
அத்தியாயம் – 6
சக்தி தலைமையில் நிலாவுக்கு தடபுடலாக நலுங்கு ஏற்பாடு ஆரம்பம் ஆனது. மஞ்சள் நிறத்தில் பட்டுப் புடவையும், அதில் கருநீலம் நிறத்தில் ஆன ஜரிகை பாடரும், பஃப் கை வைத்த பிளவுஸும் நிலாவை மங்களகரமாக காட்டியது.
ஊர்க்காரர்கள் அனைவரும் நலுங்கு வைக்க ஆரம்பித்தார்கள். விக்ரம் தூணில் சாய்ந்த படி அவளை ரசித்துக் கொண்டு இருந்தான்.
மீன் போன்ற கண்களும், கூர்மையான நாசியும், அளவான கோவை பழம் போன்ற உதடும், மேக்கப் இல்லாமலே பளிச் என்று இருக்கும் அவள் நிறமும், நலுங்கு வைக்கும் மஞ்சள் கன்னத்தில் ஒட்டி இருக்க மேலும் அழகாய் காட்டியது அவள் முகத்தை.
விக்ரம் அவனை அறியாமலே வைத்த கண் எடுக்காமல் நிலாவை விழுங்கும் படி பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தான்.
கூட்டத்தில் ஒருவர், “கல்யாண மாப்பிள்ளை விட்டா இப்பவே தாலி கட்டிடுவார் போலயே. இப்படி பொண்ண கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம் பார்க்க கூடாது” என்று கேலி செய்தார்.
சுஜிதா கிசுகிசுப்பாக, “அண்ணா என்ன அவசரம் நாளைக்கு கல்யாணம் ஆகத்தானே போகுது அப்புறம் பொறுமையா பார்த்துக்கோங்க உங்க பொண்டாட்டிய” என்றாள் கிண்டலாக.
அதில் விக்ரம்கு வெட்க வந்து கன்னம் இரண்டும் சிவந்து போனது. சக்தி அதை காதில் வாங்கிவிட்டு சுஜிதாவை பார்த்து, “இங்க வா” என்றான்.
சுஜிதா, “ஐயையோ! இவனா” என்று சற்று தயக்கத்துடன் அவன் அருகில் சென்றாள் .
சக்தி தன் ஒற்றைப் புருவத்தை ஏற்றியவாறு, “இப்போ நீ என்ன சொன்ன விக்ரம் கிட்ட” என்றான் கோபமாக.
சுஜிதா, “நான் எதும் தப்பா சொல்லலையே” என்றாள் அவனுடன் மல்லுக்கட்டியபடி.
சக்தி, “உன்கிட்ட நான் சிரிச்சு பேசுறேன்னு இப்படி திமிரா பேசாத எனக்கு இப்படி பேசுறது பிடிக்காது“ என்று அவளை பற்களை கடித்து அடக்கினான்.
சுஜிதா வாயை சுழித்துக் கொண்டு ”ம்ஹ்ம்” என்று முணுமுணுத்தாள்.
சக்தி, “நிலா குட்டிக்க கல்யாணம் எப்போ ஆனாலும் சரி நான் மட்டும் தான் மாப்பிள்ளை புரிஞ்சுதா. கண்டவனையும் என் நிலா குட்டிக்கு புருஷன்னு சொல்லாத“ என்று ஒற்றை விரலை நீட்டி மிரட்டினான்.
மேலும் பேச்சை தொடர்ந்தவன், “அப்புறம் இன்னொரு விஷயம் மறந்துடாத என்ன தவிர நிலா வேறு யாரையாவது கல்யாணம் பண்ணா அவ முகத்தில் ஆசிட் அடிக்கவும் தயங்க மாட்டேன்”.
“எனக்கு கிடைக்காத நிலா வேறு யாருக்கும் கிடைக்க விட மாட்டேன் ஞாபகம் இருக்கட்டும்” என்றான் உச்ச கட்ட கோபத்தில்.
அவன் பேசியதில் சுஜிதா சற்று பயந்து போனால். ஆனால், அதை முகத்தில் காட்டாமல், “என்ன நீ இப்படி எல்லாம் பேசுற உங்க அக்கா தானே கல்யாணம் ஏற்பாடு பன்னாங்க“ என்றாள் மெதுவான குரலில்.
சக்தி, “ஆமா நீ சொல்றது உண்மை தான். என் அக்கா தான் கல்யாண ஏற்பாடு பண்ணாங்க. ஆனா, நாளைக்கு எங்க அக்கா முன்னாடி நான்தான் நிலாவுக்கு தாலி கட்டுவேன் அதை யாராலும் மாற்ற முடியாது புரிஞ்சுதா” என்றான்.
சுஜிதா அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு, “என்ன ஆனாலும் என்னோட நிலா கழுத்தில் உன்னை தாலி கட்ட விட மாட்டேன் டா” என்றாள் இவளும் போட்டிக்கு.
சக்தி, “போடி குட்டி கத்திரிக்கா” என்று தலையில் தட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான் இவளை ஒரு ஆலாக கூட மதிக்காமல்.
பிறகு, மாப்பிள்ளை நலுங்கு ஆரம்பம் ஆனது. சக்தி விக்ரமை அழைத்துச் சென்று நலுங்குக்கு அமருமாறு கூறினான்.
விக்ரம் அமர்ந்தவுடன் நலுங்கு வைக்க ஆரம்பம் ஆனது. சக்தி, “முதல் நலுங்கு நான் வைக்கிறேன்” என்றான் அனைவரின் முன்பும்.
ரவி, “டேய் மச்சான் நீ என்ன லூசா டா? நீ எதுக்கு டா இவனுக்கு எல்லாம் நலுங்கு வைக்கணும்” என்று கிசுகிசுப்பாக கேட்டான்.
சக்தி, “எல்லாம் ஒரு காரணமா தாண்டா” என்றான்.
அங்கு இருந்த ஒரு பாட்டி, “என்னப்பா தம்பி நீ சின்ன பையன் நீ எப்படி நலுங்கு வைப்ப? கல்யாணம் ஆன பெரியவங்க தான் வைக்கணும்” என்றார்.
சக்தி, “பாட்டி அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. விக்ரம் எனக்கு ரொம்ப நெருக்கம். விக்ரமுக்கு முதலில் நான் தான் நலுங்கு வைக்கணும்னு எனக்கு ஆசை” என்று விட்டு மறுவார்த்தை மற்றவர்கள் பேசுவதற்கு முன் அவன் நலுங்கை ஆரம்பித்தான்.
சக்தி, விக்ரம் கன்னத்தில் சந்தனம் தடவிக் கொண்டே “இந்த நலுங்கை பார்த்து ரொம்ப சந்தோஷப் பட்டுக்காத. நான் உன்கிட்ட சொன்னது எல்லாம் நினைவுல இருக்கட்டும்”.
“நாளைக்கு மன மேடையில் தாலி கட்டும் நேரத்தில் நீ நிலா பக்கத்தில் இருந்து எழுந்திடனும் இல்லன்னா உன் தம்பி உயிரோடு உனக்கு கிடைக்க மாட்டான்” என்றான் சிரித்துக் கொண்டே கிசு கிசுப்பாக.
விக்ரம் எதுவும் கூறாமல் அவனை பார்த்துக் கொண்டு இருந்தான்.
சக்தி, “என்ன அப்படி பாக்குற. உன் தம்பிய நீ காலையில் நம்ம வீட்டு பக்கத்தில் இருக்கும் பூங்காவில் சந்திச்சு பேசிட்டு தானே வந்த”.
“ஆனா, அவன் நல்லபடியா வீடு போய் சேர்ந்தானா இல்லையான்னு உனக்கு தெரியுமா?“ என்றான் கேள்வியாக.
விக்ரம் அதில் பதட்டமாக, “நீ என்ன சொல்ற என் தம்பிக்கு என்ன ஆச்சு” என்றான்.
சக்தி, “ரொம்ப பதறாத டா உன் தம்பி என் தம்பி மாதிரி பத்திரமா அவனை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து இருக்கிறேன். நாளைக்கு கல்யாணம் முடிந்த உடன் அவனை அனுப்பி விட்டுடுவேன்”.
விக்ரம், “நான் எல்லாத்துக்கும் சரி தானே சொன்னேன். அப்புறம் ஏன் என் தம்பியை கடத்துனீங்க?” என்றான் கோபத்தை அடக்கி பயந்த முகத்தோடு.
சக்தி, “எல்லாம் ஒரு காரணமாக தான். நாளைக்கு நீ ஏதாச்சும் என் பேச்சைக் கேட்காமல் போயிட்டேனா அதுக்கு தான்” என்றான்.
அதற்குள் கூட்டத்தில் ஒருவர் “எவ்வளவு நேரம் பா நீங்களே பேசிக்கிட்டு இருப்பிங்க மத்தவங்க எல்லாம் நலுங்கு வைக்க வேண்டாமா மணி ஆகுதுல“ என்றவுடன் சக்தி சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
பிறகு, அனைவரும் நலுங்கு வைத்து முடித்து விட்டு கிளம்பி விட்டார்கள். அனைவரும் படுக்கை அறைக்கு சென்றுவிட நிலாவுக்கு இரவு தூக்கம் சுத்தமாக வரவில்லை.
நாளைக்கு என்ன நடக்குமோ என்ற பயம் அதிகமாக இருந்தது. கண் முன்பு அன்றைக்கு ஒரு நாள் சக்தி தன் முகத்தில் தண்ணீரை ஊற்றி ஆசீட் என்று பயம் காட்டியது நினைவில் வந்து போனது.
ஒரு பக்கம் விக்ரம் செல்போனில் தன் தோழன் ராஜேஷ்க்கு அழைத்து, “அங்க என்ன நடக்குது உண்மையான விக்ரம் எங்க இருக்கிறான்” என்றான்.
ராஜேஷ், “அவன் நம்ம பிளான் படி அந்த ரூம்ல தான் இருக்கிறான்” என்றான்.
விக்ரம், “அவன் தம்பி காலையில் என்னை வந்து பாத்துட்டு போகேம்போது சக்தி அவனை கடத்திட்டானாம். அவனை காப்பாற்ற வேண்டியது நம்ம கடமை தான் விடியறதுக்கு முன்னாடி நீ அவனை கண்டுபிடிக்கனும்” என்று கட்டளையிட்டு போனை துண்டித்தான்.
இன்னொரு பக்கம் சக்தி தூக்கம் இல்லாமல் நடந்து கொண்டே இருந்தான். அவன் மனதில் ஒரு வேலை சுஜிதா சொன்னது போல் நாளைக்கு நிலாவுக்கு என் கூட கல்யாணம் நடக்கலைன்னா என்ன பண்றது? விக்ரம்க்கே அக்கா கல்யாணம் பண்ணி வச்சுட்டா?.
ஆனால், இது என் வாழ்க்கை. அக்கா என்ன சொன்னாலும் நான் கேட்க போறது இல்ல என்று மிகவும் தீவிரமாக சிந்தித்துக் கொண்டு இருந்தான்.
சக்தி தன் தோழர்கள் உடன் பேசிக் கொண்டு இருக்கும் போது ரவி, “மச்சான் பேசாம நான் ஒரு ஐடியா தரவா” என்றான்.
சக்தி என்ன என்பது போல் பார்த்தான். ரவி, “பேசாமல் நைட் நம்ம நிலாவை கடத்திட்டா என்ன?” என்றான் கேள்வியாக. சக்தி மண்டைக்குள் பல்பு எரிந்தது போல் தோன்றியது.
சக்தி, “நீ சொல்றதும் சரி தான் டா. அந்த குட்டி கத்திரிக்கா விக்ரம் கிட்ட புருஷன்னு சொன்னதில் இருந்து என் மனசுக்கு என்னமோ தப்பாவே தோணுது”.
“பேசாம நைட்டு நீ நம்ப ஆளுங்க எல்லாரையும் கூட்டிட்டு போய் நிலாவ கடத்திடு” என்று சிறிய போதையுடன் ஒரு பிளான் செய்தான்.
நிலா உறங்கிக் கொண்டிருந்த சுஜிதாவை எழுப்பி அமர வைத்தவள், “சுஜி நாளைக்கு என் தலையெழுத்தே மாற போகுது டி. நான் கிணற்று மேல் நிக்கிற மாதிரி தோன்றுது”.
“எந்த பக்கம் குதிச்சாலும் ஆபத்து எனக்கு தான் டி. விக்ரமை திருமணம் செய்தாலும் எனக்கு பிடிக்காத கல்யாணம் தான். அதே சமயம் சக்தியை நான் திருமணம் செய்ய வில்லை என்றால் அவன் என்னை கொல்லவும் தயங்க மாட்டான்”.
“அவன் பைத்தியம் மாதிரி என் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கிறான். அவனை பார்த்தாலும் எனக்கு மிகவும் பயமா இருக்கு” என்றாள் அழுது கொண்டே.
சுஜிதா, “நீ எதுக்கும் கவலைப்படாத நான் எப்பவும் உனக்கு நல்லது மட்டும் தான் நடக்க விடுவேன் புரிஞ்சுதா. நாளைக்கு உனக்கு நல்லது மட்டும் தான் நடக்கும்”.
“விக்ரம் ஒண்ணும் கெட்டவன் கிடையாது அவனை பார்க்க கொஞ்சம் கோவக்காரன் போல் தெரியுது தவிர அவர் மனசு வெள்ளை தான்” என்றாள் விக்ரமுக்கு வரிஞ்சு கட்டிக் கொண்டு.
நிலா, “வாய மூடு டி. நீ வேற என்னை இரிடேட் பண்ணாத. எனக்கே நாளைக்கு என்ன நடக்குமோ ன்னு பயமா இருக்கு” என்றாள்.
பிறகு, சுஜிதா கடினப்பட்டு நிலாவை சமாதானம் செய்து உறங்க வைத்தாள். இருவரும் ஒன்றாக கட்டிலில் உறங்கிக் கொண்டு இருந்தார்கள்.
விடியற்காலை 3 மணி அளவில் சக்தி அவன் ஆட்களை அனுப்பி வைத்தான் நிலாவை கடத்துவதற்கு.
ரவி மற்றும் இரண்டு ஆட்கள் வந்து அவள் அறையில் கட்டிலில் பார்க்க அங்கு நிலா மற்றும் சுஜிதா இருவரும் ஒன்றாக போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு உறங்கிக் கொண்டு இருந்தார்கள்.
மூவருக்கும் இவர்களில் யார் கல்யாணப் பெண் என்று சிறு குழப்பம் வந்துவிட்டது ரவி உட்பட.
இவர்கள் மூவரும் சற்று போதையில் இருந்ததால் சக்திக்கு போனில் தொடர்பு கொண்டு, “மச்சான் இங்க இரண்டு பேர் இருக்காங்க டா இவர்களில் யார் நிலான்னு குழப்பமா இருக்கு” என்றான்.
சக்தி, “பைத்தியக்காரனே இதுக்கு தான் சரக்கு அடிக்காதீங்க சரக்கு அடிக்காதீங்கன்னு சொன்னேன் என்னமோ நான் புடுங்கிடுவேன் நான் செஞ்சிடுவேன்னு வசனம் பேசிக்கிட்டு இருந்தியே இப்போ பாரு என்ன ஆச்சுன்னு” என்று திட்டினான்.
பிறகு, “என்னுடைய நிலா செஞ்சு வச்ச செல மாதிரி இருப்பா பார்த்தாலே தெரியும். அவ தான் அழகா இருப்பா”.
“அவ கையில் மருதாணி எல்லாம் வச்சு இருந்தா” என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே ரவி போனை துண்டித்து விட்டான் .
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஹையோ விக்ரமே பொய்யா … என்னடா நடக்குது இங்க …