Loading

அத்தியாயம்-28

 

“என்ன பண்ண போற மகி?” என்று ஜான் வினவ, 

 

“விஷ் லொகேஷன் கண்டுபிடிக்கட்டும். அந்த லொகேஷன அந்த இறந்து போன பையனோட தம்பிக்குத் தெரியப்படுத்தணும். அந்த மாரிமுத்து விஷயம் கசிஞ்சா பொணத்தை எதாச்சும் செய்துடலாம்னு ப்ளான் பண்ணதை வச்சு பார்த்தா அவனுக்கு அவன் ஆட்கள் மேலயே நம்பிக்கை இல்லைனு தெரியுது. சீக்கிரம் பொணம் யார் கைக்குக் கீழயும் இல்லாம டிஸ்போஸ் பண்ணிட்டா தான் சேஃப்னு யோசிக்குறான். அப்ப இந்த வேலையைச் செய்து கொடுத்த ஆள் அவனுக்கு அவ்வளவு நம்பிக்கையான ஆட்களா இருக்கமாட்டாங்க. இடம் தெரிஞ்சு பிரபா அங்க போனா அங்க யாரையாவது இவன் கைக்கு மாட்ட வைக்கும்படி நான் பண்ணிடுவேன். அப்படி பண்ணிட்டா அந்த யோக்கியனை அடியாளை வெச்சு அவங்க கண்டுபிடிச்சுக்கிட்ட மாதிரியும் இருக்கும் நம்ம பிணம் கிடைச்ச மாதிரியும் இருக்கும்” என்று மதி கூறினான்.

 

அவனை ‘ஆ’ எனப் பார்த்த ஜான், “என்னடா சி.ஐ.டி ரேஞ்சுக்கு பேசுற?” என்க, 

 

“சைக்கேட்ரிஸ்ட் மா” என்று இல்லாத காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டான். 

 

“எப்படி அந்தப் பிரபாவுக்கு இதைத் தெரியப்படுத்த?” என்று அகா வினவ, 

 

“நம்மல்ல யாராவது தான் அவனுக்குச் சொல்லணும். ஆனா எப்படி சொல்ல? நேரடியா போய்ப் பேசினா எதும் பிரச்சினை வராதா?” என்று யோசித்தான்.

 

“எனக்கு ஒரு யோசனை.. நான் வேணும்னா செல்ஃபோன் பூத் எதிலருந்தாவது அவங்கள கான்டேக்ட் பண்ணி டீட்டெயில் சொல்றேன்” என்று அகா கூற, 

 

“ஏ.. நைஸ் ஐடியா அகா. உன்னோட மிமிக்கிரி திறமைய காட்டு” என்று மதி கூறிச் சிரித்தான்.

 

“உனக்கு என் தயவு வேணும் ராசா. என் திறமைய ஓட்டாம அமைதியா இரு” என்று அகா கூற, 

 

இவர்கள் உரையாடலில் கலந்துக் கொள்ளாத விஷ் அந்த எண்ணின் விவரங்களைத் தேடினான். 

 

“அகா.. அட்ரஸ் நோட் பண்ணிக்க” என்று தான் கண்டுபிடித்ததை விஷ் கூற, 

 

அவற்றைத் தனது அலைபேசியில் சேகரித்தவள், “அவங்க (பிரபா) நம்பர்?” என்றாள். 

 

“இதென்ன பிரமாதம்? எனக்காகச் சாவயே பார்த்து வந்துட்டான். நம்பர் வாங்கிட்டு வரமாட்டானா? போடா மகி.. போய் அவன் நம்பர வாங்கிட்டுவா” என்று ஜான் கூற, 

 

“உனக்கு எகத்தாளம்டி” என்றபடி மறைந்தவன் சில நிமிடங்களில் அவனது அலைபேசி எண்ணுடன் வந்தான்.

 

அதனையும் சேகரித்தவள் அங்கிருந்து செல்ல, மதியும் அவளுடனேயே சென்றான். 

 

பொதுத் தொலைபேசி மையத்திற்குச் சென்றவள் படபடப்போடு அவனது எண்ணிற்கு அழைக்க, 

 

சில நொடிகள் அழைப்பு எடுக்கப்படாது ஒலித்தது. 

 

பின் அழைப்பு ஏற்கப்பட்டதும் “ஹலோ..” என்று பிரபா அழைக்க, மதியைப் பார்த்தாள். 

 

“பேசு பேசு” என்று அவன் கூற தொண்டையைச் செருமியவள் தனது கீச் குரலில் “ஹலோ.. வேந்தனோட தம்பியா?” என்றாள். 

 

“ஆமா? நீங்க யாரு?” என்றவன் குரலில் சிறு படபடப்பு எழ, 

 

“நான் சொல்ற லொகேஷன நோட் பண்ணிக்கோங்க” என்றவள் அந்த இடத்தின் விவரங்களைக் கூறி, “அங்கதான் உங்க அண்ணா பாடி இருக்கு” என்றாள்.

 

“ஏ.. நீங்க யாரு? என்ன வேணும் உங்களுக்கு?” என்ற அவனது அதிரடியான குரல் பெண்ணவளைத் திடுக்கிடச் செய்ய, 

 

சிலநொடி தடுமாறியவள், “கு..கூடவே தொலைஞ்சுபோன பொணத்தை எப்படியாவது காப்பாத்திடுங்க சார்” என்று அழும்குரலில் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

 

அப்போதே அவளுக்குப் பெருமூச்சு வர, “பெர்ஃபெக்ட் ஷாட். டேக் ஓகே” என்று மதி கூற, 

 

“இங்கென்ன படமா எடுக்குறாங்க? போய் அவனோட ரியாக்ஷன் என்னனு பாரு” என்று முறைத்தபடி அகா கூறினாள்.

 

“ஆமால்ல.. சரி நீ பார்த்துப் போ” என்றவன் மறைய, அங்கு அலைபேசியை யோசனையோடு பார்த்தவன் அவனுக்குத் தெரிந்த காவல் நண்பனைத் தொடர்பு கொண்டார்.

 

“மச்சி.. அண்ணா பாடி இருக்குற லொகேஷன்னு ஒரு பொண்ணு எனக்குக் கால் பண்ணி சொன்னா” என்று பிரபா கூற, 

 

“யாருடா?” என்று எதிர்முனையில் அவனது நண்பன் சிபி கேட்டான்.

 

“தொலைஞ்சுபோன இன்னொரு பாடிக்கு சொந்தமானவங்கனு நினைக்குறேன். பிராங்க் கால் போலத் தோனலை. என் உள்ளுணர்வு சரியா இருந்தா ஏதோ விஷயம் தெரிஞ்சு வெளிய சொல்லப் பயந்து அவங்க என்னைக் கான்டாக்ட் பண்ணிருக்கணும். சொன்னது யாருனு நமக்கு முக்கியமில்லை. நமக்குத் தேவை அந்த ரெண்டு பாடி தான். லொகேஷன் அனுப்புறேன் நீயும் வந்துடு” என்று கூறிய பிரபா விரைந்தே புறப்பட, 

 

“எஸ்..” என்று மதி மகிழ்ச்சி அடைந்தான்.

 

மீண்டும் தன் நண்பர்களிடம் வந்தவன், “நம்ம ப்ளான்படி நடக்குது. அந்தப் பிரபா அவன் ஃப்ரண்டோட அங்க போறான்” என்று கூற, 

 

“நானும் அங்க போகணும்” என்று ஜான் கூறினாள். 

 

நால்வரும் அவளை அதிர்ச்சியோடு திரும்பிப் பார்க்க, 

 

“ஏ ஜான்.. அது ரிஸ்கு” என்று விஷ் கூறினான்.

 

அப்போது அகாவின் அலைபேசி ஒலிக்க அழைப்பது அகர் என்பதைக் கண்டவள், அழைப்பைச் சைலென்டில் போட்டாள். 

 

“நீ போய்ப் பேசிட்டு வா அகா..” என்று துரு கூற, 

 

“இல்லை வேணாம்டா. அப்றம் பேசிக்குறேன்” என்றாள்.

 

“என்னாச்சு எதும் பிரச்சினையா?” என்று விஷ் வினவ, 

 

பிரச்சினை தான் என்றபோதும் தற்போது இருக்கும் கலக்கத்தில் இதைக் கூற வேண்டாம் என்ற எண்ணத்தில், “நான் பேசிட்டு வரேன்” எனச் சென்றாள்.

 

“என்னடா எதும் பிரச்சினையா?” என்று ஜான் வினவுகையில் அங்கு அகா கண்ணீரை துடைத்தபடி தலையை ஆட்டிப் பேசிக் கொண்டிருக்க, 

 

சூழ்நிலையைக் கையில் எடுத்த விஷ், “எதோ பிரச்சினைனு நினைக்குறேன். துரு நீ போய் என்னனு பாரு” என்று அனுப்பிவிட்டு ஜானிடம் திரும்பி, “எதுக்கு அங்க போகணும் உனக்கு?” என்று கேட்டான்.

 

“நானும் மகியும் போறோம்டா. மகியோட பாடி கிடைச்சு அவங்க ஹாஸ்பிடல்ல கொடுத்து அடுத்து அந்தப் பார்மாலிடீஸ்ல அலையுறது பெரும்பாடா இருக்கும். அவங்க என்னைப் பார்த்துட்டா கூட அகா போல பேசினது நான் தான்னு சொல்லிக்குறேன். எனக்கு அவங்க பார்த்துக்கட்டும்னு விட முடியாது விஷ். அதுமட்டுமில்லாம கடத்துனவங்க சப்போஸ் இடம் மாறிட்டா லொகேஷன் நமக்குத் தான் தெரியும். அதனால தான் சொல்றேன்” என்று ஜான் விளக்க, 

 

“சரி நீதான் போகணுமா? துருவும் மதியும் போகட்டுமே” என்று விஷ் கூறினான்.

 

யாவரும் துருவை நோக்க, அழுது கொண்டிருக்கும் அகாவை அணைத்து ஆறுதல்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தான். 

 

“அகா அழுறானா கண்டிப்பா அகர் மேட்டரா தான் இருக்கும் விஷ். அவன் அவளைப் பார்க்கட்டும். நானும் ஜானுமே போறோம். அதான் நான் இருக்கேன்ல? ஒரு நிலையான உடல் கொண்ட மனிதனுக்கு கூடப் பயப்படாத ஆட்கள் ஆத்மாக்கு பயப்படுவாங்க. நாங்களே போறோம். நீ அவளுக்கு லொகேஷன் மட்டும் சொல்லிட்டு இரு” என்று மதி கூறினான்.

 

விஷ்வேஷும் ஒருவாறு ஒப்புக்கொள்ள, இருவரும் புறப்பட்டனர். 

 

அங்கு அகா கொடுத்த விவரப்படி ஓரளவு அந்த இடத்தை நெருங்கியவர்களில் பிரபா, “இந்த இடம் தான்.. ஆனா இந்த ஏரியால எங்கனு தெரியலையேடா” என்று புலம்பினான். 

 

“மச்சி.. இந்த ஏரியால ஒரு பழைய மில் ஒன்னு இருக்குனு சொல்றாங்க.. அங்க தேடி பார்க்கலாம்” என்று அவனது தோழன் சிபி கூற, 

 

“சரி வாடா” என்று முன்னேறினான்.

 

சில நிமிடங்களில் விஷ்வேஷ் வழிகாட்டுதலில் தானும் ஓரளவு இடத்தைக் கண்டுகொண்டு வந்திருந்த ஜான் மற்றும் மதி ஒரு பழைய கட்டிடத்தின் முன் நின்றனர். அந்தப் பழைய மில்லே தான்!

 

“ஜான்.. அதுதான் லோகேஷன். அக்யூரேட்டா தெரியலைனாலும் உனக்கு நார்த்ல ஒரு பத்து மீட்டர் டிஸ்டென்ஸ்குள்ள தான் அந்த ஃபோன் லொகேஷன் காட்டுது” என்று விஷ் கூற, 

 

“ம்ம்” என்றவள் மதியைப் பார்த்தாள். 

 

அவன் மெல்லத் தலையசைக்க, அவனுடன் ஜான் பதுங்கிப் பதுங்கி உள்ளே நுழைந்தாள்.

 

ஏற்கனவே உள்ளே இருக்கும் பிரபா மற்றும் சிபி வேறு பக்கம் மறைந்திருந்து தேட, 

 

இரு பிணங்களுக்கும் அருகில் இரண்டே இரண்டு தடியர்கள் மட்டும் அமர்ந்திருந்தனர். 

 

“என்னடா அவரு எதும் கால் பண்ணாறா?” என்று ஒருவன் வினவ, 

 

“இல்லைடா. அடுத்து ஃபோன் பண்ணா பொணத்தை வெட்டி வீசிட்டு வேலைய பார்க்கப் போகலாம்” என்று மற்றையவன் கூறினான்.

 

அவனது குரல் அமைதியான அந்த இடத்தில் சற்று உரக்க ஒலிக்க, பிணங்களைத் தேடி வந்த நால்வரும் குரல் வந்த திசை நோக்கி முன்னேறினர்.

 

இருவரில் ஒருவன் மட்டும் சற்று இளைப்பாற வேண்டி நகர்ந்து வர, முன்னே நடந்து சென்று கொண்டிருந்த ஜான் அவனைக் கண்டதும் பதறி மறைவாக நின்றுக் கொண்டாள். 

 

அவன் செல்லவும் பின்னோக்கி நகரந்தவளது முதுகு யார் மீதோ மோதிய உணர்வைக் கொடுக்க, திடுக்கிட்டுப் போனவள், ‘செத்தேன்’ என்று நினைக்க அவள் நெற்றியில் துப்பாக்கியை வைத்து அழுத்தினான் பிரபாவின் தோழன் சிபி.

 

அதில் அரண்டு போனவள் முன் மதி தோன்றி, “ஏ பைத்தியம்.. உருப்பிடியா மறைஞ்சு போகத் தெரியுதா உனக்கு?” என்று திட்டினான்.

 

“யார் நீ? பிணத்த எங்க வச்சிருக்க?” என்று அவன் கேட்கவும், 

 

“பிரபா ஃப்ரண்ட் இவன் தான் போல ஜானு” என்று மதி கூறினான். 

 

“நி..நீங்கப் பிரபா ஃப்ரண்டா?” என்று அவள் கிசுகிசுப்பான குரலில் வினவ, 

 

அவளைத் திருப்பியவன் கேள்வியாய் பார்த்தான்.

 

“இ.இந்த லொகேஷன் தந்த பொண்ணு நான் தான்” என்று மீண்டும் அவள் கூற, அவனிடம் அதே சந்தேகப் பார்வை. 

 

“இன்னொரு பொணம் என் ஆளுதான்னு ஃபீலிங்கா சொல்லுடி” என்று மதி கூற, 

 

‘இவன் வேற’ என்று எண்ணியவள், முயன்று வரவழைத்த கரகரக்கும் குரலோடு, “அ.. அந்த இன்னொரு பிணம்.. என்.. என் மகி” என்று முகத்தை மூடிக் கொள்ளவும், 

 

“இது ஒன்னு வசதியா கத்து வெச்சுக்கிட்டடி. முகத்தை மூடி உடம்பை ரெண்டு குலுக்கு குலுக்கினா அழுவுறதா ஆயிடுது” என்று மதி கூறினான்.

 

‘மவனே நீ பொழச்சு வாடா நானே உன்னைக் கொல்லுறேன்’ என்று எண்ணிக் கொண்டவள், “என் மகி எனக்கு வேணும்” என்க, 

 

தற்போது அவனிடம் அந்தச் சந்தேகப் பார்வை இல்லை. 

 

“எங்க கிட்ட கேட்டுட்டு நீங்க எதுக்கு வந்தீங்க?” என்றவன் ஏதோ சத்தம் கேட்கவும், 

 

“வெளியவே இருங்க. அதுதான் நல்லது” என்றுவிட்டுச் சென்றான்.

 

“ஹப்பா..” என்று பெருமூச்சுவிட்டவள், “வாடா..” என்று மதியைக் கூட்டிக் கொண்டு நகர, 

 

நடை பயின்று கொண்டிருந்த அடியாள் மீண்டும் அவ்வழியில் வந்தான். 

 

தற்செயலாய் ஒரு திருப்பத்தில் இருவரும் சந்திக்க நேரிட, அவனைக் கண்டவுடன் “ஆ..” என்று மதி கத்திவிட்டான்.

 

அவன் கத்தியதில் திடுக்கிட்டுப் போன ஜானும் கத்திவிட, அங்கு பிணத்தின் அருகே இருந்தவனும் சத்தம் கேட்க எழுந்துவிட்டான்.

 

மதி கத்தியதில் ஜான் கத்த, ஜான் கத்தியதில் அந்தத் தடியனும் கத்திவிடவும் தான் சுயம் பெற்றவள் பக்கவாட்டாகத் திரும்பி, “பக்கி நாயே.. அறிவில்ல.. மனுஷி நானே பயப்படலை. நீ பேய் தான? உனக்கெதுக்குடா பயம்? நீ கத்தி உன்னால நான் கத்தி என்னால இந்தண்ணன் கத்தி” என்று திட்டினாள்.

 

ஆளில்லா கடையில் டீ ஆத்துவது போல் யாருமே இல்லாமல் அவள் பேசுவதை அவன் அதிர்ந்து நோக்க, 

 

“சாரி பிரதர்.. இவன் அப்பப்ப பேயாயிட்டதை மறந்து மறந்து போயிடறான். நீங்க வேற தாடி கீடிலாம் வச்சு வெறப்பா இருக்கவும் பயந்துட்டான்” என்றாள்.

 

அதில் மேலும் குழம்பிப் போனவன், நகர இருந்தவளின் கைபற்றி நிறுத்தி, “யாருமா நீ?” என்று எகுற, 

 

அந்த இன்னொரு தடியனும் வந்திருந்தான். 

 

“பாருடா.. உன்னால இன்னொரு அண்ணாவும் வந்துட்டாங்க” என்றவள் “அண்ணா.. நான் சிவனேனு தான் வந்தேன். இவன் தான் முதல்ல கத்தினது” என்று அருகே காட்டினாள்.

 

அவள் சுட்டிக்காட்டிய காலி இடத்தைப் பார்த்து எச்சிலைக் கூட்டி விழுங்கியவன், “டேய் உனக்கு எதும் தெரியுது?” என்று வினவ, 

 

“இல்லைடா” என்று மற்றையவன் கூறினான்.

 

“என்ன யாருமே இல்லாம படம் காட்றியா?” என்று அவன் கத்த, 

 

“அய்யோ சத்தியமா இருக்கான் ணா. டேய் அண்ணா கேக்குறாருல.. உன் வித்தை எதையாச்சும் காட்டுடா” என்றவள் “ஸ்விட்ச் போர்ட் எங்க இருக்கு அண்ணா” என்று கேட்டாள்.

 

இருவரும் திருதிருவென விழிக்க, 

 

“ஒன்னும் பிரச்சினை இல்ல ண்ணா” என்றவள், “டேய்.. அந்தக் கிடக்குற ட்ரம்மெல்லாம் உருட்டி விடு” என்க, அனைத்தும் டமடமவென உருண்டன.

 

அதில் இருவரும் அரண்டுபோக, 

 

“ஏய்.. உன்கூட வேற யாரு இருக்காங்க?” என்கையில் தான் அவனுக்குப் பிணத்தின் நினைவு வந்தது. 

 

“டேய் இவள கெட்டியா புடிச்சுக்கடா” என்று அவன் திரும்புகையில் கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்த சிபி “யூ ஆர் அன்டர் அரெஸ்ட்” என்று கூறினான்.

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்