
வரவேற்பு பெண்ணின் மூலம் சம்பந்தப்பட்டவர்களை அழைக்க கூறியவனோ அங்கிருந்த சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொள்ள, அவன் ஆளுமையில் விழுந்து தொலைந்த தியாவும் அவன் அருகில் அதே அளுமையுடன் கெத்தாக அமர்ந்து கொண்டாள்.
அவளை ஓரக்கண்ணில் கண்டு கொண்ட ரேயனின் இதழ்களும் ரகசியமாக விரிந்து மறைந்தது.
பின் விஷயம் கேள்விப்பட்டு பதறியடித்து இல்லத்தின் மேலாளரும் வந்திருக்க, அதன் அடுத்து வந்த உரிமையாளர் அவன் எதிரே வந்து “என்ன சார் விசாரணை” என்றதை கேட்டு எழுந்த தியா “மிஸ்டர் தேவராஜ் விசாரணையா வந்திருக்கும் பிளீஸ் கோ- ஆபரட்”
“என்ன விசாரணை.. திடீர்ன்னு வந்து உங்க இஷ்டத்துக்கு விசாரிக்கணும்ன்னு சொல்லுறீங்க ஆர்டர் இருக்கா” என்றதில் இம்முறை ரேயன் எழுந்து அவரின் முன் ஒரு தாளை நீட்ட,
அதை படித்து பார்த்த இல்லத்தின் உரிமையாளர் “சரி விசாரிக்க அலோ பண்றேன்.. பட் என்ன கேஸ்ன்னு சொல்லுறீங்களா” என்றதுக்கு தியா “உங்க ஹோம்ல இருந்த பொண்ணு சத்யா பத்தி தான் கேஸ்” என்றதும் உரிமையாளர் “சத்யா..” என்றவர் அங்கிருந்த இரு வார்டன்களை பார்க்க, முன்னே வந்த மாந்தாகினி “சார் அந்த பொண்ணு வேலை கிடைச்சுது சொல்லிட்டு ஒரு பத்து ஒன்பது மாசம் முன்ன தான் போனா” என்க,
அவரோ “கேட்டீங்களா.. அந்த பொண்ணு வேலையா போயிருக்கா அவள பத்தி என்ன விசாரணை” என்றதை கண்டு கொள்ளாத ரேயன், மந்தாகினி எதிரே சென்று “அந்த பொண்ணு எங்க வேலைக்கு போச்சுன்னு தெரியுமா”
“இல்ல சார்.. சென்னைல ஏதோ பெரிய கம்பனில மெயில் வந்துச்சுன்னு சொன்னா.. நான் தான் போய் ரயில்வே ஸ்டேஷன்ல அந்த பிள்ளைய செண்ட் ஆப் பண்ணி சென்னை ட்ரெயின் ஏத்திவிட்டேன்” என்றதை கேட்டு நெற்றியை நீவியவன் “சரி அதுக்கு அப்புறம் ஃபோன் வந்துச்சா”
“ஆமா சார்.. இடைல ரெண்டு மூணு தடவ பேசினா அதுக்கு அப்புறம் ஓவர் வொர்க் பேச கிடைக்கும் போதே பேசுறேன் சொன்னா.. நானும் பெருசா எடுத்துக்கல” என்க,
உரிமையாளர் தேவராஜோ “நீங்க இன்னும் என்ன விஷயம்ன்னு சொல்லவே இல்ல” என்றதில் ஆடவன் தியாவை பார்க்க,
அதன் அர்த்தம் புரிந்தவள் “மிஸ்டர் தேவராஜ் சத்யா இஸ் டெத்” என்றதில் அனைவரும் அதிர, மந்தாகினியோ “சத்யா உயிரோட இல்லையா.. நீங்க சொல்லுறது உண்மை தானா” என்றவருக்கு வருத்ததில் கண்களும் கலங்கி விட்டது.
அவரை பார்த்துவிட்டு மேலும் தொடர்ந்த தியா “ஆமா.. அவங்க இறந்து பத்து நாள் ஆகுது.. அண்ட் அவங்க டெலிவரி அப்போ இறந்துட்டாங்க.. பொண்ணு பிறந்துருக்கு அவங்களுக்கு” என்றதில் அதிர்ந்த மந்தாகினி “என்ன சொல்லுறீங்க ப்ரெக்னன்ட்டா சத்யா வாய்ப்பே இல்ல.. அப்படி இருந்தா என்கிட்ட சொல்லியிருப்பா நீங்க வேற யாரோ நினைச்சி பேசுறீங்க” என்க,
கடுப்பான தியா “எங்கள பாத்தா வேலை வெட்டி இல்லாதவங்க மாதிரி இருக்கா இல்ல கண்ணு தெரியாத குருடி போல இருக்கா.. எந்த விஷயமும் முழுசா தெரியாம விசாரணை பண்ண நாங்க என்ன கேன கிறுக்குன்னு நினைச்சீங்களா” என்று தன் திறன்பேசியிலிருந்த சத்யாவின் புகைப்படத்தை அவர் முன் காட்டி “இது தான சத்யா” என்றதுக்கு அவரும் அதிர்ச்சியாக தலையாட்ட,
தியாவோ “ம்ம் இதான் சத்யான்னா நான் சொன்னதும் இவங்கள பத்தி தான்.. ஏன்னா அவங்க பிரசவலில ரோட்ல விழுந்து கிடந்தாங்க அப்போ தூக்கிட்டு போய் ஹாஸ்பிட்டல் சேத்ததே நாங்க தான்.. அந்த குழந்தை என்கிட்ட தான் இருக்கு.. சாகும் போது அந்த பொண்ணு குழந்தைக்கு ஆபத்துருக்கு நீங்களே பத்திரமா பாத்துக்கங்கன்னு அவர்ட தான் சொல்லிட்டு செத்து போயிட்டாங்க” என்று ரேயனை காட்டி கூறிவிட்டு “சோ நாங்க அவங்கள பத்தி விசாரிக்கும் போது அவங்க இந்த ஹோம்ல இருந்த தகவல் கிடைச்சது.. முழு விளக்கமும் கொடுத்துட்டன் இப்போ எல்லார்க்கிட்டயும் விசாரணை இருக்கு” என்றவள் உரிமையாளரிடம் “மிஸ்டர் தேவராஜ்.. இங்க உங்க ரூம் எங்க” என்றதும் அவரும் கைக்காட்ட,
அத்திசைக்கு ரேயன் சென்று விட தியாவோ “ஓகே.. வரிசையா ஒருத்தரா ரூமுக்கு வாங்க சிசிடிவி ஆஃப் பண்ணிடுங்க” என்றுவிட்டு அவளும் அறைக்குள் நுழைந்து கொண்டாள்
*****
முதலில் உள்ளே நுழைந்த வரவேற்பு பக்கம் நின்ற பெண் அவளிடம் மேலோட்டமாக விஷயத்தை கேட்டுவிட்டு அனுப்பிருக்க, அடுத்தாக அவர்கள் முன் அமர்ந்தது அன்பு இல்லத்தின் மேலாளர்.
இப்போது தியா “உங்கள பத்தி சொல்லுங்க”
“நான் சதிஷ்.. ரெண்டு வருஷமா இங்க மேனஜரா இருக்கேன்.. பெங்களூர் தான் சொந்த ஊர்.. இங்க அடுத்த ஸ்ட்ரீட் தான் என்னோட வீடு ரிசன்ட்டா மேரேஜ்ராகி என் ஒய்ஃப் த்ரீ மந்தஸ் ப்ரெக்னன்ட்டா இருக்கா” என்றவனுக்கு விசாரணை பயத்தில் கைகள் நடுங்கி முகம் வியர்க்க,
அதை கவனித்த தியா மேலும் தன் கேள்வியை தொடர “சரி சத்யா பத்தி நீங்க சொல்ல நினைக்கிறது”
“என்னோட வேலைய தவிர்த்து நான் எந்த பொண்ணுங்ககிட்டயும் பேசுறது இல்ல.. பேசவும் கூடாது சோ எனக்கு அந்த பிள்ளைய பத்தி எதுவும் தெரியாது” என்றுதுக்கு தாடைய தடவிய தியா “அப்படியா சரி ஓகே.. நீங்க இங்க டூ இயர்ஸா மேனேஜரா இருக்கீங்க அந்த டூ இயரஸ்ல சந்தேகப்படும் படி எதாவது நடந்துச்சா.. உங்களுக்கு தெரியாம ஒரு தூசு கூட நகர முடியாதுன்னு நினைக்கிறேன் மேனேஜ்மென்டே உங்க பொறுப்பு தான.. சோ உண்மைய சொல்லிட்டா நல்லா இருக்கும் நாங்களா கண்டுபிடிச்சா கொஞ்சம் விலங்ககம் சாய்ஸ் ஸ் யுவர்ஸ்” என்று பெண்ணவள் கைகட்டி அவனையே அழுத்தமாக பார்க்க,
அவனுக்கோ உடல் நடுங்க “மேம் நீங்க என்ன மீன் பண்ணி கேக்குறீங்கன்னு எனக்கு புரியல.. ஆனா நீங்க நினைக்கிற மாதிரிலாம் எந்த தப்பும் நடக்கல.. எனக்கு இவ்வளவு தான் தெரியும்” என்றதும் அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ரேயன் “சரி மிஸ்டர் சதிஷ்.. நீங்க அப்படியே அந்த சோபால உக்காருங்க” என்று தன் எதிரே சிறிது தூரம் தள்ளியிருந்த சோபாவை கைக்காட்ட, அவனும் பயத்துடன் அமர்ந்திருந்தான்.
அடுத்ததாக மந்தாகினி வர, அவங்களின் அறிமுகத்தை பற்றி கேட்டு முடித்தவள் “சரி நீங்க சென்னை ட்ரெயின் ஏத்திவிட போனதா சொன்னீங்க.. எப்படி ட்ரெயின் மூவ்வாகுற வரை இருந்தீங்களா அதுக்கு முன்னமே வந்துட்டீங்களா”
“இல்ல மூவ்வானதும் தான் வந்தேன்”
“சரி சரி சத்யா பத்தி சொல்லுங்க.. உங்ககிட்ட எதாவது பெர்சனலா ஷேர் பண்ணிருக்காங்களா..”
“அப்படின்னு எதுவும் இல்ல.. எல்லார்கிட்டயும் பேசுற போல தான் என்கிட்டயும் பேசுவா” என்றதில் சிரித்த தியா “ஓ உங்ககிட்ட அவ வேற எதுவுமே சொல்லல போல” என்றவளின் கிண்டல் வார்த்தை அவருக்குள் கிலி பரவ வெளியே காட்டாது “அப்படி எதுவுமே இல்லையே.. நீங்க எத பத்தி கேக்குறீங்க” என்றதில் ரேயன் எழுந்து போய் அவரின் எதிரே கண்ணாடி மேஜையில் அமர்ந்து கொண்டவன் “சரி என்ன டேட் அண்ட் டைம்ன்னு சொல்ல முடியுமா” என்று பெண்ணவளிடம் கண்ணை காட்ட,
மந்தாகினியோ “தேட் தெரியல சார் மந்த் நவம்பர் சார்” என்க,
அதை கேட்டு கேலியாக இதழ் வளைத்து “ஓ ஐ சீ” என்ற ரேயன் “தியா.. அந்த நவம்பர் மாசத்து படத்த காட்டு மேடமும் பாத்துக்கிட்டும்” என்க,
அவனின் பார்வையை உணர்ந்து நண்பனுக்கு குறுசெய்தியை தட்டிவிட்டு விட்டு தன்னுடைய மடிக்கணினியில் அவன் கூறிய படத்தை போட்டு மந்தாகினியின் எதிரே வைத்தவள் “இது நம்பர் மந்த் இரயில்வே ஸ்டேஷன் சிசிடிவி உங்க ரோல் இருக்கான்னு பாத்துட்டு சொல்லுங்க” என்க,
அவரோ தயங்கி “சார்” என்றதில், “பார்த்துட்டு பொறுமையா சொல்லுங்க மேடம்..” என்று வாயில் விரல் வைத்து அமைதியாக பார்க்கும்படி செய்கை காட்டிவிட்டு தியாவை பார்க்க அதன் அர்த்தம் உணர்ந்தும் கண்கள் சிமிட்டி பதில் அளித்தாள்.
பின் இருவருமே மந்தாகினியை காட்டத்துடன் பார்த்தப்படி அமர்ந்திருந்தனர்.
*****
அரை மணிநேரம் கழியவும் அந்த பதிவு முடியவும் சரியாக இருக்க மடிக்கணினியை மூடிய தியா “ஏன் உங்க ரோல் . அந்த சிசிடிவில இல்லன்னு கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்றீங்களா” என்று கூறி கொண்டிருக்க,
மந்தாகினி திறன்பேசி பகிரியிலிருந்த செய்தியால் சிணுங்க, அதை உணர்ந்த ரேயன் “என்ன ஃபோன்ல சத்தம்” என்க, அவன் தன்னை கண்டு கொண்டான் பயத்தில் இருந்தவரும் “வாட்ஸ்அப்ல ஏதோ மெசேஜ் வந்து இருக்கு சார்” என்றதில் நெற்றியை நீவியவன் வெடுக்கென்று, அவரின் திறன்பேசியை பிடுங்கி தியாவிடம் கொடுக்க,
அதில் அவர் பதறுவார் என்று எதிர்பார்த்திருக்க, அவரோ அதற்கு மாறாக என்னவேணாலும் பார்த்து கொள் என்பது அமர்ந்திருந்ததில் பெரிதாக வேற எதுவும் இல்லை என்று புரிந்து கொண்டவனும் “தியா.. என்ன மெசேஜ் அது”
“தெரியல ரே.. ஒரு வாய்ஸ் வந்திருக்கு நியூ நம்பர்ல” என்றவள் மந்தாகினியிடம் காட்டி “இது யாரு நம்பர்” என்றவருக்கு உண்மையில் தெரியாமல் போக “இல்ல எனக்கு தெரியாது..” என்றதை கேட்ட ரேயன் “தியா அத பிளே பண்ணு” என்றதும் அவளும் தலையையாட்டி விட்டு போட்டு விட்டாள்.
அதில் “நான் யாழிசை பேசுறேன் மந்து அக்கா.. என்ன எப்படியாவது காப்பாத்துங்க நான் இன்டர்வியூ போகல என்ன யாரோ கடத்திட்டு போயிட்டாங்க.. என் ஃபோன் கூட எங்கையோ தூக்கி வீசிட்டாங்க.. இப்போ எல்லாரும் வெளிய போக, இங்க ஒருத்தங்க ஃபோன் சார்ஜ் போட்டு போனாங்க.. அதான் உடனே எடுத்து உங்களுக்கு விஷயத்த சொல்லுறேன் பிளீஸ் என்ன காப்பாத்துங்க காப்பாத்துங்க மந்து அக்கா..” என்றவளின் குரல் பதற்றமாகவும் பயத்தில் வார்த்தைகள் குளரியபடி பேசிருக்க, பதிவும் முடிந்துவிட பேசியது தியாழினி அல்லவா நிமிர்ந்து பெண்ணவளை மெச்சும் பார்வை பார்த்தன்.
அவனை பார்த்த பெண்ணவளும் தலை குனிந்து இதழ் கடித்து புன்னகையை அடக்கி கொண்டு நிமிர, ரேயனோ “மிஸ் மந்தாகினி யாழிசை யாரு” என்க,
அந்த பதிவை கேட்டு நடுங்கும் கைகளை மேஜை அடியில் மறைத்தவர் “அந்த பொண்ணும் இங்க இருந்த பொண்ணு தான்.. கொஞ்ச நாள் முன்ன தான் இன்டர்வியூன்னு கோயம்புத்தூர் போனா..” என்றதை கேட்டு புருவம் உயர்த்தியவன் “சோ இந்த பொண்ணையும் நீங்க தான் செண்ட் ஆப் பண்ண போய் இருக்கீங்க ரைட்..” என்றதுக்கு அவரும் ஆமென்று தலையாட்ட,
அதில் இரு பக்கமும் தலையாட்டி கொண்ட ரேயன் “சொல்லுங்க எத்தன நாளா பொண்ணுங்கள கடத்துற தொழில் பண்றீங்க” என்றவனின் பார்வை அங்கே ஓரமாக பயத்தில் வியர்த்து அமர்ந்திருந்த சதிஷியிடமும் அழுத்தமாக பதிய, அவனோ எச்சிலை கூட்டி விழுங்கி கொண்டே பார்த்து கொண்டிருக்க,
இன்னும் மௌனமே நிலவியதில் கடுப்பான ரேயன் “சொல்ல போறீங்களா இல்லையா..” என்றவாறு கண்ணாடி மேஜை தட்டி கர்ஜிக்க,
அதில் சதிஷ் மற்றும் மந்தாகினி இருவருக்குமே உடல் தூக்கி போட்டு அடித்தது போலிருக்க, இதழ் குவித்து ஊதிய ரேயன் “உங்க ரெண்டு பேருக்கும் 15 மினிட்ஸ் டைம் தரேன் அதுக்குள்ள ரெண்டு பேரும் வாய திறக்கலன்னா.. வைங்க கூட்டிட்டு போக வேண்டிய இடத்துக்கு கூட்டி போய் மரியாதையா விசாரிப்பேன்” என்று எழுந்து சென்று நாற்காலி சாய்ந்து அமர்ந்து கண் மூடிவிட்டான்.
எதையோ சிந்தித்த தியாவோ நண்பனிடமிருந்து வந்த வெற்றி குறியை கண்டு அவனிடம் ஒரு திட்டம் தீட்டி அதனை முடிக்க கோரி நண்பனிடம் கட்டளையிட்டு பொழுது போக திறன்பேசியில் பதிவு செய்து வைத்திருந்த விளையாட்டை விளையாட தொடங்கி விட்டாள்.
****
இங்கோ யாழிசை பாதிக்கப்பட்ட வீட்டியில் தோழியின் குறுசெய்திக்காக காத்திருந்த ருத்ரன், அடுத்த அரை மணிநேரத்தில் வரவும் ரேயன் கூறியது போல் மந்தாகினி எண்ணியிற்கு யாழிசை போல் தியா பேசிய பதிவை அனுப்பியவன்,
அவர்கள் பார்த்தது தெரிந்த மறுநிமிடம் அந்த சிம்மை கழட்டிய உடைத்தவன் கையோடு கொண்டு வந்த யாழிசை சிம்மையும் உடைத்து தூர வீசிவிட்டு அங்கிருந்து வண்டியில் ஏறி அன்பு இல்லத்தை நோக்கி வந்து கொண்டிருக்க,
அப்போது குறுஞ்செய்தி வந்த விளைவால் அவனின் திறன்பேசி சிணுங்க, அவர்களாக இருக்க கூடுமென்று என்ன என்னவென்று பார்த்தவன் தோழி கூறிய கட்டளை முடித்துவிட்டே அவர்கள் முன் வந்து சேர்ந்திருந்தான்.
****
ருத்ரன் வந்தே பத்து நிமிடமாயிற்று ஆனால் இன்னும் அவர்கள் வாய் திறக்க மாட்டென்று அமர்ந்திருக்க,
தியாவோ “சோ நீங்க ரெண்டு பேரும் வாய திறக்க மாட்டீங்க” என்க, ரெண்டும் பேரும் ஒரு சேர “எங்களுக்கு எதுவுமே தெரியாதே.. என்ன சொல்ல சொல்லுறீங்க” என்றதில் மந்தாகினி அருகில் சென்று,
அவரின் கன்னத்திலே சப்பென்று ஒன்று வைத்து “இங்க பாரு என்னவிட வயசு பெரியவன்னு அமைதியா பேசினா மரியாதைய மதிக்க தெரியாதா உனக்கு.. இப்போ நீ உண்மைய சொல்லல” என்று ரேயனை கைக்காட்டிய தியா,
“அவன் கோவம் வந்து அடிக்கிற ஒரே அடில பொட்டுன்னு மேல போய் சேந்துருவ.. உன்ன பத்தி இவ்வளவும் கண்டுபிடிச்ச எங்களுக்கு உனக்கு மேல இருந்து ஆட்டுறவனையும் கண்டு பிடிக்க தெரியும்.. சோ யோச்சிக்க நீ அல்பாய்சுல போக ஆசைப்பட்டா தாராளமா போகலாம்.. உன் விதிய யாருமே மாத்த முடியாது” என்று கைகட்டி நின்றிருக்க,
அப்போது ரேயன் திறன்பேசி அலற அழைப்பை ஏற்று மறுமுனையில் கூறியதை கேட்டு “சிட்” என்று எழுந்தவன் “இதோ உடனே வரேன்” என்றவன் “மச்சி.. இவங்க ரெண்டு பேரும் இங்கேயே இருக்கட்டும்.. நம்ம ஆளுங்க யாரையாவது நீ ரவுண்ட் அப்ல விட்டுட்டு பின்னாடி வா” என்றவனின் பதறத்தில்
ஏதோ சரியில்லாததை உணர்ந்த ருத்ரன் “மச்சி எங்க வரணும்.. யாருக்கும் எதுவும் பிரச்சனையா” என்றவனின் இரண்டாம் கேள்வியை கண்டு கொள்ளாத ரேயன் “நாங்க அங்க போனதும் தியா லொகேஷன் அனுப்புவா” என்றுவிட்டு பெண்ணவளின் கையை பற்றி இழுத்து சென்று காரில் ஏறி கொள்ள,
தியாவோ “என்னாச்சி ரே.. எங்க போறோம்” என்றதை கூட காதில் வாங்காதவன் வாகனத்தை ஓட்டியப்படியே சாலையில் கவனத்தை செலுத்தினான்.
தொடரும்…
– ஆனந்த மீரா 😍😍
