
பூகம்பம் – 39
ஆதிராவின் தந்தையே ரஞ்சித்திடம் பேசிட, அவனோ தன்மையாக வேணாம் என்று மறுத்திருந்தான்.!! அதில் அவருக்கு தான் ஏகப்போக வருத்தம். அந்த வருத்தத்தை கோவமாக ஆதிராவிடம் காட்டவும் செய்தார்.
“நீங்க கோவப்பட்டாலும் அடிச்சாலும் சரி என் அபியை தவிர வேற யாரும் எனக்கு வேணாம்பா” என்று கூறி அவரின் சினத்தை இன்னும் ஏற்றிட, அடி கை ஓங்கியவரிடம் இருந்து மகளை இழுத்து தன்பக்கம் நிறுத்தினார் அவளின் அன்னை.!!
அதோடு கோவமாகவும் அவளை சாடினார். “ஏன்டி இப்படி பண்ணி தொலையற.? நாங்க உயிரோடு இருக்கறதா.? வேணாமா.? அந்த பையன் வேணாம்னு சொல்றோம்ல.? கேட்கவே மாட்டியா.? உனக்கு ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செஞ்ச இந்த மனுசனுக்கு உனக்கு எப்படிப்பட்ட வாழ்க்கையையும் அமைச்சு குடுக்கணும்னு தெரியாதா.?
உன் இஷ்டத்துக்கு ஆடறதுக்கு இது என்ன விளையாட்டா.? வாழ்க்கைடி.. உன் வாழ்க்கையை நினைச்சு பயந்து தான் நாங்க வேணாம்னு சொல்றோம்.. உனக்கு பின்னாடி தங்கச்சி ஒருத்தி இருக்கா.. அதாவது ஞாபகம் இருக்கா.? இல்லையா.?”
“ம்மா” என்று அழுகையுடன் ஏதோ கூற வந்து பின்பு அமைதியாகி பெற்றவர்களை உம்மென்று முறைத்தவள் விறுவிறுவென தனதறைக்கு சென்று விட்டாள்.
‘என் அபிக்கு என்ன குறை.?’ என்று பெற்றவர்களிடம் கேட்டு விட அவளின் வாயும் துறுதுறுத்தது. இருந்தும் அவர்களின் நிலைமையில் இருந்து யோசித்ததும் அடங்கியும் விட்டாள் ஒரு முடிவுடன்.!!
காவ்யாவிற்கு அழைத்து “டி சென்னைக்கு கிளம்பல.?” என்று வினவ, “நாளைக்கு கிளம்பிருவேன்டி.. நீ என்ன பண்ண போற.?” என்றவளிடம்”எனக்கு தெரிலடி” என்றாள்.
“நிலைமை எப்படி இருக்கு.?”
“அது மோசமா தான் இருக்கு..”
“அம்மா ஏதாவது சொன்னாங்களா.?”
“கூடவே அப்பாவும் இலவசமா நாலு திட்டு திட்டுனாரு..”
“என்னவாமா.?”
“நம்ம பார்த்த பையனை அவங்க கல்யாணம் பண்ணி வெச்சாலும் நம்ம திரும்பி வாழாவெட்டியா வந்துருவோம்னு இவங்களே முடிவு பண்ணி பேசிட்டு இருக்காங்க..”
“ஆஹான் அப்ப அவங்க பார்த்து கட்டி வெச்சு திரும்பி வீட்டுக்கு வந்துட்டா என்ன பண்ணுவாங்களாமா.?”
“ஹான் கைகாலை கட்டி மறுபடியும் நம்மளைய அந்த பாழுங்கிணத்துல தான் தள்ளி விடுவாங்க..”
“அதுக்கு நம்மளே ஒரு கிணத்துல விழுந்தரலாமேடி..
“அது தான் தப்புங்கறேன்..”
“இவங்களே வெச்சுட்டு..” என்று காவ்யா இழுக்க, “ஒன்னும் பண்ண முடியாதுடி” என்று முடித்தாள் ஆதிராவே.
“டி நம்ம பார்த்துருக்கற மூஞ்சி எல்லாம் இவங்க பில்டப் பண்ற அளவுக்கு வொர்த்ஆஆஆ என்ன.?”
“நமக்கு தெரியுது இவங்களுக்கு தெரியணுமே.?”
“அது தெரிஞ்சா அவங்களே துரத்தி விட ரெடியா இருந்துருப்பாங்களே.?”
“அப்படி ரெடியா இருந்தா நான் ரொம்ப ஹேப்பி ஆகிருப்பேனே..”
“சரி விடு ரெடியாக வெச்சுருவோம்..” என்று தோழிகள் இருவரும் கோரசாக கூறி சிரித்தும் கொண்டனர்.
சிவாவிடம் போனில் பேசுவதை விட நேரில் பேசுவதே நல்லது என்ற எண்ணத்தில் லீவு கிடைக்கும் வரை நாட்களை யுகமாக கடத்தி இருந்த ரூபன் இதோ ஊருக்கும் வந்து விட்டிருந்தான்.
நல்லவேளை அவனை சிவாவின் அன்னையும் மனைவியும் பார்க்கவில்லை. ரூபனை பார்த்து முதலில் திகைத்த சிவா “ப்ச் இப்ப நீ எதுக்குடா இங்க வந்த.?” என்று கடிந்து கொண்டாலும் அவனை அனுப்பி விடுவதிலேயே குறியாக இருந்தான்.
அதை கேளாமல் “அண்ணா என்னைய மன்னிச்சிருங்க” என்று கெஞ்சலுடன் ரூபன் நிற்க, “டேய்ய்ய் இப்ப இதுவா முக்கியம்.. முதல்ல இங்கிருந்து கிளம்புவோம் வா..” என்று வம்படியாக அவனை இழுத்து சென்றான் சிவா.
“அண்ணா தப்புதான்.. நான் பண்ணுனது தப்புத்தான்.. நான் வேணாம்னு தான் இருந்தேன்.. ஆனா ஆதியை மறக்க முடியல.. ஆதி எனக்கு வேணும்ணா.. ப்ளீஸ்ண்ணா..” என்றவனை கோவமாக பார்த்த சிவா “உங்ககிட்ட இதைய எதிர்ப்பார்க்கலடா.. இன்னும் கோவம் இருக்கத்தான் செய்யுது.. அதற்காக எப்படியோ போய் தொலைங்கனு எல்லாம் விட்டுற மாட்டேன்..” என்றாலும் அவனின் பார்வை முறைத்தபடியே இருந்தது.
“சாரிண்ணா..” என்று ரூபன் தலை குனிய, அதை கண்டு கொள்ளாமல் “அம்மாகிட்ட சொல்லிட்டீயா.? அவங்க என்ன சொல்றாங்க.?” என்று கேட்டான்.
“ம்ம்ம் சொல்லிட்டேன் ண்ணா..”
“என்ன சொன்னாங்க.?”
“முதல்ல கோவப்பட்டாங்க.. அப்பறம் சமாதானமாகிட்டாங்க..”
“என் மாமாகிட்ட பேச ரெடியா.?”
“ம்ம்ம் பேசலாம்ண்ணா..”
“ஆனா இப்ப இல்ல..”
“ண்ணா..???”
“அவங்க கோவம் கொஞ்சம் குறையட்டும்.. அப்பறம் பேசலாம்.. இப்பவே பேசுனா சரி வராது.. உங்கமேல வெச்சுருக்கற என் நம்பிக்கையை பொய்யாக்க மாட்டிங்கனு நினைக்கறேன்..”
“உங்க எல்லாரோட சம்மதம் கிடைச்சா மட்டும் தான் நான் ஆதியை கல்யாணம் பண்ணுவேன்.. இல்லனா விலகவும் தயங்க மாட்டேன்.. இதுல என்னைய நீங்க நம்பலாம்ண்ணா..” என்றான் உறுதியாக.!!
“எனக்கு என்ன சொல்றதுனு தெரிலடா.. ஒரு பக்கம் கோவமாவும் வருது.. இன்னொரு பக்கம் உங்களைய அப்படியே விடவும் மனசு வர மாட்டிங்குது.. ரஞ்சித்துக்கு ஆதியை கேட்டதை தெரிஞ்சும் எப்படிடா அவளை காதலிச்ச.?” என்று அவனின் மனதை உறுத்திய கேள்வியை கேட்டான் சிவா.
‘அதுல ஆதிக்கும் விருப்பம் இருந்துருந்தா அவ கூட பேசிருக்கவும் மாட்டேன்.. ஆதியை முதல்ல பார்த்ததுமே ரொம்ப பிடிச்சுது அண்ணே..’ என்று மனதில் நினைத்ததை வெளியில் கூற தைரியமின்றி தலையை கவிழ்த்து கொண்டான்.
அவனிடம் இருந்து பதில் வரும் என்று எதிர்பார்த்து அவனையே சிவா பார்த்திட, ரூபனோ எதுவும் பேசாமல் மௌனமாகவே நின்றிருந்தான்.
இறுதியில் சிவா தான் “சரி விடு.. இனி நடக்கறதை மட்டும் பேசலாம்..” என்று இப்பேச்சை சற்று ஏமாற்றத்துடன் முடித்து விட்டான். இருவரும் பேசி கொண்டாலும் முதலில் இருந்த ஒற்றுமை எங்கோ பறந்திருக்க, இருவரிடமும் ஏதோ ஒரு தயக்கம் ஒட்டி கொண்டது.
சிவாவிடம் இருந்து விடைபெற்று ரூபன் கிளம்பிட, அவனின் மனமெங்கும் ஆதியின் நினைவடுக்குகள் தான்.. ‘அவளிடம் பேசலாமா.?’ என்ற எண்ணமும் எழ, ‘வேணாம் அவ அப்படியே இருக்கட்டும்.. அப்பதான் எந்த முடிவு வந்தாலும் ஏத்துக்க முடியும்’ என்று நினைத்தவனுக்கே சுள்ளென்ற வலி ஒன்று தோன்றியது உண்மையே.!!
ஆதிராவின் பெற்றோரின் கோவமும் குறைந்த பாடில்லை.. ஆதியும் பிடிவாதத்தில் இருந்து பின்வாங்கவும் இல்லை.. காவ்யா சென்னைக்கு கிளம்பி இருக்க, வீட்டில் இருந்தபடியே வேலையை தொடர்ந்து கொண்டிருந்தாள் ஆதிரா.
கண்டிப்பாக ஆபிஸூக்கு வந்தே ஆக வேண்டும் என்ற கட்டளை வந்ததும் பெற்றவர்களின் முன்பு வந்தவள் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே என்னைய வீட்டுக்குள்ள வெச்சுருக்க போறீங்க.? நான் என் அபி கூட போகணும்னு நினைச்சுருந்தா எப்பவே போய்ருப்பேன்..
இந்தளவுக்கு பொறுமையா இருக்க மாட்டேன்.. நீங்க சம்மதம் சொல்லாம நான் எதுவும் பண்ண போறதில்லை.. எனக்கு துருவினி வாழ்க்கையும் முக்கியம்.. அவ எப்படியோ போகட்டும்னு எல்லாம் நான் நினைக்க மாட்டேன்..
நான் என் அபி கூட போய்ட்டா அது உங்களுக்கு மட்டுமில்ல துருவினிக்கும் கஷ்டம் தான்.. அந்த தப்பை செய்ய மாட்டேன்மா.. நீங்க சம்மதம் சொன்னா தான் என் அபி கூட என் கல்யாணம் நடக்கும்.. இல்லனா கடைசி வரைக்கும் உங்க மகளாவே இருக்கவும் நான் தயாரா இருக்கேன்..
என் வாழ்க்கை அவன் கூட மட்டும் தான்.. அவனை விட்டுட்டு வேற யாரையும் நான் கல்யாணமும் பண்ண மாட்டேன்.. அதுக்கு தயாராகவும் இல்லை.. நாளைக்கு நைட்டு சென்னைக்கு கிளம்பறேன்மா..
நான் ஓடி போய்ருவேனு உங்களுக்கு பயமே வேணாம்.. நீங்க சம்மதிக்காம நான் அபி கூட போக மாட்டேன்.. பயப்படாம இருங்க..” என்றாள் முடிவாக.
“நீ ஒன்னும் வேலைக்கு போய் கிழிக்க வேணாம்.. வீட்டுலயே இரு..”
“ம்மா புரியாம பேசாத.. நம்ம இஷ்டத்துக்கு உடனே வேலை வேணாம்னு விட முடியுமா.?”
“அதெல்லாம் தெரியாது.. நீ போக கூடாது..”
“நான் போவேன்மா.. கண்டிப்பா நாளைக்கு நான் போக தான் போறேன்..”
“போக வேணாம்னு நான் சொல்றேன்ல.?”
“அய்யோ அம்மா வேலை வேணாம்னு ரிசைன் பண்ணுனாலும் எப்படியும் ஒரு மூனு நாலு மாசம் வேலை பார்த்து தான் ஆகணும்.. அது என்ன என் தாத்தா நடத்தற கம்பெனியா.? இஷ்டத்துக்கு நான் வேலை விட்டுட்டு வீட்டுல இருக்க.?” என்று கடிந்தாள்.
அவளின் அன்னை பேசும் முன்பே வேணாம் என்று தடுத்து “நான் கிளம்ப தான் போறேன்மா.. என் அபியை ஏத்துக்க மனசு வந்தா மட்டும் சொல்லுங்க.. இல்லனா உங்க சின்ன மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுருங்க..” என்றவள் நிற்காமல் சென்று விட்டாள்.
‘அடிப்பாவி அக்கா.. உன் ருட் சரியாக என்னைய ஏன்டி கோர்த்து விட்டு போற.?’ என்று துருவினி புலம்ப, “பாருங்க அவ எப்படி பேசிட்டு போறானு.. எல்லாம் அவன் தான் சொல்லி குடுத்துருக்கணும்.. என் பொண்ணை எனக்கு எதிராவே திருப்பி விட்டுட்டான்..” என்று ரூபனை வசைபாடினார் அவளின் அன்னை.
‘ஆமா இவளுக்கு எதுவுமே தெரியாது பாரு.. அவங்க சொல்லி குடுத்து தான் பேசறானு வேற சொல்லிட்டு இருக்க.. மம்மி மம்மி நீ பெத்த புள்ளையோட லட்சணம் என்னனு உனக்கே தெரியுமே.?’ என்று நினைத்த துருவினி எதற்கு வம்பென்று வெளியில் கூறாமலே நகர்ந்தாள்.
“உன்னைய பார்த்தே ஆகணும் அபி.. மறுப்பு சொல்லாம சென்னைக்கு வர பாரு.. முடியாதுனு மட்டும் உன் பதில் வந்துச்சு நானே அங்க கிளம்பி வந்துருவே
ன்..” என்று மிரட்டலுடன் கூடிய குறுஞ்செய்தியை ரூபனுக்கு அனுப்பி வைத்தாள் இந்த அடங்காபிடாரி.!!!
எதிரெதிர் திசையில் அமர்ந்திருந்தனர் ஆதிராவும் ரூபனும்.!! முதலில் வர வேண்டாம் என்று தான் நினைத்தான்.. ஆனால் ஆதிரா சொன்னதை செய்வாள் என்பதை உணர்ந்து வருவதாக கூறியவன் இப்போது அவளுக்கு எதிர் திசையில் அமர்ந்திருக்கவும் செய்கிறான்.
“இப்படியே பேசாம இருந்தா சரி போலாம்னு சொல்லிருவனா என்ன.?” என்று ரூபனின் அமைதியை கலைத்தாள் பெண்ணவள்.
“அப்படி சொல்லிட்டா தான் அதிசயம்.. நீ அப்படி சொல்ல மாட்டேனு தெரிஞ்சும் நான் ஏன் அதைய நினைக்கணும்.?”
“இதெல்லாம் வக்கணையா பேசு.. அப்பறம் ஏன்டா பேச கூடாதுனு சொன்ன.?”
“…..”
“அவங்க வேணாம்னு சொல்லிட்டா நீயும் என்னைய விட்டுட்டு போற முடிவுல தான் இருக்கீயா.?”
“……..”
“அபி உனக்கு நான் வேணாமா.?” என்று கேட்ட போதே பெண்ணவளின் குரல் கம்மி விழி நீரையும் சிந்திட, “ஹேய் ஆதி” என்று பதறியவன் எழுந்து அவளருகில் சென்று அமர்ந்தான்.
பெண்ணவளின் தளிர்கரத்தை தன்னுள் பொதித்து “அந்தளவுக்கு எல்லாம் நான் எதையும் யோசிக்கல கண்ணம்மா.. அவங்க வேணாம்னு சொன்னாலும் என் ஆதி என்னைய விட மாட்டானு நம்பிக்கைல தான் தைரியமா இருக்கேன்.. நீ இல்லாத வாழ்க்கை என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது ஆதி..”
“பொய் சொல்லாதடா.. அப்பறம் ஏன் பேச கூடாதுனு சொன்ன.?”
“தெரியாம சொல்லிட்டேன்.. இனி சொல்ல மாட்டேன் போதுமா.? முதல்ல அழுகறதை நிறுத்தி கண்ணை துடை”
“அவ்ளோ கஷ்டப்பட்டு என் கூட பேச தேவையில்ல.. உனக்கு தான் நான் தேவையில்லாம போய்ட்டேன்ல.?”
“ஹேய் அப்படி இல்லமா..”
“ரொம்ப சலிச்சுட்டு பேச வேணாம்.. நீ போகலாம்..”
“பைத்தியம்” என்று அவளின் தலையில் கொட்டியவன் “வர வர வீம்பு ஜாஸ்தியாகுது உனக்கு.. நான் தான் சாரி சொல்றேன்ல.?” என்றிட, “நீ எதுக்கு என்கிட்ட சாரி சொல்லணும்.. நான் யாரு உனக்கு.?” என்று கேட்டவள் முகத்தை உம்மென்று வைத்தும் கொண்டாள்.
“நான் போய்ருவேன்..”
“போ”
“கண்டிப்பா கிளம்பிருவேன்..”
“கிளம்பு மேன்..”
“சுயர்.?”
“ம்ம்ம்ம்ம்”
“ஓக்கே பாய்..” என்று உண்மையாகவே ரூபன் எழுந்திட, பதறிய ஆதிரா தான் அவனின் சட்டையை பிடித்து இழுத்து “போன்னா போய்ருவீயோ.?” என்று சண்டைக்கு நின்றாள்.
“நீதான் மூஞ்சியை தூக்கி வெச்சுருக்கீயே.?”
“அதுக்கு காரணம் நீதான்..”
“நானா.?”
“ஆமா.. இப்ப எல்லாம் என் மேல உனக்கு பாசமே இல்ல.?”
“ஹான்.?”
“ஆமா.. முன்ன மாதிரி என்கிட்ட பேசறதும் இல்ல.. ஏதாவது சொன்னாலும் கேட்கவும் மாட்டிங்கற.?”
“அது சரி.. நீ பேசுமா பேசு.. நான் கேட்கறேன்..”
“பாரு கிண்டல் பண்ற.? என் மேல உனக்கு…” என்று ஆரம்பித்தவளை நிறுத்தி “என்ன பாசமில்லையா.?” என்று இவனே கேட்க, ‘ஹூம்’ என்று மறுத்து “காதலே இல்ல..” என்று உதட்டை பிதுக்கினாள்.
இவனுக்கு தான் டேபிளில் தலையை முட்டி கொள்ளலாம் என்றிருந்தது.. பின்பு மென்மையாக “ஆதிமா இப்படி பிடிவாதம் பிடிச்சா எப்படிமா.? நான் பாவம்ல.? உன் மேல இருக்கற காதலும் பாசமும் எப்பவும் குறையாது.. நீயே ஏன் அப்படி நினைச்சுக்கற.?” என்று அழுகாத குறையாக அவன் கேட்டான்.
அவள் பேசாமல் அமர்ந்திருக்க, “உன் சிரிப்பை பார்க்கலாம்னு வந்த என்னைய ஏமாத்திட்டு இருக்கீயல்ல.? நான் தான் உன் மேல கோவப்படணும்..” என்று பாவமாக கூறியதும் சிரிப்பை அடக்க முடியாமல் வாய் விட்டு சிரித்தாள் ரூபனின் ஆதி.
அவளின் சிரிப்பை ரசனையாக பார்த்து “கேடி ஆதி நீ.!” என்று மென்புன்னகையில் உரைத்திட, முகத்தை மூடி விரல் இடுக்கையில் தன்னவனை கண்டு மேலும் சிரிப்பை சிதற விட்டாள்.
“என்ன நடக்குமோனு பயமா இருக்கு அபி..”
“நீயே இப்படி பயந்தா எப்படிமா.?”
“ஏன் நான் பயப்பட கூடாதா.?”
“அப்படி இல்லமா..”
“வேற எப்படி.?”
“சாரி சாரி ஆதிமா.. மறுபடியும் மலை ஏறி உச்சில உட்கார்ந்தராத.. மீ பாவம்..”
“சிவா மாமாகிட்ட பேசுனீயா.?”
“ம்ம்ம்ம்ம் அவங்க வெய்ட் பண்ண தான் சொல்றாங்க.. பொறுமையா இருப்போம்டா.. கண்டிப்பா சம்மதம் கிடைக்கும்..”
“அந்த நம்பிக்கைல தான் இருக்கேன் அபி.. அவங்க சம்மதிக்கலனா கண்டிப்பா உன் கூட நான் வந்துருவேன்.. வேற எவனையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்..”
“ஏய்ய்ய்ய்”
“நீயும் முடியாதுனு சொன்னா நான் உண்மையாகவே செத்துருவேன் அபி..” என்றதும் ரூபன் தான் பதறி “பைத்தியம் மாதிரி பேசாம இரு ஆதி” என்று அதட்டினான்.
“அவங்க சம்மதிக்கலனா என்னைய வேணாம்னு சொல்ல மாட்ட தானே நீ.?”
“கண்டிப்பா சம்மதிப்பாங்க..”
“நான் கேட்டதற்கு பதில் சொல்லு..”
“இந்த கேள்வியே அவசியமில்லாதது..”
“அவசியமானது தான்.. என்னைய வேணாம்னு சொல்ல மாட்ட தானே.?”
‘கடவுளே’ என்று நொந்து “மாட்டேன் ஆதி.. உன்னைய வேணாம்னு எப்பவும் சொல்ல மாட்டேன்..” என்றான் அழுத்தமாக. பின்பு “இப்படி போட்டு படுத்தாம இரு தாயே.!! என்னால முடியல..” என்று பாவமாகவும் கூறினான்.
இப்போதும் அவளிடம் குறுஞ்சிரிப்பு உதயமானது.. அவனின் தோளில் சாய்ந்து கொள்ள, பொது இடம் என்பதால் அவஸ்தையில் ரூபன் நெளிந்திட, “யாரும் கண்டுக்க மாட்டாங்க அபி.. நீ நெளியாம உட்காரு.. ஒழுங்கா லவ்வு கூட பண்ண முடியல.. போடா.. ஆமா உனக்கு லவ் பண்ண தெரியுமா.? தெரியாதா.?” என்று அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்தாள் பெண்ணவள்.
தலைக்கு மேல் பெரிய கும்பிடு போட்டவன் “போதும் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத.. நான் நேராவே இருக்கேன்..” என்றவனை செல்லமாக அடித்தாள் இவள்.
அன்றைய நாள் முழுவதும் இருவரும் ஒன்றாக சுற்றினர்.. மனமும் நிறைந்திருந்தது. அன்றிரவே அவன் கிளம்ப வேண்டி இருக்க, மனதே இல்லாமல் கிளம்பவும் செய்தான்.
“அவங்க சம்மதிக்கற வரைக்கும் கோவப்படாம பொறுமையா இரு ஆதி.. அவங்களுக்கும் ஏமாற்றமா இருக்கும் தானே.? அவங்களையும் கொஞ்சம் புரிஞ்சுக்கமா..” என்று பல நூறு தடவை கூறி விட்டே ரூபன் புறப்பட்டான்.
நாட்கள் தான் கடந்ததே தவிர ஆதிராவின் பெற்றோரும் சம்மதிப்பதை போல் தெரியவில்லை.. ஆதிராவை வீட்டிற்கு வர சொன்னால் முடியவே முடியாது என்று மறுக்கிறாள்.
பெற்றோரின் கண்ணீரையும் துருவினியால் காண முடியவில்லை.. ஆதிராவின் விருப்பத்திற்கும் தடை கூற முடியவில்லை.. அவர்களுக்கிடையில் துருவின் நிலைமை தான் படு மோசம்..
காதலே வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்து விட்டிருந்தாள்.. ரஞ்சித்தையும் ஒரேயடியாக மறுத்திட, அவனோ பித்து பிடித்தவன் போல் சுற்றி கொண்டிருக்கிறான்.
வீட்டில் பேசுகின்றேன் என்றவனிடம் “நீயே வேணாம்னு சொல்றேன்.. அப்பறம் எதுக்கு வீட்டுல பேசணும்.? ஒரு தடவை சொன்னா புரியாதா.? நான் உயிரோடு இருக்கறது பிடிக்கலயா.? செத்து தொலைஞ்சரட்டுமா.?” என்று கோவமாக கேட்டு அவனின் வாயையும் அடைந்திருந்தாள்.
துருவினிக்கு அவனை பிடித்திருக்கிறது.. ஆனால் மீண்டும் பெற்றவர்களை இந்நிலைமைக்கு தள்ள கூடாது என்ற இறுமார்ப்புடன் இருக்கிறாள்.. இப்போது வந்த காதல் இப்போதே கரையட்டும்.. பெற்றவர்களை விடவா அந்த காதல் பெரியது.? என்ற எண்ணம் அவளுக்கு.!!
ஆனால் ஆதிராவின் மனநிலையோ பெற்றவர்களை விட காதல் தான் வேண்டும் என்றது தான்.!! இரு வேறு மனநிலையை கொண்ட ஒன்றாக பிறந்த இரு பெண்கள் அவர்களின் முடிவில் உறுதியாக இருந்தாலும் மனதளவில் மரித்து போய் கிடக்கிறார்கள்..
இதில் காவ்யா தான் என்ன நடந்தாலும் ஏற்று கொள்ள நான் தயார் என்பதை போல் சாதாரணமாக வலம் வந்து கொண்டிருக்கிறாள். அவளின் காதல் தான் இவர்களை விட அந்தரத்தில் தொங்கி கொண்டு இருக்கிறதே.!! ஆனாலும் அவள் அவளின் காதலில் உறுதியோடு இருப்பதால் எதை பற்றியும் கவலைப்படுவது போல் தெரியவில்லை..
“ரூபன் இன்னுமா அவங்க சம்மதம் சொல்லாம இருக்காங்க.?” என்று அசோக் கேட்க, “அவங்களுக்கு விருப்பம் இல்ல போலடா.. எனக்கு என்ன பண்றதுனே தெரியல.. ஆதியை தான் சமாளிக்கவே முடியல..” என்றான் வருத்தமாக.!
“அவங்களுக்கு இவ்ளோ பிடிவாதம் ஆக கூடாதுடா..”
“உன்னைய விட கம்மி தான் அசோக்”
“……”
“காவ்யா விடாம உன் பின்னாடி சுத்திட்டு இருக்காங்க.. நீ எப்படி வேணாம்னு இருக்கீயோ அப்படித்தான் ஆதி பெற்றோரும் இருக்காங்க..”
“ப்ச் இப்ப எதுக்கு என் விசயத்தை இழுக்கற.?”
“நீ கேட்டதுக்கு பதில் தான் சொன்னேன் நண்பா.. நீயே வேணாம்னு சொன்னாலும் காவ்யா விட மாட்டா.. உன்கிட்ட இல்லாத தைரியம் அவகிட்ட நிறையவே இருக்கு.. அவளே அவ பெத்தவங்க கிட்ட பேசி சம்மதிக்க வெச்சுருவா.. அப்பறம் எப்படி நீ முடியாதுனு சொல்ல முடியும்.? சொன்னாலும் விட்டுருவாங்களா என்ன.?” என்று கேட்டான் கேலியுடன்.
தலையில் அடித்து கொண்டு அசோக் செல்ல, ‘பார்க்கறேன்டா இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பேனு..’ என்று நினைத்து “தங்கச்சிமா உன் ஆளுகிட்ட பேசறது ரொம்ம்ம்ம்ம்ம்ப கஷ்டம்.. இவனை சம்மதிக்க வெக்கறதுக்கு பதிலா அவன் அம்மாவை சம்மதிக்க வெய்யு..” என்றான் அழைப்பில் இருந்த காவ்யாவிடம்.!!
“அப்படித்தான் பண்ணனும் போலண்ணா.. சம்மதம் மட்டும் சொல்லட்டும்.. அவனை வெச்சு செய்யறேன்.. மனுசனா அவன்.. எப்ப பார்த்தாலும் என்னைய அலைய விடறதே பொழைப்பா வெச்சுருக்கான்” என்று புலம்பியபடி அழைப்பை துண்டித்தாள்.
தான் எவ்வளவு பேசியும் அசோக் பிடி குடுக்காமல் போனதில் ரூபனை விட்டு காவ்யா பேச கூறிட, அவனும் அவளை பார்க்க பாவமாக இருந்ததால் நண்பனிடம் பேச முயன்றிட, இப்போதும் அந்த அழுத்தக்காரன் தப்பித்து விட்டான்.
சிவாவின் தந்தை ஆதிராவுக்காக அவளின் பெற்றோரிடம் பேச வந்திருந்தார்.. அவள் தான் சிவாவிற்கு போன் செய்து அழுதழுது அவர்களின் மனசையும் இளக வைத்திருந்தாள்..
“இப்ப என்ன தான்டா உன் பிரச்சனை.? ஆதிரா ஒன்னும் தப்பானவனை தேர்ந்தெடுக்கல.. ரூபன் நல்ல பையன் தான்.. அவன் கிட்ட என்ன குறை கண்டேனு இப்படி பிடிவாதம் பிடிச்சுட்டு இருக்க.? புள்ளையோட வாழ்க்கையை கெடுத்தராத..
ஒரு பக்கம் நீயும் முடியவே முடியாதுனு பிடிவாதம் பிடிக்கற.? மறுபக்கம் அவளும் அவன் தான் வேணும்னு பிடிவாதம் பிடிக்கறா.. யாராவது ஒருத்தர் விட்டு குடுத்தா தப்பு இல்லயே.. பெத்த புள்ளை கிட்ட எ
துக்குடா உனக்கு வீம்பு.?” என்று பொரிந்து தள்ளினார்.
அவரின் பதில் என்ன.? ஆதிராவின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுவாரா.? மாட்டாரா.?

