
அத்தியாயம் – 01
சென்னையில் மிகப்பெரிய திருமணம் மண்டபம் அது. அந்த மண்டபத்தின் அலங்காரமே அவர்களின் செல்வ செழிப்பை பற்றி சொல்லியது. அந்த மண்டபத்தில் மணமகள் அறையில் தயாராகிக் கொண்டிருந்தாள் ஹன்சிதா. இந்த திருமணத்தில் அவளுக்கு எதிர்பார்ப்பு என எதுவும் இல்லை அதற்காக பிடிக்காத திருமணம்
எனவும் கூற முடியாது. அவளைப் பொறுத்த வரையில் இது ஒரு அரேஞ்ச் மேரேஜ் தன் தந்தை என்ன செய்தாலும் தன் நன்மைக்கே என எண்ணி இந்த திருமணத்திற்கு சம்மதித்தாள்
அவள் மணமகள் அறையில் முழு அலங்காரத்துடன் தேவதை போல் அழகாக தயாராகி இருக்க அந்த அறைக்கு வந்த அவளது தாய் அபிராமி ஹன்ஷீ ரொம்ப அழகா இருக்கடி என் கண்ணே பட்டுடும் போல இருக்கு என அவளுக்கு திருஷ்டி கழித்தார். சரி சரி ஐயர் கூப்பிடுறார் முகூர்த்ததுக்கு நேரம் ஆகுது எனக் கூறி மணவறையில் அமர வைத்தார். இவ்வளவு நேரம் அவள் உடம்பில் இல்லாத நடுக்கம் இப்பொழுது அவள் உடம்பில் தோன்றியது. அதை கவனித்தவாறே அவள் அருகில் அமர்ந்து இருந்தான் கருடன். வெள்ளை வேஷ்டி சட்டையில் கம்பீரமாக இருந்தவன் மனதளவில் தன்னவளின் கலக்கம் கண்டு உடைந்து போனான் ஆனால் அதை எதையுமே முகத்தில் காட்டாமல் சாதாரணமாக அமர்ந்து இருந்தான்
அந்த மணவறையின் அருகில் நின்று கொண்டிருந்தார் ஹன்ஷிதாவின் தந்தை நரசிம்மன். அவரது மனதில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் அவற்றை முகத்தில் காட்டாமல் கம்பீரமாக நின்றிருந்தார். அந்நேரம் அய்யர் தாலியை எடுத்து கருடனிடம் நீட்ட அதை வாங்காமல் நரசிம்மனை பார்த்தவன் ஐயா நீங்க தாலி எடுத்து கொடுத்து தான் என் கல்யாணம் நடக்கணும் அதனால நீங்க எடுத்து கொடுங்க என கூறவும் அவரும் இன்முகமாக தாலியை எடுத்துக் கொடுக்க அதை ஹன்ஷிதாவின் கழுத்தில் அணிவித்து அவளை தன்னுடைய சரிபாதியாக்கிக் கொண்டான் கருடன். அந்நேரம் அவள் விழிகளில் இருந்து வழிந்த இரண்டு சொட்டு கண்ணீர் அவன் கைகளில் பட்டு தெறிக்க அதை பார்த்தவன் அவள் காதருகில் குனிந்து அவளுக்கு மட்டும் கேட்குமாறு அழாத ஹன்ஷி எல்லாம் சீக்கிரம் சரியாகிடும் உன்னோட எல்லா வலிக்கும் மருந்தா நான் எப்பவும் கூட இருப்பேன் எனக் கூறி அவள் பிறை நெற்றியில் குங்குமத்தை இட்டான் அவளது அன்பு கணவன்.
தொடரும்……..

