Loading

தம்பியிடம் கைகாட்டி நின்றவள் ரயில் நிலையத்தை கடக்கவும் தான் தன் இடத்திற்கு வந்து அமர்ந்தாள்.

 

பின் எதிர் இருக்கை காலியாக இருந்ததில் ‘சைட் எங்க போனான்’ என்று எண்ணியப்படியே சுற்றி முற்றி தேடி,

 

அவன் வருவதை கண்டு கொண்டவள் தெரியாதது போல் பார்வையை ஜன்னல் புறம் செலுத்தியப்படியே, ஆடவன் எதிரே அமரவும் எதிர்பாரதது திகைப்பது போல் காட்டிக்கொண்டு “ஹே மிஸ்டர் சைட்.. வாட் ய சர்ப்ரைஸ் என் சீட்டுக்கு எதிர் சீட் வருவீங்கன்னு நினைக்கவே இல்ல.. எனி வே நைஸ் டூ மீட் யூ.. ஐ அம் தியாழினி” என்று கையை நீட்ட,

 

அவளை கண்டதும் ‘போயும் போயும் இந்த பைத்தியத்துக்கிட்டயா சீட் கிடைக்கணும்’ என்று நொந்து அமர்ந்திருந்தவன் பெண்ணவள் கையை நீட்டவும் கண்டு கொள்ளாது பையிலிருந்து புத்தகத்தை எடுத்து புரட்ட,

 

அவனின் நிராகரிப்பை பொருட்படுத்தாத தியா கையை பின்னுக்கு இழுத்து தோலை உலுக்கிவிட்டு பார்வையை ஜன்னல் புறம் திருப்பி கொண்டாள்.

 

நீண்ட நேரம் ஜன்னல் புறம் பார்வையை பதித்திருந்தவள் ஒரக்கண்ணில் ஆடவனை ரசிக்கவும் தவறவில்லை, இருப்பினும் அமைதியான பயணத்தில் கடுப்பானவள் தன் பையிலிருந்த நோட்டை எடுத்து வரைய தொடங்கி விட்டாள்.

 

புத்தகத்தில் மூழ்கியவன், சில நிமிடத்திற்கு பின் பெண்ணவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க, அவளின் கை அசைவிலே எதையோ வரைகிராள் என்பதை உணர்ந்து எட்டி பார்க்க முயற்சித்தான்.

 

அவளோ நோட்டியின் முன் அட்டையை பிடித்தப்படி வரைந்ததில் ஆடவனின் முயற்சி தோல்வியிலே முடிய, தான் செய்து கொண்டிருக்கும் காரியத்தை நினைத்து தலையில் அடித்து கொண்ட ரேயன் மறுபடியும் பார்வையை புத்தகத்தில் செலுத்தினான்.

 

அரை மணி நேரத்தில் வரைந்து முடித்து அதன் அருகில் எதையோ கிறுக்கியவள், கையில் வைத்திருந்த பென்சிலில் தலையில் அடித்து, அதனை வாயில் வைத்து சிரித்து கொண்டே ‘என்னடா இது நமக்கு வெக்கலாம் வருது’ என்க,

 

“வெக்கம் மட்டுமா வருது” என்று மனசாட்சி எழுப்பிய கேள்விக்கு “அதான தப்பாச்சே” என்று எண்ணியவளுக்கு பசி வேறு எடுக்க,

 

ஆராய்ச்சியை ஒதுக்கிவிட்டு அன்னை தனக்காக சமைத்து கொடுத்த உணவை திறந்தவள், தனக்கு பிடித்த மஷ்ரூம் பிரியாணியை கண்டு “வாவ் நம்ம அன்னலக்ஷ்மி கை பக்குவம்ன்னா கொக்கா” என்று ரசித்து மனதில் அன்னையை மெச்சியப்படியே கையை சப்பி சாப்பிட்டவள்,

 

தன்னை யாரோ பார்ப்பது போல் உணர்ந்து நிமிர்ந்தவள் எதிரேயிருப்பவன் பார்ப்பதை கண்டு ‘அட நம்ம சைட் நம்மள பாக்குதே’ என்று உள்ளம் குளிர்ந்த தியா “மிஸ்டர் ரே.. அட மிஸ்டர் ரே உங்கள தான கூப்பிடுறேன்” என்க,

 

குழந்தை போல் அவள் சாப்பிடும் அழகை தன்னை மறந்து ரசித்தவன், பெண்ணவள் பார்ப்பதை உணர்ந்து பார்வை திருப்பிக்கொள்ள, முதல் அவள் அழைக்கவும் கேட்காது போல் இருந்தவன் ரெண்டாம் முறை அழைத்ததும் பெண்ணவளை முறைத்து “என்ன”

 

“அதுவந்து மிஸ்டர் ரே.. அன்னம் சமைச்ச மஷ்ரூம் பிரியாணி சூப்பரா இருக்கு.. யூ கேன் டேஸ்ட் தட்” என்றதில் புருவம் உயர்த்திய ரேயன் “யாரு அன்னம்”

 

“என் அம்மா தான் அன்னலக்ஷ்மி.. அவங்க சமைச்ச பிரியாணி தான்.. எங்க அம்மா சமையல அடிச்சிக்கவே முடியாது சாப்பிடுறீங்களா” என்றதை கேட்டு அவளை முறைத்தவன் “இட்ஸ் ஓகே வேண்டாம்”

 

“ஏன் வேண்டாம்ன்னு சொல்லுறீங்க.. உங்களுக்காக கஷ்டப்பட்டு ஃபோன திருப்பி கொடுத்தன் எனக்காக சாப்பிட மாட்டீங்களா” என்க,

 

ஏனோ, அவள் அப்படி கேட்டதும் மறுக்க தோன்றாமல் “சரி நான் நைட்டுக்கு கூட எதுவும் வாங்கள தான்.. அடுத்த ஸ்டேஷன் வரவும் வெளியே தான் வாங்கணும் சோ நீ அந்த காச வாங்கியிட்டா நான் பிரியாணி வாங்கிக்கிறேன்” என்க,

 

அவன் காசு தருவேன் சொன்னதில் ஒரு நிமிடம் முகம் வாடியவள்,

 

அப்படியாவது அவன் சாப்பிட்டால் போதும் என்று எண்ணி “சரி காசு வாங்கிக்கிறேன்..” என்று அவனிடம் காசை வாங்கிவிட்டு பிரியாணியை எடுத்து கொடுக்க, அவளை ஒரு மாதிரி பார்த்தவன் “பேக் ஃபுல்லா ஸ்டாக் வச்சிருப்ப போல” என்றதை கேட்டு அசடு வழிந்தவள் “ஈஈ அப்படிலாம் இல்ல டிராவல் டைம் பசி அதிகமா இருக்கும்.. அதான் எக்ஸ்ட்ராவா வச்சிப்பன்” என்றதை கேட்டு பிரியாணியை பார்த்துவிட்டு, அவளை பார்த்தவன் “ஏய் மறுபடியும் பசி வந்தா.. என்ன பண்ணுவ”

 

“அதுக்கு தான் இன்னொரு பாக்ஸ் இருக்கே” என்று எடுத்து காட்டி கண் சிமிட்டி சிரித்தவளை கண்டு ஆடவனின் தாடிக்குள் மறைந்திருந்த இதழ்கள் கூட ரகசியமாக விரிய,

 

பிரியாணி வாசனை ஆளை மயக்கியதில் அதனை காக்க வைக்காமல் சாப்பிடும் பணியில் ஈடுப்பட்டான்.

 

ரெண்டு பிரியாணியை சாப்பிட்டு முடித்து ஏப்பம் விட்டவளை, ஒரு மாதிரி பார்த்து வைத்த ரேயன் “ரெண்டு சாப்பிட்ட”

 

“அதான் சொன்னேனே டிராவல் டைம் பசியா வந்தா பயங்கரமா இருக்கும் சோ ரெண்டு சாப்பிட்டேன்.. இதுக்கு அப்புறம் தூக்கம் தான் இடைல பசிக்காது பசிச்சா அன்னம் ஸ்நாக்ஸ் கொடுத்துருக்கா அத சாப்பிட்டுக்கலாம்.. அப்புறம் பிரியாணி எப்படி இருந்துச்சு”

 

“ம்ம் நல்லா இருந்துச்சு” என்றவன் எழுந்து கதவருகில் செல்ல, சாப்பிட்டதை எடுத்து வைத்துவிட்டு அவனருகில் சென்ற தியா “இங்க என்ன பண்றீங்க”

 

‘இவ வேற’ என்று தனக்குள் நொந்தவன் “காத்து வாங்க வந்தேன்”

 

“நைஸ் கிளைமேட்.. நல்லா இருக்குல என்று உடலை தேய்த்தவள் “ஆமா மதுரைக்கு என்ன பங்ஷனா வந்தீங்க” என்க,

 

பெண்ணவளை கேள்வியாக பார்த்த ரேயன் “நான் பங்ஷன் தான் வந்தேன்னு.. உனக்கு எப்படி தெரியும்” என்றதை கேட்டு அவனின் அன்னை கூறியதை, அவரின் குரலிலே பேசி காட்டியவளை விழி விரித்து பார்த்தான்.

 

அவனின் பார்வையில் முகத்தை மூடிய “தியா அப்படி பாக்கதீங்க மிஸ்டர் சைட் வெக்கமா வருது” என்றதும் ஆடவன் முறைத்ததில் “சரி சரி பொங்காதீங்க.. சின்ன வயசுல ஸ்கூல்ல டிராமா பண்ணும் போது மிமிக்ரியும் வந்துருச்சு.. அதுவும் லேடீஸ் வாய்ஸ்னா ஈஸியா மிமிக்கிரி பண்ணிடுவேன்” என்றதை கேட்டு அமைதியானவனிடம் “ஆமா என்ன பங்ஷனா வந்தீங்கன்னு கேட்டேன் சொல்லவே இல்ல”

 

“ஸ்கூல் மேட் மேரேஜ் வந்தேன்”

 

“ஓ.. உங்களுக்கு எப்போ மேரேஜ்”

 

“ஏன் ப்ரோக்கர் வேலை பாக்க போறியா” என்று பெண்ணவளை வார,

 

தியாவோ “உங்களுக்கு பொண்ணு தேட வொய் ப்ரோக்கர் வேணும்.. நானும் பொண்ணு தான” என்று கதவை சுரண்டி வெட்கப்பட்டவளை கேவலமாக லூக்கு விட்டவன் “ம்.. ஆமா ஆமா எழுதி ஒட்டிக்க” என்று அதற்கு மேல் அவளிடம் முடியாமல் உள்ளே வந்து படுத்து கொள்ள, தியாவோ “என்ன அதுக்குள்ள படுக்குறீங்க”

 

“வேற என்ன பண்ண.. உன்கூட நடு சாமம் வரலாம் பேய் ஓட்ட முடியாது.. குட் நைட்” என்று இழுத்து முடி உறங்கி விட்டான்.

 

அதற்கு மேல் பெண்ணவளால் என்ன செய்ய முடியும் அவளும் கடுப்புடன் உறங்கியவள்,

 

மறுநாள் காலை தான் இறங்கும் இடம் வருவதற்கு பத்து நிமிடம் முன்னே கண் விழிக்க, உடமைகளுடன் தயாராக அமர்ந்திருக்கும் ரேயனை கண்டு புன்னகைத்து “குட் மார்னிங் மிஸ்டர் ரே.. என்னையும் எழுப்பி இருக்கலாம்ல” என்றுவிட்டு கழிவறை சென்று முகம் கழுவி வந்தவள் உடைமைகளை எடுத்துக்கொள்ள, சென்னை நிலையும் வந்தது.

 

பின் இருவரும் இறங்கி வெவ்வேறு திசையில் செல்ல, பெண்ணவளோ அவனை திரும்பி திரும்பி பார்த்தே நடக்க, ஆடவனும் பார்க்க வேண்டுமென்று நினைத்தானோ என்னவோ திரும்பி பார்க்க, இருவரின் பார்வையும் சந்தித்து கொண்டது.

 

அதன் பின் இருவரும் பார்வையை திருப்பி அவரவர் திசையை நோக்கி நடந்தனர்.

***

ரயில் நிலையத்திலிருந்து தன்னுடைய இடத்திற்கு வந்து சேர்ந்த ரேயன், பணியை பற்றி நண்பனிடம் விசாரித்துவிட்டு உடல் பயிற்சியை முடித்தவன் பிளாக் ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் சகிதம் தயாராகி நண்பனாகிய ஜோஸப்புடன் சென்னையில் உள்ள குற்ற புலனாய்வு துறை என்று பொறிக்கப்பட்டிருந்த தன் அழுவலகத்திற்குள் வந்து சேர்ந்தான்.

 

இருவரும் வரும் முன்னே மடிக்கணினியில் வேலையாக அமர்ந்த வாகினியிடம் வந்தவர்கள் “குட் மார்னிங் வாகி” என்றதுக்கு பதிலுக்கு “குட் மார்னிங்” என்றவள் ஜோஸப்பை பார்த்து மட்டும் முறைத்து வைத்துவிட்டு “ரேயா.. இன்னைக்கு நியூ மெம்பர் ஜாயின்ட்” என்று கூறி முடிக்கவும்,

 

அதற்கு சம்பந்தப்பட்ட நபர் “எக்ஸ்கியூஸ் மீ” என்று கூறிய நொடி விழி விரித்து நின்று விட,

 

அதனை கண்டு ஜோஸப் “என்னடா மச்சான்.. அக்யூஸ்ட புடிச்சி ஷாக் எடுப்பங்கான்னு நினைச்சா வந்ததுமே ஷாக்காகி நிக்குறாங்க ஒன்னும் தேறாது போலவே” என்று வந்ததுமே சீனியர் என்ற முறையில் சீண்ட,

 

அதில் பெண்ணவளுக்கு துடுக்குத்தனம் தலை தூக்க “அக்யூஸ்ட் மட்டுமில்ல உங்கள மாதிரி சீனியருக்கு கூட ஷாக் கொடுக்க தெரியும்..” என்று நக்கலாக ஏறிட்டு தன்னை கண்டு கொள்ளாத ரேயனை கண்டு “ஹாய் ரே” என்க,

 

இப்போது விழி விரிப்பது ஜோஸபின் முறையாகி போக “என்னடா மச்சான் வந்ததும் சொன்ன போலவே ஷாக் கொடுக்குறா.. யார்டா இந்த ஃபிகரு” என்றதில் கடுப்பான தியா “யாருக்கு யாருயா ஃபிகரு பல்ல உடச்சிருவேன்.. மரியாதை கொடுத்தா மரியாதை கிடைக்கும்”

 

“ஏய் ஏய் சில் பேபி.. அது ஏதோ புளோல டயலாக் பேசும் போது டங் ஸ்லீப்பாயிடுச்சு பெருசா கண்டுக்காத”

 

“உன்னையும் என் சைட் லிஸ்ட்ல சேத்ததுக்காக புலைச்சி போன்னு விடுறேன்” என்றதில் அனைத்து பற்கள் தெரிய இளித்த ஜோஸப் “ரியலி பேபி.. உனக்காவது அழக ரசிக்க அறிவு இருக்கே..” என்று பாராட்டிவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்த வாகியும் தன்னை அறிமுகப்படுத்தி கை குலுக்கி கொண்டாள்.

 

பின் ஜோஸப் “இவன்..” என்று கூற வந்ததை தடுத்த தியா “தெரியுமே மிஸ்டர் நரேன” என்று கையை நீட்டி “இப்போவும் கை கொடுக்க மாட்டீங்களா” என்க,

 

பெண்ணவளை முறைத்தவன் கடுப்புடனே கை குலுக்கி விடுவிக்க, தன் கையை தேய்த்த தியாவின் வார்த்தை “சோ ஹார்ட்” என்று அவனுக்கும் மட்டும் கேட்கும்படி விஷமமாகவே வந்தது.

 

பெண்ணவள் கூறிய பெயரில் குழம்பிய ஜோஸப் “நரேனா.. யாருடா அது புதுசா” என்றதுக்கு ரேயன் “தாத்தா பெயருடா.. அவங்க ஞாயபகமா அம்மா என்ன நரேன் கூப்பிடுவாங்க”

 

“பாரேன்.. எனக்கு தெரியல என் பேபிக்கு தெரிஞ்சிருக்கு” என்க, தியாவோ “அது ஒரு பெரிய கதை ஜோஸா” என்று அவனின் தோலில் கைபோட்டு நடந்ததை கூறிவிட்டு எனக்கென்னவென்று செல்ல போன ரேயனை வழிமறித்து “சேம் பிஞ்ச்.. இந்தாங்க சாக்லேட்” என்று தன் பையிலிருந்து அவனிடம் எடுத்து கொடுக்க,

 

அவளின் செயலில் விசித்திரத்தை உணர்ந்து “என்ன” என்றவனிடம் தன்னுடைய அவனுடைய ஆடையின் நிறம் ஒன்றாக இருப்பதை காட்டி, அவனின் கையில் திணித்துவிட்டு,

 

வாகினியிடமும் ஒன்று கொடுத்துவிட்டு ஜோஸாப்பிடம் நீட்டியவள் “என்கிட்ட வேற இல்ல.. நம்ம ஷேர் பண்ணிக்கலாமா” என்றவள் ஒரக்கண்ணில் ரேயனை பார்க்கவும் தவறவில்லை.

 

அவளின் குழந்தை தனத்தை ரசித்த ஜோஸப் “சின்ன குழந்தை போல சாக்லேட் பங்கு கேக்குற”

 

“எல்லாருக்கும் கொடுத்துட்டு நான் மட்டும் வேடிக்க பாக்கவா.. எனக்கு சாக்லேட் பிடிக்கும்.. கோவமா இருந்தா கூட என்னோட தம்பி சாக்லேட் கொடுத்து சமாதானப்படுத்துவான் அவ்வளவு பிடிக்கும் சாக்லேட்னா” என்று அவனிடமிருந்து பாதி பிடுங்கி கொள்ள, ரேயன் கண்டுகொள்ளாமல் இருக்க, வாகினியோ எள்ளும் கொள்ளும் வெடிக்க முறைத்திருந்தாள்.

****

 

ஒரு பக்கம் ரேயனை ரசித்தும் இன்னொரு புறம் அவனை வெறுப்பேத்த ஜோஸா ஜோஸா என்று அங்கிருக்கும் இன்னொரு ஜீவனை வெறுப்பேற்றுகிறோம் என்று கூட தெரியாமல் ஜோசப்புடன் கடலை போட்டு கொண்டே, அவர்கள் கையாளும் வழக்குகளுக்கு சிறியளவில் உதவி செய்தே ஒரு மாதம் ஓடியிருக்க,

 

அன்று முக்கியமான வழக்கு விஷயத்தை கூறிய அவர்களின் மேல் அதிகாரியோ “ரேயா இந்த கேஸ மிஸ் தியாழினியோட ஹேன்டில் பண்ணுங்க.. அதோட அவங்க இந்த கேஸ்க்காக கொடுக்கிற எஃபோர்ட் பத்தின அப்டேட்டும் எனக்கு வரணும்.. ஆல் த பெஸ்ட் மிஸ்டர் ரேயன் அண்ட் மிஸ் தியாழினி” என்று கையை குலுக்கிவிட்டு விடை பெற,

 

தானும் அவனும் மட்டுமே வழக்கில் ஈடுப்பட போகும் குஷியில் பெண்ணவள் மனம் குதிக்க, ரேயன் தான் ‘பேசியே கொல்வாளே’ என்று நொந்து அமர்ந்திருந்தான்.

*****

ரெண்டு நாட்கள் கழித்து தீவிர யோசனையிலிருந்த ரேயனை கண்டவாறே, அவன் எதிரியில் அமர்ந்த தியா “என்ன தீவிரமா யோசிக்கீறீங்க” என்க,

 

ரேயனோ “உனக்கு கொஞ்சமாவது சென்ஸ் இருக்கா.. நம்ம ரெண்டு பேரும் தான் கேஸ் ஹேன்டில் பண்ணனும்.. நீ என்னடானா ஜாலியா சுத்திட்டு இருக்க”

 

“சரி சரி.. என்ன விஷயம் சொல்லுங்க”

 

“ரெண்டு நாள் முன்ன சார் ஒரு கேஸ் பத்தி சொல்லிட்டு போனார்ல.. அந்த கேஸ் அக்யூஸ்ட் டிரக் கைமாத்த ஒரு ரெஸ்டாரன்ட்ல தங்கியிருக்கான்.. அவன ஆதாரத்தோட பிடிக்கணும்”

 

“சரி அவர் எந்த ரூம்ல இருக்கார்ன்னு தெரியும் தான.. அதுக்கு பக்கத்து ரூம்ல ஸ்டே பண்ணி கையும் காலுமா பிடிக்க வேண்டியது தான” என்றதை கேட்டு அவளை முறைத்தவன் “அது எங்களுக்கு தெரியாதா.. ரூமே கிடைக்கல” என்றதில் தாடையை தடவிய தியா “ஓ சரி ரெஸ்டாரன்ட் நேம் சொல்லுங்க.. நான் கால் பண்ணி கேட்டு பாக்குறேன்”

 

“நீ கேட்டா மட்டும் கிடைச்சுதுமா”

 

“ஒரு தடவைக்கு இன்னொரு தடவைக்கு விசாரிக்குறது என்ன தப்பு” என்று அவனிடம் ரெஸ்டாரன்ட் பெயரை கேட்டுவிட்டு வெளியே சென்று அழைப்பு விடுத்து பேசி உள்ளே வந்தவள் “ரூம் புக் ரே.. சோ இன்னைக்கு ஈவ்னிங் வந்து என்ன பிக் அப் பண்ணிக்கங்க சேந்தே பிடிக்கலாம்” என்று கண்ணடிக்க,

 

அவளின் செயலில் முறைத்த ரேயன் “எப்படிடி நீ கேட்டு ரூம் கிடைச்சுது.. எனக்கு என்னமோ ஏதோ உள்குத்து இருக்குன்னு தோணுது.. என்னன்னு சொல்லு”

 

“ரே ஈவ்னிங் பிக் அப் பண்ண வரும் போது தெரியும்” என்று மறுபடியும் கண்ணடித்து கன்னத்தை தட்டி மேலும் அவனின் ரத்த அழுத்தத்தை அதிகரித்து விட்டே சென்றாள்.

*****

மாலை பெண்ணவள் கூறியது போல் அவளை அழைத்து செல்ல வந்தவன் ஹாரன் அடிக்க தேவதை போல் வந்தவளை கண்டு இமைக்க மறந்துவிட்டான்.

 

தொடரும்..

 

– ஆனந்த மீரா 😍😍

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்