Loading

காதல் – 16

 

விஹான் தன்னுடைய நீளமான முடிகளை அழகாக வெட்டிவிட்டு, தன்னுடைய நீண்ட தாடியை அழகாக டிரிம்  செய்துவிட்டு கல்லூரி மாணவன் போல அழகா இருந்தான்……

 

அவன் அழகில் மயங்கிய அஸ்வதி அவனைப் பார்த்தவாரே பின்னால் நகர அவளின் கால் பூந்தொட்டி மீது மோதி கீழே விழ போனாள்….

அப்பொழுது அவள் கீழே விழுந்துவிடாமல் இருக்க விஹான் அவளை இடை வளைத்து பிடித்துக் கொண்டான்…..

 

விஹான் என்னப்பா இவ்ளோ அழகா இருக்கீங்க ….

இவ்வளவு அழக இத்தனை நாள் ஒளிச்சு வச்சுட்டு இருக்கீங்களா என்று அவள் அவனை பார்த்து சிரித்து கொண்டே கேட்டாள்….

 

நா என்ன அவ்ளோ அழகாவா இருக்குறேன்?

 

ஆமா அவ்ளோ அழகா இருக்கீங்க , இப்ப எனக்கு புரியுது அந்த மனீஷா எதுக்கு உங்க பின்னாலேயே சுத்தி  சுத்தி  வந்தான்னு …..

 

ஏன் அவ  என்னையே சுத்தி சுத்தி வந்தா?

 

பின்ன இவ்ளோ அழகா இருந்தா உங்களை சுத்தி சுத்தி வராம என்ன பண்ணுவா அவ?

ஆனா இனி அந்த மனிஷாவ உங்க பக்கத்துல நெருங்க விடமாட்டேன் என்று அவள் அவனின் சட்டையை பிடித்து கொண்டாள்…..

 

அப்பொழுது பீவியின் சத்தம்  கேட்கவும் இருவரும் விலகி நின்றனர்…..

 

விஹான்…

விஹான்…

எங்கப்பா இருக்க?

அடியே விஹான்னா உன்னோட அருமை அண்ணன எங்க?

 

அம்மா இதோ இங்க நிக்கிறாரே  இவரு உன் பையனான்னு பாத்து சொல்லு ….

 

விஹான் ….

டேய் மகனே…

நீயா இது??

எப்படா இப்படி பழையப்படி மாறுன?

என் தங்கமே இப்போதான் ரொம்ப ரொம்ப அழகா இருக்க ….

 

அம்மா அண்ணனோட இந்த மாற்றத்துக்கு காரணம் யாரு தெரியுமா?

 

யாரு விஹான்னா?

 

த கிரேட் அஸ்வதிதான் அண்ணனோட இந்த மாற்றத்துக்கு காரணம் …..

 

அம்மா அஸ்வா என்னோட விஹான இப்படி மாத்தி குடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி என்று பீவி அஸ்வாவை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார்….

 

அம்மா நேத்துதான் அஸ்வதிக்கிட்ட அண்ணன் மேல அந்த கேடு கெட்ட பொண்ணு இப்படி பெரிய பழிய தூக்கி போட்டான்னு சொன்னேன் , அஸ்வா அண்ணனுக்கு அட்வைஸ் பண்ணி அண்ணன பழையப்படி ஆக்கிட்டா….

 

அஸ்வாவும் ஒரு காலேஜ் பிரபசர் தான அதான் அவளுக்கு இவன்கிட்ட எப்படி பேசுனா காரியம் ஆகும்ன்னு தெரிஞ்சி வச்சிருக்கா…..

 

அது மட்டுமா காரணம் என்று விஹான்னா சிரிக்க, பீவி பின்னால் நின்று கொண்டிருந்த அஸ்வா, எதுவும் சொல்லாத என்று பயத்தில் செய்கை காட்டினாள்….

 

விஹான்னாவும் அதை பார்த்து அமைதியாக சிரித்து கொண்டாள்….

 

வேற என்ன காரணம்?

ஓஹோ இப்போ புரியுது எனக்கு என்று பீவி அஸ்வதியை திரும்பி பார்த்தார்….

 

என்..

என்ன …

என்ன…..

புரியுது?

 

நீயும் என்னோட மகனும்…

 

நானும் உங்களோட மகனும் 😳

 

நீயும் என்னோட மகனும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் அதான?

 

ஆமா…

ஆமா பீவிம்மா…

நாங்க ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்…..

 

அதான் தெரியுதே என்று அவர் சிரித்தார்…..

 

சரி சரி எல்லாரும் சீக்கிரம் கிளம்புங்க நாங்க எல்லாரும் நம்மளோட ஸ்மால் ஜெட்ல போறோம் நீங்க மூனு பேரும் விஹானோட ஜெட்ல வாங்க , அப்புறம் விஹான் பாத்து ஜெட்ட ட்ரைவ் பண்ணு , நா பைலட் வச்சிக்கலாம்ன்னு சொன்னேன் நீதான் நானே ட்ரைவ் பண்ணிக்குறேன்னு சொன்ன பாத்து விஹான்……

 

அம்மா ரொம்ப நாள் கழிச்சு நல்லா ஃப்ரெஷ்ஷா, புதுசா பொறந்த மாதிரி இருக்கு , நா பாத்துக்குறேன் நீங்க பத்திரமா போயிட்டு வாங்க….

 

சரிப்பா பாத்து பத்திரம்….

 

நா போயிட்டு வாரேன் என்றிட்டு பீவி சென்று விட்டார்…..

 

சரி எல்லாரும் வாங்க நம்ம கிளம்பலாம்….

 

விஹான் உங்களுக்குன்னு தனியா பிரைவேட் ஜெட் இருக்கா?

 

ஆமா அஸ்வி , அப்பாக்கு சொந்தமா ஆறு ஜெட் வச்சிருக்காங்க , எனக்கு சொந்தமா ஒரு ஜெட் வச்சிருக்கேன் அதுலதான் நம்ம இப்போ போக போறோம்…..

 

எப்படி விஹான் நீங்க உங்களுக்குன்னு தனியா பிரைவேட் ஜெட் வாங்குனீங்க?அது ரொம்ப ரொம்ப காஸ்ட்லில?

 

நா சொல்லுறேன் நீ வா நம்ம பேசிட்டே  போலாம் என்று அவன் அவளின் கைகளை பிடித்துக் கொண்டு ஜெட்டின் அருகே சென்றான்…..

 

மிக பிரமாண்டமாக இருந்தது அந்த ஜெட்…

 

வாவ் , பிரைவேட் ஜெட்ட ஃபர்ஸ்ட் டைம் என் லைஃப்ல இவளோ கிட்டக்க இப்போதான் நா பாக்குறேன்….

 

சரி பேசிட்டு இங்கேயே நிக்க போறியா உள்ள வா என்று விஹான் மற்றும் விஹான்னா அவளை ஜெட்டினுள் அழைத்து சென்றனர்……

 

ஹே வெளியவிட உள்ள ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு என்று அவள் விஹானின் தனியார் ஜெட்டை ஆச்சர்யமாக பார்த்து கொண்டு இருந்தாள்…..

 

அந்த பிரைவேட் ஜெட்டின்  உள் பகுதி பார்க்க அத்துணை அழகாக இருந்தது….

 

ஆடம்பரமான இருக்கைகள் , விரிவான இடம், ஜீப் போன் ,  (lounge )பாங்கான அமைப்பு , கண்ணை பறிக்கும் அலங்கார வகைகள் ,  மிகவும் மிருதுவான இருக்கைகள், விரிவான காலடி வைக்கும் இடம், தனிப்பட்ட ஏர்-கண்டிஷனிங் மற்றும்  லைட்டிங் என  அவனின் பிரைவேட் ஜெட் பார்க்க மிகவும் அழகாக இருந்தது…..

 

விஹான் பைலட் சீட்டில் அமர , அவன் அருகில் இருந்த சீட்டில் அஸ்வதி அமர்ந்து கொண்டாள், அவள் அருகில் விஹான்னா அமர்ந்து கொண்டாள்…

 

சரி அஸ்வி சீட் பெல்ட் போட்டுக்கோ இப்போ ஜெட் டேக் ஆஃப் ஆக போகுது என்று அவன் எதேதோ பட்டன்களை அழுத்த அந்த பிரைவேட் ஜெட் மெல்ல மெல்ல மேலே எழும்பியது…..

 

அஸ்வதி அனைத்தையும் ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்…..

 

அவளின் இருபத்தி ஆறு வருட வாழ்க்கையில் முதன்முதலாக காஷ்மீருக்குத்தான் விமானத்தில் பிறந்தாள் பறந்தாள் அதன் பிறகு தன்னவனுடன் அவனின் தனிப்பட்ட ஜெட்டில் அவனுடன் பறக்கிறாள் , அவளுக்கு நடப்பது அனைத்தும் கனவா அல்லது நனவா என்று ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டே வந்தாள்…..

 

அந்த தனிப்பட்ட விமானம் டேக் ஆஃப் ஆகும்போது அஸ்வதி பயத்தில் விஹான் மற்றும் விஹானாவின் கைகளை கெட்டியமாக பிடித்துக் கொண்டாள்…..

 

ஹே அஸ்வதி  கண்ண திறந்து பாரு , மேகமெல்லாம் எப்படி நம்ம கிட்ட போகுதுன்னு பாரு …..

 

விஹானா  அவ்வாறு கூறவும் அஸ்வதி கண்களை திறந்து பார்த்தாள் …

மேகம் மற்றும் வானம் அவள்  பக்கத்தில் இருப்பது போன்ற உணர்வு ….

மிதக்கும் மேகங்களும்,  நீல வானமும் அத்துணை உயரத்திலிருந்து கீழே பார்க்கும் போது பூமியே சிறிதாக மாறியது போல தோன்றியது அவளுக்கு….

 

ஹே இது ரொம்ப அழகா இருக்குது , அந்த மேகத்த பாரு விஹான்னா நம்ம கிட்ட வருது  , ஹே நம்ம அந்த மேகத்துக்கு மேல போறோம் ஜாலியா இருக்கு என்று அவள் சந்தோஷத்தில் ஆடிக்கொண்டே வந்தாள்….

 

அவளின் அந்த சந்தோஷத்தை விஹான் பார்த்து மகிழ்ந்தான்…..

 

ஆமா நீங்க எப்ப பிளைட் ஓட்ட கத்துக்கிட்டீங்க?                                            நீங்க எப்படி தனியா பிரைவேட் ஜெட் வாங்குனிங்க?                                      உங்ககிட்ட ஏது அவ்வளவு பணம்?

 

அவளின் இந்த கேள்விகளை கேட்டு விஹான் சிரித்து விட்டான்…..

 

ஏன் சிரிக்கிறீங்க பதில் சொல்லுங்க….

 

அடியே அஸ்வா என்னோட அண்ணன் ரொம்ப நல்லா பெயிண்டிங் பண்ணுவாங்க , அந்த பெயிண்டிங்க  சேல் பண்ணுவாங்க அப்படி அண்ணனுக்கு காசு வந்தது அதுல அண்ணா ஒரு பிரைவேட் ஜெட் வாங்குனாங்க அண்ட் என்னோட அண்ணா டுவெல்த் முடிச்சதும் சிபிஎல் அதாவது வணிக விமான ஓட்டுநராக வேலை செய்ய அனுமதிக்கும் உரிமம்(CPL – Commercial Pilot License course) முடிச்சாங்க அதான் அண்ணாகிட்ட பைலட் லைசென்ஸ் இருக்கு….

 

சூப்பர் போங்க நல்லா ஜெட் ட்ரைவ் பண்ணுறீங்க அண்ட் நல்லா பெயிண்டிங் பண்ணுறீங்க கிரேட் தான் போங்க நீங்க…….                                                            ஆமா நிஜமாவே உங்க அண்ணன் ரொம்ப நல்ல பெயிண்டிங் பண்ணுவாங்களா?

 

சந்தேகமா இருந்தா இத பாரு என்று விஹான்னா ஒரு போட்டோ பிரேமை  அஸ்வதி கையில் கொடுத்தாள் ….

 

அதை வாங்கி பார்த்த அஸ்வதிக்கு ஆச்சரியம் தாளவில்லை ஏனெனில் விஹான் அஸ்வதியை தத்ரூபமாக வரைந்திருந்தான்……

 

ரொம்ப அழகா இருக்க்குப்பா இந்த பெயிண்டிங் , என்று அவள் கூறிக் கொண்டே அந்த பெயிண்டிங்கை ரசித்துக்கொண்டிருந்தாள்…..

 

அப்பொழுது அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது…..

 

ஹே அஸ்வா ஏன் அழுகுற?

என்னாச்சு?

 

எங்கிட்ட யாரும் இதுவரை இவ்வளவு பாசமா நடந்துக்கிட்டது இல்லை , நீங்க ரெண்டு பேரு அண்ட் பீவி அம்மா மட்டும்தான்  தான் என்கிட்ட இவ்ளோ பாசமா பேசுறீங்க எனக்கு இந்த சந்தோஷத்த எப்படி வார்த்தையா சொல்றதுன்னு தெரியல என்று அவள் அழுது கொண்டே விஹான் மேல் சாய்ந்து கொண்டாள்……

 

அஸ்வி இனிமே நீ அழக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல , அழுக கூடாது என்று விஹான் அவளின் கண்ணீரை துடைத்து விட்டான்……

 

இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு அவர்கள் அனைவரும் பிரயாக்ராஜை வந்தடைந்தனர்……

 

உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள பிரயாக்ராஜ் புனிதமான வழிபாட்டு செய்யும்  இடம்….

திரிவேணி சங்கமம் என்று சொல்லப்படும் (கங்கை , யமுனா ,சரஸ்வதி) என மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்திற்கு அவர்கள் சென்றனர்…..

 

அவர்கள் சென்ற நேரம் அந்த இடத்தில் கூட்டம் குறைவாக இருந்தது ……

 

அஸ்வி ரெண்டு பேரும் போய் திரிவேணி சங்கமத்துல குளிச்சிட்டு வாங்க போங்க…..

 

நீங்க எங்க கூட குளிக்க வர மாட்டிங்களா விஹான்?

 

லேடிஸ் அந்த சைடுல குளிப்பாங்க சோ நீங்க ரெண்டு பேரும் அங்க போய் குளிச்சிட்டு வாங்க…..

 

ஓகே நாங்க போயிட்டு வரோம் என்று விஹானாவும் அஸ்வதியும் அவனிடம் கூறிவிட்டு வேகமாக தண்ணீருக்குள் குளிக்க சென்றனர்……

 

விஹானா மற்றும் அஸ்வதி அங்கு வருவதை சுலோச்சனா மற்றும் அனந்தி பார்த்துக் கொண்டே இருந்தார்கள்…..

 

அம்மா  அந்த அஸ்வதிய அந்த விஹான் இப்ப லவ் பண்றான் போலம்மா , அங்க பின்னால பாருங்கம்மா இவள எப்படி பாத்துக்கிட்டே இருக்குறான்னு….

 

ஆமா அனந்து நானும் பார்த்தேன் , இந்த அஸ்வதி சரியான கைக்காரி தான் போல , முதல்ல என்னோட தேவாவோட சொத்த ஆட்டைய போட்டுட்டா அது பத்தலன்னு இப்ப அடுத்து இந்த விஹானோட சொத்த ஆட்டய போட  பாக்குறா …..

 

அம்மா இவள சும்மா விடக்கூடாது அம்மா இவள ஏதாவது செஞ்சே ஆகணுமா…..

 

நம்மளா எதுவும் அவள பண்ணா தானே மாட்டிப்போம் அனந்து?                      அவளே தானா போய் செத்துட்டா நம்ம மேல பழி வராதுல….

 

அம்மா நீங்க என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல…..

 

இப்ப நம்ம  கங்காவுல நின்னுட்டு இருக்கோம், அந்த தள்ளி தூரமா ஒரு கயிறு கட்டி இருக்கிறது தெரியுதா?

 

எங்கம்மா?

 

உனக்கு நேரா அங்க பாரு அங்க ஒரு கயிறு கட்டி இருக்குதே அது பக்கத்துல நிறைய தாமரை  ஒதுங்கி இருக்குதே தெரியுதா?

 

ஆமாம்மா தெரியுது அதுக்கு என்ன இப்போ?

 

அதுதான் யமுனா நதி , அந்த இடத்துல ரொம்ப ஆழம் அதிகமா இருக்கும் தண்ணியும் ரொம்ப வேகமாக போகும் , எனக்கு இந்த அஸ்வதிய புடிக்கல இவள இப்படியே நம்ம விட்டா அவ அந்த விஹான கல்யாணம் பண்ணிக்கிட்டு நம்மள விட பணக்காரி ஆயிடுவா அது நடக்க கூடாது அத  நம்ம நடக்கவும் விட கூடாது…..

 

என்னமா பண்ணப் போறோம்?

 

இந்த அஸ்வதி செத்து போய்ட்டா இவ பேருல தேவா எழுதி இருக்குற சொத்து எல்லாம் என் பேர்ல வந்துரும் , இந்த விஹான் சொத்த பத்தி எனக்கு கவலை இல்ல , சோ இவ செத்து போகட்டும்…..

 

அம்மா இப்ப நம்ம என்ன பண்ண போறோம்?

 

நீ அந்த அஸ்வதி கிட்ட போய் பாசமா பேசு , அந்த கயிறு பக்கத்துல இருக்குற தாமரை பூவ எனக்கு எடுத்துக் கொடுன்னு கேளு …..

 

நா கேட்டா அவ எடுத்து தருவாளா?

 

அந்த அஸ்வதிக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் நீ  அவகிட்ட என்ன பாசமா சொன்னாலும் அவ செய்வா…..

 

சரிமா நான் அவ கிட்ட போய் கேட்கிறேன் என்று அனந்தி அஸ்வதியிடம் சென்றாள்…..

 

சுலோச்சனா மற்றும் அனந்தி அஸ்வதியை  கொல்வது பற்றி பேசிக் கொண்டிருப்பதை  எப்பொழுதோ சித்திக் அங்கு சுற்றி உள்ள இடங்களை வீடியோ எடுப்பதற்காக ஆன் செய்து வைத்த கேமராவில் பதிவாகி கொண்டிருந்தது……

 

அவர்களின் சூழ்ச்சியிலிருந்து அஸ்வதி தப்பிப்பாளா?

 

பொறுத்திருந்து பார்ப்போம்…..

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……..

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. என்ன கொலை பண்ணவே முடிவே பண்ணிட்டாங்க … என்ன ஆக போகுதோ

    1. Author

      Thodarndhu padinga 😇 thank you for your valuable comments 😇

  2. Private jet details are good. 👍🏼

    கொடுமை செய்தது போதாது என்று கொலை செய்யவே துணிந்து விட்டார்களா?