
காதல் – 52
அஸ்வதி மற்றும் விஹான் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து பலாயிரம் மைல் தொலைவில் இருந்தனர்…….
ஆனால் அவர்கள் இருவரின் காதல் அவர்களின் அருகருகே தான் இருந்தது……
தினமும் காலையில் இருந்து மாலை வரை இருவரும் ஒன்றாக ஃபோனில் பேசி கொண்டே தங்களின் காதலை வளர்த்து வந்தனர்…….
இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்த சுலோச்சனா மற்றும் அனந்தி மீண்டும் அஸ்வதியை கொல்ல திட்டம் தீட்டினர்……
அந்த திட்டத்தின் படி அஸ்வதியை சயனைடை உணவில் வைத்து கொல்ல பார்த்தனர்……
அதற்காக ஒரு நகைக்கடைக்கு சென்று அங்கு சுலோச்சனாவின் நண்பனான பீட்டரிடம் உதவி கேட்டனர்…..
அவர் அஸ்வதியின் பெயரை கேட்டு அதிர்ச்சி அடைந்தார்……
அஸ்வதின்னா நீ முன்னாடி குழந்தை இல்லன்னு தத்து எடுத்து வளத்த குழந்தையா???
ஆமா அவதான்…..
ஏம்மா உங்களுக்கு குழந்தை இல்லன்னு அனாதை இல்லத்துல சந்தோஷமா இருந்த குழந்தைய தத்து எடுத்து வளப்பீங்க இப்போ உங்களுக்குன்னு ஒரு வாரிசு வந்த பிறகு அந்த குழந்தைய கொல்ல பாக்குறீங்க , இது என்ன நியாயம்?
அவளை நா கொல்லுறதுல உனக்கு என்ன கஷ்டம் ?உனக்கு நா டபுள் அமௌட்டா தாரேன் எனக்கு சயனைடு வேனும்…..
சுலோச்சனா அந்த பீட்டருக்கு கை மேல் கனமான காந்தி தாத்தா சிரிக்கும் நோட்டு கட்டுகளை வைக்கவும் முன்பு பேசிய வார்த்தைகள் எல்லாம் காற்றில் பறக்க அவரின் கறை படிந்த பற்களை வைத்து கொண்டு சிரித்தார்…….
ஆக சுலோச்சனா மற்றும் அனந்தி அந்த கறை படிந்த கைகளின் சொந்தக்காரனிடம் இருந்து சயனைடை பெற்று கொண்டு வீட்டிற்க்கு சென்று அஸ்வதி சாப்பிடும் சாப்பாட்டில் கலந்து வைத்து விட்டு அவளுக்காக காத்திருந்தனர்…….
அம்மா இந்த சயனைடு என்ன பண்ணும்?
சயனைடு (Cyanide) ரொம்ப தீவிரமான விஷம் , இதை சாப்பிட்ட உடனே மனுஷன் உடம்புல உள்ள ஆக்சிஜன் அளவு படிப்படியாக குறைய ஆரம்பிக்கும், அப்புறம் மூச்சு திணறல் ஆகும் , அதனால முதல்ல அது மூளைய பாதிக்கும் அப்புறம் இதயத்தை பாதிக்கும் , அப்புறம் சுய நினைவ இழந்து மயக்கம் வரும் அப்புறம்……
அப்புறம் என்னம்மா ஆகும்?
அந்த அஸ்வதியோட மூச்சு நின்னுரும் என்று அந்த கொடூர தாய் சுலோச்சனா சிரித்தார்……
நேரமும் சென்றது , அஸ்வதி கல்லூரி முடிந்து வீட்டிற்கு வரும் நேரம் ஆனது , சரியாக காலிங் பெல் சத்தம் கேட்கவும் அனந்தி சந்தோஷமாக ஓடி சென்று கதவை திறந்து பார்த்தாள்……..
கதவை திறந்த அனந்திக்கு அதிர்ச்சி காத்திருந்தது……..
அனந்தி அதிர்ச்சியாகி கதவின் அருகே நின்று கொண்டிருக்க ……..
ஏய் அனந்தி எதுக்கு வாசல்லையே நின்னுட்டு இருக்க?என்னாச்சு என்று சுலோச்சனா வாசலுக்கு வர அவருக்கும் அதிர்ச்சி……
அங்கே காவல் துறையினர் அவர்களின் படையோடு நின்று கொண்டு இருந்தார்கள்……..
நீங்க தான மிசஸ் சுலோச்சனா தேவராஜ்?
ஆம்….. ஆமா….எதுக்கு நீங்க எல்லாரும் இப்ப இங்க வந்துருக்கீங்க?
கார்ட்ஸ்…….செர்ச் என்று அந்த பெரிய ஸ்டார் அணிந்த போலீஸ் கூறவும் அனைத்து போலீசாரும் சுலோச்சனாவின் வீட்டில் சோதனை நடத்தினர் அவர்கள் நடத்திய சோதனையில் அவர்களுக்கு சயனைட் கிடைத்தது…….
சார் இங்க இருக்கு என்று ஒரு அதிகாரி சுலோச்சனா மற்றும் அனந்தி பதுக்கி வைத்திருந்த சயனைடை எடுத்து வந்தார்………
இந்த சயனைடுக்கு நீங்க என்ன பதில் சொல்றீங்க மிசஸ் சுலோச்சனா?
சயனைடு எப்படி உங்க வீட்டுல வந்தது?
இந்த சயனைடு உங்களுக்கு யார் கொடுத்தா?
என்று அந்த பெரிய போலீஸ் அதிகாரி அடுக்கடுக்காக சுலோச்சனாவிடம் கேள்வி கேட்கவும் அவர் செய்வதறியாது திகைத்து நின்றார்……
ஹாலில் வைத்து சுலோச்சனாவிடம் அந்த போலீஸ் அதிகாரி விசாரணை செய்து கொண்டிருந்தார் அப்பொழுது அஸ்வதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்தாள் அவள் அங்கு நடக்கும் விஷயங்களை பார்த்துவிட்டு அந்த பிரச்சனைக்கும் எனக்கும் என் சம்பந்தமும் இல்லாதது போல அவளின் அறைக்குள் சென்று கதவை சாத்தி கொண்டாள்……
அந்த போலீஸ் அதிகாரி சுலோச்சனாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்……..
ஏம்மா உங்ககிட்டதான கேட்டுட்டு இருக்குறேன்?
காது போச்சா?
இல்ல வாய் பேச முடியாதா?
சயனைடு வீட்டுல பதுக்கி வச்சிருக்குறது ரொம்ப பெரிய ஆபன்ஸ், அதுக்கு நீங்க புராப்பர் விளக்கம் கொடுக்கனும்,சொல்லுங்க இல்லன்னா உங்க ரெண்டு பேரையும் நா உள்ள தூக்கி வச்சிருவேன் ……..
சார்…..
அது…..
வந்து……
தன்னுடைய தாயார் அவ்வாறு உலறுவதை பார்த்த அனந்தியின் மூளையில் ஒரு யோசனை தோன்றியது……
அந்த போலீஸ் அதிகாரி தன்னுடைய தாயாரையும் தன்னையும் விடுவிக்கப் போவதில்லை என்று அறிந்த அனந்தி ஒரு பொய்யை எடுத்து விட்டாள்…..
சார்….நாதான் எங்க அம்மாக்கிட்ட சயனைடு கேட்டேன்…..
எதுக்கு உனக்கு சயனைடு?
சார் நா எம் எஸ் சி கெமிஸ்ட்ரி படிக்கிறேன் எனக்கு புராஜக்ட்க்கு தேவைப்படுது அதான் கேட்டேன்…..
அப்படி சயனைடு வச்சி என்ன புராஜக்ட் செய்ய போற?
சார் சயனைடு யூஸ் பண்ணுனா என்ன பிராப்ளம் எல்லாம் வரும்ன்னு ரிசர்ச் பண்ண போறேன்…..
அப்படியா?
சரி சயனைடு வாங்க காலேஜ்ல கொடுத்த அப்ரூவல் காப்பி எங்க?அதை கொடு நா பாக்கனும்……
அது……
சார்……
அது….
வந்து…..
காப்பி…..
எனக்கு காப்பி குடிக்கிற பழக்கம் இல்ல , ஐ நீட் அப்ரூவல் காப்பி என்று அந்த போலீஸ் அதிகாரி ஹாலில் போடப்பட்ட சோஃபாவில் அமர்ந்து விட்டார்……
அந்த போலீஸ் அதிகாரி கேட்ட கேள்விக்கு அனந்தி பதில் கூறாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கவும்…..
அப்போ உன்கிட்ட அப்ரூவல் காப்பி இல்ல அப்படிதான…..
அது…..
சார்…….
ஏய்……என்று அந்த போலீஸ் அதிகாரி சத்தம் போடவும் இருவரும் பயந்து விட்டனர்…..
நீங்க ரெண்டு பேரும் எதுக்கு சயனைடு வாங்கினீங்கன்னு நா சொல்லட்டா என்று அந்த போலீஸ் அதிகாரி கூறத் தொடங்கினார்……
நீங்க தத்து எடுத்து வளர்த்த பொண்ணு பேரு அஸ்வதி , அப்போ அந்த பொண்ணு சின்ன வயசுல இருந்த சமயத்துல உங்களுக்கு அந்த பொண்ண ரொம்ப புடிச்சி இருந்தது ஆனா உங்க ஹஸ்பண்ட் அந்த பொண்ணுக்கு அவரோட பாதி சொத்த எழுதி வச்ச உடனே அந்த சொத்து உங்க கைக்கு கிடைக்காம போன கோவத்துல அந்த பொண்ண கொலை பண்ண சயனைடு வாங்கி இருக்கீங்க இப்போ இந்த சாப்பாட்டுல சயனைடு கலந்து இருக்கீங்க , இந்த சயனைடு கலந்த சாப்பாட்ட அஸ்வதி சாப்பிடணும் அப்புறம் அந்த பொண்ணு செத்துப் போகணும் அப்புறம் அஸ்வதியோட சொத்து எல்லாம் உங்க பேருக்கு வரனும் அதான உங்க ரெண்டு பேரோட பிளான்?
என்று அவர்கள் இருவரும் போட்ட பிளானை அவர் சரியாக கூறவும் சுலோச்சனா மற்றும் அனந்திக்கு அதிர்ச்சி தாளவில்லை……
என்ன உங்க ரெண்டு பேரோட பிளானையும் சரியா சொல்றானா?
இவங்க ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போங்க என்று அந்த அதிகாரி கூறவும் அனந்தி மற்றும் சுலோச்சனாவின் கைகளில் விலங்கு மாட்டி ஜீப்பில் ஏற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்…..
சுலோச்சனா மற்றும் அனந்தி இருவரையும் லாக்கப்பில் அடைத்தனர் அவர்கள் இருவரிடமும் அங்கு இருந்த அனைத்து போலீசாரும் விசாரித்துப் பார்த்தனர் ஆனால் அவர்கள் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை……
கடைசியாக அந்த பெரிய ஸ்டார் அணிந்த போலீஸ் அதிகாரி மதன் குமார் ஐஏஎஸ் வந்தார்……
என்ன நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு விசாரிச்சாலும் ஒரு வார்த்தை கூட பேச மாட்டீங்களாமே?என்று அவர் கையில் ஒரு லத்தியை எடுத்து வந்தார்……
என்ன சார் அடிச்சு உண்மை எல்லாம் வாங்கிடலாம்னு பாக்குறீங்களா?நாங்க ரெண்டு பேரும் தப்பே பண்ணல ஆனா நீங்க எங்க ரெண்டு பேரையும் இப்படி ஜெயில்ல புடிச்சு போட்டு இருக்கீங்க இதுக்கு நீங்க பதில் சொல்லியாகணும் ஆபிசர்…..
அந்த பதிலை நான் இப்ப சொல்லிக்கிறேன் இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த கையை டப் டப்புன்னு அடிச்சிட்டு வருமே அதுக்கு பேர் என்னய்யா?
தேள் சார்….
ஹான்….
தேள் சார் , அந்த தேள் சார் இப்போ உங்க ரெண்டு பேர் லாக்கப்புக்கு உள்ள வருவாங்க அவங்க ரெண்டு பேர் கிட்டயும் நீங்க என்ன சொல்லனுமா சொல்லிக்கோங்க என்று மதன் லாக்கப்பை மூடிவிட்டு அவர்கள் இருவரின் செல்லுக்க்குள் ஆயிரக்கணக்கான தேள்களை விட்டார்…….
ஒவ்வொரு தேளும் பெரிது பெரிதாக இருந்தது அதை பார்த்து இருவரும் அலறினர்……
அவர்கள் இருவரின் காலை தேள் கொட்ட ஆரம்பித்தது……
சார் சார்…..
போதும்….
போதும் நா உண்மைய சொல்லிடுறேன் என்று சுலோச்சனா மற்றும் அனந்தி அலறினார்கள்………
அவர்கள் இருவரும் அவ்வாறு அலறுவதை பார்த்த மதன்……
யோவ் த்ரீ நாட் ஃபோர்……
சார்….
இதுதான் திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரின்னு சொல்லுவாங்களோ…….
அப்படிதான்னு நினைக்குறேன் சார்…..
சரி அந்த தேள் செல்லங்களை கூட்டிட்டு வா என்று மதன் கூறவும் அந்த தேள்களை அந்த த்ரீ நாட் ஃபோர் அள்ளி கொண்டு வந்தார்……
சரி சொல்லுங்க மிசஸ் சுலோச்சனா தேவராஜ்…….
என்ன உண்மை அது?
சார்….
சார்…..
சார்தான் நா…..
அதுக்கு மேல சொல்லுங்க …..
எனக்கு அந்த அஸ்வதி சாகனும், எனக்கு என்னோட சொத்து வேனும் , அதான் அந்த அனாதை நாய கொல்ல பாத்தேன்……
எப்படி எப்படி உங்களுக்கு தேவைன்னா ஆசிரமத்துல சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்குற குழந்தையை நா உன்ன பத்திரமா பாத்துக்குறேன் அப்படின்னு சொல்லி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது அப்புறம் உங்களுக்கு ஒரு பொண்ணு வந்த பிறகு அந்த தத்தெடுத்த குழந்தையை கொல்ல பாக்குறது இதுதான் உங்க நியாயமோ?இதுக்கு அந்த குழந்தை அனாதை ஆஷ்ரமத்திலேயே நிம்மதியா இருந்திருப்பா அந்த குழந்தையை புடிச்சிட்டு வந்து நான்தான் உன்னோட அம்மா நான் தான் உன்னோட அப்பா அப்படின்னு சொல்லி வளர்த்துட்டு அந்த பொண்ணுக்கு உங்கள விட ஒரு பர்சன்ட் சொத்து கூட போன உடனே கொன்றனும் என்ன?
அந்த போலீஸ் அதிகாரி அவ்வாறு கேட்கவும் சுலோச்சனாவிடம் பதில் இல்லை……..
சார் என்னோட அம்மாவோட சொத்து அது, அந்த அனாதை நாய்க்கு அந்த சொத்தெல்லாம் தூக்கி கொடுக்க நாங்க என்ன முட்டாளா?
நீங்க எல்லாம் ரொம்ப அறிவாளிங்கம்மா , உங்க அம்மா தத்தெடுத்தாங்களே ஒரு பொண்ணு அந்த பொண்ணு தாம்மா இப்ப முட்டாள் , மிஸ்ஸஸ் சுலோச்சனா இப்போ உங்ககிட்ட நான் ஒரு கேள்வி கேட்க போறேன் அதுக்கு சரியா பதில் சொல்றீங்களான்னு பாப்போம்……
நீங்களும் உங்க ஹஸ்பண்ட்டும் சேர்ந்து தான் அந்த பொண்ணு அஸ்வதியே தத்தெடுத்தீங்க கரெக்டா? அப்போ தத்தெடுத்துக்கிட ரெகார்ட்ஸ்ல அஸ்வதி உங்க பொண்ணு அப்படின்னு இருக்கும் அப்படி இருக்கிற சமயத்துல உங்க ஹஸ்பண்ட் அவரோட பொண்ணுக்கு எழுதி வைக்கிற சொத்து லீகல் தானே?
அவ அனாதை நாயி அவளுக்கு என்னோட அப்பா சொத்து கேக்குதா என்று அனந்தி கூறி முடிக்கவில்லை மதனின் ஐந்து விரல்களும் அவள் கன்னத்தில் பதிந்திருந்தது……..
ஏய் என்னடி நினைச்சிட்டு இருக்க?வார்த்தைக்கு வார்த்தை அனாதை அனாதைன்னு சொல்லிட்டு இருக்க?நீ பொறந்ததுனால தான் அந்த பொண்ணு அஸ்வதி திரும்பவும் அனாதையானா , நீங்க ரெண்டு பேரும் கொலை பண்ண ட்ரை பண்ணி இருக்கீங்க அத என்கிட்டயே ரொம்ப தைரியமாக சொல்றீங்க என்ன உங்களுக்கு இதுக்கு என்ன தண்டனை தெரியுமா?
யோவ் என்ன தண்டனைன்னு சொல்லுய்யா ……
மரண தண்டனை இல்லன்னா ஆயுள் தண்டனை சார் அப்படி இல்லன்னா ஃபைன் சார்……
இவங்க ரெண்டு பேரையும் செல்ல போடு நாளைக்கு கோர்ட்ல அந்த ஜட்ஜ் என்ன தண்டனை கொடுக்குறாருன்னு பாப்போம் …….
தொடரும்……..
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…….
❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

