Loading

சர்வாவை சந்தித்துவிட்டு நேரே தாங்கள் கூடும் இடத்திற்கு பெண்ணவளுடன் வந்தவன் முகத்தை கடுகு வெடிக்க வைத்திருக்க,

 

அதை கண்டு ருத்ரன் “என்னாச்சி ரேயன்.. போன வேலை என்னாச்சு” என்றதும் அவனோ தியாவை முறைக்க, பெண்ணவளோ “மிஸ்டர் மச்சி அந்த டாக்டர் என்னோட காலேஜ் மேட்” என்று தொடங்கி வழக்கு பற்றி விசாரித்ததை கூறினாள்.

 

அதை கேட்டு கொண்டவன் “அதுக்கும் ரேயன் கோவப்படுறதுக்கும் என்ன சம்பந்தம்” என்றதில் ரேயன் பெண்ணவளை மேலும் முறைக்க, பேச்சை மாற்றிய தியா “அத விடுடா.. அந்த லெட்டர் பத்தின ரிப்போர்ட் கிடைச்சிதா”

 

“ஆமா சொல்ல மறந்துட்டேன்” என்று ஒரு கவரை அவர்களின் முன் வைத்தவன் “அந்த லெட்டர் எழுதினது ஒரு ஆம்பள ஹீ ஸ் அபோவ் 29.. அண்ட் ஹீ ஸ் லெஃப்ட் ஹேன்ட் பெர்சன்.. அதேர்வைஸ் ஹீ ஸ் டிரிங்கர் ஆல்சோ” என்று முடித்திருக்க,

 

சிந்தித்த தியாவோ “சோ இத எழுதினது ஆம்பள..” என்று நெற்றியை நீவி “மிஸ்டர் மச்சி எனக்கு என்ன தோணுதுன்னா இந்த லெட்டர் பேர்சனுக்கும் அந்த ஹோமுக்கும் சம்பந்தம் இருக்காதுன்னு தோணுது.. ஐ மீன் அங்க வொர்க் பன்றாவங்களா இருக்காது”

 

“எத வச்சி சொல்லுற”

 

“அன்பு இல்லத்துல நீ சொன்னத வச்சி பாக்கும் போது ஜென்ஸ்னா செக்யூரிட்டி.. அதோட அந்த ஹோம் நடத்துறவங்க அண்ட் மேனேஜர்.. மத்தப்படி எல்லாம் லேடீஸ் தான்.. ஓனரே சொந்த இடத்த காட்டி கொடுக்க மாட்டார்.. செக்யூரிட்டிக்கு பொண்ணுங்க கிட்னப பத்தி தெரிய வாய்ப்பு இல்ல தெரிஞ்சுயிருந்தாலும் கண்டுக்காம இருக்கணும் இல்லன்னா அவர மிரட்டியிருக்கலாம்.. அதோடு மேனேஜருக்கும் அதே நிலை தான்”

 

“சரி மச்சி.. அப்போ நேம் தெரியாத அந்த ரெண்டு ஹோம்ல எதாவது ஒன்னுல இருக்கலாம்ல”

 

“இருக்கலாம்.. ஆனா எனக்கு தெரிஞ்சு இத வெளியால் தான் செஞ்சிருக்கணும்ன்னு என் பட்சி சொல்லுது.. ஒருவேளை நீ சொல்லுற மாதிரி கூட இருக்கலாம்.. ஆனா இந்த விவரத்த வச்சி எப்படி கண்டு பிடிக்கிறது” என்றவள் ரேயனிடம் “நீங்க எதாவது சொல்லலாமே சீனியர் சார்” என்றதை கேட்டு அவளை முறைத்தவன் “மச்சி.. நீ அந்த பொண்ணா ஃபாலோ பண்ணியே வேற எதுவும் லீட் கிடைச்சுதா”

 

“புதுசா எதுவும் இல்ல”

 

“சரி மச்சி.. நெக்ஸ்ட் வீக் அவ மறுபடியும் செக் அப் போவா.. அதுவர அவளை நல்லா ஃபோகஸ் பண்ணு” என்றதுக்கு அவனும் சம்மதமாக தலையாட்டி சென்றான்.

****

 

ருத்ரன் சென்ற பின் கூட ரேயனின் முறைப்பு பார்வை மாறாததில் “சரி நீ முறைச்சிட்டே இரு.. நான் விடு வரை போய் பாப்பா பாத்துட்டு வரேன்” என்றதில் அதிர்ந்து பின் குரலை செருமியவன் “இப்போ எதுக்கு அங்க போற”

 

“சும்மா உக்காந்து நீ முறைச்சிட்டு இருக்கிறத பாக்குறதுக்கு எதுக்கு இங்க இருந்துகிட்டு.. நான் போய் பாப்பாவாச்சும் பாத்து வருவேன்ல”

 

“அதெல்லாம் நீ போ வேண்டாம்.. உனக்கு வேலை தான வேணும்” என்று தாங்கள் ஆசிரமத்திற்குள் நுழைந்து எடுத்த ஆதாரங்களை,

 

அவளின் முன் வைத்தவன் “இதுல சரியா அன்னைக்கு எதுவும் செக் பண்ணல.. இன்னைக்கு எல்லாத்தையும் செக் பண்ணு எதாவது க்ளூ கிடைக்க வாய்ப்பு இருக்கும்” என்றவனுக்கு அவள் சர்வாவுடன் பேசியதை பார்த்த கடுப்பில் மண்டை காய்ந்ததில் எந்த யோசனையும் எட்டாமல் போக,

 

பெண்ணவள் வீட்டிற்கு செல்கிறேன் என்றதும் பதறியவன், அவளை சமாளிப்பதற்காக அந்த ஆதாரங்களை நோட்டமிட கூறி அடித்து விட்டான்.

 

அவன் தன்னை எதற்காக வீட்டிற்கு செல்ல விடாமல் தடுக்கிறான் என்று அவளும் யோசிக்காமல், அவன் கூறியதை நம்பி எதாவது ஆதாரம் கிடைக்குமா என்று முன் வைத்திருந்த தாள்களை திரட்ட தொடங்கினாள்.

 

சிறிது நேரத்திற்கு பின் எதையோ கண்டு புருவம் உயர்த்தியவள் மேலும் அதனை நன்கு ஆராய்ந்துவிட்டு “ரேயன்” என்று அழைக்க,

 

ஏதோ யோசனையிலிருந்தவனும் “என்னடி” என்றதும் அவள் தான் கண்டதை அவனிடம் கூறும் முன் ஆடவனுக்கு ருத்ரனிடமிருந்து அழைப்பு வந்ததில் “லொகேஷன் அனுப்பு உடனே வரேன்” என்றவனை கண்டு “தியா என்னாச்சி”

 

“யாழிசையை ஒருத்தன் கடத்தியிருக்கான்.. அவன நம்ம ருத்ரன் கண்டுபிடிச்சுடானாம்.. வா போகலாம்” என்று பெண்ணவளை கூட்டி கொண்டு ருத்ரன் அனுப்பிய இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

****

 

ருத்ரன் கூறிய இடத்திற்கு இருவரும் வந்திறங்க, அவ்விடத்தை கண்டு அதிர்ந்த தியாவோ ஓட்டமாக உள்ளே விரைய, அவளை யோசனையாக பார்த்தவண்ணம் ரேயனும் அவள் பின்னே வந்தான்.

 

ஓடி வந்து மூச்சு வாங்கியவளை கண்ட ருத்ரன் “ஏன்டி இப்படி ஓடி வர..” என்று தண்ணீர் குவளையை நீட்ட,

 

அதை கண்டு கொள்ளாத தியா “நீ பிடிச்சவன்.. எங்க”

 

“உள்ளே அந்த ரூம்ல” என்று ஒரு அறையை கை காட்டியதும் வேக எட்டுக்கள் வைத்து பெண்ணவள் அவ்வறைக்குள் செல்ல, பின்னேயே இரு ஆடவர்களும் தொடர்ந்து நுழைய, அதற்கு முன்னே இடத்தை சுற்றி நோட்டமிட்ட ரேயனுக்கு பெண்ணவளின் பதற்றத்துக்கான காரணம் நன்றாகவே புரிந்தது.

****

 

நாற்காலியில் கைகள் பின்னே கட்டப்பட்டு வாயில் துணி சொருகி நிலையில் கண்கள் மூடிய போல் இருந்தவனை கண்டு பதறிய தியா, ருத்ரன் கையிலிருந்த தண்ணீர் குவளையை பறித்து மயக்கத்திலிருக்கும் அவன் மீது தெளிக்க,

 

அதில் பதறி கண்கள் திறந்தவனோ வாயிலிருந்த துணியை துப்பிவிட்டு “அடி பைத்தியமே தூங்குறவன எதுக்குடி இம்சை பண்ற.. நேத்து நைட் சரியா தூக்கமே இல்ல” என்று கொட்டாவி விட்டப்படி கூறியவனை முறைத்த தியா ஆடவனின் கன்னத்தில் அடித்த தளம் கண்டு “ஏன்டா நல்லா தின்னு டைனோசர் போல உடம்ப வளத்து வச்சிருக்கியே.. உன்ன அவன் அடிக்கிற வர வேடிக்க பாத்துட்டு இருத்தியா”

 

“என்ன பண்றதுடி மாமஸ் அடிக்க மனசு வரல.. சரி வெட்டிய பேசிட்டு இருக்காம கைய ரிலீப் பண்ணலாம்ல” என்றதை கேட்டு,

 

அவனின் கையை விடுவித்த தியா முறைப்பை மட்டும் மாற்றவில்லை, பின் இரு கையையும் சுழற்றி பார்த்து கழுத்துக்கு சுளுக்கு எடுத்தவன் ரேயனின் அருகில் சென்று “ஹாய் ரே மாம்ஸ்”

 

“நீ இங்க என்னடா பண்ற.. அமெரிக்காலயிருந்து எப்போ வந்த”

 

“அதெல்லாம் வீட்டுக்கு போய் பேசிக்கலாமா வீட்டு சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு.. பசிக்குது மாம்ஸ்” என்க, அவ்வளவு நேரம் இவர்கள் மூவரையும் புரியாமல் பார்த்திருந்த ருத்ரன் “ரேயா யாழிசையை இவன் தான் எங்கயோ வச்சிருக்கான்.. அந்த பிள்ளைய இவன் இழுத்துட்டு வந்தத என் கண்ணால பாத்தேன்” என்றதில் அவன் தோலில் கைப்போட்ட ஆர்யன்

 

“என்ன ருத் மாம்ஸ் இதான் மேட்டர்ன்னு முதலயே சொல்லியிருந்தா பேசி தீத்திருக்கலாமே.. தேவையில்லாம இவ்வளவு நேரம் பசில நான் இருந்துக்க மாட்டேன்ல” என்றதில் பல்லை கடித்த தியா “ஆர்யா பீ சீரியஸ் யாழிசை எங்க.. அவளுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்”

 

“அடடே அமெரிக்காலயிருந்து வந்தவன நலன் விசாரிக்காம புலன் விசாரிக்குறீங்க இதான் தமிழர் பண்ப்பாடா” என்று கண்ணை கசக்கி போலியாக வருந்தியவனை கண்டு மேலும் முறைத்த ரேயன் “டேய் ஆர்யா சீரியஸ்நெஸ் புரியாம விளையாடிட்டு இருக்காத.. யாழிசை இப்போ எங்க”

 

“டோண்ட் வொர்ரி மாம்ஸ்.. என்கிட்ட பாதுகாப்பா இருக்கா.. கொஞ்ச நாள் கழிச்சி நானே உங்ககிட்ட கூட்டி வரேன்.. அதுவரை யாரும் எதுவும் கேட்காதீங்க”

 

“ஆர்யா அவள சுத்தி நிறைய ஆபத்து இருக்குடா.. அதோட அவ ப்ரெக்னன்ட்டா வேற இருக்கா”

 

“தெரியும் மாம்ஸ்.. அன்னைக்கு அவ ஹாஸ்பிட்டல் செக்அப் முடிஞ்சி வரும் போது பின்னால லாரி வருரது கூட தெரியாம சோகமா வந்தா.. நான் தான் அவள காப்பாத்தி பேசி என்கூட கூட்டிட்டு வந்தேன்.. இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க” என்றவனின் முகம் வாடி விட, அதை புரிந்து கொண்ட தியா “ரேயா எதுனாலும் வீட்டுல போய் பேசிக்கலாம்” என்று மூன்று ஆடவர்களுடன் வீட்டிற்கு வந்து சேர,

 

புதிதாக வந்தவனை பாட்டி மற்றும் சித்திரா கேள்வியாக பார்க்க, பாட்டியோ “யாரு இது”

 

“அவன் என் தம்பி ஆர்யா” என்றதும் இருவரும் வியந்து நிற்க, தியாவோ “ஆர்யா மேல என்னோட ரூம் இருக்கு போ” என்றதும் மற்ற இரு ஆடவர்களிடம் கண்ணை காட்டியவள் “கிழவி ஒரு ஜுஸ் போட்டு கொடு” என்றுவிட்டு ஆடவர்கள் புறம் வந்தவள் “அவன் ஏற்கனவே சரியில்ல.. இப்போ இத பேசினா தேவையில்லாம கோவப்படுவான்”

 

“தியா உன் தம்பிய சமாதானப்படுத்தி கொஞ்சிலாம் கேக்க டைம் இல்ல சீரியஸ்நெஸ எடுத்து சொல்லி யாழிசை உடனே பாக்க ஏற்பாடு பண்ணு” என்க, பாட்டி கொடுத்த பழசாறை வாங்கி செல்ல போனவளை தடுத்த ரேயன் “நான் உனக்கு கால் பண்றேன்.. ஆன் பண்ணிட்டு பேசு நான் கேக்கணும்.. அதோட அவன் ஏதோ மறைக்குறான் அது என்னன்னு தெரியணும்” என்க,

 

“ரேயா நான் பேசிட்டு சொல்லுறேன்” என்றவளை முறைத்து தானே அவ்வேலையை செய்து பெண்ணவளிடம் திறன்பேசியை நீட்ட, அவனை முறைத்துவிட்டு அதனை வாங்கி கொண்டே அறைக்குள் சென்றாள்.

 

*****

 

தியா கூறியதும் அறைக்குள் வந்த ஆர்யாவோ அங்கிருந்த பால்கணி சென்று புகைப்பிடித்து கொண்டே வானத்தை வெறிக்க, பெண்ணவளை சந்தித்த நிகழ்வே அவனின் கண்முன்னே தோன்ற, அதனுள்ளே முழ்கி போனான்.

 

தமக்கை கூறிய சில வேலைகளை முடித்துவிட்டு வண்டியில் தன் வீட்டை நோக்கி பயணித்து கொண்டிருந்தவன், தியாவிடமிருந்து அழைப்பு வந்ததில் வீட்டுக்கு போய் பேசி கொள்ளலாம் என்று அழைப்பை ஏற்காமல் விட்டவன் பெண்ணவள் விடாமல் அழைக்கவும் வண்டியை ஓரம் நிறுத்தி ‘வேலை கொடுத்தே கொல்வாளே’ என்று எண்ணிவிட்டு அழைப்பு ஏற்று அவளிடம் பேசி கொண்டிருக்கையில் துரத்திலியிருந்து சோகமான முகத்துடன் நடந்து வருபவளை நோட்டமிட்டு கொண்டிருந்தவன் பெண்ணவள் பின்னே வரும் லாரியை கண்டு அதிர்ந்து அவசரமாக அழைப்பை துண்டித்துவிட்டு ஓடி வந்து பெண்ணவளை தூக்கி தள்ளி நிறுத்தி “அறிவில்ல உனக்கு உன் அப்பன் வீட்டு ரோட் போல இஷ்டத்துக்கு வர” என்றவனின் அர்ச்சனை கூட, எதற்கு என்று புரியாமல் விழித்த பேதை தன்னை கடந்து சென்ற லாரியை கண்டு தான் உணர்ந்தவள் தலை கவிழ்த்து அமைதி காத்தாள்.

 

அவளின் அமைதியில் சூடு ஏறிய ஆர்யாவோ “உன்கிட்ட தான பேசிட்டு இருக்கேன்.. ஏதோ உன்ன பொண்ணு பாக்க வந்த போல தலைய குனிஞ்சு நின்னா.. என்ன அர்த்தம் பதில் சொல்லு”

 

“என்ன எதுக்கு காப்பாத்துனீங்க” என்றவள், அப்போதும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை

 

அவளின் வார்த்தையில் அதிர்ந்தவன் “ஏய் என்ன பேசுற நீ.. அப்போ பின்னால லாரி வருறது தெரிஞ்சு தான் வந்தியா” என்றதுக்கு மறுப்பாக தலையாட்டியவள் “நான் எதுக்கு பூமிக்கு பாரமா இருந்துகிட்டு.. அப்படியே போயிருப்பேன்ல” என்றதை கேட்டு கையை மடக்கி கோவத்தை அடக்கிய ஆர்யா “உனக்கு என்ன பிரச்சனை”

 

“வாழுறதே பிரச்சினை தான்” என்க,

 

அதில் இதழ் குவித்து ஊதியவன் “லூசு தனமா பேசி என்ன சாகடிக்காம.. என்ன பிராப்ளம்ன்னு சொல்லு”

 

“பிளீஸ் விடுங்க நான் போகனும்”

 

“சரி எங்க போகனும் சொல்லு.. நானே ட்ராப் பண்றேன்”

 

“இல்ல பக்கம் தான் நானே நடந்து போயிடுவேன்” என்று செல்ல போனவளின் கையை பற்றியவன் அவன் கையிலிருந்தை மருத்துவ பையை பறிக்க, அதில் பதறி “ப்ச் என்ன பண்றீங்க.. அத என்கிட்ட கொடுங்க” என்று அவனிடமிருந்து பறிக்க முற்பட்டவள், ஆடவனின் முறைப்பில் அடங்கி தலை கவிழ்த்து நின்றாள்.

 

அவளிடமிருந்து பறித்த மருத்துவ பையிலிருந்த பரிசோதனை ஆராய்ந்தவனின் கண்கள் அதிர்ச்சி மற்றும் சில உணர்வுகளால் விரிந்து கொள்ள பெண்ணவளிடம் காட்டாமல் தனக்குள் மறைத்து “சோ ப்ரெக்னன்ட் ரைட்?” என்றதை கேட்டு ஆமென்று தலையாட்டியவளின் கண்களில் பொல பொலவென்று கண்ணீர் வடிய,

 

அவளை அழுத்தமாக பார்த்திருந்த ஆர்யா “யாரோடவும் லவ் ஆர் ரிலேஷன்ஷிப்?” என்றதுக்கு பெண்ணவள் மறுப்பாக தலையசைக்க, அதிலே அவள் கற்பழிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை யுகித்தவன் கைகளை மடக்கி கோவத்தை கட்டுப்படுத்தி “உன் பரண்ட்ஸ் என்ன பண்றாங்க”

 

“எனக்கு யாரும் இல்ல பக்கத்துல இருக்கிற அன்பு ஹோம்ல தான் இருக்கேன்”

 

“ஓகே பைன்.. என் கூட வரியா” என்றதில் விலுக்கென்று நிமிர்ந்த பாவை அதிர்ச்சியாக அவனை பார்க்க,

 

அவளின் அதிர்ச்சியில் பெருமூச்சு விட்ட ஆர்யா “நீ தப்பா நினைக்கிற அளவு நான் வொர்த் இல்ல.. புரியுற மாதிரி சொல்லணும்ன்னா ஐ அம் இம்போடென்ட்” என்றதில் விழி விரித்தவள் “என்ன சொல்லுறீங்க”

 

“உண்மைய தான் சொல்லுறேன்.. நான் ஆண்மை இல்லாதவன் நீ மனசு வச்சா ரெண்டு பேரோட பிராப்ளமுக்கும் விடை கிடைக்கும்” என்றதில் குழம்பியவள் “எனக்கு புரியல”

 

“உன் பெயரு”

 

“யாழிசை”

 

“ஓகே யாழிசை ஸ்ட்ரெய்ட்டா விஷயத்துக்கு வரேன்.. உனக்கு இந்த குழந்தை பிராப்ளம்.. எனக்கு குழந்தை பெத்துக்க முடியாதுங்குற பிராப்ளம் சோ இந்த குழந்தைய எனக்கு கொடுத்துரு..”

 

“நீங்க புரிஞ்சு தான் பேசுறீங்களா.. யார் குழந்தைன்னு தெரியாம எப்படி” என்றவளை தடுத்தவன் “எனக்கு எந்த அறுவருப்பும் இருக்காது.. என் குழந்தை போல பாத்துப்பேன்.. உனக்கு பிரச்சனை இல்லன்னா குழந்தை பிறந்ததும் நீயும் என் கூடவே இருக்கலாம்.. என் சுண்டு விரல் கூட உன் மேல படாது” என்றவனின் பார்வையில் தெரிந்த உறுதியை கண்டு என்ன முடிவெடுப்பதென்று குழம்பி நிற்க, ஆர்யாவோ “நீ என்ன பண்ற”

 

“காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிறேன்”

 

“ஓகே யாழிசை.. நீ மேல படிக்க ஆசைப்பட்டாலும் நானே படிக்க வைக்கிறேன்.. எனக்கு இந்த குழந்தை வேணும் பிளீஸ் யாழிசை முடியாதுன்னு சொல்லிடாத” என்றதில் மேலும் குழம்பியவள் “நீங்க சொல்லுறது எல்லாம் எனக்கு புரியுது.. ஆனா எனக்கு குழப்பமா இருக்கு.. ஒரு டூ டேஸ் டைம் கொடுங்க யோசிச்சுட்டு சொல்லுறேன்”

 

“தாராளமா யோசி பட் முடிவு எனக்கு சாதகமா இருக்கணும்.. இது என்னோட நம்பர் எப்போனாலும் கால் பண்ணு” என்று தன்னுடைய எண்ணை கொடுத்தவன் “இந்த ரிப்போர்ட்ஸ்லாம் நான் கொண்டு போறேன்.. உன்கிட்டயிருந்தா ஹோம்ல என்ன ஏதுன்னு கேட்பாங்க.. சோ நீ நல்லா திங்க் பண்ணி உன்னோட முடிவ சொன்னா ஹோம்ல என்ன சொல்லி வெளிய வருரதுன்னு அப்புறம் சொல்லுறேன்..” என்றவன் போய் கொ

ண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி பெண்ணவளை ஏற்றிவிட்டு “ரீச்சானதும் மெசேஜ் போடு.. டேக் கேர்” என்று அனுப்பி வைத்தான்.

 

தொடரும்..

 

– ஆனந்த மீரா 😍😍

****

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்