துடிச்சிட்டு இருக்கான்” என்க,
அவன் கூறியது கேட்டு கண்கள் கலங்க நிமிர்ந்த தியாழினியோ “சாரி ரே” என்க,
அதில் பதறிய ஆடவன் “யாழிமா உன் சாரிக்காக இத சொல்லல.. என் யாழி தொலைச்சிடுவேனோ பயமா இருக்குடி.. கொஞ்ச கொஞ்சமா வெளிய வர டிரை பண்ணுடி.. இதுல இருந்து நீ வெளிய வந்தா தான் உனக்காக இருக்கிறவங்க கூட உன் கண்ணுக்கு தெரிவாங்க” என்று அவனை அணைத்து கொள்ள,
அவளின் அணைப்பு பெண்ணவளுக்கும் தேவைப்பட “ரே டைட் ஹக் பிளீஸ்” என்று ஆடவனின் மார்பில் புதைந்து கண்ணீர் மூலம் தன் பாரத்தை இறக்க, பெண்ணவளின் வேதனையில் தன்னுள் எழும் வலியை அடக்கிவிட்டு தன் அண்ணைப்பை நெருக்கி தன்னவளின் வலியை குறைக்கும் முயற்சியும் செய்தான்.
ஒரு கட்டத்தில் அழ கூட சிரமப்படுவதை உணர்ந்து “யாழி உனக்கு எப்போவும் நான் இருக்கேன்.. இதுவர நீ அழுதது போதும் நாளைலயிருந்து என் பழைய யாழிய பாக்கணும்.. போய் நல்லா தூங்கி எழும்பு” என்று அவளை விளக்க முயல, அவனை விட்டு விலகாத பெண்ணவள் “ரே நான் இப்படி உன் நெஞ்சு மேலயே தூங்குறேனே.. நான் இத்தன நாள் தூங்கினதே இல்ல.. பிளீஸ் ரே” என்க,
மறுநோடி தன்னவளை கையில் ஏந்தி அறைக்குள் நுழைந்த ரேயன், அவளை படுக்கையில் கிடத்திவிட்டு, அவளருகில் படுத்து கொண்டு பெண்ணவளை தன் மார்போடு புதைத்து இறுக்கி கொள்ள, சிறிது நேரம் கண்ணீர் வடித்தவள் அவனின் அணைப்பு தந்த ஆறுதலில் தொலைத்த தூக்கத்தை மீட்டு உறங்கி போனாள்.
இத்தனை நாட்கள் தொலைத்த தூக்கத்தையும் பெண்ணவள் தீர்க்க நினைத்தாளோ என்னவோ மறுநாள் சூரியன் அவன் முகத்தில் பட்டும் கூட எழும்பவில்லை, அவனும் தன்னவளின் தூக்கத்தை கலைக்க மனமில்லாமல் ஜோஸப்பிடம் தாங்கள் இன்று விடுமுறை என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அவளுடன் மறுபடியும் தூங்கினான்.
****
இப்போதைக்கு மேல் அதிகாரியிடம் எந்த ஒரு வழக்கும் இல்லாததால் நண்பனின் செய்தி பார்த்து, அவர்களை தொந்திரவு செய்ய நினைக்காதவனுக்கு இருவரும் எதற்கு விடுமுறை என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் போக,
அதையே சிந்தித்தப்படி இருந்தவனுக்கு அவன் காதல் செய்தி வேறு தெரியாது, இதில் தாலி வேறு கட்டி விட்டான் என்று தெரிந்தால் ஜோஸப்பிற்கு அதிர்ச்சியில் நெஞ்சி வலி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இவன் இவ்வாறு சிந்தனையில் உலன்று கொண்டிருக்க, அப்போது அவன் எதிரே வந்த வாகினி “ஜோ கிளம்பு” என்க,
புரியாமல் முழித்த ஆடவன் “எங்கடி..”
“வா சொல்லுறேன்” என்று அவனை அழைத்து கொண்டு வந்தது என்னவோ ஆடவன் செல்லும் தேவலாயத்திற்கு தான், இங்க எதற்கு என்பது போல் ஜோஸப் கேள்வியாக பார்க்க,
அவனிடம் எதுவும் கூறாமல் உள்ளே சென்று முட்டி போட்டு அமர்ந்து பெண்ணவள் கண்களை மூடி கொள்ள, அவனும் கண்களை மூடி பிராத்தனையில் ஈடுப்பட்டான்.
கண்களை மூடியிருந்த பெண்ணவளின் நினைவுகளோ நேற்று அவளின் தந்தை பேசியதை சிந்தித்தது.
காதலை சொன்னதிலிருந்து இரவு அவனுடனே தன்னுடைய பிளாட்டிற்கு வருபவள், அவன் செய்யும் இதழ் மாயங்களையும் முடித்து அனுப்பிவிட்டு இரவு உணவு சாப்பிட அமர்ந்தவளின் திறன் பேசி அடித்தது, அழைப்பது தந்தை என்று தெரிந்தும் அழைப்பை ஏற்க மனமில்லாமல் வேண்டா வெறுப்பாக எடுத்தவள் அமைதியை கடை பிடிக்க,
மகள் பேச மாட்டாள் என்ற உண்மை புரிந்து தானே ஆரம்பித்தவர் “என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல உன்ன தனியா விட்டா கண்டுக்க மாட்டோம்ன்னு நினைச்சி எவன் கூடவோ ஊர் மேஞ்சிட்டு வர.. இது நல்லது இல்ல சொல்லிட்டேன் உனக்கு ரேயன் கூட ஏற்கனவே நிச்சயம் ஆயிடுச்சு அத மனசுல வச்சிக்க.. இனி வெளிய உன்ன யாரு கூடவும் பாத்தேன் அடுத்த நாள் பொண்ணுன்னு கூட பாக்காம கொன்னு புதைச்சிடுவேன்” என்று கத்தி விட்டு வைத்திருக்க,
அதிலே ஜோஸப்புடன் தான் வெளியே சென்றதை தந்தை கண்டு கொண்டார் என்பதை பாவை உணர்ந்து கொள்ள, பெருமூச்சு விட்டு நினைவுகளை ஒதுக்கி விட்டு கண்களை மெல்ல திறந்தவள், தன் முடிவை செயலாற்ற தொடங்கி,
சிறு நகை பெட்டியை அவனிடம் கொடுத்து கையை நீட்டிருந்தாள்.
அதிலிருந்த இரு மோதிரத்தை எடுத்து பெண்ணவளையும் யோசனையாக பார்த்தவனின் அர்த்தம் புரிந்து “பிளீஸ் ஜோ.. எதுவுமே என்கிட்ட கேட்காத என்ன உண்மையா லவ் பண்ணினா இந்த மோதிரத்த போட்டு விடு” என்க,
அதற்கு மேல் எதுவும் கேட்காமல் தன்னவளின் கையில் மோதிரம் அணிவிக்க, பெண்ணவளும் அவனுக்கான மோதிரத்தை அணிவித்தாள்.
பின் அவனை அங்கிருந்து அழைத்து கொண்டு கோவிலுக்கு வந்தவள், தான் வாங்கி வைத்திருந்த தாலி கயிறை அவனிடம் கொடுத்து “கட்டு” என்க, அவளின் அதிரடியில் திகைத்த ஜோஸப் “வானி ஏன்டி அவசரப்படுற.. அப்படி என்ன நடந்துச்சு”
“எனக்கு ஏற்கனவே நிச்சயம் ஆயிடுச்சு உனக்கே தெரியும்.. அதோட என் அப்பாக்கு ஜாதி வெறி இதுல வேறு மதத்த சேந்தவன விரும்புறேன் தெரிஞ்சா வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க.. அதுக்காக என் காதல விட்டு கொடுக்க தயாரா இல்ல.. நீ தாலிய கட்டு அதுக்கு அப்புறம் என்ன பிராப்ளம் வந்தாலும் உன் பொண்டாட்டின்னு உரிமைல தைரியமா சமாளிப்பேன்..” என்றவளின் கண்கள் அவனுடன் இணைய முடியாமல் போய் விடுமோ என்ற பயத்தில் கலங்கியிருக்க,
அவளின் மனமோட்டம் புரிந்து கொண்டு அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டவன், பெண்ணவள் கண்ணீரை துடைத்து “உன்ன யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்டி.. தைரியமாயிரு” என்று அவளின் நெற்றியில் முத்திரை பதித்தான்.
****
மதியத்திற்கு மேல் கண் விழித்த தியாழினி இருக்கும் இடம் உணர்ந்து மெதுவாக எழும்பி கடிகாரத்தை பார்த்து தலையில் அடித்து கொள்ள,
அவள் அசையவுமே விழித்த ரேயன் “நீ நல்லா தூங்கின எழுப்ப தோணல.. சோ ஜோஸப்புக்கு லீவ்ன்னு மெசேஜ் போட்டுட்டேன்” என்று நிறுத்தியவன் வயிற்றை தடவி “பசிக்குதுடி” என்க, “ஃப்ரெஷ் ஆயிட்டு சமைச்சிருவேன்” என்று குளியல் அறைக்குள் புகுந்தவளுக்கு மொத்த மனபாரமும் குறைந்திருந்தது.
அதன் பின் இருவரும் சாப்பிட்டு முடிய, பெண்ணவள் அறைக்குள் அடைந்து விட, இவன் வழக்கம் போல் பெண்ணவளுக்காக வெளியே காவல் காத்தான்.
****
இரவு வழக்கம் போல் வீட்டிற்கு வந்திருந்தவனை பெண்ணவள் வீட்டிற்கு அழைக்க, ஏனோ முன்பு போல் தன் உணர்வுகளை அடக்க முடியாது என்று உணர்ந்த ஜோஸப் நழுவ எத்தனித்தான்.
வாகினி தான் அவனின் சட்டையை பற்றி இழுத்து சென்று அவனை ஹாலில் விட்டு விட்டு தன்னை சுத்தப்படுத்தி கொண்டு இரவு உடையில் வெளியே வந்திருந்தாள்.
தான் கட்டிய தாலி அவனை பார்த்து பல் இளிக்க, அவள் நெருங்கி அமரவும் ‘சோதிக்கிறா மை லார்ட்’ என்று நொந்து அமர்ந்திருக்க,
கணவன் என்ற உரிமையில் அவனின் மடியில் அமர்ந்த வாகினியோ “நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு ஜோ.. இன்னைக்கு முறைப்படி நமக்கு ஃபர்ஸ்ட் நைட்” என்று கிசுகிசுக்க,
அதில் வெடித்து எழும் உணர்வுகளை கட்டுப்படுத்தியவன் “வானி விளையாடத தள்ளி போ” என்று அவளை தள்ள முயற்சிக்க,
அவனின் கழுத்தை இறுக்க கட்டி கொண்டு ஆடவனின் இதழில் இதழ் பதித்து விலகியவள் “நான் வேண்டாமா உனக்கு”
“வானி சத்தியமா என்னால முடியலடி.. சீரியஸா தான் சொல்லுறியா உனக்கு ஓகே வா” என்று கேட்டவனின் கண்களில் மோகம் வழிய,
அதில் தலையாட்டி வெட்கத்தில் பெண்ணவள் குனிந்து கொண்டதும் தான் தாமதம் அவளை அள்ளிக்கொண்டு மஞ்சத்திற்கு சென்றவன், தன்னவளுக்காக அடக்கி வைத்த உணர்களுக்கு விடுதலை அளித்து, அதனை அவளிடம் காட்ட தொடங்கினான்.
****
மறுநாள் நால்வரும் பணிக்கு வந்திருக்க, இரு ஜோடிகளின் மனநிலையும் வெவ்வேறாக இருந்தது.
நேற்றைய இரவு நினைவில் ஆடவனை கண்டு வாகினி வெட்கப்புன்னகை பூக்க, ஜோஸப்போ அவளை குறு குறுவென்று பார்த்தே சிவக்க வைத்தான்.
அதோடு யாழினி போலவே வாகினியும் தன்னவன் கட்டிய தாலியை ரகசியமாக ஆடையுடன் மறைத்திருந்தாள்.
அப்போது ரேயனுடன் வந்து சேர்ந்த தியாழினி, வாகினியை பார்வையால் விழுங்கி கொண்டிருப்பதை கண்டு அவனின் முதுகில் அடிப்போட்டவள் “என்ன மிஸ்டர் சைட் கொஞ்ச நாள்.. நான் ஃபார்ம்ல இல்லன்னு வேற ஃபிகர தத்தெடுத்துட்டீங்க போல” என்க,
பழைய தியாழினியாக, அவள் மாறியதில் புன்னகைத்த ஜோஸப் “என்ன பண்றது மிஸ் சைட்.. நீங்களும் உங்க சைட்ட தற்காலிகமா கண்டுக்காம போனதுல நானும் தற்காலிகமா வேறொரு சைட்டுக்கு அப்பாயின்ட்மென்ட் போட வேண்டியதா போச்சு.. சோ திஸ் இஸ் நாட் மை ஃபால்ட் தியா பேபி” என்றவனின் பார்வை வாகினியை சீண்ட,
தியா நுழையவுமே வாகினி முகத்தை விறப்பாக மாற்றி கொண்டாள்.
தான் கூறியதை கேட்டு போலியாக முறைப்பவளை கண்டு “உண்மைய சொல்லனும்னா நீ கொஞ்சம் அட்டு பிகர் தான் தியா பேபி.. சோ உன்ன லிஸ்ட்ல இருந்து முழுசா டிஸ்மிஸ் பண்ண யோசிக்கிறேன்” என்றதும் தாமதம் அங்கிருந்த பூ ஜாடியை எடுத்தவள் “யாருடா அட்டு ஃபிகருன்னு சொன்ன” என்று அவனை அடிக்க துரத்த, ஆடவனோ அவளின் பிடியில் சிக்காமல் குரங்காட்டம் ஆடி கொண்டிருக்க,
அவர்களின் சேட்டைகளை பார்த்து சிரித்த மற்ற இருவருக்கும் பெண்ணவளை பழையப்படி கண்டதில் நிம்மதி எழுந்தது.
***
ஏனோ அவர்கள் இருவருடன் பழையப்படி பேசினாலும் ரேயனிடம் பேச பெண்ணவள் மனது இடம் கொடுக்கவில்லை, ஒருவேளை தாலி கட்டியதால் வந்த தயக்கமாக கூட இருக்கலாம்.
அவளின் ஒதுக்கம் புரிந்தும் ஆடவனுக்கு வலித்தாலும் அவளை விட்டு பிடிக்க நினைத்து அமைதி காத்து ஒரு வாரம் கடந்திருக்க,
வழக்கம் போல் வேலை முடித்து இரவு இருவரும் வீட்டிற்கு வந்திருக்க, இன்று ஏனோ தலைவலியாக இருந்ததில் பெண்ணவள் காஃபி குடிக்க எண்ணி சமையல் அறைக்குள் நுழைந்தவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை அவனுக்கும் சேர்த்தே போட்டாள்.
இருவருக்குமான கோப்பையில் ஊற்றிவிட்டு கையில் எடுத்து கொண்டவளுக்கு அவனிடம் கொடுக்க தயக்கம் எழ, அவளின் மனமோ ‘இத போடுறத முன்னாடி யோசிச்சி இருக்கணும்’ என்று அர்ச்சிக்க,
அதை கண்டு கொள்ளாமல் சோஃபாவில் கண் மூடி சாய்ந்திருந்தவனின் அருகில் வந்து குரலை செருமிய தியா “ரே..” என்று மென்மையாக அழைத்தாள்.
தன்னவளின் சத்தம் கேட்டு கண் விழித்தவன் அவளிடமிருந்து கோப்பையை வாங்கி அருகில் அமரும்படி கண்ணை காட்ட, பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டு அமர்ந்து தனக்கான காபியை அருந்தினாள்.
தொடரும்..
– ஆனந்த மீரா 😍😍

