Loading

அத்தியாயம் 18

வெள்ளை மாளிகையைவிட பிரம்மாண்டமாய் கட்டப்பட்டிருந்த அந்த அரண்மனை போன்ற வீட்டில் சிங்கத்தின் ஆவேசத்துடன் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார் காளிதாசன்.

அவரின் கோபத்தைக் கண்ட அவரின் பி.ஏ அவரிடம் நெருங்க பயந்து கொண்டு நிற்க, அவன் வரவைக் கண்டுகொண்ட காளிதாசன் இரண்டே எட்டில் அவனை நெருங்கி அவன் தோள்களை உலுக்கி ,”அவங்களைப் பத்தி ஏதாவது தெரிஞ்சுதா?” என சீற்றத்துடன் வினவ,

எப்படி அதைச் சொல்வது என பயந்துகொண்டே அவன் தலைகுனிய, அவனின் மௌனமே அவரின் கேள்விக்கான பதிலை எடுத்துரைத்தது.

“த்தூ நீங்கெல்லாம் ஆம்பளைங்க தானா?? இன்னும் அவங்களை கண்டுபிடிக்க முடியலைன்னு வெட்கமே இல்லாம வந்து சொல்ற.. ” என கோபத்தை அடக்க முடியாமல் காளிதாசன் கத்த,

அவன் முயன்று வரவழைத்த தைரியத்தோடு ,”நம்ம பெஸ்ட் டிடெக்டிவ் ஏஜென்ட் வச்சு தான் தேடிக்கிட்டு இருக்கோம் சார்.. இப்போ கிடைச்சுருக்க தகவல் படி அவங்க மே பீ தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்களா இருப்பாங்கன்னு சொல்றாங்க.. பட் இன்னும் கன்ஃபர்ம் ஆகலை” என அவன் அந்த ஏஜென்ட் சொல்லிய செய்திகளைக் கூற,

காளிதாசன் கண்ணில் ஒரு மின்னல் வந்து போனது, மனதிற்குள் எதையோ நினைத்து கணக்குப் போட்டவர் பின் தன் பி.ஏவிடம் ,”அடுத்த மாசம் சென்னைக்கு போக ஏற்பாடு பண்ணு.. அங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு .. அப்பறம் அந்த நாய்ங்க மட்டும் தமிழ்நாட்டுல இருக்கட்டும் அவங்களோட சேர்த்து அவங்க குடும்பத்துல இருக்க ஒருத்தன் விடாம என் கையால தான் சாவு” என கடைசி வரியைக் கூறும் போது அவர் கண்களில் தெரிந்த வெறியில் அந்த பி.ஏவிற்கே உள்ளுக்குள் குளிர் எடுத்தது.

அவரிடம் ‘சரி’ என மண்டையை ஆட்டியவன் விட்டால் போதும் என அங்கிருந்து ஓடிவிட்டான்.

காளிதாசனும் தன்னை இந்த நிலமைக்கு ஆளாக்கிய அவர்களைப் பற்றி நினைத்து வெறியோடு அவ்விடம் விட்டு நகர்ந்தார். விதியும் அவரோடு சேர்ந்து சிரித்துக்கொண்டே கூடே சென்றது!!!!

“அண்ணா அண்ணா நிப்பாட்டுங்க!!!” என காருக்குள் திடீரென கேட்ட பதற்றமான சப்தத்தில் என்னவோ ஏதோ என பயந்து போன டிரைவர் ,சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்த,தூங்கிக் கொண்டிருந்த நிஷா முன் சீட்டில் மோதி கீழே விழ,அவள் மேல் மதுவும் வர்ஷூவும் விழுந்தனர்..

ஆதிராவும் நந்துவும் போய் டிரைவர் சீட்டில் இடித்துக் கொள்ள ,ஸ்ரீ தான் அந்த குரலுக்கு சொந்தக்காரி என்பதால் உஷாராக சீட்டைப் பிடித்துக் கொண்டு எதன் மீதும் மோதாமல் தப்பித்தாள்.

“ஏய் எழுந்து தொலைங்க டி..ஒவ்வொருத்தியும் எழுபது கிலோ இருந்துட்டு ஏதோ இலவம் பஞ்சு மெத்தைல படுத்துருக்க மாதிரி ஒய்யாரமா படுத்துருக்கீங்க ..எந்திரிச்சு தொலைங்க” என நிஷா அடியில் இருந்து குரல் கொடுக்க,

வர்ஷூவோ,”என்ன சோத்து மூட்டை குரல் மட்டும் வருது ஆளைக் காணோம்” என தேட ,அப்போது தான் அவளுக்கு மேல் மது,மதுவிற்கு மேல் தான் படுத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து வேகமாக எழுந்தாள்.

அவளைத் தொடர்ந்து மதுவும் எழுந்து கொள்ள,தட்டுத் தடுமாறி இடுப்பைப் பிடித்துக் கொண்டே எழுந்த நிஷா ,டிரைவரை முறைத்துக் கொண்டே, “இப்படி தான் வண்டி ஓட்டுவீங்களா அண்ணா?? எங்க மேல உங்களுக்கு என்ன கொலை வெறி..உங்க ஸ்நாக்ஸ் ஒன்னுமே நான் திருடி திங்கலையே அப்பறம் ஏன் இப்படி என்ன கொலை பண்ண பார்க்குறீங்க???” என கடுப்புடன் கேட்டாள்.

‘இப்ப கூட சோத்த பத்தியே நினைக்குறா பாரு..இவளை திருத்தவே முடியாது’ என நந்து ஏற்கனவே அடிபட்டிருந்த தலையில் தெரியாமல் அடித்துக் கொள்ள “ஷ் அம்மா” என வலியில் முனங்கினாள்.

டிரைவரோ,” பாப்பா தான் அம்மணி காரை நிப்பாட்ட சொல்லுச்சு..திடீர்னு அமைதியா இருந்த காருக்குள்ள சப்தம் கேக்கவும் பயந்து பிரேக் போட்டுட்டேனுங்க அம்மணி மன்னிச்சிருங்க..ரொம்ப அடிபட்ருச்சா” என உண்மையான வருத்தத்துடன் அவர் கேட்க,

“அது ஒன்னும் இல்லைனா..லேசா தான் நீங்க ஃபீல் பண்ணாதீங்க” என நிஷாவை முந்திக் கொண்டு நந்து பதிலளிக்க, நிஷாவோ,”பாதகத்தி லேசாவா??? விழுந்தது என் மேல தான …அவங்க உன் மேல விழுந்திருந்தா உனக்கு தெரிஞ்சிருக்கும்” என புலம்பியவள் அப்போது தான் ஸ்ரீயை கவனித்தாள்,இந்த பக்கி தான் சப்தம் போட்டு என்ன சாகடிக்க ப்ளான் பண்ணிருக்கும் என சரியாக யூகித்தவள் அவளை பார்த்து ,”ஏன் டி கத்தி அந்த அண்ணாவ பயமுறுத்துன??” என்க அவளோ கூலாக, “வேறெதுக்கு சன் ரைஸ் பார்க்க தான்” என பதிலளித்தாள்.

இவர்கள் இப்போது இருப்பது சென்னை அவுட்டர் ஏரியா என்பதால் அந்த அதிகாலையில் பேருந்துகளை தவிர வேறெந்த வாகனமும் அவ்வளவாக செல்லவில்லை.அதுவும் ஒரு ஓரமாக நிறுத்தியதால் போக்குவரத்துக்கு எந்த ஒரு பாதிப்பும் நேரவில்லை.

இவர்களை தொடர்ந்து வந்த ஹரியின் கார்,இவர்களின் கார் ரோட்டில் நிற்பதை பார்த்து எதும் பிரச்சனையோ என அவர்களும் காரை நிறுத்தி விட்டு இறங்கி அவர்களிடம் வந்தார்கள்.

அதற்குள் காரிலிருந்து இறங்கிய ஸ்ரீ,அவர்களைப் பார்த்து “ஹாய் க்ரிஷ்” என சந்தோஷமாக புன்னகைக்க,

“ஏய் இப்போ எதுக்கு வண்டியை நடுரோட்டுல நிறுத்தி வச்சிருக்கீங்க,கார்ல எதும் ப்ராப்ளமா??இருக்காதே இப்போ தான மச்சான் சர்வீஸுக்கு அனுப்புனான்” என ஹரி கேட்டான்.

அப்போது காரிலிருந்து அனைவரும் இறங்கி வர டிரைவர் பவ்யமாக,”தம்பி பாப்பாக்கு சூரியன் உதிக்கிறத பார்க்கனுமாம் அதான் காரை நிறுத்த சொல்லிருச்சு” என போட்டுக் குடுக்க,

கடுப்பான விஜய்,”ஏம்மா தங்கச்சி,மணி நாலு தான் ஆகுது..ஏம்மா இப்படி உயிர வாங்குற ..இன்னும் ரெண்டு மணி நேரம் இங்க தவம் இருந்து நீ பார்த்து இரசிச்சுட்டு வரதுன்னா வா நாங்க கிளம்புறோம்” என கூற,

கார்த்திக்கோ,”சும்மா இருடா மாப்பிள்ளை,எங்க அண்ணியார் இன்னைக்கு தான் வாழ்க்கையில முதன்முறையா சூரியன் வர்றப்போ முழிச்சிருக்காங்க..நீங்க பொறுமையா பார்த்துட்டு வாங்க அண்ணியாரே” என கிண்டல் செய்தான்.

பெண்களோ ‘இந்த கருமத்துக்கா எங்கள கொலை பண்ண பார்த்தா பைத்தியக்காரி’ என நினைத்தவர்கள் ,அங்கிருந்து மீண்டும் காருக்குள் சென்று அமர்ந்தார்கள்.

“க்ரிஷ் ப்ளீஸ்” என எப்போது போல் ஹரியின் வீக் பாயின்டில் அடிக்க, “சரி சரி நீங்க எல்லாம் அந்த காருல போங்க..நாங்க ரெண்டு பேரும் அப்பறம் வரோம்” என ஹரி எப்போதும் போல் அவள் விருப்பத்திற்கு தலை சாய்த்தான்.

“டேய் கல்யாணம் ஆகி ஒரு வாரம் கூட ஆகலை டா அதுக்குள்ள அவ சொல்றதுக்கெல்லாம் தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலை ஆட்றியே..புது மாப்பிள்ளைக்கு உண்டான மரியாதை போச்சேடா உன்னால” என விஜய் அவனை கிண்டல் செய்து விட்டு ‘கொஞ்ச நேரமாச்சும் பொண்டாட்டி கூட ஜாலியா இருக்கலாம்’ என நினைத்து ஆதிராவின் அருகில் போய் முதல் ஆளாக அமர்ந்து கொண்டான்.

கார்த்திக்கோ ஹரியின் காதிற்கு அருகில் போய்,”ஹரி இப்போ இருக்க நிலமைல இதெல்லாம் அவசியம் தானா?? ரெண்டு பேரு மட்டும் தனியா இருக்கது சேஃப் இல்லை ..அவகிட்ட நான் சொல்லி புரிய வைக்கிறேன் வா போகலாம்” என சீரியசாக கூற..ஹரியோ,”இல்லைடா அவளோட ஆசைய நிறைவேத்துறதுக்கு தான் நான் இருக்கேன்..நான் பார்த்துக்குறேன்..நீதான் எல்லாரையும் கூட்டிட்டு போற பத்திரமா போ..முக்கியமா வர்ஷூவை ஜாக்கிரதையா பார்ர்த்துக்கோ” என கூறிவிட,

“சரி அப்பறம் உன் இஷ்டம்..பார்த்து இருங்க!!..நாங்க கிளம்புறோம்” என கார்த்திக் போய் முன் சீட்டில் ஏதோ சிந்தனையோடே அமர்ந்து கொள்ள, வர்ஷூவோ ,’என்னாச்சு இவனுக்கு எப்படா கேப் கிடைக்கும் கிடா வெட்டலாம்னு அலைவான்..இன்னைக்கு என் பக்கத்துல கூட உட்காராம ஏதோ யோசனைலயே இருக்கான்’ என இவள் குழப்பமடைந்தாள்.

அவள் மனமோ,’அவன் கிட்ட வரலனா சந்தோஷம் தான பட்ருக்கனும்..எதுக்கு நீ ஃபீல் பண்ற அப்போ உன் மனசு அவன தேடுது தான??’ என கிண்டலடிக்க…”ச்சூ போ ..அதெல்லாம் ஒன்னும் இல்லை நான் தூங்கப் போறேன்’ என கண்களை மூடி படுத்துக் கொண்டாள்.

அந்தக் கார் கிளம்பியதும் ஹரியை பார்த்த ஸ்ரீ ,அவன் கையைப் பிடித்து தோள்களில் சாய்ந்து கொண்டு ,”ரொம்ப தேங்க்ஸ் க்ரிஷ்” என்றாள்.

அவளை பார்த்து மென்மையாக சிரித்தவன் அவளை அழைத்துக் கொண்டு காருக்கு அருகில் சென்று, கார் கதவை திறந்து விட்டவன் அவள் அமர்ந்ததும் கார் கதவை சாத்திவிட்டு,மறுபக்கம் வந்து டிரைவர் இருக்கையில் அமர்ந்தவன் அவளுக்கு சீட் பெல்ட் அணிவித்து விட்டு தானும் போட்டு கொண்டு காரை கிளப்பினான்.

அவளோ ‘எங்கே போகிறோம்’ என எதுவும் கேட்காமல் அவனையே பார்த்துக் கொண்டு வர , கண்களைத் திருப்பாமலே ,” என்ன பாஸ் ஆய்ட்டேனா??” என கேட்டான்.

அவளோ,”என்ன உளர்ற நீதான யுனிவர்சிட்டி டாப்பர்..அப்பறம் என்ன பாஸ் ஆய்ட்டேனான்னு கேக்குற??” என புரியாமல் வினவ,

“அது கிடக்கு கருமம்..அதுல பாஸ் ஆனா என்ன ஆகலனா என்ன??..ரொம்ப நேரமா என்ன சைட் அடிச்சுட்டு இருந்தியே அதான் சுமாராவாச்சும் இருக்கேனான்னு கேட்டேன்” என்று கூறினான்.

“என் செல்லக்குட்டிக்கு என்ன செமயா இருக்க..நானே எப்படி பொண்ணுங்களோட ஜொல்லு பார்வையில இருந்து உன்னை காப்பாத்துறதுன்னு வயித்துல நெருப்ப கட்டிகிட்டு இருக்கேன்..நீ வேற” என அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கூற,

அவளைப் பார்த்து நகைத்தவன்,”சரி சன்ரைஸ் பார்க்கனும்னு தான் அங்க இறங்குன..நான் பாட்டுக்கு உன்ன கார்ல எங்கேயோ கூட்டிட்டு போறேன்..எங்கன்னு கூட கேக்காம வர்ற..என் மேல அவ்வளவு நம்பிக்கையா?” என காதலால் கசிந்துருகி வினவ,

அவளோ அவனை ‘லூசாப்பா நீ’ என்பது போல் ஒரு பார்வை பார்த்தவள்,”ஹேய் லூசு..நம்மளுக்கு கல்யாணம் ஆய்ருச்சு..ஏதோ நீ வில்லன் போல என்னை கடத்திட்டு போய் ரேப் பண்ண போகிற மாதிரி பில்டப் குடுக்குற..அன்ட் அந்த மட சாம்பிராணிகளுக்கு தான் புரியலைனா உனக்குமா புரியலை..நம்ம ப்ளாட் மொட்டை மாடில இருந்து பார்த்தா கூட தான் சூரியன் தெரிய போகுது..அதுக்கு போயா நான் வண்டியை நிறுத்துவேன்..நான் உன் கூட தனியா வரணும்னு சொன்னா அந்த பொறாமை பிடிச்சவனுங்க விட மாட்டாங்க..அதான்..இப்படி ஒரு பிட்டை போட்டேன்..எப்படி??” என புருவத்தை ஏற்றி இறக்கி அவனிடம் கேட்டாள்.

“சூப்பர்ர்ர்ர்ர்ர்!!!” என அவளிடம் கூறியவன் காரை கோவளம் பீச் நோக்கி செலுத்தினான்.

அதிகாலை நேரமாதலால் சரியாக 45 நிமிடங்களில் பீச்சை அடைந்தவர்கள்,காரை ஓரமாக நிறுத்தி விட்டு கடற்கரைக்கு சென்றனர்.

அவள் விரல்களோடு தன் விரல்களை கோர்த்து கொண்டவன்,மெதுவாக தங்கள் முகத்தை தீண்டிவிட்டு சென்ற அந்த காலைத் தென்றலை இரசித்தவாறே நடந்தான்.

இதமான கடல்காற்று மேனியைத் தழுவி செல்ல ஸ்ரீக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது..

சுற்றிலும் யாரும் அற்ற தனிமை,லேசாக கருமையும் செம்மையும் அள்ளி பூசிக் கொண்ட வானம்,காலை உரசிச் செல்லும் அலைகள்,அருகில் தன் மனதிற்கு பிடித்த மன்னவன், ஸ்ரீக்கு அந்த நொடி வாழ்வின் பொன்னான மணித்துளிகளாக தோன்றியது.

ஒவ்வொரு நொடிகளையும் ஆழ்ந்து அனுபவித்து தன் மனப்பெட்டகத்திற்குள் அதை சேமித்துக் கொண்டாள்.

எதையும் பேச இருவரும் முற்படவில்லை..அமைதி கூட அழகு தான்..பல வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வுகளை கூட அமைதி புரியவைத்துவிடும்..

அந்த சூழ்நிலையை மிகவும் இரசித்த இரு உள்ளங்களும் அங்கிருந்த கல்லில் போய் அமர்ந்தார்கள்.

அவளோ தனக்கு முன் தெரிந்த கடலை இரசித்துக் கொண்டிருக்க,அவனோ தன் உள்ளம் கவர்ந்த கன்னியை இரசித்துக் கொண்டிருந்தான்.

“உன்னால் உன்னால் உன் நினைவால்

உலகில் இல்லை நான் தானே

உள்ளே கேட்க்கும் ஓசையிலே

உன்னை உன்னை கேட்டேனே

உன்னோடு சேர்ந்து நெடுந்தூரங்கள்

காலார நடந்து மிதந்தேனே

உன்னிடம் தந்த இதயத்தை தேடி

உன்னில் என்னை தொலைத்தேனே

எந்தன் விழி ஓரங்கள்

உன் இமையே சாயுதே

என் கண்களை மூடினால்

உந்தன் முகம் தெரியுதே

என் பகல் உன் கண்ணில்

நீ இல்லை என்றாலே

நான் ஏதும் இல்லா இரவு தான்

நான் உன்னை உனக்கே தெரியாமல்

கொஞ்சம் கொஞ்சமாக படித்தேனே

பூமியில் உள்ள காதலை எல்லாம்

உன்னால் வாழ்ந்து ரசித்தேனே

ஆயிரம் கோடி ஆண்டுகள் தாண்டி

உன்னில் வாழ துடிப்பேனே”

திடீரென ஸ்ரீ பாடவும் ஆனந்தமாக அதிர்ந்தவன்,அந்த பாடலின் வரிகளில் தன்னை தொலைத்தான்..

ஸ்ரீக்கு ஒன்றும் பிரமாதமான குரல் இல்லை என்றாலும்,இன்று காதலில் கரைந்து தன்னவனுக்காக பாடியதில் அந்த பாடல் அவ்வளவு இனிமையாக இருந்தது..

பாடி முடித்துவிட்டு அவனை பார்க்க, அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

காற்றில் கலைந்த கேசம், இரவெல்லாம் பயணம் செய்ததில் சோர்ந்திருந்த போதும் முகத்தில் ஒரு ஒளி,முகப்பூச்சு எதும் இல்லாமல் இயற்கையிலே மிளிர்ந்த முகம்,கழுத்தில் தான் கட்டிய மஞ்சள் தாலி மட்டும் அணிந்து பார்ப்பதற்கு பேரழகியாக காட்சி தந்த தன்னவளை தேனுண்ட வண்டு போல் பார்த்திருந்தான்.

அப்போது தான் கதிரவன் மெதுவாக தோன்ற,அவள் முகத்தில் கதிர்கள் பட்டுத் தெரித்து அவளை மேலும் அழகாய் காட்டியது..

இதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்த முடியாத ஹரி,அவள் இதழை தன் இதழ் கொண்டு மென்மையாக மூடியிருந்தான்.

இருவரும் தங்கள் உலகத்தை மறந்து இருக்க அப்போது வந்த ஓர் பேரலை இருவரையும் நிலைகுலைய வைத்தது, இவர்களும் பற்றுதல் ஏதும் இல்லாமல் கீழே விழ, பின்பு சந்தோஷ மனநிலையுடன் ஒருவர் மீது இன்னொருவர் தண்ணீரை தெளித்து விளையாடி மகிழ்ந்தனர்.

இதுவே நீங்கள் இருவரும் நிம்மதியாக இருக்கப் போகும் கடைசி நாள்,இதற்கு மேல் வாழ்வில் பல இன்னல்களை சந்திக்க போகிறீர்கள்,இப்போதே நன்றாக சிரித்துக் கொள்ளுங்கள் என விதியும் அவர்களுடன் சேர்ந்து நகைத்தது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்