Loading

காதல் – 49

 

அஸ்வதி மற்றும் விஹான் இருவரும் தங்களின் காதல் பொழுதுகள் முடியும் நேரத்தில் இன்னும் கொஞ்ச நேரம் இந்த காதல் பொழுதுகள் நீளக் கூடாதா என்று எண்ணிக் கொண்டு அவர்களின் காதல் ஆரம்பித்த இடமான காஷ்மீரில் அவர்களின் கடைசி பயணம் இதுவாக இருந்தது……..

 

விஹான்  அஸ்வதியை குரேஸ் பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றான்…….

 

அந்த இடத்தில் பால் வெளி மண்டலம் மிகவும் அழகாக வெறும் கண்களுக்கு தெரிந்தது…….

 

அந்தக் காணக் கிடைக்காத காட்சியை அஸ்வதி  பார்த்துவிட்டு  விஹானை கட்டிப்பிடித்துக் கொண்டு பேச சந்தோஷமாக இருவரின் காதல் பொழுதுகள் கரைந்தது…….

 

இருவரும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொண்டு இருந்தனர் ….

 

இருவரின் விழிகளும் ஒன்றோடு ஓன்று கலந்து கொண்டு இருந்தது…..

 

விஹானின் பார்வை தன் காதலியின் இதழ்களில் நிலைக்குத்தி நின்றது….

 

அஸ்வதியும் விஹானை பார்த்து ரசித்து கொண்டே இருந்தாள்…….

 

அப்பொழுது இருவரின் மோன நிலைக்கு ஏற்ப பாடல் ஒலித்தது…….

 

கார்த்திகை போச்சு

மார்கழி ஆச்சு

பனி காத்தும்

அனல் போலே கொதிக்குதே

நதி துடிக்குதே பறி தவிக்குதே

பாயமாத்தான்

பாவை தாபம்

யாருக்கு லாபம்

புயலோடு

எலபோல உசுறோடுதே

உன் கூடவே உன்னை தேடுதே

ஓயாமதான்

வாழாதே பூங்கொடி

காற்றே வருடாமல்

விண்வெளியே வானவில் போல்

உன்னால் மறாதோ

வாயா என் வீரா

கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது

வாயா என் வீரா

நெஞ்சு வலி வலி கொஞ்சம்

மறைஞ்சி போகட்டும்

வாயா என் வீரா

கண்ணுகுழி குழி காஞ்சி கெடக்குது

வாயா நீ வாயா

மயில் தோகை மேலே

மலையை போலேவே ஏ”……….

 

அதன் பின்னர் விஹான் தன் காதலியின்  முகத்தை தன் இரு கைகளில் ஏந்தி கொண்டு அவளின் துடிக்கும் இதழில் தன்னுடைய இதழை பொருத்தினான்…….

 

அஸ்வதி விஹானின் சட்டையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள் விஹான் அஸ்வதியின் இதழில் உள்ள அனைத்து தேனையும் எடுத்துவிடும் வண்டாக அவளின் இதழை மொய்த்துக் கொண்டிருந்தான்……..

 

நீண்ட நேரம் நடந்த அந்த இதழ் முத்தம் முடிய சற்று நேரம் ஆனது ……..

 

அஸ்வதியின் இதழை விடுவிக்க மனமே இல்லாமல் விஹான் விடுவித்தான்…….

 

அந்த இருளிலும் அஸ்வதியின் முகம் வெக்கத்தில் சிவந்து போய் இருந்தது……

 

இருளில் கானும் ஓவியம் போல அவள் அவன் கண்களுக்கு தெரிந்தான் …….

 

பிறகு அஸ்வதி விஹானின் மார்பினில் முகம் புதைத்துக் கொண்டாள்……

 

அப்பொழுது ……

 

புது வெள்ளை மழை

இங்கு பொழிகின்றது இந்தக்

கொள்ளை நிலா உடல்

நனைகின்றது இங்கு சொல்லாத

இடம் கூடக் குளிா்கின்றது மனம்

சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே… நீயானால்

கரை நானே சிறுபறவை…

நீயானால் உன் வானம் நானே”…..

 

என்று அவர்களின் காதல் காட்சிகளுக்கு ஏற்ப பாடல் கேட்டது ….

 

விஹான் மற்றும்  அஸ்வதி டென்ட்டிற்க்குள் சென்று விஹான் தன் காதலியை தன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு இருவரும் சகமாக உறங்கினார்கள்……..

 

தன்னவனின் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டு உறங்கியதால் அவனின் இதயத்துடிப்பு அவளுக்கு தாலாட்டு போல இருந்தது……

 

தன்னவளின் காற்றில் ஆடும் கூந்தல் அவனின் முகத்தை வருடியவாறு இருந்தது அது அவனுக்கு சுகமான தூக்கத்தை கொடுத்தது ……

 

இருவருக்கும் மறுநாள் காலை மிகவும் அழகாக விடிந்தது…….

 

விஹான் நன்றாக உறங்கி கொண்டு இருந்தான்……

 

அஸ்வதி தான் முதலில் கண் விழித்தாள்……

 

அஸ்வதி எங்கே தூக்கத்தில் உருன்டு தள்ளி போய் விடுவாள் என்று பயந்து விஹான் அவளை தன் நெஞ்சோடு இறுக்கமாக அணைத்தப்படி உறங்கிக் கொண்டிருந்தான்……

 

அஸ்வதி விஹானின் கன்னத்தில் முத்தமிட்டாள் அதில் விஹான் விழித்து விட்டான்………

 

குட் மார்னிங் மை டியர் ஸ்வீட் அஸ்வி…..

 

குட் மார்னிங் மை ஸ்வீட் விஹான் என்று அவள் அவனின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தாள்……

 

மனி என்ன ஆகுது?

 

மனி இப்போ அஞ்சு ஆக போகுது……

 

சரி நம்ம அப்போ கிளம்பலாமா?

 

ஓகே என்று இருவரும் டென்ட்டை பிரித்து எடுத்து ஜீப்பில் வைத்து விட்டு வந்த வழியே திரும்பி சென்றனர்……

 

அந்த இடத்திற்கு செல்லும் போது அவர்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர் ஆனால் திரும்பி வரும்போது அவர்கள் இருவருக்கும் சோகம் குடி கொண்டது……

 

அவர்கள் இருவரும் பண்டிபொரா கிராமத்தை தாண்டும் போது அங்கு ஒரு சிறிய நாக தேவதை சன்னதி இருந்தது அதை பார்த்த அஸ்வதி காரை நிறுத்த சொல்லி அவனை அழைத்து கொண்டு அந்த கோவிலுக்கு சென்று இருவரும் சீக்கிரம் ஒன்று சேர வேண்டும் என்று மனமுருக வேண்டி வழிபட்டனர்……

 

பிறகு அவர்களின் பயனம் தொடர்ந்தது…..

 

அடுத்து அவர்கள் சென்று கொண்டிருந்த  வழியில் ஒரு சிறிய கல்லை வைத்து வழிபாடு நடத்திக் கொண்டிருந்தார்கள் அதை பார்த்த அஸ்வதி ஜிப்பிலிருந்து இறங்கி தன்னுடைய காதலனை அழைத்துக் கொண்டு அந்த இடத்திற்கு சென்று வழிபாடு செய்துவிட்டு வந்தனர்……

 

பிறகு அவர்களின் பயணம் தொடர்ந்தது ……

 

கார்கள் அவர்கள் இருவரும் சென்று கொண்டிருந்த வழியில் ஒரு சிறிய சிவ லிங்கத்தை வைத்து வழிபாடு செய்திருந்தனர்……

 

அதைப் பார்த்த விஹான் அஸ்வதி கேட்காமலே  ஜீப்பை நிறுத்திவிட்டு அந்த கோயிலுக்குள் சிவலிங்கத்தின் அருகில் அழைத்து சென்றான்…..

 

அஸ்வதி மனம் உருகி வேண்டிக்கொண்டு இருந்தாள் அப்பொழுது அவள் கழுத்தில் எதோ அசைவது போன்ற உணர்வு தோன்ற கண்களை திறந்து பார்த்தால் விஹான் அவள் கழுத்தில் ஒரு செயினை போட்டு விட்டு கொண்டு இருந்தான்…..

 

அவன் அவள் கழுத்தில் அந்த தங்க செயினை போட்டு விடவும் அய்யர் ஆரத்தி தட்டை எடுத்து கொண்டு வெளியில் வரவும் சரியாக இருந்தது…..

 

அவர் காட்டிய தீபத்தை இருவரும் கண்களில் ஒற்றி கொண்டனர் பிறகு அவர் தட்டில் விஹான் காணிக்கை போட்டு விட்டு அந்த தட்டில் இருந்த குங்குமத்தை எடுத்து அஸ்வதியின் நெற்றியில் வைத்து விட்டான்…….

 

அஸ்வதி விஹானை புரியாமல் பார்க்க , அவன் சிரித்து கொண்டே அவளின் கை பிடித்து அந்த கோவிலின் ஒரு ஓரத்தில் அமர வைத்தான்…..

 

விஹான் , இந்த செயின்??!!

 

இந்த செயின் என்னோட காதல் மனைவிக்கு நா கொடுக்குற என்னோட முதல் கிஃப்ட்…….

 

காதல் மனைவியா?

 

ஆமாடா செல்லம் உனக்கு நா போட்டு விட்ட செயின்தான் உனக்கு நா போட்டு விடுற தாலி இதை நீ எப்பவும் உன்னோட கழுத்துல இருந்து கழட்ட கூடாது சரியா??

 

நீங்க தாலின்னு சொல்லிட்டீங்க அப்புறம் எப்படி நா என்னோட கழுத்துல இருந்து கழட்டுவேன் என்று அவள் அவனை பார்த்து அழகாக சிரித்தாள்…..

 

நம்ம ரெண்டு பேர பொறுத்த வரை நீயும் நானும் கணவன் மனைவி, இன்னும் நம்ம கனவ நம்ம அடஞ்சிட்டு அப்புறமா ஊரறிய இன்னொரு தடவை கல்யாணம் பண்ணிக்கலாம் என்ன?

 

சரி என்று அவள் அவனை கட்டி அணைத்து கொண்டாள்……

 

பிறகு இருவரும் தங்கள் வீட்டிற்க்கு பயணித்தனர்…….

 

ஏழு மணி நேர பயணத்திற்குப் பிறகு இருவரும் தங்களின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்…….

 

இருவரும் பிரெஷ் ஆகிவிட்டு சாப்பிட்டுவிட்டு பயணக்களைப்பில் உறங்கி விட்டனர்……

 

இரண்டு மணி நேரம் இருவரும் நன்றாக உறங்கினார்கள்……

 

பிறகு விஹானா வந்து இருவரையும் எழுப்பினாள்…….

 

அண்ணே , அஸ்வா ரெண்டு பேரும் எழுந்திரிங்க அஸ்வாக்கு பிளைட்டுக்கு டைம் ஆகுது…….

 

இருவரும் விஹானா எழுப்பியதில் எழுந்து விட்டனர்………

 

அஸ்வா உனக்கு பிளைட்டுக்கு நேரம் ஆயிடுச்சுப்பா வா நீ ரெடி ஆக நா ஹெல்ப் பண்ணுறேன்  என்று அவள் அஸ்வதியை அழைத்துக் கொண்டு சென்றாள்……

 

விஹானா அஸ்வதியை ட்ரெஸ் மாற்ற வைத்துவிட்டு கிளம்ப வைத்து அழைத்து வந்தாள்…….

 

விஹான் சோபாவில் சோகமாக அமர்ந்து கொண்டிருந்தான்…….

 

அஸ்வதி அவன் அருகில் சென்று அமர்ந்தாள்…….

 

விஹான்……

 

சொல்லும்மா…..

 

நீங்க என்கூட ஏர்போர்ட் வர வருவீங்களா?

 

இதென்ன கேள்வி?

நா உன்னோட பிளைட் கிளம்புற வரை அங்கதான் இருப்பேன்…..

 

அவன் அவ்வாறு கூறவும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது….

 

அவளின் கண்ணீர் அவளின் இமையை தாண்டும் முன் அதை விஹான் அவன் விரல்களால் அதை தடுத்து விட்டான்…..

 

என்னோட பொண்டாட்டி இப்படி அழுக கூடாது புரியுதா? யாரும் உன்கிட்ட வம்பு பன்னா என்ன பன்னனும்ன்னு சொல்லி கொடுத்தேன்னு நியாபகம் இருக்கா?

அவங்க மூஞ்சிய உடைச்சி விடனும்….

 

வம்பு பண்றது உன்னோட வளர்த்த அம்மாவா இருந்தா??

 

விஜய் அப்பாகிட்ட சொல்லனும்…..

 

விஜய் அப்பாகிட்ட சொல்ல முடியாத அளவுக்கு அவங்க உன்கிட்ட வம்பு பன்னா என்ன பண்ணுவ?

 

அவங்க கைய உடச்சி விட்டுருவேன்…..

 

அது….இப்படித்தான் என்னோட பொண்டாட்டி தைரியமா இருக்கனும் புரியுதா?

 

நல்லாவே புரியுது என்று  அஸ்வதி விஹானை பார்த்து அழகாக சிரித்தாள்….

 

அஸ்வதி விஹானின் தோள்களில் சாய்ந்து கொண்டாள்……

 

அவர்கள் இருவரும் அப்படியே ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொண்டு இருந்தார்கள்…….

 

அப்பொழுது அங்கு அஸ்வதியின் உடைமைகளை விஹானா எடுத்து வந்தாள்……

 

அஸ்வா உனக்கு மொத்தம் ஏழு  லக்கேஜ் நாலு ட்ராலி,  ஒரு ஹேண்ட் பேக்,  ரெண்டு டிராவல் பேக்…….

 

அப்பொழுது அங்கு சுலோச்சனா மற்றும் அனந்தி வந்தனர்……

 

என்னது இவளுக்கு ஏழு லக்கேஜ்ஜா?வரும்போது ஒரு ட்ராலி தானே கொண்டு வந்த? இப்போ எப்படி ஏழு லக்கேஜ் வந்தது? இங்கிருந்து எதுவும் திருடிட்டு வரியா? என்று சுலோச்சனா கேட்கவும்  விஹானிற்க்கு கோபம் கரையைக் கடந்து அவன் பேச தொடங்கும் சமயம் அஸ்வதி அவனை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு அவள் பேசினாள்…..

 

எனக்கு என்னோட வருங்கால புருஷனும் என்னுடைய வருங்கால மாமியாரும் எனக்கு நிறைய பொருள் கொடுத்து இருக்காங்க அத நா எடுத்துட்டு வரேன் உங்களுக்கு அதுல என்ன பிரச்சனை?

 

அஸ்வதி இவ்வாறு பதிலுக்கு பதில் பேசுவாள் என்று சுலோச்சனா எதிர்பார்க்கவில்லை அவர் அஸ்வதியின் பதிலை கேட்டு அதிர்ச்சியாகி நின்றார்……

 

என்னடி என்னோட அம்மாகிட்ட பதிலுக்கு பதில் பேசுற?ரொம்ப தைரியம் ஆயிடுச்சோ?

 

ஆமா ரொம்ப தைரியம் ஆயிடுச்சு அதனால இப்ப உனக்கு என்ன??உங்க அம்மா பேசினதுக்கு நா பதில் சொன்னேன் அவ்வளவுதான் உன் வேலைய பாத்துட்டு போ……

 

ஏய் ஏய் ……. இங்க உனக்கு நிறைய சப்போர்ட் இருக்குன்னு மெதப்புல ஆடாத சென்னை வந்த பிறகு இருக்குடி உனக்கு…….

 

உனக்கும் சென்னை வந்த பிறகு இருக்குடி……..விஹானா விஹான் எனக்கு என்னோட லக்கேஜ விஹான் காருல வைக்க ஹெல்ப் பண்ணுங்க ……

 

வா நா உனக்கு ஹெல்ப் பண்றேன் என்று அண்ணனும் தங்கையும் அஸ்வதிக்கு அவளின் பொருட்களை காரில் வைக்க இருவரும் உதவி செய்தனர்……

 

பிறகு மூவரும் வீட்டிற்குள் வந்தனர்……

 

அங்கு பீவி அம்மா கண்களில் கண்ணீரோடு நின்று கொண்டிருந்தார்…..

 

அம்மா இப்ப எதுக்கு கண்ணுல தண்ணி வச்சிட்டு இருக்கீங்க?என்று அஸ்வதி  அவரின் கண்ணீரை துடைத்து விட்டாள்………

 

அஸ்வா கண்ணா உன்னை நா ரொம்ப மிஸ் பண்ணுவேன்……

 

நானும் உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவேன் அம்மா என்று அவள் அவரை கட்டி அணைத்து கொண்டாள்…..

 

அம்மா இப்போ நான் சென்னைக்கு போயிட்டு உங்க மருமகளை திரும்பி இந்த வீட்டுக்கு வருவேன் ஓகேவா?

 

தொடரும்…….

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்