
காதல் – 38
அஸ்வதி மற்றும் விஹான் சந்தோஷமாக தங்கள் காதல் உலகில் பயணித்துவிட்டு விஹானின் வீட்டிற்கு வந்தனர் , அங்கு சுலோச்சனா மற்றும் அனந்தி அஸ்வதியை பார்த்து கேவலமாக பேசவும் , விஹான் கோபத்தில் சுலோச்சனாவின் கழுத்தைப் பிடித்து நெறித்து விட்டான்…..
அவன் சுலோச்சனாவிடம் மிகவும் கோபமாக பேசிக் கொண்டிருந்தான் விஹானை சுலோச்சனாவிடமிருந்து பிரித்து தங்களது அறைக்கு அழைத்து சென்று அவனிடம் காதலாக அஸ்வதி பேச……
அதை அனந்தி கோபமாக பார்த்து கொண்டு இருந்தாள்…….
அனந்தி தங்களின் அறைக்கு முன்பு நிற்பதை அஸ்வதி பார்த்து விட்டாள் அஸ்வதி பார்க்கும் திசையை விஹான் பார்த்தான்……..
பிறகு விஹான் எழுந்து போய் அனந்தியின் முகத்தில் அடித்தார் போல கதவை படாரென்று சாத்தினான்…….
அஸ்வதி கிளம்பும்மா உன்ன நா ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன் என்று விஹான் கூறவும் அஸ்வதி விஹானின் கைகளைப் பிடித்துக் கொண்டே வாங்க போலாம் என்று சிரித்து கொண்டே கூறினாள்……
விஹான் அஸ்வதியை அழைத்து கொண்டு சென்றான்……
அவர்கள் இருவரும் இணைந்து ஒன்றாக சந்தோஷமாக செல்வதை சுலோச்சனா மற்றும் அனந்தி வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தனர்……..
அஸ்வதி விஹான் இருவரையும் அவர்கள் பார்த்து முறைப்பதை அவர்கள் கண்டுக்கொண்டதாக தெரியவில்லை இருவரும் சித்திக், பீவி மற்றும் விஹான்னாவிடம் கூறி விட்டு வெளியில் சென்றனர்……
அஸ்வதி இப்ப சொல்லு நம்ம ரெண்டு பேரும் கார்ல போவோமா பைக்ல போவோமா???
பைக்லயே போலாம்…..
நானும் அதான் நினைச்சேன் , சரி உனக்கு கியர் வச்ச பைக் ஓட்ட தெரியுமா?
எனக்கு சைக்கிள் கூட ஓட்ட தெரியாது நீங்க என்னன்னா பைக் ஓட்ட தெரியுமான்னு கேட்கிறீங்க…….
உனக்கு சைக்கிள் கூட ஓட்ட தெரியாதா?
தெரியாதே…. எனக்கு யாரும் சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுக்கல , நானும் கத்துக்கல…..
சரி இப்ப நீ முன்னால உட்காரு உனக்கு பைக் ஓட்ட நா சொல்லி தரேன்……
இல்ல விஹான் எனக்கு பயமா இருக்கு………
என் மேல உனக்கு நம்பிக்கை இல்லயா?
எனக்கு உங்க மேல நிறைய நம்பிக்கை இருக்குது , ஆனா நீங்க என் மேல நம்பிக்கை வச்சி பைக் கொடுத்து அத நா எங்கேயாவது விட்டு உங்களுக்கு எதுவும் அடிபட்டுருச்சுன்னா என்னால தாங்கிக்க முடியாது அதனால நீங்களே வண்டி ஓட்டுங்க…….
அதெல்லாம் இல்ல இன்னைக்கு நா உனக்கு பைக் ஓட்ட கத்து தர போறேன் அவ்வளோதான் என்று விஹான் அஸ்வதியை தூக்கி பைக் முன்னால் அமர வைத்துவிட்டு அவள் பின்னால் விஹான் அமர்ந்து கொண்டான்…..
அஸ்வதி இந்த பைக் என்னோட முதல் சம்பளத்துல நானே எனக்காக ஆசையா வாங்குனது இதுல முதல் முறையா என்ன தவிர நீதான் ஓட்டுற……
ஆமா இது என்ன பைக்? இவளோ உயரமா இருக்கு……
இது பல்சர் 125 , 124cc மணிக்கு ஐம்பதுல இருந்து ஐம்பதஞ்சு வர மைலேஜ் குடுக்கும்…….
சூப்பர் விஹான், இப்போ எப்படி பைக்க ஸ்டார்ட் பண்ண?
விஹான் அஸ்வதியின் கைகளைப் பிடித்து சாவியை பைக்கில் பொருத்தி அவளின் இடது கைகளை கிளட்சில் பிடிக்க வைத்து வலது கையை செல்ஃப் ஸ்டார்ட் அழுத்தி பைக்கை ஆன் செய்தான்…….
அஸ்வதி இப்போ உன்னோட இடது கால் கீழ இருக்குற இந்த கியர லைட்டா அழுத்தி மிதி அப்புறம் இந்த இடது கையில உள்ள கிளாட்ச மெதுவா விடு அப்படியே ரைட் ஹான்ட்ல இருக்குற அக்சிலேட்டர மெதுவா திருக்கு……
அவன் கூறியதைப் போலவே அஸ்வதி செய்தாள் அப்பொழுது பைக் மெதுவாக நகர்ந்தது…….
விஹான் பைக் நகருது பயமா இருக்கு……
அவ்வளவு தான் அஸ்வதி பைக் ஸ்டார்ட் ஆயிடுச்சு இப்போ ஆக்சிலேட்டர் மட்டும் மெது மெதுவாக கொடுத்துட்டே வா , எப்போ உனக்கு ஸ்பீட் இன்க்ரீஸ் பண்ணனும்னா கியர ரெண்டு தடவ அழுத்துனனா பைக் வேகமாக போகும் இப்படியே அஞ்சு தடவ கியர் நீ போடலாம் அஞ்சாவது கியர் நீ போடும் போது பைக் பறக்கும் நா சொல்றது புரிஞ்சதா……..
ரொம்ப நல்லாவே புரிஞ்சது என்று அவன் சொல்லிக் கொடுத்தது போலவே அழகாக அஸ்வதி பைக் ஓட்டினாள்……
விஹான் அஸ்வதி பைக் ஓட்டும் அழகை ரசித்தப்படியே அவளின் இடையை அணைத்துக் கொண்டே அவளின் தோள்களில் முகம் புதைத்து கொண்டு வந்தான்……..
விஹான் இப்போ எப்படி எந்த வழியில போனும்?
நேரா போய் லெப்ட் திரும்பி தென் நேரா ஒரு ரோட் வரும் அதுலயே போ ……
அவன் கூறிய வழியில் அவள் பைக்கை ஓட்டி கொண்டு சென்றாள் அவர்கள் இருவரும் ஒரு மார்கெட்டின் முன்பு போய் நின்றனர்…….
இங்க நம்ம எதுக்கு வந்திருக்குறோம்?
ஷாப்பிங் பண்ண…..
யாருக்கு ஷாப்பிங் பண்ண?
என்னோட வருங்கால பொண்டாட்டிக்கு….
எனக்கா?
பின்ன வேற யாருக்கு நா செலவு பண்ண போறேன்? நீதானடி என்னோட உலகம் வா உனக்கு என்ன என்ன வேனும்ன்னு சொல்லு நா உனக்கு வாங்கி தாரேன் என்று அவன் அவளின் தோள்களில் கை போட்டவாறு பேசிக்கொண்டே அந்த பரபரப்பான மார்கெட்டிற்கு அழைத்து சென்றான்…..
விஹான் அதான் எனக்கு நீங்க அவ்வளவு வாங்கி வச்சிருக்கீங்களே இன்னும் என்ன புதுசா வாங்குறதுக்கு இருக்கு?
உனக்கு நான் வாங்கி வச்சிக்கிற பொருள் எல்லாம் ரொம்ப கம்மி உனக்கு இன்னும் நிறைய வாங்கி தரணும் சரி வா உனக்கு நான் காஷ்மீர்ல ஃபேமஸான ஸ்வெட்டர் வாங்கி தரேன் என்று அவன் தன் காதலிக்கு அவளின் சிறந்த முகத்திற்கு சிறந்த ஸ்வெட்டரை வாங்கிக் கொடுத்தான்……
விஹான் நீங்களும் இதே கலர்ல ஸ்வட்டர் வாங்கிக்கோங்க நம்ம ரெண்டு பேரும் மேட்சிங் மேட்சிங்கா போடலாம்……
ஓஹோ கப்புள் கோல்ஸ் என்ன ?
ஆமா என்று இருவரும் ஒரே கலரில் ஒரே டிசைனில் ஸ்வெட்டர் வாங்கினர் பிறகு இருவரும் காஷ்மீரின் மிகவும் பிரசித்தி பெற்ற மார்க்கெட்டானா புல்வார்ட் ரோட்டில் உள்ள சவுக் மார்கெட்டிற்கு சென்றனர்……
இந்த சாலை தால் ஏரியின் அழகிய கரையோரமாக அமைந்துள்ள மார்க்கெட்…..
ஒருபுறம் ஏரியின் காட்சியும், மறுபுறம் கடைகள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களும் உள்ளன……
இங்கு பலவிதமான பொருட்கள் விற்கப்படுகின்றன. அவற்றில் பாரம்பரிய காஷ்மீரி கைவினைப் பொருட்கள், பஷ்மினா சால்வைகள், உலர் பழங்கள் மற்றும் குங்குமப்பூ, நினைவுப் பரிசுகள், ஆபரணங்கள் மற்றும் உடைகள் என அந்த இடமே எப்பொழுதும் ஆட்கள் நடமாட்டமாகவே இருக்கும்……
அஸ்வதி மற்றும் விஹான் சென்ற நேரம் மாலை நேரம் ஆதலால் அந்த இடமே தங்க நிறத்தில் ஜொலித்தது …….
அஸ்வி சாயங்காலம் நேரங்கள்ல உன்னோட தோள்ல இப்படி கை போட்டுட்டு இங்க நடக்கறது ஒரு இனிமையான அனுபவம்டா செல்லம்…. குளிர்ந்த காத்து, ஏரியோட விஷுவல்ஸ் அண்ட் கலர் கலரா ஷிகாராக்கள் (பாரம்பரிய படகுகள்) இந்த இடத்தயே ரம்மியமாக்குது.
ஷிகாராவா ?
அப்டின்னா?
ஆமா இங்க ப்ஃலோடிங் மார்க்கெட் இருக்குது ,அங்க குட்டி குட்டி ட்ரெடிஷனல் படகுல காய்கறி , பழம் , நெறய திங்ஸ் எல்லாம் சேல் பண்ணுவாங்க அந்த படகு பேர் தான் ஷிகாராஸ்…….
தன்னிக்குள்ள சேல் பண்ணுவாங்களா?
ஆமாடா அஸ்வி தன்னிக்குள்ள சேல் பண்ணுவாங்க , வா உன்ன அங்க கூட்டிட்டு போறேன் என்று அவன் அவளை அங்கு அழைத்து சென்றான்…..
அந்த இடத்தில் நிறைய படகுகளில் விற்பனை செய்து கொண்டு இருந்தார்கள்…….
அப்பொழுது அவர்கள் இருவரும் சென்று கொண்டிருந்தத படகு அருகில் ஒரு விற்பனை செய்யும் படகு வந்தது அதில் மினியேச்சர் ஷிகாராக்கள் விற்று கொண்டு இருந்தார்கள்…..
அதை பார்த்த விஹான் அஸ்வதிக்கு அந்த மினியேச்சர் ஷிகாராக்களை வாங்கி கொடுத்தான் அந்த மினியேச்சர் ஷிகாராக்கள் தால் ஏரியின் அடையாளமான ஷிகாரா படகுகளின் சிறிய மர மாதிரிகள், அவை கையால் வண்ணம் தீட்டப்பட்ட அலங்காரப் வீட்டு அலங்கார பொருட்கள் ஆகும்……
விஹான் இந்த குட்டி போட் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு என்று அவள் அவன் வாங்கி கொடுத்த சிறிய ஷிகாராவை பார்த்து ரசித்து கொண்டு வந்தாள்……
அடுத்து அவர்களின் படகு அருகில் பேப்பர் மாஷ் கலையில் செய்யப்பட்ட வண்ணமயமான பேனா வைத்திருக்கும் பெட்டிகள் , நகை பெட்டிகள் மற்றும் சிறிய அலங்கார உருவங்கள் விற்கும் படகு வந்தது…..
அந்த படகில் அவர் வைத்திருந்த பேனா வைக்கும் பெட்டிகள் , நகை பெட்டிகள் , சிறிய அலங்கார உருவம் என அவர் விற்று கொண்டு இருந்தவற்றில் அனைத்தும் தன் காதலிக்கு பார்த்து பார்த்து விஹான் வாங்கி கொடுத்தான் ……
பிறகு அவர்களின் படகு அருகில் ஃப்ரிட்ஜில் ஒட்டும் காந்தங்கள் விற்கும் படகு வந்தது……
காஷ்மீரின் வரைபடம் மற்றும் இயற்கை அழகைச் சித்தரிக்கும் மரத்தினால் ஆன காந்தங்கள் நிறைய இருந்தது …..
அஸ்வதிக்கு விஹான் அணைத்து டிசைன்களிலும் நிறைய நிறைய வாங்கி கொடுத்தான்….
பிறகு அவர்களின் படகு அருகில் சிவப்பு தங்கம்’ என்று அழைக்கப்படும் உயர்தரமான காஷ்மீரி குங்குமப்பூ விற்கும் படகு வந்தது……
அஸ்வி….. காஷ்மீர்ல விக்குற குங்குமப்பூ ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் , இத நீ பீரியட்ஸ் டைம்ல சுடு தன்னில போட்டு குடிச்சா வயிறு வலி காணாம போயிடும் அண்ட் இந்த குங்குமப்பூவ ஃபேஸ்ல உள்ள டார்க் ஸ்பார்ட்ஸ் , பிம்பிள் அண்ட் தழும்பு எல்லாம் குறைக்க ஃபேஸ் பேக் மாதிரியும் யூஸ் பண்ணலாம் என்று அவன் அவளுக்கு நிறைய குங்குமப்பூவை வாங்கி கொடுத்தான்…..
விஹான் போதும் போதும் என்ன நீங்க விட்டா மொத்த மார்க்கெட்டயே வாங்கிருவீங்க போல??
என்னால வாங்கி தர முடியும் தங்கமே உனக்கு வேணும்னா சொல்லு நா வாங்கி தரேன் உனக்காக…….
அய்யோ அதெல்லாம் வேண்டாம்பா நம்ம அப்படியே கொஞ்ச நேரம் இந்த லேக்ல போட்டிங் போலாம் இந்த ஈவினிங் டைம் ரொம்ப நல்லா இருக்குது……..
இன்னும் உனக்கு மூனே மூனு பொருள் மட்டும் வாங்கல அதையும் வாங்கிட்டு நம்ம ரெண்டு பேரும் போட்டிங் போகலாம்……
இன்னும் மூனா அது என்ன?
கஷ்மீரி கவா டீ பவுடர், டிரை ப்ரூட்ஸ், வால்நட் வுட் கிரேவிங்ஸ்ல செஞ்ச ஜுவல்லரி பாக்ஸ் இது மட்டும் இங்க உனக்கு வாங்கி தரேன் அப்புறம் மீனா பஜார் போய் உனக்கு பஷ்மினா ஷால், போர்வை, ட்ரெடிஷனலான ஆரி அண்ட் சோஸ்னி டிரஸஸ் வாங்கி தாரேன் …….
விஹான் நம்ம இன்னைக்கு ரொம்ப செலவு பண்றோம் , போதும்பா……..
அஸ்வதி நாளைக்கு மறு நாள்லருந்து நா காலேஜ்க்கு போகணும் உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது அதனால உனக்கு இப்பவே நிறைய வாங்கி தரணும்னு நினைக்கிறேன் திடீர்னு இந்த பணி எல்லாம் சரியாயிடுச்சுன்னா நீ ஊருக்கு கிளம்பிருவ அப்புறம் என்னால உன்ன கொஞ்ச நாளுக்கு பாக்கவே முடியாது அதனாலதான் உன் கூட எவ்வளவு நேரம் இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் உன் கூடவே இருக்குறேன் , உனக்கு தேவையானத பார்த்து பார்த்து வாங்கிட்டு இருக்கிறேன்……
அவனின் அந்த பதிலில் அஸ்வதிக்கு தன் காதலனை எண்ணி சந்தோஷம் அவள் கண்களில் மின்னியது…….
காதல் பொழுதுகள் முடியும் நேரம் வர போகிறது……
அடுத்து நடக்க போவது என்ன???
பொறுத்திருந்து பார்ப்போம்…..
தொடரும்……
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்………
💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

