Loading

காதல் – 12

 

அஸ்வதியின் ஸ்கையிங் போர்டு அவளின் கட்டுப்பாட்டை மீறி வேகமாக சறுக்கி கொண்டு சென்றது…

 

இதை பார்த்த விஹான் அவளை காப்பாற்ற அவளின் முன்பு போய் நின்று அவள் விழுந்து விடாமல் இருக்க அவன் இரு கைகளையும் நீட்டியப்படி அவளை மறைத்து கொண்டு நின்றான் , அதில் அஸ்வதி விஹானின் மேல் மோதி இருவரும் பனிமலையில் இருந்து கீழே உருண்டனர்

அஸ்வதிக்கு தலையில் அடிபடாமல் இருக்க விஹான் அவளை நெஞ்சோடு அனைத்தப்படி இருவரும்  உருண்டனர்…..

 

அஸ்வதி மற்றும் விஹான் தூரமாக உருண்டு போய் விழுந்தனர்….

 

அவர்கள் உருண்டு விழுந்ததில் அவர்கள் மேல் பணியாக இருந்தது , விஹான் கீழே தரையில் இருக்க அஸ்வதி அவன் மேல் உருண்டு விழுந்திருந்தாள் ……

 

விஹான் அஸ்வதி மேல் இருந்த பணியை நீக்கிவிட்டு அவள் முகத்தை நிமிர்த்தி பார்த்தான்…..

 

அவள் பயத்திலும் குளிரிலும் அவன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டும் அவனை இறுக்கமாக  கட்டிக்கொண்டும் கண் மூடி இருந்தாள், அவளின் முகம் செக்க செவேல் என்று சிவந்திருந்தது……

 

அதைப் பார்த்து ரசித்த விஹான் அவளின் கன்னத்தை தட்டி அவளை எழுப்பினான்…..

 

அஸ்வதி ஆர் யூ ஓகே?

அஸ்வதி கண்ண தொறந்து பாரு உனக்கு ஒன்னும் ஆகல….

 

அப்பொழுது தான் அஸ்வதி கண்ணை திறந்து பார்த்தாள் , அவள் விஹான் மேல் படுத்து கொண்டு இருந்தாள்…..

 

விஹான் எனக்கு ஒன்னும் ஆகலல?

 

உனக்கு ஒன்னும் ஆகல நீ ரொம்ப நல்லா இருக்குற…..

 

ரொம்ப தேங்க்ஸ் விஹான் நீங்க மட்டும் இல்லன்னா இந்நேரம்  நா அந்த இரும்பு  கம்பியில முட்டி இருந்துருப்பேன் , ரொம்ப தேங்க்ஸ்…..

 

பரவால்ல இருக்கட்டும் அஸ்வதி….

 

அப்பொழுதுதான் தான் விஹான் மேல் படுத்து கொண்டு இருக்கிறோம் என்று உணர்ந்த அஸ்வதி , அவன் மேல் இருந்து எழுந்திரிக்க பார்த்தாள் ஆனால்…..

 

அவனின் செயினும் இவளின் செயினும் ஒன்றோடு ஒன்று பிணைந்து கொண்டது…..

 

ரொம்ப சாரி விஹான் இது எப்படி மாட்டிக்கிச்சுன்னு எனக்கு  தெரியல என்று அவள் அந்த செயினை பிரித்து எடுக்க முயற்சி செய்து கொண்டு இருந்தாள் அப்பொழுது விஹானின் சூடான மூச்சுக்காற்று அவளை தீண்டியதில், குளிரில் சிவந்த கன்னங்கள் நானத்தால் சிவந்தது….

 

அஸ்வதி செயினை பிரிக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தாள் , அதைப் பார்த்த விஹான் அவன் கழுத்தில் அணிந்திருந்த செயினை அவள் கழுத்தில் போட்டு விட்டான்…..

 

அவன் செய்ததை பார்த்து  முழித்த அஸ்வதியை பார்த்து….

 

நீ மாட்டிட்டு இருக்குற நம்ம செயின பிரிக்க முடியாம கஷ்டப்பட்டுட்டு இருக்க சோ இத நீயே  போட்டுக்கோ , அப்புறமா பிரிச்சு கொடு ஒரு பிரச்சனையும் இல்ல என்று விஹான் அஸ்வதியை தன்னோடு கட்டிக்கொண்டு அப்படியே எழுந்து நின்றான்……

 

அவனின் அந்த செய்கையில் அஸ்வதிக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை ஏதோ ஒரு புது  உணர்வுகள் அவளின் நெஞ்சுக்குள் ஆட்கொண்டிருந்தது….

 

விஹானின் கண்களை அவளால் நேருக்கு நேராக பார்க்க முடியவில்லை , நானம் அவள் கண்ணை மறைத்தது……

 

அவள் நீண்ட நேரம் அமைதியாகவே இருந்தாள் , அவள் திரும்பி பார்த்தாள் விஹான் அவளையே தான் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான்…….

 

அப்பொழுதுதான் அஸ்வதி விஹானை முழுவதுமாக கவனித்தாள்…

 

அவன் தலை முடி மற்றும் தாடி மீசை எல்லாம் பணி அப்பிப்போய் கிறிஸ்மஸ் தாத்தா போல் நின்றான் அதைப்பார்த்த அஸ்வதிக்கு சிரிப்பு தாளவில்லை , அஸ்வதி அவனை பார்த்து சிரித்துக் கொண்டே நின்றாள்…..

 

முதலில் விஹானுக்கு அவள் எதற்கு தன்னைப் பார்த்து இவ்வாறு சிரிக்கிறாள் என்று புரியவில்லை,

பிறகுதான் புரிந்தது…

 

அவன் தலையில் உள்ள பணியையும் அவன் மேல் ஒட்டியிருந்த பணியையும் உதறி விட்டான் , அதை பார்த்ததும் அவளுக்கு இன்னும் அடக்க முடியாத சிரிப்பு வந்தது ……

 

அவள் சிரிப்பதையே ரசித்து கொண்டு இருந்த விஹான் , அவள் மேல் பணியை தூக்கி வீசினான்…..

 

அஸ்வதியும் பதிலுக்கு அவன் மேல் பணியை தூக்கி வீசினான் இவ்வாறு மாறி மாறி இருவரும் ஒருவரின் மேல் ஒருவர் பணியை தூக்கி வீசி விளையாடிக் கொண்டிருந்தனர்……

 

ஹலோ இங்க என்ன நடக்குது?

என்று அங்கு விஹான்னா வந்தாள்,

நா நீங்க ரெண்டு பேரும் மேல மலயில இருந்து உருண்டு விழுந்துட்டீங்களே உங்களுக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு பதறியடிச்சிட்டு ஓடி வந்தா இங்க நீங்க ரெண்டு பேரும் பணிய தூக்கி வீசி விளையாடிட்டு இருக்கீங்க என்ன என்று விஹானா இதுவரையும் பார்த்து செல்லமாக முறைத்தாள்……

 

விஹானா நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்துருக்கணும்,  உங்க அண்ணா அப்படியே பாக்க கிறிஸ்மஸ் தாத்தா மாதிரியே இருந்தாங்க , என்று அவள் மீண்டும் அவனை பார்த்து சிரித்தாள்…….

 

அப்படியா என்னோட அண்ணன்  கிறிஸ்மஸ் தாத்தா மாதிரியா இருந்தான்?

 

ஆமா விஹானா இவங்களோட தலைமுடி, தாடி,  மீசை எல்லாம் பணி ஒட்டி போய் பாக்குறதுக்கு அப்படியே கிறிஸ்மஸ் தாத்தா மாதிரியே இருந்தாங்க என்று மீண்டும் சிரித்தாள்……

 

அஸ்வதி கூறியதை கேட்ட விஹான்னா தன் அண்ணனை கிறிஸ்மஸ் தாத்தாவாக நினைத்து பார்த்து அவளுடன் சேர்ந்து  விஹானாவும் சிரித்தாள்…..

 

ஏய் உங்க ரெண்டு பேருக்கும் என்ன பாக்க  காமெடியா தெரியுதா?

என்று அவர்கள் இருவர் மீதும் பணியை தூக்கி வீசினான்….

 

அஸ்வதி மற்றும் விஹானா , விஹானின் மீது பணியை தூக்கி வீசி மூவரும் சந்தோஷமாக பணியில் விளையாடிக் கொண்டிருந்தனர், அப்பொழுது சித்திக் அங்கு வரவும் அவர்கள் மூவரும் பணியில் விளையாடுவதை பார்த்து சிரித்தார்…..

 

டேய் குழந்தைகளா என்ன பண்ணிட்டு இருக்கீங்க?

 

அப்பா மூணு பேரும் பணியில விளையாடிட்டு இருக்குறோம் நீங்களும் எங்க கூட வாங்க என்று விஹானா சித்திக்கை அழைத்தாள்…..

 

நம்ம அப்புறம் விளையாடுவோம் இப்ப வாங்க எல்லாரும் சாப்பிட வாங்க என்று அவர்கள் மூவரையும் சாப்பிட அழைத்து சென்றார்……

 

விஹானா அஸ்வதியின் கைகளை பிடித்துக்  நடந்து கொண்டு  இருந்தாள் , அவர்களின் பின்னால் விஹான் நடந்து கொண்டு வந்தான் ……

 

அஸ்வதி அவள் பின்னால் நடந்து வரும் விஹானை திரும்பி பார்த்தாள் , அவனும் அவளைத்தான் பார்த்து கொண்டே வந்தான் …..

 

இருவரின் பார்வைகளும் ஐந்து நிமிடம் அப்படியே நிலைத்தது….

 

பிறகு ரெஸ்டாரன்ட் வந்ததும் அஸ்வதியும் விஹான்னாவும் அருகருகே அமர்ந்து கொண்டனர்…..

 

அவர்களின் மேஜையில் உணவு வந்துவிட்டது ஆனால் விஹானை காணவில்லை……

 

விஹான் அஸ்வதியின் அப்பாவான தேவராஜிடம் பேசிக் கொண்டிருந்தான், அவனின் வாய் அவரிடம் பேசினாலும் அவனின் பார்வை முழுவதுமே அஸ்வதியிடமே நிலைத்திருந்தது…..

 

யாருமறியாமல் அவன் அவளை கள்ளத்தனமாக கண்ணோடு பார்த்துக் ரசித்து கொண்டிருந்தான்……

 

“காதல் வந்தாலே கண்ணோடு தான்

கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ”…..

 

விஹான் தன் தந்தையோடு பேசிக் கொண்டிருப்பதை அவள் பார்த்து விட்டாள் ….

 

அவனைப் பார்த்து அவள் மென்மையாக சிரித்தாள்….

 

“யாரும் பார்க்காமல் உனை பார்க்கிறேன் என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன் சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது உன்னை கண்டாலே குதிகின்றதே”…

 

அங்கு அந்த ரெஸ்டாரண்டில் அவர்கள் இருவரின் மனநிலைக்கேற்ப பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது…..

 

அஸ்வதி விஹானையே பார்த்துக் கொண்டிருந்தாள்,

அவனை யாராவது மறைத்தால் எட்டி எட்டி அவனை பார்த்து கொண்டே இருந்தாள்…..

 

“சுத்தி சுத்தி உன்னைதேடி விழிகள் அலையும் அவசரம் ஏனோ சத்த சத்தநெரிசலில் உன் சொல் செவிகள்அறியும் அதிசயம் ஏனோ” ……

 

நாம் ஏன் இப்படி மாறி போனோம் என்று  அவள் யோசித்துக் கொண்டிருந்தாள், நாம் ஏன் விஹானையே பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று…..

 

“வினா வினா

ஆயிரம் அதன் விடை

எல்லாம் உன் விழியிலே

விடை விடை முடிவிலே

பல வினா வந்தால் அது காதலே”….

 

அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போது அவள் யோசனைக்கு ஏற்ப, அவளின் யோசனைகளுக்கு விடையாக அந்த பாடல் ஒலிக்க திடீரென்று அஸ்வதிக்கு புரை ஏறிவிட்டது…..

 

அஸ்வதி புரை ஏறி இருமி கொண்டிருக்கும் போது , விஹான் வேகமாக ஓடி வந்து அவளின் தலையில் மெதுவாக தட்டிவிட்டு அவளுக்கு தண்ணீர் குடிக்க வாயில் கொடுத்தான்…..

 

அஸ்வதி பாத்து பாத்து மெதுவா சாப்பிடு என்று அவள் தலையில் மெதுவாக தட்டி விட்டுக் கொண்டிருந்தான்…..

 

இப்போ பரவாயில்லையா அஸ்வதி?

 

இப்போ ஓகே…

நீங்களும் வாங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்து சாப்பிடுவோம் என்று அவள்  அழைக்க விஹான் அஸ்வதி அருகினிலே அமர்ந்து கொண்டான்…..

 

அதைப் பார்த்த விஹானா சிரித்துக் கொண்டே சாப்பிட்டாள்….

 

ஆனால் அங்கு நடப்பதை பார்த்த சுலோச்சனாவிற்கும் அனந்திக்கும் நெருப்பில்லாமல் வயிறு எரிந்தது……

 

இருவரும்  ஒருவருக்கு  ஒருவர் அறியாமல் ஒருவரை பார்த்து கொண்டே சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள் ……

 

திடீரென்று அஸ்வதியின் கால்களும் விஹானின் கால்களும் இடித்துக் கொண்டன….

 

அப்பொழுது இருவரும் ஒருவரை ஒருவர் கண்களால் களவாடிக் கொண்டனர்…..

 

“அடடா உன் கண்

அசைவும் அதிரா உன்

புன்னகையும் உடனே

என் உயிா் பிசையும்

உடலில் ஒரு  பேர் அசையும்”….

 

என்னடா இன்னைக்கு நம்ம மனசுல நினைக்கிறது எல்லாம் பாட்டா வருது என்று அஸ்வதி நினைத்துக் கொண்டிருக்க……

 

அஸ்வதி எதையோ நினைத்து கொண்டு ஸ்பூனை வைத்து தட்டில்   கோலம் போட்டுக் கொண்டிருந்தாள், அதை பார்த்த விஹான் அவளைப் பார்த்து சிரித்தான்……

 

எதுக்கு என்ன பாத்து சிரிக்கிறீங்க விஹான்?

 

அவன் , அவள் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டு அவளின் வாயில் ஒட்டி இருந்த உணவுத் துகள்களை துடைத்து விட்டான், அவன் அவளோடு அத்தனை நெருக்கத்தில் இருக்கவும் அவளால் மூச்சு கூட விட முடியவில்லை….

 

இமைகள் படபடக்க

கருவிழிகள் குறுகுறுக்க

உதடு துடி துடிக்க

அவள் அவனேயே பார்த்துக் கொண்டிருந்தாள்…..

 

இதைப் பார்த்துக் கொண்டிருந்த சுலோச்சனாவும் அனந்தியும் கோபத்தில் அந்த மேஜையில் இருந்து எழுந்து விட்டனர்…..

 

அஸ்வதி எங்க கூட கார்ல வா என்று  சுலோச்சனா அவளை இழுத்துக் கொண்டு சென்றார்…..

 

ஆன்ட்டி அஸ்வதி இன்னும் சாப்பிட்டு முடிக்கல என்று விஹான் கூறினாள்….

 

இன்னைக்கு இவ சாப்பிட்ட வர போதும், என்று அவர் அவளை இழுத்து கொண்டு சென்றார்….

 

ஆன்ட்டி அஸ்வதி எங்க கூட தான வந்தா, எங்க கூடவே திரும்ப வரட்டும் நீங்க அப்பா கார்ல போங்க….

 

இல்ல பரவால்ல இருக்கட்டும் விஹான் , இவ எங்க கூடவே வரட்டும் நீங்க எல்லாரும் பீவி கூட வாங்க என்று  அவர்களின் பேச்சை கேட்காமல் சுலோச்சனா அவளை இழுத்து கொண்டு சென்றார்…..

 

முதலில் அஸ்வதி, சுலோச்சனா அனந்தி ,மூவரும் காரில் வீட்டிற்கு சென்றனர் அவர்களின் காரை பின் தொடர்ந்தவாறே விஹானும் விஹான்னாவும் வேகமாக சென்றார்கள்…..

 

அவர்களின் வீடும் வந்துவிட்டது….

 

சித்திக் பீவி , நீங்க  ரெண்டு பேரும் போய் ரெஸ்ட் எடுங்க , நாங்களும் ரெஸ்ட் எடுக்குறோம் என்று கூறிவிட்டு சுலோச்சனா  அஸ்வதியின் கைகளை பிடித்து இழுத்துக்கொண்டு அவர்களின் அறைக்கு சென்றார்…..

 

அவர்களின் அறைக்குள் அஸ்வதியை இழுத்து சென்று கதவை வேகமாக மூடினார்…..

 

அஸ்வதி பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்…..

 

அம்மா….

 

ச்சீ …

வாய மூடுடி

வெக்கமே இல்லாம அவ்வளவு பேரும் முன்னால அந்த பையனோட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்குற என்று சுலோச்சனா தலைமுடிக்கு உபயோகப்படுத்தும் ஸ்ட்ரைட்டனரை வைத்து அவள் முதுகில் சூடு போட்டார்….

 

அதில் வலியில் அஸ்வதி அலறினாள் , அந்த அறை  சவுண்ட் ப்ரூப் செய்யப்பட்ட அறை ஆதலால் அஸ்வதியின் அலறல் வெளியில் கேட்க வாய்ப்பில்லை சுலோச்சனா அவள் முதுகில் சூடு வைத்துக் கொண்டே இருந்தார்…..

 

அப்பொழுது….

 

அவர்களின் அறை கதவு தட்டப்பட்டது…

 

அனந்தி கதவை திறந்தாள்,  அங்கு விஹான் நின்று கொண்டிருந்தான்….

 

அஸ்வதியின் அழுத கண்களை அவன் பார்த்தான், ஏதோ அவளுக்கு நடக்க கூடாதது நடந்திருக்கிறது என்று அவன் புரிந்து கொண்டான்….

 

ஆன்ட்டி விஹானா  அஸ்வதிய கூப்பிட்டா…..

 

சரிப்பா கூட்டிட்டு போ என்று

சுலோலச்சனா கூறினார்….

 

விஹான் அஸ்வதியை அவனின் அறைக்கு அழைத்து சென்றான்….

 

விஹானின் அறைக்குள் சென்ற மறு நொடி அஸ்வதி அந்த அறையின் கதவை வேகமாக சாத்தினாள்…..

 

கதவை சாத்திவிட்டு வேகமாக ஓடி வந்து விஹானை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதாள்….

 

என்னாச்சு அஸ்வதி?

ஏன் அழுகுற?

உங்கம்மா உன்ன அடிச்சாங்களா?

 

அவள் அவனைப் பார்த்து சூடு வச்சுட்டாங்க என்று அழுதாள்…..

 

விஹான் ரொம்ப எரியுது வலிக்குது என்று அவள் அழுது கொண்டே இருந்தாள்…..

 

அவளின் மன காயத்திற்கும் உடல் காயத்திற்கும் இவன் மருந்தாக வருவானா?

 

பொறுத்திருந்து பார்ப்போம்….

 

தொடரும் ……

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. அஸ் விஹா காதல் நல்லா போகுது … ஆனா அனந்தி என்ன பண்ண காத்திருக்கோ … அஸ்வதி அப்பா கிட்ட இதெல்லாம் சொன்னா ஏதாவது வழி கிடைக்கும்

    1. Author

      Paakkalam…
      Thank you for your valuable comments 😇

  2. விஹான் அஸ்வதி காதலில் கரைந்த நொடிகள் அருமை. கண்களால் களவாடுவதும், பாடல் வழி மனதால் பேசுவதும் அழகு.

    மற்றவர் வீட்டில் இருக்கும் சமயமும் ஒரு பெண்ணை காயப்படுத்த இத்தனை துணிச்சல் எங்கிருந்து வருகிறதோ? அம்மா மகள் இருவருக்கும் அது ஒரு இயல்பான பழக்கமாகவே மாறிவிட்டது போலும்.

    அஸ்வதிக்கு அரணாய் அரவணைப்பாய் ஆறுதலாய் இருப்பானா விஹான்?

    1. Author

      பொறுத்திருந்து பார்ப்போம்….
      உங்களின் பொன்னான கருத்துக்களை என்னிடம் தெரிவித்தற்கு நன்றி….😇