Loading

பூகம்பம் – 18

இருவரும் திகைத்து முழிக்க, முதலில் அசோக் தான் தன்னிலையடைந்து “அடேய் எனத்தடா பண்ணி வெச்சிருக்க.? ஏன் ஆதிரா இப்படி சொல்றாங்க.?” என்று காய, ரூபனோ இன்னும் அதிர்வில் இருந்து வெளியே வரவே இல்லை.

“ரூபன் உன்னைய தான்..” என்று அசோக் அவனை உலுக்கிட, அதில் தான் நிகழ்காலத்திற்கே வந்து “என் ஆதி.. என் ஆதி” என்று ஏதோ கூற முயன்றவனை தடுத்து “முதல்ல அவங்களுக்கு போன் பண்ணுடா” என்று அவசரப்படுத்தினான் அசோக்.

ரூபனும் அழைப்பு விட, இவனின் இதயமும் அழைப்புக்கு இணையாக நொடிக்கு எக்கச்சக்கமாக துடிக்க, இறுதியில் பெண்ணவளின் அழைப்பு ஏற்கப்பட்டதில் தான் இதயத்துடிப்பு கட்டுக்குள் வந்தது.

பதட்டத்தில் “ஆதி.. ஆதிமா ஏன்டா இப்படி எல்லாம் பேசுற.? முதல்ல நீ எங்க இருக்க சொல்லு..” என்று ரூபன் கேட்க, “ஊட்டில” என்று ஒரே வார்த்தையில் முடித்திருந்தாள் ஆதிரா.

பின்பு “நீங்க தான் என்னைய வேணாம்னு முடிவு பண்ணிட்டிங்கல.? இனி உங்களைய நானும் தொந்தரவு பண்ண மாட்டேன்.. நீங்களாவது நிம்மதியா இருங்க.. இனி என் தொந்தரவு உங்களுக்கு இருக்காது..” என்று அவள் பாட்டிற்கு பேசிட, “ஆதி.. நான்…” என்று இவன் பேச முனைந்தான்.

ஆனால் பெண்ணவளோ அதை தடுத்து “வேணாம் அபி.. கஷ்டப்பட்டு என்னைய ஏத்துக்க வேணாம்.. உங்க மனசுல நான் இல்லனு தெரிஞ்சிருச்சு.. கட்டாயப்படுத்தி காதல் வந்தா அது ரெண்டு பேருக்குமே கஷ்டம்.. நான் போறேன்.. நான் போறேன்..” என்றவள் அவனின் பதிலை கேளாமல் போனை அணைத்திட, “ஆதி ஆதி” என்ற ஆடவனின் வார்த்தை பெண்ணவளை சென்றடையவில்லை.

மறுபடியும் மறுபடியும் ஆதியின் எண்ணிற்கு இவன் அழைக்க, இறுதியில் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்ததில் “என்னடா இவங்க இப்படி பண்றாங்க.? நீ என்ன சொல்ல வர்றேனு கூட கேட்காம போனை வெச்சுட்டாங்க.. அவங்க ப்ரெண்ட்ஸ் யாராவது தெரிஞ்சா போன் பண்ணு..” என்று அசோக் கூறியதும், “அவங்க தங்கச்சி நம்பர் தான் இருக்கு..” என்றான் குரலில் சுரத்தே இல்லாமல்.

“அப்ப அவங்களுக்கு போன் பண்ணி உண்மையாவே அவங்க ஊட்டி போயிருக்காங்களானு கேளு” என்று அசோக் அவசரப்படுத்திட, இதுவும் சரிதான் என்ற யோசனையில் தயக்கத்துடன் துருவினிக்கு அழைத்தான்.

நல்லவேளை நேற்றிரவு விளையாடுகிறேன் என்ற பேர்வழியில் துருவினியின் எண்ணில் இருந்து இவனுக்கு அழைத்திருந்தாள் ஆதிரா. இவன் யாரென்று கேட்டதற்கு உன் வருங்கால மனைவி என்றாளே.. இப்போது ஏன் இப்படி பேசுகிறாள் என்ற தவிப்பில் காய்ந்தான்.

துருவினியும் இவன் எண்ணை சேமித்து வைத்திருந்ததால் எடுத்ததும் ‘ப்ரோ சொல்லுங்க’ என்று கூற வந்தவள் இப்போது எந்த முறையில் அழைப்பது என்று புரியாமல் “சொல்லுங்க” என்று மட்டும் கூறினாள்.

அவளின் ஒட்டாத்தன்மை அழைப்பில் ரூபனின் மனது கனத்தது.. மௌனமாகவே இருக்க, “ஹலோ இருக்கீங்களா.?” என்று மறுபடியும் துருவினியே அவனின் அமைதியை கலைத்தாள்.

“ம்ம்ம்ம் என் மேல கோவமாடா.?” – ரூபன்

“கோவமா.? உங்க மேல எதுக்கு நான் கோவப்படணும்.?” – துருவினி

“…….” – ரூபன்

“என்ன திடீர்னு இப்படி கேட்கறீங்க.? என்ன ஆச்சு.?” – துருவினி

“…….” – ரூபன்

சட்டென்று புரிந்ததை போல் “அட நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுனா நான் ஏன்பா கோவப்படணும்.? எனக்கு சந்தோசம் தான்.. உங்களைய எப்படி கூப்பிடறதுனு தெரில..” என்றதும் தான் ரூபனின் முகம் தெளிவடைந்தது.

“பயந்துட்டேன்டா..” என்ற ரூபனின் வார்த்தைக்கு “ஹஹஹஹஹஹ இதுல பயப்பட என்ன இருக்கு.? என்ன அதிசியமா எனக்கு போன் பண்ணிருக்கீங்க.?” என்று துருவினி கேட்டதும் தான் எதற்கு அழைத்தோம் என்பதையே உணர்ந்த ரூபன் “ஆதி எங்கடா.?” என்று வினவினான்.

ஆதி உரைத்ததை கூறி துருவினியையும் பயப்படுத்த வேண்டாம் என்று ரூபன் சாதாரணமாக வினவிட, “அவ ஊட்டிக்கு போய்ருக்கா.. உங்ககிட்ட சொல்லலயா.?” என்றதை கேட்டதும் ஆடவனின் இதயம் படபடவென அடித்தது.

‘நானும் உன்னைய தான் லவ் பண்றேன் ஆதி.. எனக்கு நீ வேணும்..’ என்று மனதினுள் உரைத்து கொண்டவனுக்கு வார்த்தையும் வராமல் சண்டித்தனம் செய்திட, கடினப்பட்டு “ம்ம்ம்ம் சரிடா” என்றான்.

குரலில் மாற்றத்தை உணர்ந்த துருவினி “ஏதாவது பிரச்சனையா.?” என்று கேட்க, ம்ம்ம்ம்ம் என்ற ரூபன் ஆதி பேசியதை கூறி விட்டான். இதை கேட்டு துருவினி பயந்து விடுவாளோ.? என்ற அச்சத்தில் இவனிருக்க, மறுபுறம் கேட்ட பெண்ணவளின் சிரிப்பு சத்தம் தான் இவனை வந்தடைந்தது.

“யாரு அவ சாக போறாளா.? அய்யோ அய்யோ.. ஏன் மாமா இப்படி அப்பாவியா இருக்கீங்க.? அவ உங்களைய பயப்படுத்தி விட்டுட்டு அங்க நல்லா தின்னுட்டு இருப்பா..” என்றவள் மீண்டும் சிரித்தாள்.

ரூபன் மட்டுமின்றி அசோக்கும் பே வென்று முழித்திருந்தனர் துருவினியின் பதிலால்.!! “என்னடா சொல்ற.?” என்று ரூபன் கேட்க, “அந்த லூசு அப்படித்தான் மாமா.. அவ சாக போறேனு சொன்னா சரி பார்த்து போய்ட்டு வானு சொல்றதை விட்டுட்டு இப்படி பயந்துருக்கீங்க.. இதுல நானும் பயப்படுவேனு வேற நினைச்சு இப்படி திக்கி திணறி சொல்றீங்க.. அய்யோ அய்யோ.. என்னால முடில” என்றாள் சிரிப்புடனே.

பாவம் ரூபன் தான் அப்பாவியாக முழித்தான் இதில் அசோக்கும் அடக்கம்.. மீண்டும் துருவினியே “இருங்க மாமா.. அவளையே உங்களுக்கு போன் பண்ண சொல்றேன்..” என்றவள் பின்பு “உங்களைய மாமானு கூப்பிடலாம் தானே.?” என்று உரிமையாகவே கேட்டாள்.

இதில் தான் பேச்சு வாக்கில் துருவினி தன்னை மாமா என்றழைத்ததையே உணர்ந்தவன் இதற்கு என்ன பதில் மொழி தருவது என்று புரியாமல் “அது.. அது..” என்று இழுத்து பின்பு “முதல்ல ஆதியை போன் பண்ண சொல்லுமா” என்றான் அப்பேச்சை தவிக்கும் பொருட்டு.

புரிந்தது போல் துருவினியும் சரியென்றாள். மழை பெய்து ஓய்ந்ததை போல் அசோக்கோ “அடேய் என்னடா நடக்குது இங்க.?” என்று புலம்ப தொடங்க, “எனக்கே ஒண்ணும் புரிலடா.. எப்படியோ ஆதி நல்லா இருந்தா போதும்..” என்றான் பெருமூச்செறிந்து.

துருவினி கூறியதை போலவே ஆதிராவோ ஹோட்டலில் உணவை ஒரு பிடி பிடித்து கொண்டிருக்க, அவளருகில் அமர்ந்திருந்த காவ்யாவும் அவளுக்கு போட்டியாக உணவில் லயித்திருந்தாள்.

துருவினியின் அழைப்பு இவர்கள் உண்பதை தடை செய்ய, ஆதிராவோ “அடச்சீ யாருனு பாருடி.. உன் போனு எப்பவும் சாப்பிடறப்ப தான் அடிக்குது” என்று கடுப்பாக மொழிந்தாள் தோழியிடம்.

“ம்ம்ம்க்க்க்கும் உன் தொங்கச்சி தான்.. நீயே பேசி தொலை” என்று அவளிடமே குடுக்க, வேறு வழியின்றி ஆதிராவும் “சொல்லுடி.. நாங்க சாப்பிட்டா உனக்கு மூக்கு வேர்த்துருமே” என்றதும் “என் வாய்ல கேவலமா வருது.. என்ன பண்ணி வெச்சிருக்க.?” என்று சீறினாள் துருவினி.

“ஹே லூசு நானே சிவனேனு சாப்பிட்டு தான்டி இருக்கேன்..” – ஆதிரா

“வந்தனா வெய்யு.. உண்மையாவே மலைல இருந்து தள்ளி விட்டு உன்னைய சாவடிச்சுருவேன்..” – துருவினி

“வொய் திஸ் கொலைவெறி சிஸ்டர்மா” – ஆதிரா

“பாவம் ரூபன் மாமா.. ரொம்ப பயந்து போய் எனக்கு போன் பண்ணுனா.. நீ இப்படி சாதாரணமா தின்னுட்டு இருக்க.?” – துருவினி

“ஓஹோஹோ” – ஆதிரா

“வெக்கமா இல்ல.?” – துருவினி

“காதல்ல வெக்கத்தை எல்லாம் பார்த்தா வாழ முடியாது செல்லம்.. ஆமா அவன் என்ன சொன்னான்.?” – ஆதிரா

“நீ வீட்டுக்கு வந்ததும் உண்மையாவே உன்னைய கொலை பண்ண சொன்னாங்க.. வீட்டுக்கு வா மவளே உனக்கு இருக்கு..” – துருவினி

“பொய் சொல்லாத பிசாசே.. என் அபி செல்லம் அப்படி எல்லாம் சொல்ல மாட்டான்.. அவனை பத்தி எனக்கு தெரியும்..” என்று ரூபனை விட்டு குடுக்காமல் ஆதிரா பேசிட, “இதெல்லாம் நல்லா வக்கனையா பேசு.. அப்பறம் எனத்துக்குடி சாக போறேனு பயப்படுத்திருக்க.?” என்றாள் துருவினியும் விடாமல்.

“அட நீயும் கடுப்பேத்தாத.. இங்க ரஞ்சித் தொல்லை தாங்க முடியல.. நான் வேற ஒருத்தனை லவ் பண்றேனும் சொல்ல முடியாம இங்க நான் படறபாடு இருக்கே அதைய எல்லாம் நீ அனுபவிச்சா தான் புரியும்..

என்னைய ரூபனும் லவ் பண்றானு தெரியும்.. பட் தயக்கம் எதுக்குனு தான் புரில.. இப்படி பேசுனா தான் அவன் லவ் பண்றதை ஒத்துப்பான்.. வேற வழியும் இல்லை துரு..” என்றாள் அலுத்து கொண்டு.

“என்னமோ பண்ணி தொலை.. முதல்ல ரூபன் மாமாக்கு போன் பண்ணு” – துருவினி

“பாருடா மாமாவா.?” – ஆதிரா

“அப்பறம் என்ன தாத்தாவா.? கேனத்தணமா கேள்வி கேட்காத பைத்தியமே..” – துருவினி

“ரொம்ப தான்டி..” – ஆதிரா

“ம்ம்ம்ம்க்க்கும்.. வர்றப்ப தங்கச்சிக்கு ஏதாவது வாங்கிட்டு வாங்க.. ரெண்டு பேரும் கையை வீசிட்டு வந்தீங்க அவ்ளோதான்.. சொல்லிட்டேன்” என்று அன்பு கட்டளையுடன் போனை வைத்தாள் துருவினி.

சாப்பிட்டபடியே காவ்யாவோ “அவ என்னடி சொல்றா.?” என்று கேட்க, “ரூபன் பயந்து போய் அவளுக்கு போன் பண்ணிருக்கான்டி.. அதைய சொல்ல தான் இவ போன் பண்ணிருக்கா..” என்றவாறு அலைப்பேசியை உயிர்ப்பித்தவள் அவளின் அபிக்கு அழைத்தான்.

பயப்பட வேண்டாம் என்று துருவினி கூறி இருந்தாலும் ஆதிராவின் குரலை கேட்காமல் மனது அமைதியடையாது என்ற நிலையில் நொடிக்கொரு முறை போனையே பார்த்து கொண்டிருந்தான் ரூபன் அவஸ்தையுடன்.!!

மங்கையின் வற்புறுத்தலுக்கிணங்க அசோக் சாப்பிட சென்றிருந்தான்.. ஆதிராவின் அழைப்பு வந்ததுமே ஏற்றவன் “ஹலோ ஆதிமா..” என்று தவிப்பாக அழைக்க, மறுபுறம் பதிலில்லை.

“ஆதிமா..” – ரூபன்

“….” – ஆதிரா

“பேச மாட்டியாடா.?” – ரூபன்

“…..” – ஆதிரா

“ஏன்டா இப்படி பண்ற.?” – ரூபன்

“…..” – ஆதிரா

“ப்ச் ஆதி பேசுடா..” – ரூபன்

“….” – ஆதிரா

“நீ பேசல நான் போய்ருவேன்” என்றதும் “உங்களுக்கு என்னைய பிடிககலனு புரியுது..” என்ற பெண்ணவளின் பதிலில் தலையிலடித்து கொண்டான் ரூபன்.

“முதல்ல நீ எங்க இருக்கேனு சொல்லு..” – ரூபன்

“சொல்ல மாட்டேன்..” – ஆதிரா

“ஆதி விளையாடாத..” – ரூபன்

“சொல்ல மாட்டேன்..” – ஆதிரா

“ப்ச் ஆதிமா.. ரொம்ப பிடிவாதம் பண்ணாம எங்கனு சொல்லு” – ரூபன்

“சொல்ல மாட்டேன்” – ஆதிரா

“வந்தனா வெய்யு அடிச்சுருவேன்.. என்ன பழக்கம் இது.? ரொம்ப பிடிவாத

ம் பண்ணிட்டு இருக்க.? விளையாட்டுத்தனம் அதிகமாகிட்டு போகுது.?” என்று ரூபன் கொஞ்சம் அதட்டலுடன் கத்தி விட, மௌனமானாள் பெண்ணவள்.

பெண்ணவளின் இடைவிடாத மௌனம் ஆடவனை உலுக்கிட, “ஆதி” என்று மென்மையாக அழைத்ததில் ஆதிராவின் மௌனமும் கலைந்தது.

சாரிடா.. நீ அடம்பிடிக்கவும் சட்டுனு கோவம் வந்துருச்சு” என்று மன்னிப்பு கோரிட, “பரவால்ல அபி.. இதுல என்ன இருக்கு.?” என்று ஆதிராவும் சமாதானம் ஆகினாள்.

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்