Loading

தன் நண்பனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருமாறு கூறிவிட்டு எதிரே இருப்பவனிடம் விஷயத்தை கூறினால் கெத்து என்னாவது என்று எண்ணி நண்பன் வரும்வரை அமைதியாக கோப்புவை புரட்டி கொண்டிருந்தாள்.

 

நண்பியிடம் கூறியது போல் பதினைந்து நிமிடத்தில் அலுவலகம் வந்து சேர்ந்தவனோ, ரேயனை ஒரு முறை பார்த்துவிட்டு நண்பியிடம் “சொல்லு மச்சி.. இந்த தடவ என்ன கேஸ்”

 

“தெரியலடா.. சார் கால் பண்ணி கேஸ் பத்தி பேசணும்ன்னு வர சொன்னார்.. நான் முன்னால போறேன்.. நீ அவர கூட்டிட்டு வந்து சேரு” என்று கூறி செல்ல,

 

இவ்வளவு நேரம் அவர்கள் இருவரும் பேசுவதை கேட்டவாறே திறன்பேசியில் கவனத்தை செலுத்திய ரேயனோ செல்பவளை கண்டு “ஒரு நிமிஷம் மிஸ் தியாழினி” என்று அழைக்க,

 

நடையை நிறுத்தியவளோ, அவன் புறம் திரும்பி கைகளை மார்புக்கு குறுக்கே கட்டி நின்று “சொல்லு” என்பது போல் பார்த்து கொண்டிருந்தாள்.

 

அவள் அருகே சென்ற ரேயன் “இப்போ ஆபீஸ்ல நம்மள தவிர்த்து யாருமே இல்ல சோ மூணு பேரு போயிட்டா.. ஆபீஸ்ல யாரு இருக்கிறது.. இங்க இருக்கிற முக்கியமான பைல்ஸ் எல்லாம் வாட்ச் மேன நம்பி விட்டுட்டு போகுறது.. எனக்கு சரியா படல.. சாய்ஸ் இஸ் யூவர்ஸ்” என்று கூறி இருவரையும் பார்க்க,

 

அவன் கூறியது சரியென்று தான் தோன்றியது.

 

எப்போதும் அலுவலகத்தில் யாராவது இருந்து கொண்டே தான் இருப்பார்கள் ஆனால் இன்று ரேயன் தன்னிடம் பேசியதால் உண்டான கடுப்பிலிருந்தவள் இக்கோணத்தில் யோசிக்க தவறிவிட்டாலும், அவனிடம் சரியென்று ஒத்து கொள்வதற்கு அவளின் கெத்து விடவில்லை ஆதலால் அமைதியாகவே எதிர் நிற்பவனை ‘இப்போ அதுக்கு என்ன பண்ணனுங்குற’ என்று ஏறிட

 

தன் நண்பியின் மனமறிந்த ருத்ரன்  “அவர் சொல்லுறதும் சரி தான் மச்சி.. நிறைய கேஸ் பைல்ஸ் இருக்கு கண்டிப்பா ஒருத்தர் இருந்தே ஆகனும்.. சோ நான் இருக்கேன்.. நீங்க ரெண்டு பேரு போங்க”

 

“நோ.. நம்ம போகலாம் அவர் இருப்பார்” என்று கூற,

 

ரேயனோ “நான் என்ன செய்யனும்ன்னு நீ சொல்ல கூடாது.. சோ நானும் வருவேன்.. உனக்கு என்கூட வர பிடிக்கலன்னா நீ இரு.. நானும் ருத்ரனும் போறோம்”

 

“ஹலோ மிஸ்டர்.. நீங்க வரணும்ன்னா தாராளமா வாங்க.. அதவிட்டுட்டு எனக்கு ஆர்டர் போடுற வேலையெல்லாம் வச்சிக்காதீங்க” என்று கூறி ருத்ரன் புறம் திரும்பியவளோ “டேய் நீ பாத்துக்க நாங்க போயிட்டு வருறோம்” கூறி முன்னே செல்பவளின் கரம் பற்றிய ரேயனோ “மேடம்.. அதுக்குள்ள கிளம்பிட்டா எப்படி.. இன்னும் கேமே முடியலயே”

 

“மிஸ்டர் கைய விடுங்க.. விடுங்கன்னு சொல்லுறேன்ல” என்று கூறி அவனிடமிருந்து தன் கரத்தை விடுவிக்க முயற்சித்து தோற்று போனவளோ “டேய்.. கைய விடுடா.. பொறுக்கி கைய விடு.. ருத்ரா.. அவன விட சொல்லு” என்று கூற,

 

ருத்ரனும் அவன் பங்கிற்கு “ரேயன் கைய விடுங்க பிளீஸ்.. தேவையில்லமா பிராப்ளம் வேண்டாம்”

 

“நான் தேவையில்லாம பிராப்ளம் பண்றேனா.. உன் ப்ரெண்ட் பண்ணினது மட்டும் சரியா.. மார்னிங் ப்ரெண்ட்டிலியா சாக்லேட் கொடுத்தா அவ என்ன இன்சல்ட் பண்றா”

 

“தெரியாமா பண்ணிட்டா.. அவளுக்கு பதில் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.. பெருசு படுத்தாம அப்படியே விட்ருலாமே”

 

“பதிலடி கொடுக்கலன்னா.. நான் ரேயனே இல்ல”

 

“புரியல..”

 

“வெயிட் அண்ட் வாட்ச் மச்சி” என்று கூறி அவளின் புறம் திரும்பியவனோ “இங்க பாரு.. நீ பண்ணினத பெருசு படுத்தாம மன்னிச்சி விடணும்ன்னா சாரி சொல்லி எனக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து ப்ரெண்ட் ஆயிடு.. இல்லன்னா உனக்கு தான் கஷ்டம்”

 

“இங்க பாரு டா.. இந்த மிரட்டுற வேலையெல்லாம் என்கிட்ட வச்சிக்காத.. உன் லிமிட் எதுவோ அதுக்குள்ளயே இருந்துக்கோ.. இல்லன்னா நடக்கிறதே வேற” என்று கூறி முயற்சி செய்து அவனின் பிடியிலிருந்த தன் கையை விடுவிக்க,

 

அவனோ ‘நீ நான் சொன்னத செய்யாம உன் விட மாட்டேன்’ என்றவாறு தன்னிடமிருந்து விடுவித்த, அவள் கையை மறுபடியும் இழுத்து இறுக்கி பிடிக்க,

 

அதில் கடுப்பானவள் மறு கை கொண்டு, அவன் கன்னத்தை பதம் பார்த்தாள்.

 

அவள் அடித்ததில் ஆத்திரமடைந்தவனோ, அவள் கழுத்தை பிடித்து சுவற்றில் சாய்க்க, இவன் செயலில் பதறிய ருத்ரனோ “ரேயன்.. என்ன பண்றீங்க விடுங்க..” என்று தன் தோழியின் கழுத்தை விடுவிக்க முயற்சி செய்ய,

 

தன் மேலிருந்த அவன் கரத்தை உதறி விட்டு “அவ என்ன அடிக்கும் போது வெடிக்க தான பாத்த… இப்போவும் வெடிக்க மட்டும் பாரு.. மீறி எதாவது பண்ணின சங்க நெரிச்சிடுவேன்” என்று கூறி அவனின் பிடியை இறுக்க,

 

அவளோ ‘லொக் லொக்’ என்று இருமியதில், ருத்ரனோ வெறும் பார்வையாளராக நடப்பதை வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

 

அவளை தர தரவென்று குப்பை தொட்டிக்கு அருகே இழுத்து வந்தவனோ  “நான் உன்ன விட சீனியர் ஆபீஸர்டி.. அந்த மரியாதை இல்லாம என்மேலயே கை வச்சிட்டில அதுக்கு தண்டனையா இதோ இந்த குப்பை தொட்டியில இருக்கிற சாக்லேட்ட எடுத்து.. என் கண்ணு முன்னாடியே சாப்பிடுற.. இல்லன்னு வை நீ பண்ணின எல்லாத்தையும் சொல்ல வேண்டிய இடத்தில சொல்லுவேன்” என்று கூறியவன் ‘எல்லாத்தையும்’ என்பதை மட்டும் அழுத்தி கூற,

 

அதில் விழி விரித்தவளோ குப்பை தொட்டியை பார்க்க, அவளின் நல்ல நேரத்திற்கு குப்பை தொட்டி சுத்தம் செய்யப்பட்டு இருந்ததால், இவள் வீசிய சாக்லேட் தவிர வேற எதுவும் இல்லை, ஆனாலும் குப்பை தொட்டியில் போட்டதை எடுப்பதே அருவருப்பு இதில் இவன், அதை எடுத்து சாப்பிட வேறு கூறுகிறானே என்று எண்ணி அவனை பார்க்க, அவனோ ‘இதை நீ செய்தாக வேண்டும்’ என்று உறுதியாக நின்றான்.

 

அவள் யோசனையாக நிற்பதை கண்டு “இது சரிப்பட்டு வராது.. எல்லாத்தையும் சொல்லிட வேண்டி தான்.. முதல ருத்தரன்கிட்ட ரிகர்சல் பண்ணட்டுமா” என்று கூறி ருத்ரன் அருகில் சென்று தோலில் கைபோட்டவனோ “மச்சி.. சார் கிட்ட சொல்லுற முன்னாடி உன்ன வச்சி உன் பிரென்ட் கிட்ட டிரெய்லர் காட்டிக்கிறேன்.. சோ கோ-ஆபரேட் மீ” என்று கூறினான்.

 

அதை கவனித்த பாவையோ இதழ் குவித்து ஊதிக்கொண்டு “ஓகே நான் பண்ணினது தப்பு தான் சாரி.. உன் தண்டனைய ஆக்சபட் பண்றேன்” என்று கூறி குப்பை தொட்டியிலிருந்த, அந்த சாக்லேட்டை அறுவருப்பாக கையில் எடுத்து, அவனை பார்த்துவிட்டு அருகில் நின்ற நண்பனை பாவமாக ‘எதாவது பண்ணுடா’ என்பது போல் பார்க்க,

 

ரேயனோ “ஈட் இட்” என்று கூற,

 

“டேய் காண்டாமிருகம் எனக்கா தண்டனை கொடுக்கிற.. உனக்கு மறுபடியும் டிரான்ஸ்ஃபர் கொடுக்க வைக்குறேன்.. அய்யோ.. இந்த கருமத்த வேற தின்னு தொலைக்கணுமே.. திங்கலேனா இந்த காண்டாமிருகம் வேற விடாதே..” என்று தன் மனதிற்குள் எதிரே நிற்பவனை அர்ச்சித்தவாறே கையில் வைத்திருந்த சாக்லேட்டை பிரித்து கண்களை மூடி வாயருகில் கொண்டு செல்ல,

 

அதை கண்ட ரேயன் என்ன நினைத்தானோ என்று தெரியவில்லை, அவள் வாயருகில் கொண்டு சென்று சாப்பிட முயன்ற நொடி, அதை வாங்கி மறுபடியும் குப்பை தொட்டியில் வீசி விட, அவன் செயலை உணர்ந்து கண் விழித்தவளிடம் “இங்க பாரு.. இதான் லாஸ்ட் இதுக்கு மேல எதாவது மரியாதை இல்லாம பண்ணின.. அப்புறம், இப்படி குப்பைலிருந்து எடுத்தத தூக்கி வீச மாட்டேன்.. நேரடியா வாயிலயே தினிச்சிருவேன்.. நான் வெளிய நிக்கிறேன்.. போய் ஹேன்ட் வாஷ் பண்ணிட்டு வா.. சார பாத்துட்டு வரலாம்” என்று கூறி வெளியே சென்று விட,

 

கையை நன்றாக கழுவி வந்தவளிடம் “இங்க பாரு மச்சி.. நீ கொஞ்சம் அடக்கி வாசி.. என்ன தான் இருந்தாலும் அவர் நமக்கு சீனியர் சோ மரியாதையா நடந்துக்கோ”

 

“தோடா.. அவன் மச்சின்னு கூப்பிட்டதும் அவன் பக்கம் சாஞ்சிட்டியா.. இருந்தாலும்.. ஒரே நாள்ல ஓவர் வக்காலத்தா இருக்கே”

 

“நீ மட்டும் என்னவாம்.. ஒரே நாள்ல அவன்கிட்ட அடங்கிட்ட”

 

“இங்க பாரு.. அவன அடிச்சது தப்பு தான்.. அதுனால தான தண்டனைய அக்சபட் பண்ணினேன்.. அதுக்காக பயந்துட்டேன்னு அர்த்தம் இல்ல.. தப்பு பண்ணினா தண்டனை யார் கொடுத்தாலும் ஏத்துக்குவேன்.. இட்ஸ் மை பாலிசி”

 

“இதுக்கு பேரு பாலிசி இல்ல.. குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலன்னு சொல்லாம சொல்லுற” என்று கூறியதை கேட்டு அனல் பார்வை செலுத்தியவளை கண்டு “முறைக்காம சீக்கிரம் போ மச்சி.. இல்லன்னா சீனியர்ன்னு மரியாதை இல்லாம இவ்வளவு நேரம் வெயிட் பண்ண வைக்கிறேன்னு தண்டனை கொடுத்துற போறான்” என்று கூறி சிரிக்க,

 

“டேய்.. உனக்கு நல்லா டைம் பாஸா இருக்குல்ல.. அவன் பண்ணினத கேக்க துப்பில்ல.. இனி மச்சி பஜ்ஜின்னு சொல்லிட்டு வந்த மரியாதை கெட்டுரும்”

 

“என்னடி பேசுற.. உனக்காக பேச தான செஞ்சேன்.. அவர் உன் கழுத்த பிடிக்கும் போது கூட உன்ன ரிலீஸ் பண்ண முயற்சி பண்ணினேன் அவன் அந்த கோபத்தையும் சேத்து உன்கிட்ட தான் கொட்டினான்.. அதான் அதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம்ன்னு சைலண்ட் ஆயிட்டேன்” என்று கூற,

 

அவளோ பதில் பேசாமல் முறைத்துவிட்டு அங்கிருந்து விடை பெற்று வெளிய வந்தவளோ, அங்கு யாரிடமோ அழைப்பு பேசி கொண்டிருப்பவனை முறைத்துவிட்டு தனது புல்லட்டில் ஏறி கண்ணாடியை சரி செய்தவாறு அவன் நின்ற இடத்தில் பார்வையை செலுத்தி, அந்த இடம் வெறுமையாய் இருப்பதை கண்டு பார்வையை சுழலவிட,

 

அவள் பின்னே ஒரு இன்ச் இடைவெளிவிட்டு அமர்ந்திருந்தவனோ, அவள் தன்னை தேடுவதை உணர்ந்து அவள் தோலை சுரண்டி “அங்க எங்க தேடுற.. இங்க இருக்கேன்” என்று கூறியதும் திரும்பியவளோ “ஏய்.. நீ எதுக்கு என்னோட வண்டியில ஏறுன.. முதல இறங்கு”

 

“ரெண்டு பேரும் ஒரே இடத்துக்கு தான போறோம்.. எதுக்கு தனி தனியா போய் பெட்ரோல் வேஸ்ட் பண்ணிக்கிட்டு சேந்தே போகலாம்.. வண்டிய எடு”

 

“அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்.. இறங்கி உன் வண்டில வா”

 

“உனக்கு கொடுத்த அந்த பணிஷ்மென்ட தள்ளுபடி பண்ணிட்டேன்ல.. சோ உனக்கு ஈஸ்யான தண்டனையா என்ன உன்கூட கூட்டிட்டு போய் தான் ஆகனும்.. வண்டிய எடு”

 

“போய் தொலையுறேன்” என்று தலையில் அடித்துவிட்டு ‘உன்ன இந்த ஊரவிட்டு ஓட விடுறேன்’ என்று தனக்குள் சபதம் எடுத்துக்கொண்டு அவனுடன் பயணத்தை தொடங்கினாள்.

 

அவன் மேல் இடிக்காமல் உரசாமல் செல்ல வேண்டும் என்பதற்காக பத்து நிமிடத்தில் வர வேண்டிய இடத்திற்கு அரை மணிநேரத்தில் வந்து வண்டியை நிறுத்த, அவளை ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு உள்ளே செல்ல, வண்டியை நிறுத்திவிட்டு அவளும் அவன் பின்னே செல்ல, இருவரும் தங்கள் மேல் அதிகாரியின் வருகைக்காக ஹாலிலிருந்த சோஃபாவில் அமர்ந்து காத்து கொண்டிருந்தார்கள்.

*******

மேல் அதிகாரியின் வருகைக்காக ஹாலிலிருந்த சோஃபாவில் அமர்ந்து காத்து கொண்டிருந்தவர்கள், அவர் வருவதை கண்டு மரியாதை நிமித்தமாக எழுந்து சலுட் அடிக்க, அதை பெற்று கொண்ட விதமாக மேல் அதிகாரியும் தலையசைத்து தன்னுடன் வருமாறு கண்ணை காட்டிவிட்டு மாடி ஏற, இருவரும் அவர் பின்னேயே சென்றார்கள்.

 

ஒரு அறைக்குள் நுழைந்து சில கோப்புகளுடன் அவர்களையும் அமர கூறிவிட்டு, இருவரின் எதிரே அமர்ந்து “ஹலோ மிஸ்டர் ஆத்திரேயன்.. உங்கள பத்தி நிறைய கேள்வி பட்டிருக்கேன்.. நீங்க இங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம்.. அப்புறம் இப்போ முக்கியமான கேஸ் பத்தி பேச தான் உங்கள வர சொன்னேன்.. ஆமா ருத்ரன் எங்க தியா”

 

“ஆபீஸ்ல யாருமே இல்ல.. எல்லாரும் மிஷன்காக போயிருக்காங்க செக்யூரிட்டி மட்டும் நம்பி.. அங்க இருக்குற முக்கியமான பைல்ஸ் விட்டுட்டு வர முடியாது.. அதான் ருத்ரன ஒரு சேப்டிக்காக விட்டு வந்துருக்கோம்”

 

“ஓகே பைன்.. கேஸ் பத்தி பேசலாம்” என்று கூறி இருவரிடமும் தன் கைலியிருந்த கோப்புகளை கொடுத்துவிட்டு “இப்போ நம்ம எடுத்துக்கிறது பொண்ணுங்க மிஸ்ஸிங் கேஸ்.. இந்த பைல்ஸ்ல இருக்கிறது அனாத ஆசிரமத்த பத்தின டிட்டைல்ஸ்.. அதோட இந்த டிட்டைல்ஸ் எனக்கு ஒரு கோரியர் மூலமா கிடைச்சுது.. பட் யாரு என்னன்னு எதுவுமே தெரியல.. இந்த டீட்டைல்ஸ் கூட ஒரு லெட்டரும் அட்டச் பண்ணி இருக்காங்க.. அத படிச்சத வச்சி தெளிவா ஒன்னு புரிஞ்சுது இந்த கேஸ் சீக்ரெட்டா மெயின்டெய்ன் பண்ணனும் யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி இவெஸ்டிகேஷன் இருக்கணும்.. அப்புறம் இந்த கேஸ் பைண்ட் பண்ண இந்த டிட்டைல்ஸ் மட்டும் போதாதுன்னு புரியுது.. பட் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் யூ ஹவ் டூ பின்னிஷ் த கேஸ்” என்று கூற,

அவர் பேசியதை இருவரும் கவனமாக செவி தீட்டி கேட்க, ரேயனோ “சூர் சார்.. வீ வில் டிரை டூ பெஸ்ட்” என்று கூறி அருகில் நின்றவளை காண, அவளும் உறுதியளிக்கும் வகையில் தலையாட்ட,

 

அதை கண்டு புன்னகைத்தவரோ “குட்.. நாளைக்கே இன்வெஸ்டிகேஷன் ஸ்டார்ட் பண்ணலாம்.. அப்புறம் மிஸ்டர் ஆத்திரேயன் உங்களுக்கு சப்போட்டா தியாவும் ருத்ரனும் இருப்பாங்க.. ருத்ரன்கிட்டயும் நான் சொன்னத எக்ஸ்பிளைன் பண்ணிடுங்க.. அதை தவிர்த்து யூ கேன் ஆஸ்க் மீ பார் எனி ஹெல்ப் யூ நீட்”

 

“ஐ நீட் ஹெல்ப் நவ்” என்று கேட்க,

 

அவரின் மனமோ ‘அதுக்குள்ளயா’ என்றும் ‘வழக்ககே தொடங்கவில்லை அதற்குள் என்ன கேட்க போகிறான்’ என்று எண்ண, தியாவும் அதை எண்ணத்துடன் தான், அவனை ஆர்வமாக நோக்கினாள்.

தொடரும்..

– ஆனந்த மீரா 😍

படிச்சிட்டு கமென்ட் பண்ணுங்க ப்ரெண்ட்ஸ்

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்