
காதல் – 33
அஸ்வதி மற்றும் விஹான் தங்களின் காதல் வானெங்கும் மின்னும் அளவிற்கு வானில் பறந்தபடியே காதல் செய்து விட்டு கீழே வந்த போது கேட்ட அதிர்ச்சி தரும் செய்தியை கேட்டு அழும் அஸ்வதி, அவளை சமாதானம் செய்யும் விஹான்……
விஹான் இது என்ன? பிரெட் மாதிரி இருக்கு , ஆனா பிரெட் மாதிரியும் இல்ல…..
1) இதுக்கு பேரு சிடு (Sidu) இது காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசத்துல உள்ள ட்ரெடிஷனல் டிஷ், குறிப்பா ஷிம்லால இது ஒரு முக்கிய அடிப்படை சாப்பாடு ,
சிடு அப்டின்னா கோதுமை மாவ ரெடி பண்ணி ,உருட்டி, தேச்சி, நொறுக்கின கருப்பு பருப்பு, மசாலாப் பொருட்கள் அண்ட் நெய் கலந்த கலவையை உள்ள வச்சி ஆவியில வேகவைக்கிற ரொட்டி .
இது பொதுவா நெய் இல்லன்னா உள்ளூர் (தேசி) நெயோட சேத்து சாப்பிடுவாங்க ,இது ஒரு நல்ல மார்னிங் பிரேக் பாஸ்ட்……
நீங்க சொல்லும்போதே அவளோ சூப்பரா இருக்கு சாப்பிட்டா ரொம்ப நல்லா இருக்கும் போல சீக்கிரம் செஞ்சு குடுங்க என்று அவள் அவனின் முதுகில் சாய்ந்து கொண்டு அவன் செய்வதை பாத்து கொண்டு இருந்தாள்……..
விஹான் தன் காதலிக்காக தயார் செய்த உணவுகளின் விவரம்……
2) நமது பட்டியலில் இரண்டாவதாக மாட்ரா (Madra) உள்ளது. இது ஷிம்லாவில் பிரபலமான உணவாகவும், ஹிமாச்சலப் பிரதேசத்தின் செழுமையான பண்பாட்டு பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாகவும் இருக்கிறது.
ஊறவைத்து வேகவைத்த கொண்டைக்கடலை (கபுலி சன்னா), தயிர், மற்றும் மணம் மிக்க மசாலாப் பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் மாட்ரா, கிரீமியானதும் சுவைமிக்கதுமான கறி ஆகும்.
இது பொதுவாக சாதம் அல்லது ரோட்டியுடன் பரிமாறப்படுகிறது……
3) அடுத்து சா கோஷ்ட் (Chha Gosht) இந்த ஹிமாச்சலி சிறப்பு உணவு, மசாலா, தயிர் மற்றும் நெய் சேர்த்து ஊறவைக்கப்பட்ட ஆட்டிறைச்சியை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
இந்த உணவு மெதுவாக சமைக்கும் முறையில் தயாரிக்கப்படுவதால், இறைச்சி மிகவும் மென்மையாகவும் சுவைமிக்கதாகவும் மாறுகிறது. இதன் விளைவாக, மீண்டும் மீண்டும் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் அளவிற்கு வாய் நீரூறும் சுவையுடைய ஒரு உணவாக சா கோஷ்ட் அமைகிறது….
4) அடுத்து துட்கியா பாத் (Tudkiya Bhath) துட்கியா பாத் என்பது ஹிமாச்சலப் பிரதேசத்தின் பாரம்பரிய அரிசி உணவாகும். அரிசி மற்றும் பருப்புகளின் நன்மைகளுடன், மணம் மிக்க மசாலாப் பொருட்கள் சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது. உருளைக்கிழங்கு, பட்டாணி, கேரட் போன்ற உள்ளூர் காய்கறிகள், அதிகளவு நெய் மற்றும் மசாலாப் பொருட்களுடன் இந்த உணவு சமைக்கப்படுகிறது.
இதன் விளைவாக, ஒவ்வொரு கவளத்திலும் சுவையின் வெடிப்பை தரும் மனம் நிறைந்த, திருப்தி தரும் ஒரே பாத்திர உணவாக இது அமைகிறது…..
5) அடுத்து பாப்ரு (babruu) என்பது ஷிம்லாவில் மிகவும் பிரபலமான, விரைவாக சாப்பிட ஏற்ற டீப் ஃப்ரை செய்யப்பட்ட சிற்றுண்டி ஆகும். கோதுமை மாவால் செய்யப்பட்ட மாவுக்குள், ஊறவைத்து அரைத்த கருப்பு பருப்பு, மசாலா மற்றும் மூலிகைகள் கலந்த கலவையை வைத்து, பொன்னிறமாகும் வரை எண்ணெயில் பொரித்து தயாரிக்கப்படுகிறது.
பொதுவாக இது புளிப்பான புளிச்சட்னி அல்லது புதினா சட்னியுடன் பரிமாறப்படுகிறது; இது அதன் காரச்சுவைக்கு புளிப்பு மற்றும் புத்துணர்ச்சி சேர்க்கிறது.
பாப்ருவை ஒரு வழியோர சிற்றுண்டியாக அல்லது முழு உணவின் ஒரு பகுதியாகவும் ரசித்து சாப்பிடலாம்.
6) அடுத்து அக்டோரி (Aktori) என்பது ஹிமாச்சலியின் தனித்துவமான பான்கேக் வகை உணவாகும்; இது ஷிம்லாவின் சிறப்பு உணவாகவும் கருதப்படுகிறது. உருளைக்கிழங்கை துருவி, அதனுடன் கோதுமை மாவு, மசாலா மற்றும் நெய் சேர்த்து மாவு தயாரிக்கப்படுகிறது.
இந்த மாவை சூடான தவாவில் பரப்பி, மொறு மொறுப்பாக சுடப்படுகின்றது. உள்ளூர் மக்கள் இதை சட்னி அல்லது தயிருடன் சாப்பிட விரும்புகின்றனர். இது ஒரு சுவையான சிற்றுண்டி அல்லது காலை உணவாக அமைகிறது…
7) அடுத்து சேபு வாடி(Sebu vaadi) என்பது ஷிம்லாவின் பாரம்பரிய உணவாகும் இது அந்த பகுதியின் பலவகை சுவைகளை வெளிப்படுத்துகிறது. அரைத்த பருப்பு, கீரை (பசலைக் கீரை போன்றது) மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்த்து செய்யப்பட்ட பருப்பு உருண்டைகள், புளிப்பான கறியில் சமைக்கப்படுகின்றன.
மென்மையான உருண்டைகளும் சுவைமிக்க கறியும் சேர்ந்து, சுவை மற்றும் அமைப்பின் அழகான கலவையை உருவாக்குகின்றன மீண்டும் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் அளவிற்கு ருசியாக இருக்கும்.
தயிர் அல்லது சட்னியுடன் பரிமாறப்படும் இந்த உணவு, உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் விரும்பும் ஒன்றாகும்…..
8) இறுதியாக, குச்சி புலாவ்(kuchi pulov) என்பது ஷிம்லாவின் சுவை செழுமையை வெளிப்படுத்தும் ஒரு உயர்தர சிறப்பு உணவாகும்.
குச்சி என்பது மோரல் காளான் (Morel Mushrooms) என்பதைக் குறிக்கும் இதற்கு மண்ணின் மணமும், முந்திரி போன்ற சுவையும் உண்டு. இந்த காளான்களை மணமிக்க பாஸ்மதி அரிசி, மசாலாப் பொருட்கள் மற்றும் நெய் சேர்த்து சமைக்கின்றனர்……
இப்படி எட்டு உணவு வகைகளையும் விஹான் தனியாக சமைத்து முடித்து விட்டான்…..
அஸ்வதியை டைனிங் டேபிளில் அமர வைத்து அவளுக்கு அவன் செய்த உணவு பதார்த்தங்களை ஒவ்வொன்றாக பரிமாறினான்……
விஹான் செய்த அனைத்து உணவுகளும் அத்ததுனை ருசியாக இருந்தது…….
இருவரும் மாறி மாறி ஊட்டி விட்டு கொண்டு சாப்பிட்டார்கள்……
பிறகு இருவரும் சாப்பிட்டு முடித்து விட்டு ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்…….
விஹான் நா உங்களோட மடியில கொஞ்ச நேரம் படுத்துக்கட்டுமா? நா இதுவரை என்னோட அம்மா மடியில படுத்தது இல்ல என்று அவள் கேட்கவும் அவன் அவளை தன் மடியில் படுக்க வைத்து விட்டு அவளின் தலை முடியை கோதி விட்டான்……
அந்த சுகத்தில் அஸ்வதி நன்றாக உறங்கி விட்டாள்…….
விஹான் தூங்கும் தன்னவளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்……
நீண்ட , அடர்ந்த கூந்தலை பின்னி போட்டிருந்தாள் அது பார்க்க நீண்ட கருமையான கருநாக பாம்பு போல இருந்தது…….
அழகிய கறை இல்லா நிலவு போல பிறை நெற்றி……
இரண்டு வில்லில் இருந்து அம்பு எய்ய தயார் நிலையில் உள்ளது போல உள்ள அவளின் அழகிய இரு புருவங்கள்….
பவளக்கல்லை வெட்டி இரு துளையிட்டது போல கூரிய நாசி …..
இரு ஆரஞ்சு சுளைகளை ரோஜா நிறத்திற்கு மாற்றி ஒன்றோடு ஒன்றாக பொருந்தியது போன்ற உதடுகள்…….
எப்பொழுதும் ஆடிக்கொண்டே இருக்கும் அவளின் காதில் அணிந்திருந்த ஜிமிக்கியும் அவன் மடியில் சமத்தாக உறங்கி கொண்டு இருந்தது…….
அவள் உலகத்தை மறந்து தன் மன்னவன் மடியில் படுத்து உறங்கி கொண்டு இருக்கிறாள் ஆனால் இவனுக்கு அவனின் உலகமே அவன் மடியில் உறங்கும் உணர்வு……
அப்பொழுது திடீரென்று அஸ்வதியின் முகம் மாற , அவளின் கைகள் கால்கள் இரண்டும் நடுங்க ஆரம்பித்தன……
அம்மா ….
அம்மா….
அம்மா…
போதும்…
என்னோட விஹான் பாவம் ….
விஹான விட்டுருங்க பிளீஸ்….
என்று அஸ்வதி ஏதோ கெட்ட கனவு கண்டு அதிர்ச்சியிலும் , பயத்திலும் பிதற்றிக் கொண்டிருந்தாள் இதை பார்த்த விஹான்…..
ஒண்ணுமில்லம்மா…..
ஒன்னும் இல்லம்மா…..
என்று அவளின் முதுகை மெதுவாக தடவி விட்டுக் கொண்டிருந்தான் ஆனால் அஸ்வதி பயத்திலும், அதிர்ச்சியிலும் முழித்து விட்டாள்…..
விஹான்…..
விஹான்…..
விஹான் ….
உங்களை அவங்க …..
தலையில….
ரத்தம்…..
என் கைல அவ்வளோ ரத்தம் என்று அவள் அவனை கட்டி அணைத்து கொண்டு அழுது கொண்டே எதேதோ புலம்பி கொண்டிருக்க……
அவ்வாறு அழுது புலம்பிக்கொண்டே இருக்கும் அஸ்வதியின் முகத்தை தன் இரு கைகளில் ஏந்திக்கொண்டு , அவளின் கண்களை நேருக்கு நேராக பார்த்துக் கொண்டே அவன் பேசினான்…..
அஸ்விம்மா எனக்கு ஒன்னும் இல்ல இங்க பாரு நா நல்லா இருக்குறேன் இது உன்னுடைய கனவும்மா ……. இது நிஜம் இல்லடா செல்லம் , உன்னோட சின்ன வயசுல நீ அனுபவிச்ச கொடுமை எல்லாம் சேந்து உனக்கு கெட்ட கனவா வருது அதனால இனிமே நீ அந்த சுலோச்சனா பத்தியும் அனந்தி பத்தியும் நினைக்கவே கூடாது சரியா ??? எனக்கு ஒன்னும் இல்ல அண்ட் எனக்கு ஒன்னும் ஆகாது , அதனால இப்போ நீ நிம்மதியா என்னோட மடியில படுத்து தூங்கு என்று விஹான் அஸ்வதியை தன் மடியில் படுக்க வைத்து அவளின் நெற்றியில் பூத்திருந்த வியர்வையை துடைத்துவிட்டு அவளின் தலைமுடியை மெதுவாக கோதிவிட்டான்…….
விஹான் எனக்கு இப்ப தூக்கம் வரல என்று அவள் அவனின் கைகளை பிடித்துக் கொண்டாள்……
சரி உனக்காக நா ஒரு பாட்டு பாடுறேன் அப்போ நீ தூங்கிடுவ…..
அப்படி என்ன பாட்டு பாட போறீங்க?
அவன் சிரித்துக் கொண்டே அவளின் தலை முடிகளை கோதி விட்டுக்கொண்டே பாட்டு பாடினான்……
கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்…
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…
கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…..
விஹான் உங்களுடைய வாய்ஸ் ரொம்ப சூப்பரா இருக்குது ….. இந்த பாட்டும் ரொம்ப நல்லா இருக்குது என்று அவள் அவனின் முகத்தை பார்த்தவாறு அப்படியே அவன் மடியில் படுத்து கொண்டு இருந்தாள்…..
ஊமை என்றால் ஒரு வகை அமைதி…
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி…
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில்பேடு…
ஏனோ தெய்வம் சதி செய்தது…
பேதை போல விதி செய்தது…
கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்…
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…
விஹான்……
எனக்காக என்னோட அம்மா கூட இப்படி பாட்டு பாடி இருக்க மாட்டாங்க ஆனா நீங்க பாடுறிங்க எனக்காக உங்களை என்னைக்கும் மறக்க மாட்டேன் , என்ன நீங்க மறக்க மாட்டீங்கல்ல???
உனக்கு நா இந்த கேள்விக்கு வார்த்தையா பதில் சொல்றத விட பாட்டா பாடிடுறேன் என்று அவன் பாடினான்…….
காதல் கொண்டேன்…
கனவினை வளர்த்தேன்…
கண்மணி உனை நான்…
கருத்தினில் நிறைத்தேன்…
உனக்கே உயிரானேன்…
எந்நாளும் எனை நீ மறவாதே…
நீ இல்லாமல் எது நிம்மதி…
நீதான் என்றும் என் சன்னிதி….
அவளின் அந்த இனிமையான குரலில் உள்ள பாடல் வரிகளில் இருந்து உண்மையை புரிந்து கொண்ட பின் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது……
விஹான் அவளின் கண்ணீரை துடைத்து விட்டு அவளின் தலையை மெதுவாக கோதி விட்டுக் கொண்டே மீண்டும் பாடினான்……
கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்…
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ….
இந்த முறை அஸ்வதி விஹானின் கைகளை பிடித்துக் கொண்டு நிம்மதியாக எந்த கெட்ட கனவும் இன்றி நிம்மதியாக உறங்கினாள்…..
விஹான் அமர்ந்தபடியே உறங்கிப் போனான்……
அடுத்து அவர்கள் இருவரும் காத்திருக்கும் அதிர்ச்சி என்ன?
பொருத்திருந்து பார்ப்போம்…..
தொடரும்…..
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்………
❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

