Loading

அத்தியாயம் 35

 

அபர்ஜித் ஊருக்கு வந்திருந்த இரண்டு நாட்களிலேயே, அஸ்வந்தை தாக்கிய ரவுடிகளின் பழைய கேஸ்ளை தூசு தட்டி எடுத்து,

 

இப்போது அஸ்வந்தை தாக்கியது, அதில் கண்மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருந்தது, என்று இன்னும் சில இல்லாத கேஸ்கள் என அத்தனையும் அவர்கள் தலையில் கட்டி, குறைந்தது 5 வருடங்களுக்கு வெளியே வர விடாமல் இருக்க புதிய வழக்கு தொடர்ந்து,

 

அஸ்வந் உயிருக்கு ஆபத்திருப்பதாக கூறி ஜாமினும் இல்லாமல் செய்து விட்டான்.

 

அவர்களை ஏதாவது தில்லுமுல்லு செய்து வெளியே கொண்டு வர ஏவிவிட்டவர் இருக்க வேண்டுமே,

 

அறிவழகியுடன் நேரில் சென்று கைகாலை உடைத்துவிட்டு, போதாத குறைக்கு அவனது மொத்த சொத்துக்களின் மீதும் கேஸ் போட்டு முடக்கி இருந்தான்.

 

இதற்கு எல்லாம் உதவியாக இருந்தது இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன்.

 

“ரொம்ப தேங்க்ஸ் கார்த்தி.. ரொம்ப ஹெல்ப் பண்ணி இருக்கீங்க.. அந்த ராஸ்கல் இப்படி பண்ணுவான்னு நான் கெஸ் பண்ணாம போயிட்டேன்…” என்று அபர்ஜித் சொல்ல,

 

“அவன் இது கூட செய்யலனா எப்படி.. கேஸ் போட்டு சொத்த பத்து வருஷத்துக்கு என்டாலும் முடக்கி போட்றலாம்னு அவன் நினைச்சிருக்க.. நீங்க ஆறு மாசத்துல கேஸ ஒன்னும் இல்லன்னு முடிச்சு விட்டா கோவம் வரும் தானே..

 

…ஆனா இந்த அளவுக்கு அவன அடிப்பீங்கனு நான் எதிர்பார்க்கல.. எல்லாமே பர்ஃபிக் ஷாட் எப்படி…” என்று கார்த்தி கேட்க

 

“கராத்தே ப்ளாக் பெல்ட்…” என்றான் சின்ன சிரிப்புடன்.

 

” ம்ம் கெஸ் பண்ணுனேன்.. நீங்க ஊர்ல இல்லாதது தெரிஞ்சுதான் தைரியமா இறங்கி இருக்காங்க…” என்று கார்த்தி சொல்ல

 

“ம்ம் அந்த தைரியம் தான்.. சரியான நேரத்துல ஹெல்ப் பண்ணி இருக்கீங்க அகைன் தேங்க்ஸ் எ லாட்…”

 

“அது எப்படி ஹெல்ப் பண்ணாம இருக்க முடியும்.. அப்புறம் வக்கீல் மேடம் வேலை தெரியாத தண்டம், விளங்காத முண்டம், ஒரு பைல் கூட சரியா ரெடி பண்ண தெரியாதவன்னு திட்டுவாங்களே..

 

…அவங்க கூப்பிட்டு நான் வராம இருக்க முடியுமா, இல்ல அவங்க சொல்லி ஒரு வேலைய செய்யாமதான் இருக்க முடியுமா…” என்று கார்த்திகேயன் அறிவழகியை பார்த்துக் கொண்டே சொல்ல

 

‘ஆத்தி என்ன காலகேயன் பார்வ நம்ம பக்கம் திரும்புது…’ என்று மனதுக்குள் அலறியவள் அபர்ஜித் பின் மறைந்து கொண்டாள்.

 

“அட, அத இன்னுமா நீங்க மறக்கல.. அவளுக்கு நீங்க தான் இன்ஸ்பெக்டர்னு தெரியாது.. அதனால தப்பா பேசிட்டா…” என்று அபர்ஜித் சொல்ல

 

“அவங்க திட்டுனத எப்படி மறக்க முடியும்.. பலிக்கு பலி வாங்கணும் இல்ல…” என்று கார்த்தி கண்ணடிக்க, அது அறிவழகிக்கு தெரியவில்லை.

 

“ஐயோ சீனியர் என்ன இந்த காலகேயன் கிட்ட இருந்து காப்பாத்துங்க…” என்று அவன் காதில் கிசுகிசுக்க

 

“தனியா சிக்குவா இல்ல.. அப்போ பாத்துக்கோங்க…” என்று அபர்ஜித் சொல்ல

 

‘ஆஹா, இங்கயே நின்னோம்னா சீனியரே என்னைய கொடுத்தா தூக்கி குடுத்துருவாறு போலயே…’ என்று பதறியவள்

 

“சீனியர்! என் ஸ்கூட்டி சாவிய காணோம்.. நம்ம வந்த கால்ல தான் இருக்கும்.. நான் போய் தேடுறேன் நீங்க பொறுமையா பேசி முடிச்சிட்டு வாங்க…” என்றவள் ஒரே ஓட்டமாக அந்த இடத்தை விட்டு ஓட

 

“நம்ம கார்ல தானே வந்தோம்.. ஸ்கூட்டி சாவி எங்க இருந்து வந்துச்சு…” என்று அபர்ஜித் கேட்டது அவளுக்கு கேட்க வேண்டுமே, காரில் ஏறி அமர்ந்து கதவை இழுத்து அடைத்துக் கொண்டாள்.

 

அவளைப் பார்த்து தலையாட்டி சிரித்த அபர்ஜித் “நீங்க இப்படி மிரட்டுறதால தான், அவ உங்க ஸ்டேஷன் பக்கமே வர பயப்படுறா…” என்க

 

“யாரு உங்க ஜூனியருக்கு பயமா!.. நீங்கதான் நம்பணும்.. சான்ஸ் கிடைச்சா என்னையே அவங்களுக்கு சல்யூட் அடிக்க வெச்சிடுவாங்க…” என்று கார்த்தி சொல்ல

 

“அது என்னமோ உண்மைதான்…” என்று சொன்னேன் அபர்ஜித் “சரி நான் கிளம்புறேன்…” என்று விடை பெற்றான்.

 

******

அஸ்வந்தும் பார்கவியும் கண்ணாடி தோட்டத்தில் நின்று இருந்தனர்.

 

கண்மணியை டிஸ்சார்ஜ் செய்த அன்று அவள் எதையோ தேடி, இவன் மோகமாக நெருங்கி ஒரு வாரம் கடந்துவிட்டது.

 

அன்றிலிருந்து அஸ்வந் குழப்பமும் யோசனையுமாகத்தான் சுற்றி வருகின்றான்.

 

காரணம் பார்கவி கையில் இருக்கும் பரம்பரை வைர வளையல்.

 

கண்மணியை பார்த்து விட்டு வந்த பின்னரும் தேடோ தேடு என்று தேடி, இரவு ஒன்பது மணிக்கு, அலமாரியின் கீழ் இருந்து அந்த வளையலை கண்டுபிடித்தாள்.

 

அதை சந்தோஷமான முகத்துடன், ஆசையாக கையில் அணிந்து கொண்ட பார்கவி அவனுக்கு புதிதாக தெரிந்தாள்.

 

அவளின் செயலுக்கு என்ன அர்த்தம், அந்த வீட்டின் மருமகள் என்பதன் அடையாளமாக அந்த வளையலை போட்டுக் கொண்டாளா?

 

இல்லை அஸ்வந்தின் மனைவி என்ற அங்கீகாரத்திற்காக போட்டுக் கொண்டாளா?

 

இல்லை அவன் மீது வேறேதும் தனி பிரியமா? எந்த அர்த்தத்தில் அதை எடுத்துக் கொள்வது என்று அவனுக்கு புரியவில்லை.

 

அதைவிட பெரும் குழப்பம் அவளின் திடீர் மாற்றங்கள் தான். அன்று இரவு அவன் அருகில் கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

 

அவன் ஆச்சரியமாக பார்க்க “என்ன! அங்க எனக்கு கம்ஃபர்ட்டா இல்ல…” என்று சொன்னாள்.

 

சரி என்று அவனும் ஏற்றுக் கொண்டான். அவன் தான் எப்போதோ இருந்து கூறுகின்றானே, காட்டிலில் படுத்துக்கொள்ள சொல்லி.

 

ஆனால் அவள் அருகில் படுத்த பின்னர் தான் அவஸ்தை புரிந்தது. இரவில் தன்னருகில் அழகிய, காதல் மனைவியை பார்க்கும் போது, மோகம் துளிர்க்காமல் இருக்குமா என்ன!

 

இரவுகள் இன்பமாய் இம்சை செய்தன.

 

அது போதாது என்று இப்போது எல்லாம் அவனுடனே ஒட்டிக்கொண்டே திரிகின்றாள்.

 

அவனை உரசி விட்டு செல்கிறாள். இடித்துக்கொண்டு அருகில் உட்காருகின்றாள். இதை எல்லாம் எப்படி எடுத்துக் கொள்வது?

 

அவள் நெருங்குகின்றாள் என்று, இவனும் நெருங்கி, அடுத்த கட்டம் போனால் அமைதியாக அனுமதிப்பாளா?.

 

இல்லை நான் சாதாரணமாக பழகியதை உனக்கு சாதகமாக பயன்படுத்துகிறாய் என்று குற்றம் சாட்டுவாளா?. என்ற யோசனை வேறு.

 

இப்போது கூட அவள் ஆசைப்பட்டாள் என்பதற்காக, தோட்டத்தில் மீன் தொட்டி அமைக்க, கண்ணாடியை வைத்து பசை கொண்டு பொருத்திக் கொண்டிருந்தான்.

 

கை அதன் போக்கில் வேலையை செய்தாலும். கண்கள் என்னவோ இடுப்பு சேலை விலகியதை சரி செய்யாமல், பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கும் பார்கவி மீதும், அவள் கையில் குலுங்கும் வளையல் மீதும் தான் இருந்தது.

 

அவனுக்கு என்னவோ அவளின் நடவடிக்கைகள் அனைத்தும் அவனுக்கான அழைப்பாகவே தோன்றித் தொலைத்தது.

 

அவள் கொஞ்சம் கொஞ்சமாக இவன் அருகில் வர, இவனுக்கும் இதயம் எம்பி குதித்தது. அவள் இடையும், அவள் அசையும் போது அதில் விழும் மடிப்பும். கண்ட மறுநொடி கைவைத்து கசக்க காதல் வேட்கை பிறந்தது.

 

பார்வையை திருப்பிக் கொண்டான். அவன் தவித்து, தடுமாறி பார்வையை திருப்பியதை, கடைக்கண்ணால் அவதானித்தவள் உதட்டில் நம்மட்ட சிரிப்பு.

 

அவனுக்கு அவள் மீது கொள்ளை காதல் அது தெரியும்.

 

அவளுக்கும் அவன் மீது தீராக் காதல். அதை வாயை திறந்து கூறத்தான் வகை தெரியவில்லை.

 

எனவே அவனை சீண்டி விட்டு, அவனாக நெருங்கும் சமயம் அவனை ஏற்றுக் கொண்டு, தன் மனதை மௌனம் மொழியாக கூறிவிடலாம் என்று நினைத்துதான் இதெல்லாம் செய்கின்றாள்.

 

சிக்னல் விழுந்தது தெரியாமல் இன்னமும் வண்டியை லெஃப்டில் விடுவதா ரைட்டில் விடுவதா என்கின்ற குழப்பத்தில் இருந்தான் அஸ்வந்.

 

காதல் என்று வந்துவிட்டால் பஞ்சபூதங்கள் பக்கத்துணையாக இருக்குமே.

 

காற்றில் அவள் சேலை முந்தானை அசைந்து, அவன் முகத்தை மூடி விட, சேலை கண்ணை மறைத்ததால் அஸ்வின் கையில் இருந்த கண்ணாடி கீழே நலுவ, அவன் அதை வலுவாக பற்றி பிடிக்க, அதன் கூர்முனை அவன் கையில் குத்திவிட்டது.

 

“ஸ்ஸ்ஆ…”என்று அவன் கத்த, அப்போது தான் தன் முந்தானை அவன் முகத்தில் இருப்பதை கண்டவள், உடனே அதை விலக்கி,

 

“என்னாச்சு…” என்று பதட்டமாக கேட்க,

 

கண்ணாடியை பத்திரமாக கீழே வைத்தவன், கையை உதறி “கண்ணாடி கிழிச்சிருச்சி…” என்று சொல்ல

 

“அச்சோ! என்ன சொல்ற…” என்றவள் அவன் கையை இழுத்து பார்க்க, உள்ளங்கை முழுவதும் ரத்தம்.

 

பார்கவி பயந்தே போனாள். காயம் என்னவோ அரை இன்ச் தான் இருக்கும். ஆனால் ரத்தம் அதிகமாக வந்திருந்தது.

 

அவன் கையை பார்த்த மறு நொடி பார்கவி கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

 

அன்று அவனை ரவுடிகள் தாக்க வந்ததிலிருந்து பார்க்கின்றான். அவனுக்கு ஒன்று என்றால் துடிக்கின்றாளே, இதை விடவா அவள் நேசத்தை, அவள் மனதை கூற வேண்டும்.

 

“ஒரு நிமிஷம் இங்கேயே இரு…” என்றவள் வேகமாக அறையை நோக்கி ஓட

 

“ஏய் கவி!, இது சின்ன காயம் தான்…” என்று அவன் கூறியது அவள் காதில் கேட்கவில்லை.

 

அஸ்வந்தோ தண்ணீரில் காயத்தை கழுவி பார்த்தான். மிகச் சிறிய காயம் தான். ஆனாலும் அவளை சீண்ட வேண்டும் போல் இருக்க, மனதிற்குள் திட்டம் ஒன்றைப் போட்டவன் அறைக்கு வந்தான்.

 

அவன் பால்கனி வழி உள்ளே வர, அவளும் வெளியே வந்தவள் “உன்ன யாரு மேல வர சொன்னா.. எவ்ளவு ரத்தம் வெளியே போச்சு.. தல சுத்தலையா?.. வா இப்படி வந்து உட்காரு…” என்று அவனை அழைத்துக்கொண்டு வந்து கட்டிலில் அமர வைத்தவள்,

 

மருந்து போட அவன் கையை எடுத்து பார்த்தாள், காயம் சிறிதாக இருக்க, அவள் கண்ணீர் மட்டுப்பட்டது.

 

ஆனால் அஸ்வந்தோ “ஐயோ! அம்மா! வலிக்குதே…” என்று அவன் உயிரே போவது போல் கத்தி கூச்சல் போட

 

அவனை சந்தேகமாக பார்த்தவள் “அவ்ளவு வலிக்குதா?.. சின்ன காயம் தானே…” என்று கேட்க

 

‘அய்யோ ஓவர் ஆக்ட் பண்றனோ.. கண்டுபிடிச்சா காரியமே கெட்டுடும்…’ என்று மனதில் நினைத்தவன்

 

“அடிப்பாவி! புருஷன் வலியில துடிக்கிறேன்.. நீ சந்தேகமா ஆராய்ச்சி பண்ற.. பாக்க தான் சின்ன காயம், ஆனா ஆழமான காயம்.. எவ்ளவு ரத்தம் போச்சு.. முடியலையே!…” என்று அவன் கமலஹாசனுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு நடிக்க.

 

அவளுக்கா அவனைப் பற்றி தெரியாது. இருந்தும் உன்னை நான் அறிவேன் என்று காட்டிக் கொள்ளாமல் “சரி.. சரி.. கொஞ்சம் பொறு மருந்து போட்டு விடுறேன்…” என்றவள் காயத்திற்கு மருந்தை போட்டுவிட்டு பிளாஸ்டர் மட்டும் ஒட்டி விட,

 

“என்ன பண்ற நீ.. இங்க குடு…” என்று முதல் உதவி பெட்டியை வாங்கிக் கொண்டவன், அதிலிருந்த பேண்டேஜ் எடுத்து கையை சுற்றி, சுற்றிக் கொண்டவன், இறுதி முனையை அவளிடம் நீட்டி “கட்டிவிடு” என்று சொல்ல,

 

‘இவன் எதுக்கு இவ்ளவு பண்றான்’ என்று எதுவும் புரியாமல், அவன் முகத்தை ஊற்றி பார்த்துக் கொண்டே, அதை கட்டி விட்டாள்.

 

அவனுக்கோ சிரிப்பில் துடிக்கும் உதட்டை இறுக்கிப்பிடிப்பது கஷ்டமாகவே இருந்தது. கஷ்டப்பட்டு முகத்தில் வலியின் சாயலை கொண்டு வந்திருந்தான்.

 

அன்றைய இரவு உணவு வரை அவன் திட்டம் அவளுக்கு புரியவில்லை. சாப்பிடுவதற்கு என்று அழைத்த போது தான்,

 

வலது கையை தூக்கி காட்டியவன் “எப்படி சாப்பிட முடியும்…” என்று உதட்டை பிதுக்க,

 

ஒற்றை புருவத்தை ஏற்றி அவனை பார்த்தவள் “உப்புமா தான் செஞ்சேன்.. ஸ்பூன் போட்டு கொடுக்கிறேன் சாப்பிடு…” என்று சொல்ல

 

“ஆஆ..எனக்கு வலி உயிர் போகுதே.. உன்னால தானே எனக்கு இப்படி ஆச்சு.. கொஞ்சமும் இரக்கம் இல்லாம பேசுறியே…”

 

“என்னாலயா…?” கவலையாக அவள் கேட்க,

 

“ஆமா.. உன் முந்தானை முகத்த மூடி மறைக்கவும் தானே கிளாஸ் சிலிப்பாச்சு.. அப்போ யார் காரணம்…” என்று சொல்ல

 

“சாரி.. நான் வேணும்னே பண்ணலையே.. அது ஜஸ்ட் ஆக்சிடென்ட்…”

 

“என்னமோ.. நான் வலியில துடிக்கிறது உன்னால தானே…” என்று அவன் சொல்ல

 

“சரி ஓகே.. இப்ப என்ன பண்ண…”

 

“பசிக்குது.. ஆனா சாப்பிட முடியாதே.. ஸ்பூன்ல சாப்பிட்டா சாப்பிட்ட ஃபீல் இருக்காது.. ஊட்டி விட்டா சாப்பிடலாம்…” என்று அவன் சொல்ல

 

அவன் திட்டம் புரிய, அவனை செல்லமாக முறைத்தவள், எதுவும் கூறாமல், சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வந்தாள்.

 

பிடித்த சாப்பாட்டை சாப்பிட போகும், நான்கு வயது குழந்தை போல், முகத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலைத்து இருக்க,

 

கையைக் காலை உதறி, காலை மடக்கி கட்டிலில் அமர்ந்து இருந்தான் அஸ்வந். அவன் அருகில் போய் அமர்ந்தவள், உப்புமாவை தன் கையினால் எடுத்து அவனுக்கு ஊட்டி விட

 

அவன் தடித்த அதரத்தினால் அவள் பிஞ்சு விரல்களை கவ்வி, அழுத்தி உணவை வாங்கிக் கொள்ள,

 

அவளுக்கோ உடல் முழுவதும் பாயும் மொத்த ரத்தமும் இதயத்திற்கு பாய்ந்த உணர்வு. அதே ரத்தம் முகத்திற்கு பாய்ந்ததை போல் முகம் சிவந்து போனது.

 

வெட்கச் சிவப்பில் வெடித்து விடுவேன் என்று மினுமினுத்த கன்னங்களை அவனிடம் இருந்து மறைக்க மிகவும் போராடினாள்.

 

ஆனால் அந்த கள்ளனுக்கா தெரியாமல் போகும். அவள் நாணத்தை பார்க்கும் போதெல்லாம், காதலும் ஆசையும் உள்ளத்தில் பொங்கி வழிகின்றதே.

 

அது மீண்டும் மீண்டும் வேண்டும் என்று தன் உதடுகளில் சிக்கும் அவள் விரல்களை, முடிந்த மட்டும் வாயில் ஊற வைத்து விட்டே விட்டான்.

 

முடிந்த மட்டும் அவனின் இன்பமான இம்சைகளை பொறுத்துக் கொண்டு, அவனுக்கு வயிறு நிரம்ப உணவை ஊட்டி விட்டவள், அவளும் சாப்பிட்டுவிட்டு வந்து கட்டில் படுத்துக்கொள்ள,

 

“கவி!…” என்றான் மெதுவான குரலில். அவள் என்ன என்று பார்க்க

 

“பெட்ஷீட் போர்த்தி விடேன்…” என்று சொல்லி கையை தூக்கி காட்ட, மெல்லிய சிரிப்புடன் அவனை முறைத்தவள், பெட்ஷீட்டை இழுத்து அவன் மார்பு வரை மூடி விட,

 

அவள் அருவி கூந்தல் அவன் நெஞ்சில் நீர்வீழ்ச்சி போல் கொட்ட, தன் ஒற்றை கையை எடுத்து அவள் கூந்தலின் உள்ளே நுழைத்து அலைய,

 

அவள் உடல் சிலிர்த்து, கழுத்தின் பின்புறம் இருந்த பூனை முடிகள் விரைந்து நின்றது.

 

அவள் அவன் முகம் பார்க்க, எதுவும் அறியா குழந்தை போல் இரண்டு புருவங்களை உயர்த்தி “என்ன” என்றான் சேட்டைக்காரன்,

 

அவளும் ஒன்றும் அறியாதவள் போல், ஒன்றும் இல்லை என்னும் விதமாக தலையை ஆட்டிவிட்டு சற்று விலகி படுத்துக் கொண்டாள்.

 

விடுவானா அவன். “ஐயோ, ஆஆ.. கை வலிக்குதே…” என்று கத்த ஆரம்பிக்க

 

அவளோ அவனை முறைத்து “எது இந்த காயம் இப்ப வலிக்குதோ…” என்று கேட்க

 

“வலிக்காமலா கத்துறேன்.. தூங்க முடியலையே…” என்று அவன் அப்பயும் இப்படியும் புரள,

 

‘அய்யோ கடவுளே’ என்று நொந்து கொண்டவள், அவன் கையைப் பிடித்து தடவி கொடுக்க,

 

“ஹாஆ..இப்போ வலிக்கல…” என்று அஸ்வந் சொல்ல, “பிராடு”என்று அவனுக்கு செல்லமாக திட்டியவள், அவனை ரசனையாக பார்த்தாள்.

 

இரவில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி பார்த்து இருக்க, இருவரின் நடுவில் இருந்த அந்த இடைவெளியியை அவர்கள் கரங்கள் நிறைந்து இருக்க,

 

அவன் வலது கையை அவள் வலது கை தடவி விட…

 

அவள் இடது கையை அவன் இடது கை இறுதி பற்றி இருந்தது…

 

இருவரின் விழிகளும் காதலுடன் கலந்திருந்தது…

 

எத்தனை நேரம் ஒருவரை ஒருவர் கண்களால் களவாடிக் கொண்டனரோ தூக்கம் விழியை தழுவ, தானாக கண்கள் மூடிக்கொண்டன.

Click on a star to rate it!

Rating 3.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்