Loading

அத்தியாயம் 33

 

கண்மணி எமர்ஜென்சி வாட்டில் அனுமதிக்கப்பட்டிருக்க, வெளியே கதிரையில் அமர்ந்திருந்தனர் பார்கவி, அறிவழகி, மாளவிகா.

 

அஸ்வந் வைத்தியருடன் உரையாடிக் கொண்டிருந்தான். பார்கவி மாளவிகாவால் நடந்து முடிந்த சம்பவத்திலிருந்து வெளியே வரவே முடியவில்லை.

 

நடந்த கலவரமும் இறுதியாக ரத்த வெள்ளத்தில் கிடந்த கண்மணியும் தான் மனதில் நிலைத்து நின்றது.

 

வைத்தியர்களிடம் நடந்ததை விவரமாக கூறிவிட்டு, வேகமாக பார்கவியிடம் வந்த அஸ்வந் “கவி உனக்கு ஒன்னும் இல்லையே…” என்று அவள் கையைப் பிடித்து நிற்க வைத்து, அவள் உடலை ஆராய

 

பார்கவியோ உலர்ந்த தொண்டைக்குள் எச்சிலை கூட்டி விளங்கியவள் “எனக்கு ஒன்னும் இல்ல.. கண்மணி?…” என்று பயத்துடன் கேட்க ,

 

“ஹேய் நத்திங் சீரியஸ்.. காயம் சின்னது தான்.. பிளட்தான் அதிகமா போயிருச்சு.. டாக்டர் பயப்பட ஒன்னும் இல்லனு தான் சொன்னாங்க.. தேவைப்படடா கூட பிளட் கொடுக்கலாம், என்னோடதும் அவ பிளட் குரூப்தான்…” என்றவன்

 

“நீ ஓகே தானே.. உனக்கே தெரியாம எங்கேயாவது அடிபட்டு இருக்க போது, வா ஒரு தடவை செக் பண்ணிட்டு வந்துடலாம்…” என்று அவன் தவிப்பாக கூப்பிட

 

அந்த கண்களில் தெரிந்த பாசம், காதல், பரிதவிப்பு எல்லாம் பார்கவி உயிரை சென்று தாக்கியது அந்த நொடி.

 

அவன் உயிரை காப்பாற்ற, தன்னை பற்றி கூட யோசிக்காமல் போராடி, ஒருத்தி காயத்துடன் படுத்திருக்க,

 

அவனோ தன் உயிரானவளுக்கு எதுவுமோ என்று பதறிக் கொண்டிருக்கின்றான். எந்த வகையான நேசம் இது.

 

“இல்ல அஸ்வந் நான் நல்லா தான் இருக்கேன்…” என்று அவள் சொல்ல, பார்கவியின் சோர்ந்த முகத்தை பார்த்தவன் “சரி நீ இங்கேயே இரு.. நான் குடிக்க ஏதாவது வாங்கிட்டு வாரேன்…” என்றவன் கேண்டீன் நோக்கி சென்றான்.

 

சோர்வாக அமர்ந்த பார்கவியிடம் “நான் அறிவழகி.. என்ன தெரியும்னு நினைக்கிறேன்…” என்று அறிவு சொல்ல

 

பார்கவி அவளைப் பார்க்க “உங்கள பத்தி எனக்கு எல்லாமே தெரியும்.. அங்க இதோ மாளவிகாவும் தான் இருந்தாங்க.. ஆனா கண்மணி ஏன் தன்ன பத்தி யோசிக்காம அஸ்வந்த காப்பாத்த முயற்சி பண்ணி, இதோ இப்படி அடிபட்டு ரத்தம் கொட்ட கிடக்காணும்..

 

…அஸ்வந் மேல ஒருதலையா அவங்க வச்சிருந்த நேசம் தான்.. உங்க கழுத்துல தொங்குற தாலிக்காக நீங்க போராடுனீங்க.. கண்மணி உண்மையான பாசத்தால போராடுனாங்க..

 

…நீங்க ஆசைப்பட்ட வாழ்க்கை உங்களுக்கு கிடைச்சிருந்தா நீங்க சந்தோஷமா இருந்திருப்பீங்கன்னா.. அவர நேசிச்ச கண்மணி, அவருக்கு கிடைச்சிருந்தா, அவரும் சந்தோஷமா இருந்திருப்பாரு இல்ல…” என்று அறிவு கேட்க

 

பார்கவிக்கு நெஞ்சுக்குள் சுருக்கு என்று தைத்தது. உண்மைதானே அவள் அபர்ஜித் மீது வைத்திருந்த நேசத்தை விட பெருசு அல்லவா கண்மணி அஸ்வந் மீது வைத்திருக்கும் நேசம்.

 

அஸ்வந் தனக்கு இல்லை என்று தெரிந்த பின் கண்மணி ஓரிடத்தில் முடங்கவில்லையே. அவனை எதிர்கொள்ள தயங்கவில்லையே, இயல்பாக தானே இருந்தாள்.

 

அறிவோ “ஆனா அஸ்வந் அப்படி நினைக்கல.. அவர பொறுத்த வரைக்கும் நீங்க தான் அவருக்கு பொருத்தம்னு நம்புறாரு.. இந்த நொடி வர உங்கள மனைவியா ஏத்துக்கிட்டது தப்புன்னு அவர் நினைக்கல..

 

…உண்மையான நேசம் எல்லாம் யாருக்கும், அவ்ளவு சீக்கிரம் கிடைச்சிடாது.. உங்களுக்கு கிடைச்சிருக்கு புரிஞ்சுக்கோங்க…” என்று அறிவு கூற

 

பார்கவியின் மனதும் அஸ்வந்தின் காதலை பற்றி தான் சிந்தித்தது.

 

எத்தனை பேர் அளவுக்கு அதிகமாக அவனை நேசித்தாலும், அவன் நேசம் அவளுக்கானது அல்லவா.

 

அதை போல் தானே பார்கவி என்னதான் அபர்ஜித்தை நேசித்தாலும், அவன் நேசம் வேறொருத்திக்கானது என்னும் போது அது தப்பு இல்லையே.

 

இரு நெஞ்சங்களை ஒன்றாக நிறைந்தால் தானே அது காதல்.

காதல் என்றால் என்ன என்கிற தெளிவு கிடைத்திருந்தது பார்கவிக்கு, அஸ்வந்தின் மீது துளிர்த்த உண்மையான காதலால்.

 

திருமணத்திற்கு முன் ஏழு மாதங்கள் இருந்த அவள் மனநிலையும், இதோ அதேபோன்று ஏழு மாதங்கள் அஸ்வந்துடன் பழகி, புரிந்து கொண்டு, நெஞ்சில் துளித்த நேசத்திற்கும், மலையளவு வித்தியாசம் இருந்ததை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

 

அஸ்வந் கையில் தண்ணீர் பாட்டிலும், ஜூஸூம் வாங்கிக் கொண்டு அங்கு வந்தான். “கவி, இந்தா முதல்ல தண்ணிய குடி…” என்று பார்கவியிடம் கொடுக்க,

 

அதை வாங்கி இரண்டு மிடறு பருகியவளிடம்” போதும்.. போதும்..இந்தா இந்த ஜூஸ குடி…”என்று அவளிடம் ஜூஸை கொடுத்தான்.

 

அவள் குடிக்க ஆரம்பித்த பின்னர் தான் மாளவிகா அறிவுக்காக வாங்கி வந்திருந்த ஜூஸை கொடுத்தான்.

 

“எப்பா, இப்பையாவது நான் உன் கண்ணுக்கு தெரியுறனா…”என்று அறிவு கேட்க

 

“ஏன் தெரியாம.. குட்டிச்சாத்தான் ஒன்னு உட்கார்ந்து இருக்கிறத கண்டுக்காம இருக்க முடியுமா!…” என்று சொன்னவன்

 

“என் பொண்டாட்டி பக்கத்துல நீ எதுக்கு திருஷ்டி பொம்மை மாதிரி.. தள்ளி உட்காரு…” என்று அறிவை சொல்ல, அஸ்வந்தை முறைத்தவள் தள்ளி அமர்ந்து கொள்ள,

 

பார்கவி அருகில் அமர்ந்து கொண்டவன் “என்ன ஆச்சு.. இந்த பிராப்ளம் ரொம்ப நளா இருக்கு.. ஆனா இந்த மாதிரி எதுவும் இதுவரைக்கும் நடந்ததில்லையே…” என்று அறிவழகியிடம் கேட்க

 

“எப்படி பிரச்சனை வரும்..என் சீனியர் எள்ளுனா நான் எண்ணையா வேலை செய்ஞ்சு எல்லாத்தையும் சரி பண்ணுவேன்..இப்போ என் குருவ, தர்மத்தின் தலைவன, தண்ணி இல்லாத காட்டுக்கு அனுப்பி வச்சிட்டீங்களே.. அப்புறம் எப்படி என்னால முன்கூட்டியே தடுக்க முடியும்…” என்று அறிவு சொல்ல

 

“இப்ப எதுக்கு ஓவரா நெஞ்ச நக்குற.. ஆஸ்திரேலியா உனக்கு தண்ணி இல்லாத காடா?.. அதென்ன எள்ளுன்னா எண்ணையா வேலையிறது.. அப்போ அண்ணா சொல்றத பண்றது இல்ல உன் இஷ்டத்துக்கு ஏதாவது செய்வ அப்படித்தானே…” என்று அஸ்வந் கேட்க

 

“அட சீனியர் சொல்றதுக்கு ஒரு படி மேலே செய்வேன்னு சொல்றதுக்கு அப்படி ஒரு உதாரணம் சொன்னேன்.. நீ ஏன் அதுக்கு வேற அர்த்தம் எடுத்துக்கிற…”

 

“வேற அர்த்தமா!.. சரி அப்போ நீயே சரியான அர்த்தம் என்னன்னு சொல்லு…” என்று அவன் கேட்க

 

“நான் படிச்சது லா, திருக்குறளுக்கு எல்லாம் விளக்க உரை சொல்ல முடியாது…” என்று அசராமல் அடித்துவிட

 

“என்ன திருக்குறளா!..”

 

“அப்போ இல்லையா?…” என்று அவள் முத்தத்தை அப்பாவியாக வைத்துக் கேட்க,

 

மெலிதாக சிரித்தவன் “தேங்க்ஸ், கரெக்டான நேரத்துக்கு வந்த, இல்லனா நிலைமை கைய மீறி போயிருக்கும்…” என்று சொல்ல

 

“ம்ம், விஷயம் தெரிஞ்சு வாரதுக்குள்ள இந்தளவுக்கு ஆகிடும்னு நினைக்கல.. உண்மைய சொல்லப்போனா சீனியர் ஊர்ல இல்ல என்ற தைரியம்தான்…” என்று அறிவு சொல்ல

 

“இதுக்கு பிறகும் ப்ராப்ளம் வருமா?…” என்று பார்க்கவி கேட்க

 

“இல்ல, இனி நான் பாத்துக்குவேன்.. டோன்ட் வரி…” என்று அறிவு சொன்ன பின்னர், சற்று நேரம் அமைதி நிலவ,

 

பார்கவியின் கையை பிடித்த அஸ்வந் “கண்மணி சரியாகிடுவா இல்ல…”என்று கேட்க,

 

அவன் கையை எடுத்து தான் இரு கைகளுக்குள் பொத்திக் கொண்டவள் “சரியாகிடும், டாக்டர் தான் பயப்பட எதுவும் இல்லனு சொல்லிட்டாரே.. மனச போட்டு அழுத்திக்காத.. யாருமே எதிர்பார்க்காம நடந்த ஒரு விஷயம்.. உனக்காகத்தான் ஆனா உன்னால இல்ல…” என்று ஆறுதல் கூறினாள்.

 

தன்னை காக்க போராடிய ஒருத்தி, தலையில் அடிபட்டு படுத்து இருக்க அவனுக்கும் கவலையாக தானே இருக்கும், என்று புரிந்தது.

 

கண்மணி இருந்த அறையில் இருந்து மருத்துவர் வெளியே வர, அனைவரும் அவரை நெருங்கி, கண்மணியை பற்றி கேட்க

 

“பெருசா எதுவும் இல்ல.. அவங்களுக்கு அஞ்சு தையல் போட்டிருக்கோம்..பிளட் குடுக்க வேண்டிய அவசியம் இல்ல.. அவங்க கண்ண முழிச்சிட்டாங்க ஷீ இஸ் பெர்ஃபெக்ட்லி ஃபைன்.. இன்னைக்கு ஒரு நாள் இங்க இருக்கட்டும்.. நாளைக்கு மார்னிங் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்.. வேற அறைக்கு அவங்கள மாத்துனதும் போய் பாருங்க…” என்று வைத்தியர் சொல்ல

 

“தேங்க்ஸ் டாக்டர்…”என்று அவருக்கு நன்றி கூறிய அஸ்வந் மற்றவர்களுடன் காத்திருக்க, சிறிது நேரத்தில் கண்மணி அறைக்கு மாற்றப்பட்ட தகவல் கிடைக்க, அனைவரும் அவளை சென்று பார்த்தனர்.

 

கட்டிலில் எழுந்து அமர்ந்திருந்தாள். தலையில் கட்டு போடப்பட்டிருக்க, கையில் சேலைன் போட்டு இருந்தது.

 

“என்ன கண்மணி இது.. அவன் வேற ஏதாவது பண்ணி இருந்தா.. இல்ல பலமா தாக்கி இருந்தா என்னாகி இருக்கும்.. உன் வீட்டுக்கு என்ன பதில் சொல்லி இருப்பேன்.. நல்லவேள இந்த மாட்டோட முடிஞ்சதே…” என்று அஸ்வந் சொல்ல

 

“உங்கள அடிக்க வரும்போது பார்த்துட்டு இருக்க சொல்றிங்களா?.. விடுங்க அஸ்வந், நான் தடுக்கலாம்னு தான் நினைச்சேன்.. அவன் திருப்பி அடிப்பான்னு யோசிக்கல.. அது சரி வீட்ட என்ன சொன்னீங்க…” என்று கேட்க

 

மாளவிகாவோ “நடந்தது எதுவும் சொல்லல.. டாக்டர் உனக்கு ஒன்னும் இல்லன்னு சொன்னதுக்கு பிறகு தான், நீ கீழ விழுந்ததுல தலை அடிபட்டுருச்சி, ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கோம்னு சொல்லி இருக்கேன்.. அம்மாவும் அப்பாவும் வந்துட்டு இருக்காங்க.. இப்போ உனக்கு எப்படி இருக்கு…” என்று கேட்க

 

“தேங்க்ஸ் டி..லைட்டா பெயின் இருக்கு.. பட் இப்போ ஓகே தான்.. என்று மாளவிகாவிற்கு பதில் சொல்ல

 

“தேங்க்ஸ் கண்மணி.. இவன் மண்ட பிளந்து இருந்துச்சு, நான் என் சீனியருக்கு பதில் சொல்லி இருக்க முடியாது..என்ன காப்பாத்திட்டீங்க.. உடம்ப பாத்துக்கோங்க.. நம்ம பிறகு மீட் பண்ணலாம்.. நான் இப்போ போலீஸ் ஸ்டேஷன் போகணும்…” என்ற அறிவு

 

அஸ்வந்திடம் “அஸ்வந் கண்மணி பேரன்ட்ஸ் கிட்ட நீயே பேசுவியா, இல்ல நான் இருக்கவா…” என்று கேட்க

 

“ம்ம், நான் பாத்துக்கிறேன்.. நீ கிளம்பு…” என்று அஸவந் சொல்ல, அறிவழகி பார்கவியை ஒரு பார்வை பார்த்து, தலையை அசைத்து விட்டு வெளியேறிவிட்டாள்.

 

“மாளவிக்கா நீயும் ஸ்கூல் போய் விஷயத்த சொல்லிட்டு.. கண்மணி திங்ஸ்ஸ எடுத்துட்டு வா…” என்று அஸ்வந் சொல்ல, சரி என அவளும் கிளம்பி சென்று விட,

 

பார்கவியோ கண்மணியின் அருகே சென்று அமர்ந்தவள், அவள் கையைப் பிடித்து “நன்றினு ஒரு வார்த்தையில சொல்ல முடியாது.. நீ மட்டும் தடுக்கலான்னா இந்நேரம் அஸ்வந்…” என்று நிறுத்தியவள் மேற்கொண்டு நினைத்து பார்க்க கூட விரும்பாது தலையை உலுக்கி கொண்டாள்.

 

“ஹேய் பார்கவி எதுக்கு நடக்காதத பத்தி யோசிக்கிற.. நான் இல்லன்னா வேற யாராவது தடுத்திருப்பாங்க…”

 

“நானும் அங்க தானே இருந்தேன்.. அதிர்ச்சியில அப்படியே நின்னுட்டேன்.. நீ தான் சரியான சமயத்துல ஹெல்ப் பண்ணனுன…”என்று பார்கவி சொல்ல

 

எங்கே பார்கவி தவறாக நினைத்து விடுவாளோ… உனக்கு ஏன் அஸ்வந் மீது இவ்வளவு நேசம் என்று கேட்டு விடுவாளோ! என்று நினைத்து,

 

கண்மணி தயக்கமாக “அது.. பார்கவி.. அஸ்வந் முதல்ல எனக்கு பிரெண்ட்..அந்த நேரத்துல…” என்று அவள் தடுமாற

 

அவள் கையில் அழுத்தத்தை கொடுத்த பார்கவி “எனக்கு புரியுது.. நான் எதுவும் தப்பா யோசிக்கல.. நீ இல்லன்னா என்ன ஆயிருக்கும்னு நினைக்கவே பயமா இருக்கு.. உன்னால தான் இப்போ நான் நிம்மதியா இருக்கேன்..

 

…உன்னோட தூய்மையான மனசும் அன்பும் மட்டும்தான் இப்போ எனக்கு தெரியுது.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் கண்மணி…” என்று பார்கவி கூறிக் கொண்டிருக்கும்போதே,

 

கண்மணியின் பெற்றோர் வந்துவிட, அவர்களிடமும் விஷயத்தை கூறி, நன்றி கூறிவிட்டு, அவர்களிடம் இருந்து விடை பெற்று வீடு வந்து சேர்ந்திருந்தனர் அஸ்வந் பார்கவி.

 

வீட்டிற்கு வந்த பின்னர் செவ்வந்தியை பதட்டத்திற்கு உள்ளாக்காமல், மேலோட்டமாக விடயத்தை சொல்ல, அதற்கே அவர் கண்கலங்கி விட்டார்.

 

“அந்த பொண்ணு மட்டும் தடுக்கலன்னா , இந்நேரம் உன் நிலைமை…” என்று அவர் கண்ணீர் சிந்த,

 

“அம்மா அறிவு போலீஸோட வந்துட்டா.. கண்மணி தடுக்கலன்னாலும் எனக்கு எதுவும் ஆகியிருக்காது.. நீங்க கண்டதையும் போட்டு யோசிக்காதீங்க…” என்று ஆறுதல் கூறி அவரை சமாதானப்படுத்தினான் அஸ்வந்.

 

*****

அறிவோ அபர்ஜித்திற்கு எடுத்து விடயத்தை சொல்ல “என் தம்பி மேல கை வைக்கிற அளவுக்கு தைரியம் வந்துருச்சுல்ல…” என்று பல்லை கடித்தவன்

 

“அறிவு நான் நாளைக்கு ஃப்ளைட் ஏறிடுவேன்.. நான் வார வரைக்கும் ஒருத்தனும் வெளியே போகக்கூடாது…” என்று சொல்ல

 

“ஓகே சீனியர்.. அந்த காலகேயன்கிட்ட சொல்லிடுறேன்…” என்று அறிவு சொல்ல

 

“அறிவு என்னைக்காவது அவர்கிட்ட நீ வசமா சிக்க போற.. அவர் கார்த்திகேயன்…”

 

“ஹாஆ..எனக்கு காலகேயன் தான்.. அவரோட பேருக்கும் அவருக்கும் சம்பந்தம் இருக்கா.. நான் வச்ச பேர்தான் பர்ஃபெக்ட் மேச்…” என்று அவள் சொல்ல

 

“நான் சொல்றத சொல்லிட்டேன்.. சிக்குனத்துக்கு பிறகு வந்து ஜாமீன் எடுக்க சொல்லு, அப்போ இருக்கு உனக்கு…” என்றவன் இணைப்பைத் துண்டித்தான்.

 

அன்று இரவும் அஸ்வந்தும் பார்கவியும் கண்மணியைச் சென்று பார்த்து விட்டு வந்தனர்.

 

இரவு நன்கு தூங்கிக் கொண்டிருந்த பார்கவி திடுக்கிட்டு கண் விழித்தாள். மதியம் நடந்த சம்பவமே கனவிலும் வந்து அவளை கலவரம் செய்தது.

 

அவள் கண்கள் பரபரப்பாக தேடியது அஸ்வந்தைதான். அவன் கட்டிலில் விட்டதை பார்த்தபடி ஒரு ஓரமாக படுத்திருந்தான்.

 

எப்போதும் அவன் அப்படித்தான் தூங்குவான். பார்கவி எப்போது வேண்டுமானாலும் வந்து தூங்கட்டும் என்று அவளுக்கான இடத்தை விட்டு விட்டு தான் தூங்குவான்.

 

எழுந்து சென்று கட்டிலின் அருகே மேஜையில் இருந்த தண்ணீரை எடுத்துப் பருகினாள்.மெதுவாக கட்டிலில் மறுபக்கம் அமர்ந்து கொண்டாள்.

 

நிர்மலமான முகத்துடன், குழந்தை போன்று நன்கு தூங்கிக் கொண்டிருந்தான் அவளவன்.

 

இன்று மதியம் மட்டும் அவனுக்கு ஏதேனும் ஒன்று நடந்திருந்தால்… நினைக்கும் போதே உயிர் துடித்தது. நேசம் இல்லாமல் நெஞ்ச நடுங்குமா? அவன் மீது இருக்கும் நேசத்தை அவள் உணர்ந்து கொண்ட தருணம் அது .

 

கால்களை மடக்கி, கைகளால் கட்டிக்கொண்டு, முகத்தை பக்கவாட்டாக முழங்காலில் சரித்து, அஸ்வந்தை பார்த்திருந்தாள்.

 

அவள் பார்வைய ஆழமானது… அழகானது…

ரசனையானது…

ஆம் அவனை ரசிக்க ஆரம்பித்திருந்தாள்.

 

அவன் அழகன் தான்.

 

சிவந்த நிறம், அடர்ந்த அலை அலையான கேஷம் அவன் விரிந்த நெற்றியில் படர்ந்து இருந்தது.

கூர் நாசி, அடர்த்தியான புருவம், சிறிய கண்கள், தடித்த சதைபற்றான அதரத்தின் மெல்லிய நிறமே அவனுக்கு கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லை என்று பறைசாற்றியது…

 

அளவான மீசை, தாடி இல்லாத ஆழகான தாடை,பரந்து விரிந்து, சற்று முறுக்கிய உடல் கட்டு, நல்ல உயரம்,

 

எல்லாவற்றுக்கும் மேல் அவன் விழித்திருக்கும் போது அந்த சிறிய கண்களில் தெரியும் அமைதியான ஒளி,

மென்மையான அவனது பேச்சும், அணுகுமுறையும்

 

சேட்டைக்காரன், அடாவடி குறும்புக்காரன். அவள் நெஞ்சில் நினைவில் அவன் மட்டுமே நிரம்பி வழிந்தான்.

 

அபர்ஜித்தை நினைக்கும் போது அந்த ஒரு மாதங்கள் சினேகமாக விருப்பு வெறுப்பை பகிர்ந்து கொண்டனர். அதை தாண்டி அவளை கவர்வதற்காக எந்த முயற்சியையும் அபர்ஜித் எடுக்கவில்லை.

 

வள்ளியம்மா இறந்த பின்னர் அவனது ஒதுக்கம் அப்பட்டமாக தெரிந்தது. இவள்தான் அடுத்து வந்த ஆறு மாதங்கள் கற்பனை கோட்டையை மிகவும் உறுதியாக கட்டிக் கொண்டாள்.

 

அபர்ஜித்தை பொறுத்தவரை நீங்காத நினைவுகள் என்று எதுவும் இப்போது அவள் மனதில் இல்லை.

 

ஆனால் அஸ்வந்,

அவனது ஒவ்வொரு செயலாலும் இவளை ஈர்த்தான். இவளும் அவன்பால் கவரப்பட்டாள். அவனது மென்மையினாலும் அன்பினாலும் இவளை கட்டிப்போட்டு விட்டான். இதோ காதலிக்கவும் வைத்துவிட்டான் .

 

இவன் தான் தனக்கானவன்

கணவன்…

காதலன் …

அவனை காதல் ததும்ப பார்த்துக் கொண்டிருந்தவள், அப்படியே சரிந்து படுத்து, துங்கிப் போனாள்…

Click on a star to rate it!

Rating 4.2 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்