Loading

பூகம்பம் – 6

காலை ஆட்டி கொண்டு குப்பற படுத்து தீவிர சிந்தனையில் இருந்த ஆதிரா “ஹே ஒரு ஐடியா” என்று தன்னருகில் தூங்கி கொண்டிருந்த அவளின் தோழியான காவ்யாவை ஒரு இடி இடித்தாள்.

தூக்க கலக்கத்தில் காவ்யாவோ “எந்த கருமமா இருந்தாலும் காலைல பார்த்துக்கலாம்.. மனுசனை நிம்மதியா தூங்க விடுடி” என்று நொந்து போய் திரும்பி படுத்து போர்வையை தலைவரை போர்த்தி கொண்டாள்.

கடுப்புடன் போர்வையை விலக்கிய ஆதிரா “நாளைக்கு தூங்கிக்கலாம் எந்திரிடி..” என்று விடாமல் உலுக்கியதில் மொத்த உறக்கமும் காற்றோடு காற்றாய் பறந்து போனது காவ்யாவுக்கு.

“உன்னைய போய் ப்ரெண்டா பிடிச்சேன் பாரு.. என் புத்தியை பிஞ்ச செருப்பாலயே அடிச்சுக்கணும்.. இப்ப உனக்கு என்னதான்டி வேணும்.?” என்று சிடுசிடுப்பும் அலுப்புமாய் கேட்டாள் காவ்யா.

அவளையே ஒரு பொருட்டாக மதிக்காத ஆதிரா அவளின் சிடுசிடுப்பை கவனிப்பாளா என்ன.? “நம்ம பேஸ்புக்ல பேக் ஐடி வழியா என் ஆளு கூட பேசுனா என்ன.?” என்று ஆர்வத்துடன் ஆதிரா உரைத்திட, விழி இடுங்கிய பார்வையில் அவளை விழிகளால் பொசுக்கிய காவ்யா தலையணையை கொண்டு மொத்தினாள்.

“பாவி பாவி உன் கேவலமான யோசனையை சொல்ல நைட்டு பதினொரு மணி தான் கிடைச்சுச்சா.? உன்னைய யாருடி அந்த ஊருக்கு போக சொன்னது.? போனது தான் போய் தொலைஞ்ச தின்னுட்டு மட்டும் வந்துருக்க வேண்டியது தானே.?” என்று மூச்சு வாங்க பொரிந்து தள்ளினாள் காவ்யா.

“ஹே நீ பார்த்துருக்கணும்டி அவன் சிரிப்பை.. அதுவும்…” என்று மலரும் நினைவுகளாக அந்நிமிடத்திற்கு செல்ல முயன்றவளை இரண்டு மொத்து மொத்தி நிகழ்காலத்திலே தங்க வைத்து “அந்த கன்னங்குழியை பார்த்துருக்கணும்.. அது தானே.?” என்றாள் ஏகப்போக கடுப்புடன்.

ஆமாவென்று இடவலமாக தலையசைத்த ஆதி இளித்தும் வைக்க, அவளை கொன்று விட்டால் என்னவென்ற வெறியே எழுந்தது காவ்யாவுக்கு.. ஊரில் இருந்து வந்ததும் அன்றிரவே சென்னைக்கு வந்து விட்டாள் ஆதிரா.

வந்ததில் இருந்து ரூபனை பற்றியே கூறி கூறி காவ்யாவை ஒருவழியாக்கி இருக்க, அவளுடன் சேர்ந்த பாவத்திற்கு காவ்யாவும் அந்த கருமத்தை கேட்டு ரத்த கண்ணீர் வடிக்காதது மட்டும் தான் மிச்சம்.

“ஏன்டி எருமை நீ என்ன பண்ணனுமோ பண்ணி தொலைய வேண்டியது தானே.? என் தூக்கத்தை ஏன்டி கெடுத்து விடற.?” – காவ்யா

“என்ன காவு பொசுக்குனு இப்படி சொல்லிட்ட.? உன்னைய விட்டுட்டு நான் ஏதாவது பண்ணிருக்கனா.?” – ஆதிரா

“நேத்து என்னைய விட்டுட்டு பப்ஸ் சாப்பிட்டு வந்தவ எல்லாம் பேச கூடாது..” – காவ்யா

“ப்ச் அதுவும் இதுவும் ஒண்ணா.? இப்ப ஒரு ஃபேக் ஐடி பண்றோம் என் ஆளு கூட பேசி அவனை கரெக்ட் பண்றோம்..” – ஆதிரா

“எம்மா தெய்வமே அதைய முதல்ல பண்ணு.. அப்பவாவது உன் தொல்லைல இருந்து எனக்கு விடுதலை கிடைக்கட்டும்..” – காவ்யா

“ரொம்ப அலுத்துக்காதடி.. அப்பறம் உன் லவ்வுக்கு நான் ஹெல்ப் பண்ண மாட்டேன்..” – ஆதிரா

“நீ..? அதுவும் என் லவ்வுக்கு..? த்து இதைய நான் வேற நம்பணும்..” – காவ்யா

“ஹிஹிஹிஹி முதல்ல என் ஆளு ஐடியை கண்டுபிடிப்போம்டி..” என்று அர்த்த ராத்திரியிலும் ரூபனின் ஐடியை தேடுவதில் ஆதிரா மும்முரமாக இருக்க, வேறு வழியில்லாமல் காவ்யாவும் ஒவ்வொரு ஐடியாக பார்க்க துவங்கினாள்.

“எனக்கு ஒரு டவுட்டுடி.. நீ தான் அவங்களை ஞாபகம் வெச்சு பேசணும் பேசணும்னு இருக்க.. ஆனா உன் ஆளு இப்படி ஒரு பைத்தியத்தை பார்த்ததையே மறந்துட்டு அவங்க வேலையை தான் பார்த்துட்டு இருக்காங்க..” – காவ்யா

“இதிலிருந்து தாங்கள் கூற வருவது என்னவோ.??” – ஆதிரா

“அவங்க உன்னைய ஒரு ஆளாவே மதிக்கல.. நீ ஏன்டி அவங்களை ஞாபகம் வெச்சு என் உயிரை வாங்கிட்டு இருக்க.?” – காவ்யா

“உனக்கு சொன்னா புரியாது காவு.. பேசாம ஐடியை தேடுடி” என்று காண்டாகி ஆதிரா கூறிட, ‘போடிங்ங்ககக’ என்று வாய் வரை வந்த வார்த்தையை விழுங்கி கொண்டு காவ்யாவோ முகநூலில் வந்த மீம்ஸ்களை படிக்க ஆரம்பித்தாள்.

ஆதிராவுக்கும் காவ்யா கூறிய எண்ணம் இல்லாமல் இல்லை.. ஏனோ ரூபனின் நினைவே அவளை ஆட்டி படைக்க தொடங்கி இருந்தது. ‘அபி என்னைய மறந்துட்டியா.?’ என்று அடிக்கடி சந்தேகம் எழும்போதெல்லாம் மனதில் சிறுவலியும் தோன்றும்.

ஞாபகம் வந்தவளாக “டி திரா உன்னைய ரஞ்சித் ரொம்ப மிஸ் பண்றேனு சொல்ல சொன்னான்டி” என்று கிண்டலுடன் காவ்யா கூறிட, ரூபனின் நினைவில் இருந்த ஆதிராவோ இதை கேட்டு “நானும் என் ஆளை ரொம்ப மிஸ் பண்றேன்டி” என்றாள் பல்லை கடித்து.

“எதே.? ரஞ்சித் எப்ப உன் ஆளு ஆனான்.?” – காவ்யா

“நான் எப்ப ரஞ்சித்தை சொன்னேன்.?” – ஆதிரா

“பைத்தியமே எந்த உலகத்துல நீ இருக்க.?” – காவ்யா

“அதான் எனக்கும் தெரிலடி..” – ஆதிரா

“ஹே திரா.. என்னடி என்ன ஆச்சு.? இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்த.?” – காவ்யா

“ஒண்ணுமில்லடி நீ தூங்கு.. நானும் தூங்கறேன்..” என்ற ஆதிரா திரும்பி படுத்து கொள்ள, அவளை புரியாமல் ஏறிட்ட காவ்யாவுக்கு குழப்பமே எஞ்சியது.

ஆதிராவின் நினைவில் தான் ரூபனும் தூக்கத்தை தொலைத்திருந்தான்.. சிவாவின் வீட்டில் கஸ்தூரியின் பேச்சை கேட்டு அவன் ஆதிராவை தவறாக எல்லாம் நினைக்கவில்லை.. இந்த உலகத்தில் இது என்ன புது விசயமா.? என்று தூசு தட்டுவதை போல் தட்டி விட்டவன் கோவில் வேலையில் பிஸியாகியும் விட்டான்..

அடுத்த நாள் காலையில் அன்னையுடன் பெங்களூருக்கும் கிளம்பி விட்டான் அங்கிருக்க பிடிக்காமல்.!!

ஆதிரா கூறிய சமாதானம் அவனின் மூளையை சென்றடைந்தது போலும் அதற்கு பிறகு அவ்விசயத்தை சாதாரணமாக கடந்து வந்து சாதாரணமாக இருந்தான்.. ஆனால் மங்கையால் தான் அவ்வளவு எளிதில் அக்காரியத்தை மறக்க முடியாமல் மகனிடம் புலம்பி தள்ளினார்.

வேலைக்கு சென்று விட்டு வந்தால் போதும் அன்னையின் புலம்பலை கேட்கவே ரூபனுக்கு நேரம் சரியாக இருக்க, இதில் எங்கு ஆதிராவின் நினைவு எழும். ஆனால் அவ்வளவு எளிதில் மறக்க முடிபவளா அவள்.!!!

இனி அவளை அடுத்த வருடம் திருவிழாவில் தான் காண முடியும் நினைக்கும் போதே ஏக்கப் பெருமூச்சு எழும் அவனுள்.!! இப்போதும் அவளிடம் பேசியதை தான் நினைத்தவாறு படுத்திருந்தான்.

‘ஆதி’ என்று பெண்ணவளின் திருநாமத்தை உச்சரிக்கும் போதெல்லாம் அவனுள் புதுவித ரத்தம் பாய்ச்சிய உணர்வு.!!

‘அவங்க என்னைய மறந்துருப்பாங்களா.?’ என்று கேள்வி எழும் போதெல்லாம் எதையோ இழந்த உணர்வும் அவனை ஆட்கொண்டது. ‘இது தேவையில்லாத ஆசை.. அவங்க எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்னு நினைச்சிட்டு உன் வேலையை மட்டும் பாரு’ என்று அவனின் மூளை பலமுறை எச்சரித்து விட்டது ஆனால் அதை அவனின் மனது தான் கேட்க மறுத்து மீண்டும் மீண்டும் பெண்ணவளையே நினைத்து கொண்டிருக்கிறது.

‘அப்பா நீங்க இருந்திருந்தா நாங்க இங்க தனியா இருந்துருப்போமா.? ஏன்பா எங்களைய விட்டு போனீங்க.?’ என்று மானசீகமாக தந்தையிடம் கேள்வி எழுப்பியவனின் விழிகளும் கலங்கி போனது.

“ஹே கண்டிபிடிச்சுட்டேன்டி.. என் ஆளு ஐடியை கண்டுபிடிச்சுட்டேன்..” என்று உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆதிரா ஆர்பரிக்க, “த்து இதுக்கு எதுக்குடி இந்த அலப்பறை.?” என்று அவளை அடக்கினாள் காவ்யா.

காவ்யாவின் பேச்சை காதில் வாங்காமல் ரூபனின் ஐடியில் கவனமாக இருந்த ஆதிராவிடம் இருந்து போனை பிடுங்கிய காவ்யா ரூபனின் புகைப்படத்தை பார்த்தாள்.

“வாவ் அழகா இருக்காங்கடி..” – காவ்யா

“அவன் என் ஆளு..” – ஆதிரா

“இருந்துட்டு போகட்டும்.. சைட்டு அடிக்கறது அனைவருக்கும் பொதுவான சொத்து..” – காவ்யா

“செருப்பால அடிக்கறதும் அனைவருக்கும் பொதுவான சொத்து தான்டி..” – ஆதிரா

“ப்ச் போடி.. நான் கூட சொட்டை தலையனா இருப்பானோனு நினைச்சேன் பட் வாவ் சொல்ற அளவுக்கு அழகா இருக்காங்க..” – காவ்யா

“அதான்டி நானும் இத்தனை நாளா சொல்லிட்டு இருந்தேன்..” – ஆதிரா

“அவங்க கண்ணு எவ்ளோ அழகா இருக்குனு பாரேன்” – காவ்யா

“உண்மையாவே சொல்றேன்டி அவங்க மட்டுமில்ல அவங்க மனசும் பேரழகு தான்.. அவங்க கூட ஒரு கால் மணி நேரம் தான் பேசி இருப்பேன்.. அதையவே இன்னும் மறக்க முடில..” – ஆதிரா

இதை எதையும் கேட்காமல் காவ்யாவோ அவனுக்கு நட்பு அழைப்பு விடுவித்திட, “அடியேய் ஏன்டி.?” என்று ஆதிரா பதறி கத்தினாள்.

“என்ன ஏன்டி.? இருடி அவங்க என்ன பண்றாங்கனு பார்ப்போம்..” என்று சாதாரணமாக காவ்யா உரைத்த நேரம் நட்பு அழைப்பை ஏற்காத ரூபன் “ஹூ ஆர் யூ.?” என்ற குறுஞ்செய்தியை அனுப்பி இருந்தான்.

அவன் நட்பழைப்பை ஏற்பானா.? என்று பதற்றத்துடன் இருந்த ஆதிராவுக்கு குறுஞ்செய்தியை கண்டு மகிழ்வதா.? இல்லை அழுவதா.? என்றே புரியாமல் போனது.

“அய்யே என்னடி இவங்க உடனே மெசேஜ் பண்ணிட்டாங்க..” என்ற காவ்யா முகத்தை சுழிக்க, “ப்ச் இருடி எனக்கே ஒரு மாதிரி தான் இருக்கு” என்ற ஆதிராவுக்கும் ஒரு மாதிரியான நிலை.

“இனியும் இவங்க கூட பேசி தான் ஆகணுமா.?” என்று காவ்யா கேட்டதும், “ஏன் பேசுனா என்ன.? நான் பேசுவேன்” என்றவள் “டி என்ன பதில் சொல்றது.?” என்று புரியாமல் நெற்றியை சுருக்கினாள்.

“ம்ம்ம்ம்ம் உன் தாத்தாவோட பேரனோட பேத்திக்கு தங்கச்சி மகனு சொல்லுடி என் வெண்ணை..” என்று ஆதிராவை கிள்ளினாள் காவ்யா.

சிறிது நேரத்திற்கு முன்பிருந்த மனநிலை முற்றிலும் மாறி இருந்தது இருவரிடமும். “சும்ம்மா உங்க ஐடியை பார்த்தேன் அதான் ரிக்வஸ்ட்டு குடுத்தேன்..” என்று பதில்மொழியை அனுப்பினாள்.

“ஓஓஓஓஓஓ ஃபேக் ஆர் ஒரிஜினல் ஐடி.???” என்று கேள்விக்குறியுடன் பதில் வர, வாயை மூடி சிரிப்பை சிதற விட்ட காவ்யா “கண்டுபிடிச்சுட்டாங்கடி நீயே ஒரு பேக்குனு” என்றாள் கேலியுடன்.

அவளை முறைத்து “ஒரிஜினல் ஐடி தான்” என்று ஆதிரா கூற, “உங்க ஐடில எந்த போட்டோவும் இல்லயே.?” என்று ரூபனும் வினவிட, “அச்சோ” என்றவாறு ஆதிரா தலையில் அடித்து கொள்ள, “மண்டை மேல இருக்கற கொண்டையை மறந்துட்டியே கோபாலு” என்று அவளை ஓட்டி தள்ளினாள் காவ்யா.

“ப்ச் ந் வேற.. கம்முனு இருடி” என்று அவளை அடக்கி விட்டு “போட்டோ எல்லாம் ஃபேஸ்புக்ல போட மாட்டேன்..” என்று பதிலளித்தாள்.. “ஓஹோ நல்ல செயல்.. டேக் கேர் ஆஃப் யுவர் ஓன் வொர்க்” என்று ஆடவனிடம் இருந்து பதில் வந்தது பட்டென்று.!!

அந்த குறுஞ்செய்தியை பே வென்று முழித்தபடி ஆதிரா பார்த்திருக்க, “அடி உன் வேலையை பாருனு ரொம்ப டிசண்ட்டா சொல்லிட்டாங்கடி.. அய்யோ அய்யோ” என்ற காவ்யா விழுந்து விழுந்து சிரித்தாள்.

அவளின் சிரிப்பை உச்சக்கட்ட கடுப்புடன் பார்த்து “வாயை மூடுடி” என்று கடுகடுத்து “ம்ம்ம்ம் உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி” என்று பதிலளித்து விட்டு அலைப்பேசியை கட்டலில் தூக்கி எறிந்தாள்.

இன்னும் சிரித்திருந்த காவ்யாவை நகத்தை கடித்து துப்பியவாறு முறைத்திருந்த ஆதிரா “ஹலோ மேடம் என் ஆளு உடனே மெசேஜ் பண்ணுனதும் இவங்க கூட பேசி தான் ஆகணுமானு கேட்டீயே.. பாரு என் மாமியாரு பையனை எப்படி நல்லவங்களா வளர்த்தி இருக்காங்கனு.?” என்றதும் காவ்யாவின் சிரிப்பு அடங்கியது.

இதில் வெற்றிக்களிப்பை ஏந்திய புன்னகையில் ஒற்றை கண்ணை மடித்து “தேவையில்லாம பொண்ணுக கூட கடலை போடாம உங்க வேலையை பாருனு சொன்னானே.. இப்பவாவது என் ஆளை பத்தி உனக்கு புரிஞ்சுச்சா.?” என்று புருவத்தை உயர்த்தி ஆதிரா கேட்டிட, ‘அடிப்பாவி’ என்ற ரீதியில் அவளை பார்த்தாள் காவ்யா.

இதற்கு மேல் காவ்யாவிடம் பேசினால் அவ்வளவுதான் என்றுணர்ந்து அமைதியாக ஆதிரா படுத்து கொள்ள, இன்னும் ஙே வென்று காவ்யாவோ அவளை பார்த்திருந்தாள்.

‘டேய் அபி.. இனி நீயே பேசுனாலும் நான் உன் கூட பேச மாட்டேன்.. அவ சொல்ல சொல்ல கேட்காம உன் கூட பேசணும்னு இருந்தேன்ல எனக்கு இது தேவை தான்..’ என்று ரூபனை கருவினாள் ஆதிரா.

உண்மையில் ரூபனுக்கு குறுஞ்செய்தியை கண்டதும் ஆதிராவின் நினைவு எல்லாம் எழவில்லை.. யாரோ தன் நண்பர்கள் தான் தன்னிடம் விளையாடுகிறார்கள் என்று இப்படி பேசியது.. அவர்கள் நட்புக்குள் இப்படி விளையாடுவது சாதாரணம் ஒன்று என்பதால் அவர்களின் கேலி கிண்டல்களுக்கு ஆளாகி விட கூடாது என்று தான் பேச்சையும் முடித்து கொண்டது.

சிவாவின் ஐடியில் திருவிழாவின் போது அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படத்தையே கண் எடுக்காமல் ரூபன் பார்த்திருக்க, “ஆதி என்னைய மறந்துட்டியா.?” என்று முணுமுணுத்தது ஆடவனின் அதரங்கள்.

அதே நேரம் ‘நான்தான் உன்னைய மறக்காம இருக்கேன்.. ஆனா இப்படி ஒருத்தியை பார்த்ததையே நீ மறந்துட்டியல்ல அபி.. ஆனா என்னால உன்னைய மறக்க முடிலடா..’ என்று மனதினுள் புலம்பி கலங்கினாள் பெண்ணவள்.

பார்த்து பழகியது

ஒரு நாள் என்றாலும்

நீயும் உன் நினைவும்

தினம் தினம் என்னை

ஆட்டி படைப்பது ஏனடா(டி).??

அழகிய பூகம்பம் தொடரும்..

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்