
காதல் -64
அஸ்வதி மற்றும் விஹான் காதலில் அடுத்த தொலை தூர காதல் ஆரம்பம் ஆகும் நேரம் வந்தது……..
ஆம் அஸ்வதிக்கு மாணவர்களை அழைத்து வந்த ட்ரிப் முடிந்து விட்டது அவள் மாணவர்களை அழைத்து கொண்டு சென்னை சென்று விட்டாள்…..
விஹான் அஸ்வதிக்கும் போனிலே தங்களின் காதலை வளர்த்து வந்தனர்……
அப்படி இருக்கையில் ஒரு நாள் அஸ்வதி தண்ணீர் குடிக்க ஹாலுக்கு சென்றாள் அங்கு அவள் கண்ட காட்சி அவளை மிரள வைத்தது…….
ஆம் ஹாலில் சுலோச்சனா மற்றும் அனந்தி அமர்ந்து கொண்டிருந்தனர்…..
அவர்கள் இருவரும் ஒரு வாரம் பெயிலில் ஜெயிலில் இருந்து வந்தனர்……
அவர்கள் இருவரும் அஸ்வதியை பார்த்து குரூரமாக சிரித்தனர்…..
என்னடி இத்தனை மாசமா நாங்க ரெண்டு பேரும் இல்லாம வீட்டையே நீதான் ஆண்டுட்டு இருந்துருக்க போல?வீடே மாறி போய் இருக்கு…….
வீட்ட நா ஏன் ஆளனும் ?இது என்னோட வீடு நா எப்படி வேனாலும் இருப்பேன் உங்களுக்கு என்ன?
அஸ்வதி அவ்வாறு கூறவும் அனந்தி கோபமாக அஸ்வதியை திட்டினாள்…..
என்னடி வாய் கொழுப்பு ரொம்ப நீளுது ரொம்ப நாளா நாங்க உன்ன அடிக்கலல அதான் குளிர் விட்டு போச்சு அதான் நாங்க வந்துட்டோம்ல இனிமே உனக்கு இருக்குடி கச்சேரி என்று அனந்தி கோபமாக பேசினாள்……
அனந்து பொறுமையா இருடா கண்ணா அந்த டூரிஸ்ட் ஃபேமிலியோட சப்போர்ட் இவளுக்கு இருக்குறதுனால ரொம்ப துள்ளிட்டு இருக்குறா கூடிய சீக்கிரம் இவளையும் அந்த டூரிஸ்ட் பேமிலியையும் குடும்பத்தோட நா தூங்குறேன் என்று சுலோச்சனா கொடூரமாக சிரித்தார்……
உங்களால முடிஞ்சத பாத்துக்கோங்க என்று அஸ்வதி அவள் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்……….
அஸ்வதியின் அறையில் போகும் ஹீட்டரில் அனந்தி ஷாக் வைத்திருந்தாள்…..
ஆனால் அஸ்வதி ஹீட்டரில் கை வைப்பதைக்குள் அனந்தியை தேடி போலீஸ் வந்து விட்டது……
பிறகு அனந்தி மற்றும் சுலோச்சனா எப்படியோ அந்த போலீசாரை சமாளித்து அனுப்பினர் ……
இவ்வாறு அவர்கள் அஸ்வதியை கொல்ல திட்டமிடும் போதெல்லாம் சரியாக போலீஸ் அவர்களின் வீட்டிற்க்கு வந்து விடுவார்கள்….
அதனால் கோபமடைந்த இருவர் , நாம் கொலை செய்ய திட்டம் தீட்டினால் தானே போலீசுக்கு தெரிந்து விடுகிறது அதனால் கொலை செய்ய ஒரு ஆளை ரெடி செய்தனர்……..
வாரத்தின் ஆறு நாட்களும் அவளுக்கு அந்த வாரம் கல்லூரி இருந்தது……
அன்று ஞாயிற்றுக்கிழமை அதனால் அஸ்வதிக்கு விடுமுறை எனவே அவள் அறையில் தன் காதலனோடு கடலை போட்டு கொண்டு இருந்தாள்……
அப்பொழுது அவள் அறையின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது…..
அஸ்வதி கதவை திறந்து பார்த்தாள் அங்கு சுலோச்சனா மற்றும் அனந்தி கையில் ஒரு சேலையோடு நின்று கொண்டிருந்தனர் அவர்களின் பின்னால் எட்டு அடிக்கு ஒருவன் வாட்டசாட்டமாக பயில்வான் போல நின்று கொண்டிருந்தான்……..
அவர்களையும் அவர்கள் கையில் வைத்திருந்த பொருளையும் பார்த்த அஸ்வதி மிரண்டு போய் கதவை வேகமாக சாத்த போனாள் ஆனால் அதற்குள் அந்த எட்டடியில் வளர்ந்த பயில்வான் கதவை தள்ளி கொண்டு அவளையும் உள்ளே தள்ளி கொண்டு வந்தான்……
என்….
என்ன….
பண்ணுறீங்க?
நீங்க யாரு??
சுலோச்சனா ஆன்டி இவங்க யாரு??
இவங்களா?இவங்கதான் விக்ரம் சிங் பவுன்சரா இருக்காங்க…..
விக்ரம் சீக்கிரம் வேலைய முடி என்று சுலோச்சனா கூறவும் , அஸ்வதி எதிர்பாராத நேரத்தில் அவளின் கழுத்தைப் பிடித்து நெரித்து அவள் கழுத்தில் அந்த சேலையை மாட்டி ஃபேனில் தொங்க விட்டுவிட்டான் அந்த விக்ரம் சிங்……..
அஸ்வதி மூச்சு விட முடியாமல் கால்களை அங்கும் இங்கும் ஆட்டிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள்……
இந்த அனாத நாயி சாகுறதை இப்படி லைவ்வா பாக்குறது எவ்வளவு சந்தோஷமா இருக்கு என்று சுலோச்சனா கூறவும் சுலோச்சனா கழுத்தில் யாரோ துப்பாக்கி வைப்பது போன்று தோன்ற அவர் திரும்பி பார்த்தார் அவர்களுக்கு பின்னால் மதன் மற்றும் வள்ளி அவர்களின் போலீஸ் படையினரோடு நின்று கொண்டிருந்தனர் அவர்களையெல்லாம் விலக்கிவிட்டு விஹான் வேகமாக ஓடி வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தன் காதலியை காப்பாற்றி பெட்டில் அமர வைத்து அவளுக்கு தண்ணீர் கொடுத்தான்…….
அவர்களை அங்கு எதிர்பாராத சுலோச்சனா அனந்தி மற்றும் விக்ரம் சிங் திகைத்து நின்றனர்…….
கான்ஸ்டபில் இவங்க மூனு பேரு கையில விலங்கு மாட்டி இழுத்துட்டு போங்க என்று மதன் கூறவும் அந்த கான்ஸ்டபில் அவர்கள் மூவரையும் அழைத்து சென்றனர்……
அப்பொழுது சுலோச்சனா அந்த கான்ஸ்டபிலிடம்……..
நா பெரிய சார்க்கிட்ட கொஞ்சம் பேசனும்……
சார் இந்த அம்மா உங்ககிட்ட பேசனும்ன்னு சொல்லுறாங்க…..
கூட்டிட்டு வாங்க….
சொல்லுங்க மிசஸ் சுலோச்சனா….
சார் எப்படி நாங்க ரெண்டு பேரும் அஸ்வதியை கொலை பண்ண போற சமயத்துல எல்லாம் சரியா வந்துடுறீங்க??
கண்டிப்பா தெரிஞ்சி ஆகனுமா??
ஆமா சார் ,சொல்லுங்க இல்லனா எனக்கு தலையே வெடிச்சிரும்….
பரவாயில்ல தலை வெடிச்சி சிதறட்டும் , கான்ஸ்டபில் கூட்டிட்டு போங்க…..
ஆமா மதன் உனக்கு எப்படி தெரியும், அஸ்வதிக்கு ஆபத்துன்னு?
எல்லாத்துக்கும் காரணம் விஹான்தான்……
விஹான்னா? அவங்க என்ன பண்ணாங்க?
அஸ்வதிய கவனமா பாத்துக்க விஜய் அப்பாவும், நானும் எப்பவுமே விஹானோட கனெக்ட்லயே இருந்தோம் அதான்….
புரியல….
வள்ளி, அது என்ன கதைன்னா சரி உன்கிட்ட சொல்லுறேன் , அஸ்வதி கழுத்துல ஒரு பெரிய டாலர் செயின் போட்டுப்பாளே பாத்துருக்கியா??
ஆமா விஹான் அம்மா அவளுக்கு கொடுத்தது…..
அதுல கேமரா இருக்கு …..
என்ன???
ஆமாடி எப்படியும் இந்த சுலோச்சனா அண்ட் அனந்தி நம்ம அஸ்வதிய கொல்ல பாப்பாங்க அதான் விஹான் அவளுக்கு ஒரு கேமரா செயின் கொடுத்தான் அவளுக்கு எதாவது பிரச்சனைன்னா விஹானுக்குதான் முதல்ல தெரியும் அவன் உடனே விஜய் அப்பாக்கும் எனக்கும் கால் பண்ணுவான் நாங்க ஸ்பாட்க்கு வந்து அஸ்வாவ காப்பாதிருவோம்…..
சரியான பிளான்ப்பா……
சரி வா நம்ம அஸ்வதிய போய் பாப்போம்……
விஹான்னின் நெஞ்சினில் அவள் சாய்ந்து கொண்டு இருந்தாள்…..
அடியே அஸ்வா கழுத்து ரொம்ப வலிக்குதா???
இல்லடா மதன் அதுக்குள்ள விஹான் காப்பாத்திட்டாங்க …….
ஆமா விஹான் நீ எப்படி அதுக்குள்ள காஷ்மீர்ல இருந்து சென்னைக்கு வந்த??
நேத்து அவங்க ரெண்டு பேரும் என்னோட அஸ்விய கொல்ல பிளான் போடும்போதே கிளம்பிடேன்……
என்னடா சொல்லுற? நேத்தே உனக்கு எப்படி தெரியும்? அஸ்வதி சொன்னாளா??
இல்ல……
அப்ப எப்படி உனக்கு தெரியும்???
சுலோச்சனா கையில ஒரு வளையல் போட்டிருந்தா அத பாத்தீங்களா?
ஆமா ,அதை அவளை கழட்ட சொல்ல கூடாதுன்னு சொன்னியே…
ஆமா அதான் அதுல கேமரா பிளஸ் ரெக்கார்டர் இருக்கு …..
புரிஞ்சி போச்சு , ஆமா அந்த பொம்பளைகிட்ட எப்படி இந்த கேமரா பிளஸ் ரெக்கார்டர் இருக்குற வளையல கொடுத்த??
அந்த சுலோச்சனா நகைக்கு ஆசை புடிச்சவ அதை தெரிஞ்ச என்னோட அம்மா இப்படி ஒரு பிளான் போட்டாங்க…..
அப்போ குடும்பமா சேந்து அஸ்வதிய காப்பாதிருக்கீங்க என்ன?
ஆமாடா மதன்…..
சரி இங்க எத்தனை நாள் தங்க போற??
இனிமே இங்கதான் என்று விஹான் அஸ்வதியை பார்த்து கூறினான்…..
என்ன சொல்லுறீங்க விஹான்???
அடியே என் செல்ல காதலியே எனக்கு உங்க காலேஜ்ல பிரின்சிபால் போஸ்ட் கிடைச்சிருக்கு……..
ஹே சூப்பர் சூப்பர் என்று அஸ்வதி விஹானை கட்டி அணைத்து கொண்டாள்…….
அடியே உனக்கு கழுத்து வலிக்கலையா?என்ன கட்டி பிடிச்சிட்டு ஜாலியா இருக்க??
அதெல்லாம் போச்சு ,எப்ப உங்கள நா பாத்தேனோ அப்போவே எல்லாம் ஓகே என்று அவள் அவனை பார்த்து அழகாக சிரித்தாள்……..
டேய் விஹான் இங்க பாரு, இங்க வீட்டுல யாரும் இல்லன்னு எங்க அஸ்வதிக்கிட்ட மிஸ் பிஹேவ் பன்னேன்னு வச்சிக்க மகனே பிச்சிபுடுவேன் பிச்சி ,நா யாருன்னு தெரியும்ல???
தெரியுமே சிரிப்பு போலீஸ் தான நீ??
அடேய் இவனே இந்த சென்னை சிட்டி முழுக்க என்னோட கன்ட்ரோல்ல தான் இருக்கு நா ஒரு ஐஏஎஸ் அதிகாரிடா…..
ஓஹோ அப்பப்ப சொல்லு மறந்து போயிடுது …….
மறக்கும் மறக்கும் , இங்க பாருங்க நாளைல இருந்து நானும் வள்ளியும் இங்க உங்க கூடத்தான் சேந்து இருக்க போறோம் , பஞ்சையும் நெருப்பையும் ஒன்னா வைக்க முடியாது……..
என்னடா மதன் சொல்லுற???
இங்க பாரு வள்ளி இந்த ரெண்டு காதல் ஜோடிகளை கல்யாணத்துக்கு அப்புறம் தான் ஒரே ரூம்ல ஒன்னா தங்க விடனும் அது வரை இப்படித்தான் வா நம்ம துனி மணியெல்லாம் அள்ளிட்டு வருவோம் என்று அவர்கள் இருவரும் சென்று விட்டனர்……..
மதன் பேசுவதை பார்த்து கொண்டு இருந்த அஸ்வதிக்கு சிரித்து சிரித்து வயிறே வலித்து விட்டது……
போலீஸ் படையினர் சென்ற உடன் அஸ்வதி ஓடி சென்று விஹான்னை இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டாள் , அவனின் வாசனையை தன் நாசி முழுவதும் நிரப்பி கொண்டாள்……..
அவனும் அவளை தன் நெஞ்சோடு இறுக்கமாக அனைத்து கொண்டு அவளின் முகத்தை முத்தங்களால் நிரப்பினான்………
விஹான் இனிமே நீங்க என்கூடவே தான இருப்பீங்க??
ஆமாடா செல்லம், ஆனா……
என்ன ஆனான்னு இழுக்குறீங்க?அப்போ சீக்கிரம் என்ன விட்டு காஷ்மீர் போயிடுவீங்களா??
இல்ல …. இல்ல….. அப்படி இல்லடா செல்லம் , நம்ம டூரிஸ்ட் பிசினஸ்ஸ நம்மதான பாத்துக்கனும்?எதாவது பெரிய ட்ரிப் வந்தா நா கைட்டா போய் தான் ஆகனும்……
அப்போ நானும் உங்களோட வருவேன்…..
நீ இல்லாம நா தனியா எப்படி போவேன்?? உன்னையும் எண்கூடவ கூட்டிட்டு போயிருவேன் என்று அவன் அவளை பார்த்து கண் அடித்தான்………
பிறகு அஸ்வதி அவளின் வீட்டை தன் காதலனுக்கு சுற்றி காண்பித்தாள்…..
விஹான் இதான் என்னுடைய ரூம் எப்படி இருக்குது?
உன்ன மாதிரியே உன்னோட ரூமும் ரொம்ப அழகா இருக்குதுடா கண்ணம்மா……….
விஹான் நீங்க என்னோட ரூம்லேயே என் கூட தங்கிக்கோங்க…….
அந்த மதன் குரங்கு நம்ம ரெண்டு பேரயும் தனித்தனி ரூம்ல தாண்டி தங்க வைப்பான்………….
அவன் கிடக்கிறான் லூசு பையன் நம்ம ரெண்டு பேரும் ஒரே ரூம்ல இருக்கலாம் என்று அவள் அவனை கட்டி அணைத்து கொண்டாள்……..
இல்லடா செல்லம் நம்ம ரெண்டு பேரும் காஷ்மீர்ல ஒண்ணா இருந்தபோது யாரும் ஒன்னும் சொல்லல ஏன்னா அவங்களுக்கு நம்மள பத்தி தெரியும் புரியும் ஆனா இங்க அப்படி இல்லம்மா இது தமிழ்நாடு, இங்க நம்மள பத்தி யாரும் தப்பா பேசக்கூடாது அண்ட் உன்ன யாரும் தப்பா பேசவும் நா விடமாட்டேன் , அதனால மதன் சொன்ன மாதிரி நம்ம ரெண்டு பேரும் தனித்தனி ரூம்ல இருக்கலாம் ஆனா அது வெளியே வெறும் ஆக்டிங்க்கு மட்டும்தான் என்று அவன் அவளை பார்த்து கண் அடித்தான்…….
இல்ல எனக்கு புரியல…..
போக போக புரியும்டா கண்ணா , உன்னோட ரூம்க்கு பக்கத்து ரூம்ல நா தங்கிக்கிறேன் சரியா…….
அஸ்வதி ஒன்றும் புரியாமல் தலையாட்டினாள்…….
பிறகு விஹானின் துணிகளை அலமாரியில் அடுக்கி வைக்க அஸ்வதி உதவி செய்து கொண்டிருந்தாள்……..
விஹான் உங்களுக்கு இன்னைக்கு நா தமிழ்நாடு ஸ்பெஷல் இட்லி ,சாம்பார், சட்னி செஞ்சு தரேன் என்று அஸ்வதி கழுத்தில் போட்டு இருந்த ஷாலை நெஞ்சின் குறுக்கே கட்டிக்கொண்டு சமைக்க ஆரம்பித்தாள் விஹான் அவளை பின்னோடு கட்டிக்கொண்டு அவள் சமைப்பதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்…..
தொடரும்………
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…………
💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

