Loading

15

 

“அச்சோ.. ஓடிட்டாளா? ஏன்? சொல்லவே இல்லையா? பிறகு சொன்னாளா? பெயரென்னனு தெரிஞ்சதா அந்தப் பையனுக்கு?” என்று விஷ்ணுப்ரியா படபடப்பாய்க் கேட்க,

 

“ப்ரியா..” என்றான்.

 

“ஆங்..” என்று அவன் தன்னை அழைக்கின்றானோ என்பதாய் அவள் நோக்க,

 

“அவ பெயர் ப்ரியா” என்றான்.

 

“ப்ரியாவா? என் பெயரும் ப்ரியாதான்” என்று விஷ்ணுப்ரியா கூற,

 

அவன் பார்வை இலக்கின்றி வெறித்தது. அவன் இதழ் விரக்தியாய் சிரித்தது.

 

“அப்றம் என்ன நடந்தது? அந்தப் பொண்ணோட பெயர எப்படித் தெரிஞ்சுகிட்ட?” என்று விஷ்ணு கேட்க,

 

மீண்டும் அவன் மனம் பின்னுக்குச் சென்றது.

 

“ஹாய்..” என்று அவன் அழைக்க,

 

“ஹாய்..” என்று பதில் கொடுத்தாள் ப்ரியா.

 

“இப்பவாது பெயர் சொல்வீங்களா?” என்று அவன் கேட்க,

 

யாருமில்லா பேருந்து நிறுத்தத்தில், பேருந்துக்காகக் காத்திருந்தவள், சுற்றிமுற்றிப் பார்த்துக் கொண்டு, தன் பெயரைக் கூறினாள்.

 

“ப்ரியா..” என்று அவன் சொல்லிப் பார்க்க,

 

“என்னை அப்படிக் கூப்பிட மாட்டாங்க” என்று கூறினாள்.

 

“பரவால்ல.. நான் ஸ்பெஷலா இப்படிக் கூப்பிட்டுக்குறேன்..” என்று அவன் கூற,

 

அவளிடம் மெல்லிய புன்னகை.

 

“எத்தனாவது படிக்குற?” என்று அபூர்வன் நமட்டு சிரிப்போடு கேட்க,

 

“ஹல்லோ..” என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி மிரட்டலாய் அழைத்தாள்.

 

அதில் அவன் பக்கென்று சிரிக்க,

 

“நான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்” என்று கூறி முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டாள்.

 

“என்னை ஏன் பஸ்ல அப்படி பாக்குற?” என்று அவன் கேட்க,

 

“நா.. நான் நானா..” என்று தடுமாறினாள்.

 

“ச்சில்..” என்று அவன் சிரிக்க,

 

சுருங்கி பளபளக்கும் அவன் விழிகளில், அவள் பார்வை படிந்து மீண்டது.

 

“உங்க கண் நல்லா இருக்கு. அதான் பாத்தேன். தப்பா எடுத்துக்காதீங்க. சாரி” என்று அவள் கூற,

 

அவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தது.

 

இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலில் இருந்தனரா என்றால், நிச்சயம் இல்லை. ஆனால் இருவருக்கும் ஒரு ஈர்ப்பு இருந்தது. வயதிற்கே உரிய ஆர்வம் இருந்தது. வளரும் வாய்ப்பும் அவகாசமும் கிட்டினால் காதலாகலாம் என்ற ஆரம்பநிலை இருந்தது.

 

இருவரும் பருவ வயதில் இருந்ததால், ஒருவரிடம் மற்றவர் பேச வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகவே இருந்த சமயம், வீட்டை நினைத்து பயமும் இருந்தது.

 

“நீங்க டாக்டரா?” என்று ப்ரியா கேட்க,

 

“படிச்சுட்டு இருக்கேன். ஃபோர்த் இயர்” என்று கூறினான்.

 

“ஓ.. சூப்பர். ஆல் தி பெஸ்ட். நல்லா படிச்சு எல்லாரையும் காப்பாத்துங்க” என்று அவள் கூற,

 

“தேங்ஸ் ப்ரியா” என்றான்.

 

அதற்குமேல் என்ன பேசுவதென்று புரியவில்லை. அவர்களது பேருந்து வந்தது. ஏறி, அவரவர் இருப்பிடத்தில் இறங்கிக் கொண்டனர்.

 

“ச்சோ கியூட்.. அப்றம் என்னாச்சு? எப்படி டெவலெப் ஆச்சு அவங்க லவ்?” என்று விஷ்ணுப்ரியா உற்சாகமாய்க் கேட்க,

 

அவளைத் திரும்பிப் பார்த்தான்…

 

“என்னப்பா? லவ் என்னாச்சு?” என்று அவள் கேட்க,

 

“டெய்லி மீட் பண்ணாங்க. அவ நிற்க அவன் உட்கார, அவ உட்கார அவன் நிற்கனு தொடர்ந்த அவங்க பயணம், அருகருகே உட்காரும் அளவு நெருங்கிச்சு…” என்றான்.

 

“ஆஹாங்.. பாரேன்.. அப்றம்?” என்று அவள் கேட்க,

 

“நிறைய பேசிக்க ஆரம்பிச்சாங்க” என்றான்.

 

“நம்பர் எக்ஸ்சேஞ்லாம் எதும் நடக்கலையா?” என்று அவள் கேட்க,

 

“ம்ஹும்.. அந்த அரைமணி நேரப் பேருந்து பயணம் மட்டும்தான் அவங்களுக்கான நேரம். வரம்பு மீறின எந்த பேச்சும் அவங்களுக்கு நடுவில் இல்ல. அந்த நாளில் நடந்தது, அவங்க சந்திச்சதெல்லாம் பேசிக்கிட்டாங்க. அரசியல், அனுபவம், அழகியல், ஆகாயம், பூமி, நிலவு, கடல், பெண்ணியம், புத்தகம், ஆன்மீகம்னு அவங்க பேச்சுக்குள் இது அத்தனைக்கும் இடம் இருந்தது” என்று பெருமையோடு கூறினான்.

 

“வாவ்.. இன்டிரஸ்டிங்.. அப்ப சுவீட் நத்திங்ஸ்லாம் இல்லையா?” என்று அவள் கேட்க,

 

இடவலமாய் தலையசைத்தவன், “அவங்களுக்குள் காதலுக்கான எந்த பேச்சும் இல்லை. அவங்க நண்பர்களும் இல்ல, பகைவர்களும் இல்ல, சகோதரர்களும் இல்ல, காதலர்களும் இல்ல. அந்த உறவே அழகா இருந்ததால், அதுக்கு அழகு சேர்க்க எந்த உறவின் பெயரும் அவங்களுக்குத் தேவையாகப்படலை” என்று கூறினான்.

 

“சூப்பர்.. அப்றம் என்னாச்சு?” என்று ஆர்வமாய் விஷ்ணுப்ரியா கேட்க,

 

“ஊ..ஊ..” என்று ஊலையிட்டது, அவனது காட்டு நாய்.

 

அதில் பட்டென அவன் எழுந்து நிற்க,

 

பாவைப் பதறிப்போய் அவனைப் பார்த்தாள்.

 

நாய் உள்ளே குதித்தோடிவர, அதை ஆழ்ந்து பார்த்தவன், “பத்திரமா இரு.. வந்துடுறேன்..” என்றுவிட்டு, வெளியேறினான்.

 

மறுநாள் காலை…

 

“எனக்கென்னமோ அந்த போலீஸ் மேல நம்பிக்கையே வரமாட்டேங்குது சுபி” என்று வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்திருந்த பிரம்மா கூற,

 

“யாரை சொல்ற நீ? கருப்பசாமி சாரையா?” என்று சுபிக்ஷா கேட்டாள்.

 

“அவர இல்ல.. அவர் ஃபிரெண்டுனு யாரோ இப்ப வந்திருக்காரே.. அவரைத்தான் சொல்றேன்..” என்று பிரம்மா கூற,

 

“ஏன்டி அப்படி சொல்ற?” என்று ப்ரீத்தி கேட்டாள்.

 

“என்ன ஏன்டி? வந்த முதல் நாள் அவர் பேசினதே எனக்கு செம்ம கடுப்பு.. விஷ்ணுவை ஃபூலானு கேட்டார். அன்னிக்கு அந்த வீட்ல விசாரிக்கும்போது நான் வெளிய கால் பேச வந்தேன்.. அப்ப அவரை மீட் பண்ணப்பவும், தனியா நடமாடுறதுதான் உங்க பிரெட்ண்ட்ஸ்கு பழக்கமானு கேட்டார். நல்லா வச்சுத் திட்டிவிட்டுட்டேன்” என்று பிரம்மா கூற,

 

“திட்டிட்டியா?” என்று ப்ரீத்தி பயத்துடன் கேட்டாள்.

 

“பின்ன அவரை மடில உட்கார வச்சுக் கொஞ்சனுமா? என்ன பேச்சு அது? எனக்கு அவர்மேல சுத்தமா நம்பிக்கையே வரல. எது பேசினாலும் சுள்ளுனு பேசுறார். ஏற்கனவே அப்பா ரொம்ப மனசொடிஞ்சு போயிருக்கார். விசாரணைனு வந்து உட்கார்ந்து, உங்க பொண்ணுக்கு ஆஃபேர் இருக்கா லவ்விருக்கானு கேட்குறார்.. அப்பா மனசு எவ்ளோ கஷ்டப்படும்? அவர் வேலை அதுதான். ஆனா பாதிக்கப்பட்டவங்களுக்கு ஆறுதல் கொடுக்க வேண்டியதும் அவர் வேலைங்குறதை மறக்குறார் தானே?” என்று பிரம்மா கோபம் கொள்ள,

 

தொழில்கள் மௌனமாய் அவளைப் பார்த்தனர்.

 

அவர்களுக்கும் அதிருப்திதான், முந்தைய நாள், ராஜசிம்மன் அவ்வாறு வந்து கேட்டது. அதை அவர்கள் வெளிப்படுத்தியபோதும், “காதலிக்குறதால உங்கப் பொண்ணு ஒழுக்கம் கெட்டுப்போவாங்குற எண்ணம் உங்களுக்கு இருக்குறதாலதான் இவ்ளோ பதறுறீங்க. கேட்குறதுக்கு உங்க உணர்ச்சிகளை ஓரம் வச்சுட்டு நீங்க ஆன்ஸர் பண்ணா தான், என்னால குற்றவாளியைப் பிடிக்க முடியும்” என்ற அவனது பதில், சுள்ளென்று வந்து விழுந்தது.

 

“சுட்ட செங்கல் மாதிரி இறுக்கமா மூஞ்சிய வச்சுட்டு சுள்ளு சுள்ளுனு பேசினா பயந்துட்டுத் தலையைத் தலையை ஆட்டனுமா? அவரும் அவர் குரலும்.. உறுமி உறுமி பேசினா பம்பி போவாங்கனு நினைச்சாருபோல” என்று அவள் பேசிக் கொண்டே போக,

 

அவளுக்கு முன்னிருந்த ப்ரீத்தியின் விழிகள் ஏகத்துக்கும் விரிந்தது.

 

“அவருக்கு டெஸ்டெல்லாம் வச்சு வேலைக்கு எடுத்திருக்க மாட்டாங்க. நல்லா கரெண்டு கம்பம் மாதிரி நெடு நெடுனு இருக்கான், சல்லு வெள்ளுனு பேசுரான்னு வேலைக்கு எடுத்திருப்பாங்க” என்று பிரம்மா கூற,

 

“எ..ஏ.. அப்படிலாம் சொல்லாதடி” என்று ப்ரீத்தி தந்தியடிக்கும் குரலில் கூறினாள்‌.

 

பிரம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்த சுபி, ப்ரீத்தி பேசவும் அவள் பக்கம் நோக்க, அப்போதுதான் அவள் பார்வை சென்ற திசையைக் கண்டாள்.

 

காக்கி உடையில், அவள் கூறியதைப்போல் நெடுநெடுவென்ற உயரத்திற்கு நிமிர்ந்து நின்று, இறுக்கமான பார்வையோடு, மார்பிற்குக் குறுக்கே கரங்களைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான், ராஜசிம்மன்.

 

அவனைப் பார்த்ததும் சுபிக்ஷா பட்டென எழுந்து நின்றுவிட, ப்ரீத்தியும் பயத்தில் எழுந்து நின்றாள்.

 

“என்னங்கடி?” என்றபடி அவர்கள் பார்வை போகுமிடம் திரும்பிய பிரம்மவதனி, ராஜசிம்மனை அங்கு சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.

 

பட்டென அவளும் எழுந்து நிற்க, அங்கு வந்த கருப்பசாமி, பெண்களின் அரண்ட விழி கண்டு குழம்பியவனாய், “கொஞ்சம் விசாரிக்கனும் எல்லாரையும்” என்று கூறினான்.

 

“அ..ஆங் சார்” என்ற ப்ரீத்தி, வீட்டை நோக்கி ஓட, கருப்பசாமியின் பார்வை வீச்சைத் தாளாமல் சுபிக்ஷாவும், “வாங்க சார்” என்றவளாய் உள்ளே சென்றாள்.

 

அவள் சென்ற திசை நோக்கி கருப்பனும் நகர்ந்து செல்ல, ராஜசிம்மன் அமைதியாய் பிரம்மவதனியைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

 

முதலில் பயந்து எழுந்தாலும், பிறகு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு திடமாகப் பார்த்தாள் பிரம்மா. தான் தவறாக ஏதும் கூறவில்லை. பிறகு ஏன் பயம் கொள்ள வேண்டும்? என்று நினைத்தாள்.

 

அவனுக்கு சளைக்காத பார்வை அவளிடம்..

 

“இப்படித்தான் பேசிட்டு இருக்கியா என்னைப் பற்றி?” என்று அவன் கேட்க,

 

“ஒருமைல பேசும் வேலையெல்லாம் வேணாம் சார். கிவ் ரெஸ்பெக்ட் அன்ட் டேக் ரெஸ்பெக்ட்” என்றாள்.

 

“அதுக்கு நீ ரெஸ்பெக்ட் தரனும்” என்று அவன் பற்களைக் கடிக்க,

 

அவள் அமைதியானாள்.

 

“உங்க யாரையும் ஹர்ட் பண்றது என் இன்டன்ஷன் இல்ல. ஆஸ் அ போலீஸ், நான் எல்லாரையும் சந்தேகப்படனும். பொண்ணோட அப்பா, அண்ணா, பிரெண்டுனு எந்த உறவுக்கான எமோஷனையும் நான் கன்ஸிடர் பண்ணாம இருந்தாதான், கல்ப்ரிட்டை என்னால பிடிக்க முடியும். பெத்த பொண்ணுக்காக கொலை செய்த அப்பாவின் வழக்குகளையும் நாங்க ஹாண்டில் பண்ணிருக்கோம், பெத்த பொண்ணையே கொலை செய்த அப்பாவோட கேஸயும் நாங்க ஹாண்டில் பண்ணிருக்கோம். நோ மோர் டேம் எமோஷன்ஸ் ஃபார் அஸ். சுட்ட செங்கல் போலத்தான் முகத்தை வச்சிருந்தாகனும். பாதுகாவலர்கள் நடமாடும் சட்டம். சட்டத்துக்கு மக்கள் பயந்துதான் ஆகனும். அப்பத்தான் தப்பு நடக்காது, நடத்தாலும் கண்டுபிடிக்கப்படும்” என்று நீளமாக அவளுக்கு விளக்கம் கொடுத்தவனுக்கே, தனது செயல் புதிதாய், புதிராய் இருந்தது.

 

தான் எதற்கு இவளுக்கு இத்தனை விளக்கம் கொடுக்கின்றோம்? என்று தோன்றவும் செய்தது.

 

“அது உங்க பணிதான் சார்.. ஒத்துக்குறேன்.. அதேநேரம், பாதிக்கப்பட்டவங்களுக்கான ஆறுதலும் நீங்கதான்.. அதை மறந்துட்டுப் பேசினா எப்படி?” என்று அவள் அவள் பக்க நியாயத்திற்காக, தைரியமாக அவனிடம் வாதாடினாள். அவள் தைரியம், அவனது முரட்டுத்தனத்தை மெல்ல விழுங்கிக் கொண்டிருந்தது…

 

“போலீஸ்னா கஞ்சி போட்ட காட்டன் சட்டைப்போலத்தான் இருக்கனும்னு இல்ல. எங்கள்ல எல்லாரையும் நீங்க சந்தேகத்தோடுகூட பாருங்க. உங்க வேலை அதுவாகூட இருந்துட்டுப்போகட்டும்.. அதேநேரம், உயிரையே தொலைச்சுட்டு நிற்குறவங்களுக்கான நம்பிக்கையும் நீங்கதாங்குறதையும் மறந்துடாதீங்க” என்று அவள் கூற,

 

தற்போது அவன் அமைதியானான்.

 

“சாரி.. உங்களை அப்படி பேசினது என் தப்புதான். ஒரு ஆதங்கத்துல பேசிட்டேன்” என்று அவள் நகர,

 

பட்டென அவள் கரம் பற்றி நிறுத்தியிருந்தான்.

 

அவள் பதறிப்போய் அவன் முகம் நோக்க,

 

“நானும் சாரி.. என்னோட பிஹேவியர் உங்களை ஹர்ட் பண்ணதுக்கு. சேஞ்ச் பண்ணுவேனானு தெரியல.. பட் வில் ட்ரை” என்றான்.

 

பார்த்த முதல் நாளிலிருந்தே ‘சிடுமூஞ்சி’ என்ற கண்ணோட்டத்தில் பார்த்தவன் தற்போது மன்னிப்பு வேண்டுவது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

 

“ம்..ம்ம்” என்றவள், அவனிடமிருந்து தன் கரத்தை எடுத்துக் கொண்டு, தன் தலைமுடி கோத, அவள் முடியில் கீழ் பகுதி மட்டும் கொஞ்சம் பச்சை நிறத்தில் இருப்பதைப் பார்த்தான்.

 

உடனடியாக, “ஹேர் கலர் பண்ணுவியா?” என்று அவன் கேட்க,

 

சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

அவள் முடியைக் குறிப்பிட்டுக் காட்டியவன், “இஸ் தட் நேச்சுரல் கலர்?” என்க,

 

“யாருக்காது பச்சைக் கலர்ல முடி வளருமா?” என்று கேட்டாள்.

 

“என்ன டைப் கலர்?” என்று அவன் கேட்க,

 

“ஃபாரெஸ்ட் க்ரீன்..” என்றாள்.

 

“எங்க எப்ப பண்ணின?” என்று அவன் கேட்க,

 

“இதெல்லாம் எதுக்குக் கேட்குறீங்க?” என்றாள்.

 

“காரணமாதான்” என்றவன், “சொல்லு” என்க,

 

“எங்க ஊர்ல.. பார்லர்ல” என்று கரங்களை மார்பிற்குக் குறுக்கே கட்டிக் கொண்டு கூறினான்.

 

அவன் பார்வை அவளைத் தலைமுதல் கால்வரை அலசியது.

 

‘ஆறடி ஆணோட முடி’ என்ற கருப்பசாமியின் குரல் நினைவு வர, அவளைப் பார்த்துபடியே, யோசனை உலக்ததிற்குள் சென்றிருந்தான்.

 

அவன் பார்வைத் தன்னில் துளைப்பதில், அசௌகரியமாக உணர்ந்தவள், “ஹல்லோ..” என்க,

 

பட்டென சுயம் மீண்டான்.

 

அவளையே பார்த்துக் கொண்டிருந்ததை அவன் உணர்ந்திருக்

 

கவில்லை.

 

“என்னத்துக்கு அப்படி பாக்குறீங்க?” என்று அவள் கேட்க,

 

“எப்படி?” என்றான்.

 

“ப்ச்..” என்று சளிப்படைந்தவள், “என் ஹேர் கலர்தான் உங்க விசாரணையா இப்ப?” என்க,

 

“மே பீ..” என்றுவிட்டு உள்ளே சென்றான்.

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்