
பூகம்பம் – 11
ரூபனின் பயம் தேவையில்லாதது என்பதை போல் “உங்க சித்தப்பா நிலத்தை எல்லாம் பெரிய தொகைக்கு விக்கலாம்னு இருக்காருடா.. அப்பாகிட்ட இந்த விசயமா பேசிருக்காரு.. அப்பாக்கும் மனசு கேட்காம வீட்டுல வந்து புலம்பிட்டு இருந்தாருடா..” என்று தான் கூற நினைத்ததை எப்படியோ கூறியும் விட்டான் சிவா.
ஆதியை பற்றி இல்லை என்று ரூபன் பெருமூச்சு விட்டு கொண்டாலும் விடயத்தை கேள்விப்பட்டதும் வலிக்க தான் செய்தது.
தனக்கு உரிமையான ஒன்றை மற்றவர்களுக்கு விட்டு குடுத்து விலகி நிற்க முயன்றாலும் முடியவில்லையே இவனும் சாதாரண மனித பிறவி தான்.. அனைவருக்கும் ஏற்படும் வலியும், இது எனக்கானது என்ற உரிமையுடன் வரும் பொறாமையும் அவனுள் எழுந்ததும் உண்மையே.
ஏதோ யோசித்தவன் “அண்ணே அவங்க யாருக்கு விற்கறாங்கனு தெரிஞ்சா எனக்கு சொல்லுங்க அண்ணே.. அவங்க நிலம் எனக்கு தேவை இல்லை.. அப்பா இருந்த வரைக்கும் அவரோட சந்தோசமோ துக்கமோ எதுவா இருந்தாலும் அவருக்கான நிலத்துல தான் முறையிடுவாரு..
சொல்ல போனா அவரோட அதிகபட்ச ஆசையே பாதி நிலத்துல வீடு கட்டி அங்கயே இருக்கணும்னு தான்.. என்னால இப்ப அவரோட ஆசையை நிறைவேத்த முடிலனாலும் எதிர்காலத்துல நிறைவேத்துவேன் அண்ணே..” என்றான் குரல் கம்ம.
“டேய் அந்த நிலமே உனக்கானதுடா.. நீ ஏன்டா மத்தவங்க கிட்ட கேட்டு வாங்கணும்.. உன் சித்தப்பா என்ன பெரிய ஆளா? உனக்கான நிலத்தை உரிமையோட கேட்கறதுக்கு என்னடா? அப்பா வரட்டும் இதுக்கு என்ன பண்ணலாம்னு கேட்கலாம்” என்று சீறினான் சிவா.
மறுத்து தலையசைத்த ரூபன் “இப்ப நான் அந்த நிலத்தை போராடி வாங்குனாலும் மனசார குடுப்பாங்கனு நினைக்கறீங்களா? மாட்டாங்க அண்ணே.. மத்தவங்க சாபத்தோட அந்த நிலத்தை வாங்கறதுக்கு எனக்கு விருப்பமில்லை அண்ணே.. எனக்காக நான் கேட்டதை மட்டும் பண்ணுங்க போதும்.. சித்தப்பா என்ற உறவு இப்படியே இருந்துட்டு போகட்டும்” என்றான் முடிவாக.
ரூபனின் முடிவில் சிவாவுக்கு உடன்பாடு இல்லையென்றாலும் வேறு வழியின்றி அவனின் பேச்சுக்கே தலையாட்டி வைத்தான்.. சிவாவின் மனநிலையை மாற்ற நினைத்து இப்பேச்சிலிருந்து வேறு பேச்சுக்கு ரூபன் தாவிட, மனமிட்டு பேசியவாறு நடந்தனர் இருவரும்..
சிறுவயது குறும்புடன் சிவாவை கேலி செய்து சிலபல செல்ல அடிகளையும் பரிசாக பெற்று கொண்டான் ரூபன்..
ரத்தபந்த உறவிடம்
மட்டும் தான் உரிமை
இருக்குமென்று
யார் சொன்னது?
சொன்னவரிடம் கூறி
விடுங்கள் எங்களின்
உறவும் ரத்த
பந்தமில்லை உரிமையும்
உடன்பிறந்தது
இல்லை என்று!
சிவா சென்றதும் ஆதிராவின் சுருங்கிய முகம் மனக்கண்ணில் வந்து ரூபனை இம்சை செய்ய, பேசுவோமா? என்று பலவாறாக போராட்டம் நடத்தி அதன்பின்பு தான் அவளிடம் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளதா? என்று பார்த்தான்.
ஆடவனின் எண்ணத்தை பொய்யாக்காமல் ஆதிராவின் குறுஞ்செய்தி அவனை ஈர்க்க, “ஆர் யூ ஓக்கே??” என்று பெண்ணவளுக்கு அனுப்பி விட்டான் குறுஞ்செய்தியுடன் கலந்த அவனின் தவிப்பை!
ஐந்து நிமிடங்கள் கடந்தும் மறுமொழி வராமல் போக, சோர்ந்த முகத்துடன் பெண்ணவளின் புகைப்படத்தையே இவன் வெறித்திட, அதே நேரம் ஆதிராவும் ஆண்மகனின் குறுஞ்செய்தியை வெறித்திருந்தாள்.
‘ஆதி’ என்று இவன் முணுமுணுத்த சமயம் அவளிடம் இருந்து ம்ம்ம்ம் என்ற பதில் மட்டும் இவனை வந்தடைய, மகிழ்வில் இதழை வளைத்ததில் கன்னங்குழியும் சேர்ந்தே விழுந்தது.
“ஏன்மா ஒரு மாதிரி இருந்தீங்க?” – ரூபன்
“நத்திங்.. நான் நல்லா தான் இருக்கேன்..” – ஆதிரா
“இல்லயே.. ஏதாவது பிரச்சனையா?” – ரூபன்
“ஹூம் அதெல்லாம் இல்ல..” – ஆதிரா
“அப்பறம் ஏன் உங்க முகம் சோர்ந்து இருந்துச்சு” – ரூபன்
‘எல்லாம் உன்னால தான்’ என்று கூற தான் நினைத்தாள் இருந்தும் எப்படி முடியும் அவளால்! வலி மிகுந்த மனதுடன் “நீங்க ஏன் என்கிட்ட பேசல?” என்று கேட்க, அவளின் வினாவில் திகைத்தவனுக்கு என்ன பதில் கூறுவதென்றே புரியவில்லை.
“நீங்க துருவினி கூட தான் பேசுனீங்க அவ கூடவே எப்பவும் பேசிக்கங்க.. நான் எப்படி இருந்தா என்ன உங்களுக்கு?” என்று மனதை தைத்த கேள்வியை அவன்முன் வைத்தவளுக்கு கண்ணீரும் சேர்ந்து வந்தது.
தன்னை மீறி “ஆதி” என்றழைத்து விட்டான்.. அழைத்து விட்டான்.. அவனின் விலகல் எதற்கென்று புரியாமல் பேசும் பெண்ணவளுக்கு என்ன விளக்கம் கூறி சமாளிப்பான்.
“நான் அப்ப சொன்னது தான் இப்பவும் சொல்றேன்.. நீ எப்பவும் எனக்கு ஸ்பெஷல் தான்மா..” என்றவனுக்கு ஒருபுறம் சந்தோசமாக இருந்தாலும் மறுபுறம் காரணமின்றி கவலைகளும் ஆட்கொண்டது.
ஆடவனின் பதிலை கருமணிகள் விரிய ஆதிரா பார்த்திருக்க, இவ்வளவு நேரம் ஆட்கொண்ட இம்சைகள் சட்டென்று அகன்றது போன்ற உணர்வு.
“அப்பறம் ஏன் பேசல?” – ஆதிரா
“உங்களுக்கு பேசாதது தான் கவலையா? சரி இனி உங்க கூட மட்டும் பேசறேன் போதுமா?” – ரூபன்
“நிஜமா? நான் ஏதாவது உங்களைய ஹார்ட் பண்ணிட்டனா?” – ஆதிரா
“இல்லயே.. நீங்க எதுக்கு என்னைய கஷ்டப்படுத்தணும்?” – ரூபன்
“திடீருனு நீங்க பேசாம போனது ஒரு மாதிரி ஆகிருச்சு..” – ஆதிரா
“ஹஹஹ இனி பேசறேன் போதுமா?” – ரூபன்
“ம்ம்ம்ம்..” – ஆதிரா
“ம்ம்ம்ம்” – ரூபன்
அடுத்து என்ன பேசுவதென்று இருவருக்கும் தெரியவில்லை.. ஆதிரா தான் “பாட்டி எப்படி இருக்காங்க?” என்று வினவ, “மோசம்னு சொல்ல முடியாது அதுக்குனு நல்லா இருக்காங்கனும் சொல்ல முடியாதுடா.. வயசாகிருச்சுல” என்றான் எதார்த்த நிலையுடன்.
“நீங்க இதனால தான் வந்தீங்களா?” – ஆதிரா
“ம்ம்ம்ம் ஆமாடா..” – ரூபன்
“வொர்க் இல்லயா?” – ஆதிரா
“இருக்குமா.. அது இல்லாம போகுமா என்ன?” – ரூபன்
“அதுவும் உண்மைதான்” – ஆதிரா
“நீங்க காலேஜ் முடிச்சுட்டிங்களா?” – ரூபன்
“ஹலோ நாங்களும் வொர்க் தான் பண்றோம்.. துருவினியே இந்த வருசம் படிப்பை முடிக்க போறாளாக்கும்..” – ஆதிரா
இதை நேரில் இருந்திருந்தால் எவ்வாறு ஆதிரா கூறி இருப்பாள் என்று நினைக்கும் போதே புன்னகை அரும்புவதை அவனால் தடுக்க இயலவில்லை.
“ஓஹோ சண்முகம் பெரிய இடம் தான் போல..” என்றிட, “ஹய்யோ” என்று வெக்க ஸ்மைலிகளுடன் பதில் வந்தது பெண்ணவளிடம் இருந்து.
வாய்விட்டு சிரித்த ரூபன் “அப்பறம்…” என்று முடிவடையாத புள்ளிகளுடன் அனுப்ப, ஆதிராவும் “ம்ம்ம்ம்ம் அப்பறம்..” என்றாள் வினாவுடன்..
இருவருக்கும் பேச வானளவு ஆசை இருந்தாலும் இருக்கும் சூழ்நிலை கருதி பேச்சை வளர்க்கவும் விரும்பவில்லை..
“அப்பறம் பேசறேன்மா” – ரூபன்
“ம்ம்ம்ம்” – ஆதிரா
“ம்ம்ம்ம்” – ரூபன்
“பேசுவீங்களா?” – ஆதிரா
“ம்ம்ம்ம்ம்” – ரூபன்
“நம்பலாமா??” – ஆதிரா
“ம்ம்ம்ம்” – ரூபன்
“ப்ராமிஸ்??” – ஆதிரா
“என்னைய நம்ப மாட்டியா ஆதி” – ரூபன்
‘ஆதி’ என்று முதல் தடவையாக அவன் அழைக்கும் போது அவன் மீதிருந்த கோவத்தில் அவ்வளவாக கவனிக்கவில்லை.. இம்முறை உண்மையிலே திக்குமுக்காடி ஆதியா? என்ற திகைப்புடன் “நம்பறேன்” என்றாள் ஒரே வார்த்தையில்.
திடீரென்று ஞாபகம் வந்தவளாக “நான் நாளைக்கு கிளம்பிருவேன்” என்றிட, நாளைக்கேவா? என்று அதிர்ந்தவன் அவளின் வருகையை எதற்கென்று சிவாவின் மூலம் அறிந்திருந்தாலும் “ஏன்மா?” என்று கேட்டான்.
“நாளைக்கு அப்பா அம்மா எல்லாம் வந்துருவாங்கனு நினைக்கறேன்.. அவங்க வந்துட்டா எனக்கு இங்க என்ன வேலை?” – ஆதிரா
“ம்ம்ம்ம் பார்த்து போங்கடா” – ரூபன்
“இதைய கிளம்பும்போது சொல்லுங்க” – ஆதிரா
“சொல்லிருவோம்” – ரூபன்
“ம்ம்ம்ம்” – ஆதிரா
“கிளம்புட்டுமா?” – ரூபன்
“ம்ம்ம்ம்ம்” – ஆதிரா
“ம்ம்ம்ம்ம்” – ரூபன்
இன்னும் சிறிது நேரம் பேசேன் என்று வந்த ஏக்கங்கள் நிறைந்த ம்ம்ம்ம் என்ற வார்த்தையை மற்றவர்கள் உணர்ந்து கொள்வார்களோ என்ன?
ஒருவரின் உணர்வை இன்னொருவர் உணரும்போது இந்த ஏக்கத்தை மட்டும் புரிந்து கொள்ளாமல் விடுவார்களா என்ன?
மனதளவில் ஏக்கங்கள் நிறைத்திருந்தாலும் அவனி(ளி)டம் பேசி விட்டோம் என்ற மனநிறைவான புன்னகை இதழில் உறைந்திருந்தது இருவரிடமும்!
தமக்கையின் அலைப்பேசியில் என்னமோ செய்திருந்த துருவினிக்கு ரூபனுடன் பேசியது கண்ணில் பட, ‘இவங்க கூட இவ பேசுவாளா?’ என்ற அதிர்ச்சியில் உறைந்தாள்.
‘ஆனா இங்க வந்தப்ப ரெண்டு பேரும் பேசிக்கலயே?’ என்ற குழப்பமே அவளை ஆட்கொள்ள, ‘இந்த திரா புள்ள என்ன பண்ணுது ஏது பண்ணுதுனே புரில.. உன் திருட்டு தனத்தை என்கிட்டயே மறைக்கறீயா?’ என்று மனதினுள் கருவினாள் துருவினி.
அடுத்த நாளே ஆதிராவும் துருவினியும் கிளம்பி விட்டனர். அன்றிரவு ரூபனின் பாட்டியும் தவறி விட, இருவரும் பேசி கொள்ள நேரமும் அமையவில்லை.
தமக்கையிடம் நேரம் பார்த்து பேச வேண்டும் என்று காத்திருந்த துருவினிக்கு நேரமும் அமைந்தது. பெற்றவர்கள் ஏதோ வேலையென வெளியில் சென்றிருக்க, சுழலும் மின்விசிறியை பார்த்தவாறு ஆதிரா படுத்திருக்க, “திரா” என்று அவளை இடித்தபடி படுத்தாள் துருவினியும்.
“பிசாசே அதான் அவ்ளோ இடம் இருக்குல.?” – ஆதிரா
“இப்ப இதுவா முக்கியம்.. ப்ச் நான் ஒரு விசயம் சொல்லணும்டி..” – துருவினி
“அப்படி என்னத்த நீ சொல்ல போற.?” – ஆதிரா
“ரொம்ப முக்கியமான விசயம்” என்ற துருவினி எழுந்தமர்ந்து வெக்கப்படுகிறேன் என்ற பேர்வழியில் உடலை நெளித்தாள்.
“ச்சை என்ன கருமம்டி இது..” – ஆதிரா
“வெக்கம்டி வெக்கம்..” – துருவினி
“அந்த கருமம் எனத்துக்கு இப்ப வந்துச்சு.? ஏன்டி வராததை எல்லாம் வா வானு கூப்பிட்டு என் உயிரை வாங்கிட்டு இருக்க.?” – ஆதிரா
“ப்ச் திரா.. ஐ திங்க்…” என்று துருவினி இழுக்க, ‘இது அதுல.?’ என்று யாரடி நீ மோகினி படத்தின் காட்சியை நினைவு கூர்ந்தவள் பெருமூச்சுடன் ‘பைத்தியம் முத்திருச்சு இதுக்கு’ என்று நொந்தாள்.
தமக்கையை விடாமல் “திரா ஐ திங்க்…” என்று அவளை உலுக்க, ‘கஷ்ட காலம்டி ஆதி’ என்று நினைத்து அஷ்டகோண முகத்துடன் “யூ திங்க்..” என்று கேட்டாள் விதியை நொந்து.
“ஐ திங்க்..” – துருவினி
“யூ திங்க்..” – ஆதிரா
“திரா..” – துருவினி
“ம்ம்ம்ம்” – ஆதிரா
“ஐ திங்க்..” – துருவினி
“யூ திங்க் என்னனு சொல்லி தொலைடி பைத்தியமே..” – ஆதிரா
“ஐ லவ்..” – துருவினி
“ஹே ஸ்டாப் ஸ்டாப்.. ஐ லவ் யூ னு என்கிட்ட சொல்லிராதடி.. சேம் சேமா போய்ரும்..” என்று தங்கையை முழுவதும் கூற விடாமல் ஆதிரா தடுத்திட, கடுப்பான துருவினி பாராபட்சம் பார்க்காமல் அவளை மொத்தினாள்.
தங்கையை சமாதானப்படுத்தும் விதமாக மனமிறங்கிய ஆதிரா “சரி சரி.. யூ திங்க்..
” என்று அவள் கூறியதை போலவே வினவி என்னவென்று கேட்க, “ஐ லவ் ரூபன்..” என்ற துருவினி வெக்கத்தில் முகத்தை மூடி கொண்டாள்.
இதை கேட்டு ஆதிராவின் ரியாக்ஷன் என்னவோ.?????
அழகிய பூகம்பம் தொடரும்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1

