Loading

காதல் -65

 

அஸ்வதியை மீண்டும் மீண்டும் சுலோச்சனாவும்  அனந்தியும் கொல்ல பார்த்தனர் ஆனால் அதற்குள் விஹான், மதன் மற்றும் வள்ளி போலீஸ் படையினரோடு வந்து அஸ்வதியை காப்பாற்றி விட்டனர்……..

 

விஹானுக்கு அஸ்வதியின் கல்லூரியிலே பிரின்ஸ்பால் பதவி கிடைத்துவிட்டது…….

 

இத்தனை நாள் விஹான்தான் அஸ்வதிக்காக சமைத்துக் கொண்டு இருந்தான் ஆனால் இன்று அஸ்வதி விஹானுக்காக சமைத்துக் கொண்டிருக்கிறாள்……..

 

அஸ்வி செல்லம்…..

 

சொல்லுங்க செல்லம்…..

 

உனக்கு இட்லி சாம்பார் எல்லாம் செய்ய தெரியுமா?

 

இப்போ அதானே செஞ்சிட்டு இருக்கேன், சாப்பிட்டு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க சரியா?

 

சரிடா கண்ணம்மா என்று அவன் அவளை பின்னோடு கட்டி அணைத்து கொண்டு அவள் சமைப்பதை பார்த்துக் கொண்டிருந்தான்…………

 

அஸ்வதி ஏற்கனவே அரைத்து புளித்த மாவை மெதுவாகக் கலந்து விட்டு கொண்டு இருந்தாள் பிறகு இட்லித் தட்டுகளில் எண்ணெய் தடவி, மாவை  சிறிது சிறிதாக ஊற்றினாள் பிறகு இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றினாள் அந்த தண்ணீர் கொதித்ததும், இட்லி தட்டுகளை வைத்து பத்து நிமிடங்கள் வரை ஆவியில் வேகவத்தாள்……

 

இட்லி வேகும் சமயத்தில் அவள் சாம்பார் சட்னி செய்ய ஆரம்பித்தாள்….

 

முதலில் பருப்பை கல் இல்லாமல்  நன்கு கழுவி கொண்டாள் பிறகு மஞ்சள் தூள் மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து குக்கரில் ஐந்து  விசில் வரும் வரை குழைய வேகவைத்து எடுத்து கொண்டாள் பிறகு  வெந்த பருப்பை மத்தால் நன்கு மசித்துக் கொண்டாள்….

 

பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கி  விட்டு பிறகு மற்ற காய்கறிகளைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேகவிட்டாள்…..

 

அந்த காய்கறிகள் வேகும் சமயத்தில் அவள் சட்னி செய்ய ஆரம்பித்தாள்……

 

ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து முதலில் தண்ணீர் ஊற்றாமல் ஒருமுறை சுற்ற விட்டாள் பிறகு சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, மென்மையான பதத்திற்கு அரைத்து ஒரு கிண்ணத்தில் அரைத்த கலவையை எடுத்து வைத்து கொண்டாள் பிறகு ஒரு சிறு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொண்டாள் எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து கொண்டாள் கடுகு வெடித்த பிறகு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி கொண்டாள் இந்தத் தாளிப்பை அரைத்து வைத்துள்ள சட்னியில் கொட்டி நன்கு கலக்கினாள்…….

 

பிறகு அவள் சாம்பார் செய்து வைத்த காய்கறிகள் பாதி வெந்ததும், சாம்பார் பொடி மற்றும் புளி கரைசல் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டாள்,பிறகு காய்கறிகள் நன்கு வெந்த பிறகு, மசித்து வைத்துள்ள பருப்பைச் சேர்த்துக் கிளறி விட்டாள்  சாம்பார் சற்றுத் தளர்வாக இருக்க தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொண்டாள் பிறகு மற்றொரு சிறு கரண்டியில்  நெய் ஊற்றி கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை தாளித்து சாம்பாரில் கொட்டினாள்,இறுதியாக ஒரு சிறு துண்டு வெல்லம் சேர்த்து, கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கினாள்…..

 

அஸ்வதி சாம்பார் மற்றும் சட்னி தயார் செய்து கொண்டிருக்கும் போது விஹான் இட்லி வெந்ததும் தட்டுகளை வெளியே எடுத்து, சிறிது தண்ணீர் தெளித்து இரண்டு நிமிடம் கழித்து எடுத்தான் இட்லி தட்டில் ஒட்டாமல் அழகாக வந்தது ……….

 

அவர்கள் இருவரும் இணைந்து இரவு உணவை தயாரித்து விட்டு டைனிங் டேபிளில் அழகாக அடுக்கி வைத்தனர்…..

 

விஹான் நீங்க உக்காருங்க உங்களுக்கு நா பரிமாறுறேன் என்று அஸ்வதி அவனுக்கு ஒரு தட்டை எடுத்து அதில் நான்கு இட்லி, சாம்பார் மற்றும் சட்னி வைத்து கொடுத்தாள்……

 

நீயும் எங்கூடவே சாப்பிடும்மா……

 

இல்ல நீங்க முதல்ல சாப்பிடுங்க என்று அவள் அவனுக்கு இட்லியை பிட்டு சாம்பார் சட்னி தொட்டு அவனுக்கு ஊட்டி விட்டாள்…….

 

விஹான் சாப்பாடு நல்லா இருக்கா? என்று அவள் ஆவலாக கேட்டாள்……

 

ரொம்ப அருமையா இருக்குடா செல்லமே என்று அவன் அவளுக்கு இட்லியை பிட்டு சாம்பார் சட்னி தொட்டு ஊட்டி விட்டான்……..

 

இருவரும் இணைந்து ஒன்றாக சேர்ந்து உணவு சாப்பிட்டு விட்டு அவரவர் அறைகளில் உறங்க சென்றார்கள்…….

 

விஹானுக்கு அஸ்வதியின் வீடு புது இடம் ஆதலால் உறக்கம் வரவில்லை,அங்கும் இங்கும் புரண்டு கொண்டு இருந்தான்……

 

அப்பொழுது அஸ்வதி அவன் அறைக்கு வந்தாள்…….

 

என்னம்மா நீ இன்னும் தூங்காம என்ன பண்ணுற? மணி ஒன்னாக போகுது…..

 

அதை நா உங்கக்கிட்ட கேக்கனும், நீங்க ஏன் தூங்காம இருக்கீங்க??

 

எனக்கு புது இடம்ல சோ தூக்கம் வரல …..

 

அவன் அவ்வாறு கூறவும் அவள் அவனின் தலையை மெதுவாக தன் மடியில் வைத்து அவன் அவனின் அழகிய கேசத்தை மெதுவாக கோதி விட்டுக் கொண்டே இருந்தாள்…….

 

விஹான் தன் காதலியின் அழகிய முகத்தை பார்த்து கொண்டே அவளின் வயிற்றை கட்டி அணைத்து கொண்டபடி உறங்கி போனான் ………

 

மறுநாள் காலையில் அஸ்வதி விஹான்னின் மார்பினில் முகம் புதைத்துக் கொண்டு உறங்கி கொண்டு இருந்தாள்……..

 

அவன் அவளை இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டு உறங்கி கொண்டு இருந்தான்…….

 

ஆறு மணிக்கு அஸ்வதி வைத்த அலாரம் ஒலிக்க, அவள் எழுந்து தன் காதலனின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தாள் அதில் அவன் தூக்கம் கலைந்து எழுந்து விட்டான்……

 

ஹாப்பி மார்னிங் மை டியர் ஸ்வீட் அஸ்வி……..

 

ஹாப்பி மார்னிங் மை டியர் விஹான……

 

இருவரும் ஃப்ரெஷ் ஆகி விட்டு வந்தனர்……..

 

சரி நீங்க கிளம்புங்க நா அடுப்புல சாதமும், குளம்புக்கு காய்கறி வேக வச்சிட்டு வாரேன் என்றிட்டு அவள் கிசென் சென்றாள்……..

 

விஹானும் அவள் பின்னாலேயே கிட்ச்சென் சென்றான்……

 

அஸ்வதி சாதத்துக்கு அரிசி ஊற வைத்து விட்டு சாம்பார் வைக்க தேவையான காய்கறிகளை கழுவி விட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொண்டு இருந்தாள்……

 

விஹான் ஒரு கூக்கரில் பருப்பை வேக வைத்தான் , இவ்வாறு இருவரும் ஒன்றாக இணைந்து சாப்பாடு செய்து முடித்து விட்டனர்……

 

பிறகு இருவரும் குளித்து முடித்து விட்டு வந்தனர்……..

 

விஹான் கருநீல நிற சட்டை மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்து சட்டையை  நன்றாக இன் செய்து , கைகளை முழங்கைவரை மடக்கிவிட்டு கம்பீரமாக முதல்வர் லுக்கிற்கு தன்னை ரெடி செய்து விட்டான்……..

 

அஸ்வதியும் கருநீல கலரில் புடவை கட்டி தனது நீண்ட கூந்தலை பின்னி பெரிய கேட்செருக்குள் பொருத்தி,புடவை முந்தியை டக் செய்து ,   குளிருக்கு ஏற்படும் வெள்ளை வங்குகளை போக்க  கொஞ்சம் வேஸ்லினை இரு கைகலிலும் தடவி விட்டு , விஹானின் கைகளிலும் தடவி விட்டு ,  கொஞ்சம் பவுடரை முகத்தில் தடவி விட்டு, சிறிய கருப்பு பொட்டு வைத்து விட்டு, கண்களில் கண்மை வரைந்து கொஞ்சம் சென்ட் அடித்து விட்டு தனது தோள்பையை தோளில் மாட்டிக்கொண்டு தனது இஷ்ட தெய்வமான முருகனை வணங்கி விட்டு திருநீற்றை நெற்றியில் பூசிவிட்டு  , விஹானுக்கும் திருநீறு பூசி விட்டாள்  , அவன்  இவளின் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டான் பிறகு காலை உணவை இருவரும் ஒன்றாக முடித்து விட்டு , மதிய உணவை எடுத்துகொண்டு வீட்டின் கதவை பூட்டிவிட்டு இருவரும் ஒன்றாக பேருந்து நிலையத்திற்கு  புறப்பட்டு சென்றனர்……..

 

அங்கு அவர்களின் கல்லூரி பேருந்து வரவே இருவரும் ஒன்றாக சேர்ந்து பேருந்தில் ஏறி அருகருகே அமர்ந்தனர்……

 

இருபது நிமிட பயணத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் கல்லூரியை சென்றடைந்தனர்…….

 

விஹான் அவளிடம் கண்களால் விடை பெற்றுக் கொண்டு தன்னுடைய முதல்வர் அறைக்கு சென்றான்…..

 

அஸ்வதியும் அவனிடம்  கண்களால் விடை பெற்றுக் கொண்டு ஆசிரியர்கள் அறைக்கு சென்றான்……..

 

அவளின் ஹேன்ட் பேக் மற்றும் லஞ்ச பேக்கை ஸ்டாப் ரூமில் வைத்து விட்டு வருகை பதிவேட்டில் கையொப்பமிட சென்றாள் அப்பொழுது ……

 

ஹலோ……

என்று அவளை ஒரு பெண் அழைத்தாள்……

 

ஹலோ சொல்லுங்க …..

 

இங்க நா புதுசா ஜாய்ன் பண்ண பிசிக்ஸ் புரொபசர், பிரின்சிபால்கிட்ட என்னோட ஆர்டர் காப்பில சைன் வாங்கனும் சோ பிளீஸ் என்ன பிரின்சிபால் ரூமுக்கு கூட்டிட்டு போறீங்களா???

 

கண்டிப்பா கூட்டிட்டு போறேன் அண்ட் நானும் இங்கதான் புரொபசரா வொர்க் பண்றேன் என்னோட பேரு அஸ்வதி என்று அவள் அந்த புது பெண்ணை பார்த்து கை நீட்டினாள் அந்த புது பெண்ணும் உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம் அஸ்வதி என்னோட பேரு துவாரக்கா…..

 

உங்களை சந்திச்சதுல எனக்கும் ரொம்ப சந்தோஷம் துவாரக்கா என்று இருவரும் சினேகமாக கை குலுக்கி கொண்டனர்…….

 

வாங்க உங்களை நா பிரின்சிபால் ரூமுக்கு கூட்டிட்டு போறேன் என்று அஸ்வதி துவாரகாவை முதல்வர் அறைக்கு அழைத்து சென்றாள்……

 

மே ஐ கம் இன் சார் என்று துவாரகா வெளியில் இருந்து அனுமதி கேட்டாள்….

 

எஸ் கம் இன்

 

என்று விஹான் முதலில் அஸ்வதியை தான் பார்த்தான் , தன் காதலியை அங்கு பார்த்ததும் அவனுக்கு வெக்கம் கலந்த சிரிப்பு வந்தது…..

 

அஸ்வதிக்கும் அதே நிலை தான் அவளும் அவனை பார்த்து அழகாக சிரித்து விட்டாள்……

 

குட் மார்னிங் சார் என்று துவாரகா கூறவும் தான் விஹான் அஸ்வதியுடன் வந்த இன்னொருவரை பார்த்தான்…….

 

குட் மார்னிங் , யாரு நீங்க?

 

சார் மை நேம் இஸ் துவாரகா நா இங்க புதுசா சேர்ந்த ப்ரொபசர் இது என்னோட ஆர்டர் காபி இதுல சைன் பண்ணுங்க சார் என்று அவள் தன்னுடைய ஆர்டர் காப்பியை அவனிடம் நீட்டினாள்……..

 

விஹான் முதல்வராகி விட்ட பிறகு போடும் முதல் கையொப்பம் அதனால் அவன் தன்னுடைய காதலியை பார்த்தான் அவள் முகம் முழுவதும் பேரானந்தத்தோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்…….

 

விஹான் பச்சை நிற மையிட்ட பேனாவை வைத்து துவாரகாவிற்கு சையின் போட்டுக்  கொடுத்தான்……

 

பிறகு அஸ்வதி விஹானை பார்த்து சிரித்து விட்டு துவாரகாவோடு வெளியில் வந்தாள்…….

 

ரொம்ப தேங்க்ஸ் அஸ்வதி……

 

இதுல என்ன இருக்கு துவாரகா வாங்க உங்கள  நான் ஸ்டாப் ரூம் கூட்டிட்டு போறேன்…….

 

அஸ்வதி நம்ம ரெண்டு பேரும்தான் ஃபிரண்ட்ஸ் ஆகிட்டோமே இதுக்கு அப்புறமும் ஏன் வாங்க போங்கன்னு கூப்பிட்டு இருக்கீங்க வா போன்னே கூப்பிடலாமே என்று துவாரகா அஸ்வதியை பார்த்து சிரித்தாள்….

 

கூப்பிடலாமே என்று இருவரும் ஆசிரியர்களின் அறைக்கு சென்றனர்….

 

துவாரகா இது என்னோட  சீட் எனக்கு பக்கத்துல இங்க உக்கார்ந்துக்குருக்கீங்களா?

 

கண்டிப்பா எனக்கு இங்க உன்ன மட்டும்தான் தெரியும், என்று அவள் அஸ்வதியிடம் சகஜமாக பேச ஆரம்பித்தாள் அஸ்வதிக்கும் துவாரகாவை பிடித்து விட்டது இருவரும் நன்றாக பேச ஆரம்பித்தனர்…….

 

அஸ்வதி நம்ம காலேஜ் பிரின்சிபால் ரொம்ப அழகா இருக்காங்கல்ல?அவங்களை என்னோட கிரஷ்ஷா செட் பண்ண போறேன்…….

 

இல்ல நீ அப்படி பண்ண கூடாது…..

 

ஏன் ?ஓஹோ புரிஞ்சு போச்சு, உனக்கு பிரின்சிபால் சார் மேல கிரஷ் அதான என்ன பிரின்சிபல் சார கிரஷ்ஷா வைக்க கூடாதுன்னு சொல்ற கரெக்டா?

 

ரொம்ப கரெக்ட் ……

 

ரைட்டு விடு  நா வேற ஆளை பாத்துக்குறேன் என்று துவாரகா  அஸ்வதியிடம் சந்தோஷமாக சிரித்து பேசிக்கொண்டு இருந்தாள்……..

 

இருவரும் அவரவர் வகுப்பிற்கு சென்று விட்டனர் , அஸ்வதி அவளின் வகுப்பு முடிந்து ஆசிரியர் அறையில் அமர்ந்து தண்ணீர் குடுத்து கொண்டு இருந்தாள் அப்பொழுது அவள் பின்னால் நிழல் ஆட திரும்பி பார்த்தாள்…….

 

அங்கு நின்றவனை பார்த்தவளுக்கு குடித்த தண்ணீர் புரை ஏறி இருமல் வந்தது……

 

அங்கு நின்றது துருவ்……

 

தொடரும்…….

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……….

 

💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்