Loading

காதல் -69

 

அஸ்வதி மற்றும் விஹான் இருவரும் மிகவும் சந்தோஷமாக  இருந்தனர்…….

 

மதன் மற்றும் வள்ளியும் அவர்களோடு அஸ்வதியின் வீட்டில் தங்குவதால் அஸ்வதி மேலும் சந்தோஷமாக இருந்தாள்……..

 

அஸ்வதிக்கு இன்னும் கூடுதல் சந்தோஷமாக அவளின்  நெருங்கிய தோழியான துவாரகாவையும் , அவளின்  நெருங்கிய தோழனாகிய சூர்யா இருக்கும் இடத்தையும் கண்டு பிடித்து விட்டதால் அஸ்வதி பூரிப்புடனே காணப்பட்டாள் அதைப் பார்த்த  விஹான் மிகவும் சந்தோஷமாக இருந்தான்………

 

தேவராஜ் சுலோச்சனாவின் கடந்த கால கசப்பான நிமிடங்களை  சுலோசனாவிடம் கூற கூற  சுலோச்சனா பயந்து போய் தேவராஜை பார்த்தார்…….

 

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது அனந்தி வந்து விட்டாள் ஆனால் அவள் எதுவும் பேசாமல் அமைதியாக அவர்கள் இருவரும் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தாள்……..

 

சுலோச்சனா தேவராஜிடம் மறைத்த விஷயங்கள் அனைத்தையும் தேவராஜ் சரியாக கூறவும் சுலோச்சனா ஆடிப் போய்விட்டார்………

 

என்னடி அப்படி முழிக்கிற எனக்கு எதுவுமே தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கியோ?எனக்கு எல்லாம் தெரியும்…….

 

என்… என்ன தெரியும் உங்களுக்கு???

 

ஓஹோ என்னோட வாயிலருந்து கேட்கணும்னு ஆசைப்படுற சரி நானே சொல்றேன் உங்க அப்பா பன்ன பிசினஸ் எல்லாமே லாஸ் ஆயிட்டே இருந்தது அதனால உன்னைய ஒரு பெரிய பிசினஸ் பண்ற பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு அந்த பிசினஸ் பண்ற பையனோட சொத்தை எல்லாம் நீங்க ஆண்டுட்டு இருக்கலாம்ன்னு  உன்னோட அப்பா அம்மா பிளான் போட்டாங்க ஆனா நீ சேகர்ங்குற பையனை காலேஜ்ல விரும்பி லாட்ஜ் வர போய் உனக்கு வயித்துல ஒரு குழந்தை வளந்து அந்த குழந்தையையும் பெத்து நீ தெருவுல வீசிட்டு வந்தது அதுக்கப்புறம் என்னோட சொத்தையும் வீட்டையும் பாத்து என்னைய காதலிக்கிறேன்னு சொல்லி என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு இத்தனை வருஷமா என் கூடவே இருந்துருக்க இதான உன்னோட கதை???

 

தேவராஜ் சுலோச்சனாவின் கதையை சுலோச்சனாவிடமே சரியாக கூறவும் சுலோச்சனா ஆடிப் போய்விட்டார்……..

 

தேவா உங்களுக்கு இந்த கதையெல்லாம் யார் சொன்னா? உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?

 

நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்ட புதுசுல என்னைய உன்கிட்ட நெருங்கவே விடமாட்டே உன்னோட வயிறு அந்த சமயம் கொஞ்சம் பெருசா ஆயிட்டே இருந்த மாதிரி இருந்தது,  அதுக்கப்புறம் ஒரு ஒரு வருஷம் நீ உங்க அம்மா வீட்டிலேயே இருந்த ,எனக்கு எதுவுமே சரியா படல அப்போ ஒரு நாள் உங்க வீட்டுக்கு வர வழியில நா சேகர பார்த்தேன் …….

 

அவன் என்கிட்ட கண்ணீர் விட்டு அழுதான்  சுலோச்சனாவ நா ரொம்ப உண்மையா காதலிச்சேன் அவதான் என்ன வலுக்கட்டாயமா லாட்ஜ்க்கு அழைச்சிட்டு போய் எங்களுக்குள்ள எல்லாம் நடந்தது அதுக்கு அப்புறம் நா ஒரு ஏழைன்னு தெரிஞ்ச பிறகு சுலோச்சனா என்ன விட்டுட்டு உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டா இப்ப சுலோச்சனா வயித்துல இருக்குறது என்னோட குழந்தை , அந்தக் குழந்தையாவது எனக்கு வாங்கித் தாங்க சார் ப்ளீஸ் இன்று அந்த சேகர் தேவராஜன் கைகளை பிடித்துக் கொண்டு அழுதான்……

 

தேவராஜ் அந்த குழந்தையை  பார்க்கும் முன்பே சுலோச்சனாவின் தாயார் லீலாவதி அந்தப் பச்சிளம் குழந்தையை தெருவில் வீசி விட்டு வந்தார்………

 

அதன் பிறகு தேவராஜ் லீலாவதியிடம் அந்த குழந்தை எங்கே என்று உண்மை அனைத்தையும் கூறி கேட்டதை பார்த்து பயந்த லீலாவதி தன்னுடைய மகளின் வாழ்க்கை பாழாகி விடுமே என்று எண்ணி தேவராஜன் காலில் விழுந்து இதை அப்படியே விட்டு விடுமாறு  கூறினார், அதை ஏற்றது போல நடித்து விட்டு  தேவராஜ் அந்த விஷயத்தைப் பற்றி சுலோச்சனாவிடம் கேட்டதே இல்லை அதன் பிறகு சேகரும் தேவராஜும் சேர்ந்து அந்த குழந்தையை நிறைய இடங்களில் தேடினர் எங்கும் கிடைக்கவில்லை அதன் பிறகு சேகருக்கு தன்னுடைய கம்பெனியில் ஒருவேலை போட்டு கொடுத்தார் தேவராஜ்……..

 

அப்புறம் சுலோச்சனா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?

 

என்னது?

 

உனக்கும் சேகருக்கும் பொறந்த பொண்ணுதான் நம்ம அஸ்வதி என்று அவர் கூறவும் சுலோச்சனா அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார்…….

 

நீ சேகருக்கு பண்ண துரோகம் தான் உனக்கும் எனக்கும் ரொம்ப நாளா குழந்தை இல்லாம இருந்தது அதுக்கு அப்புறம் கடவுளா உனக்கே உனக்கு உன்னோட குழந்தையை கொடுத்தார் ஆனால் அதையும் உன்னோட அம்மா பேச்ச கேட்டுகிட்டு தட்டி கழிச்ச இப்போ நீ பெத்த பொண்ண நீயே கொல்ல பாத்து ஜெயில்ல இருக்குற நல்ல தாய் தான் நீ என்ற தேவராஜ் சிரித்தார்……..

 

தேவா விளையாடாதீங்க உண்மைய சொல்லுங்க அஸ்வதி என்னோட பொண்ணா??

 

நா சொன்னா நம்ப மாட்ட இந்த டிஎன்ஏ ரிப்போர்ட்ட பாரு இதுல தெளிவா இருக்கும் அஸ்வதி யாரோட பொண்ணு அப்படின்னு என்று அவர் ஒரு ரிப்போர்ட்டை சுலோச்சனாவிடம் கொடுத்தார் சுலோச்சனா அவசர அவசரமாக அந்த ரிப்போர்ட்டை விரித்துப் பார்த்தார் அதில் அஸ்வதியின் தாய் சுலோச்சனா என்று நூறு சதவீதம்  பொருந்தி  இருப்பதை அவர் பார்த்தார்……..

 

என்ன மிசஸ் சுலோச்சனா தேவராஜ் ரிப்போர்ட்டில் எழுதி இருக்கிறது புரியுதா?

 

சுலோச்சனாவிற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே தரையில் அமர்ந்து விட்டார் அவரின் நினைவுகளில் சிறுவயதில் அஸ்வதியின் சிரிப்பு , அவள் வாய் நிறைய அம்மா அம்மா என்று அழைக்கும் அழைப்பு, அவளின் குறும்புகள் என அனைத்தும் அவர் மனக்கண்ணில் தெரிந்தது அதை நினைத்து சுலோச்சனா மகிழ்ந்து கொண்டிருந்த நேரம் சுலோச்சனா மற்றும் அவளின் தாய் மற்றும் மகள் அஸ்வதியை கொடுமைப்படுத்தியது அஸ்வதியை காஷ்மீரில் கொல்ல பார்த்தது என அந்த நினைவுகளும் அவருக்கு வர சுலோச்சனா அதீத உணர்வுகளின் பிடியில் சத்தமாக அந்த ஜெயிலே அதிரும் அளவிற்கு கத்தினார்…….

 

பிறகு தேவராஜிடம் சுலோச்சனா ஓடி சென்று உங்களுக்கு எப்ப தெரியும் அஸ்வதி என்னோட பொண்ணுன்னு?

 

அஸ்வதி நம்ம வீட்டுக்கு வந்த உடனே அவ உன் கிட்ட ரொம்ப நல்லா ஒட்டிக்கிட்டா பாக்குற எல்லாரும் அஸ்வதி உன்னோட சொந்த பொன்னான்னு தான் எல்லாரும் கேப்பாங்க அதான் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது உங்க அம்மா குப்பைல போட்ட குழந்தை அஸ்வதியா இருக்குமோன்னு அதான் ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்தேன் கன்ஃபார்ம் ஆயிடுச்சு அஸ்வதி உன்னுடைய சொந்த பொண்ணு அப்படின்னு எனக்கு உண்மை தெரிஞ்சிருச்சுன்னு தெரிஞ்சவுடனேதான் உங்க அம்மா அஸ்வதியை உன்கிட்ட இருந்து தூரமா பிரிச்சு வச்சாங்க புரியுதா???

 

தேவா நா ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் என்னுடைய தப்ப அழிக்க முடியாது என்று சுலோச்சனா கதறி கதறி அழ ஆரம்பித்தார்……..

 

அது எப்படி சுலோச்சனா? அஸ்வதி உன்னோட பொண்ணுன்னு தெரிஞ்ச உடனே இப்படி அழுகுற?  இதே அஸ்வதி வேற பொண்ணா இருந்தா இதுக்கு முன்னால பேசுனியே  ரொம்ப கேவலமா அந்த மாதிரி தானே பேசுவ???           என்கிட்ட என்ன கேட்ட ?            அஸ்வதிக்கு இப்போ எத்தனை மாசம் போயிட்டு இருக்குன்னு தானே கேட்ட?இன்னும் ஒரு ரெண்டு மாசத்துல என்னோட செல்ல பொண்ணு அஸ்வதிக்கு அவ காதலிச்ச பையன் கூட ஜாம் ஜாம்ன்னு அவ கல்யாணத்த நடத்தி வைக்கப் போறேன் , அதுக்கப்புறம் அஸ்வதி எத்தனை பேர குழந்தைகளை பெத்து கொடுத்தாலும் அவங்க எல்லாரையும் நா ஒரு ஆளா சந்தோஷமா வச்சு பார்த்துப்பேன் என்று தேவராஜ் அங்கிருந்து சென்றார்……..

 

தேவராஜ் அங்கிருந்து சென்றவுடன் சுலோச்சனாவின் மனதில் ஆயிரம் ஆயிரம் குற்ற உணர்வுகள் கவலைகள் என அனைத்தும் அவரை ஆட்டிப் படைத்தது………..

தூரத்தில் நடந்து செல்லும் தேவராஜை பார்த்தார் , தான் இத்தனை குற்றம் செய்திருந்தாலும் அவர் இந்த நாள் வரை சுலோச்சனாவிடம் வேறு ஒருவனிடம் கெட்டுப் போனவள் தானே நீ என்று ஒரு முறை கூட கேட்டதில்லை அவரின் அந்த கண்ணியத்தையும் அவரின் தூய காதலையும் ,தன்னுடைய உயிரில் கலந்து  பெற்ற மகளையும் இப்படி இழந்து விட்டு நிற்கிறோமே என்று அவருக்குள் குற்ற உணர்வு அவரை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று தின்று கொண்டிருந்தது…….

 

விஹான் எனக்கு என்னோட நாலு பிரண்ட்ஸ் கிடைச்சிட்டாங்க இன்னும் ஒருத்தன் தான் பாக்கி அவனும் கிடைச்சிட்டான்னா நா ஜாலியா இருப்பேன் என்று அஸ்வதி விஹானின் நெஞ்சினில் சாய்ந்து கொண்டு குளிரில் மேகப் போர்வையை போர்த்திக் கொண்டிருந்த நிலாவை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்…….

 

மறுநாள் காலையில் அஸ்வதியும் விஹானும் வழக்கம் போல கல்லூரி பேருந்துக்காக காத்திருந்தனர் அன்று முதலாம் ஆண்டு மாணவர்கள் வருவதால் அவர்களின் கல்லூரி பேருந்து மாணவர்களால் நிறைந்து இருந்தது , அவர்கள் இருவருக்கும் நிற்க கூட இடமில்லாமல் இருந்தது எப்படியோ கல்லூரி போய் சேர்ந்து விட்டனர்…….

 

பிறகு துவாரகாவும் அவர்களோடு இணைந்து விட அவர்கள் மூவரும் சந்தோஷமாக அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்……

 

மதியம் இரண்டு மணி போல வாட்ச்மேன் அஸ்வதியிடம் வந்து உங்களை ஒருவர் கான வந்திருக்கிறார் என்று கூற  அஸ்வதி கல்லூரியின் முகப்பிற்கு வந்தாள் அங்கு ஒருவன் வாட்டசாட்டமாக போலீஸ் போல ஆறடி உடலமைப்பை கொண்டு நின்று கொண்டிருந்தான் அவனைப் பார்த்ததும் அஸ்வதி பயந்து போய் கல்லூரிக்குள் ஓடிவிட்டாள் அதை பார்த்த விஹான் அவனிடம் பேச்சுக் கொடுத்தான்……..

 

ஹலோ யாரு நீங்க?

எதுக்கு அஸ்வதிய பார்க்க வந்தீங்க?

 

ஹலோ சார் என்னோட பேரு விக்ரம் நா இங்கதான் எஃப் டூ போலீஸ் ஸ்டேஷன்ல ஏசியா இருக்குறேன்…..

 

நைஸ் டூ மீட் யூ, ஆமா எதுக்கு அஸ்வதியே பார்க்க வந்தீங்கன்னு இன்னும் சொல்லலையே?

 

சார் நா சுலோச்சனா அத்தையோட தம்பி பையன் , சின்ன வயசுல இருந்து  சுலோச்சனா அத்தை அஸ்வதியே ரொம்ப கொடுமை படுத்துவாங்க அவங்க கிட்ட இருந்து நா அஸ்வதிய காப்பாத்த தான் பார்ப்பேன் ஆனா அஸ்வதி அவங்க கூட நா இருக்குறதனால என்ன பாத்தும் பயப்படுவா  என்கிட்ட பேசவே மாட்டா ஆனா எனக்கு அஸ்வதிய ரொம்ப பிடிக்கும் குட்டியா கியூட்டா இருப்பா என்னோட பிரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் அஸ்வதிய என்னோட தங்கச்சின்னு சொல்லுவேன் ஆனா அஸ்வதி என்கிட்ட பேசவே பயப்படுவா , ஏன் என்ன பார்த்தாலே பயந்து ஓடிருவா ,  தேவா மாமா உங்கள பத்தி சொன்னாங்க நீங்க விஹான் தான அதான் உங்க ரெண்டு பேரையும் பார்த்து பேசிட்டு போகலாம்னு வந்தேன்……

 

விக்ரம் மிகவும் வெளிப்படையாக பேசவும் விஹானுக்கு அவனைப் பிடித்து விட்டது அஸ்வதியை அழைத்து அவனிடம் பேச வைத்து விக்ரம் மேல் அஸ்வதிக்கு இருக்கும் பயத்தை விஹான் போக்கினான் , பிறகு அஸ்வதி விக்ரமிடம் நன்றாக பேச ஆரம்பித்தாள் அது விக்ரமிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது அவன் விஹானுக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்…….

 

விஹான் விக்ரம் அண்ணா ரொம்ப நல்லவங்கல்ல?

 

ஆமா ரொம்ப நல்லா பேசுறாங்க , ஆமா சின்ன வயசுல இருந்து விக்ரம பார்த்து ஏன் பயந்த?

 

விக்ரம் சுலோச்சனாவோட தம்பி பையன் அதான் எனக்கு அந்த சமயத்துல யார நம்புறதுன்னு தெரியல அதான் யார் கூடயும் பேசாம பயந்து ஓடிப் போயிடுவேன்……

 

இப்போ உனக்கு விக்ரம் மேல பயம் போயிடுச்சா?

 

ஆமா என்று அவள் அவனை பார்த்து அழகாக சிரித்தாள்…….

 

சனிக்கிழமை விஹான் ,அஸ்வதி மதன், வள்ளி ,துவாரகா ,ஹர்ஷா ஆகிய அறுவரும் சூர்யாவை பார்க்க மதுரைக்கு கிளம்பி சென்றனர்…..

 

தொடரும் …….

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……..

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்