
ரேயனோடு சென்ற ஆர்யன் மருத்துவமனையின் முறையை முடித்து வந்து அவர்கள் இருவரின் எதிரே இவர்கள் இரு அமர்ந்து கொள்ள,
தன்னவளுக்கு எதுவும் இல்லை என்றதில் மனம் நிம்மதியடைய, பெண்ணவள் விழித்து குழந்தை இல்லை என்றும் நிலையை எப்படி எடுத்து கொள்வாள் என்று ஒரு பக்கம் பயம் இருக்கவே செய்தது,
அதோடு எதிரே அமர்ந்திருக்கும் ருத்ரனை காணவும் பாவமாக இருக்க, தங்கையும் நல்லப்படியாக வந்து சேர தனக்குள் வேண்டுதலை போட்டு கொண்டு அமர்ந்திருந்தான்.
இப்படியே அரைமணி நேரம் கழிய சித்திரா அறையிருந்து மருத்துவர் வெளியே வர, இவ்வளவு நேரம் ஜடம் போல் அமர்ந்திருந்தவன் மருத்துவர் வரவும் உடலில் மின்னல் பாய்ந்தது போல் அவரின் முன் நின்று “என் சிட்..டு எப்..படி இருக்..கா டாக்..டர்” என்றவனுக்கு வார்த்தைகள் வெளியே வர சிரமமாக இருக்க,
அவனின் கையை பற்றி கொண்டு தியாவும் வந்து நிற்க மற்றவர்களும் மருத்துவரை சூழ்ந்து கொண்டனர்.
மருத்துவரோ “அவங்க வயித்துலயே ஆழமா ரெண்டு தடவ கத்திய குத்திருக்காங்க.. அவங்க அத தாங்கிக்க முடியாம ரொம்பவே வீக் ஆயிட்டாங்க.. ரத்த போக்கும் அதிகமாயிருந்துச்சு கஷ்டப்பட்டு தான் அவங்க உயிர மீட்டுருக்கோம்..
இனி அவங்க சேப் தான்.. அப்புறம் வயித்துல தையல் போட்டு இருக்கோம் சோ அவங்கள ஸ்ட்ரெஸ் பண்ணாம பத்திரமா பாத்துக்கோங்க.. இன்னைக்கு ஐசியூல தான் இருப்பாங்க நாளைக்கு தான் நார்மல் வார்ட் மாத்துவோம் கான்சிசியஸ் வர நாளைக்கு மதியம் மேல ஆகும்.. கொஞ்ச நேரம் கழிச்சு பாக்கணும்ன்னு நினைக்கிற ஒருத்தர் மட்டும் போய் டிஸ்டர்ப் பண்ணாம பாத்துக்கங்க” என்றுவிட்டு மருத்துவர் சென்றதும் பொத்தென்று தரையில் மண்டியிட்டான் ருத்ரன்.
அவனுக்கு ஆறுதலுக்காக மண்டியிட்ட தியா “மச்சி.. அவ ஓகே ஆயிட்டா எழும்பு” என்க,
அவளை திரும்பி பார்த்தவன் “மச்சி அவ வயித்து வலிய கூட தாங்க மாட்டாடி.. கத்தி குத்து..” என்று முகத்தை மூடி அழுதவன் “டாக்டர் கஷ்டப்பட்டு தான் காப்பாத்திருக்காங்கலாம்.. அவ மட்டும் என்கிட்ட வராம போயிருந்தா செத்துருப்பேன்டி.. என் சிட்டுக்கு எதுக்குடி இவ்வளவு கஷ்டம் அவ யாருக்கும் எந்த பாவமும் பண்ண மாட்டா.. அவளுக்கு இப்படியொரு நிலையா” என்று நண்பன் பேச பேச உள்ளுக்குள் வேதனையடைந்த தியா
“என்னடா பேசுற அப்படிலாம் நடக்க நான் விடுவேனா போய் அவள பாத்துட்டு வாடா” என்று அவன் கையை பற்றி அழைத்து சென்று அறைக்குள் நண்பனை அனுப்பி விட்டு பெண்ணவள் வேதனையோடு நிற்க,
தன்னவளின் வேதனை புரிந்து அவ்விடம் வந்த ரேயன், அவளின் கையை தன் கைகளுக்குள் பிடித்து கொண்டு நின்றான்.
ருத்ரன் உள்ளே சென்று வாடிய கொடியாக மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் கண்கள் மூடியிருந்தவளை கண்டு உடைந்து, ஒரு நிமிடம் கூட முழுதாக நின்று பார்க்க முடியாமல் வெளியே வந்தவன் நண்பர்கள் இருவரையும் அணைத்து கொண்டான்.
அடுத்ததாக யாழிசைக்கும் முழுதாக சிகிச்சை முடிந்திருக்க, அவளும் இன்று நிகழ்ந்த நிகழ்வின் களைப்பு மற்றும் மருந்தின் வீரியத்திலும் மயக்கத்திலே இருந்தாள்.
இரு ஆடவர்களுமே தங்களின் இணையின் விழிப்பிற்காக தங்கள் விழியை மூடாது விழித்திருக்க, அவர்களுக்கு ஆதரவாக தியா மற்றும் ரேயன் உறக்கம் தொலைத்திருந்தனர்.
******
மறுநாளும் விடிய இரு பெண்களையும் தனி தனி அறையில் மாத்திருக்க, யாழிசை அறையில் பாட்டி வாகியிருக்க, மீதி மூருவரும் குழந்தைகளுடன் சித்திராவின் அறையில் இருந்து கொண்டனர்.
முதலில் கண் விழித்ததோ என்னவோ யாழிசை தான், அவள் கண் விழிப்பதை உணர்ந்து வாகி பாட்டியை அழைத்து கொண்டு அவர்களுக்கு தனிமை கொடுத்து சித்திராவின் அறைக்கு சென்று விட,
பெண்ணவளின் கைபற்றி அமர்ந்திருந்த ஆர்யன் அவள் விழைப்பதை உணர்ந்து “இசை..” என்று மென்மையாக அழைத்திருந்தான்.
கண் விழித்ததுமே பாவையின் கை அவள் வயிற்றில் தான் சென்றதது, அவள் தான் குழந்தையை முதலில் களைக்க நினைத்திருந்தாள்,
ஆனால், இப்போது அவ்வுயிர் தன்னிடம் இல்லையே என்று வலிக்கிறது. பின் கலங்கிய விழிகளுடன் அமர்ந்திருந்த தன்னவனை பார்த்தவளுக்கு இன்னும் அவ்வலி மிகுதியாக அவனை அணைக்க எண்ணி மெல்ல எழுந்து அமர முயற்சிக்க, ஆடவனும் அவளுக்கு உதவி புரிந்து அமர வைக்க, மறுநொடி அவனின் இடுப்பை கட்டி கொண்டு அழுது விட்டாள்.
அவளை சிறிது நேரம் அழ விட்டு தலையை தடவி கொடுத்தவன் “ஒன்னுமில்லடி நான் இருக்கேன்ல இசை.. அழாதடா ஏற்கனவே வீக்காயிருக்க சொல்லுறேன்ல” என்று அவளை அணைப்பிலிருந்து விலக்கி கன்னங்களை பற்றி கண்ணீரை துடைத்துவிட்டு “இசை நீ ஒரு குழந்தைய காப்பாத்த உன் உயிர தியாகம் பண்ணிருக்க இப்போ நீ அத நினைச்சி ஃபீல் பண்ணினா அந்த குழந்தைய காப்பாத்தினதுக்கு அர்த்தமே இல்லாம போயிடும்டா.. உனக்காக எல்லாருமே இருக்கோம் எதையும் யோசிக்காத” என்று அவள் நெற்றியில் அழுத்தமாக தன் இதழை பதித்தான்.
பாவம் அவளுக்கு தான் இது எதுவுமே உரைக்காமல் போனது,
அவனை கண்ட நாள் அன்று இருவரும் பேசியதை நினைத்து பார்த்தவளுக்கு குழந்தை இல்லையென்றால் அவனும் தன்னை விட்டு சென்று விடுவானோ என்ற பீதியோடு அவனின் குறை வேறு நினைவில் வந்து தன்னால் அவனுக்கு குழந்தையை கொடுக்க முடியவில்லை என்ற வலி எழ,
அவன் பேசி முடிக்கவும் யாழிசை “என்னவிட்டு போயிடுவீங்களா ஆரி” என்றதில் புரியாமல் அதிர்ந்தவன் “என்ன பேசுற இசை.. நான் எதுக்கு உன்னவிட்டு போக போறேன்”
“இந்த குழந்தைக்காக தான என்ன உங்ககூட வச்சிருந்தீங்க.. இப்போ குழந்தை இல்லையே.. அப்போ என்ன உங்களவிட்டு போக சொல்லிட மாட்டீங்க தான” என்றவளுக்கு அவனை விட்டு பிரிவதை நினைக்கவே வலிக்க செய்தது
அவள் எதற்காக இப்படி கேட்டால் என்று புரியாமல் விழித்தவன், அதற்கு அவள் கூறிய விளக்கத்தை கேட்ட பிறகு தான், அவளின் எண்ணங்கள் புரிந்து “பைத்தியமா இசை.. நீயே என்ன அடிச்சி விரட்டினாலும் நான் உன்னவிட்டு போக மாட்டேன்.. நீ மட்டும் தான்டி இந்த ஆர்யன் பொண்டாட்டி”
“இல்லையே நான் தான என் கழுத்துல தாலி கட்டிக்கிட்டன்” என்று மூக்கு உறிஞ்சி கூறியவளின் செயலில் தன்னை அறியாமல் வரும் புன்னகையை இதழ் கடித்து தடுத்த ஆர்யன் “அன்னைக்கு நமக்கு கல்யாணம்ன்னு சொல்லும் போதே நீ யோசிக்கவும் எங்க என்னவிட்டு போயிடுவியோன்னு தான் அப்படியொரு பிட்ட போட வேண்டியத போச்சு.. மத்தப்படி உன்ன விட்டுட்டு போகிற ஐடியாலாம் எனக்கு இல்லடி..” என்றும்
அவள் முகம் தெளியாததில் பெருமூச்சுவிட்டு, தன் பேண்ட் பாக்கெட்டிலில் எப்போதும் அன்னையின் நினைவாக வைத்திருக்கும் அவரின் தாலி செயினை எடுத்தவன் யோசிக்காமல் பெண்ணவளின் கழுத்தில் அணிவித்துவிட்டு “இங்க பாரு இசை.. எனக்கு எங்க அம்மான்னா ரொம்ப பிடிக்கும் அவங்க ஞாபகமா எப்போவுமே இந்த தாலி என்கிட்ட இருக்கும்.. அதையே உன் கழுத்துல போட்டுட்டன் இந்த ஜென்மம் மட்டும் இல்ல எனக்கு எத்தன ஜென்மம் இருக்கோ அத்தன ஜென்மமும் நீ மட்டும் தான்டி என் பொண்டாட்டி.. எப்போவுமே அது உன் நினைவுல இருக்கட்டும் மிஸ்டரஸ் யாழிசை ஆர்யன்” என்று கண் சிமிட்டி கூறி பெண்ணவளின் உச்சந்தலையில் இதழை அழுத்தி பதித்து “லவ் யூ இசை..” என்ற நொடி பெண்ணவள் அவனின் இடுப்பை கட்டி கொண்டாள்.
*****
இருவருக்கு தனிமை கொடுத்து அனைவரும் சித்திராவின் அறையிலிருக்க, ருத்ரனோ அவளை தவிர பார்வை வேறு எங்கும் நகர்த்தாமல் தன்னவளின் பார்வைக்காக ஒரு சொட்டு தண்ணீர் கூடயில்லாமல் தவமாய் அவளின் அருகில் அமர்ந்திருந்தான்.
அரைமணி நேரத்தில் அவளும் மெல்ல கண் விழிக்க, அனைவரும் அவளை சூழ்ந்து கொண்டனர்.
தன்னவனை பார்க்காது கையை மற்றும் அவனுக்கு ஆதரவாக பற்றி கொண்டவள் சுற்றி தனக்காக கலங்கி நிற்பவர்களை பார்த்து கண் சிமிட்டி விட்டு இறுதியாக பார்வையை தமக்கையின் புறம் நிலைக்கவிட்ட சித்திரா “என்..ன சிஸ்..டர் உன் உயிர எடுக்..க உயிரோ..ட வந்..துட்டேன் பாக்குறி..யா இல்..ல இனி அ..க்கான்னு கூப்..பிட மாட்டா..ன்னு நினை..ச்ச ஒரு..த்தி திரும்பி வந்துட்..டாளே நினைக்..கிறியா” என்று மெல்ல புன்னகைத்தவளுக்கு வலியில் வார்த்தைகள் வெளியே வர சிரமமாக இருந்தது.
தான் அக்கா என்று கூப்பிட கூடாதென்று கூறிதோடு, சில நேரம் உயிரை எடுக்காத என்று பெண்ணவளை திட்டியதையும் தான் சுட்டி காட்டுகிறாள் என்று தியாவிற்கு புரிய,
கையை மடக்கி உணர்வுகளை அடக்கி செல்ல போக, அதனை உணர்ந்து கையை பிடித்து தடுத்த சித்திரா “எப்போவுமே என்னவிட்டு போக நினை..ப்ப தான.. இப்போ..வும் என் கூட இருக்..க தோண..லயா” என்றதை கேட்டு இதழ் கடித்து வெளியே வர துடிக்கும் கண்ணீரை உள்ளிழுத்து கொண்டு “சித்து உன்ன பாக்க தவம் கிடந்து தவியா தவிச்ச உன் வருங்கால புருஷன்கிட்ட இப்போ பேசு.. நம்ம அப்புறம் பேசலாம்” என்று அவளிடமிருந்த தன் கையை விடுவித்து அனைவரிடமும் கண்ணை காட்டிவிட்டு செல்ல,
இருவருக்கு தனிமை கொடுத்து மற்றவர்களும் தியாவின் பின்னயே வந்துவிட்டனர்.
****
அவர்களும் சென்றதும் தன்னையே பார்த்திருந்த மாமனின் புறம் திரும்பிய சித்திரா “பயந்துட்டியா மாமா”
“செத்துட்டன்டி.. நீ மாமான்னு கூப்பிடும் போது தான் இந்த ஜடத்துக்கே உயிர் வந்திருக்கு சிட்டு.. கொஞ்சம் விட்டா என்னவிட்டு போக பாத்துருப்பியேடி பாவி” என்று அவள் கையை பற்றி ஆடவன் குலுங்கி அழ,
அவனை சமாதானப்படுத்த முடியாமல் திண்டாடிய பாவை “மாமா அழாதயா.. யோவ் மாமா ஏற்கனவே வயித்துல கிண்டி வச்சிருக்காங்க அதுவே வயிற் உயிர் போகுதுயா.. நிலமை புரியாம நீ வேற அழுது உசுர எடுக்காத” என்றவளுக்கு வலியில் வார்த்தைகளை விட வாயில் காற்றே அதிகமாக வந்தது.
அவளின் நிலை உணர்ந்து கண்ணீரை துடைத்தவன் “நான் அழ மாட்டேன்டி” என்க, அவனின் உணர்வு புரிந்தாலும் ஏனோ பாவையால் அவனின் அழுகையை தாங்க முடியவில்லை, அதோடு காயத்தால் உண்டான வலியோடு அவனின் வேதனையும் சேர்ந்து மேலும் வலியை தர தான் செய்தது,
இருப்பினும் அவனை சரி செய்யும் பொருட்டு “யோவ் மாமா.. நான் உக்கார ஹெல்ப் பண்ணேன்” என்று எழும்ப முயற்சித்து செய்தவளை பதறிய ருத்ரன் “சிட்டு வலிக்க போகுது அசையாம ரெஸ்ட் எடுடி” என்றதும் பெண்ணவள் பார்வையால் இறஞ்ச,
மெல்ல பெண்ணவளை அமர வைத்து முதுகிற்கு வாகாக தலையணை கொடுக்க, பின் அவனின் கையை பற்றிய பாவை “இப்படி உக்காரு மாமா” என்று பக்கத்திலே அவனை அமர வைத்து தோலில் சாய்ந்து அவன் கையை பற்றியவள் “மாமா எனக்கு உன்ன கட்டிக்கிட்டு ரொம்ப சந்தோசமா வாழனும் ஆசை.. உன் உயிர என் வயித்துல சுமக்கணும்.. அதுக்குள்ளலாம் உன்னவிட்டு போயிட மாட்டேன் மாமா.. அப்படியே போக நினைச்சாலும் உன் காதல் என்ன போக விடாது மாமா.. இப்போ கூட போக விடலயே அந்த மாதிரி” என்றவளுக்கு வலியில் சோர்வாகிவிட,
சில நேரம் அமைதிக்கு பின் அவனின் தோலில் சாய்ந்தே உறங்கி விட்டாள்.
*****
வெளியே வந்தவர்கள் யாழிசையின் அறைக்குள் செல்ல, அவளை பார்த்துவிட்டு மருத்துவமனை வெளியே வந்த தியாவோ வண்டியில் ஏறினாள்.
அவளின் உணர்வுகளை படித்தவனும் பின்னே ஏறி கண்ணாடி வழியே பார்க்கும் பெண்ணவளின் பார்வைக்கு “இனி உன் பாதைல நானும் இருப்பேன்.. எந்த பாதையா இருந்தாலும்” என்று உன் வாழ்க்கையிலும் இனி நான் எப்போதும் இருப்பேன் என்பதை சொல்லாமல் சொல்ல,
அதன் அர்த்தம் புரிந்து அவனை முறைத்தவள் வண்டியில் அன்பு இல்லத்திற்கு வந்து சேர்ந்தாள்.
பெண்ணவளுக்கோ இரு பெண்களின் நிலையை பார்த்து அப்படி ஒரு கோவம், காரை விட்டு இறங்கியவள் யாரு யாரு இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் அவ்விடத்தின் உரிமையாளரின் அறைக்குள் சென்றவள் தான் நேற்று செல்லும் போது மந்தாகினி மற்றும் சதிஷ் எவ்விடத்தில் இருந்தார்களோ அவ்விடத்தில் அமர்ந்திருக்க,
இருவரையும் பார்த்துவிட்டு அவர்களுக்கு காவலாக விட்டு சென்ற தன்னுடைய கூட்டத்தை சேர்ந்த இருவரிடம் “அவங்க எதுவும் வாய திறந்தாங்களா” என்றதுக்கு அவர்களும் இல்ல என்று தலையாட்ட,
“ஓகே.. டோர் லாக் பண்ணிட்டு வெளியே வெயிட் பண்ணுங்க யாரும் உள்ள வர கூடாது” என்று கட்டளையிட, அப்போது தான் ரேயன் நுழைந்திருக்க, அவர்களும் தலையாட்டி கதவை அடைத்துவிட்டு சென்றனர்.
அவர்கள் சென்றதும் தான் தாமதம் மந்தாகினியின் தலையை கொத்தாக பிடித்து மூக்கிலே ஒரு குத்து விட, அவருக்கோ ரத்தம் பொல பொலவென்று வந்தது.
அதை பார்த்தும் கூட பெண்ணவளுக்கு ஆத்திரம் அடங்கவில்லை
அனைவரும் உடைந்திருக்க தானும் உடைந்து விட கூடாதென்று உணர்ச்சிகளை அடக்கி இருந்ததின் வெறியை மொத்தமும் மந்தாகினியை அடித்து தியா காட்டி கொண்டிருக்க,
பெண்ணவளின் உணர்வுகளை படித்த ரேயனும் அவளின் அவதாரத்தை வேடிக்கை பார்த்தவாறே நடுங்கி கொண்டிருந்த சதீஷின் தோலில் கைபோட்டு நின்றிருந்தான்.
பத்து நிமிடம் அடி வாங்கியத்துக்கே மந்தாகினி மயங்கி விழுந்து விட, அதில் பயத்தில் நடுங்கி கொண்டிருந்த சதிஷை நக்கலாக ஏறிட்ட ரேயன் “என்னடா பாக்குறதுக்கே நடுங்குற.. உனக்கு ஒரு டெமோ காட்ட சொல்லவா” என்றவன் “யாழி அதான் அவ மட்டையாகிட்டாளே இங்க ஓரு ஃப்ரெஷ் பீஸ்” என்றதை கேட்டு கீழே இறங்கிய காப்பை ஏற்றிவிட்டு அவர்களை நோக்கி வர,
அதில் மிரண்ட சதிஷ் “சார் சார்.. நான் உண்மைய சொல்லிடுறேன்” என்றதை கேட்டு, அவனின் முடியை கொத்தாக பற்றிய தியா “ஏன்டா அடி வாங்கி உண்மைய ஒத்துக்கணும்ங்குற பேஷன மாத்தவே மாட்டீங்களாடா” என்றவாறு இழுத்து வந்து சோஃபாவில் அமர வைத்துவிட்டு, மந்தாகினியை தூக்கி கொண்டு அமர வைத்தாள்.
பின் அவர்கள் எதிரே இருவரும் நாற்காலியில் அமர்ந்து கொள்ள, ரத்தம் வடிய மயங்கியிருந்த மந்தாகினியின் மூஞ்சில் தண்ணீரை தெளித்தவள் “இங்க பாரு.. இப்போவும் வாய திறக்கல.. என் வேலை போனாலும் பரவாலன்னு கொன்னு போட்டுருவேன்” என்று கர்ஜிக்க, மந்தாகினியும் உடல் வலுயிழந்து “சொல்லிடுறேன் மேடம்.. சொல்லிடுறேன்” என்று அவர்களிடம் இருவரும் உண்மையை கொட்ட தொடங்கினார்கள்.
தொடரும்…
ஆனந்த மீரா 😍😍
