
வனிதா மற்றும் விஜயன் தம்பதிகளின் புதல்வி தான் வாகினி, சிறு வயதில் தந்தையின் மேல் உயிராக இருந்த வாகினிக்கு தந்தைக்கு இன்னொரு குடும்பம் இருந்திருக்கிறது என்று தெரிந்த பின்பு அவரிடமிருந்து விலகியவள் முகத்தை பார்ப்பது கூட அரிதாகி விட்டது.
அதன் பின் அவளின் அன்னையின் இறப்பிற்கு பிறகு, தந்தகையின் தமக்கையிடம் வளர தொடங்கியதில், அத்தை மகனின் நட்பும் அவளுக்கு கிடைத்தது,
அதில் ஏதோ தனக்கென்று ஒரு உறவாது இருக்கிறதே என்ற கடமைக்கென்று அவ்வீட்டிலில் இருந்து கொண்டாள்.
நட்பு கிடைத்தாலும் தந்தையை பார்க்க பிடிக்காமலே பள்ளி பருவம் முடியவும் கல்லூரியை அங்கிருந்த விடுதியில் தங்கி படித்தாள்.
அதன் பின் தனக்கு பிடித்தமான குற்ற புலனாய்வு துறை தேர்ந்தேடுத்து, அதற்கு அயராது உழைத்து அதிலும் வெற்றி கண்டு வீட்டியில் தெரிவிக்கும் நேரம் அவளின் அத்தை சம்மதிக்க மாட்டேன் என்று அடம்பிடிக்க, வாகினிக்காக பேசியது என்னவோ அவரின் மகன் தான்.
அப்போதும் இறங்கி வராதவர், அவர்களிடம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் அனுமதிக்கிறேன் என்று பெரிய குண்டை அவர்களின் தலையில் தூக்கி போட்டிருக்க,
வாகினிக்காக சம்மதம் கூறியவன் “இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்.. கொஞ்சம் அவ கேரியர் கவனிக்கட்டும்.. அப்புறம் கல்யாணத்த பத்தி பேசிக்கலாம்” என்று அவளுக்கு கண்ணை காட்ட,
தனக்காக உதவி செய்ய முயற்சிக்கிறான் என்பதை புரிந்து அவனின் வார்த்தைக்கு அவளும் ஆமென்பது போல் தலையாட்டினாள்.
அதில் சற்று இறங்கிய, அவளின் அத்தை “என் பையன் சொல்லுறது நான் ஒத்துக்குறேன்.. ஆனா நம்ம ஃபேமிலிக்கு தெரியுற மாதிரி சின்ன எங்கேஜ் மட்டும் வச்சிக்கலாம்.. இதுக்கு ஓகேன்னா நீ தாராளமா எங்கேஜ் முடிஞ்சி வேலைக்கு போகலாம்” என்றதை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,
ஆடவனும் இம்முறை அவளே முடிவெடுக்கட்டுமென்று அமைதியாகி விட்டான்.
சற்று சிந்தித்து பெருமூச்சை எடுத்து விட்ட வாகி “சரி அத்தை.. நான் சம்மத்திகுறேன்.. ஆனா, நானா சொல்லுற வரை கல்யாணத்த பத்தி பேச கூடாது” என்க, அவரின் கோரிக்கையை ஏற்று கொண்டவரும் உடனே நிச்சயதார்த்த வேலை தொடங்கி, நல்ல நாள் பார்த்து வைத்து முடித்தே பெண்ணவளை வேலைக்கு அனுப்பி வைத்தனர்.
அதோடு குடும்பமே சென்னையில் தான் இருந்தனர். அவரின் மகன் வேலை காரணமாக நண்பர்களுடன் தங்கி கொண்டான்.
பெண்ணவளும் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தங்கி கொள்வேன் என்று கூறி விட, அவர்களும் அவளின் வேலை பற்றி புரிந்து பெண்ணவளை தடுக்கவில்லை என்றாலும் அவளுடன் தன் மகனையும் சேர்த்து கண்காணிக்கவும் தவறவில்லை.
அதன் பின் வாகினியும் வேலைக்கு சேர்ந்து விட, அங்கே தனக்கு சீனியர்ஸாக இருந்த ரேயன் ஜோஸப்புடன் இணைந்து அவர்களை பின்பற்றினாள்.
ரேயனுடன் நட்பாக பேசினாலும் ஜோஸப்புடன் நட்பை தாண்டின ஈர்ப்பு பெண்ணவளுக்கு எப்போதும் உண்டு, ஆனாலும் தான் நிச்சயமான பெண் என்றதில் தன்னை கட்டுக்குள் வைத்திருந்தாள்.
ஜோஸப் நம் தியாழினி போல் தான் அழகான பெண்களை கண்டால் ஆடவனால் ரசிக்காமல் இருக்க முடியாது, அதற்காக கேடுகெட்டவன் என்று கூறிவிட முடியாது, பெண்கள் அறியாதவண்ணம் ரசித்து கொண்டு அளவாகவே கடந்து விடுவான். ஆனால் ஏனோ வாகினியை அவனால் அப்படி கடக்க முடியவில்லை.
அவளின் அழகு பேச்சு கண்களில் தெரியும் கண்டிப்பு வேலையென்று வரும் போது அவளின் ஆளுமை என்று அனைத்தையும் ரசித்தவனுக்கு, அவளின் மேல் ஈர்ப்பை தாண்டிய எண்ணம் வந்தது உண்மை தான் என்றாலும்,
ஏனோ கூறிவிட்ட பின்பு பெண்ணவள் தன்னை விட்டு விலகி விடுவளோ என்று இந்த மாதிரி நேரத்தில் அனைத்து ஆண்மகனுக்கும் வரும் தயக்கம் அவனையும் போட்டு படுத்தி எடுத்தது.
அப்படியே நாட்கள் நகர, ரேயன் மதுரைக்கு சென்ற நேரம் இருவரும் தனியாக வழக்கு சம்பந்தமாக விசாரணைக்கு வெளியே சென்ற போது தான், இந்த நேரத்தை பயன்படுத்தி கொள்ள நினைத்த ஜோஸப் விசாரணை முடித்து வரும் போது ஆள் இல்லா சாலையில் வண்டியை ஓரமாக நிறுத்தி பெண்ணவளை இறங்க கூற,
அவள் இறங்கியதும் “உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வானி” என்றவனுக்கு அடுத்த வார்த்தை வர தயக்கமாகி விட,
அவனை சுவரஸ்யமாக மார்பு குறுக்கே கைகளை கட்டி கொண்டு ஏறிட்ட பெண்ணவளுக்கு, அவனின் நடவடிக்கை மாற்றங்கள் புரியவே செய்தாலும் புரியாது போல் “சொல்லு ஜோ” என்றவளுக்கு, அவன் காதலை கூற போகிறான் என்று நினைக்கவே தித்திப்பை கொடுத்தது.
ஆனாலும் முகத்தை விரப்பாக வைத்தப்படி “டேய் என்னன்னு சொல்லேன்டா” என்க,
அவனும் இதழ் குவித்து ஊதி கொண்டு “அது வந்து வானி எனக்கு உன்ன எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சுருக்கு ஐ லவ் யூ” என்று கூறிவிட,
உள்ளுக்குள் அவனின் காதலை ஏற்று கொண்டவளால் அவனிடம் வெளிப்படையாக கூற முடியாத நிலையாகி விட, இதழ் கடித்து தன்னை கட்டுப்படுத்தி கொண்ட வாகினி “என்ன பத்தி உனக்கு என்ன தெரியும்ன்னு லவ் பண்ற” என்றதை கேட்டு நிமிர்ந்து,
அவள் கண்ணை நோக்கியவன் “இங்க பாரு வானி.. நீ பணக்காரியா பிச்சைக்காரியா உன் ஃபேமிலி பேக் கிரவுண்ட் இதெல்லாம் தெரிஞ்சி வருறது காதல் இல்ல.. எனக்கு உன்ன பிடிச்சுருக்கு அது நீ எப்படிப்பட்ட நிலைல இருந்தாலும் லவ் பண்ண தான் செய்வேன்.. அண்ட் உன்ன பத்தி எனக்கு என்ன தெரியும்ன்னு கேட்ட தான.. ஒரு விஷயம் தெரியும் உனக்கும் என்ன பிடிக்கும்ன்னு” என்க,
அவன் தன்னை கண்டு கொண்டான் என்றதில் ஒரு நொடி தடுமாறியவள், பின் விரப்பாக “உன் காதல நினைச்சி எனக்கு உடம்பே சிலிர்த்து போச்சுன்னா பாரேன்.. பட் ஐ அம் என்கேஜ்” என்று தன் கையிலிருந்த மோதிரத்தை காட்டி “பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மேன்” என்றவளின் கரத்தை பற்றி இழுத்தவன் “சோ வாட்.. எங்கேஜ் தான கல்யாணம் ஆகலையே.. சோ இன்னும் டைம் இருக்கு நீயே இந்த ரிங்க தூக்கி வீசிட்டு என்ன தேடி வருவ வரணும் வர வைப்பேன்” என்று அவன் கண்ணில் தெரிந்த தீவிரத்தில் பெண்ணவளின் உடல் உதறல் எடுத்தது.
அதை ஆடவன் உணர்ந்தானோ என்னவோ பெண்ணவளை அணைத்து அவளின் பட்டு கன்னத்தில் முத்தமிட்டே விலக, அவளோ பேயடித்த போல் உறைந்து நின்றிருந்தாள்.
அவளை அப்படியே நிற்கவிட்டு சிறிது நேரம் ரசித்தவன், பெண்ணவளை உலுக்கி “வானி உன் ஷாக்லாம் முடிஞ்சுதுன்னா போலாமா” என்றுவிட்டு வண்டியில் ஏறிக்கொள்ள, அதில் சுயம் பெற்றவள் அவனை முறைத்துவிட்டு பின்னே ஏறிக்கொண்டாள்.
அதன் பின் அடிக்கடி பெண்ணவளை பார்வையால் சீண்டுவது இதழ் குவித்து முத்தத்தை பறக்க விடுவதென்று ஆடவன் அவளை இம்சிக்க, அதில் தன் காதலை அவனிடம் கொட்ட துடிக்கும் மனதை கட்டுப்படுத்தி கொண்ட வாகினியோ அவனை முறைத்து கொண்டே திரிந்தாள்.
அதன் பின் மதுரை சென்ற ரேயனும் வந்து விட, தியாழினியும் அன்று தான் சேர்ந்திருக்க,
அவள் ஜோஸப்பிடம் வழிவதில் வாகினிக்கு தான் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் இருப்பினும், அதை வெளியே காட்டதவள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சம்பந்தமே இல்லாமல் அவனை திட்டி தீர்த்து விடுவாள்.
அதற்காக காரணத்தையும் புரிந்த ஜோஸப் பெண்ணவளை சீண்டி அவளின் காதலை வெளிப்படுத்த தியாழினியை வைத்தே செயல்ப்படுத்த நினைத்து அவளிடம் உருகி கரைந்தான்.
ஒரு கட்டத்தில் ஜோஸப்பின் காதல் பார்வை வாகினியின் பொறாமை பார்வை வைத்தே ஜோஸப்பின் எண்ணத்தை புரிந்து கொண்ட தியா, அவனே கூறும் வரை கேட்டு கொள்ள வேண்டாமென்று விட்டு விட்டாள்.
இங்கு ஆடவனின் காதலை ஏற்றுக் கொள்ள முடியாமல் வாகினி தவிக்க, பெண்ணவள் மேல் காதல் இருந்தும் ஏதோ காரணத்திற்காக ரேயன் அவளிடம் காதலை கூற முடியாமல் தவித்து கொண்டிருக்க, தியாழினியோ அவனின் நிலை புரியாமல் இரு ஆடவர்களை சைட் அடித்து ரேயனை சீண்டி அவனிடம் வாங்கியும் கட்டிக் கொள்வாள்.
அதன் பின் தான் ரேயன் அன்னையிடம் பெண்ணவள் நடித்தது, அதில் கடுப்பாகி ஆடவன் அடித்தது என்று பெண்ணவள் கோபத்துடன் ரெஸ்டாரன்ட் சென்று வழக்கை அவனுடன் முடித்திருக்க, மறுநாள் அலுவலகத்திற்கு வழக்கம் போல் முதலில் வந்த வாகினி, தனியாக வந்த ரேயனிடம் “நீ மட்டும் வந்திருக்க.. ஜோ” என்று கூற வந்த வார்த்தயை முழுங்கிவிட்டு “ஜோஸப் எங்க” என்க,
அவள் முதல் கூற வந்ததை தெளிவாக கண்டு கொண்டவனோ “ஃபீவர் போல இருக்கு ஹால்ப் டே லீவ் எடுத்துக்குறேன் சொன்னான்” என்றதை கேட்டு “ஓகே” என்றவளின் முகம் ஏனோ, இன்று அவன் வர மாட்டேன் என்றதிலே வாடி விட, அதை ரேயனும் குறித்து கொண்டான்.
அடுத்த பத்து நிமிடத்தில் வந்த ஜோஸப்பை கண்டு பெண்ணவளின் முகம் மலர,
ஏதோ நினைவு வந்து பட்டென்று ரேயனை பார்த்தவள், அவனின் பார்வையில் தன்னை ஆழம் பார்த்திருக்கிறான் என்பதை கண்டு கொண்டு, அவனை பார்த்து அசடு வழிந்தவள் திறன்பேசியில் அழைப்பு வந்ததது போல் வெளியே சென்று விட்டாள்.
அவளின் செயலில் தலையாட்டி சிரித்து கொண்ட ரேயன் ஜோஸப்பிடம் முக்கியமான வேலையை கொடுத்துவிட்டே வாகினியை நோக்கி வந்து குரலை செரும,
அவளும் அழைப்பை துண்டிப்பது போல் பேசிவிட்டு “சொல்லு ரேயா” என்று அவனின் குற்ற பார்வையை தாங்க முடியாமல் தலையை கவிழ்த்து நிற்க,
அவளையே அழுத்தமாக பார்த்தப்படி கைகளை மார்புக்கு குறுக்கே கட்டி கொண்டவனோ “வாகி டியர்..” என்றதை கேட்டு நிமிர்ந்தவளின் கண்கள் கலங்கி விட்டது.
அதில் பதறி அவளின் கையை பற்றியவன் “வாகி டியர் எதுக்கு உன்ன கஷ்டப்படுத்திக்குற” என்றதை கேட்டு அவனிடம் ஜோஸப் கூறிய காதலை பற்றியும், அதை ஏற்று கொள்ள முடியாத இடத்திலிருக்கும் தன்னை நினைத்து அவனிடம் நொந்தவள் “என்னால முடியல ரேயா.. என் அப்பாக்கு இந்த விஷயம் தெரிஞ்சா என்ன கொண்ணு போட்ருவார்.. அவருக்கு ஜாதி பற்று அதிகம் நான் வேற மதத்த சேந்தவன விரும்புறேன் சொன்னா..
அவர் ஜோவையும் விட்டு வைக்க மாட்டார்.. எனக்கு பயமாயிருக்கு ரேயா.. என்னால ஜோவையும் வெறுக்கிற மாதிரி நடிக்க முடியல.. பேசாம வேலைய விட்டு போயிடவா” என்க,
அவளை பார்வையால் பொசுக்கியவன் “பைத்தியம் மாதிரி பேசாத வாகி.. இதுக்கு தான் அவ்வளவு கஷ்டப்பட்டியா.. யாருக்காகவும் உன்னோட லைஃப்பையும் ஏம்மையும் விட்டு கொடுக்க கூடாதுடி.. அதுக்கு நிறைய தடைகள் வரும் நீ தான் போராடனனும்.. இப்படி கோழைத்தனமா ஓட கூடாது”
“இப்போ என்ன பண்ண சொல்லுற..”
“உனக்கு வேணும்ன்னு நினைக்கிறதே யாருக்காவும் விட்டு கொடுக்காதன்னு சொல்லுறேன்.. நீ சொல்லாம வீட்டுல கல்யாணத்த பத்தி இப்போதைக்கு பேச மாட்டாங்க சோ அதுக்குள்ள அம்மாகிட்ட அந்த கல்யாணத்துல சம்மதம் இல்லன்னு புரிய வைக்கலாம்.. அதோட மாமாவ ஃபேஸ் வேண்டியது என்னோட பொறுப்பு ஜோஸப்பும் உன்ன விட்டுர மாட்டான்டி..
உனக்கு தோன்றத பண்ணு உனக்கு துணையா நான் இருக்கேன்” என்றதை அவனை அணைத்து விடுவித்தவள் “தேங்க்ஸ் ரே.. இப்போவும் சரி அப்போவும் எனக்காக ஹெல்ப்பா இருக்க.. எனக்கு உன் துணையே போதும்” என்று செல்ல போனவளின் கரம் பற்றிய ரேயன் “ஓய் மாமா பொண்ணே.. நீ நினைக்கிற மாதிரி நான் நல்லவன் இல்லடி.. அன்னைக்கு வேணா உனக்காக எங்கேஜ் ஒத்துக்கிட்டன்.. ஆனா இப்போ எனக்கும் சுயநலம் இருக்கு.. நான் உன்ன போல தான் முடிவு எடுக்க முடியாம தத்தளிச்சிட்டு இருந்தேன்.. உன்கிட்ட பேசினதுல எனக்கு தெளிவு கிடைச்சுட்டு” என்க,
அவன் கூற வருவது புரியாமல் முழித்தவள் “ரேயா நீ சொல்லுறது..”
“நான் யாழிய விரும்புறேன்டி” என்று கூறி கண்ணடிக்க, அவனின் தோலில் அடித்தவள் “அடப்பாவி உன்ன போய் நல்லவன் நினைசிட்டேன்டா” என்று மேலும் அடிகளை இலவசமாக கொடுத்த வாகினி “அவளும் உன்ன லவ் பண்றாளா”
“நான் இனி தான் லவ் சொல்லணும்”
“இனி எந்த பிராப்ளம் வந்தாலும் கவலைப்பட மாட்டேன்.. ரேயன் இருக்க பயமேன்.. சரி அவகிட்ட லவ்வ சொல்லி கரெக்ட் பண்ற வழிய பாரு.. எனக்கு தெரிஞ்சி அவளுக்கும் உன்ன பிடிக்கும் நினைக்கேன் பாக்கலாம்”
“நீயும் உன் லவ்வ ஜோஸப்கிட்ட சொல்லிடு அண்ட் நம்ம விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்.. நார்மலா நம்ம எப்போவும் போலவே இருந்துக்கலாம்” என்றது அவளுக்கும் சரியென தோன்ற சம்மதமாக தலையாட்டி விட்டு சென்றாள்.
ஆம் அவளின் அத்தை மகன் தான் ரேயன், அவனை கல்யாணம் செய்வதாக தான் நிச்சயமாகியிருந்தது.
ஆனால், அவர்கள் இருவரும் உறவுகள் போல் காட்டி கொள்ளாமல் அப்போது தான் பழகிய போல் பழகியிருக்க யாருக்குமே தெரியவில்லை, அது தான் அவர்களுக்கும் பிடித்திருக்க,
இப்போது தான் தேவைக்காக இருவரும் வெளிப்படையாக பேசி கொண்டது அதுவும் மற்ற இருவருக்கும் தெரியாமல் தெரியும் வேலையில் அவர்களுக்கு என்ன காத்திருக்கிறதோ?
பின் இருவருமே தங்களின் குழப்பத்திற்கு விடையளித்து காதலை சொல்லும் தருணத்திற்காக காத்திருக்க,
அன்றே தியாழினியுடன் ரெஸ்டாரன்ட் சென்ற வாகினி போகும் வேலையில் காதலை சொல்லிவிடு என்று ரேயனிடம் கண்ணை காட்டி விட்டு செல்ல, அவனும் அதை தான் அவளுக்கு கூறியிருந்தான்.
பின் ஜோஸப்புடன் தன் வீட்டை நோக்கி பயணித்து கொண்டிருந்த வாகிக்கோ காதலை கூறுவதை நினைத்து நெஞ்சம் படப்படக்க, அவளின் அப்பார்ட்மெண்ட்டும் வந்து சேர்ந்து விட,
அவளிடம் தலையசைத்து விடை பெற போனவனிடம் “ஜோ.. உள்ளே வந்து காஃபி சாப்பிட்டு போயேன்” என்க,
அதில் இளித்தவனுக்கு கசக்கவா செய்யும் பெண்ணவளே ஆசையாக அழைத்ததில் குஷியாக அவளின் பின்னே சென்றான்.
****
அவனுடன் தன்னுடைய தளத்திற்கு வந்தவள் “ஒரு ஃபைவ் மினிட்ஸ் ஃப்ரெஷ் ஆயிட்டு வந்துருறேன்” என்று அறைக்குள் சென்று தன்னை சுத்தப்படுத்திவிட்டு இரவு உடையில் வெளியே வர,
பாவம் ஆடவன் தான் அவளை கண்டு திண்டாடி ‘ஆத்தி டெம்ப்ட் பன்றாளே கன்ட்ரோல் ஜோ’ என்று கட்டுபடுத்தி கொண்டிருக்க, அடுத்த ஐந்து நிமிடத்தில் தேனீர் போட்டு எடுத்து வந்தவள், அவனுக்கு கொடுத்துவிட்டு அவனின் அருகேயே அமர்ந்து தானும் குடித்தாள்.
அவளின் அருகாமையில் அவனுக்கு தேனீர் உள்ளே இறங்க மறக்க, இதற்கு மேல் இருந்தால் முடியாதென்று மடக்கென்று குடித்து எழுந்தவன் விடைபெற்று செல்ல போக,
அவனின் கையை பற்றி தடுத்த வாகி “ஐ லவ் யூ ஜோ” என்று விட, ஏற்கனவே உணர்வுகளுடன் போராடி கொண்டிருந்தவன் அவள் காதலை சொன்னதும் தான் தாமதம் பெண்ணவளை இழுத்து அவளின் இதழை ருசித்தான்.
அவனின் எதிர்பாரத தாக்குதலில் பெண்ணவள் அதிர்ந்தாலும் தன்னவன் என்ற உரிமையில் தடுக்காமல் கண்களை மூடி அவனின் முத்தத்தை ரசிக்க தொடங்கி விட்டாள்.
தொடரும்…
– ஆனந்த மீரா 😍😍
