
ஜோஸப் வாகினியின் காதல் அமோகமாக செல்ல, ரேயனோ தன்னவளை சீண்டி கொண்டு தன் காதலை பெண்ணவளை உணர வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.
அப்போது தான் அன்னை பிறந்தநாளுக்காக ரேயனுடன் மதுரை வந்த யாழினி அன்னையின் நிலையை கண்டு உடைந்து அழுது விட, அவளின் நிலையில் துடித்த அவளின் தம்பி மற்றும் ரேயன் தான் பெண்ணவளை கை தாங்கலாக அழைத்து சென்று அவளின் அன்னையின் உடல் அருகே அமர வைத்தார்கள்.
உயிரற்ற நிலையில் படுத்திருந்த அன்னையை அணைத்து கதறிய யாழினி “அன்னம் என்ன பாரு.. அன்னம் உன் யாழினி வந்திருக்கேன் கண்ண திறந்து என்ன பாரு அன்னம்.. என்ன அம்போன்னு விட்டுட்டு போயிடாத அன்னம்.. உன்னவிட்டா என்ன தாங்கி பிடிக்க யாரு இருப்பா.. என்கிட்ட வந்துரு அன்னம்” என்று கதற,
பெண்ணவளை அணைக்க பரபரத்த கைகளை சுற்றி நின்றிருந்தவர்களை கருத்தில் கொண்டு தன்னவளை சமாதானம் படுத்த முடியாத நிலையில் அவள் வேதனையில் தானும் வேதனையுடன் நின்றவன்,
வாகியிடம் கண்ணை காட்டி விட்டு ஜோஸப்புடன் இணைந்து அடுத்து செய்ய வேண்டிய காரியங்களை செய்து முடித்தான்.
பின் உடலை எடுக்க வேண்டிய நேரமும் வர, அங்கிருந்த சில ஆண்கள் உடலை தூக்க, ரேயனும் ஜோஸப்பும் கூட உடன் இணைந்து கொள்ள, கூடவே ஆர்யனும் உயிரற்று பின்னேயே சென்றான்.
அதிலும் பெண்ணவளோ அன்னையின் உடலை விடாது கதற, அவளை வாகி தான் கடினப்பட்டு கட்டுப்படுத்திருக்க, யாழினியோ தன் அன்னையிடமே செல்ல துடித்து “அம்மா அம்மா..” என்று கதறி கொண்டிருந்தாள்.
****
யாழினி அன்னைக்கு பெரிதாக சொந்தம் துணை இல்லாததால், அவரின் வீட்டை சுற்றி குடியிருந்தவர்கள் மட்டுமே இறப்பிற்கு வந்திருக்க, உடல் எடுக்கப்பட்டதுமே அனைவரும் களைய தொடங்கி விட,
அன்னலட்சுமி சமையல் பணி செய்த உணவகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இவர்களுக்கு நெருங்கிய பழக்கம் என்பதால் பெண்ணவளுக்கு துணையாக அவர்கள் இருந்திருந்தார்கள்.
பின் சமைக்க வேண்டியதால் வாகினியிடம் கூறிவிட்டு கிளம்பியவர்கள் அவர்களுக்கான உணவையும் செய்து கொடுத்திருந்தார்.
உடலை எரித்துவிட்டு ஆற்றில் குளித்து வந்த ஆண்கள் அவரவர் வீட்டிற்கு சென்று விட,
ஜோஸப் ஆர்யனுடன் உள்ளே நுழைந்த ரேயனோ அன்னையின் புகைப்படத்தையே வெறித்திருந்தவளை பார்த்தப்படி மற்றவர்களை ஓய்வெடுக்க கூறிவிட்டு பெண்ணவள் எதிரே அங்கிருந்த தூணில் சாய்ந்து அமர்ந்தவன், அப்படியே உறங்கியும் விட்டான்.
மறுநாள் காலையில் கண் விழித்தவன், இன்னும் கண்களை மூடாது அதே நிலையில் இருந்தவளை கண்டு மனம் பிசைய, அப்போது மற்றவர்களை எழுப்ப சென்றவன் ஆர்யன் எதையோ கிழிக்க போனதை கண்டு “டேய் ஆர்யா.. என்ன பண்ற” என்க,
அவனின் வரவில் அதிர்ந்த ஆர்யன், கையில் உள்ளதை பின்னே மறைத்து கொண்டான்.
அவனை கேள்வியாக பார்த்த ரேயன் “என்னடா மறைக்குற” என்று கையிலிருந்ததை பறித்து பார்த்தவனின் முகம் சுருங்க “பைத்தியமா ஆர்யா நீ.. எவ்வளவு முக்கியமானது இத போய் கிழிக்க பாக்குற”
“இந்த நேரத்துல என்னால போக முடியாது மாம்ஸ்..” என்றதை கேட்டு கோவத்தில் அவனை அடிக்க கை ஓங்கிய ரேயன்,
தன்னை கட்டுப்படுத்தி கொண்டு “ஆர்யா ரொம்ப தப்புடா.. இல்லாதவங்களுக்காக உன் வருங்காலத்த அழிக்க நினைக்கிறது தப்பு.. உன் அம்மா இழப்பு உனக்கு பெருசு தான் இல்லன்னு சொல்லவே இல்ல.. ஆனா உன் அக்கா நினைச்சி பாத்தியா.. நீ இப்படியொரு ஆஃபர தூக்கி போட்டிருக்கன்னு தெரிஞ்சா அவளே உன் கன்னத்த பழுக்க வச்சிடுவா”
“மாம்ஸ் புரியாம பேசாதீங்க.. இன்னைக்கே அமெரிக்கா நான் போகனும்.. போனா காண்ட்ராக்ட் முடிச்சி மூணு வருஷம் கழிச்சி தான் வருவேன்.. என்னால தியாவ இப்படி விட்டுட்டு போக முடியாது புரிஞ்சிக்கங்க இது இல்லன்னா என்ன எம்பிஏ படிச்சிருக்கேன் இங்கயிருந்தே எதாவது பிசினஸ் ஸ்டார்ட் பண்றேன்” என்றதை கேட்டு பற்களை கடித்த ரேயன் “உன் அம்மாக்கு இந்த விஷயம் தெரியும் தான” என்றதில் முகம் வாடிய ஆர்யன்
“ம்ம் தெரியும்.. அந்த விஷயத்த சொல்லிட்டு அம்மாவ கூட்டிட்டு ஷாப்பிங் போயிட்டு எனக்கு வேலையிருக்குன்னு அவங்கள மட்டும் கேப் பூக் பண்ணி அனுப்பி வைக்க.. அதுக்கு அப்புறம் தான் அம்மாக்கு ஆக்சிடென்ட்” என்றவனுக்கு வார்த்தைகள் தண்டியடிக்க, மண்டியிட்டு அழுது விட்டான்.
அவனை தோலோடு அணைத்த ரேயன் “இங்க பாரு ஆர்யா.. உனக்கு பெரிய டிராயிங் ஆர்ட்டிஸ்ட்டாகுறது தான் கனவு அந்த கனவ நீ இப்படி தூக்கி எரிஞ்சா இறந்தும் உங்க அம்மா ஆத்மா எப்படி சாந்தியடையும்..” என்று குனிந்திருந்த அவனின் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தவன்
“உனக்கே தெரியும் அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னையும் தியாவையும் வளத்தாங்கன்னு அவங்களுக்கு சந்தோசமே நீங்க நல்லா பெரியாளகணும் தான்.. உன் லட்சியத்த அவங்க கடைசி ஆசையா நினைச்சி.. இன்னைக்கே அமெரிக்கா கிளம்புற” என்றதை கேட்டு அர்த்த பார்வை வீசியவனிடம்
“உன் அக்கா பத்தி கவலைப்படாத அவளுக்கு நான் இருக்கேன்.. சீக்கிரமே அவள இந்த இழப்புலிருந்து வெளிய கொண்டு வருறது என்னோட பொறுப்பு” என்று அவன் கண்களில் வந்த கண்ணீரை துடைத்த ரேயன் “அமெரிக்கா போகுறதுக்கு உன்னோட திங்ஸ் பேக் பண்ணலாம்” என்று அவனின் உடமைகளை எடுத்து வைக்க உதவி செய்தான்.
அப்போது தான் இதய வடிவத்தில் இருந்த வாகினியின் செயின் இதயத்தை திறக்க, அதிலிருந்த புகைப்படத்தை கண்டு அதிர்ந்த ரேயனுக்கு, சிறு வயதில் வாகினி துளைத்ததாக கூறியது நினைவில் வர,
ஆர்யனிடம் காட்டி “டேய் மாப்பிளை இது யாரோட செயின் எதுக்கு நீ வச்சிருக்க” என்க,
அவனிடமிருந்து வாங்கி பார்த்தவனின் பார்வை அதிலிருந்த தன் தந்தையை கண்டதில் இதழ்கள் விரகத்தியாக விரிய,
தன்னை கேள்வியாக பார்க்கும் ரேயனிடம் “இந்த ஆளு என் அப்பன் பக்கத்துல இருக்கிறது ரெண்டாவது பொண்டாட்டி இவங்களுக்கு பிறந்த பொண்ணோடது தான் இது” என்றவன் அதை தன்னுடைய உடமையோடு பத்திரப்படுத்தி வைக்க,
அப்போது உண்மைகள் புரிந்த ரேயனுக்கு, தன் மாமன் தான் இவர்களின் தந்தை என்றும் வாகினி இவர்கள் சகோதரி என்றதில் மேலும் அதிர்ந்தவன் “இது எப்படி உன்கிட்ட கிடைச்சது”
“நான் பீஃப்த் படிக்கும் போது ஒன்ஸ் இங்க கோவில் திருவிழா வந்தப்போ அந்த பொண்ணு கழுத்துல இருந்த செயின் தவறி விழுந்துருச்சு.. அது என்னோட கண்ணுல பட்டுச்சு அவ முகம் எனக்கு தெரியாது கீழ கிடந்தத எடுத்துட்டு நிமிறதுக்குள்ள அவங்க எங்க போனாங்கன்னு தெரியல.. அப்புறம் அத திறந்து பார்க்கவும் தான் தெரிஞ்சிது அந்த ஆளுக்கு இன்னொரு குடும்பம் இருக்குன்னு..
ஏனோ கோபத்துல அத தூக்கி எரிய தான் நினைச்சேன் முடியல.. என் அப்பனுக்கு அவ பொறந்ததா இல்ல என் கூட பிறந்த ரத்த சொந்தம்ங்குறதா காரணமா கூட தெரியல.. அதுக்கு அப்புறம் இத பாக்கும் போதெல்லாம் அவள பாக்கணும் எண்ணம் வரும்.. எப்படியாவது அவள பாத்துர மாட்டோமான்னு என்னோட ரெண்டாவது அக்கா நினைவா வச்சிருக்கேன்” என்றவனின கண்கள் யாரென்று தெரியாத தமக்கையை நினைத்து கலங்கியது.
முதலில் அதிர்ச்சியாக இருந்த ரேயனின் முகம் ஆர்யன் பேச்சில் “இப்படி எல்லாம் கூடவா அன்பு வைக்க இயலும்.. இதை தான்.. தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பார்களோ” என்று வியப்பாக, அவனை பார்த்திருந்தவன் “இந்த விஷயம் யாழிக்கு தெரியுமா”
“இல்ல மாம்ஸ்.. நான் யார்டயும் இந்த விஷயத்த சொல்லல” என்றதை கேட்டு வாகினி இவனின் இன்னொரு தமக்கை என்று தெரிந்தும், தியாழினி தனக்கு சொந்தமாகும் வரை தனக்குள் ரகசியமாகவே ஒளித்து வைத்துக்கொள்ள எண்ணியிருந்தான்.
பின் தியாழினிடம் அவளின் தம்பிக்கு வந்திருக்கும் லட்சியத்தின் சலுகை பற்றி சொல்லி, அதனை மறுத்தது அவனை தான் சரி செய்ததென்று பெண்ணவளுக்கு கூறியிருக்க, அவன் கூற வருவது புரிந்து எழுந்தவள்
தன்னை சரி செய்தது போல் காட்டிக் கொண்டு தம்பியை தேடி சென்று பேச, பதிலுக்கு தமக்கைக்கு ஆயிரம் ஆறுதல் சொல்லிவிட்டே அங்கிருந்து விடை பெற்றிருந்தான் ஆர்யன்.
பெண்ணவளும் கைக்காட்டி வீட்டிலிருந்தே வழியனுப்பி வைத்தாள்.
அவள் வீட்டியில் இருப்பதால் ஆர்யனை விமான நிலையத்திற்கு அழைத்து செல்லும் பணியை நண்பர்களிடம் கொடுத்திருந்தான் ரேயன்.
அதை ஏற்று வழியனுப்பி வந்தவர்களுக்கு அதிகாரிகளிடமிருந்து அழைப்பு வந்ததில் தியாழினி இந்நிலையில் விட்டு செல்ல எண்ணமில்லாமல் அவர்கள் இருவரும் மறுப்பு தெரிவிக்க, பின் ரேயன் தான் அவர்களையும் பேசி அனுப்பி வைத்திருந்தான்.
****
இப்போது இருவரும் மட்டும் தனித்திருக்க, அன்றைய இரவை பெண்ணவள் தனியறையில் கழிக்க, ஆடவனும் அவளுக்கு காவலாக வெளியே இருந்தான்.
மறுநாள் மதியம் வரை பொறுத்திருந்தவன் பெண்ணவள் வெளியே வராததில் தாழியிட்டிருந்த கதவை ரெண்டே தள்ளலில் திறந்தவன்,
ஜன்னலை வெறித்தப்படி உணவின்றி தூக்கம் துளைத்து முட்டு கட்டியப்படி அமர்ந்திருந்தவளின் அருகில் அமர்ந்து,
அவளின் கைக்கு அழுத்தம் கொடுத்த ரேயன் “யாழி இன்னும் எத்தன நாளைக்கு இப்படி இருக்க போற.. அங்க நிறைய கேஸ் பெண்டிங் கிடக்கு சார் சுடு தண்ணி ஊத்தின போல கத்திட்டு இருக்கார்.. எப்போ சென்னை கிளம்பலாம்” என்றும் அவள் அமைதியை பதிலாக அளிக்க,
“உன்ன தான கேக்குறேன்” என்றதை கேட்டு நிமிர்ந்து அவனை பார்த்த பாவை “எனக்குன்னு இருந்த ஒரு உறவும் போயிடுச்சு ரே.. இனி நான் நாட்ட காப்பாத்தி யாருக்கு பெருமை சேக்க போறேன்.. என்ன இப்படி விட்டுட்டு உன் வேலைய பாரு ரே” என்று பதில் முடிந்தது என்று பெண்ணவள் பார்வையை பழைய இடத்திற்கு மாற்ற,
அவளை அழுத்தமாக பார்த்த ரேயன் தன் உறவை நிலை நாட்ட எண்ணி,
தன் பேண்ட் பாக்கட்டிலிருந்த தாலியை எடுத்து பெண்ணவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு “இதுவரை உனக்காக இருந்த உறவ விட்டுட்டு இனி உனக்கு மட்டுமே இருக்க போற உறவ நினைச்சி பாரு.. அந்த உறவ நினைவுப்படுத்த தான் உன் கழுத்துல தாலி கட்டிருக்கேன் இத பாக்கும் போதெல்லாம் உனக்குன்னு துடிக்கிற என் நினைவு மட்டும் தான் வரணும்..” என்று அவளின் உச்சந்தலையில் கணவன் பதவியிக்கான முதல் முத்திரையை பதித்தவன்
“லவ் யூ யாழி.. உன் அப்பன போல இல்லாம எப்போவுமே என் யாழியோட ரேவா உன்ன நிழலாயிருந்து பாத்துப்பேன்” என்று எந்த உறவை நிலை நாட்ட வாக்கு கொடுத்தானோ அந்த வாயினால் தானே அந்த உறவை இல்லையென்று கூறி பெண்ணவளின் மனதை ரணப்படுத்தி தூக்கி எரிய போகிறோம் என்று அறியாமல் போனது ஆடவனின் பிழையோ?
ஆடவன் தாலியை கழுத்தில் கொண்டு வந்ததை உணர்ந்து அவனை தடுக்க கூட வழுவற்று அமர்ந்திருந்த யாழினிக்கு, அவனின் பேச்சு மனதிற்கு ஆறுதல் அளித்தாலும் அதனை ஏற்க மறுத்து அப்படியே இருந்தவளை அவனின் முத்தம் பெண்ணவளை அசைக்க,
எந்த உணர்வையும் வெளியே காட்டாமல் தன்னையே பார்த்திருந்தவளிடம் “செமயா பசிக்குதுடி.. சாப்பிடலாமா” என்று தான் வாங்கி வந்த உணவு பொட்டலத்தை பிரித்து தன்னவளின் வாயருகே கொண்டு சென்றான்.
ரெண்டு நாட்கள் எதற்காக இருக்கணும் நினைத்தவளுக்கு, அப்போது தான் அவனும் இரண்டு நாட்கள் சாப்பிடவில்லை என்ற உண்மை உரைக்க, அவனுக்காகவே மறுக்காமல் வாயை திறந்து உணவை வாங்கி கொண்டாள்.
ரெண்டு துண்டு சாப்பிட்டவள் “நீயும் சாப்பிடு” என்று எங்கோ பார்த்து கொண்டு சொல்ல, அதில் புன்னகைத்த ஆடவன் தானும் சாப்பிடப்படியே அவளுக்கும் ஊட்டி விட்டான்.
பின் தன் கையை கழுவி, அவளின் வாயை துடைத்துவிட்டவன் “இங்க பாரு யாழி உன்ன போல தான் உன் தம்பியும் கிறுக்குதனம் பண்ண இருந்தான்.. நேத்து தான் அவனுக்கு தண்ணி தெளிச்சி புத்திய தெளிய வச்சி அனுப்பினேன் நீயும் அதை தப்ப பண்ணாத.. நாளைக்கு சென்னை கிளம்புறோம்” என்று அறையை விட்டு வெளியேறி விட்டான்.
பாவம் பெண்ணவள் தான் விட்டு சென்ற அன்னையின் நினைவுகளியிருந்து வெளியே வர முடியாமலும் அவன் தாலி கட்டியதை அறுத்து எரிய வலுயில்லாமலும், ஏற்க முடியாமல் போராட்டத்தில் அள்ளாடி கொண்டிருந்தாள்.
மறுநாள் கூறியது போல் பெண்ணவளை சென்னைக்கு அள்ளி கொண்டு வந்தவன், அவளிருந்த அப்பார்ட்மெண்ட்டில் தானும் பெண்ணுக்கு துணையாக தங்கி கொண்டான்.
பயண களைப்பில் ஓய்வெடுத்து நாளைலியிருந்து பணியை பார்க்கலாம் என்று அவன் கட்டளையிட்டிருக்க, அதனை செயல்ப்படுத்த எண்ணி படுக்கையில் விழுந்தவளுக்கு தான் தூக்கம் தொலைந்து போய் விட, விடியும் வரை விட்டத்தை பார்த்தே இரவை கழித்து கொண்டாள்.
தொடரும்…
– ஆனந்த மீரா 😍😍

