Loading

காதல் -73

 

துவாரகா , அஸ்வதி மற்றும் விஹான் மூவரும் துருவை ஆக்சிடென்ட்டில் இருந்து காப்பாற்றி அவனை பழையபடி மாற்றினர்கள் இதில் பெறும் பங்கு வகித்தது துவாரகா மட்டுமே……..

 

பிறகு வந்த நாட்களில் துருவ் துவாரகா,அஸ்வதி விஹான் நால்வரும் நல்ல நண்பர்களாகி போயினர்…..

 

துருவ் அவனின் நண்பர்களை செமஸ்டர் விடுமுறையில் மணாலிக்கு  அழைத்து சென்றான்……..

 

சென்னையின் அதித வெயிலுக்கு மணாலியின் குளுமை அவர்களுக்கு இனிமையாக இருந்தது…….

 

மணாலி விஹானுக்கு பரீட்சியமான இடம் ஆதலால் அவன் அவர்களை அங்குள்ள அனைத்து இடங்களுக்கும் அழைத்து சென்றான்………

 

இவ்வாறு அவர்களின் நாட்கள் மனாலியில் சந்தோஷமாக சென்றது ……

 

அவர்கள் ஊருக்கு  கிளம்புவதற்கு மூன்று நாட்கள் முன்பு நண்பர்கள் நால்வரும் சேர்ந்து ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் அப்பொழுது சர்வர் தண்ணீருக்கு பதிலாக பியரை துவாரகாவின் கிளாசில் ஊற்றவும் அவள் அதை குளிர்பானம் என்று எண்ணி குடித்து விட்டாள் அந்த குளிர்பானத்தின் சுவை நன்றாக  இருந்ததால் மேலும் இரண்டு, மூன்று கிளாஸ் வாங்கி குடித்தாள்………

 

அஸ்வதி விஹான் மற்றும் துருவ் மூவரும் கல்லூரிக்கு எப்படி அட்மிஷன்களை பெருக்குவது என்று தீவிரமாக ஆலோசனை செய்து கொண்டிருந்ததால் அவர்கள் துவாரகாவை கவனிக்கவில்லை அதன் விளைவு அவள் வாழ்வில் முதன்முதலாக பியரை குடித்து விட்டாள்…….

 

அவர்கள் பேசி முடித்து துவாரகாவை பார்த்தனர் அவள் சாப்பாட்டு டேபிளில் கால் இரண்டையும் தூக்கி மேலே வைத்துக் கொண்டு அவள் அமர்ந்து இருந்த நாற்காலியின் தலை பகுதியில் தலையை வைத்துக்கொண்டு மேலே சீலிங்கை பார்த்து பாட்டு பாடி கொண்டு இருந்தாள்……..

 

“காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் அதைக் கேட்டு வாங்கி போனாள் அந்த கண்ணி என்னவானாள்”………

 

ஆமா……மமா…..மா………

அஸ்..ஸ்………ஸ்…….

வா……..வா….வா

 

ஹே துவாரகா என்னடி ஆச்சு உனக்கு? ஏன் இப்படி வித்தியாசமா பேசுற?

 

அஸ்……வதீதீதீதீ……..

 

என்னடி ஆச்சு உனக்கு?

 

நீ தள்ளி நில்லு உனக்கு ஒன்னும் தெரியாது விஹான் அண்ணாத்த, அந்தத் கண்ணி என்ன வாங்கிட்டு போனா?

 

எந்த கண்ணி?

 

அடேய் பால் டப்பா மூஞ்சி உனக்கும் தெரியாதா?

 

என்னடி எனக்கு தெரியாது ?உனக்கு என்ன ஆச்சு துவாரகா?

 

எல்லாரும் டிவிய பாருங்க என்று அவள் நிற்க முடியாமல் துருவ் மேல் சாய்ந்து கொண்டு நின்றாள்……

 

அங்க டிவில என்னடி தெரியுது?

 

அடியே அஸ்வதி என்னோட விஹான் அண்ணாத்த கிட்ட சொல்லி நல்ல கண்ணாடிய வாங்கி போடு அங்க பாரு டிவில நம்ம தலைவர் எம்ஜிஆர் சரோஜாதேவி அம்மாக்கிட்ட காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் அதைக் கேட்டு வாங்கி போனால் அந்த கண்ணி என்னவானாள்ன்னு பாடிட்டு இருக்காரு பாரு கண்ணு தெரியலையா?

 

ஆமா தெரியுது அதுக்கு இப்ப என்ன?

 

யாருக்கும் இங்க பொறுப்பே இல்ல அந்த கண்ணிக்கு என்ன ஆச்சுன்னு தலைவர் கேக்குறாருல்ல பதில் சொல்லனும்ல நம்ம எல்லாரும்??

 

அடியே இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு? ரெஸ்டாரண்ட் வரதுக்கு முன்னால  ஏன்  வந்த பிறகும் நல்லா தானடி இருந்த?  இப்ப என்ன ஆச்சுடி உனக்கு ? ஏன் இப்படி வித்தியாசமா பேசிட்டு இருக்க?

 

அதெல்லாம் எனக்கு தெரியாது இப்ப நான் அந்த கண்ணிய பாக்கணும் அந்த கன்னிக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்கணும்…….

 

ஹே துவாரகா அந்த கன்னி தான் சரோஜாதேவி அம்மா அவங்களுக்கு ஒன்னும் ஆகல பத்திரமா சாமிகிட்ட போயிட்டாங்க புரியுதா??

 

என்னது நம்ம தலைவரோட காதல் கண்ணி செத்துப் போயிட்டாங்களா?

 

ஏய் சத்தம் போட்டு பேசாதே எம் ஜி ஆர் சாரோட ஃபேன்ஸ் உன்ன அடிச்சிட போறாங்க…….

 

என்ன அடிக்கறதுக்கு இங்க யாருக்கு தைரியம் இருக்கு?

என்று அவள் தன்னுடைய கை சட்டையில் முறுக்கி விட்டு சண்டைக்கு தயாராவது போல நின்றாள்…….

 

விஹான் , துருவ் இவளுக்கு இன்னிக்கு என்ன ஆச்சு?

ஏன் இப்படி லூசு தனமா பேசிட்டு இருக்கா?

 

எனக்கும் புரியல  அஸ்வதி…..

 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அந்த சர்வர் வந்து துவாரகாவிடம் மேடம் இன்னொரு கிளாஸ் கொண்டு வரட்டுமா என்று கேட்டார் அவளும் கொண்டு வாங்க கொண்டு வாங்க கூறினாள்………

 

ஹலோ சர்வர் என்ன கிளாஸ்?

 

மேடம் இந்த மேடம் பீர் நாலு கிளாஸ் கேட்டாங்க நானும் கொடுத்தேன் இப்போ இன்னொரு கிளாஸ் வேணுமான்னு கேட்டேன் அதுவும் வேணும்னு சொல்றாங்க உங்களுக்கும் சேத்து எடுத்துட்டு வரட்டா?

 

என்னது இவளுக்கு பீர்  குடுத்தியா?

 

ஆமா மேடம் நல்ல ஃபாரின் சரக்கு அதான் மேடம் எப்படி இருக்காங்க……

 

ஏய் உன்ன ….உன்ன…

என்று அஸ்வதி கோபத்தில் அந்த சர்வரை அடிக்கப் போக விஹான் அவளை பிடித்துக் கொண்டான்…..

 

சார் இந்த மேடம் குடிச்சதுக்கு இந்த மேடம் ஏன் போதையில இருக்காங்க??

 

டேய்  என்ன பார்த்தா போதையில இருக்குற மாதிரியா இருக்குது?

 

ஆமா மேடம்…..

 

ஆமாவா???

விஹான் என்ன விடுங்க இவன் மண்டைய பொளக்காம விடமாட்டேன் என்று அஸ்வதி கோபத்தில் துள்ளி கொண்டிருந்தாள்……

 

அஸ்வதி கொஞ்ச நேரம் அமைதியா இரு நான் என்னன்னு விசாரிக்கிறேன்…..

 

சர்வர் இவங்க பீர் வேணும்னு கேட்டாங்களா?

 

ஆமா சார் , ஆறாவது டேபிள்ல ஒருத்தங்களுக்கு பீர் வேணும்ன்னு ஆர்டர் பண்ணி இருந்தாங்க அதான் நானும் கொண்டு வந்தேன் நீங்க மூணு பேரும் பேசிட்டு இருந்தீங்க அதான் இந்த மேடம் தான் ஆர்டர் பண்ணி இருப்பாங்கன்னு அவங்க கிட்ட கேட்டேன் அவங்களும் ஊத்துங்கன்னு சொல்லிட்டாங்க நானும் கிளாஸ்ல பீர ஊத்தி கொடுத்தேன் மேடம் ஒரு கிளாஸ் குடிச்சிட்டு நல்லா இருக்குன்னு இன்னொரு கிளாஸ் கேட்டாங்க அப்படியே நாலு கிளாஸ் குடிச்சிட்டாங்க அதான் அதுக்கப்புறம் வந்து பார்த்தபோது மேடம் மட்டையாகி இருந்தாங்க அதான் மேடம் தெளிஞ்ச பிறகு திரும்பவும் கேட்டேன் மேடம் எடுத்துட்டு வர சொன்னாங்க இதுதான் நடந்தது சார்…….

 

அப்பொழுது துருவ் அவர்கள் இருந்த டேபிளை எண்ணிப் பார்த்தான் அது அஞ்சாவது டேபிள் பக்கத்து டேபிளில் உள்ளவர்கள் ஆர்டர் செய்ததை தவறுதலாக துவாரகாவிற்கு அந்த சர்வர் கொடுத்து விட்டான் என்று அவனுக்கு புரிந்தது……

 

விஹான் விடுங்க , சர்வர் நீங்க பில் கொண்டு வாங்க என்று துருவ் கூறவும் அந்த சர்வர் பில்லை ரெடி பண்ண சென்று விட்டார்……

 

ஏன் துருவ்  அந்த சர்வர போக விட்டீங்க அவன் கிட்ட இன்னும் விசாரிச்சி திட்டிருக்கலாம்…….

 

அஸ்வதி அந்த சர்வர் டேபிள் மாதிரி பீர் கொடுத்துட்டாரு அத நம்ம துவாரகாவும் குடிச்சிட்டா இப்போ நம்ம இங்க இருந்தா துவாரகா கலாட்டா பன்னுவா அதான் நம்ம அவள வீட்டுக்கு கூட்டிட்டு போயிருவோம் என்று அவன் கூறவும் அது சரி என்று படவே அவர்கள் இருவரும் அதற்கு ஒத்துக் கொண்டனர்……

 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது துவாரகா துருவின் தோள்களில் கை போட்டுக் கொண்டே அவனின் முகத்தை ஒரு கைகளால் பிடித்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்…….

 

அந்த எதிர்பாரா முத்தத்தில் துருவ் ஸ்தம்பித்து போய் நின்றான்…..

 

ஹே துவாரகா என்னடி பண்ணிட்டு இருக்க?

தள்ளி வா என்று அஸ்வதி அவளை பிடித்து இழுத்தாள் ஆனால் துவாரகா அஸ்வதியை விஹான் மேல் தள்ளி விட்டாள்……

 

அஸ்வதி நா இன்னைக்கு இந்த பால் டப்பா மூஞ்சி கிட்ட பேசியே ஆகணும் என்று அவள் துருவின் முகத்தை இரு கைகளில் ஏந்தி கொண்டு அவனிடம் பேசினாள்……..

 

டேய் டால்டா டப்பி நீ என்னய லவ் பண்றன்னு எனக்கு நல்லாவே தெரியும் எனக்கும் உன்ன ரொம்ப பிடிக்கும் தான் ஆனா என்று அவள் நிறுத்திவிட்டு அவன் தோள்களில் சாய்ந்து கொண்டு அழுக ஆரம்பித்தாள்…….

 

ஆனா என்ன ?

சொல்லு துவாரகா……..

 

நான் ஒரு அனாதை பொண்ணு என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ சந்தோஷமா இருக்க முடியாது அதனால என்ன நீ காதலிக்கிறதை விட்ரு என்று அவள் மீண்டும் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழுது ஆரம்பித்தாள்…….

 

அவள் அவ்வாறு கூறவும் அவன் கோபத்தில் அங்கு அவள் மிச்சம் வைத்திருந்த பீரை முழுவதுமாக குடித்து விட்டான்…….

 

அவனும் அவளை போலவே போதையின் உச்சத்திற்க்கு செல்ல…..

 

துருவ் எனக்கு உன்கூட ஒரு நாள் வாழ்ந்தா கூட போதும் என்று அவள் அவனை பிடித்து இழுத்து கொண்டு அவள் அறைக்கு அழைத்து சென்றாள்……

 

அவள் அறைக்குள் துருவை தள்ளி விட்டு கதவை தாழ் போட்டு சாத்தினாள்……

 

பிறகு அவள் அவனின் முகம் அருகே சென்று…….

 

எனக்கு உன்கூட வாழனும் உனக்குதான் இப்படி இருந்தா ரொம்ப பிடிக்கும்ல என்று அவள் அவளின் மேலாடையை கழற்றி விட்டு மேல் அணிந்த உள்ளாடையோடு அவன் மேல் சரிந்தாள் இருவரும் இணைந்து ஒன்றாக பெட்டில் விழுந்து விட்டனர்……

 

துவாரகா தான் முதலில் கண்விழித்தாள் அவள் கண் விழித்து முதலில் பார்த்த முகம் துருவின் முகம் தான்……

 

அவள் துருவின் வெற்று மார்பினில் ஆடைகள் இன்றி சாய்ந்து கொண்டிருந்தாள்……

 

அவளுக்கு அங்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை எழுந்து அமர்ந்து கொண்டு இருந்தாள்…..

 

தலையில் சுத்தியலை வைத்து யாரோ அடிப்பது போல அவளின் தலை அப்படி வலித்தது…….

 

அவள் நேற்று இரவு நடந்தவற்றை நினைவு கூர்ந்து கொண்டு இருந்தாள் ஆனால் அவள் நினைவிற்கு ஒன்றும் ஞாபகம் இல்லை…….

 

பிறகு சிறிது நேரம் கழித்து நேற்று இரவில் அவளும் துருவும் ஒன்றாக இருந்தது அவளின் மூளையில் சிறிது சிறிதாக ஞாபகங்கள் வந்து போனது…..

 

அட கடவுளே, அய்யோ இப்படி ஆகிடுச்சு இப்போ என்ன பண்ண என்று அவள் அழுது கொண்டே உடை அணிந்து கொண்டு அஸ்வதியின் அறைக்கு சென்றாள்…….

 

அங்கு அஸ்வதி மற்றும் விஹான் நல்ல உறக்கத்தில் இருந்தனர்……

 

துவாரகா திரும்பி வெளியில் செல்ல போகும் நேரம் அவள் கைபட்டு டேபிள் லாம்ப் கீழ விழுந்து விட அஸ்வதி மற்றும் விஹான் விழித்து விட்டனர்…..

 

என்னாச்சு  துவாரகா இந்த நேரத்தில் இங்கே நின்னுட்டு இருக்க?

 

அஸ்வதி என்று துவாரகா அஸ்வதியை கட்டிப்பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்…..

 

ஏய் என்னடி ஆச்சு உனக்கு?

ஏன் இப்படி நடுராத்திரி வந்து அழுதுட்டு இருக்க?

 

அஸ்வதி…..

 

என்னடி ஆச்சு?

 

நான் இங்க இருந்து போறேன்…..

 

இந்த நேரத்துல எங்க போவ?

 

அஸ்வதி எனக்கும் துருவுக்கும் நடுவுல எல்லாம் முடிஞ்சிடுச்சு இதுக்கு எல்லாம் நா தான் காரணம் அதனால நான் துருவோட கண்ணுல இருந்து ரொம்ப தூரம் தள்ளி போறேன், எப்படியும் துருவோட அப்பா இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க ஏன் துருவே காலையில எந்திரிச்சி எங்களுக்கு நடுவுல நடந்தத பெருசாக எடுத்துக்காம அப்படியே போயிருவான் அதனால என்னோட வயித்துல  வளருர அவனோட குழந்தையை நல்லபடியா நா வளர்த்துப்பேன் என்று துவாரகா கூறிவிட்டு அவளை நரகைக்குள் அவளின் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்………

 

அவள் கூறியதை கேட்ட அஸ்வதி மற்றும் விஹான் தங்களுக்குள் சிரித்து கொண்டனர்……..

 

தொடரும்……..

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……..

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்