Loading

அத்தியாயம் – 8

  

சக்தி கோபமாக அனைவரின் முன்பும் எழுந்து நின்று விக்ரமை பார்த்து, “மரியாதையா என் நிலா பக்கத்தில் இருந்து நீ எழுந்திரு. என் நிலா பக்கத்தில் அமர உனக்கு எந்த தகுதியும் இல்லை” என்று கூச்சல் போட்டான். 

அனைவரும் சக்தியை திரும்பி பார்த்தார்கள். பக்கத்தில் அமர்ந்து இருந்த ஜெயலட்சுமி, “டேய் என்ன காரியம் பண்ணிக்கிட்டு இருக்க” என்றார் குழப்பமாக. 

சக்தி எதையும் காதில் வாங்காமல், “சொல்லிக்கிட்டே இருக்கேன்ல இப்போ நீ எழுந்திருக்க போறியா இல்லையா” என்று மீண்டும் கத்தினான். 

சட்டென்று, ஜெயலட்சுமி எழுந்து நின்று, “உனக்கு என்ன பைத்தியமா பிடித்து இருக்கு. கல்யாணம் நடக்க போற நேரத்துல இப்படி பண்ணிக்கிட்டு இருக்க வாய மூடிட்டு இரு கொஞ்சம் நேரம்“ என்றாள்.

சக்தி, “அதெல்லாம் முடியாது அக்கா என்னோட நிலாவ நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன். கண்டிப்பா விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்றான் கோபமாக.  

முதல் முறையாக தன் அக்காவை எதிர்த்து பேச ஆரம்பித்தான். அதில் ஜெயலட்சுமி பயங்கர கோபம் கொண்டாள், “எவ்வளவு திமிர் இருந்தா என்னையே எதிர்த்து இப்படி பேசுவ. அதுவும் கேவலம் இந்த நிலாவுக்காக என்னை எதிர்த்து பேசுறியா. நான் உனக்கு அக்கா டா” என்றார் ஆக்ரோஷமாக. 

சக்தி, “தலை குனிந்த படி அதனால் தான் என்னால் உங்களை மீறி எதுவும் பண்ண முடியல”. 

“அதுக்காக என்னால் என் நிலாவ மறக்கவும் முடியாது. என் வாழ்க்கைக்கு நீங்க எப்படி தேவையோ அது போல் நிலாவும் தேவை“ என்று விட்டு நேராக மன மேடைக்கு சென்று விக்ரம் சட்டை காலரை பிடித்து தூக்கினான்.

விக்ரம் எழுந்தவுடன் நிலா பதறிப் போய் அழுது கொண்டே அவளும் எழுந்து நின்று கொண்டாள்.

விக்ரம் சக்தியை பார்த்து, “கைய எடுங்க பாஸ்” என்றான் எந்த வித பதட்டமும் இல்லாது. சக்திக்கு இவன் மிகவும் கூலாக இருப்பது மேலும் எரிச்சலை ஊட்டியது. 

சக்தி, “என்னடா திமிரா உனக்கு? நேத்து நடந்த எல்லாத்தையும் மறந்துட்டியா” என்று பக்கத்தில் இருக்கும் நிலாவை எட்டிப் பார்த்து இவன் இன்னைக்கு வந்தவன். ஆனா, உனக்கு என்னை பத்தி தெரியும் இல்ல. எந்த தைரியத்தில் இவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்த” என்றான் பற்களை கடித்த படி. 

நிலா எதுவும் கூறாமல் அழுது கொண்டே கைகளை பிசைந்தபடி நின்றிருந்தாள். விக்ரம் திரும்பி நிலாவை பார்த்து ஆறுதல் ஆக அவள் கைகளைப் பிடித்து பயப்பிடாதே என்று தடவி விட்டான். 

விக்ரம், “பாஸ் எதுக்கு இப்போ நிலா கிட்ட போறீங்க. நிலா கிட்ட போகனும்னா என்னை தாண்டி தான் போகணும்” என்றான். 

சக்தி, “உனக்கு குடும்பமே இல்லை. இப்போ இருக்கிற உன் தம்பியை ஆச்சு காப்பாத்திக்கனும் என்று ஆசை இல்லையா? நேத்து நைட் தானே எல்லாத்தையும் ஞாபகம் காமிச்சுட்டு போனேன். உனக்கு என்ன ஞாபக மறதியா“ என்றான் ஒற்றைப் புருவத்தை தூக்கி மிரட்டும் தோணியில்.

விக்ரம், “இப்போ என்ன பாஸ் பண்ண சொல்றீங்க” என்றான் பயப்படுவது போல். சக்தி, “மரியாதையா இந்த இடத்தை விட்டு ஓடிடு இல்லை என்றால் நான் என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது“ என்றான். 

ஜெயலட்சுமி, “சக்திதிதிதி…” என்று அந்த இடமே அதிரும்படி கத்தினாள். சக்தி காலரைப் பிடித்து அவனை திருப்பி பளீர் என்று அறைந்தாள். அந்த சத்தத்தில் அனைவரும் அதிர்ச்சியாக இவர்களை பார்த்தார்கள். 

ஏனெனில், ஜெயலட்சுமி மற்றவர்கள் முன்பு தன் தம்பியை எந்த ஒரு காரணத்திற்காகவும் திட்டவோ அடிக்கவோ மாட்டாள். முதல் முறையாக ஊர் காரர்கள் அனைவர் முன்பும் தன் தம்பியை கைநீட்டி விட்டாள்.

ஜெயலட்சுமி, “ஏன்டா இப்படி பைத்தியம் மாதிரி நடந்துக்கிற. இந்த கல்யாணம் நான் ஏற்பாடு பண்ணது என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்றே இப்படி பண்ணுகிறாயா?”. 

“நான் ஜெயலட்சுமி எந்த ஒரு காரியத்தை பண்ணனும் என்று நினைக்கிறேனோ அது கட்டாயம் நடந்தே ஆகணும்” என்று விட்டு சக்தியை கையோடு கீழே இழுத்துச் சென்றாள்.

ஜெயலட்சுமி ஊர்க்காரர்கள் பக்கம் திரும்பி, “அனைவரும் அமருங்கள்” என்று விட்டு ஐயர் பக்கம் திரும்பி, “மந்திரத்தை சொல்லுங்கள் சீக்கிரம் கல்யாண வேலை முடியட்டும்” என்று சொல்லி விட்டு அமர்ந்துக் கொண்டாள்‌‌ தன் தம்பியோடு. 

சக்தி கோபமாக தன் அக்காவிடம் இருந்து கையை உதறினான். ஜெயலட்சுமி, “சக்தியை பார்த்து இங்க பாருடா நான் எது பண்ணாலும் உன் நல்லதுக்கு தான் பண்ணுவேன். உனக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்”. 

“ஆனால், அது இவ கூட இல்லை. இவள் எதுக்குமே ராசி இல்லாதவள். இவளுக்கு நான் இப்போ கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு காரணமே” என்று கையில் இருக்கும் பத்திரத்தை காமித்து, “இந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்குவதற்காக தான்”.

“இவள் அம்மாக்காரி மொத்த சொத்தையும் நிலா பேர்ல எழுதி வச்சிருக்கா. அதுவும் நிலாவும் அவளோட வருங்கால புருஷனும் சேர்ந்து கையெழுத்து போட்டால் தான் இந்த சொத்து செல்லும் அப்படின்னு சொல்லி எழுதி வச்சிருக்கா”. 

“அந்த ஒரே ஒரு காரணத்திற்காக தான் நான் வேற வழி இல்லாமல் இவளுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கேன். ஊர்க்காரங்க முன்னாடி நல்லவங்க மாதிரி நம்ம வேஷம் போட்டுட்டு இருக்கோம்”. 

“நீ இப்படி எல்லாம் பண்ணினா அப்புறம் எப்படி சொத்து நம்ம கைக்கு வரும்” என்றால் கோபமாக யாருக்கும் கேட்காதபடி கிசுகிசுப்பாக. 

சக்தி, “அதுக்கு ஏன் அக்கா வேற யாரையாவது கட்டி வைக்கணும். நானே நிலாவை கட்டிக்கிறேன் நானும் அவளும் சேர்ந்து கையெழுத்து போட்டால் இந்த சொத்து செல்லும் அப்புறம் என்ன பிரச்சனை உனக்கு. உனக்கு தேவை சொத்து தானே” என்றான். 

ஜெயலட்சுமி, “இல்ல சக்தி நிலாவை வேற ஒருத்தனுக்கு கட்டி வச்சிட்டு இந்த சொத்து மொத்தத்தையும் நம்ம எழுதி வாங்கிக்கிட்டு. பிறகு உனக்கு வேற பணக்கார வீட்டு பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சா நமக்கு இந்த சொத்தும் கிடைச்சிடும்”. 

“உன்ன கட்டிக்க போற அந்த பொண்ணு வீட்ல இருந்தும் நிறைய சொத்து வரும. நம்ம பணக்காரர்கள் ஆகிடலாம்“ என்று முகம் நிறைய புன்னகையோடு தன் தம்பியின் மனதை மாற்றுவதற்கு அவள் மனதில் இருக்கும் திட்டத்தை எல்லாம் கூறிக் கொண்டிருந்தாள்.

சக்தி, “என்ன இருந்தாலும் என் மனசுல நிலா மட்டும் தான் இருக்கா” என்று அந்த இடத்தை விட்டே சென்று விட்டான். 

ஜெயலட்சுமி தன் தம்பி கவலைப்படுவதை நினைத்து துளி அளவு கூட கவலைப் படவில்லை. தனக்குத் தேவை சொத்து இன்னும் சிறிது நேரத்தில் மொத்தமாக கிடைத்துவிடும் என்று சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தாள்.

நிலாவை பார்த்து விக்ரம் கண்களை சிமிட்டி அழாதே என்று கூறி நிலா கைகளைப் பிடித்து அமரும்படி இழுத்தான். நிலாவுக்கு அங்கு என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை. 

வெளியே சென்ற சக்தி மனதுக்குள் இவன் தம்பியை நான் கடத்தி வைத்து இருக்கிறேன். அப்படி இருந்தும் இவனுக்கு ஒரு துளி பயம் கூட இல்லையே எப்படி? என்று மிகவும் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தான் . 

அப்பொழுது தான் அவனுக்கு ஒன்று நினைவுக்கு வந்தது ஆரம்பத்தில் இருந்தே விக்ரம் சக்தியிடம் நடந்து கொண்ட விதத்தை வைத்து எதுவோ தப்பாக உள்ளது என்று.

அப்போத்தில் இருந்தே இந்த விக்ரம் திமிராக தான் இருக்கிறான் என்று விட்டு மீண்டும் மனவரை நோக்கி சென்றான். 

அவன் பின்னாடியே ஒரு கும்பல் கோட் சூட்டுடன் வந்தது. ஆனால், அதை சக்தி கவனிக்கவில்லை.

ரவி சுஜிதாவை அழைத்து வந்து கொண்டிருக்கும் பொழுது காரில் சுஜிதா கண் விழித்து விட்டால். 

சுஜிதா, “என்ன எங்கடா கூட்டிட்டு போறீங்க?” என்றால் ரவியை பார்த்து, “நீ அந்த சக்தி கூட இருக்கும் பையன் தானே?” என்று கூச்சல் போட்ட ஆரம்பித்தாள்.

ரவி, “கத்தாத டி நாங்களே ஆள் மாறிடுச்சுன்னு டென்ஷனா இருக்கோம்“ என்றான்.

சுஜிதா, “புரியாமல் என்ன ஆள் மாறிவிட்டது” என்றாள். ரவி, “நேற்று நைட் நிலாவை கடத்தலாம் என்று வந்தோம் ஆனா நாங்க பண்ண ஒரு சின்ன தப்பில் மாத்தி உன்னை கடத்திட்டு போயிட்டோம்”. 

“இப்போ உன்னை யாருக்கும் தெரியாமல் மண்டபத்தின் வாசலில் கூட்டிட்டு போய் விடனும்” என்றான். சுஜிதா, “என்ன டா சொல்றீங்க” என்று பதறிப் போனால்.

ரவி, “ஆமா இப்போ சக்தி வேற எங்களை எல்லாம் என்ன பண்ணுவான் என்று பயமாக இருக்கு. எங்க ப்ளானே சொதப்பிடிச்சு” என்று பயத்தோடு சொல்லிக் கொண்டு இருந்தான். 

சுஜிதா, “என்னை இங்கேயே இறக்கி விடுங்க நானே போயிக்கிறேன். உங்கள எல்லாம் நான் என்ன பண்றேன்னு பாருங்க. போலீஸ் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணாமல் நான் விட மாட்டேன்” என்றாள்.

ரவி, “நீ போலீஸ் கிட்ட போனினா அப்புறம் இதை உன் வயிற்றில் சொறுகிட்டு போயிட்டே இருப்பேன் பாத்துக்கோ” என்று தன் கையில் இருக்கும் கத்தியை காண்பித்து மிரட்டினான். 

ரவி, “இங்க நடந்த விஷயம் வெளியில் யாருக்கும் தெரிய கூடாது. நீ எங்க போன அப்படின்னு கேட்டால் நீ ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கோ எங்களை மட்டும் வெளியில் சொன்ன உன்னையும் கொன்னுட்டு உன் குடும்பத்தையும் கொன்னுடுவேன்” என்று மிரடினான்.

அதில் சற்று மிரண்டு போயிவிட்டாள் சுஜிதா. மண்டபத்தின் வாசலில் சுஜிதாவை இறக்கிவிட்டு அனைவரும் தனித்தனியாக சென்று விட்டார்கள்.

திருமணத்தை நிறுத்துவதற்காக சக்தி மண்டபத்தின் உள்ளே சென்றான். ஐயர், “கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்றவுடன் தாலியை கையில் வாங்கின விக்ரம் நிலா கழுத்தின் அருகில் எடுத்துச் சென்றான். 

சக்தி, “டேய் விக்ரம் உனக்கு உன் தம்பியை பற்றி கவலையே இல்லையா?” என்று கர்ஜிக்கும்படி கத்தி ஒரு புகைப்படத்தை காண்பித்தான்.

ஊர்க்காரர்கள் அனைவரும் அதிர்ச்சியாக திரும்பி சக்தியை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். 

அதில் நாற்காலியில் அவன் தம்பி அமர்ந்து இருப்பதாகவும் கயிறு போட்டு அவனை கட்டி வைத்த படியும் இருந்தது. 

விக்ரம் எதற்கும் அசராமல் மூன்று முடிச்சு போட்டு விட்டு அப்புறம் தான் திரும்பினான்.

சக்தி, “கண்கள் சிவக்க நீ என் நிலாவை என்கிட்ட இருந்து பிரிச்சிட்ட இல்ல. உன் குடும்பத்தை நான் அழிக்கிறேன் டா” என்று சபதம் போட்டு செல்போனில் யாருக்கோ டயல் செய்தான். 

விக்ரம், “ஒரு நிமிஷம் நேத்து எடுத்த புகைப்படத்தை நீ இப்போ என்கிட்ட காட்டுன. ஆனால், நீ இன்னைக்கு எடுத்த புகைப்படத்தை இன்னும் பாக்கலையா?“ என்றான். 

அவன் செல்போனில் இருந்து ஒரு படத்தை எடுத்து கான்பித்தான். அதில் அவன் தம்பி இல்லாமல் வெறும் நாற்காலி மட்டுமே இருந்தது.

அதை பார்த்து அதிர்ச்சியாக சக்தி யாருக்கோ அழைத்தான் ரிங் போய்க்கொண்டே இருந்தது யாரும் எடுக்கவில்லை. 

விக்ரம் சிரித்து கொண்டே, “என்ன யாரும் எடுக்கலையா“ என்றான். சக்தி, “உன்னை….” என்று ஆக்ரோக்ஷமாக கத்தினான். 

அதே சமயம் சக்திக்கு பின்னால் இருந்து நான்கு பேர் விக்ரமை பார்த்து, “பாஸ் உங்களை அப்பா அழைத்து வர சொன்னாங்க” என்றார்கள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்