Loading

அத்தியாயம் – 20

காவ்யா நீங்க ஏன் தனியா இருக்கீங்க.?” என்று ரஞ்சித் கேட்டதும் தான் எதிரில் ஒருவன் அமர்ந்திருப்பதையே கண்ட காவ்யா “எனக்கு தனிமை தான் பிடிக்கும் அதான்..” என்றாள் அவனை வம்பிழுக்கும் பொருட்டு.

“ஓஓஓஓ எனக்கும் தனிமை ரொம்ப பிடிக்கும்.. ஆதிராவுக்கு எப்படி.?” என்று தான் வந்த வேலையை ரஞ்சித் கையிலெடுக்க, ‘இவன் வேற என்னைய ரொம்ப படுத்தி எடுக்கறான்டா’ என்று மனதில் கதறியவள் “எனக்கு தெரியல ரஞ்சித்.. அவகிட்டயே கேட்டு பாரு” என்று ஆதிராவிடமே அவனை கோர்த்து விட முயன்றாள்.

“ஆதிரா உன் ப்ரெண்டு தானே.?” – ரஞ்சித்

“இல்லயே.. அவ யாரோ நான் யாரோ.. எனக்கும் அவளுக்கும் சம்பந்தமே இல்ல.” – காவ்யா

“வாட்.?” – ரஞ்சித்

சிரிக்காமல் “ஆமா ரஞ்சித்.. அவ தான் என் பரம எதிரி.. நேரம் பார்த்து அவளை மலைல இருந்து தள்ளி விட்டு சாவடிக்க தான் அவளோட ப்ரெண்டா இருக்கேன்..” என்று முகப்பாவனையை மாற்றி கூறினாள்.

“எதே.?” என்று அதிர்ச்சியில் ரஞ்சித் கத்தி விட, “ஷ்ஷ்ஷ்ஷ் சத்தம் போட்டு காட்டி குடுத்த உன்னையும் சாவடிச்சுருவேன்” என்று காவ்யா சீறியதும் ரஞ்சித் கப்சிப் தான்.

“ஹாய் ரஞ்சித்.. வாங்க வாங்க..” என்றபடி வந்த ஆதிரா “என்ன காவு என்னைய விட்டுட்டு சாப்பிட்ட.?” என்றிட, “காசா பணமா மறுபடியும் சாப்புடுவோம் வா” என்ற காவ்யாவை விழிகள் பெரியதாக விரித்து பார்த்தான் ரஞ்சித்.

அவனின் முழியில் ஏதோ சரியில்லை என்று உணர்ந்த ஆதிரா என்னவென்று சைகையில் காவ்யாவிடம் வினவ, அவள் கண்சிமிட்டியதிலே ஏதோ அவனிடம விளையாடி இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட ஆதிரா அவனறியாமல் முறுவலித்து கொண்டாள்.

நீங்க சாப்பிட்டு வாங்க.. நான் போறேன் என்று ரஞ்சித் ஓடியே விட, அதில் சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டு சிரித்த காவ்யா பின்பு தான் பேசியதை கூறிட, இப்போது ஆதிராவும் அவளுடன் இணைந்து கொண்டாள்.

“அய்யோ அய்யோ நீ கொலைக்காரி ரேன்ஜூக்கு பில்டப் பண்ணுனதை விட இவன் இப்படி ஓடறதை பார்க்க தான் ரொம்ப காமெடியா இருக்கு” என்ற ஆதிராக்கு சிரிப்பே மேலோங்கியது.

காவ்யாவோ “இல்லனா உனக்கு என்ன பிடிக்கும்.? பிடிக்காதுனு கேட்டு என்னைய சாவடிச்சுருப்பான்.. முதல்ல உன்னைய பிடிக்கலடா பன்னாடைனு சொல்லிருப்பேன்” என்றவள் “ஆமா அண்ணா என்ன சொன்னாங்க.?” என்று வினவினாள ஆர்வமாக.

“பையன் பயந்துட்டான்டி.. எப்படியோ அவன் காதலிக்கறதை ஒத்துக்கிட்டான்.. அதே போதும் எனக்கு.. மீ ஹேப்பி அண்ணாச்சி” என்று உண்மையான சந்தோசத்தில் ஆதிரா கையை விரித்த மேலே நோக்கிட, “ம்ம்ம்ம் அப்ப மேடம் சிங்கிள்ல இருந்து கமிட்டுக்கு மாறிட்டீங்க” என்றாள் உதட்டை பிதுக்கி.

சட்டென்று அவளை பார்த்த ஆதிரா “ஹே ஆமால.. நானும் கமிட்டு.. நானும் கமிட்டு” என்றவளின் கழுத்தை காவ்யா நெறித்திட, “அடிப்பாவி உண்மையாவே என்னைய கொலை பண்ண பார்க்கறீயா என்ன.?” என்று பதறினாள்.

“ச்சீ பே..” என்று காவ்யா முகத்தை திருப்பிய நேரம் திடீரென்று “நானும் இநத ஐடியாவை ஃபாலோ பண்ணுனா என்ன.?” என்று முகவாயில் கை வைத்து கேட்டிட, ஆதிராவோ “தொல்லை விட்டுச்சுனு நினைச்சுருவாங்க” என்றாள் சிரிப்புடன்.

அவளை முறைத்த காவ்யா பார்த்துக்கறேன்டி என்று கடுகடுப்புடன் இருந்தாள்.. காலை உணவை முடித்ததும் ஊட்டியை சுற்றி பார்க்க அனைவரும் கிளம்பிட, காதல் நிறைவேறியதில் ஆதிரா துள்ளலுடனே வலம் வந்தாள்.

ரஞ்சித்தும் அவளின் சந்தோசத்தை ரசித்து அவளுடன் சுற்ற தொடங்க, அவன் அருகில் வந்தால் போதும் மௌனமாக ஆதிராவும் விலகி சென்றிட, என்னவென்றே புரியாமல் குழப்பத்தில் சுழன்றான் ரஞ்சித்.

அடிக்கடி ரூபனின் என்ன பண்ற ஆதி.? என்ற குறுஞ்செய்தி இவளை வந்தடையவும் தவறவில்லை. அதை கண்டால் போதும் பெண்ணவளின் முகம் தாமரை பூவாய் மலர்ந்து சிரிக்கும்.

‘ப்ச் அந்த லூசும் இருக்கே’ என்று நொந்து கொண்ட காவ்யா அந்நிமிடமே அழைப்பும் விட்டாள்.. அடித்து அடித்து ஓய்ந்து இறுதியில் கடமைக்கென அழைப்பும் ஏற்கப்பட்டிருக்க, சிடுசிடுப்பாக இவளோ “நான் பண்ணுனா மட்டும் போனை எடுக்க ரொம்ப கஷ்டமோ.?” என்று காய்ந்தாள்.

“நான் என்ன வேலை வெட்டி இல்லாம இருக்கனா.?” என்று சற்று கோவத்துடன் கேட்டது வேறு யாருமில்லை அசோக் தான்.. இப்போதும் தான் ரூபனின் வீட்டில் இருந்து அறைக்கு வந்திருந்தான்.

மூக்கு விடைக்க “அப்பறம் நான் மட்டும் வெட்டியா இருக்கனா.?” என்று கேட்டிட, பல்லை கடித்தவன் “சொல்ல வந்ததை சொல்லிட்டு போனை வெய்யு.. எனக்கு வேலை கிடக்கு” என்றான் விட்டேந்தியாக.

இதற்கு மேல் கேள்வி கேட்டால் போனை வைத்து விடுவான் என்றுணர்ந்த காவ்யா “ம்ம்ம்ம்க்க்கும் வீட்டுல எனக்கு மாப்பிள்ளை பார்த்துருக்காங்க” என்று சொல்ல, சாதாரணமாக “அதைய ஏன் என்கிட்ட சொல்ற.? ரொம்ப நல்லது.. நீயும் சம்மதம் சொல்லிரு” என்று உரைத்தான்.

‘இவனை’ என்று சினந்து “எனக்கு உன்னைய தான் பிடிச்சிருக்கு” என்று காவ்யா கூறியதும், “அதுக்கு நான் என்ன பண்றது.?” என்று யாருக்கோ வந்த விருந்து போல் கேட்டான் அசோக்.

“நீ சம்மதம் சொல்லல நான் செத்துருவேன்..” – காவ்யா

“முதல்ல அதைய பண்ணு.. நானாவது நிம்மதியா இருப்பேன்..” – அசோக்

“ஙே.. என்ன பொசுக்குனு சாக சொல்ற.?” – காவ்யா

“சரி ஆற அமர உட்கார்ந்து தின்னுட்டு அப்பறம் சாவு.. நான் போனை வெக்கறேன்” என்றவன் அப்போதே போனையும் வைத்து விட்டான்.. இன்னும் திகைப்பில் இருந்து மீளாமல் போனையே ஙே வென பார்த்திருந்த காவ்யாவை ஒரு இடி இடித்து “என்னடி ஏன் பேயடிச்ச மாதிரி இருக்க.?” என்று வினவினாள் ஆதிரா.

“என்னைய சாவ சொல்றான்டி” என்று அழுகுவதை போல் பாவனை செய்து கூறிட, பக்கென்று சிரித்த ஆதிரா “உன்னைய பத்தி தெரிஞ்சும் அப்படி சொல்லாம வேற எப்படி சொல்லுவாங்க லூசு.?” என்ற ஆதிரா வாய்விட்டு சிரிக்க தொடங்கினாள்.

“ப்ச் உனக்கு மட்டும் இந்த ஐடியா ஒர்க்கவுட் ஆகிருச்சு.. எனக்கு புஸ்வாணமா புஸ்ஸூனு போய்ருச்சு..” – காவ்யா

“ஹஹஹ பைத்தியமே.. அபிக்கு என்னைய பத்தி அதிகமா தெரியாது சோ நம்பிட்டான்.. ஆனா அசோக் அண்ணனுக்கு அப்படியா.?” – ஆதிரா

“அட ஆமால.. இதைய எப்படி யோசிக்க மறந்தேன்.?” – காவ்யா

“மேடம் யோசிக்க மண்டைல தான் ஒண்ணும் இல்லயே..” என்று ஆதிரா கூறியதும் அவளை ஓரடி வைத்து “அங்க மட்டும் என்னவாமா.?” என்றதும் அவளிடம் சரணடைந்து விட்டாள் ஆதிராவும்.

அசோக்கின் குடும்பமும் காவ்யாவின் வீட்டருகில் தான் வசிக்கிறது.. சொல்ல போனால் இருவரும் தூரத்து உறவுமுறை என்றும் கூறலாம்.. ஆதிராவை போல் பார்த்ததும் பிடித்தது போல் இல்லை இந்த உறவு.. அவனுடன் வாழ்ந்தால் மகிழ்ச்சியாக இருப்பேன் அவ்வளவுதான் என்பாள்.

இதை அசோக்கிடமும் கூறி இன்றுவரை வாங்கி கட்டி கொள்கிறாள்.. காதலா.? என்று கேட்டால் தெரியவில்லை என்று தோளை குலுக்கிடும் ரகம் காவ்யா. ஆனால் ஆடவனை விட்டுவிடும் எண்ணம் மட்டும் இவளிடம் இல்லை.

அவனின் எண்ணம் அனைத்தும் தமக்கைகளின் வாழ்க்கையிலே நிலைத்திருந்ததால் அவனின் வாழ்வை பற்றி யோசிக்கவும் முயலவில்லை.. இப்போதும் அவனின் சிந்தனை அனைத்தும் இரண்டாவது தமக்கையின் வாழ்வு மலர்ந்து விட வேண்டுமென்று தான்.!!

ஆதிராவின் காதல் ஒரு ரகம் என்றால் காவ்யாவின் காதல் மற்றொரு ரகம்.. சிங்கிள் சிங்கிள் என்று கூறி கொண்டே ஆடவனிடம் சம்மதத்தை பெற முயன்று கொண்டிருக்கிறாள்.. ஆதிராவிடம் ரூபன் சரணடைந்தது போல் ஒருநாள் அசோக்கும் காவ்யாவிடம் சரணடைய தான் வேண்டுமே.!

!

அந்நாளும் இவர்களை வந்தடையவும் காத்திருக்கிறது.!

நண்பர்கள் அனைவரும் இயற்கை காட்சிகளை படம் பிடித்த வண்ணம் அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்க, ஆதிரா மட்டும் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தாள் அவர்களை வேடிக்கை பார்த்தபடி.!!

நெடு நேரம் அவளை கவனித்திருந்த ரஞ்சித் அவளிடம் வந்தமர, அவனை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தவள் உம்மென்ற முகத்துடன் பார்வையை அவனிடம் இருந்து விலக்கி கொண்டாள்.

“உங்க வீட்டுக்கு வந்துட்டு போனதுல இருந்து என்னைய ஏன் அவாய்டு பண்றீங்க.?” என்று மனதை அரித்து கொண்டிருந்த கேள்வியை அவளின் முன்பு வைத்து விட்டான் ஆடவன்.

பெருமூச்சுடன் ஆதிராவோ “இப்ப நான் என்ன சொல்லணும்னு நினைக்கறீங்க.?” என்று யாரோ போல் எதிர்கேள்வியை தொடுத்தாள் அவன் முகம் பார்க்காமல்.! இதிலே அவளின் விருப்பமின்மையை ரஞ்சித்தும் உணர்ந்து கொண்டான்.

“உங்ககிட்ட சொல்லாம வந்ததுல கோவமா.?” – ரஞ்சித்

“…..” – ஆதிரா

“சர்பிரைஸ் குடுக்கலாம்னு தான் சொல்லல ஆதிரா.. மன்னிச்சுரு..” – ரஞ்சித்

“ப்ச் நான் உங்ககிட்ட ஒண்ணுமே கேட்கல ரஞ்சித்..” – ஆதிரா

“உங்களுக்கு பிடிக்கலனா தாராளமா சொல்லிருங்க ஆதிரா” என்றவனை உற்று நோக்கிய பெண்ணவள் “ஆமா ரஞ்சித் எனக்கு பிடிக்கல” என்றாள் பட்டென்று.

இதில் விழிவிரித்தவன் அதிர்ந்து முழித்தான்.. ஒரு வார்த்தைக்கு தான் இவ்வாறு கூறினால் அப்படி எல்லாம் இல்லை என்று சமாதானமாகி விடுவாள் என்ற நட்பாசையில் இவன் கேட்டிருக்க, அவளோ ஆமா பிடிக்கல என்றால் அவன் முழிக்காமல்

என்ன செய்வான்.?

இருந்தும் ஒரு நம்பிக்கையில் “ஆதிரா என்ன சொன்னீங்க.?” என்று திருப்பி ரஞ்சித் கேட்க, “நம்ம ஏதாவது சாப்பிட்டே பேசுவோமா.?” என்றதும் ஆடவனின் முகம் பிரகாசமாக மலர்ந்தது.

“சுயர் ஆதிரா.. என்ன வேணும்னு சொல்லுங்க..” – ரஞ்சித்

“ஐஸ்கிரீம் மட்டும் போதும்..” – ஆதிரா

“வேற ஏதாவது.?” – ரஞ்சித்

“இல்ல இல்ல இது மட்டும் போதும்..” – ஆதிரா

“என்ன போதும்.?” என்று கேட்டபடி காவ்யா அங்கு வந்தாள்.. “காவ்யா உங்களுக்கு சாப்பிட ஏதாவது வேணுமா.?” என்று ரஞ்சித்தே கேட்டான்.. புருவம் சுருக்கி தோழியை கண்டவள் பின்பு “நீங்களே ஆசையா கேட்கறீங்க ஏன் வேணாம்னு சொல்லணும்.?” என்று விட்டு “ஒரு ஐஸ்கிரீம் போதும் ரஞ்சித்” என்றாள் பெரிய மனதுடன்.

அவன் நகர்ந்ததும் சரியாக ஆதிராவின் அலைப்பேசி அவர்களின் கவனத்தை ஈர்த்தது. “ஹே அபி தான்” என்று குதூகலத்துடன் போனை எடுத்த ஆதிரா “என்ன அபி பேபி மறுபடியும் அதுக்குள்ள போன் பண்ணிட்டீங்க.?” என்று கேட்டாள்.

“என்கிட்ட சாக போறேனு நீ சொன்னப்ப என்ன பண்ணிட்டு இருந்த.?” என்று காட்டமாக ரூபன் வினவிட, திருதிருவென முழித்து கண்ணை சுருக்கி “அழுதுட்டு இருந்தேன்” என்றாள் வாய் கூசாமல்.

“ஓஓஓஓ மேடம் ரொம்ப அழுதீங்க போல.?” – ரூபன்

“ஆமா பின்ன உங்களைய மாதிரி சிரிச்சுட்டு இருக்க சொல்றீங்களா.?” – ஆதிரா

“வந்தனா வெய்யு சப்புன்னு அப்பிருவேன்.. பண்றது கேப்பமாரிதனம்.. இதுல பொய் மட்டும் டஜன் கணக்குல சொல்றது..” – ரூபன்

“நான் ஒண்ணும் பொய் சொல்லல..” – ஆதிரா

“அப்ப நான் பொய் சொல்றனா.?” – ரூபன்

“அதுல என்ன சந்தேகம்.? காதலி சொல்றதை நம்பணும்.. அதுதான் நல்ல காதலனுக்கு அழகு” – ஆதிரா

“ஹோ மேடம் சரிங்க சரிங்க.. இப்ப உங்களுக்கு ஒரு வீடியோ அனுப்பறேன் கொஞ்சம் அதைய பாருங்க..” என்று கேலியுடன் உரைத்ததிலே ஏதோ சரியில்லை என்றுணர்ந்து அவளவன் அனுப்பிய வீடியோவை பார்த்திட, இமைகள் இரண்டும் அதிர்ச்சியை கடன் வாங்கியதில் அதன் இயக்கத்தை நிறுத்தி கொண்டது.

“அடியேய் காவு.. உன்னைய காவு குடுக்கறதுல தப்பே இல்ல” என்று சீறிய

ஆதிரா தோழியின் கழுத்தை நெரிக்கதொடங்க, “அய்யய்யோ ஏன்டி.?” என்று பதறினாள் காவ்யா.

தொடரும்..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்