Loading

பூகம்பம் – 10

தன்னை கடிந்து கொண்டு நின்ற ஆதிராவின் கருமணிகள் சட்டென்று சந்தோசத்தில் விரிந்தது ரூபனுடன் சேர்ந்து வந்த காவ்யாவின் குறுஞ்செய்தியை கண்டதும்!

எதையும் யோசிக்காமல் காவ்யாவின் குறுஞ்செய்தியை தான் முதலில் படித்தாள்.. அதில் “உன்னைய மன்னிக்கணுமா? அப்ப டிரீட்டாக பிரியாணியும், அப்படியே என் ப்யூச்சர் அண்ணாவையும் இண்ட்ரோ குடுத்தா தான் மன்னிப்பேன்..” என்று சில பல கோவ எமோஜிகளுடன் காணப்பட்டது.

துளிர்த்த கண்ணீரை துடைத்த ஆதிராவுக்கு சிரிப்பில் இதழ்கள் வளைய, “பிரியாணி ஓக்கே.. செகண்ட் ஒன் அவன் என்ன மனநிலைல இருக்கானு தெரியணும்..” என்று ஆரம்பித்த இவர்களின் பேச்சு சிறிது  நிமிடங்களில் சமாதான உடன்படிக்கையுடன் முடிந்தது.

பின்புதான் ரூபனுக்கு “நான் அப்படி சொல்லல.. இந்த சிவா மாமா என்னைய கலாய்க்க அப்படி வெச்சுருக்காங்க” என்று அனுப்பியவள் அதோடு அலைப்பேசியையும் அணைத்து விட்டாள்.

வெகு நேரம் அலைப்பேசியை வைத்திருந்தால் நிவேதாவின் சந்தேகப் பார்வை தன்மீது திரும்பி விடும் என்று தான் அலைப்பேசியை அணைத்தது. அதன்பின்பு சாத்விக்குடன் சிறிது நேரம் விளையாடியவள் தங்கையுடன் சேர்ந்து வீட்டு வேலைகளையும் முடித்த பின்பு ஹப்பாடா என்றமர்ந்தாள்.

“திரா நம்ம எப்ப கிளம்பறது?” – துருவினி

“தெரிலயே” – ஆதிரா

“அப்பா எதுவும் சொல்லலயா?” – துருவினி

“நான் எங்க பேசுனேன் சிவா மாமா தான் பேசுனாங்க” – ஆதிரா

“ப்ச் சீக்கிரம் கிளம்பலாம்” – காவ்யா

“ஹஹஹஹஹ ஏன் வேலை செய்ய கஷ்டமா இருக்கா?” – ஆதிரா

“அப்படி இல்ல.. ஆனா அப்படிதான்” – துருவினி

“தெரியுது தெரியுது நல்லாவே தெரியுது” – ஆதிரா

“என்னதான் இது மாமா வீடா இருந்தாலும் நம்ம வீடு மாதிரி வருமா?” – காவ்யா

“கிளம்பிரலாம் துரு.. இப்படி நிவே அக்கா, சிவா மாமா முன்னாடி பேசிட்டு இருக்காத..” என்று கண்டிப்புடன் ஆதிரா கூறிய நேரம் “என்ன அக்காவும் தங்கச்சியும் ரகசியம் பேசிட்டு இருக்கீங்க” என்றவாறு நிவேதாவும் அவர்களிடம் வந்தாள்.

“ரகசியமா? அட காமெடி பண்ணாம போங்க.. ஆமா இன்னும் சிவா மாமாவை காணோம்..” – ஆதிரா

“ஊரு சுத்தாம உன் மாமா வீட்டுக்கு வந்ததா சரித்திரமே இல்லடா” – நிவேதா

“மாமாவும் வீட்டுலயே இருந்து என்ன பண்ணுவாங்க.. அப்படி இப்படினு நாலு பக்கம் போய்ட்டு வரட்டுமே” – துருவினி

“ம்ம்ம்க்க்கும் எங்களுக்கும் போகணும்னு தோணாதா?” என்று நிவேதா முகவாயை இடித்து கொள்ள, ஆதிராவுடன் சேர்ந்து துருவினியும் சிரித்தாள்.

வீரச்சாமியின் வீட்டிற்கு சென்று விட்டு சிவா வீடு திரும்பும் நேரம் தான் ரூபனை கண்டான். ஆனால் அவனோ சிவாவை காணாமல் யாருடனோ பேசி கொண்டிருக்க, சத்தமாக “ரூபன்” என்றழைத்தான் சிவா.

திரும்பிய ரூபன் சிவாவை பார்த்ததும் மகிழ்ச்சி கலந்த சிரிப்புடன் “அண்ணே” என்றவன் பேசி கொண்டிருந்தவரிடம் விடைபெற்று சிவாவை நோக்கி சென்றான்.

“என்னடா வீட்டுல இருக்கவே மாட்டிங்கற?” – சிவா

“அங்க இருந்து நான் என்ன அண்ணே பண்ண போறேன்” – ரூபன்

“அதுவும் சரிதான்.. அம்மா தான் உன்னைய காணோம் பார்த்தா வர சொல்லுனு சொன்னாங்க” – சிவா

“நீ எப்ப அண்ணே அம்மாவை பார்த்தீங்க?” – ரூபன்

“பாட்டியை பார்க்கலாம்னு வீட்டுக்கு போனேன் அப்பதான்.. ஊரை சுத்த வேண்டியது ஆனா என்னைய பார்க்க வர்றது மட்டும் ரொம்ப கஷ்டமோ?” என்று செல்லமாக ரூபனின் வயிற்றில் கையை மடக்கி குத்தினான் சிவா.

விளையாட்டாக ரூபனும் அலறியதை போல் நடிக்க, “ரொம்ப நடிக்காதடா.. முதல்ல சாப்பிட்டியா?” என்று அக்கறையுடன் சிவா வினவிட,  “பசிக்கல அண்ணே..” என்றான் ரூபன்.

“அப்படியே ஒரு அடி விட்டனா வெய்யு.. வாடா போவோம்..” – சிவா

“உண்மையாவே பசிக்கல அண்ணே..” – ரூபன்

“வார்த்தைக்கு வார்த்தை அண்ணானு சொல்லிட்டு அண்ணன் வீட்டுக்கு வர்றதுக்கு கூட என்னடா?” என்று வலுக்கட்டாயமாக ரூபனை இழுத்து சென்றான் சிவா.

என்னதான் அனைவரிடமும் சிரித்து பேசினாலும் தேவையென்றால் மட்டுமே அவர்களின் வீட்டிற்கு செல்வான்.. அவனின் சித்தப்பா வீட்டில் கூட ஏதோ ஒரு நேரம் மட்டும் பேருக்கென உண்பவன் மற்ற நேரங்களில் பசித்தால் கடைக்கு சென்று விட்டான்.

அதனால் தான் என்னவோ இன்றும் சிவாவுடன் செல்வதற்கு ஒரு மாதிரி இருக்க, வேணாம் என்று மறுத்தவனின் பேச்சை காதில் வாங்காத சிவாவும் அவனை அழைத்து செல்வதில் முடிவாக இருந்தான்.

ரூபனை எதிர்பார்க்காத துருவினி “ஹாய் ப்ரோ.. எப்படி இருக்கீங்க? என்று சந்தோசத்துடன் கேட்க, உள்ளறையில் இருந்த ஆதிரா  ‘யாருடா வந்தது’ என்று குழப்பத்தை தாங்கிய முகத்துடன் வெளியே வந்தவளுக்கும் அதிர்ச்சி தான்..

துருவினியும் தன்னை மறக்கவில்லை என்று அவளின் பேச்சிலே நன்றாக புரிந்து கொண்ட ரூபன் “நல்லா இருக்கேன்மா.. நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கேட்டான் பரிவுடன்.

“எனக்கு என்ன ப்ரோ செமையா இருக்கேன்..” – துருவினி

“நிவேதா எங்கடா?” – சிவா

“தெரில மாமா..” – துருவினி

“திராவையும் காணோம்” – சிவா

“நான் இங்கதான் இருக்கேன் மாம்ஸ்.. என்ன விசயம் என்னைய தேடறீங்க?” – ஆதிரா

“ரூபன் இன்னும் சாப்படலடா.. முதல்ல நிவேதா எங்க? பையனும் காணோம்” – சிவா

“சாத்விக் அழுகறானு தான் அக்கா வெளில தூக்கிட்டு போனாங்க.. எங்க போனாங்கனு தெரில மாமா..” – ஆதிரா

இதுதான் சமயமென்று  “அண்ணே எனக்கு பசிக்கவே இல்ல.. இன்னொரு நாள் சாப்பிட்டுக்கலாம் விடுங்க” என்று ரூபன் மறுத்திட, “ஹலோ எங்களுக்கும் சமையல் தெரியும்.. ஒரு டூ மினிட்ஸ் வெய்ட்டு பண்ணுங்க.. தோசை கம்மிங்” என்று ரூபனை முறைத்து விட்டு சென்றாள் ஆதிரா.

அவள் முறைத்தது எங்கு ரூபனுக்கு தெரிந்தது.. அவன்தான் வந்ததில் இருந்து ஆதிராவை காணவே இல்லயே.. ‘தன்மேல் இத்தனை நம்பிக்கை வைத்திருக்கும் சிவாவிற்கு நான் செய்வது நம்பிக்கை துரோகமல்லவா?’ என்று நினைத்த போதே சுருக்கென்று வலி ஒன்று இதயத்தை தாக்கிய உணர்வில் அமைதியாக அமர்ந்தான்.

மும்முரமாக ஆதிரா தோசை வார்த்து கொண்டிருக்க, “முடிஞ்சுதா?” என்று கேட்டவாறு சிவாவும் அவளிடம் வந்தாள்.. “ம்ம்ம்ம் மாமா.. குழம்பும் சட்னியும் இருக்கு.. அவங்க சாப்பிட சாப்பிட தோசையை போட்டுக்கலாம்” என்றவள் சுட்டு வைத்திருந்த தோசையை தட்டில் போட்டு சிவாவிடம் நீட்டினாள்.

துருவினியின் பேச்சை கேட்டிருந்த ரூபன் தட்டுடன் சிவா வருவதை பார்த்து “அண்ணே என்ன இது?” என்று பதறி எழ, “அட ப்ரோ எங்க மாமாவை என்னனு நினைச்சீங்க? அவருதான் எப்பவும் தோசையே சுடுவாருனு உங்ககிட்ட எப்படி சொல்லுவான் நானு” என்று நிலைமையை சகஜமாக்கினாள்.

“வாலு” என்றவாறு அவளின் தலையில் செல்லமாக தட்டிய சிவா “சாப்பிடுடா.. இதுல என்ன இருக்கு” என்று இப்போதும் அதட்டலுடனே கூறினான்.. இல்லையென்றால் மறுப்பதோடும் இல்லாமல் கிளம்பறேன் என்று ஓடி விடுவானே!

ரூபனுக்கு சேர வேண்டிய நிலத்தையும் தன் மகன்களுக்கு பாதியாக வேலுச்சாமி பிரித்து குடுத்து விட்டார் என்பதை அறிந்ததில் இருந்து ரூபனிடம் பேச வேண்டும் என்றிருந்தது சிவாவுக்கு.

அவன் மறுக்க மறுக்க விடாமல்  தோசையை வைத்த ஆதிரா “சாப்பிடு” என்று கண்களாலே அதட்டினாள்.

ஒரு பக்கம் சிவாவின் நம்பிக்கை.. மறுபக்கம் ஆதிராவின் கள்ளங்கபடமற்ற உரிமை.. வலையில் சிக்கிய மீனாய் இரண்டிற்கும் இடையில்  தவித்தவனுக்கு தோசையும் உள்ளிறங்க மறுத்து சண்டிதனம் செய்தது.

“ப்ரோ நல்லா சாப்பிடுங்க.. அப்பதான் என் அக்காவை மாதிரி வர முடியும்” என்று ஆதிராவை நக்கலடித்த துருவினியின் மேல் கரண்டி ஒன்று பறந்து வந்து விழுந்தது..

இளங்கீற்று புன்னகையுடன் ரூபனும் “நீயும் முதல்ல சாப்பிடுமா.. வேகமா காத்தடிச்சா பறந்துட்டு போய்ருவ போல” என்று ஆதிராவை விட்டு குடுக்க மனமில்லாமல் துருவினியை கேலி செய்ய, சிணுங்கலுடன் “போங்க ப்ரோ” என்றாள் துருவினி.

ரூபனின் பாராமுகம் கண்டு உள்ளுக்குள் மருகிய ஆதிராவுக்கு மனது என்னவோ செய்ய, அவன் சாப்பிட்டதும் அங்கிருந்து அகன்றும் விட்டாள் உள்ளிழுத்து கொண்ட நீர்துளிகளுடன்!

தங்கையிடம் சிரித்து பேசுபவன் ஏன் தன்னிடம் மட்டும் அந்நியத்தன்மை காட்டுகிறான் என்று புரியாமல் நடந்தவளுக்கு ‘ஒருவேளை அவங்க துருவினியை தான் பார்த்துருப்பாங்களோ? நான்தான் அதைய தப்பா புரிஞ்சுக்கிட்டனோ?’ என்று நினைக்கும் போது இதயமே இரண்டாக பிளந்த உணர்வு.

தன்னை மீறி உவர்ந்த உவர்நீரை யாரும் கண்டு விட கூடாது என்பதற்காகவே உள்ளறைக்கு சென்று தாளிட்டும் கொண்டாள்..

பட்டாம்பூச்சியாய் பறந்து

திரிந்தவளை காதல்

என்னும் மாயவலை

கொண்டு வீழ்த்தி..

பின்பு யாரோ போல்

கடந்து செல்கிறாயே!

என் மனது என்ன

கல்லால் செய்யப்பட்ட

கற்சிலையா என்ன?

காதலை உணர்ந்த

நொடியே உன் பார்வை

எனக்கானது இல்லையோ

என்ற சந்தேகத்தை

ஏனடா வர வைத்தாய்.?

காதல்.. காதல்..

இந்த மூன்றெழுத்தில்

அடங்கிய உணர்வுகளின்

வடிகால்கள் தான்

எத்தனையோ..?

அழுக கூறி அவளின் மனது துடிக்க, மாட்டேன் அழுக மாட்டேன் என்று வீம்புடன் கண்ணீர் துளிகளை வீணாக்காமல் உதட்டை கடித்து அழுகையை அடக்கியவாறு அமர்ந்திருந்தாள் ஆதிரா..

ஆதிரா சென்றது ரூபனையும் வருத்தியது தான் அவனும் என்ன தான் செய்வான்? இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிப்பது வெளியில் தெரிந்து விட கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருந்தான் ரூபன்.

சிவாவும் ரூபனும் கிளம்பும்போதும் ஆதிரா வெளியில் வராமல் இருக்க, ஏக்கத்துடன் அறைக்கதவில் படிந்தது ஆடவனின் விழிகள் ‘ஒருதடவை என்னை கண்டு விட மாட்டாயா ஆதி’ என்ற துடிப்பில்!

அமைதியாக அவனுடன் நடந்த சிவா “கேள்விப்பட்டேன்டா.. உன் சித்தப்பாக்கு ஏன் புத்தி இப்படி போகுது?” என்று அவனின் அமைதியை கலைத்தான்..

அதுவரை ஆதிராவின் எண்ணத்தில் இருந்தவன் இக்கேள்வியில் தன்னையிலை அடைந்து “என்ன அண்ணே பண்ண முடியும்” என்றான் விரக்தியுடன்.

“உனக்கான உரிமையை நீ கேட்டுருக்கணும்டா.. அப்படியே விட்டது ரொம்ப தப்பு..” – சிவா

“கேட்டா மட்டும் எனக்கு பதில் சொல்லிட்டு தான் மறுவேலை பார்ப்பாரா அண்ணே” – ரூபன்

“அது இல்லடா..” – சிவா

“ப்ச் முடிஞ்சது முடிஞ்சதாவே போகட்டும் அண்ணே.. மறுபடியும் மறுபடியும் அதைய பத்தி பேசுனா நடந்தது இல்லனு ஆகிருமா?” – ரூபன்

“என்னமோ போடா.. இதைய கேள்விப்பட்டதுல இருந்து என்னாலயே ஏத்துக்க முடில..” – சிவா

“இதுதான் நடக்கணும்னு இருந்தா யாரால மாத்த முடியும் விடு அண்ணே.. இனி நடக்கறதை மட்டும் யோசிப்போம்” – ரூபன்

“எந்த பிரச்சனை வந்தாலும் முடிஞ்சதை விட்டுட்டு இனி நடக்கறதை மட்டும் யோசிக்கணும்னு திராவும் சொல்லுவாடா.. அம்மாவை மட்டும் நல்லா பார்த்துக்கடா..” என்று சிவா கூறியதை கேட்டு ‘இதைய என்கிட்ட சொன்னதும் அவங்க தான் அண்ணே’ என்று நினைத்து கொண்டவன் பதிலாக புன்னகையை மட்டும் அளித்தான்..

தான் கேள்விப்பட்டதை எப்படி கூறுவது என்று பலவிதமான எண்ணங்களில் சிறைப்பட்டிருந்த சிவா பின்பு ஒரு முடிவுடன் “ரூபன் சொல்ல கூடாது தான் இருந்தும் சொல்லாம விடறதுக்கு மனதும் வரல” என்று பீடிகையுடன் நிறுத்தினான்.

சிவாவின் பீடிகையில் ‘தான் ஆதியை பார்த்தது இவர்களுக்கும்

தெரிந்து விட்டதோ?’ என்ற அச்சத்தில் எக்கச்சக்கமாக எகிறி துடித்த இதயதுடிப்பை அடக்கும் வழியின்றி படபடத்தவன் கையை இறுக்க மூடி கொண்டான்.

அழகிய பூகம்பம் தொடரும்..

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்