Loading

சுளீர் என்று முகத்தில் அடித்த சூரிய ஒளியில் முகத்தைச் சுழித்துக்கொண்டு திரும்பிப் படுத்தாள், ஷக்தி.

“ஷக்தி, முழிச்சுக்கோ. டியூட்டிக்கு டைம் ஆகுது பார்” என்ற சிவாவின் குரல் கிணற்றில் இருந்துக் கேட்டது அவளுக்கு.

சுத்தமாய் முடியவில்லை. உடலில் அத்தனை வலி, அத்துடன் சேர்த்து அப்படியொரு சோர்வு.

‘இப்படியே படுத்துக்கோ ஆரா’ என்று உள்ளிருந்து அவள் மனது அவளைச் சுரண்ட, வெளியே அவள் போர்வையை இழுத்திருந்தான், சிவா.

அதிலும் அவள் அசையாது இருக்க, ஏசி அணைக்கப்பட்டது.

“டேய்ய்ய்.. ஹியூமனாடா நீலாம்?” என்று கத்தியபடி ஒருவழியாக எழுந்துவிட்டாள்.

“நேத்து தெரியல” என்றான் ஒற்றைப் புருவத்தைத் தூக்கிக் காண்பித்து. 

காக்கிக்கு மாறியிருந்தவன் முகத்தில் மருந்துக்கும் இலக்கமில்லை. 

அதை கவனித்தவளும், “இருங்க, டிஃபன் செய்யறேன்.‌ அப்புறம் ஓடுங்க” சூழல் புரிந்து அவள் எழ,

“வாஷ்ரூம் போயிட்டு பொறுமையா வா. நானே ப்ரேக்பாஸ்ட் பண்ணி, ஹாட் பேக்ல வெச்சிருக்கேன். உன் டிரைவரை பத்தரைக்கு வரசொல்லியிருக்கேன், கெட் ரெடி ஃபிபோர் தட். நான் கெளம்பரேன் ஷக்தி” என்று அவள் நுதலில் முத்தமிட்டவன் சென்றுவிட்டான்.

“ஒத்த முத்தம் போதுமாடா? நானு ரொம்ப எதிர்பார்த்துட்டேன் போலையே இந்த அய்யனாருகிட்ட” என்றவள் தன்னின் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்திருந்தாள்.

சிவாவின் காவல்நிலைய‌ எல்லைக்கு உட்பட்ட இடத்தில் இரட்டை கொலைகள். அதுவும் இரண்டும் இளம்பெண்கள். 

முதற்கட்ட விசாரணை முடித்து, மேலதிகாரிகளும் தடையவியல் நிபுணர்கள் வந்து இடத்தை சோதனையிட்டனர்.

நகைக்காக நடந்த கொலையாக அது இல்லை. தவிர இரு பெண்களின் முகம் கோரமாய் சிதைக்கப்பட்டிருந்தது. 

பிரேதங்களை புகைப்படம் எடுத்த கையுடன் பிணக்கூராய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தான், சிவனேஷ்.

நிச்சயம் சாதாரணமாய் இருப்போர் அந்த முகங்களைப் பார்த்தால் மயங்கிவிடுவர். அத்தனை கொடூரம்!

விசயம் காட்டுத் தீயாக்கப் பட்டிருந்தது மீடியாவால். நிக்க நேரமில்லாது காவல்துறை சுழன்றுகொண்டிருக்க, ஒருபுறம் கொலையாளியைத் தீவிரமாக தேடி வந்தனர்.

“ஸர், உடம்பில எந்த தடயமும் இல்லை. அவங்கள பலவந்தபடுத்தவும் இல்லை. க்லோரோஃபாம் அதிகமா கொடுத்து இந்த மாதிரி செய்திருக்கலாம்னு டாக்டர் சொன்னார்” என்ற சிவாவிடம் தகவல் சொன்னார், எஸ்.ஐ தேவா.

நேரம் கடக்கக் கடக்க அந்த பெண்களை அடையாளம் கண்டிருந்தனர். ஒரு குறிப்பிட்ட சாதியை சார்ந்த பெண்கள் எனவும், ஈரோடு – கோபி செல்லும் பகுதியில் மிகுந்த பதட்டமான சூழ்நிலை நிலவியது.

“ஷிட், ரோட் எல்லாம் இப்போவே ப்ளாக் பண்ண சொல்லுங்க. வண்டி எல்லாத்தையும் டைவர்ட் பண்ணி விடுங்க தேவா” என்றவனுக்கு கமிஷனர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு மேல் அழைப்பு.

நிமிட இடைவெளியில் நூற்றுக்கும் அதிகமானோர் அரசு மருத்துவமனையில் சுழ்ந்துகொண்டு மறியலில் இறங்கிவிட, உயரதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

கொலையாளி யார் என்று தெரியாது பேசி என்ன செய்ய? நிமிடத்திற்கு நிமிடம் பதட்டம் சூழ சிவா அங்கு இருந்தே ஆகவேண்டிய கட்டாயம்.

தீபாவளி சமயம் வேறு. ஊருக்கு வந்து செல்ல இருக்கும் மக்களும் போக்குவரத்தும், கொலையாளியைத் தப்ப விடக்கூடாது என்ற முனைப்பும் மேலிடத்து அழுத்தமும் பத்திரிகை ஊடகக்காரர்களின் தேவையற்றத் தலையீடுமாக போலீஸார் பரபரத்து இருந்தனர்.

”ஷிவ், நான் சாப்பிட்டேன்’ என்றொரு குறுஞ்செய்தி சிவாவிற்கு. 

ஷக்தியின் நியாபகம் வர அவளுக்கு அழைத்தான்.

“நீ வீட்டுக்கு கெளம்பு ஷக்தி. இங்க சிட்சுவேஷன் ஸ்மூத் ஆகற மாதிரி தெரியலை. முடிஞ்சா நைட் வரென், டொன்ட் வெயிட் ஃபார் மீ” என்றிருக்க,

“இன்னிக்கு நைட் குன்னூர் போகனும் ஷிவ்” என்று நினைவு படுத்தினாள்.

தலை தீபாவளி அவர்களுக்கு. ஐந்து நாட்கள் விடுமுறையாக இருக்க குன்னூரில் தீபாவளி கொண்டாடியபின்னர் ஆழ்வார்திருநகரி செல்ல திட்டம்.

“ஸ்ஸ்” என்று நெற்றியை நீவியவன், “நீ வேணா ஊருக்கு இப்போ கெளம்பு. தேவாவ அனுப்பி வைக்கறேன். நா வரதப்பத்தி அப்புறமா சொல்லுறேன்” என்றவன் வைத்துவிட்டான்.

அவன் அந்த கொலை வழக்கிற்காக அலைய, ஷக்தி குன்னூர் சென்றாள். 

ஒருவழியாக அந்த பெண்களைக் கொடூரமாய் கொன்ற அவர்கள் தாய்மாமனே கோர்ட்டில் சரணடைந்திருக்க, கேஸை முடிக்க நாட்கள் பறந்தது.

தாய் வீட்டிற்கு வந்தவள் முகத்தில் தன்னைப் போல் ஒரு ஒளிர்வும் நிறைவும்.

சிவாவுடனான அவள் வாழ்க்கை கொடுத்த மஞ்சிமத்தில் விகசித்திருந்தாள் சிவாவின் ஷக்தி பெண்.

துருவனுக்கு எட்டு மாதம் நடக்க, அவனுடன் அத்தனை ஆட்டம். தலை தீபாவளி வேறாக இருக்க, ஷக்தியின் வீடே விழாக்கோலம் கொண்டது.

சிவா வராத காரணத்தால் ஷக்தியால் தனித்து ஆழ்வார்திருநகரி செல்ல முடியாது. அவன் வந்த பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்றுவிட்டாள்.

“துருவ் குட்டி சாப்பிடலாமா” என்றவாறு துருவை ஹை சேரில் அமர வைத்து, பிஃப் மாட்டிவிட்டாள் பிள்ளைக்கு.

“ம்ம்.. யம் யம் சாப்பிடலாமா” என்று ராகி களியுடன் தயிரை அவன் முன்பு சிறு தட்டில் வைக்க, தயிரை அப்பிக்கொண்டு சிரித்த குழந்தையை அள்ளிக் கொஞ்ச தோன்றியது.

கீழே முளைத்திருந்த இரண்டு குட்டி பச்சரிசி பற்களைக் காட்டிக் காட்டி அவன் சிரிக்க, அத்தையவள் மயங்கிப்போனாள்.

“சாப்பிட்டாச்சு.. நாங்க சாப்பிட்டாச்சு” என்று கத்தியபடி அவனை குளிக்க வைக்க அவள் எடுத்துச் செல்ல, அதையெல்லாம் சிரிப்புடன் பார்த்து நின்றிருந்தாள், மேக வர்ஷினி.

இரண்டு நாட்களாய் ஷக்தியுடனே துருவும் ஐக்கியமாகி இருந்தான்.

“மேகா, ஆரா முகம் ப்ரைட்டா இருக்குல?” என்று மகளின் முகத்தை வந்ததில் இருந்து கவனித்த லாவண்யா கேட்க,

“ஃபேஸ்வாஷ் போட்டு ரெண்ட தரம் கழுவியிருப்பா போல” என்க, “அடியேய்” என்று அவள் முதுகில் ஒன்று வைத்தார்.

“அப்புறம் வேற என்னத்த சொல்லுறது”

“ம்ம்ப்ச், நீயே கேளேன் அவகிட்ட” என்றவரை மேலும் கீழுமாய் பார்த்தவள்,

“ஐஸ், நீங்க என்ன நினைக்கறீங்கன்னு தெரியுது. ஆனா, எப்படி? அவ என் நாத்தனா(நா)ராராரா இருந்தாலும் இந்த விஷமெல்லாம் கேட்கக் கூடாது! பியூர்லி அது அவங்க பர்சனல்” என்றிருக்க,

“இது ஆவாது போடீ.. ஆரா’ம்மா” என்று மகளை அவர் அழைக்க,

“இந்த 7.5 வந்து உங்க மேல ஏறிடுச்சு இன்னிக்கு” என்றபடி எழுந்து சென்றுவிட்டாள் மேகா.

மகளை அழைத்துவிட்டாரே தவிர அவரால் அவளின் வாழ்க்கையைப் பற்றிக் கேட்க முடியவில்லை. 

நாளை தீபாவளி என்றிருக்க இன்றே பட்டாசும் வெடி சத்தமும் காதைக் கிழித்தது. துருவ் சப்தத்திற்கு அழ ஆரம்பிக்கவும், அவனுடனேயே இருந்தனர் வீட்டினர்.

காலை கங்கா ஸ்நானம் முடிந்து, பூஜை செய்து புது துணிகள் பிள்ளைகளுக்கு எடுத்துக்கொடுத்தார் லாவண்யா.

துருவிற்கு முதல் தீபாவளி அதுவும் ஷக்திக்கு இது தலை தீபாவளியாக இருக்க, அவள் கணவன் தான் வரவில்லை.

முதல் வேட்டை எப்போதும் ஷக்திதான் வெடிப்பாள். இன்று துருவிருக்க அவன் கைகளைப் பிடித்துக்கெண்டு கம்பி மத்தாப்பை வைத்து காட்டினாள்.

“ஆஆ.. த்த” என்று அத்தனை குதூகலம் அவனிடம்.

சரியாக ஒரு ‘ரெட் டாக்சி’ அவர்கள் வீட்டு காம்பவுண்டிற்குள் நுழைய, கண்டுகொண்டாள் அவனை.

முழுதாய் ஒருவாரம் சென்றிருந்தது அவனை பார்த்து. இதோ இப்படி தீபாவளி அன்று வந்து நிற்பான் என்று அவள் துளியும் எதிர்பார்க்கவில்லை.

“அய்யனாரே, உன் பொண்டாட்டி வரமாட்டேன்னு சொன்னா” என்று மேகா வந்தவுடன் ஆரம்பிக்க,

“வாங்க தம்பி” என்ற லாவண்யா மேகாவை முறைக்காமல் இல்லை.

பட்டாடை, பலகாரம், படையல், பட்டாச்சு என்று நேரம் செல்ல, ப்ரமோத் அழைத்திருந்தான்.

“மாப்பிள்ளை ஸர், தலதீபாவளி வாழ்த்துக்கள்” என்று ஆரம்பமே அவன் ஆரம்பிக்க, 

“அண்ணா, சிவா சொல்லுங்க. இது என்ன புதுசா எல்லாரும் மரியாதையைக் கொடுத்துட்டு” என்றிவன் ஆட்சேபிக்க, 

“எங்களுக்கும் என்ன தலையெழுத்தா உன்னையெல்லாம் மரியாதையா கூப்பிட. எல்லாம் என் மாமனார் வேலை” என்று பக்கத்தில் இருந்த ஆராவமுதன் பொறிந்தான்.

“நீ மரியாத கொடுத்துதான் ஆகனும்டா போடெடோ. நா அண்ணாகிட்ட சொல்லிட்டு இருக்கேன்” என்று அவர்கள் நேரம் சென்றது.

மாலை மாடியில் நின்று வான‌ வேடிக்கைப் பார்த்தவர்கள், சீக்கிரமே தூங்க சென்றுவிட்டனர் துருவின் அழுகையால்.

“டேய், டேய்.. ஆரூ’ம்மா” என்று ஷக்தியின் பின்னோடு வால் பிடித்து அழைந்தான், சிவா.

“இப்போ மட்டும் என்னவாம்? முந்தா நாள் நைட்டே உன் வேல முடிஞ்சு. அப்போ கிளம்பி வந்திருந்தாலும் நேத்தே வந்திருப்ப? என்னை.. என்னையப் பார்க்க உனக்கா தோனல? அவ்வளவு தான் நான் இல்லையா?” என்றவள் மடக்க, 

“தயவு செஞ்சு தேவா நம்பர டெலிட் பண்ணிடுடீ. முடியல” என்றுவிட்டான் அவள் பேச்சினை கேட்டபின்.

“என்ன பண்ண நேத்து முழுக்க?” என்றாள் அதிலேயே.

“தூங்கினேன்டீ” என்றவன் முகத்தில் இன்னும் சோர்வின் மிச்சங்கள் இருந்தது.

“நல்லது, போய் தூங்கு. இங்க நான் தான் இந்த ஹல்க்க நெனச்சிடே இருந்துருக்கேன்” என்றவள் படுத்துவிட, சிவா அவனின் வேலைகளை முடித்துவிட்டு வந்து படுத்தும் விட்டான்.

‘என்ன ஒன்னும் பேசாம இருக்கான்’ என்றவள் நினைத்தபடி அவனை திரும்பிப் பார்க்க, “ஸ்ஸ்.. முடி குத்துதுடா” என்றபடி அவன் முகத்தை தள்ளியவள் கண்களில் அவனுக்கானக் கிறக்கம்.

“நல்லா குத்தட்டும். இந்த சண்டி குதிரய என் மீசைய வெச்சே மயக்கலாம்னு இப்போதானே தெரியுது” என்றபடி அவன் மேலும் அவளிடம் முன்னேற, “ம்ம்.. சோனு” என்றாள் தன்னையறியாது.

“எதேய் சோனுவா” என்றவன் சப்தமாக அவள் காதில் சிரிக்க, “சொல்லிட்டேனா” என்றாள் கண்களை மூடிக்கொண்டுச் சிணுங்களாய்.

“எப்ப பிடிச்சு இந்த சோனு வந்தான்”

“அது ஆச்சு மாசம் அஞ்சு” என்றவளை அதிர்ந்து பார்த்தவன், “ஹேய், இரண்டுன்னு தான் நான் நினச்சேன்” என்றான்.

“ம்ம்.. அது டாக்டர் மேம் எப்போ உன்னையும் செஷன் வர சொன்னாங்களோ அப்பவே குட்டியா” என்றவள் ஆள் காட்டி விரலையும் பெரு விரலையும் சின்னதாய் வைத்துக் காட்டி, “தோ இவ்வளவு பிடிச்சது” என்று‌ சொல்லி பல்லைக் காட்டினாள்.

“பல்லக் காட்டாத, பல்லக் காட்டாத” என்று அவளிடம் ஒரு மெல்லிய யூத்தத்தை முடித்தவன், “அப்புறம்” என்றான் ரசனையாய்.

“அப்புறம்.. பேரூர் சப்பரம். அவ்வளவுதான்” என்றபடி அவள் திரும்பிக் கொள்ள, 

“சொல்லாட்டி போ. எனக்கு என்ன, அதான் என் குலாப் என்கிட்ட வந்துட்டாள்ல” என்றபடி பின்னிருந்து அவளை அணைத்துக் கொண்டான் சிவா.

“நீ ரெண்டாவது முறை தாலி கட்டுன பாரு, அப்போ ஏதோ மனசுக்குள்ள ம்ம்ப்ச்.. சொல்லத் தெரியல ஷிவ். ஆனா நீ இல்லேனா நான் incompleteன்னு ஃபீல் ஆச்சு.” என்றவள் திரும்பி அவன் நுதலில் இதழொற்றினாள்.

“இந்த ஹல்க், என்கிட்ட குழந்தையா இருந்தா எப்படி இருக்கும்ன்னு ஒரு நாள் ஒரு தாட், அப்போ தான் முழுசா நான் மிஸஸ் சிவனேஷ்ஷா மாறிட்டேன்” என்றாள் அவன் முகம் பார்த்துக்கொண்டு.

“முழுசா சந்திரமுகியா ச்சீ.. இந்த சிவனேஷோட பொண்டாட்டியா மாறின ஷக்தியைப் பார்” என்றவன் நக்கல் செய்தான்.

சில நிமிட மௌனம் அவளின். 

“நீ அன்னிக்கு சொன்னியே, ஆகாத புருஷனுக்கு எதுக்கு மரியாதை கொடுக்கறன்னு” என்றவள் கண்களை மூடிக்கொண்டாள் கசங்கிய முகபாவத்துடன்.

“ஆரூ’ம்மா” என்று அணைத்துக்கொண்டான்.

“எனக்கு நியாபகம் இல்ல’ம்மா நான் சொன்னதையே. பட், ஸாரிடா” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

“ம்ம்.. வலிச்சுது அப்போ. ஆனாலும் லைட்டா உன்ன மேல லவ் வந்துருச்சு” என்றாள் அவன் கழுத்தடியில் முகம் புகைய.

அவன் செயினை இழுத்தவள், “உள்ள ஒளிஞ்சிருந்தத டாக்டர் மேம் வெளிய எடுத்துவிட்டாங்கன்னு தான் சொல்லனும். ஆனா இது..” என்று அவர்களின் கூடலை அவள் சொல்லத் தயங்கி பின்,

“நம்ம பிசிகால் ரெலஷன்ஷிப் பத்தி நான் யோசிக்கவே இல்லை. நிச்சயம் என் பாஸ்ட் அத பத்தி நான் நினைக்கல தான். இருந்தாலும் உன்னை, உன் ஃபீலிங்ஸ்ஸ புரியாம என்னோட எண்ணத்தை மட்டும் வெச்சு எப்படி நான் எல்லாத்துக்கும் ரெடின்னு ஓப்பனா சொல்லுறது” என்றவள் தயங்கிக்கொண்டு,

“என்னை தப்பா நினச்சுடுவியோன்னு மனசுக்குள்ளையே உன்ன கொஞ்சிப்பேன். அப்போதான் சோனுன்னு..” என்றவள் இழுக்க, அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டான் குலாப்பின் சோனு.

“ஸ்ஸ்ஸ்” என்றொரு மெல்லிய சப்தம் அவனிடம். அதன் பின்னர், அவர்களின் காதலில் புதையுண்டு இருந்தனர்.

காலை துருவின் அழுகையில் தான் வீடு எழுந்தது. 

பட்டாசுப் புகை பிள்ளைக்கு ஒற்றுக்கொள்ளாமல் இரவெல்லாம் தூங்காது அவதிப்பட்டவன் ஒருவழியாக விடியலில் தூங்கியிருக்க, இதோ முழித்துவிட்டான்.

அப்பா, பாட்டி என்று தூக்கி வைத்தாலும் தவழ்ந்து ஷக்தியின் அறை பக்கம் போக, உருகிவிட்டான் ஆராவமுதன்.

“சிம்பா குட்டி, அத்த தூங்கறாடா தங்கம்” என்று மகனை அவன் சமாதானம் செய்தது எதுவும் சரியாகவில்லை.

“என்னடா, குட்டி இப்படி அழறான்” என்று கதவைத் திறந்து வந்த நண்பனைப் பார்த்த ஆராவமுதன் முகத்தில் அத்தனை ப்ரகாஷம்.

அதை சிவாவும் கவனிக்க, “என்ன அமுதா?” என்று துருவை வாங்கிக்கொண்டான்.

“அவனுக்கு அவன் அத்த வேணுமாம்.‌ ஆரா எழுந்துட்டாளா அய்யனாரே? எழுந்தா போய் கொடு” என்று மேகா சோர்ந்துபோய் சொல்ல, ஆராவமுதன் அவள் கையை அழுத்தினான்.

”ம்ம்” என்று கணவனை அவள் பார்க்க, அவனோ சிவாவை பார்க்கும் படி ஜாடை செய்தான்.

கண்களை விரித்தவள் கணவனைப் பார்க்க, அவன் முகமும் மலர்ந்திருந்தது.

“அப்புறம், அய்யனாரே எழுந்து வரும் போது இந்த கண்ணாடி‌ பார்க்கற வழக்கமில்லையோ?” என்று நக்கலாக ஆரம்பித்திருந்தாள் மேகா.

அது புரியாமல், “ஏன்? பார்த்தேனே”

“ம்ம்.. நாங்களும் தான் பார்க்கறோம்” என்றவள்,

“அப்படித்தான அமுது” என்க, அவன் சிரித்து வைத்தான்.

“என்னாச்சுடா அமுதா?” என்க,

“நீ ரூம் போ, ஷக்திகிட்ட சிம்பாவ கொடு” என்றவன் சென்றுவிட, 

மேகா, “என் புள்ளைய கொடுக்க திரும்ப வருவ தான அய்யனாரே?” என்றாள்.

“என்ன பேசுற நீ? புரியற மாதிரியே பேசமாட்டியா மேகா?” என்றான் புருவத்தைச் சுழித்துக்கொண்டு.

“மேகா, வா இங்க” என்று லாவண்யா குரல் கொடுக்கவும் அவள் சென்றுவிட, துருவைத் தூக்கிக்கொண்டு ஷக்தியிடம் சென்றான் சிவா.

“மூளயே வேல செய்யாதா உனக்கு? என்ன பேச்சு பேசுற நீ?” என்று முகத்தைத் திருப்பியபடி லாவண்யா மேகாவை திட்ட,

“என்ன வெக்கமாக்கும்?”

“அடியேய்” 

“சரி சரி, சந்தேகம் தீர்ந்ததா தாயே? உங்க பொண்ணு நல்லா இருக்கா, அப்படியே என் பையனுக்கும் சீக்கிரமா ஒரு பொண்ண பெத்து கொடுத்துடுவா” என்று மேகா லாவண்யாவைத் தோளோடு அணைத்துக்கெண்டாள்.

அவளுக்குத் தானே லாவண்யாவின் மன வேதனையும் உள்ளத்து ரணமும் தெரியும். 

ஷக்தி ஆராதனா என்ற பெண்ணின் தாயாக அவர் மகளின் வாழ்க்கைக்காக, மன நிம்மதிக்காக, பெண்ணின் உள்ளத்து அமைதிகாக எத்தனைத் தவித்தார் என்று உணர்ந்தவள்.

“மேகா” என்று ஆராவமுதன் அழைக்கவும் சென்றவள்,

“அம்மாவ கொஞ்சம் தனியா விடு, சரியாகட்டும் அவங்களே” என்று சொன்னவனது குரலும் இலகியிருந்தது.

“அட, அமுது” என்று கணவனை அணைத்தவள், 

“எங்க ரெண்டும் சேராமையே போயிடுமோன்னு அவ்வளவு பயந்தேன்டி‌. என் முடிவு தப்பாகிடுமோன்னு தெனோம் நெனக்காம இல்ல” என்று அழுதே விட்டான்.

“சரி.. ஒன்னுமே இல்ல, எல்லாம் சரியாகியாச்சா இப்ப?” 

“ம்ம்.. நாம பேசுறது எவ்வளவு க்ரிஞ்சா இருக்குல” என்றவன் கேட்க, சிரித்துவிட்டாள் மேகவர்ஷினி.

“டேய்.. க்ரிஞ்சா இருந்தாலும் அவங்க சேர்ந்துட்டாங்க! சங்கடமா இருந்தாலும் அவங்க நல்லா இருக்காங்கன்றத இப்படி தான் தெரிஞ்சுக்க முடியும்” என்று சொல்லிக் கண்ணடித்தாள்.

தூக்கம் இன்னும் கலையாது இருந்த ஷக்தி, துருவின் அழுகையில் பெட்டில் சாய்வாக அமர்ந்திருந்தாள்.

“ஹ்ஆஆ” என்று இரண்டு‌ கையையும் விரித்து கொண்டு அத்தையை நோக்கித் தாவியிருந்தான், துருவ்.

“சேரி சாமி.. என்னாச்சாம் எங்க சின்னப்பாவுக்கு” என்று நெஞ்சில் பிள்ளையைக் கிடத்திக்கொண்டு சமாதானம் செய்தாள் அத்தையவள்.

அத்தைமடி மெத்தையடி என்று சும்மாவா சொன்னார்கள்?

மெதுவாய் தட்டிக்கொடுத்தவள் பிள்ளையிடம் மெல்லிய விசும்பல் மட்டும் இருக்க, “என்னங்க, தூங்கிட்டானா பாருங்க” குசுகுசு குரலில் சிவாவிடம் கேட்க, விரிந்த புன்னகை அவனிடம்.

தூங்காது கண்ணை உருட்டியவன் மாமன் எட்டிப் பார்க்கவும் முகத்தை மறுபுறம் திருப்ப, சிவா அந்த அழகில் மயங்கியேவிட்டான்.

“ஏய் ஆரு, சீக்கிரம் என் பூவம்மாவ பெத்து கொடுடீ” என்று ஆசைமிக சொன்ன கணவனின் முகத்தையே பார்த்திருந்தாள், ஷக்தி ஆராதனா.

சரியாக அவன் கழுத்தில் இருந்த வடு அவள் கண்ணில் சிக்க, “இப்படியே வெளிய போனியாடா” என்று அதிர்ந்து கத்திவிட்டாள்.

கண்களை விரித்துக்கொண்டு, அதிர்ந்துபோய் கேட்ட மனைவியை நோக்கியவன் சற்று முன்னர் அமுதனும் மேகாவும் பேசியது நினைவிற்கு வர, வேகமாய் கண்ணாடியைப் பார்த்தான்.

லவ் பைட்!

நேற்றைய அவன் குலாப்பின் அதீத காதலால் கிடைத்த பரிசு.

அதுவும் முன்னங்கழுத்தில் அப்பட்டமாக தெரிய, தலையில் கை வைத்துக்கொண்டான் சிவனேஷ்.

“ஷிவ்” என்று மனைவி அழைப்பதெல்லாம் அவன் காதில் விழவே இல்லை.

கண்களை மூடி நின்றவன் முகத்தில் ஒரு லேசான வெட்கத்தின் ஒளி.

‘அய்யோ’ என்று மனதினுள்ளேயே கத்தியவனிற்கு வீடே அவனின் அந்த கோலத்தைப் பார்த்ததை நினைத்து, ‘மானம் போச்சு, மரியாதை போச்சு’ என்று

அவன் மனதே அவனுக்கு கவுண்டர் கொடுத்தது.

“ஐஸ்கிரீம், ஒரு கேசரியை கிண்டுங்க. உங்க பொண்ணு அமோகமாக இருக்கா என் அய்யனாரோட” என்று வெளியே மேகா கத்திக்கொண்டிருந்தது ரூமில் இருந்தவர்களுக்குக் கேட்க, 

“சோனு” என்று நாணம் மீதுற துருவோடு சேர்ந்து சிவாவை அணைத்துக்கொண்டாள் பெண்ணவள்!

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment