Loading

காதல் – 43

 

                 விஹான் மற்றும் அஸ்வதி அஷ்ரமத்தில் அந்த சிறிய குழந்தைகளுடன் சந்தோஷமாக இருந்துவிட்டு வீட்டிற்கு வந்தனர்……

 

விஹான் கல்லூரிக்கு கிளம்பி விட அஸ்வதி அவன் வரும் நேரத்தை கடிகாரத்தில் பார்த்துக் கொண்டு அவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள்…….

 

விஹான் நீண்ட நாட்களுக்கு பிறகு தான் வேலை பார்க்கும் கல்லூரிக்கு சென்றான் அங்கு இருந்த அனைவரும் விஹானுக்கு புதிதாக தெரிந்தனர்……

 

விஹான் தன்னுடைய காரை பார்க் செய்துவிட்டு கல்லூரி அலுவலகத்திற்கு சென்று தனது கையொப்பத்தை இட்டு  விட்டு , ஆசிரியர்களின் அறைக்கு சென்றான்…..

 

விஹானை அங்கு பார்த்த , அவனுடன் வேலை பார்க்கும் சக ஆசிரியர்கள் அவனை வரவேற்றனர்……

 

விஹான் சார் இப்போவாவது உங்களுக்கு  காலேஜுக்கு வரணும்னு தோணுச்சே அதுவரை எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் என்று அவனுடன் வேலை பார்க்கும் அனைத்து ஆசிரியர்களும் அவனுக்கு வாழ்த்துக்கள் கூறினர்…….

 

பிறகு விஹான் அன்று தனக்கு என்னென்ன வகுப்புகள் உள்ளது என்று பார்த்துக் கொண்டிருந்தான் அப்பொழுது அவனின் கண்களை யாரோ மூடினார்……

 

விஹான்  கண்களை மூடியவரின் கைகளை தொடாமலே  அவன் கண்களை மூடியது  யார் என்று மூடியவரின் பெயரை சொன்னான்…..

 

அந்த பெயர்…..

 

ஹர்ஷத் கான்……

 

டேய் மாப்ள எப்படிடா இருக்குற? இத்தனை நாள் காலேஜ்க்கு வரணும்னு உனக்கு தோணலையா? எவ்வளவு போன் பண்ணி இருப்பேன் ஒரு போனாவது எடுத்தயாடா ராஸ்கல்?

 

டேய் மாப்ள இத்தனை மாசத்துல என் வாழ்க்கையில நிறைய நிறைய சந்தோஷமான மாற்றங்கள் வந்துருக்குடா  அந்த மாற்றம்தான் என்ன காலேஜ் வர வரவச்சிருக்கு என்று விஹான் ஹர்ஷத்தை பார்த்து சிரித்தான் …….

 

அப்படி என்ன பெரிய மாற்றம் எனக்கு தெரியாம உன்னோட வாழ்க்கையில் வந்துச்சு?

 

ஹர்ஷத் அவ்வாறு கேட்கவும் விஹான் வெட்கத்தில் சிரித்தான்…..

 

அடேய் என்னடா வெட்கம் எல்லாம் படுற?

 

அது வந்து மாப்பிள்ளை என்னோட தேவதையே நா பாத்துட்டேன்டா அவதான் என்னோட வாழ்க்கையே புதுசா மாத்தினாடா…..

 

யாருடா அந்த தேவதை?

 

அவ பேரு அஸ்வதிடா அழகான குட்டி குட்டி கண்ணு, அழகான மூக்கு, அழகான உதடு , அழகான முகம் இப்படி அவள எப்படி பார்த்தாலும் ரொம்ப அழகா இருப்பாடா…….

 

யாருடா இது புதுசா அஸ்வதி?

 

ஹர்ஷத் அவ்வாறு கேட்கவும் விஹான் அஸ்வதியை முதன் முதலில் சந்தித்தது முதல் இப்பொழுது இருவரும் ஓருடல் ஈருயிராக இருப்பது வரை தனது வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சியான மாற்றங்களை தனது நெருங்கிய நண்பனிடம் விஹான் கூறினான்….

 

ஓஹோ அதான் சாருக்கு நண்பன் எல்லாம் மறந்து போச்சு போல…..

 

அப்படி இல்ல ஹர்ஷத் அஸ்வதி கூட இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு ஒரு வருஷத்துக்கு சமம் அவ்வளவு பிடிக்கும் அவள எனக்கு அவ கூட இருந்தா உலகத்தையே நா மறந்துடுறேன்டா……..

 

சரி உன்னோட ஆளு போட்டோவ காட்டு பாப்போம்…….

 

ஃபோட்டோ வேண்டாம் ஹர்ஷத் நாளைக்கு நா அஸ்வதிய காலேஜ்க்கு கூட்டிட்டு வரேன் அப்போ நீ நேர்ல பாரு…..

 

உன்னோட ஆளு அவ்வளோ அழகா? இவ்வளோ புகழ்ந்து தள்ளுற?

 

அவ அழகு பத்தி தானே கேக்குற இதை கேளு என்று விஹான் பாட ஆரம்பித்தான்……

 

ஜன்னலின் வழி

வந்து விழுந்தது மின்னலின்

ஒளி அதில் தொிந்தது அழகு

தேவதை அதிசய முகமே

தீப்பொறி என

இரு விழிகளும் தீக்குச்சி

என எனை உரசிட

கோடிப்பூக்களாய்

மலா்ந்தது மனமே

அவள் அழகை

பாட ஒரு மொழி

இல்லையே அளந்து

பாா்க்க பல விழி

இல்லையே” ……….

 

விஹான் இவ்வாறு பாட்டு பாடவும் ஹர்ஷத் அவனை ஆச்சரியமாக பார்த்தான்……

 

என்னடா மச்சான் பாட்டு எல்லாம் பாடுற? எப்ப இருந்து இப்படி பாட்டு பாட ஆரம்பிச்ச?

 

நா எப்ப அஸ்வதிய பார்த்தேனோ அப்பலருந்து ஒரே பாட்டு தான்டா, உனக்கு ஒன்னு தெரியுமா என்னோட அஸ்வதியும் அழகாக பாட்டு பாடுவா தெரியுமா?

 

அப்பொழுது விஹானுக்கு தனது வகுப்பிற்கான மணி அடித்ததும் அவன் வகுப்பிற்கு சென்றான்……

 

அங்கு கல்லூரியில் விஹான் இவ்வாறு இருக்க…..

 

இங்கு வீட்டில் அஸ்வதி விஹானுக்காக காத்துக் கொண்டிருந்தாள்……

 

அஸ்வதி ஹாலில் அமர்ந்து கொண்டு வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்……

 

அஸ்வா கண்ணா என்று அவளை பீவி அம்மா அழைத்தார்……

 

சொல்லுங்கம்மா……

 

விஹான் ரெண்டு மணிக்கு தான் வீட்டுக்கு வருவான் இப்போ மணி பத்து தானடா ஆகுது, அதுவரை இப்படியே உக்காந்துட்டு இருப்பியா?வேற ஏதாவது வேலை இருந்தா போய் பாரு போ என்று பீவி அம்மா கூறவும் அஸ்வதி எழுந்து வெளியில் சென்று  ஜோஜோ , மோஜோவுடன் விளையாடி கொண்டு இருந்தாள் ……..

 

அஸ்வதி இங்க வா என்று விஹானா அவளை அழைத்தாள் ……

 

என்ன விஹான்னா?

 

நீ ரூமுக்குள்ள வா என்று அவள் அஸ்வதியை அழைத்து சென்றாள்…..

 

அஸ்வா உன்னோட ஷர்ட்ட கழட்டு….

 

ஏன் ?

 

அட நீ கழட்டு என்று விஹான்னா அஸ்வதியின் மேல் சட்டையை கழற்றி விட்டு அவளின் தழும்பான முதுகில் அவள் எதோ ஒரு கலவையை தடவி விட்டாள்……

 

விஹான்னா என்ன இது?

 

இந்த கலவையை உன் முதுகுல தடவுனா உன்னோட முதுகுல உள்ள தழும்பு எல்லாம் காணாமல் போய்டும்…..

 

அப்படியா?? அப்படி என்ன கலவை இது?

 

இது புளியமரத்தோட பட்டை கலவை இந்த புளியமரத்தோட பட்டைய அரச்சு, தேங்காணையோட கலந்து யூஸ் பன்னா  உன்னோட முதுகுல இருக்குற தழும்பு குறையும் அதோட தழும்பு மேல இருக்குற  அழுக்கு குறையும் அன்ட் கொஞ்சம் சம்மந்தமில்லாத வெடித்தலையிலிருந்து வர தோல்  மடிப்புகளும் குறையலாம்……..

 

இது எப்படி ரெடி பண்ண?

இது ரெடி பண்ண கஷ்டமா?

 

கஷ்டமெல்லம் ஒன்னும் இல்ல, இது ரெடி பண்றது ரொம்ப ஈசி…..

 

எப்படி ரெடி பன்னன்னு சொல்லுப்பா….

 

அஸ்வதி அவ்வாறு கேட்கவும், விஹான்னா எப்படி அந்த புளிய மரத்தின் பட்டை கலவையை தயாரித்தாள் என்று அவள் கூறினாள்…..

 

முதல்ல, புளியமரத்தின் பட்டையை சுத்தமாக கழுவி நன்றாக உலர்த்திக்கொள்ளவும். பிறகு, அந்த பட்டையை சிறிய துண்டுகளாக நறுக்கி, அந்த பசுமையான பட்டையை ஒரு மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் அரைத்துக்கொள்ளவும். அடுத்ததாக, அந்த அரைக்கப்பட்ட கலவையை ஒரு சிறிய பாத்திரத்தில் தேங்காணையுடன் கலந்து நன்றாக கலக்கவும். இதை  பாதித்த இடத்தில் மெதுவாக தேய்த்துக்கொள்ளலாம். அப்புறம், சில நேரம் அந்த கலவை தோலில் இருக்கும் வரை விட்டு வைத்துக்கொள்ளவும், பிறகு சுத்தமாக கழுவி விடவும்…….

 

இதான் இதோட செய்முறை விளக்கம் …..

 

இனிமே நானே எனக்கு சூடு பட்ட மத்த இடங்கள்ல போட்டுருவேன் என்று அஸ்வதி சிரித்தாள்…..

 

மத்த இடங்களா? இன்னும் உனக்கு நெறய இடத்துல அந்த சுலோச்சனா சூடு போட்டுருக்காளா ?

 

ஆமா விஹான்னா என்னோட வயித்துல, என்னோட இடுப்புல , இங்க பாரு கையில என்று அஸ்வதி தன்னுடைய தீக்காயங்களை விஹானாவிடம் காட்டினாள்…..

 

ஏய் அஸ்வதி என்னடி இது இப்படி இருக்கு…..

 

நானும் டெய்லி வருத்தப்படுவேன் நமக்கு ஏன் இப்படி இவ்வளவு தழும்பா இருக்குதுன்னு ஆனா இனி கவலை இல்லை இந்த புளியமரத்து பட்ட கலவையை போட்டு என்னோட தழும்பு எல்லாம் போக்கிடுவேன் என்று  அஸ்வதி சந்தோஷமாக சிரித்துக் கொண்டே கூறினாள்……

 

அஸ்வதி உன்னோட இடத்துல எல்லாம் நா இருந்தா இந்த  தீக்காயங்கள எல்லாம் தாங்கி இருப்பேனான்னு தெரியல , நீ ரொம்ப ஸ்ட்ராங்கான பொண்ணு என்று விஹானா அஸ்வதியை கட்டியணைத்துக் கொண்டாள்…….

 

சரி சரி ஐஸ் வெச்சது போதும் என்னோட முதுகுல உள்ள எல்லா தீக்காயங்கள் மேலையும் தடவி விடு என்று அஸ்வதி கூற விஹானா அஸ்வதி முதுகில் உள்ள அனைத்து தீக்காயங்களிலும் அந்த புளிய மரத்து பட்டை கலவையை தடவி விட்டாள்…..

 

அஸ்வதி ஒரு பதினஞ்சு நிமிஷம் இந்த கலவை முதுகுலயே இருக்கட்டும் , அப்புறமா குளிச்சிடு சரியா?

 

சரி விஹானா ரொம்ப தேங்க்ஸ்…..

 

அடடே என்னோட அண்ணியா வர போறவங்க நீங்க உங்களுக்கு செய்யாம வேற யாருக்கு செய்யப் போறேன் நீ இங்க உக்காந்துட்டு இரு நா வரேன் என்று விஹானா சென்று விட்டாள்…..

 

அஸ்வதி அந்த கலவை காயும் வரை அமர்ந்து கொண்டிருந்தாள்……

 

விஹான் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது வகுப்பிற்கு சென்றான் அவனது மாணவர்கள் அனைவரும் அவனை பார்த்து மிகவும் சந்தோஷமடைந்தனர் ……..

 

குட் மார்னிங் ஸ்டுடென்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க?

 

நாங்க எல்லாரும் சூப்பரா இருக்கோம் சார் நீங்க எப்படி இருக்கீங்க சார் ?என்று அனைத்து மாணவர்களும் ஒருசேர விஹானிடம் கேட்டனர்……

 

நான் இப்ப ரொம்ப சூப்பரா இருக்கேன்டா சரி எவ்ளோ போர்ஷன் முடிச்சு இருக்கீங்க?

 

சார் நீங்க விட்டுட்டு போன போர்ஷன்ல இருந்து யாருமே கிளாஸ் எடுக்கல….

 

ஏன்?

 

எல்லா சார் , மேடம்க்கும் உங்கள ஆதாரம் இல்லாம வெளிய அனுப்புனதுக்காக அந்த பிரின்சிபல் மேல கோவம் அதனால உங்க சப்ஜெக்ட்ட யாருமே எடுக்க வரல…..

 

பிரின்ஸ்பால் மேல கோவம் இருந்தா அவங்க மேல தான காட்டணும் ?  நீங்க என்ன தப்பு செஞ்சீங்க? இத்தன நாளா உங்களுக்கு கிளாஸ் எடுக்காம இருந்தா நீங்கதானடா பாவம்…..

 

விஹான் இவ்வாறு கேட்கவும் அனைத்து மாணவர்களும் அமைதியாக இருந்தனர்……

 

சரி எல்லாரும் புக் எடுங்க என்று அவன் விட்டு  சென்ற பாடத்தில் இருந்து பாடம் எடுக்க ஆரம்பித்தான்…..

 

அவனின் டீச்சிங் ஸ்டைலை பார்த்து ரசித்துக்கொண்டே அனைத்து மாணவர்களும் பாடம் கவனித்தனர்……

 

இவ்வாறு அவனின் முதல் நாள் கல்லூரி சிறப்பாக சென்றது கல்லூரி முடிந்து தன் காதலியை பார்ப்பதற்கு வேகமாக வந்தான்……

 

வீட்டுக்கு வந்ததும் தன்னுடைய ஷூக்களை கழற்றி வைத்துவிட்டு, கழுத்தில் அணிந்திருந்த டையை லூஸ் செய்து விட்டு தன் காதலியை கண்களாலே தேடிக்கொண்டு வந்தான் ஆனால் அஸ்வதி வீட்டில் உள்ள எந்த அறையிலும் இல்லை…….

 

அம்மா அம்மா…..

 

என்னடா?

 

அஸ்வதி எங்கம்மா?

 

அவ பின்னால கார்டன்ல சோஜா மோஜா கூட விளையாடிட்டு இருக்குறா என்று அவர் கூறவும் தனது தாயாரின் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்துவிட்டு தன் காதலியை தேடி கார்டனுக்கு ஓடினான்…….

 

அஸ்வதி அங்கே கார்டனில் தன்னுடைய இரு வளர்ப்பு நாய்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்…..

 

அஸ்வதியை தூரத்திலிருந்து  விஹான் ரசித்துக் கொண்டிருந்தான்…..

 

என் வீட்டில் நீ

நிற்கின்றாய் அதை

நம்பாமல் என்னை

கிள்ளிக்கொண்டேன்

தோட்டத்தில் நீ நிற்கின்றாய்

உன்னை பூவென்று எண்ணி

கொய்ய சென்றேன்”…….

 

விஹானின் மனநிலைக்கு ஏற்ப பாடலும் ஒலித்தது…….

 

விஹானை பார்த்த அஸ்வதி சந்தோஷத்தில் துள்ளி குதித்து ஓடி வந்து அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அவனை கட்டி அணைத்துக் கொண்டாள்……

 

விஹான் எப்ப வந்தீங்க?

 

இப்போதான் வந்தேன்டா செல்லமே…..

 

சரி இன்னைக்கு முதல் நாள் காலேஜ் எப்படி போச்சு?

 

இன்னைக்கு முதல் நாள் காலேஜ் ரொம்ப சூப்பரா போச்சு இதுக்கெல்லாம் காரணம் நீ தான் என்று அவன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்……

 

எதுவரை போகலாம்

என்று நீ சொல்லவேண்டும்

என்றுதான் விடாமல்

கேட்கிறேன்

தேன் முத்தங்கள்

மட்டுமே போதும் என்று

சொல்வதால் தொடாமல்

போகிறேன்”………

 

விஹான் நமக்கு ஏத்தாப்ல இந்த ஆத்தர் அழகழகா பாட்டு போடுறா ……

 

ஆமா உண்மைதான் என்று அவன் அவளை தன் நெஞ்சோடு அனைத்து கொண்டான்…….

 

உன்ன நான் ரொம்ப மிஸ் பண்ணேன்…..

 

நானும் உங்கள ரொம்ப மிஸ் பண்ண தெரியுமா?

 

அட கடவுளே……இது உங்களுக்கே ஓவரா தெரியல என்று அங்கு விஹானா வந்தாள்…..

 

என்னடி ஓவரா தெரியுது?என்னோட காதலிய அரை நாள் ஃபுல்லா நா பாக்கவே இல்ல அப்ப மிஸ் பண்ணாம என்ன பண்ணுவன் ……

 

நீங்க ரெண்டு பேரும் சேந்து அப்புறமா நீங்க மிஸ் பண்ண கதையெல்லாம் பேசிக்கோங்க இப்போ ரெண்டு பேரும் சாப்பிட வாங்க என்று விஹானா இரு காதல் ஜோடிகளையும் சாப்பிட அழைத்து சென்றாள்…….

 

விஹான் இன்னைக்கு ரொம்ப நாள் கழிச்சு காலேஜ் போயிருக்க எல்லாரும்பழைய மாதிரி உன்கிட்ட நல்லா பேசினாங்களா?

 

ஆமா அம்மா எல்லாரும் என்கிட்ட பழைய மாதிரி ஜாலியா பேசுனாங்க அதுலயும் அந்த ஹர்ஷத் என்கிட்ட நிறைய பேசுனான்ம்மா……

 

நீ சொல்றத  கேக்கும் போதே  ரொம்ப சந்தோஷமா இருக்குது , இதுக்கெல்லாம் காரணம் என்னோட மருமக அஸ்வதிதான்  என்று அவர்கள் அனைவரும் சேர்ந்து சிரித்து பேசி கொண்டே சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்……

 

அவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருப்பதை சுலோச்சனா மற்றும் அனந்தி வன்மத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்……..

 

அடுத்து நடக்க போவது என்ன???

 

பொறுத்திருந்து பார்ப்போம்……

 

தொடரும்…..

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்………….

 

💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்