Loading

காதல் – 44

 

அஸ்வதி அவளின் காதலனை நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரிப் போசிரியராக மாற்றி அவனை கல்லூரிக்கு அனுப்பி வைத்துவிட்டு அவன் திரும்பி எப்பொழுது வருவான் என்று வாசலையே பார்த்து கொண்டு இருந்தவளை விஹான்னா அவளின் அறைக்கு அழைத்துச் சென்று அஸ்வதியின் தீக்காயங்கள் மேல் புளிய மரத்தின் பட்டை கலவையை தயார் செய்து போட்டு விட்டாள்……

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது கல்லூரிக்கு சென்ற விஹானை அவனின் சக ஆசிரியர்களும் மாணவர்களும் மகிழ்ச்சியாக வரவேற்றனர்……..

 

கல்லூரி முடிந்து விஹான் வீட்டிற்க்கு வந்ததும் அவன் கண்கள் தன் காதலியை தேடி அவளை கண்டும் பிடித்து விட்டு அரை நாள் அவளை காணாமல் இருந்த ஏக்கத்தை முத்தங்களால் போக்கி விட்டு அவர்களின் குடும்பத்தினரோடு சந்தோஷமாக உணவு அருந்தி கொண்டு இருந்தார்கள்…….

 

அஸ்வதி மற்றும் விஹான் இருவரும் உணவு அருந்தி விட்டு அவர்களின் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்…….

 

விஹான் அஸ்வதியின் மடியில் படுத்து கொண்டு அன்று கல்லூரியில் நடந்தவற்றை கூறி கொண்டு இருந்தான்……

 

அவன் பேச பேச அதை இன்முகத்துடன் அஸ்வதி கேட்டு கொண்டு இருந்தாள்…..

 

அஸ்வி அந்த ஹர்ஷத்துக்கு உன்ன பாக்கணும்ன்னு சொன்னான் நாளைக்கு என்கூட நீ என்னோட காலேஜுக்கு வா…..

 

ஹர்ஷத்தா யாரு அவங்க ?விஹான் நீங்க ஹர்ஷ்த் பத்தி இதுக்கு முன்னால சொன்னதே இல்ல??

 

உன்கூட நா இருக்குற சமயத்துல எனக்கு உன்ன தவிர வேற யாரும் நினைவுக்கு வர மாட்டேங்குறாங்க அண்ட் அவன் ஒன்னும் அவளோ பெரிய ஆளு இல்ல , என்னோட பெஸ்ட் பிரண்ட் அவன் ,  ஸ்கூல்ல இருந்து நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் ஒன்னா படிச்சோம் …….

 

ஸ்கூல்ல இருந்து ஒன்னா படிச்சிருக்கீங்க, சூப்பர்ப்பா இதனை வருஷம் ஒன்னா இருக்கீங்க சூப்பர்…..

 

ஆமா அஸ்வி அவன் என்னோட பெஸ்ட் பிரண்ட், எனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் முன்னால அவன்தான் நின்னு காப்பத்துவான் , அந்த மனீஷா அப்படி எம்மேல பொய் பழி போடும்போது எல்லாரும் என்ன ஒரு சின்ன சந்தேக கண்ணுல பாத்தாங்க ஆனா ஹர்ஷத் மட்டும் அந்த மனீஷா சொன்னத நம்பாம அந்த மணீஷாவ கன்னத்துல பளார் பளார்ன்னு அறை விட்டான் பாரு……

 

அடிச்சிட்டாங்களா?

 

ஆமாடா அவன் கொஞ்சம் கோவக்காரன் அதான் அந்த மனீஷா அவ்வளோ பெரிய பழிய எம்மேல போட்டதும் ஹர்ஷத் அவள அடிச்சிட்டான் அதனால அவனும் ரெண்டு மாசம் சஸ்பென்ஷன்ல இருந்தான்……

 

விஹான் நீங்க ரொம்ப ரொம்ப குடுத்து வச்சவங்க , நல்ல அப்பா அம்மா, நல்ல தங்கச்சி, நல்ல ப்ரெண்ட்ன்னு எல்லாம் உங்களுக்கு அமஞ்சிருக்கு……

 

இப்போ எனக்கு என்னோட வாழ்க்கைய முழுமையாக்குறதுக்கு என்னோட செல்ல காதலியான உன்னையும் அந்த ஆண்டவன் எனக்கு குடுத்துட்டான், என்று அவன் அவளை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டு அவளின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தான்……

 

உங்களாலதான் எனக்கும் ஒரு நல்ல குடும்பம் கிடைச்சிருக்கு என்று அவள் அவனை பார்த்து அழகாக சிரித்தாள்…..

 

சரி விஹான் உங்களோட சப்ஜெக்ட்ட எல்லாம் மத்த டீச்சர்ஸ் எல்லாம் எடுத்து முடிச்சிட்டாங்களா?

 

இல்லடா செல்லம் அந்த பிரின்சிபால் மேல உள்ள கோவத்துல மத்த டீச்சர்ஸ் எல்லாம் என்னோட சப்ஜெக்ட்ட நா வந்து எடுத்தாதான் உண்டுன்னு இருந்துட்டாங்க அதான் நா விட்டு போன போர்ஷன்ல இருந்து எடுக்க ஸ்டார்ட் பண்ணிருக்கேன்…….

 

அய்யோ அப்போ எல்லா போர்ஷனும் செமஸ்டர்க்குள்ள முடிக்க முடியுமா?

 

மோஸ்ட்லி எல்லா போர்ஷன்னும் முடிக்க பாக்கனும் அப்படி இல்லன்னா இம்போர்டன்ட் கொஸ்டீன்ஸ் மட்டும் சொல்லனும்…..

 

நீங்க சொல்லுறது ரொம்ப கரெக்ட், இருக்குற கொஞ்ச நாள்ல எவ்வளோ போர்ஷன் முடிக்க முடியுமோ அவ்வளோதான் முடிக்க முடியும்…..

 

சரி அஸ்வி உன்னோட கை எல்லாம் இன்னைக்கு என்ன கொஞ்சம் ஷைன்னிங்கா இருக்கு?

 

இன்னைக்கு விஹான்னா எனக்கு புளிய மரத்து பட்டை கலவைய என்னோட தழும்பு மேல போட்டு விட்டா அதான் காரணம்னு நினைக்குறேன்…..

 

புளிய மரத்து பட்டையா?

 

ஆமா என்று விஹான்னா தாயார் செய்து போட்டு விட்ட கலவையை பற்றி விஹான்னிடம் கூறி கொண்டு இருந்தாள்……

 

அஸ்வதி அன்று அவள் என்னென்ன செய்தாள் , என்ன உணவெல்லாம்  சாப்பிட்டாள் , சோஜோ, மோஜோவுடன் என்ன விளையாட்டு எல்லாம் விளையாடினாள் என்று விஹானிடம் சுவாரசியமாக கூறி கொண்டு இருந்தாள்………

 

அவள் தலையை ஆட்டி ஆட்டி  பேச பேச அவளின் பேச்சுக்கு ஏற்ப அவளின் காதில் அணிந்திருந்த ஜிமிக்கியும்  ஆடியது ……

 

அதை பிடித்து ஆட்டி ஆட்டி விளையாடி கொண்டு இருந்தான் விஹான்……

 

அஸ்வி உன்னோட ஜிமிக்கியும் உன்னோட பேச்சுக்கு ஏத்தாப்ல அழகா ஆடுது…….

 

ஹான் ஆடும் ஆடும் , அது எப்படிங்க என்னோட தலையில இருந்து கால் வரை ஒவ்வொரு அசைவையும் தவறாம கவனிக்குறீங்க?

 

எனக்கு உன்ன ரசிக்கிறத விட வேற என்ன வேலை இருக்க போகுது……

 

அவன் அவ்வாறு கூறவும் அஸ்வதி அவனின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தாள்……..

 

விஹான் நீங்க என்னோட வாழ்க்கையில வராம இருந்திருந்தா நா என்ன பண்ணிருப்பேன்?

 

நீயும் நானும் சந்திக்கனும், காதலிக்கனும்ன்னு கடவுள் ஏற்கனவே செட்டிங் பண்ணி வச்சிட்டாரு சோ அதை யாராலும் மாத்த முடியாது …….

 

அவன் கூறியதை கேட்டு அஸ்வதி சிரித்து விட்டாள்……

 

என்னடி சிரிச்சு சிரிச்சு என்ன மயக்க பாக்குறியா ?

 

ஏன் நா சிரிச்சா மட்டும்தான் நீங்க மயங்குவீங்களோ?

 

இல்ல உன்ன பாத்தாலே நா மயங்கிருவேன்……

 

அவன் அவ்வாறு கூறவும் மீண்டும் அவள் அவனை பார்த்து அழகாக சிரித்தாள்……..

 

அஸ்வதி உன்ன இப்படி சிரிச்ச முகமா எப்பவும் நா பாத்துட்டே இருக்கனும்……

 

அதுக்கு என் பக்கத்துல நீங்க எப்பவும் இருக்கனும்……

 

நா எப்பவும் உன் கூடவே இருப்பேன் …..

 

அவர்கள் இருவரும் ஒன்றாக சந்தோஷமாகவும் காதலாகவும் பேசி கொண்டு இருக்கும்போது அதை கெடுக்க எப்பொழுதும் போல விஹான்னா வந்தாள்……

 

ஹலோ நைட்டு சாப்பாடு சாப்பிட வாங்க அம்மா உங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டாங்க என்று விஹான்னா இரு காதல் ஜோடிகளையும் அழைத்தாள் …..

 

அவர்கள் மூவரும் சந்தோஷமாக சிரித்து பேசி கொண்டு சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள்…….

 

சரி விஹான் நீ சீக்கிரம் தூங்க போ அப்போதான் சீக்கிரம் நீ முழிப்ப…..

 

அம்மா நாளைக்கு என்னோட அஸ்விய நா என்னோட காலேஜுக்கு கூட்டிட்டு போக போறேன் , காலேஜ்ல நாளைக்கு அவ்வளவா கிளாஸ் நடக்காது கல்சுரல்ஸ் தான் அதான் கூட்டிட்டு போறேன்……..

 

தாராளமா கூட்டிட்டு போடா , அப்போ உன்னோட அஸ்வியையும் சீக்கிரம் தூங்க சொல்லு என்று அவர் சிரித்தார்……

 

சரியென்று இருவரும் தூங்க சென்றனர்……..

 

மறுநாள் காலையில் அஸ்வதி மற்றும் விஹான் குளித்து முடித்து விட்டு வந்தனர்…….

 

அஸ்வதியின் ஈர கூந்தலை ட்ரையர் மூலம் விஹான் உலர்த்தி விட்டான் , பிறகு அஸ்வதி  அடர் நீல நிறத்தில் பட்டு புடவை அணிந்து கொண்டு வந்தாள், அவளின் புடவையின் முன் மடிப்புகளை அவன் சரி செய்து விட்டான், பிறகு அவளின் நீண்ட கூந்தலை அழகாக பின்னி அதில் மல்லிகை பூ சரங்களை வைத்து விட்டு அவளின் அழகிய முகத்திற்கு சிறிது பவுடர் போட்டு கொண்டு அவளின் நெற்றியில் சிறிய பொட்டு வைத்து விட்டு அவளின் கன்னத்தில் அவன் முத்தமிட்டான்…….

 

என்னோட செல்ல காதலி ரெடி ….

 

என்ன நீங்க ரெடி பண்ணி விட்டீங்கல்ல இப்போ நா உங்களை ரெடி பண்ணி விடுறேன் என்று அவள் புடவையின் நிறத்திற்கு ஏற்ப அவனும் அடர் நீல நிறத்தில் சட்டை போட்டு கொண்டு வந்தவனின் பட்டன்களை ஒழுங்காக போட்டு அவனின் கை சட்டையை அவனின் முழங்கை வரை மடக்கி விட்டு அவனின் தலையை அழகாக சீவி விட்டு அவனின் முகத்திற்கு சிறிது பவுடர் போட்டு விட்டாள் பிறகு அவனுக்கு பிடித்த வாசனை திரவியத்தை அவனுக்கு அடித்து விட்டு அவனை அவள் தயார் செய்து விட்டாள்……

 

இருவரும் அழகாக ஒரே நிறத்தில் உடை அணிந்து கொண்டு தயாராகி விட்டு கைகள் கோர்த்து கொண்டு வந்தனர்……

 

டேய் விஹான் , அஸ்வா ரெண்டு பேரும் மேட்சிங் மேட்சிங்கா டார்க் ப்ளூ கலர்ல டிரஸ் போட்டு வந்துருக்கீங்க சூப்பரா இருக்குடா என்று பீவி அம்மா இருவருக்கும் திருஷ்டி சுற்றி போட்டார்……

 

சரி ரெண்டு பேரும் வாங்க சாப்பிட்டு கிளம்புவீங்க என்று அவர் இருவரையும் காலை உணவு சாப்பிட வைத்து விட்டு கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்……

 

விஹான் தன் உயிர் காதலியை தான் வேலை பார்க்கும் கல்லூரிக்கு அழைத்து சென்றான்……

 

விஹான் , அஸ்வதியின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, கண்களில் கூலர்ஸ் சகிதம் ஸ்டைலாக அழைத்து சென்றான்……

 

விஹான் ஒரு அழகிய பெண்ணின் கைகளை பிடித்து கொண்டு வருவதை அவன் கல்லூரியில் வேலை பார்க்கும் சக ஆசிரியர்கள் ஆச்சர்யமாக பார்த்தனர்…….

 

விஹான் ஏன் எல்லாரும் என்ன விநோதமாக பாக்குறாங்க?

 

அது வேற ஒன்னுமில்ல சிஸ்டர் என்னோட நண்பன் பொன்ன பாத்தா மண்ண பாக்குற சங்கத்தை சேந்தவன் அதான் ஒரு அழகான பொன்னோட இப்படி கை பிடிச்சிட்டு வரது எல்லாருக்கும் ஆச்சரியமா இருக்கு என்று அவர்கள் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது…….

 

குரல் வந்த திசையை அஸ்வதி திரும்பி பார்த்தாள் , விஹானின் உயரத்திற்கு ஏற்ப ஒருவன் நடந்து வந்து கொண்டு இருந்தான்……..

 

அவனை பார்த்ததும் அஸ்வதிக்கு அவனோடு நீண்ட நாட்கள் பழகிய உணர்வு…….

 

அஸ்வதியின் முகத்தை அவன் பார்த்ததும் அவனுக்கும் அவளுடன் நீண்ட நாட்கள் பழகிய உணர்வு……

 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு இருந்தார்கள்……

 

டேய் மாப்ள இவதான் என்னோட கனவு தேவதை , என்னோட உலகம் , உயிர் அஸ்வதி என்று விஹான் அவனிடம் அஸ்வதியை அறிமுகப்படுத்தி வைத்தான்………

 

அஸ்வி செல்லம் இவன்தான் என்னோட நெருங்கிய நண்பன் ஹர்ஷத் கான் என்று தன் காதலியிடம் தன் நெருங்கிய நண்பனை அறிமுகப்படுத்தி வைத்தான்……

 

சிஸ்டர் உங்கள நா எங்கயோ பாத்த ஃபீல்…….

 

அடேய் இவ என்னோட ஆளுடா உன்னோட கேவலமான வேலைய காட்டினன்னு வை வால ஓட்ட நறுக்கி விட்டுருவேன்…….

 

அட லூசு பயலே உன்னோட காதலி எனக்கு தங்கச்சி அவங்ககிட்ட நா அப்படி பேச மாட்டேன், நிஜமா எனக்கு இவங்களை எங்கயோ பாத்த ஃபீல்……

 

ஆமா விஹான் எனக்கும் இவங்க கூட  ரொம்ப நாள் பழகின  ஃபீல்………

 

அஸ்வதி அவ்வாறு கூறவும் விஹான் யோசித்து கொண்டு இருந்தான்……

 

யார் ஹர்ஷத்?

 

அஸ்வதிக்கும் இவனுக்கும் என்ன சம்மந்தம்?

 

பொறுத்திருந்து பார்ப்போம்……

 

தொடரும்…….

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……..

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்