Loading

அத்தியாயம் – 28

திடீரென்று ஆதிரா கூறியது ஞாபகம் எழுந்ததும் “ப்ரதர் உங்க லவ்வு வேற லெவல் போங்க.. அவங்க அம்மா வயித்துல ஆதிரா இருந்தப்பவே நீங்க லவ் பண்ண ஆரம்பிச்சுட்டிங்களாமா.. கேட்டதும் இப்படியும் ஒரு லவ்வானு ஷாக்கு” என்று புல்லரித்து கூறினான்.

‘அட பைத்தியமே.!!’ என்பதை போல் ஆதிரா ரஞ்சித்தை முறைக்க, ‘இது ஒரு லூசு இது சொல்றதையும் இவன் நம்பிட்டு இருக்கான் அய்யோ அய்யோ’ என்று நினைத்த துருவினிக்கு எங்கையாவது முட்டி கொள்ளலாம் என்றிருந்தது.

‘என்னடி இது.?’ என்பதை போல் ரூபனின் பார்வை தன்னவளின் மீது படிந்ததும் பெண்ணவள் முழித்திட, “என்ன ப்ரதர் உங்க லவ் ஸ்டோரி எப்படி தெரிஞ்சுச்சுனு யோசிக்கறீங்களா.? ஆதிரா தான் சொன்னாங்க..” என்று மேலும் கூறினான்.

ரூபனின் நிலைமை தான் மோசம்.. இவள் இன்னும் என்ன என்ன கூறி வைத்திருக்கிறாள் என்று தெரியாமல் மண்டை காய்ந்தது.

‘அடேய் லூசு இந்த பைத்தியத்தை பத்தி மொதல்லயே ரூபன் அண்ணாக்கு தெரிஞ்சுருந்தா எஸ்கேப் ஆகிருப்பாருடா.. தெரியாதனமா இவகிட்ட மாட்டிக்கிட்டாரு இதுல நீ வேற’ என்றதாக இருந்தது காவ்யாவின் எண்ணங்கள்.

மேலும் ஏதோ கூற வர, போதும் என்பதை போல் தடுத்த ஆதிரா “தெய்வமே இந்த பேச்சை விடேன்” என்று கெஞ்சி “சாமியை பார்க்க போலாம்” என்றவள் முதல் ஆளாக அங்கிருந்து நகர்ந்தாள்.

தன்னவளை பொய் கோவத்துடன் முறைத்தபடி ரூபனும் ‘உன்னைய லூசுனு சொல்றது தப்பே இல்லடி’ என்று நினைப்பதை தவிர அவனால் வேறு என்ன செய்ய முடியும்.?

தன்னவளை முறைத்தபடியே ரூபன் இருக்க, “இருடா வந்தறேன்” என்ற அசோக் பிரகாரத்தை சுற்ற போனான். அவனின் பின்னே “டி திரா நானும் அப்படியே போய் என் ஆளை கரெக்ட் பண்ணிட்டு வந்தறேன்” என்று குதூகலத்துடன் கூறிய காவ்யா துள்ளலுடன் சென்றாள்.

‘இது செருப்படி வாங்காம அடங்காது’ என்று ஆதிரா நினைத்து கொண்டாள். எதுவும் கூறாமல் ரூபனும் எழுந்து செல்ல, “துரு தங்கம் நான் போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா.?” என்று பல்லை காட்டி கேட்டதில் காரணம் என்னவென்று உணர்ந்த அவளின் தங்கையும் “ச்சீ போய் தொலை” என்றாள் கடுப்புடன்.

கடைசியாக தான் ரஞ்சித் வந்தமர, மற்றவர்களை காணாமல் “அவங்கள காணோமே.?” என்று சுற்றியும் தேடியபடி கேட்டான்.. “வருவாங்க வருவாங்க” என்ற துருவினி வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.

“ஹலோ நீங்க சிங்கிளா.?” என்று ரஞ்சித் கேட்டதும் விழிகள் தெறிக்க அவனை முறைத்து “எனக்கு ரெண்டு பேபிஸ் இருக்கு” என்று கடுகடுப்புடன் கூறியதையும் நம்பிய அவன் “சாரி எனக்கு தெரில சிஸ்டர்” என்று சரணடைந்தான்.

“ஹஸ்பண்ட் என்ன பண்றாங்க.?” என்று கேட்டவனை வெட்டவா.? குத்தவா.? என்ற ரீதியில் முறைத்து “லூசு லூசு” என்று சீறி அவள் இருந்த கோவத்திற்கு ஆடவனின் மண்டையில் ஆறெழு கொட்டுகளை வைத்தாள்.

“அய்யோ ஏம்மா.. நான் என்ன தப்பா கேட்டேன்.?” – ரஞ்சித்

“அங்கிருக்கற கல்லை தூக்கி உங்க மண்டைல போட்டா தான் என் கோவம் அடங்கும்.. போடவா.?” – துருவினி

“அய்யோ ஏன்மா.?” – ரஞ்சித்

“சரி நான் யாரு.?” – துருவினி

“நீங்களா.?” – ரஞ்சித்

“ஆமா நான்தான்யா.. அப்பறம் என்ன செத்து போன உங்க கொள்ளு தாத்தாவா.?” – துருவினி

“ஆதிரா சிஸ்டர்..” – ரஞ்சித்

“அவளுக்கே இன்னும் கல்யாணம் ஆகல.. இதுல எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருவாங்களா.?” என்று வெகுண்டெழுந்து சினந்ததில் பே வென்று முழித்தான் ரஞ்சித்.

ரவுடி தோணியில் “நான் மத்ததை எல்லாம் மன்னிச்சுருவேன்யா.. என் அக்காவை காதலிக்கறேனு சொல்லி பொண்ணு கேட்க மட்டும் வர தெரிஞ்சுச்சு.. இதுல அவ குடும்பத்தை பத்தி ஒண்ணும் தெரியாம இருந்துருக்க பாரு.. உன்னைய என்ன பண்ணலாம்.?” என்றாள் துருவினி.

“நான் ஆதிராவை தான் லவ் பண்றேனு சொன்னேன்.. உங்க குடும்பத்தை இல்லை..” என்று அப்பாவியாக ரஞ்சித் கூறியதும் அடிங்ங்கககககக என்று சீறி “லவ் பண்ண தெரியுது ஆனா அந்த பொண்ணை பத்தி தெரிஞ்சுக்க மட்டும் உனக்கு கசக்குதா.?” என்று மிரட்டினாள்.

அப்போதும் அவன் அடங்காமல் “அதான் அவங்க லவ் ஸ்டோரியை தெரிஞ்சு வெச்சுருந்தனே.?” என்று கெத்தாக கூறிட, ‘அய்யோ அய்யோ இவன் கிட்ட பேசறதுக்கு பதிலா நான் லோ லோ னு ரோட்டுலயே பைத்தியமா அலையலாம்..’ என்று கதறினாள்.

கடுப்பாக விடாமல் அவன் தலையில் கொட்டி “இனி யாரு சொன்னாலும் நம்புவீயா.? அப்படியே நம்புவீயா.?” என்று கேட்க, “நீங்க ஏன்மா பொய் சொல்லணும்.?” என்று அப்பாவித்தனத்துடன் கூறியதும் அடிப்பதை நிறுத்திய துருவினி “உன்னைய அடிக்க கூடாது.. உன்னையும் ஒரு ஆளா மதிச்சு பேசுன என்னைய தான் நான் அடிச்சுக்கணும்” என்றவள் தலையிலடித்து கொண்டாள்.

“ஏன்மா.?” என்றான் அப்போதும் பாவமாக.!! நொந்து போன துருவினியோ “நீங்க உண்மையாவே லூசா.? இல்ல நடிக்கறீங்களா.?” என்று கேட்க, என்ன பதில் தருவது என்று தெரியாமல் தலையை திருப்பி கொண்டவனின் முகம் ஒரு மாதிரியானது.

அதை உணர்ந்தவள் “ஹலோ நான் சும்ம்மா தான் கேட்டேன்” என்று சாந்தமாக கூறி பின்பு “எங்கக்காவே ஒரு லூசு.. அது சொல்றதை எல்லாம் உண்மைனு நம்பிட்டு இருக்கீங்க.. அவ வாயை திறந்தாலே அத்தனையும் பொய்யா தான் பேசுவா” என்றாள்.

“அப்ப அவங்க ரூபன் ப்ரதரை லவ் பண்ணலயா.?” என்று கேட்டவனுக்கு அவன் கவலை. ‘அடேய்’ என்று பல்லை கடித்து “அது உண்மை தான்.. ஆனா லவ் ஸ்டோரினு ஒண்ணு சொன்னானு சொன்னீங்க பாருங்க அதைய சின்ன குழந்தை கூட நம்பாது.. நீங்க எப்படி நம்புனீங்க.?” என்று கேட்டாள் கடுப்பாக.

அவளின் வினாவிற்கு பதில் அளிக்காமல் “அப்ப அது பொய்யா.?” என்று மீண்டுமொரு வினாவை எழுப்ப, அய்யோ என்ற கொலைவெறியில் “திருப்பி திருப்பி கேள்வியையே கேட்பீயா.? கேட்பீயா.?” என்று கேட்டு நறுக்கென்று கிள்ளினாள்.

“ரூபன் மாமாவை அவ திருவிழாவுல தான் பார்த்தா.. அதுக்கு முன்னாடி அவரு யாருனே எங்களுக்கு தெரியாது.. அப்ப இருந்து தான் லவ் பண்றாங்க.. போதுமா.? இதுக்கு அப்பறமும் அந்த லூசு சொல்றதை நம்பி சொல்லிட்டு இருந்தீங்க அவ்வளவுதான் சொல்லிட்டேன்” என்றாள் மாறா கோவத்துடன்.!!

இதெல்லாம் எங்கு அவனின் செவியில் விழுந்தது. பெண்ணவளின் தீண்டலும் துடிப்பாக வெடித்து சிதறி கோவமாக முறைத்த அழகும் அவனை வெகுவாக கவர்ந்திருந்தது.

இதற்கு மேல் அவனிடம் பேச தெம்பில்லை என்று நினைத்து அவனை முறைத்தபடி துருவினி எழுந்து சென்றிட, இன்னும் அசையாமல் அப்படியே இருந்தான் ரஞ்சித்.

‘ஆதிரா இல்லனா காவ்யானு நினைச்சேன்.. இப்ப ரெண்டு பேரும் இல்லாத போது இப்படி ஒரு துருவினி இருப்பாங்கனு நான் நினைக்கலயே.!! தேங்க்ஸ் கடவுளே.!’ என்று நினைத்து திரும்பி கடவுளை பார்த்தான்.

சட்டென்று திரும்பிய துருவினி “என்ன சொன்னீங்க.?” என்று கேட்டு முறைக்க, பதறினாலும் “ஒன்னும் சொல்லலயே” என்று சமாளிக்க முயன்றான்.

“இல்லயே நீங்க என்னமோ சொன்னீங்க.. எனக்கும் கேட்டுச்சு..” – துருவினி

“நானா.? நான் என்ன சொன்னேன்.?” – ரஞ்சித்

“யோவ் அதான்யா நானும் கேட்கறேன்..” என்ற பெண்ணவளின் மிரட்டலில் துணுக்குற்று “உண்மையாவே நான் எதுவும் சொல்லலங்க” என்று பதறி போய் கையை விரிக்க, அவனை மேலிருந்து கீழாக ஒரு லுக் விட்டவள் நகர்ந்தாள்.

இப்போது இவனே “ஏங்க” என்று சத்தமாக துருவினியை அழைத்திருக்க, ‘என்ன.?’ என்று வாய் வார்த்தையாக கேட்காமல் விழிகளை உயர்த்தி வினவியவளிடம் “நீங்க சிங்கிளா.?” என்று கேள்வியை எழுப்பினான்.

இதில் பெண்ணவளின் முகம் சினத்தில் ரத்தச்சிவப்பாக மாறி “இல்ல ரெண்டு புள்ள பெத்தவ.. போடங்ங்ங்” என்று காண்டுடன் கூறிட, ‘எதே டா வா.?’ என்று அதிர்ந்தாலும் “ஓஓஓஓஓ தேங்க்ஸ்ங்க தேங்க்ஸ்ங்க” என்று சிரித்தான் பாருங்க அதை பார்த்து நம்ம துருவினி கைல வேப்பிலை இல்லாமயே சாமியாடிட்டா..

அப்போதும் வெக்கமே இல்லாமல் அவனும் பல்லை இளித்து வைக்க, ‘ச்சை போய் தொலை’ என்று தலையிலடித்து விட்டு நகர்ந்தாள்.

இவனுக்கு தான் பேக்ரவுண்டு மியூசிக்குடன் பட்டாம்பூச்சி எல்லாம் பறந்துட்டு இருக்கு நானும் கமிட்டுடோய் நானும் கமிட்டுடோய்னு எண்ணம் வேற.. இவன் திரு

ந்த மாட்டான் துருவினி கையால செருப்படி வாங்கியே காலத்தை ஓட்டட்டும் நம்ம என்ன ஜொல்றது.?

தன் முன்னால் நின்றவளை முறைத்தபடி “அவங்ககிட்ட என்னத்த சொல்லி வெச்சிருக்க.?” என்று ரூபன் வினவ, பாவமாக முகத்தை வைத்து “நான் ஒன்னும் செப்பல அபி..” என்றதும் ‘ஹான்’ என்று இவன் முழிக்க, “சாரி சாரி நான் ஒன்னுமே சொல்லல அபி.. என்னைய நம்ப மாட்டியா.?” என்றாள் உதட்டை பிதுக்கி.

“நம்ப மாட்டேன் ஆதி.. உன்னைய நம்பவும் முடியாது.. எதுக்குடி இத்தனை பொய் சொல்லிட்டு திரியற.? அவங்க பாவம்ல.?”

“யாரு அவனா பாவம்.? அட போங்க அபி.. உங்களுக்கு தான் அவனை பத்தி இன்னும் தெரில..”

“ஆதி ஏன் இப்படி.?”

“நான் மட்டும் இப்படினு சொல்லாம விட்டிருந்தா என் காதல் எப்ப ஆரம்பிச்சுச்சுனு தெரியுமா.? உன் காதலை விட என் காதலுக்கு தான் ஆயுசு அதிகம்.. நீ அவங்கள ப்ரேக்அப் பண்ணிட்டு வா நம்ம முதல்ல இருந்து காதலிப்போம்னு சொல்லிருப்பான் அந்த கத்திரிக்காய்..” என்று அவள் சொல்லிய விதத்தில் ரூபனுக்கு சிரிப்பெழுந்தாலும் அடக்கி கொண்டான்.

பின்பு “ப்ச் நல்லவங்களுக்கு இப்ப எல்லாம் காலமே இல்ல அபி.. என்னைய நினைச்சு நீ உருகிட்டு இருந்தீயே உன் காதலு தோத்து போய் விட கூடாதுனு என் லவ்வையே உனக்கு தாரை வார்த்து குடுத்து உன் உயிரை காப்பாத்திருக்கேன்..” என்றாள் பெருமையாக.!

“என் உயிரை காப்பாத்திருக்கீயா.?” என்று இவன் முகத்தை சுருக்க, “பின்ன இல்லயா.? நான் ரஞ்சித்துக்கு ஓக்கே சொல்லிருந்தா நீ லவ் பெயிலர்ல தூக்கு போட்டுருப்பீயே.. எப்படியோ உன் உயிரை காப்பாத்திட்டேன்ல.?” என்று கண்சிமிட்டியவளை பார்த்து சிரிப்பதா.? அழுவதா.? என்றே புரியாமல் நின்றான் ரூபன்.

“நீ அவனுக்கு பாவம் பாக்கறது தப்பு அபி.. நான் வேற ஒருத்தனை லவ் பண்றேனு சொன்னா பரவால்ல நீ ப்ரேக்அப் பண்ணிட்டு வானு சொல்றான்.. நான் அவனை கல்யாணமே பண்ணிட்டேனு சொன்னாலும் டைவர்ஸ் பண்ணிட்டு வாங்கறான்..

இவனை எல்லாம் இப்படிதான் டீல் பண்ணனும் அபி.. நான் நோ சொன்னதுல அந்த பைத்தியம் ஃபீல் எல்லாம் பண்ணல.. அடுத்த பொண்ணை எப்படி கரெக்ட் பண்ணலாம்னு தான் யோசிச்சுட்டு இருப்பான் அந்த ப்ராடு.. அவனுக்காக என்னைய திட்டற நீ.?” என்றாள் அப்பாவியாக.!

அவள் பேசும் தோரணையில் சிரிப்பென்னும் மலர் மலர துடித்தாலும் அதை அடக்கி முறைப்பையே அவளுக்கு பரிசளித்திட, அவளவனின் சிரிப்பை இவள் அறியாததா.?

தலை சாய்த்து “தாராளமா சிரிக்கலாம் அபி.. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்றவளிடம் எப்போதும் போல் சரணடைந்து இதழில் புன்னகை பூவை படர விட்டு கண்சிமிட்டி சிரித்தான்.

“அந்த கன்னங்குழி சிரிப்பு மட்டும் மிஸ்ஸிங் அபி.. நீ இன்னும் சிரி” என்று ரசனையாக கூறியவளின் தலையில் மெல்லமாக கொட்டியவன் “வா போலாம்” என்றழைத்து சென்றான் மிதமான புன்னகையுடன்.!

அப்படி என்ன தான்

செய்து விட்டாயடி

இன்னும் இன்னும்

உன்னை மட்டும்

விடாமல் பிடித்து

தொலைக்கிறது.!

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்