
நண்பியிடம் கூறிவிட்டு அலுவலகத்திலிருந்து வண்டியை எடுத்தவனோ நேராக சென்று நிறுத்தியது என்னமோ பெங்களூரில் இருக்கும் காதலர்கள் பூங்காவில் தான்.
வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கி கண்ணாடியை பார்த்து தலையை கோதி விட்ட ருத்ரன் “ஒவ்வொரு வருஷம் வலெண்டைன்ஸ் டேக்கு ஒவ்வொரு ஃபிகர் வச்சிட்டு சுத்துறவன்லாம் நல்லா தான் இருக்கான்.. எல்லா வலெண்டைன்ஸ் டேக்கும் ஒரே ஃபிகர் வச்சிட்டு சுத்துற நம்ம நிலமை தான் கவலை கிடமாயிருக்கு.. இன்னைக்கு என்ன ஆட்டம் ஆட போறாளோ” என்று புலம்பியவாறே தனக்காக பூங்காவின் அழகை ரசித்தபடி காத்திருந்தவளின் பின் சென்று அணைத்தான்.
அவன் மேல் கோவத்திலிருந்த பாவையோ “யோவ்.. தள்ளி போயா” என்று கூறி அவனை தள்ளிவிட்டு விலக,
அவனோ “சிட்டுமா.. மாமாவே உன்ன இவ்வளவு நாள் பாக்காம தவிச்சி போய் வந்திருக்கேன்.. நீயே புரிஞ்சிக்கலன்னா எப்படி பேபி” என்று கூற,
அதில் மூச்சு வாங்க முறைத்தவளோ “யோவ் வேண்டாம் மாமாவாச்சேன்னு பாக்குறேன்.. இல்லன்னா அசிங்கமா எதாவது பேசிடுவேன்.. கண்ணு முன்னாடி நிக்காம போயிடு.. இப்போ கூட.. நான் நீ வரலைன்னா ப்ரேக் அப்ன்னு மெசேஜ் பண்ணலன்னா என்ன பாக்க கூட வந்திருக்க மாட்ட போ.. உனக்கு வேலை தான முக்கியம், அதையே கட்டிக்கிட்டு அழு”
“சாரிடி சிட்டு.. கொஞ்சம் கேஸ் விஷயமா பிஸியாயிட்டேன்டி.. அதான் உன்ன பாக்க வர முடியல.. உன் அக்காகாரி வேற என்கூடவே சுத்துறா என்னால ஒரு கால் கூட பண்ண முடியல.. இப்போ கூட தியாகிட்ட அம்மா கூப்பிடுறாங்கன்னு பொய் சொல்லிட்டு தான் வந்திருக்கேன்.. இப்படி கிடைக்குற கேப்லயும் நீ புரிஞ்சிக்காம கோவப்பட்டா உன்கூட நான் எப்படி டைம் ஸ்பெண்ட் பண்றது” என்று முகத்தை பாவமாக வைத்து வருந்தியவனை மேலும் வருந்த விடாமல் அணைத்து கொண்ட பாவையோ
“சாரி மாமா.. உங்க நிலமை எனக்கு புரியுது என்னால முடியல.. உங்கள ரொம்ப மிஸ் பண்றேன்.. டெய்லி மீட் பண்ணிகலன்னாலும் பரவாயில்ல அட்லீஸ்ட் வீடியோ காலாவது போடுங்க” என்று தன்னவள் கூறியதிற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் அவளின் நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்தவனோ பாவையின் சிவந்த இதழை வருட, தன்னவன் கொடுத்த முத்த இன்பத்தை கண்கள் மூடி ரசித்த சித்திரா, அடுத்து அவன் தன் இதழை வருடியதும் உணர்ந்து வெக்கத்தில் சிவந்து பின் அவனை தள்ளிவிட்டு ஓட முயல,
கை பற்றி தடுத்தவனோ, அவள் முன் மண்டியிட்டு தன் முதுகிற்கு பின்னால் சொருகி வைத்திருந்த ரோஜாவை நீட்டி “ஐ லவ் யூ சிட்டுமா.. உன் அக்கா கணக்கு முடிஞ்சதும் சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாம்.. அதுவரை கொஞ்சம் எனக்காக வெயிட் பண்ணுவியா பேபி” என்றவாறு எழுந்தவனை கண்டு,
“விடு மாமா.. சேத்து வச்சி கல்யாணமானதும் வெயிட் பண்ண வெச்சிடுவேன்.. யூ டோண்ட் வொர்ரி” என்று கண்ணயடித்து கூறியவளை கண்டு, வாயில் கைவைத்து “அடிப்பாவி” என்று ஒரு நொடி வியந்து,
பின் “வெயிட் பண்ணி அனுபவிக்குறது கூட கிக் தான்” என்று தன் போலே கண்ணயடித்து கூறியவனின் மார்பில் செல்லமாக அடித்து தஞ்சம் கொண்டவளோ “லவ் யூ ருத்ரேஷ்.. லவ் யூ லாட்” என்று கூறி அவனுடன் கை கோர்த்து பூங்காவை சுற்றி நடந்தாள்.
*******************************************
ஆத்திரேயன் தனக்கு அளித்த சாக்லேட்டை வீசிய குப்பை தொட்டியை கண்டவளின் எண்ணமோ அவளின் இறந்த காலத்தை நோக்கி சென்றது
ஒரு வழக்கை பற்றின யோசனையில் சுழலும் நாற்காலியில் சுற்றியவாறே கோப்பையை ஆராய்ந்து கொண்டிருந்த பெண்ணவளோ தன் அறை கதவு திறக்கப்படும் சத்தத்தில் நிமிர்ந்து வந்தவனிடம் “டேய்.. இங்க பாரு” என்று கோப்புவை காட்டி வழக்கு பற்றி ஏதோ கூற வருகையில், அவளின் கையிலிருந்த கோப்புவை எடுத்து ஓரமாக வைத்து அமர்ந்தவனோ அவளின் நாற்காலியை தன்னதிரே இழுக்க,
அவளோ “டேய் என்ன பண்ற எவ்வளவு சீரியஸா கேஸ் பத்தி சொல்ல வந்தா.. நீ என்ன பண்ணிட்டு இருக்க.. என்ன விடு முதல” என்று கூறி தான் அமர்ந்திருந்த நாற்காலியில் வைத்திருந்த, அவன் கையை தட்டிவிட்டு விட்டு தன் இடத்திற்கு செல்ல போக,
மறுபடியும் அவள் நாற்காலியை இழுத்து பிடித்து தன் புறம் திருப்பி அவளுக்காக வாங்கி வந்த சாக்லேட்ஸ் கையில் கொடுக்க,
“ஐ.. சாக்லேட்ஸ்..” என்று கூறி அதை வாங்கி பிரித்தவளோ, அவனுக்கு பாதி ஊட்டிவிட்டு மீதியை சாப்பிட்டவாறே “ரொம்ப நாளாச்சுல.. நீ எனக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து, இருக்கிற கேஸ் டென்ஷன்ல நான் கூட மறந்துட்டேன்.. எனி வே தேங்க்ஸ் ரே” என்று கூறி அவன் வாங்கி கொடுத்த மீதி சாக்லேட்களையும் சாப்பிட தொடங்கினாள்.
சாக்லேட் என்றால் நம் நாயகியான தியாழினிக்கு மிகவும் பிடிக்கும், அதிலும் தனக்கு பிடித்தவர்கள் நண்பர்களிடம் மட்டும் உரிமையாக வாங்கி கொடுக்குமாறு கேட்டு வாங்கி உண்பாள்,அப்படி தான் அவள் ரே என்று அழைப்பவனிடமும் நட்பாக பழகிய பின் உரிமையாக அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவாள்.
அதிலும் பெண்ணவள் எவ்வித கோவத்தில் இருந்தாலும் சாக்லேட்டை கையில் கொடுத்தால் போதும் தான் சண்டையிட்டோம் என்பதையே மறந்து விடுவாள்.
இப்போது சிறு பிள்ளை போல் சாக்லேட்களை ரசித்து சாப்பிடும் தன்னவளை, அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை ரசித்தவனோ
“யாழி.. இன்னைக்கு ஒரு நாளாலாவது கேஸ்க்கு லீவ் கொடுத்துட்டு என்ஜாய் பண்ணலாமே.. லவ்வர வச்சிட்டு வலெண்டைன்ஸ் டே கொண்டாடலேனா.. ரொம்ப தப்புமா”
“நீ லவ் பண்ற பொண்ண.. கட்டயாப்படுத்தி லவ் பண்ண வைக்குறது அதவிட தப்பு” என்றவள் அவன் கொடுத்த சாக்லேட்டை ருசிக்க,
அதை தனக்குள் படம் பிடித்து கொண்ட ஆடவன் “ஓ.. அது நீங்க என்ன சைட் அடிக்கும் போது தெரியலயா”
“உன்ன சைட் அடிச்ச பவாத்துக்காகலாம் லவ் பண்ண முடியாது.. டைம் வேஸ்ட் பண்ணாம.. வேற பொண்ண உஷார் பண்ணி டேய செளிப்ரெட் பண்ணு”
“நான்லாம் ஒருதிக்காக வாழுற சாதிடி.. அந்த ஒருத்தியே நீ தான் எப்போவும் நீ மட்டும் தான்.. ஐ அம் ஒன்லி பார் யூ அண்ட் யூ ஆல்சோ ஒன்லி பார் மீ பேபி” என்று கூறி கண்ணடிக்க,
அதில் கடுப்பானவளோ “நரேன்.. வில் யூ பிளீஸ் ஷட் அப் அண்ட் கெட் அவுட்” என்று கத்தியவளை, கண்டவனோ “ஓகே யாழி டியர்.. நீ கோவமா இருக்க சோ சாக்லேட் சாப்பிடு தேவைப்படும்ன்னு தான் எக்ஸ்ட்ராவா வாங்கிட்டு வந்தேன்” என்று கூறி சாக்லேட்டை மேஜையில் மீது வைத்துவிட்டு, தன்னை எரிக்கும் பார்வையை வீசும் தன்னவளை கண்டப்படி கதவருகில் வந்தவனோ “லவ் யூ யாழி டியர்.. லவ் யூ சோ மச்” என்று கூறி பறக்கும் முத்தத்தை பறக்க விட்டு வெளியே பறந்து விட,
அவன் செயலில் கடுகடுத்தவளோ “பட் ஐ ஹேட் யூ நரேன்” என்று கூறி அவன் வைத்து சென்ற சாக்லேட்டை எடுத்து குப்பை தொட்டியில் வீசிவிட்டு, அந்நிகழ்வுகளை மறக்க எண்ணி வேலையில் கவனத்தை செலுத்தியவளோ பழைய நிகழ்வுகளை இப்போது ஞாபகப்படுத்தியவனை முறைத்தவாறே எண்ணத்தை நிகழ் உலகத்திற்கு அழைத்து வந்தாள்.
தன்னை முறைப்பவளை கண்ட ரேயனோ “என்ன” என்று புருவம் உயர்த்தி வினவ, அதற்கும் முறைப்பை பதிலாக கொடுத்து கொண்டிருக்க, அந்நேரம் அவளின் திறன் பேசி அலற, அழைப்பு ஏற்று “சொல்லு கிழவி” என்று அவனிடமிருந்த தன் முறைப்பை நிறுத்தாமல் பேசினாள்.
பாட்டியோ “சித்திரா நேத்து காலேஜ்க்கு எதுக்கோ பணம் வேணும்ன்னு கேட்டு வாங்கினா.. ஆனா, காலைல போற அவசரத்துல மறந்துட்டு போயிட்டா.. அதான் இப்போலாம் ஃபோன் மூலமே பணம் அனுப்பலாமே.. அதான் நீ கொஞ்சம் அனுப்புறீயா பாவம் இப்போ பணத்துக்கு என்ன பன்றாளோ” என்று கூற,
‘இம்சை’ என்று தனக்குள் புலம்பியவளோ “அனுப்பி தொலைக்குறேன்.. இனியாவது இம்சை பண்ணாம ஃபோன கட் பண்ணு” என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டு தங்கைக்கு அழைத்தாள்.
*******************************************
தன்னவனுடன் காதலித்து நேரத்தை கழித்து கொண்டிருக்க, இவர்களின் காதலை இடையூறு செய்யவே பெண்ணவளின் திறன்பேசி அலற, அடித்தது வேறு யாருமில்லை சித்திராவின் அக்காவுமான அவளவனின் நண்பியுமானவளே என்பதை அறிந்து புருவம் உயர்த்தி “இப்போ எதுக்கு அடிக்குறா” என்ற பயத்தை வெளியே காட்டாமல் தன்னவனிடம் “உங்க ப்ரெண்ட் தான் அடிக்குறா” என்று கூறி அழைப்பை ஏற்றதும்,
“அறிவில்லையாடி.. அப்படி எவன் கூட கடல போட போறேன்னு அவசர அவரசமா போன.. உன்னால அந்த கிழவி என்ன புடிச்சி டார்ச்சர் பண்ணுது” என்று தமக்கை கூறியதை கேட்டு மன வருந்திய சித்திரா
“இப்போ எதுக்கு பாச மழைய பொழியுற.. நேரடியா மேட்டருக்கு வா”
“ஏன்டி.. காலேஜ் போகும் போது மறக்காம மினுக்கிட்டு போக தெரியுற உனக்கு காசு வாங்கிட்டு போகனும்ன்னு தெரியல.. வீட்டுல தான் நிம்மதியா இருக்க முடியலன்னு வந்தா.. உன்னால வேலை கூட நிம்மதியா பாக்க முடியல.. எவ்வளவு பணம் வேணும்ன்னு சொல்லு அனுப்புறேன்” என்று காட்டமாக கூறியதை கேட்ட
சித்திராவோ “நான் இன்னும் காலேஜ் போகல சோ நானே வீட்டுக்கு போய் மறந்து வச்ச பணத்த எடுத்துக்குறேன்.. இவ்வளவு தூரம் கால் பண்ணி ஹெல்ப் பண்ண நினைச்சதுக்கு தேங்க்ஸ்” என்று கூறிவிட்டு, அவள் பதில் கூறும் முன் அழைப்பை துண்டித்துவிட்டாள்.
அழைப்பை துண்டித்தில், தியாவோ “திமிரு புடிச்சவ” என்று தன் தங்கையை திட்டிவிட்டு, அவளே குத்து மதிப்பாக தொகை அனுப்பியதும், மறுபடியும் அவளின் திறன்பேசி அலற, தன்னுடைய மேல் அதிகாரி என்பதை அறிந்து அழைப்பை ஏற்றவளோ “ஹலோ சொல்லுங்க சார்”
“மிஸ்டர் ஆத்திரேயன் டூயூட்டிக்கு வந்துட்டாரா” என்று வினவ, அவளோ அவனை பார்த்துவிட்டு “ஹான் சார்.. வந்துட்டார்”
“ஓகே பைன்.. இப்போ ஆதியையும் ருத்ரனையும் கூட்டிட்டு உடனே என் வீடு வரைக்கும் வா.. ஒரு முக்கியமான கேஸ் விஷயமா பேசணும்.. கம் பாஸ்ட்”
“ஓகே சார் வந்துருறோம்” என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டு நண்பனுக்கு “சீக்கிரம் வந்து சேரு.. முக்கியமான கேஸ்” என்று குறுஞ்செய்தி ஒன்றை தட்டிவிட்டவளோ, தன் எதிரே இருக்கும் ரேயனை பார்த்து “இவன்கிட்ட வேற சொல்லணுமே.. நம்மளா போய் பேசுனா கொஞ்சம் ஓவரா வேற பண்ணுவான்” என்று கூறி யோசித்தவாறே நண்பன் வரட்டுமென்று அமர்ந்திருந்தாள்.
*******************************************
இங்கு தமக்கையிடம் பேசிவிட்டு முகம் வாடியவளை கண்ட ருத்ரனோ “என்னாச்சிடி”
“ஒன்னும் இல்ல.. ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்றோம் அதுவும் வலெண்டைன்ஸ் டே.. அதான் எதாவது உங்களுக்கு கிஃப்ட் கொடுக்கணும்ன்னு கிழவிகிட்ட சொல்லி அவகிட்ட பணம் கேக்க சொன்னேன்.. அதான் எவ்வளவு வேணும்ன்னு கேட்டுட்டு திட்டுறா” என்று கூறி உதடு பிதுக்கியவளை கண்டு, இதழ் மடித்து சிரிக்க,
அதை கண்டு, அவனை முறைத்துவிட்டு திறன்பேசியில் தமக்கை பணம் அனுப்பி விட்டதில் வந்த செய்தியை பார்த்து “காயமும் கொடுத்துட்டு மருந்தும் போடுறா.. இவ எப்போ தான் மாறுவாளோ”
“விடு சிட்டுமா.. அவ அப்படி தான்.. உனக்கு தெரியாதா என்ன” என்று கூறி அவளை மாற்ற எண்ணியவனோ “சரி சரி.. இப்போ பணம் வந்துருச்சு.. பட் எனக்கு இந்த பணத்தால வாங்குற கிஃப்ட்ஸ் விட பணம் இல்லாம வாங்குற கிஃப்ட்ஸ் தான் வேணும்.. அதுவும் ஒன்னு கொடுத்தாலும் மறக்க முடியாத அளவு நச்சுன்னு கொடுக்கணும் கிடைக்குமா” என்று கூறி அர்த்த பார்வை வீச,
தன்னவனின் பார்வைக்கான அர்த்தம் உணர்ந்து வெட்கத்தை மறைத்தவளோ “யோவ் மாமா.. இதுக்கு மேல இங்க இருந்தா சரியா வராது.. ஷாப்பிங் போயிட்டு உங்களுக்கு வாங்கி தர நினைச்சதெல்லாம் வாங்குவோம் வாங்க” என்று அவனை அழைத்து சென்று வாங்கி கொடுக்க நினைத்த அனைத்தையும் வாங்கி கொடுத்துவிட்டு, அவனுடன் ரெஸ்டாரன்டில் சாப்பிட்டு கொண்டிருக்க,
அந்நேரம் தன் நண்பியிடமிருந்து வந்த குறுஞ்செய்தியை கண்டு “15 மினிட்ஸ்ல அங்க இருப்பேன்” என்று பதில் அனுப்பிட்டு, தன்னவளிடம் “சிட்டுமா.. மாமா கேஸ் விஷயமா போகனும்டா.. நீ வீட்டுக்கு பத்திரமா போயிட்டு ஒரு மெசேஜ் போட்ருவியா”
“இன்னைக்கும் என்கூட டைம் ஸ்பெண்ட் பண்ண மாட்டீங்களா..” என்று பாவமாக கேட்டதில் அவனுக்கு ஒரு மாதிரியாகி விட, அவசரம் புரிந்து “அய்யோ சாரிடா.. எனக்கும் ஆசை இல்லையா என்ன.. ஒரு ஹாஃப் டேயாவது உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்ன்னு நினைச்சி தான் வந்தேன்.. அதுக்குள்ள கேஸ் வந்துருச்சு போல.. அங்க இருந்தவங்க ஏற்கனவே வேற ஒரு மிஷன் விஷயமா போயிட்டாங்க.. இருக்குற ரெண்டும் டாம் அண்ட் ஜெர்ரி.. சோ நான் போகலன்னா கஷ்டம் இல்லன்னா தியா வச்சி செஞ்சிடுவா”
“ஓகே நான் போயிக்குறேன்.. நீங்க பாத்து போங்க..”
“ம்ம்.. பாய்டி.. லவ் யூ.. போனதும் மெசேஜ் போடு” என்று கூறி தன் அலுவலகத்தை நோக்கி வண்டியில் பறக்க, அவளும் ஆட்டோ பிடித்து வீட்டிற்கு சென்றாள்.
தொடரும்..
– ஆனந்த மீரா 😍

