Loading

காதல் – 41

 

அஸ்வதி  மற்றும் விஹான் ஆனந்தமாக தங்களின் காதல் உலகில் பயணித்து விட்டு பெரும் பண்டிகையான மிலாடி நபிக்கு தயாராகி கொண்டிருந்தனர்……

 

அஸ்வதி மற்றும்  விஹானின் ரொமான்ஸ் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும் நேரம் சரியாக அதைக் கெடுக்க எப்பொழுதும் வருவது போல விஹானாவே வந்தாள்……

 

ஹலோ ஹலோ……..                                     நானும் ரெடி ஆகணும் நீங்க ரெண்டு பேரும் வேற எங்கேயாவது போய் உங்களோட காதல் காட்சிகள வச்சுக்கோங்க முடியலப்பா……..

 

விஹான் நீங்க கிளம்புங்க , நா போய் அம்மாவுக்கு கிச்சன்ல ஹெல்ப் பண்றேன் என்று அஸ்வதி ஓட போக விஹான்  அஸ்வதியை பிடித்துக் கொண்டான்……

 

விஹான் நீங்க என்ன இன்னும் கிளம்பவே இல்லை , சீக்கிரம் ரெடி ஆகி வாங்க இப்ப நான் கிச்சனுக்கு போறேன் என்று அஸ்வதி அவனிடமிருந்து ஓட பார்த்த மீண்டும் அவன் அவளைப் பிடித்துக் கொண்டான்……

 

ஏய் என்னடி என்ன விட்டுட்டு ஓட பாக்குற??

 

அய்யோ நா உங்கள விட்டு ஓடல நான் கிச்சனுக்கு தான் போறேன்……

 

சரி வா நானும் உன் கூட கிச்சன் வரேன்…..

 

அய்யோ நீங்க பாருங்க இன்னும் தல சீவல, பவுடர் போடல ,வாட்ச் கட்டல சோ நீங்க ரெடி ஆகி வாங்க நா அதுவரை கிச்சன்ல அம்மாவுக்கு ஹெல்ப் பண்றேன்……

 

என்ன நீயே ரெடி பண்ணி விடு…..

 

நானா????

 

பின்ன நீதான என்னோட பொண்டாட்டி ஆக போறவ?  நானும் உனக்கு சாரி கட்டி விட கத்துக்கணும் என்ன?

 

என்னங்க நீங்க என்னன்னவோ பேசுகிறீங்க, நா போறேன் என்று அவள் வெக்கத்தில் ஓடி விட்டாள்…….

 

வெட்கத்தில் ஓடும் அஸ்வதியையே சிரித்தபடியே விஹான் பார்த்துக் கொண்டிருந்தான்…….

 

அப்பொழுது அவனது தங்கை விஹானா விஹானின் தோள்களில் கை போட்டபடி வந்தாள்……..

 

என் அண்ணே ரொமான்ஸ் காட்சிகள் எல்லாம் ரொம்ப பலமா போயிட்டு இருக்கு போல???

 

விஹானா எனக்கு அஸ்வதிய ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு அவள விட்டு ஒரு நிமிஷம் கூட பிரிஞ்சி இருக்க முடியல அவ்வளவு புடிச்சிருக்கு அவள அதனால இந்த மாதிரி நிறைய நிறைய ரொமான்ஸ் காட்சிகள் வரத்தான் செய்யும் நீ கண்ணையும் காதையும் மூடிட்டு போ என்று  விஹான் தன் தங்கையை பார்த்து சிரித்தான்……

 

அண்ணே நீ  இப்படி சந்தோஷமா இருந்து எவ்வளவு நாளாச்சு……….                        உன்ன இப்படி சந்தோஷமா பாக்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது நீ இப்படியே சிரிச்சிட்டே இரு  அண்ணே இன்று விஹானா தனது தமையனை கட்டி அணைத்துக் கொண்டாள்……

 

நான் யாருன்னு எனக்கு காட்டினவ அஸ்வதி, அவளால தான் இப்ப நா இவ்ளோ சந்தோஷமா இருக்குறேன் என்னோட சந்தோஷத்தோட மொத்த காரணமும் அவதான்…….

 

சரி சரி அண்ணிய பத்தி நெனச்சது போதும் சீக்கிரம் கெளம்பு என்று  விஹானா அவளது துணிகளை எடுத்துக்கொண்டு தனது தாயின் அறைக்கு சென்று விட்டாள்……

 

விஹானா சென்றதும் விஹான் கிச்சனுக்கு சென்றான் அங்கு அஸ்வதி அவனின் தாய்க்கு உதவி செய்து கொண்டிருந்தாள்…….

 

அஸ்வதி என்னோட வாட்ச் எங்கே இருக்குதுன்னு பாத்தியா?

 

உங்க டேபிள்ல தான் நேத்து வச்சீங்க உங்க டேபிளில்ல பார்த்தீங்களா?

 

அங்க பாத்துட்டேன்,  அங்க இல்ல நீ கொஞ்சம் வந்து என்னோட வாட்ச் எடுத்து தாயேன் ……..

 

சரி வாரேன் என்று அஸ்வதி விஹானின் பின்னால் சென்றாள்…..

 

இங்க பாருங்க டேபிள்ல தா நீங்க நேத்து வச்ச வாட்ச் அப்படியே இருக்குது, டேபிள்ல பாக்காம ஊரெல்லாம் தேடுனா இப்படித்தான் என்று அஸ்வதி அவனின் கைகளில்  வாட்சை கட்டி விட்டாள்…….

 

விஹான்  அஸ்வதியை இடையோடு கட்டி அணைத்துக் கொண்டு அவளின்  கழுத்தினில் முகம் புதைத்துக் கொண்டான்……

 

நீங்க எதுக்கு கூப்பிட்டீங்கன்னு இப்ப புரிஞ்சிருச்சு…….

 

புரிஞ்சா சரிதான் என்று விஹான் அஸ்வதியின் கன்னத்தில் முத்தமிட்டான்…….

 

அச்சோ போதும் நீங்க உட்காருங்க உங்கள நான் ரெடி பண்ணி விடுறேன் என்று அஸ்வதி அவனின் அடர்ந்த கேசத்தை அழகாக சீப்பை வைத்து சீவி விட்டாள் பிறகு அவனின் முகத்திற்கு சிறிது பவுடர் போட்டு விட்டாள் பிறகு அவன் எப்பொழுதும் பயன்படுத்தும் அவனின் வாசனை திரவியத்தை அவனுக்கு போட்டு விட்டாள்…..

 

என்னோட விஹான் இப்ப ரெடி ஆயிட்டாங்க வாங்க நம்ம ரெண்டு பேரும் வெளிய போலாம் என்று இருவரும் ஒன்றாக கைகள் கோர்த்தபடி வெளியில் சென்றனர்…….

 

அஸ்வதி மற்றும் விஹான் கைகளை கோர்த்துக்கொண்டு ஒன்றாக வருவதை பார்த்த சித்திக் மற்றும் பீவிக்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது…….

 

என் கண்ணே பட்டுரும் போல அவ்ளோ அழகா இருக்கீங்க நீங்க ரெண்டு பேரும் என்று பீவி இருவருக்கும் திருஷ்டி நெட்டி முறித்தார்……

 

சரி எல்லாரும் வாங்க தொழுவோம் என்று சித்திக்  கூற அனைவரும் தொழ சென்றனர்……

 

விஹான் அஸ்வதிக்கு எவ்வாறு தொழ வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தான் அது போலவே  அஸ்வதியும் தொழுதாள்……

 

பிறகு அவர்கள் அனைவரும் பிரியாணி சாப்பிட்டனர்…….

 

அம்மா நீங்க வைக்கிற பிரியாணி தான் ரொம்ப பெஸ்ட் ரொம்ப டேஸ்டா இருக்குது என்று அஸ்வதி பீவி வைத்த பிரியாணியை ரசித்து ரசித்து சாப்பிட்டு கொண்டு இருந்தாள்…..

 

ஆமா  அம்மா அப்பவே கேட்கணும்னு நினைச்சேன்  தேவராஜ் அங்கிள் அண்ட் ஃபேமிலி எங்க?

 

இன்னைக்கு பெருநாளா இருக்குது இன்னைக்குன்னு பாத்து அந்த சுலோச்சனா நம்ம  அஸ்வதிய எதுவும் பண்ணிட கூடாது அப்படின்னு அவங்க எல்லாரையும் தேவா அண்ணே வெளிய கூட்டிட்டு போய்ட்டாங்க……

 

பீவி அவ்வாறு கூறவும் அஸ்வதி ஒரு நிமிடம் யோசித்து விட்டு மீண்டும் சாப்பிட ஆரம்பித்தாள்…….

 

அஸ்வதி நீ தேவா அண்ணே பத்தி கேக்க மாட்டியா?

 

அம்மா நா இத்தன வருஷமா அவங்க பண்ண கொடுமை எல்லாம் தேவா அப்பாவுக்காக தான் பொறுத்துட்டு இருந்தேன் ஆனா இப்போ அவங்க ரெண்டு பேரும் என்ன கொல்லவே பார்த்துருக்குறாங்க ஆனாலும் தேவா அப்பா ஒண்ணுமே சொல்லல எனக்கு தேவா அப்பா மேல வெறுப்பா இருக்குதும்மா…….

 

உன்ன கொல்ல பார்த்தாங்களா ?எப்ப நடந்துச்சு இது? என்று சித்திக் கேட்கவும் அப்பொழுதுதான் அவசரப்பட்டு வாய் விட்டு விட்டோம் என்று அஸ்வதிக்கு புரிந்தது…….

 

அது ஒன்னும் இல்லப்பா அஸ்வதி சும்மா விளையாட்டுக்கு சொல்றா……

 

விஹான்னா நீ சும்மா இரு, அஸ்வதி நீ சொல்லுமா சுலோச்சனாவும் அனந்தியும் உன்ன கொல்ல பாத்தாங்களா ??

 

சித்திக் இவ்வாறு கேட்கவும் இனி உண்மையை மறைக்க முடியாது என்று அஸ்வதி அன்று திரிவேணி சங்கமத்தில் தன்னை சுலோச்சனாவும் அனந்தியும் கொல்ல முயற்சி செய்ததை அவரிடம் கூறிவிட்டாள்……

 

ராஸ்கல் அவங்க ரெண்டு பேரும் பொம்பளைங்களா?ஒரு பொண்ண கேவலம் சொத்துக்காக கொல்ல பாத்துருக்காங்களே என்று சித்திக் அஸ்வதியை நினைத்து வருத்தப்பட்டார்……

 

அப்பா அதெல்லாம் முடிஞ்சு போன கதை இப்போ அதை பத்தி பேசாதீங்க , இன்னைக்கு ரொம்ப நல்ல நாள் சோ எல்லாரும் சந்தோஷமா இருப்போம் என்று விஹான்னா கூறினாள்……

 

விஹான்னா சொல்றதுதான் சரி எல்லாரும் சந்தோஷமா இருப்போம் …..

 

அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு ஹாலில் அமர்ந்து ஆனந்தமாக பேசிக் கொண்டிருந்தனர்…….

 

அஸ்வதி  நீ வளந்து பெரிய வயசான பிறகு நீ வளர்ந்த ஆசிரமத்திற்கு எப்பவாது போய் இருக்கியா?

 

இல்லப்பா நா சின்ன வயசுலயே ஆஷ்ரமரத்திலிருந்து வெளியே வந்துட்டேன், நான் தேவா அப்பா கூட ஆசிரமத்தில் இருந்து வந்த போது எனக்கு வயசு அஞ்சு அதனால அப்போ எனக்கு ஆசிரமம் எங்க இருக்குன்னு கூட தெரியாது , நா பெரிய வயசான பிறகு நா வளந்த ஆசிரமத்தை நிறைய இடத்தில தேடுனேன் , ஆக்னஸ் சிஸ்டர் அண்ட் மரியா சிஸ்டர் பேர சொல்லி நெறய இடத்துல தேடினேன் ஆனா எங்கேயும் அவங்க கிடைக்கல……

 

அஸ்வதி உன்ன நா ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன் வரியா?

 

எங்கப்பா போறோம்???

 

உன்னோட  விஹானும் நம்ம கூட வரான் அதனால இப்போ எங்க போறோம் என்று கேட்காம வருவியா?

 

வரேன் அப்பா…..

 

இவன் பேரை சொன்ன உடனே தான் அஸ்வதி வரேன்னு சொல்றா அப்படி என்னடா அஸ்வதிய பண்ணுன?நீ சொன்னா என்ன வேனாலும் செய்யுறா?

 

அப்பா அஸ்வதி என்னோட உயிர் காதலி அதனால அவளுக்கு அம்மா அப்பா எல்லாம் நாதான் அதனால நா சொன்னத அவ செய்வா , அதே மாதிரி அவ சொல்றதையும் நான் செய்வேன்……

 

இதுவல்லவோ உண்மையான காதல், சரி சரி எல்லாரும் கிளம்புங்க நம்ப எல்லாரும் அந்த இடத்துக்கு போவோம் என்று சித்திக் அவர்கள் அனைவரையும் ஒரு இடத்துக்கு அழைத்து சென்றார்……

 

சித்திக்,  அஸ்வதி மற்றும் அவரின் குடும்பத்தை ஒரு ஆஷ்ரமத்திற்கு அழைத்து சென்றார்…….

 

அப்பா இந்த ஆசிரமத்துல யாரு இருக்கா ?நம்ம எதுக்கு இங்க வந்து இருக்கிறோம்?

 

பொறுடா அஸ்வதி உனக்கு நா ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கிறேன் என்று அவர் அவளின் கண்களை விஹானை மூட சொன்னார் , விஹானும் தன் இரு கைகளால் அஸ்வதியின் கண்களை மூடினான் ……….

 

அஸ்வதி கண்ணா எப்படி இருக்குற?என்று ஒரு பரிச்சயமான குரல் கேட்டது விஹான் அஸ்வதியின் கண்களில் இருந்து கையை எடுத்தான்……

 

அவள் எதிரில் ஆக்னஸ் சிஸ்டர் மற்றும் மரியா சிஸ்டர் நின்று அவளை பார்த்து சிரித்து கொண்டு இருந்தார்கள்…….

 

ஆக்னஸ் சிஸ்டர்,  மரியா சிஸ்டர் நீங்களா? என்று அவள் அவர்கள் இருவரையும் பார்த்து அழுது கொண்டே கட்டி அணைத்து கொண்டாள்……

 

சிஸ்டர் இவ்ளோ நாளா உங்கள ரெண்டு பேரையும் , நம்ம ஆஷ்ரமத்தையும் நா தேடாத நாளே இல்ல தெரியுமா…. உங்கள எங்கெல்லாம் தேடினேன் ஆனா எங்கேயுமே நீங்க கிடைக்கல என்று அஸ்வதி அவர்கள் இருவரையும் கட்டி அணைத்துக் கொண்டு அழுது கொண்டே இருந்தாள்……

 

அழுகாதடா அஸ்வதி , முதல்ல கண்ண தொடை என்று அந்த சிஸ்டர்கள் அஸ்வதியிடம் பாசமாக பேசிக் கொண்டிருந்தனர்……

 

சிஸ்டர் இவ்ளோ நாளா நீங்க என்ன தேடவே இல்லையா?

 

நாங்க  உன்ன தத்து கொடுத்த இடத்துல ரொம்ப சந்தோஷமா இருப்பேன்னு நினைச்சிட்டு இருந்தோம் ஆனா நேத்துக்கு முந்தின நாள் உன்ன பத்தி சித்திக் சார் சொன்ன பிறகுதான் எங்களுக்கு எல்லாம் தெரிய வந்தது , அதான் உன்ன பாக்க சித்திக் சார் எங்க ரெண்டு பேரையும் இங்க வர வச்சாங்க…..

 

சிந்திக்கப்பா ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் என்று அஸ்வதி சிந்திக்கின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதாள்……

 

எனக்கு தேங்க்ஸ் சொன்னது போதும் போய் உன்னோட சிஸ்டர் கிட்ட பேசு போ என்று சித்திக் கூறினார்…..

 

அஸ்வதி சந்தோஷமாக அந்த இரு சிஸ்டர்களிடமும் பேசி கொண்டு இருந்தாள்…….

 

அவள் அவ்வாறு சந்தோஷமாக பேசுவதை விஹான் மற்றும் அவனின் குடும்பத்தினர் சந்தோஷமாக பார்த்து கொண்டு இருந்தார்கள்…….

 

தொடரும்……

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்………….

 

💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்