Loading

அகம்-46

அங்கயற்கண்ணிக்கு ஒரே யோசனையாய் இருந்தது. குலதெய்வ வழிபாடு முடிந்து வந்ததிலிருந்து மனம் முழுதும் பயமும் குழப்பமும் மட்டுமே நிறைந்திருந்தது.

 

அதுவும் தன் மகள் மீனாட்சியைத் தாலி கட்டிக் கூட்டிப் போய் ஏமாற்றியவனைப் பார்த்ததிலிருந்து ஏதோவொரு உறுத்தல். தனக்கு தெரிந்த நபர்களை வைத்து ஊருக்குள் விசாரித்துப் பார்த்தார்.

 

“புள்ளை, குட்டி, பொண்டாட்டின்னு எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம்? பித்து பிடிச்சு திரியறாருன்னு பொண்டாட்டியே அடிச்சு விரட்டிடுச்சு. எல்லாம் செஞ்ச பாவம் மா!” என்ற பதில் கிடைத்தது.

 

மீனாட்சியை ஏமாற்றியவனுக்கு தண்டனைக் கிடைத்துவிட்டது என்ற நிம்மதி ஒருபுறம் இருந்தாலும், சொக்கேசன், இரஞ்சிதத்திற்கு செய்த துரோகத்தின் வினையாய் என்ன நடக்கப் போகிறதோ? என்ற பயம் அவர் நெஞ்சைக் கவ்விப் பிடித்தது.

 

இந்த வயதிலும் கணவர் என்ற உறவை சுத்தமாய் ஒதுக்கி வைத்திருப்பவருக்கு, கணவரைப் பற்றிய கவலைகள் எதுவும் இல்லை. ஆனால் இப்பொழுது தான் வாழ்க்கையைத் துவங்கியிருக்கும், கருவிழி, அழகரின் வாழ்க்கையை நினைத்து தான் அவருக்குக் கவலையாய் இருந்தது.

 

யோசனையோடு அங்கயற்கண்ணி மெத்திருக்கையில் அமர்ந்து எங்கோ வெறித்துக் கொண்டிருக்க,

 

“பாட்டி! நாங்க கிளம்பறோம்!” என வந்து நின்றனர் மதுவும் நெடுமாறனும்.

 

“வந்து ஒரு வாரந்தானே ஆகுது? அதுக்குள்ளயே கிளம்புறீகளா?”

 

“ஏற்கனவே ஒருவாரம் லீவு போட்டாச்சு அப்பத்தா! ரெண்டு பேருமே புதுசா தானே ஜாய்ன் பண்ணிருக்கிறோம்! அடிக்கடி லீவு போட முடியாது அப்பத்தா!” என நெடுமாறன் சொல்ல,

 

“சரி நெடுமாறா! புள்ளைய பத்திரமா கூட்டிப் போகணும்! அங்கே போய் சூதானமா இருங்க!” என நெடுமாறனிடம் சொன்னவர் மதுவிடம் திரும்பினார்.

 

“மதும்மா! நீதான் எல்லாத்திலேயும் பொறுப்பா இருப்ப! எதுவா இருந்தாலும் ஃபோன் போடும்மா! வேலைக்குப் போறோமின்னு சாப்பிடாம இருக்காதீங்க ராசாத்தி! உடம்பைப் பார்த்துக்கிடுங்க!” எனச் சொன்னார்.

 

“சரி பாட்டி! நான் பார்த்துக்கிறேன். நீங்க கவலைப் படாதீங்க!” என மது சொல்லிக் கொண்டிருக்க,

 

“என்னை விட்டுட்டு இங்கே என்ன மாநாடு?” என்றபடி உள்ளே வந்தான் வீரபத்ரன்.

 

“டேய் டென் ருப்பீஸ்! மதுவும் நெடு மாமாவும் ஊருக்குக் கிளம்புறாங்க! நீ எங்கே போய் சுத்திட்டு வர்ர? வீட்டிலேயே இருக்கிறதில்லை! குலசாமி கோயிலுக்கும் வரலையே? எங்கேடா போன?”

 

“நான் ஊர் சுத்தினதை நீ பார்த்தியா மைடப்பி? அரை டிக்கெட்டுகளெல்லாம் அண்ணியாகிடுச்சுங்க! அட்டூழியம் தாங்க முடியலைடா சாமி!” என வீரபத்ரன் சொல்ல,

 

“ஏய்! யாரைப் பார்த்து அரை டிக்கெட்டுங்கிற? பிச்சுப்புடுவோம் பிச்சு!” ஒரே நேரத்தில் கருவிழியிடமிருந்தும் மதுவிடமிருந்தும் குரல் கேட்டது.

 

“பார்ரா! என்ன டைமிங்! ஒட்டுக்கா ஒரே நேரத்தில் சொல்றீங்களாக்கும்? சரி.. சரி… பாவம் பார்த்து மன்னிச்சு விட்டுடுறேன்.”

 

“நீ பாவம் பார்த்து மன்னிச்சு விடுறியாக்கும்? மண்டையில் குட்டினேன்னா புதைஞ்சு பூமிக்குள்ளே போயிருவ!” கருவிழி சொல்ல,

 

“ச்சே! இந்தப் பக்கிங்களுக்குப் போய் சர்ப்ரைஸ் பண்ணலாம்ன்னு வந்தேன் பாரு, என்னைச் சொல்லணும். மது, பேசாமல் இந்தப் பக்கியையும் பத்திட்டு போ! இம்சை தாங்க முடியலை!” என்ற வீரபத்ரன் வாசலை நோக்கி நடந்தான்.

 

“டேய்! என்னடா சர்ப்ரைஸ்? நீ பாட்டுக்கு வந்தே! நீ பாட்டுக்குப் போறே? என்னடா படம் காட்டுறியா?” அரசி கேட்க,

 

“ஆமா நான் மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர் படம் காட்டுறேன். எம்மா கொஞ்சம் சும்மா இரும்மா! பெத்த கடமைக்கு நீ கூப்பிடுறே? பக்கிங்க பேச்சுக்காவது கூப்பிடுதுங்களா பாரு? கல்நெஞ்சக்காரிகள்!” பொய்க் கோபத்தோடு முகத்தை வைத்துக் கொண்டான் வீரபத்ரன்.

 

“டேய் பதிற்றுப்பத்து, என்னடா? அப்படி என்ன சர்ப்ரைஸ்?”

 

“ஹான்! இப்படி பொறுமையாய் பாசமா கேட்கணும்!” என்றவன், மதுவிடமும் நெடுமாறனிடமும் திரும்பி,

 

“என்னால் பெரிய ட்ரிப் எல்லாம் அரேன்ஜ் பண்ண முடியலை டா! ஈ.சி.ஆர்-இல் கடல் பக்கத்திலேயே வில்லா புக் பண்ணியிருக்கேன். வீக் எண்ட் மூணு நாளைக்கு நீங்க ஜாலியா என்ஜாய் பண்ணலாம்! இந்தாங்க புக்கிங் டீட்டெய்ல்ஸ் எல்லாமே இதில் இருக்கு! என்ஜாய் டா நெடுமாறா! என்ஜாய் மது!” என கரத்திலிருந்த கவரை நெடுமாறனிடம் கொடுத்தான் வீரபத்ரன்.

 

“டேய்! இதெல்லாம் உன்னை யார் பண்ண சொன்னது? தேங்க்ஸ் டா வீரா!” இளையவனை இறுக அணைத்துக் கொண்டான் நெடுமாறன்.

 

“இந்தா உனக்கும், என் கூடப் பொறந்தவனுக்கும்!” கருவிழியின் கரத்தினில் இன்னொரு கவரைக் கொடுத்தான்.

 

“நாங்களும் சென்னை போவணுமா?”

 

“பிரிச்சு பாரேன் மைடப்பி! ரெண்டு பேருக்கும் ஓரே இடத்தில் தான் ப்ளான் பண்ணினேன். உங்களை கொஞ்ச நாளைக்கு வெளியூர் அனுப்பக் கூடாதுன்னு இராஜமாதா உத்தரவு. அதனால் பக்கத்திலிருக்கிற பூம்பாறை தான்! மூணுநாள் ட்ரிப்.!” எனச் சொன்னவனின் பார்வை அங்கயற்கண்ணியிடம் நிலைத்தது.

 

“எனக்கு கொஞ்ச நாளைக்கு எங்கேயும் உங்களை அனுப்ப விருப்பம் இல்லை அழகரு! இங்கணையே கிடந்து ஒரு மாதிரியாய் இருக்கும். ஒரு மாற்றத்திற்கு போய்ட்டு வாங்க!”

 

“இல்லை அப்பத்தா! உங்களுக்கு விருப்பமில்லைன்னா நாங்க போகலை! இங்கேயும் நிறைய சோலி கிடக்கே அப்பத்தா!”

 

“சோலி எப்போவும் தான் இருக்கும்.. நாளைக்கு புள்ளை குட்டின்னு வந்த பின்னால் உங்களுக்குன்னு இருக்கிற நேரம் குறைஞ்சிடும். எந்த தொந்தரவும் இல்லாமல் மூணு நாள் போய் இருந்துட்டு வாங்களேன். விழிக்கும் ஆசை இருக்காதா என்ன.?” அரசி சொன்னதும், அழகரால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

 

அழகருக்கும் ஆசை இருந்தது. தன்னவளைக் கூட்டிக் கொண்டு உலகம் சுற்ற வேண்டுமென்று. சுவிட்சர்லாண்ட், மாலத்தீவுகள், பாரீஸ் என நிறைய திட்டங்கள் வைத்திருந்தான். ஆனால், ரோஹன் தப்பித்துவிட்ட விஷயம் காதுக்கு வந்ததிலிருந்தே ஒருவித உறுத்தல் அவன் மனதிற்குள் இருந்துக் கொண்டே இருந்தது.

 

“ஏன் மாமா வேணாம்ன்னு சொல்றே? போய்ட்டு வரலாம் மாமா ப்ளீஸ்..!” என்ற மனைவியின் குரல் காதோரம் கேட்க, அவளுக்கு மறுப்பு சொல்லிப் பழகியிராத அவன் உதடுகள் சட்டென விரிந்து சம்மதம் சொன்னது.

 

“தேங்க்ஸ் டா டென் ருப்பீஸ்..! என்னதான் சண்டை போட்டாலும், எம் மேலே உனக்கு இம்புட்டு பாசமா டா?”

 

“நீ என் ஃப்ரெண்ட் மைடப்பி! அப்பறம் தான் அண்ணி! நீயும் சரி, இந்த மரமண்டை மதுவும் சரி, எனக்கு ஒண்ணு தான். இதை நான் என் சொந்தக் காசில் ஏற்பாடு பண்ணியிருக்கேன் தெரியுமா? ஃபர்ஸ்ட் ஷார்ட் ஃபிலிமில் வந்த காசு. நம்ம சொந்தக் காசில் ஒரு விஷயம் பண்ணும் போது, எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?” என அவன் சொல்ல, நெடுமாறனும், அழகரும் ஓடி வந்து அவனைக் கட்டிக் கொண்டனர்.

 

“நாங்க பார்க்க வளர்ந்த பொடிப் பையனாடா நீ? தேங்க்ஸ்டா!” என அவர்கள் நெகிழ்ந்து சொல்ல,

 

“போதும்! போதும்! ஓவர் எமோஷன் உடம்புக்கு ஆகாது. நாளைப் பின்னே எனக்கு கல்யாணம் ஆகும் போது, எல்லாம் டபுளா வருமே.. அதைக் கணக்குப் பண்ணி தானே ப்ளான் போட்டேன். எப்படி என் இராஜ தந்திரம்.!” என வீரபத்ரன் சொல்ல, வன் சொன்ன தோரணையில் அனைவரின் இதழ்களிலும் புன்னகை விரிந்தது.
சற்று நேரத்திலேயே மதுவும் நெடுமாறனும் விடைபெற்றுக் கிளம்பிவிட,

 

“நான் போய் ட்ரெஸ் எல்லாம் பேக் செய்றேன் அழகரு!” என்றபடி தன்னறைக்கு ஓடிப் போனாள் கருவிழி.

*******

அலைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டே தன்னறையில் மனைவியைக் காணாது, தேடியவன், பக்கத்திலிருந்த அவள் அறையை எட்டிப் பார்த்தான்.

 

கதவைத் திறந்து வைத்துக் கொண்டு, அலமாரியிலிருந்த மொத்தத் துணிகளையும் அள்ளி வெளியே போட்டுவிட்டு, தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் கருவிழி.

 

“ஏய் என்னடி இது? அவ்வளவு துணியையும் அள்ளி கிழே போட்டு வச்சிருக்க?”

 

“எந்த துணி எடுத்து வைக்கன்னு தெரியலை அழகரு!”

 

“அதுக்குன்னு இப்படியா கொட்டிக் கவிழ்த்து வைப்பே? இப்போ இதையெல்லாம் திரும்ப எப்படி மடிக்கிறது? நான் இந்த ட்ரிப் வேணாம்ன்னு யோசிச்சுட்டு இருக்கேன். நீ ஓவர் ஆர்வமா இருக்கியேடி?”

 

“மா..மா! ஏன் வேணாம்? அப்போ இந்த வீட்டுக்குள்ளேயே தான் நான் இருக்கணுமா?”

 

“மூணுநாள் ட்ரிப்புக்குப் பின்னாடி இந்த வீட்டுக்குத்தானே திரும்ப வரணும்!”

 

“அழகரு.. ப்ளீஸ்..! நான் இந்த பூம்பாறை போனதே இல்லை! அங்கே ஒரு முருகன் கோயில் இருக்கே அங்கேயும் போகணும்!”

 

“கொஞ்ச நாளைக்குப் பிறகு போகலாம் டி! இப்போதைக்கு வேண்டாம்.!”

 

“சரி போக வேணாம் போ! இந்த துணி மொத்தத்தையும் நீயே மடிச்சு வச்சிரு! அத்தை தோசை சுட்டுருப்பாங்க! நான் போய் சாப்பிடப் போறேன்.!”

 

“ஏய் நில்லுடி! சாப்பாடு மட்டும் ஞாபகம் வரும்! என்னையெல்லாம் ஞாபகம் வராதே!” அவள் கரம் பிடித்து இழுத்தான் அழகர்.

 

“நீ தான் போக வேணாம்ன்னு சொல்றியே? அதனால், இப்போ தோசை ஞாபகம் தான் வருது.” அவன் இழுத்த இழுப்பில் அவன் மார்பில் வந்து மோதியபடியே பதில் சொன்னாள் கருவிழி.

 

“ஏய் கரு கரு! இப்போ கொஞ்சம் சூழ்நிலை சரி இல்லைடி! ஒரு ரெண்டு மாசம் போகட்டும்!” தனக்குள் அடங்கி வாகாக மார்பில் தலை சாய்த்து நின்றவளைப் பார்த்துச் சொன்னான் அழகர்.

 

“எப்போ ரெண்டு பிள்ளை பெத்த பிறகு போகலாம்ன்னு சொல்றியா? அப்போ ஃபேமிலி மூன் தான் போக முடியும்!”

 

“நான் இன்னும் ஒண்ணும் பண்ணவே இல்லையேடி? அதுக்குள்ளே புள்ளைங்க பத்தியெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சிட்டியா? இரண்டு மாசத்திலேயே இரண்டு புள்ளைங்க வந்துருமா? ஒருவேளை ட்வின்ஸோ?” குரல் கிறங்கிக் குழைந்து செவியோரம் மோதியது.

 

“அழகரு! இப்படி ஹஸ்கி வாய்ஸில் பேசாதே! என்னமோ பண்ணுது.!”

 

“என்ன பண்ணுதுன்னு சொல்லுடி!” அடர்ந்த மீசையால் அவள் இதழ் உரசினான் அவன்.

 

“அழகரு..!”

“என்னடி..!”

“இதெல்லாம் தப்பு!”

“கல்யாணத்திற்கு பிறகு இது தான்டி சரி!” கிறங்கி கணவனின் கரத்தினில் குழைந்து உருகி கண்கள் மூடி நின்றவளை, இதழ்களில் புன்னகை வழிய பார்த்தான் அவன்.

 

கணவனின் கையணைவில் கண் மூடிக் கிறங்கி நின்றவளோ, கண்ணைத் திறந்துப் பார்த்து, அவனின் சிரிப்பில் கோபம் கொண்டவளோ, அவன் வன்மையான உதடுகளை, தன் மெல்லிதழ்களால் சிறை எடுத்திருந்தாள். நுனி விரலில் எம்பி நின்றவளை வாகாகத் தூக்கிக் கொண்டவன், அவளின் மென்மைக்குள்ளும் கரைந்து காணாமல் போனான்.

 

“அழகரு! போகலாம் அழகரு ப்ளீஸ்..! எனக்காக கூட்டிட்டு போக மாட்டியா?” கொஞ்சும் குரலில் அவன் நெற்றி மீது முத்தம் வைத்தாள் பெண். பெண்ணவளின் ஒற்றை இதழ் தீண்டலில் கூசிச் சிலிர்த்தவனோ,

 

“அப்போ இன்னொரு முத்தம்..!” கண் சிமிட்டி சிரித்தபடி இதழ்களைக் காட்டினான் அவன்.

 

“அழகரு!” நாணத்தோடு அவளது சிணுங்கல், அவனை இதமாய் நனைத்தது.

 

“நாம ஒரு டீல் போட்டுப்போம்! நான் சொல்லறதைக் கேட்டால்.. உன்னைக் கூட்டிட்டு போறேன்.!” அவளைக் கட்டிலில் அமர வைத்து தானும் பக்கத்தில் அமர்ந்தான்.

 

“என்ன செய்யணும்?” அவனின் சொரசொரப்பான கரத்தோடு கரம் கோர்த்து விளையாடியபடி, கேட்டாள் அவள்.

 

“இதில் சைன் பண்ணிக் கொடு!” அவள் முன் ஏதோ ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டிருந்த காகிதத்தை நீட்டினான்.

 

“என்னது மாமா இது? நான் மறுபடியும் படிக்கணுமா? தினமும் காலேஜ் கொண்டு போய் விடுவியா? ஜாலியா இருக்கும்!” புன்னகையுடன் சொன்னாள் அவள்.

 

“படிச்சுட்டே இருந்தால், எப்போ வேலைக்குப் போறது? அடுத்த மாசத்திலிருந்து வேலைக்கு ஜாய்ன் பண்ணணும். பிடி, சைன் பண்ணி கொடு நான் போஸ்ட் அனுப்பிருவேன். உனக்கு மெய்ல் வரும் செக் பண்ணிக்கோ!”

“எனக்குத் தெரியாமல் எப்போ அப்ளை பண்ணினே? நான் தான் என் லேப்டாப் பாஸ்வேர்ட் மாத்தியிருந்தேனே?”

 

“ஆமா பெரிய அதிசயம்! உன் பேரும் என் பேரும் தானே பாஸ்வோர்ட்? ஒரு பாஸ்வேர்ட் வைக்கத் தெரியலை! வேலைக்கு போடின்னு சொன்னால் கேள்வியா கேட்கிறா!”

 

“இப்போ தானே அழகரு படிச்சு முடிச்சேன்.. கொஞ்ச நாளைக்கு ஃப்ரீயா இருக்கேனே?”

 

“கொஞ்ச நாள், வீட்டிலிருந்தாலே சோம்பேறியாகிடுவே டி கரு கரு! கேமிங் அன் அனிமேஷன் தானே நீ படிச்சது. உனக்குப் பிடிச்ச வேலை தான். சைன் பண்ணினால் பூம்பாறை போகலாம்! இல்லைன்னா உன் ஆசைப்படி வீட்டிலேயே இருக்கலாம். எதுவா இருந்தாலும் உன் விருப்பம் தான்.!”

 

“சரி போறேன்! கொடு!” முகம் தூக்கியபடியே கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாள் அவள்.

 

“உனக்காகத்தான்டி எல்லாமே.. நான் இல்லாமல் போனாலும், எனக்கும் சேர்த்து நீ வாழணும்!” இரு கரங்களால் அவள் முகம் தாங்கி, நெற்றியில் முத்தம் வைத்தவனை புரியாமல் பார்த்திருந்தாள் அவள்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 29

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
25
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. தனது மகளுக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்கு அதன் குற்றவாளிக்கு தண்டனை கிடைத்தாயிற்று.

    அதே போல் தனது கணவனது துரோக செயலுக்கு தண்டனையாக என்ன காத்திருக்கின்றதோ என்ற பதட்டம் அங்கயற்கண்ணி பாட்டியிடம்.

    “அரை டிக்கெட்டெல்லாம் அண்ணியாம்” 🤭🤭 ten rupees talking too much 🤣

    “படம் காட்ட நான் என்ன Multiplux theatre raa?” 🤣

    சொந்தமாக சம்பாதித்த பணத்தில் பிரியமானவர்களுக்கு செலவு செய்வது என்பது பேரானந்தம் தான்.

    பதிற்றுப்பத்து ரொம்ப பொறுப்பான பாசமான பையன் தான் போல. 😍😍

    பாட்டி வீட்டிலேயே இருக்க சொல்லி வலியுறுத்தியும், அழகரின் மனமும் அதையே வலுவாக வற்புறுத்தியும் கூட விதி வலியது என்பதாய் விழியின் பிடிவாதம்.

    கருவிழியின் பிடிவாதத்திற்காக அவள் முகம் வாடாமல் இருப்பதற்காக ஆபத்து காத்திருக்கலாம் என்று தெரிந்தும் கூட துணிந்து செல்ல முடிவெடுத்துவிட்டான் அழகர்.