Loading

தியா அழைத்ததும் அன்பு இல்லத்திற்கு வந்து சேர்ந்த ரேயன், பெண்ணவள் அங்கிருந்து சற்று தள்ளி நின்று இளநீர் குடிப்பதை கண்டு அவளின் முன் வண்டியை நிறுத்தியவன் “என்ன தான்டி பண்ற” என்க,

 

கையிலிருந்த காலியான இளநீரை கீழே போட்டு ஹாயாக, அவனின் எதிரே வந்து நின்றவள் “பாத்தா தெரியல இளநீர் குடிச்சேன்.. உனக்கு ஒன்னு சொல்லவா” என்றதை கேட்டு, அவளை முறைத்தவன் “காலைலயே போனா சொல்லிட்டு போக மாட்டியா.. எப்போவும் என்ன தேட விட்டு போகிறதே வேலை வச்சிருக்க தியா” என்க,

 

அவன் அர்த்தமாக பேசியதில் பெண்ணவளுக்கு பழையவை நினைவில் வர, பின் அவன் தன்னை தேடிருக்கிறான் என்று புரிந்து கொண்டவளின் முகத்தில் இத்தனை நேரமிருந்த இதம் நீங்கி இறுக்கமாக மாறியது.

 

அவளின் வாட்டத்தை காண பொறுக்காத ரேயனுக்கோ கொஞ்சம் அதிகப்படியாக பேசி விட்டோமோ என்று தோன்ற, தன்னையே நொந்து சூழ்நிலையை மாற்றும் பொருட்டு ஆடவன் “சரி என்ன பண்ணி வச்சிருக்க அத சொல்லு” என்க,

 

பெருமூச்சு விட்டு கொண்ட தியாவோ “நரேன் நம்ம கெஸ்படி ரெண்டு பேருமே ஒரே ஜாடைல பிறந்த வெவ்வேறு ஆள் தான்.. ஆனா இதுல ஒருத்தி தான் சத்யா இன்னொருத்தி யாரு என்னன்னு தெரியல.. அதே சமயம் தர்மராஜ் சொன்னத வச்சி பாக்கும் போது ஹோம்லிருந்து மந்தாகினி அனுப்பிவச்ச சத்யா தான் நேத்து நம்ம பாத்ததுன்னா.. அப்போ அவ ஜாடைலயே இறந்த பொண்ணு தான் இப்போ கேள்வி குறி” என்க,

 

தான் தியா என்று அழைத்ததில் பெண்ணவளின் நரேன் அழைப்பையும் உணர்ந்த ரேயன் கண்டு கொள்ளாமல் அவள் கூறியதை கேட்டு தாடையை தடவிய ரேயன் “ஒருவேளை இறந்து போனது ஹோம்லயிருந்த சத்யாவா இருந்து.. நேத்து நம்ம பாத்த சத்யா போல இருக்கிற பொண்ணு வேறவா இருக்கலாம் தான” என்றவனின் கூற்றும் ஒப்பு கொள்ளும் படி இருந்ததில்,

 

தியா “மே பீ இருக்கலாம்.. நம்ம கண்டு பிடிக்க டிரை பண்ண கூடாதுன்னு நம்மள கன்பூஸ் பண்ண கூட டிரை பண்ணிருக்கலாம்.. ஆனா இப்போ ரெண்டு கெஸ்ல எது ரீயல்ன்னு கண்டு பிடிக்க தான் ஹோம் போறோம்” என்க,

 

அவள் கூற வருவது புரியாமல் விழித்தவன் “நீ நினைக்கிற போல ஹோம்ல இருந்த சத்யா டீட்டைல்ஸ் பைண்ட் பண்ணினாலும் இப்போ தர்மராஜ்கிட்ட இருக்கிற பொண்ணுகிட்ட நம்ம பேச கூட சான்ஸ் கிடைக்காது.. சோ ரெண்டுல எது அந்த பொண்ணுன்னு கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்” என்றதை கேட்டு இதழை வில்லாக வளைத்து சிரித்த தியா,

 

தன்னை குழம்பிய பார்வை பார்க்கும் ஆடவனை பார்த்து “புரியல தான.. அதான் எனக்கு வேணும்” என்று அவன் தோலை தட்டிய தியா “ஃபாலோ மீ மேன் ஆப்ட்டர் ஐ வில் எக்ஸ்பிளைன்” என்று ஹோமிற்குள் நுழைய, தலையில் அடித்து கொண்டு ரேயனும் அவளின் பின்னே நடந்தான்.

****

 

இருவரும் மறுபடியும் உள்ளே நுழையவுமே, மற்றவர்கள் அவர்களின் வருகையை நொந்து பார்த்திருக்க, அவர்களின் முன் வந்த மந்தாகினியோ அவர்களை வரவேற்று அமர வைத்து குளிர்பானம் கொடுத்து உபசரித்து அவர்களின் எதிரே அமர்ந்து “யாழிசை பத்தி தான விசாரிக்க வந்தீங்க.. அவள பத்தி எதுவும் தெரிஞ்சுதா” என்று கவலையாக வினவ,

 

அவரையே அழுத்தமாக பார்த்த தியா “யாழிசை உங்களுக்கு வாய்ஸ் அனுப்பின நம்பர ட்ராக் பண்ண முயற்சி பண்ணிட்டு தான் இருக்கோம்.. சீக்கிரமே கண்டு பிடிச்சிடலாம்.. ஆனா இப்போ எனக்கு சத்யா பத்தின டீட்டைல்ஸ் வேணும்.. லைக் அவள பத்தின அடையாளம் ஹைட் வெயிட் பிளட் குரூப் இந்த மாதிரி அவள பத்தின பெர்சனல் டீட்டைல்ஸ் எல்லாமே வேணும்” என்றதும் அவரோ புருவம் சுருக்கி யோசனையாக பார்க்க,

 

அதை உணர்ந்த தியா “என்ன” என்க,

 

“இல்ல மேடம் நேத்து தான சத்யா கேஸ் க்ளோஸ்ன்னு சொன்னீங்க.. இப்போ மறுபடியும் விசாரிக்குறீங்க” என்றதை கேட்டு,

 

அவரை முறைத்த தியா “நாங்க கேக்குறது கொடுத்த உங்க உடம்புக்கு நல்லது தேவையில்லாம கேள்வி கேட்டு உடம்ப பஞ்சராக்காதீங்க.. புரியும் நினைக்கிறேன்” என்க,

 

அதில் பயந்தவர் பெண்ணவள் கேட்டதை கொண்டு வந்து கொடுக்க, தியாவோ “இப்போதைக்கு இது போதும் வேற எதும் வேணும்ன்னா கேக்குறேன் அண்ட் சத்யா ரூம் பாக்கணும்”

 

“இல்ல மேடம்.. அவ காலி பண்ணினதுமே ஒரு பொண்ணுக்கு ரூம் தேவை பட்டுச்சு சோ ரெண்டு பொண்ணுங்க அந்த ரூம் ஷேர் பண்ணிக்கிட்டாங்க” என்றதை கேட்டு சந்தேக பார்வை பார்த்த தியா “ஏன் இனி அவ வரவே மாட்டன்னு முடிவு பண்ணிட்டீங்களோ” என்க,

 

அதில் ஒரு நொடி தடுமாறியவர் “அய்யோ அப்படி இல்ல மேடம்.. இப்போதைக்கு ரூம் ப்ரீயா இருக்க தேவைப்பட்டுச்சுன்னு கொடுத்தேன் மறுபடியும் அவ வந்தா அரெஞ் பண்ணிக்கலாம் நினைச்சேன்.. அவ்ளோ தான்” என்றதை வேற ஏதோ சிந்தித்த தியா “அப்போ யாழிசை ரூம்”

 

“அவ ரூம் அப்படியே தான் இருக்கு..” என்றதும் அவருக்கு சந்தேகம் வர கூடாது என்றதுக்காக, அவளின் அறையில் ஆராய்ச்சி செய்வது போல் செய்துவிட்டு ரேயனுடன் தன் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள்.

 

அப்போது தான் ருத்ரனும் அங்கு வந்திருக்க, அவனை பார்த்து தியா “நீ எங்கடா இங்க.. ஹாஸ்பிட்டல் டிஸ்சார்ஜ் பண்ணனும்ல இன்னைக்கு”

 

“ஆமா மச்சி.. டாக்டர் மத்தியம் மேல செக் அப் பண்ணிட்டு தான் மத்த பார்மாலிடீஸ் முடிச்சி கிளம்ப முடியும்.. அதான் சையின் வச்சிட்டு போக வந்தேன்..” என்றுவிட்டு “சரி அதுவிடு.. காலைல எங்க போன கேஸ்ல எதாவது லீட் கிடைச்சிதா” என்க, அவளின் பதிலை தான் ரேயனும் பார்த்திருந்தான்.

 

பெண்ணவளோ முதலில் இரு ஆடவர்களின் முன்னிலையில் அன்பு இல்லத்திலிருந்து பெற்ற சத்யாவின் தகவல்களை வைத்துவிட்டு, இரண்டாவதாக இறந்து போன பெண்ணின் இறப்பு சான்றிதழையும் வைத்தவள் “காய்ஸ் முதல பேபியோட மம்மி இறக்கவும் நமக்கு அவங்கள பத்தின எந்த தகவல் என்னன்னு தெரியாது.. அப்புறம் தான் நம்ம ஹோம்ல கலெக்ட் பண்ணின ஆதாரத்துல இருந்த ஃபோட்டோ வச்சி சத்யான்னு கண்டு பிடிச்சி அவ டெத் சர்டிஃபிகேட்ல கூட.. அந்த நேம் கொடுத்தோம் ரைட்டா” என்று கேட்க,

 

ஆடவர்களும் ஆமென்று தலையாட்ட மேலும் தொடர்ந்த தியா “ம்ம்.. இறந்தது சத்யான்னு நம்ம நம்பிட்டு இருந்தோம்.. ஆனா நேத்து தர்மராஜ் ஹோம்ல சத்யா பாத்து ரொம்பவே குழம்பியிருப்போம் சோ அந்த குழப்பத்த தீக்க தான் இன்னைக்கு ஹோம்ல சத்யா டீட்டைல்ஸ் வாங்கினேன்.. லெட் சீ திஸ் காய்ஸ்” என்றதும் இருவரும் தங்கள் முன்னிருந்த ஆதாரத்தை பார்க்க,

 

விவரித்த பெண்ணவளோ “நான் ஹோம்ல வாங்கின தகவல்படி டெத் சர்டிஃபிகேட்ல இருக்கிற பிளட் குரூப் அண்ட் அவ பாடில இருந்த அடையாளம் எல்லாம் ஒத்து போகுது சோ ஹோம்ல இருந்த சத்யா தான் செத்து போனது தர்மராஜ் கூட இருக்கிறது அவள போலவே இருக்கிற ஒரு பொண்ணு அண்ட் ரெண்டு பேருக்குமே எந்த விதத்துலயும் ரத்த சம்பந்தம் இல்ல” என்க,

 

இடை புகுந்த ருத்ரன் “மச்சி அவர் சத்யா தான் அதுன்னு அடிச்சி சொல்லுறாருல.. இதுல அந்த பொண்ணுகிட்ட நெருங்க கூட முடியல.. பின்ன எப்படி செத்து போனது தான் சத்யான்னு நம்ம ப்ரூஃப் பண்ண முடியும்” என்றதை கேட்டு நண்பனின் தலையை கலைத்து “ஸ்மார்ட் பாய்” என்று புகழ்ந்த பெண்ணவள் அவர்களின் முன் ரத்தம் மாதிரி பரிசோதனை தாளை வைக்க,

 

அதை பார்த்துவிட்டு இருவரும் புரியாமல் பெண்ணவளை நோக்க, கைக்கு சுளுக்கெடுத்த தியாவோ “இந்த பிளட் ரிப்போர்ட் தர்மராஜ் ஹோம்ல நம்ம பாத்த சத்யா ஜெராக்ஸ்யோடது அவளுக்கு ஏபி பாஸிட்டிவ் அண்ட் செத்து போன சத்யா பிளட் குரூப் ஓ பாஸிட்டிவ்.. சோ இந்த குரூப்பே அங்கயிருக்கிறது சத்யா இல்லன்னு ப்ரூஃப் பண்ண போதுமானது” என்க, அங்கிருந்த மூன்று தாள்களையும் நன்கு பார்த்த ஆடவர்களுக்கும் அவள் கூறியது நன்கு புரிந்தது.

 

அவளை யோசனையாக பார்த்த ரேயன் “இது எப்படி உனக்கு கிடைச்சுது”

 

“எப்படி கிடைச்சா என்ன.. நமக்கு தேவை ஆதாரம்” என்று தோலை குலுக்க, அதில் இரு ஆடவர்கள் முறைத்து தள்ள,

 

அதை கண்டு கொண்டால் அவள் தியாழினி அல்லவே, அதனை கண்டு கொள்ளாமல் அவர்களை மேலும் கடுப்பேத்தி விட்ட தியா “அப்புறம் காய்ஸ் இந்த ரிப்போர்ட் சத்யா இல்லன்னு ப்ரூஃப் பண்ணினாலும் நம்ம இன்னும் சில ஆதாரங்கள் கண்டு பிடிக்கணும்.. எனக்கு இந்த தர்மராஜ் மேல டவுட் இருக்கு சோ நம்ம இந்த பிளட் குரூப் மட்டும் நம்பி போனா அவர் ஈஸ்யா ரூட் மாத்தி விட்டாலும் ஆச்சரியப்பட இல்ல.. சோ வீ வான்ட் மோர் எவிடென்ஸ்” என்று தன் உரை முடிந்தது போல் தண்ணீரை குடித்து விட்டு ஹாயாக சுழல் நாற்காலியில் அமர்ந்து சுற்றி கொண்டிருந்தாள்.

 

அவளை முறைத்த ரேயன், அதனை இழுத்து சுற்ற முடியாதுப்படி நாற்காலிக்கு சிறையிட்டவன் “யாழி பீ சீரியஸ் எப்படி இது கிடைச்சது”

 

“சொல்லனுமா” என்றவள் இருவரும் முறைக்கவும் “சரி சொல்லி தொலையுறேன்” என்று மேலை பார்க்க, இருவரும் பார்வையை மாற்றாததில் “என் மூஞ்சில படமா ஒட்டியிருக்கு ஃபிளாஷ்பேக் வேணும்ன்னா மேல பாருங்கடா” என்க,

 

இவ்வளவு நேரம் கடுப்பிலிருந்த ரேயனுக்கு சிரிப்பு வந்து விட, யாருமரியா வண்ணம் இதழுக்குள் ஒளித்து கொண்டான்.

 

ருத்ரனோ ‘முத்தி போச்சு’ என்று தலையில் அடித்து கொண்டு மேலை பார்க்க, பெண்ணவளோ காலையில் செய்த வித்தையை அவர்களிடம் கூறினாள்.

****

இன்று காலையில் வழக்கம் போல் எழுந்த தியா, ருத்ரனிடம் மட்டும் வழக்கு சம்பந்தமாக வெளியே சென்று வருகிறேன் என்று கூறி, எட்டு மணிக்கெல்லாம் அங்கிருந்து கிளம்பியவள் நேராக வந்தது என்னவோ

தர்மராஜ் நேற்று அழைத்து வந்த இடத்திற்கு தான்.

 

அங்கு தள்ளியிருந்த துணிக்கடைக்கு சென்று பர்தா அணிந்து கொண்டு முழுதாக தன்னை மறைத்து வெளியே வந்தவள், யாரின் வருகைக்காகவோ காத்திருந்து எதிரே இருந்த தேனீர் கடையில் சோடா வாங்கி வாயை மறைத்திருந்த துணியை மட்டும் மேலே ஏத்திவிட்டு குடித்தவளின் பார்வை அவர் வருகிறாரா என்று தான் பார்த்து கொண்டிருந்தது.

 

அவள் குடித்து முடிக்கவும், அவர் உள்ளே சென்று வரவும் சரியாகயிருக்க, மேலே ஏத்திய துணியை கீழே இறக்கிவிட்ட தியா, அவர் வெளியே வருவதற்காக காத்து கொண்டிருந்தாள்.

 

சரியாக, அவர் வெளியே வரவும் பெண்ணவள் காதில் திறன்பேசியை வைத்து பதற்றமாக பேசியது போல் எதற்சியாக, அவர் மேல பலமாக மோதி விட்டாள்.

 

ஆனால், இதை எதிர்பார்க்காமல் வந்தவர் தடுமாறி கையிலிருந்த ரத்த மாதிரியை கீழே நழுவ விட, அதை எதிர்பார்த்தது போல் விழாமல் பிடித்து கொண்ட தியா, தன்னுடைய கைபையில் அதே போல் சிவப்பு மை உற்றப்பட்டிருந்த பாட்டிலை கீழே போட்டுவிட்டு தான் எடுத்ததை கைப்பையில் பத்திரப்படுத்தி கொண்டாள்.

 

பின் பெருமூச்சு விட்டு அங்கிருந்த சுவற்றை பிடித்தவாறு கண்கள் மூடி நின்றவரின் அருகில் வந்த தியா “சாரிங்க எமர்ஜென்ஸி கால் பேசிட்டே வந்ததுல கவனிக்கல ரியலி சாரி.. ஆர் யூ ஓகே” என்க,

 

அவள் கூறியதை நம்பியவரும் “நோ பிராப்ளம் சடனா மோதவும் தலை சுத்திருச்சு வேற ஒன்னும் இல்ல” என்றதை கேட்டு பதறி அவருக்கு தண்ணீரை கொடுத்த தியா, கீழே விழுந்ததை பாவமாக பார்த்துவிட்டு “சாரி என்னால பிளட் வேஸ்ட் ஆயிடுச்சு”

 

₹இட்ஸ் ஓகே.. நான் மறுபடியும் அவங்ககிட்ட கலெக்ட் பண்ணிக்கிறேன் நீங்க எமர்ஜென்ஸி சொன்னீங்களே கிளம்புங்க” என்றதும் அவர் கை குலுக்கியவள் “தேங்க்ஸ் ஃபார் அண்டர்ஸ்டன்ட் அண்ட் ஒன்ஸ் அகைன் சாரி” சென்றவள் அங்கிருந்து தள்ளியிருந்த தன் வண்டியை எடுத்து கொண்டு கிளம்பி நேரே வந்து என்னவோ வழக்கிற்காக அடிக்கடி செல்லும் நம்பிக்கையான பரிசோதனை நிலையத்திற்கு தான்.

 

அங்கு சத்யா என்ற பெயர் பதித்தே சோதனை சீட்டை பெற்று கொண்டு, அன்பு இல்லத்திற்கு வந்து சேர்ந்து அதன் பிறகு தான் ரேயனுக்கு அழைத்தது என்று விட்டத்தை பார்த்து கூறி பெருமையாக காலரை இழுத்துவிட்டு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு கெத்தாக சாய்ந்திருந்தாள்.

 

ஏதோ சிந்தித்த ருத்ரன் “ஏய் இரு இரு.. நீ பண்ணினதெல்லாம் ஓகே.. அவங்க இன்னைக்கு ஹோம் வந்து பிளட் சாம்பிள் எடுக்கிறது.. அதுவும் அந்த சத்யா ஜெராக்ஸ்க்கு தான் எடுக்குறாங்கன்னு உனக்கு எப்படி தெரியும்.. டைமிங் முத கொண்டும் கரெக்ட்டா கண்டுபிடிச்சிருக்க” என்க,

 

 

மூக்கு புடைக்க முறைத்த தியா “அடேய் கேள்விக்கு பிறந்தவன கொஞ்ச நேரம் கெத்து பெர்பார்மன்ஸ் கொடுக்க விடுறியாடா பரதேசி”

 

“அதெல்லாம் ஸ்லோ மோஷன்ல அப்புறம் கொடுத்துக்க முத நான் கேட்டதுக்கு பதில் சொல்லு” என்க,

 

அவனை உள்ளுக்குள் அர்ச்சித்துவிட்டே “அது நேத்து தர்மராஜ் பாக்க ஹாஸ்பிட்டல் போய் அவர் கூப்பிடுற வரை வெயிட் பண்ணிட்டு இருந்தோம்ல அந்த கேப்ல தான் ரெண்டு சிஸ்டர் பேசிட்டு இருந்தாங்க..

 

சத்யாக்கு டாக்டர் ஏதோ நியூ டெஸ்ட் கொடுத்து இருக்கார் அதுவும் சாப்பிடும் முன்ன எடுக்கணுமாம் நாளைக்கு நீ போய் எடுத்து வந்துடுன்னு ஒரு நர்ஸ் இன்னொருத்தங்க கிட்ட டைமிங் சொல்லி பேசிட்டு இருந்தாங்க.. அப்போ நான் வேற ஏதோ சத்யான்னு கண்டுக்கல தர்மராஜ்கிட்ட பேசிட்டு சத்யா போல இருக்கிற ஜெராக்ஸ பாத்ததும் தான் அவள பத்தி தான் பேசிருக்காங்கன்னு நேத்து சத்யா டெத் ரிப்போர்ட் பாக்கும் போது நினைவு வந்துச்சு.. சோ கெட்டப் போட்டு மொத்தமா அமுக்கிட்டேன்” என்று கண்ணடித்தவளை ருத்ரன் “அடிப்பாவி” என்று பார்த்திருக்க,

 

அவளின் சேட்டை தந்திரம் தெரிந்த அவளின் அவனோ பெண்ணவளை ரசித்து கொண்டிருந்தான்.

 

ஆடவன் ரசிக்க பெண்ணவள் முறைக்க, ருத்ரனோ இருவரின் செயலில் கடுப்பில் இருந்தவன் ‘இதுங்க பாக்குறத பாத்தா இடத்த காலி பண்ணாதுங்க போல’ என்று தனக்குள் நொந்து போதும் “இன்னைக்கு ஹாஸ்பிட்டல டிஸ்சார்ஜ் சோ கிளம்பலாம் வாங்க” என்று முன்னே செல்ல,

 

இருவரின் பார்வை காரின் ஏறியும் மாறததில் தலையடித்த ருத்ரன் காரை மருத்துவமனைக்கு விட்டான்.

 

தொடரும்..

 

– ஆனந்த மீரா 😍😍

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. எதற்சி – தவறான சொல்.. எதேச்சை என்பது தான் சரியானது…