Loading

அத்தியாயம் 25

 

அன்று செவ்ந்தியுடன் நடந்த சம்பவத்தின் பின்னர் பார்க்கவியிடம் மீண்டும் ஒரு இருக்கம்.

 

இத்தனை நாட்கள் பாடசாலையிலாவது அஸ்வந்துடன் சேர்ந்து சாப்பிடுவாள், அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருப்பாள். சில நேரம் அவர்களது சம்பாஷனைகளின் நேரம் அவளது உதட்டோரம் புன் முறுவல் கூட வருவது உண்டு.

 

ஆனால் அன்றைய நாளின் பின்னர் அவர்களுடன் அமர்ந்து சாப்பிடுவதை தவிர்த்து விட்டாள்.

 

கண்மணி எவ்ளவு கூப்பிட்டும் அவர்களுடன் உணவு உண்ண செல்லவில்லை.

 

முதல் இரண்டு நாட்கள் பசிக்கவில்லை என்று சொல்லிவிட்டு, அவர்கள் சாப்பிட்டு வந்ததன் பின்னர் தனியாக சென்று சாப்பிட்டாள்.

 

இதை கவனித்த கண்மணி அவள் எவ்வளவுதான் பசிக்கவில்லை என்று சொன்னாலும், வலுக்கட்டயமாக கூட்டிச் சென்று விடவாள்.

 

அப்படி பிடிக்காமல் அங்கு சென்று அமர்ந்தாலும், வாயை திறக்காமல் வேகமாக சாப்பிட்டுவிட்டு எழுந்து வந்து விடுவாள்.

 

அவளது நடவடிக்கைகளில் ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதை கண்மணி, மாளவிகாவினால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால் என்னவென்று தான் புரியவில்லை.

 

பார்கவியை தன் மனைவி என்று அறிமுகப்படுத்திய அன்று மதியமே, (பார்கவி) என்ற பெயரை வைத்து, இதற்கு முன் அஸ்வந் தனக்கு அண்ணியாக வரப்போகின்றவளின் பெயர் பார்கவி என்று கூறியது நினைவு வர, அப்போதே தன் சந்தேகத்தை கேட்டிருந்தாள் கண்மணி.

 

அவளிடம் அபர்ஜித்தினால் நடந்த குளறு படியும், அதனால் அஸ்வந் பார்கவியை திருமணம் செய்து கொண்டதையும் சொல்லியிருந்தான்.

 

எனவே பார்கவியின் மனநிலையை கொஞ்சம் கண்மணியால் புரிந்து கொள்ள முடிந்தது.

 

அண்ணனை திருமணம் செய்வதாக நினைத்து, ஆசைப்பட்டவள், தம்பியுடன் உடனே எப்படி இணக்கமாக நடந்து கொள்ள முடியும்.

 

இருந்தாலும் விலகி விலகிச் செல்வதால் எந்த பயனும் இல்லையே. இதைப் பற்றி பார்க்கவியிடம் பேசுவதா? இல்லையா? என்ற தயக்கமும் கண்மணியிடம் இருந்தது.

 

அதேநேரம் பார்கவியின் மாற்றத்தை அஸ்வந் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதும் அவளுக்கு நெருடலாக இருந்தது.

 

இப்போதும் வழமை போன்று நால்வரும் ஒரு பென்சில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க,

 

அஸ்வந் பார்கவியை ஒரு பார்வை பார்த்தவன் ‘இவள எப்படி ஹாண்டில் பண்றது.. எப்பதான் சரியாவா?..’ என்று மனதில் நொந்து கொண்டு,

 

தன் மனநிலையை மாற்றும் பொருட்டு “கண்மணி நாளைக்கு சாட்டர்டே தானே படத்துக்கு போகலாமா?…” என்று கேட்க

 

கண்மணியோ கடைக்கண்ணால் பார்க்கவியை பார்த்துவிட்டு “இல்ல அஸ்வந், நாளைக்கு வேற கமிட் பண்ணி இருக்கேன், நானும மாளவிகாவும் ஒரு பங்க்ஷன் அட்டென்ட் பண்ணனும்…” என்று சொல்ல

 

“ஓ.. சரி விடு அடுத்த சாட்டர்டே போகலாம்.. ஹா வரும்போது தான் கவனிச்சேன், நம்ம நர்சரியில புதுசா நிறைய செடி வந்து இருக்கு.. ஸ்கூல் முடிஞ்சது வெயிட் பண்ணு ரெண்டு பேரும் போறோம், இருக்குற செடி எல்லாத்தையும் தூக்குறோம்…” என்று அவன் சொல்ல

 

“இல்ல அஸ்வந் நீங்க போய் பாருங்க.. எனக்கு இருக்கிற செடிய வைக்கவே இடம் போதல…” என்று சொல்ல

 

“அட நீ வாங்கலன்னா பரவால்ல கூட வந்து செலக்ட் பண்ணி தா…”

 

“இல்ல.. எனக்கு வேற வேல இருக்கு…” என்று அவள் அவனை தவிர்க்கும் பொருட்டு எவ்வளவு கூறியும், அவனுக்கு அது புரியவில்லை .

 

“என்ன கண்மனி இப்பெல்லாம் என் கூட சரியா பேச மாட்டேங்குற.. என் கூட வெளிய வர பமடாடேங்குற…” என்று அவன் குற்ற பத்திரிகை வாசிக்க,

 

கடுப்பாக அமர்ந்திருந்த பார்கவி, தன் மனதிற்குள் இருந்த அழுத்தத்தினால் அவர்களின் பேச்சில் எரிச்சலானவள்

 

“கண்மணி நீ நாசுக்கா அவர அவாய்ட் பண்றது அவருக்கு புரியாது.. ஸ்ட்ரெயிட்டாவே சொல்லிடு..

 

…உங்கள வன் சைட்டா லவ் பண்ணதால தான் இத்தன நாள் உங்களுக்காக எல்லாம் பார்த்து பார்த்து பண்ணுனேன்.. உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணனேன்.. இப்போ உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சில்ல, சோ அதனால அவாய்ட் பண்றேன்னு டைரக்டாவே சொல்லிடு…” என்று சொல்ல

 

அங்கிருந்த மற்ற மூவருக்கும் தூக்கி வாரி போட்டது. அஸ்வந் அதிர்ந்து போய் கண்மணியைப் பார்க்க, கண்மணியும் அதிர்ச்சியாக பார்க்கவியை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

மாளவிகா ‘போச்சி போ இது எப்படி இவளுக்கு தெரியும்..’ என்று மனதுக்குள் நினைக்க

 

அஸ்வந் பார்கவியிடம் “என்ன சொல்ற நீ…” என்று புரியாமல் கேட்க

 

கண்மணி பதறி கொண்டு “ஐயோ! பார்கவி நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல.. ஜஸ்ட் எனக்கு அஸ்வந்த புடிக்கும் அவ்ளோதான்…” என்று சொல்ல

 

கையை நீட்டி அவளை தடுத்தவள் “நீ ரொம்ப பயப்பட வேணாம்.. நான் இன்டர்வியூக்கு வந்த முதல் நாள் நீயும் மாளவிக்காகவும் பேசுனத கேட்டேன்.. உன் எண்ணத்த நான் தப்பா சொல்லல.. நீ முன்கூட்டியே அஸ்வந் கிட்ட சொல்லி இருந்தா சில விஷயங்கள் நடக்காம இருந்திருக்கும்.. அது எல்லோரோட வாழ்க்கைக்கு நல்லதா அமைஞ்சிருக்கும்..

 

…பொண்ணுங்க சில விஷயத்த சத்தம் போட்டு அழுத்தமா சொல்லணும்.. இல்லனா ஆம்பளைங்க நம்மள இஷ்டத்துக்கு வச்சு விளையாடிட்டு போயிடுவாங்க.. உன் மனசுல என்ன இருக்குன்னு அழுத்தமா, உடைச்சு சொல்லிடு…” என்றவள் எழுந்து சென்று விட்டாள்.

 

அஸ்வந்தை தவிப்பாக பார்த்த கண்மணி “அஸ்வந்! ஐ அம் ரியலி சாரி.. உண்மையாவே இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. நீங்க திடீர்னு கல்யாணம் பண்ணிப்பீங்கனு நான் நினைக்கவே இல்ல..

 

… அன்னைக்கு நீங்க பார்கவிய வைஃப்னு அறிமுகப்படுத்தினதும் மாளவிகாக்கு என் லவ் தெரியும்ன்றதால தனியா கூப்பிட்டு அதைத்தான் கேட்டா.. நான் கனவுல கூட நினைக்கல நாங்க பேசுனத பார்கவி கேட்டிருப்பானு..

 

…அது என்னோட ஒரு விருப்பம் தான், எப்ப உங்களுக்கு கல்யாணமானது தெரிஞ்சுதோ அப்பவே நான் என் மனச மாத்திக்கிட்டேன்…” என்று சொல்ல

 

“ஒரு வார்த்த என்கிட்ட சொல்லி இருக்கலாம் கண்மணி…” என்று மட்டும் சொன்ன அஸ்வந் எழுந்து சென்று விட்டான்.

 

“என்னடி இப்படி ஆயிடுச்சு…” என்று கவலையாகவும் பரிதவிப்பாகவும் மாளவிகாவிடம் கண்மணி கேட்க,

 

அவள் தோளில் கை வைத்த மாளவிகா “விடு.. நீ எத்தன நாளைக்கு மறைக்க முடியும்.. தெரிஞ்சது நல்லது தான்.. ஆனா பார்கவி கிட்ட நீ கொஞ்சம் பேசு.. ஒருவேள இந்த விஷயம் தெரிஞ்சதால தான் அஸ்வந் கிட்ட இருந்து அவ விலகுறாளோ தெரியலயே..

 

“ஆனா வேலைக்கு வந்தப்போ ஓகேவா தானே இருந்தா.. இந்த அஞ்சு நாளா தானே இப்படி இருக்கா…”

 

“நீ எதுக்கும் உன் பக்கத்து விளக்கத்த கொடுக்கிறது நல்லது கண்மணி.. ஒருவேள அஞ்சு ஆறு நாளைக்கு முன்னாடி இத பத்தி மறைமுகமாக கேட்டு, அஸ்வந் எதுவும் சரியான பதில் சொல்லாததால கோபப்பட்டு இருக்கலாம்..

 

…என்னதான் பிடிக்காத கல்யாணமா இருந்தாலும் வைஃப் ஆனதுக்கு பிறகு பொசசிவ்னஸ் வருந்தானே…” என்று மாளவிகா சொல்ல

 

” சரிடி வீட்டுக்கு போனதும் நான் பொறுமையா எடுத்து சொல்றேன்…” என்று சொன்னவள் தலை வலிக்க தலையை கையில் பிடித்தபடி பெஞ்சில் சாய்ந்து விட்டாள்.

 

அன்று பாடசாலை முடிந்து பார்கவி வீட்டிற்கும் வந்து விட்டாள். அவளை பொறுத்தவரை கண்மணி அஸ்வந்தை காதலிப்பதோ, இல்லை அஸ்வந்துக்கு அந்த காதல் விடயம் தெரிய வந்ததோ ஒரு பொருட்டே கிடையாது.

 

அவள் அப்போது இருந்த மன நிலைக்கு எதையோ பேசி விட்டு அப்போதே மறந்து விட்டாள்.

 

வீட்டிற்கு வந்த பின்னர் கண்மணியிடமிருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டிருக்க

 

இரண்டு மூன்று தடவை விட்டவள், அதன் பின் அழைப்பை ஏற்க கண்மணியோ “ப்ளீஸ் பார்கவி நான் பேசுறத கொஞ்சம் கேளு.. உங்க கல்யாணத்துக்கு முன்னாடி அஸ்வந்த வன் சைடா லவ் பண்ணது உண்மை..

 

ஆனா எப்போ அஸ்வந்துக்கு கல்யாணமானது தெரிஞ்சதோ அப்பவே என் மனச மாத்திக்கிட்டேன்.. அதே நேரம் அஸ்வந்த நான் சந்திச்சதுல இருந்து இப்ப வரைக்கும் அவர் என் கூட பழகுறது ஒரு பிரெண்ட் என்ற வகையில மட்டும் தான்..

 

…அத தாண்டி அவர் எப்பவுமே என்கிட்ட பழகுனதும் இல்ல என்ன யோசிச்சதும் இல்ல.. என்னோட ஒரு தல காதலால உங்க வாழ்க்கையில எந்த ஒரு மன கஷ்டத்தையும் ஏற்படுத்திக்காதிங்க.. நான் வேணும்னா இனி அஸ்வந்த பாக்கல, பேசல…” என்று அவள் பேசிக் கொண்டிருக்க ,

 

கண்மணியின் அழைப்பை ஏற்று பார்கவி பேசிக் கொண்டிருந்தது தோட்டத்திலிருந்து தான்.

 

அவள் பேசுவதை கேட்டுக்கொண்டு டென்ஷனாக நெற்றியை நீவியவாறு தனது அறைக்கு செல்வதற்காக வீட்டினுள் வந்தவள், சென்றதென்னவோ ஆபர்ஜித்தின் அறைக்கு தான்.

 

“இங்க பாரு கண்மணி.. நீ நினைக்கிற மாதிரி எங்க வாழ்க்கைல உன்னால எந்த பிரச்சனையும் வரப்போறதில்ல..

 

…புருஷன ஒருத்தி, ஒரு தலையா காதலிக்கிறான்னதும் பொசசிவ் ஆகறதுக்கோ, இல்ல உன்ன வன்சைட்டா லவ் பண்ண ஒருத்தியோட எதுக்கு நெருங்கி பழகுறனு கேட்டு சண்ட போடுறதுக்கோ.. அந்த அளவுக்கு நெருக்கமான கணவன் மனைவி நாங்க கிடையாது..

 

…சொல்லப்போனா என் கல்யாணம் நடந்ததே எனக்கு கனவு மாதிரி தான் இருக்கு.. நிகழ்காலத்த ஏத்துக்க முடியாம நானே தவிச்சிட்டு இருக்கேன்..

 

…இதுல உன்னோட வன் சைட் காதலயோ இல்ல உன்கிட்ட அஸ்வந் எந்த வகையில பழகுகிறார் என்றதையோ யோசிக்கிறதுக்கு எனக்கு நேரம் இல்ல.. விருப்பமும் இல்ல …” என்று விட்டு தொலைபேசியை அணைத்தவள் திடுக்கிட்டாள்.

 

அவள் கண் முன் அபர்ஜித்தின் புகைப்படம். அப்போதுதான் அறையைச் சுற்றி பார்த்தாள்.

 

அது அபர்ஜித்தின் அறை. இதயம் பட வென்று துடிக்க, நெஞ்சுக்கூடு வேகமாக ஏறியிறங்க, கண்களில் தாரைதாரையாக கண்ணீர் வடிந்தது.

 

அவளையும் அறியாமல் அவளது ஆழ் மனதில் பதிந்து போனது, அபர்ஜித்தின் அறை தான் அவளினறை என்பது.

 

முகத்திலேயே அறைந்து கொண்டு அங்கேயே அமர்ந்து அழுதாள். மீண்டும் மீண்டும் கட்டிய தாலிக்கு அவள் செய்யும் துரோகமாக தோன்றியது.

 

மனதுக்கும் மாங்கல்யத்துக்கும் நடுவில் அவளது உணர்வுகள் நசுங்கிக் கொண்டிருந்தது.

 

அழுது, அழுது கண்ணீர் ஓய்ந்து போக, ஒரு நடைப்பிணம் போன்று, சாவி கொடுத்த பொம்மை போல் எழுந்து, தனது அறைக்கு வந்து பால்கனியின் ஒரு ஓரத்தில் அமர்ந்து, கால்களை கைகளால் கட்டிக்கொண்டு குறுகி அமர்ந்து இருந்தாள்.

 

அஸ்வந் அறையினுள் வந்ததையோ, முதலில் அவளைக் கண்டுகொள்ளாதவன், மணி 12 கடந்த பின் அவளிடம் வந்து தூங்க சொல்லி கெஞ்சியதோ, ஏன் சாப்பிடவில்லை என்று அக்கறையாக கேட்டதோ, எதுவும் அவளது மூளையில் பதியவில்லை.

 

சித்தப்பிரம்மை பிடித்தது போன்று அமர்ந்திருந்தவளை அதற்கும் மேல் எப்படி சமாதானப்படுத்துவது என்று அவனுக்கும் புரியவில்லை .

 

அஸ்வந்தை பொறுத்தவரையில் கண்மணி விடையம் தெரிந்து விட்டதால் இப்படி இருக்கின்றாளோ என்று சற்று கோவமாகத் தான் இருந்தது.

 

அவனை ஒருதலையாக அவள் காதலித்ததற்கு, இவன் என்ன செய்ய முடியும். வேண்டுமானால் இனி அவளிடம் இருந்து சற்று விலகி நடக்க முடியும். அதை கூட சொல்லிவிட்டான் ஆனால் அவளிடம் எந்த எதிர்வினையும் இருக்கவில்லை .

 

பெருமூச்சு விட்டவன் உறங்க பிடிக்காமல், அவளைப் பார்த்தவாறு சோஃபாவில் அமர்ந்து விட்டான். அவனையும் அறியாமல் தூங்கியும் போனான் .

 

அடுத்த நாள் காலை. அதே இடத்தில் அவளும் தூங்கி இருந்தாள். அவளைப் பார்த்து பெருமூச்சு விட்டவன் எழுந்து தயாராகி அலுவலகம் வந்துவிட்டான்.

 

ஆனால் அன்று சனிக்கிழமை என்பதால்தான் பார்கவி பாடசாலை செல்ல வேண்டியதில்லை.

 

ஆனாலும் அறையை விட்டு அவள் வெளியவும் வரவில்லை. சாப்பிடவில்லை, ஏன் குளித்து உடைமாற்றக் கூட இல்லை,

 

நெற்றியில் இருந்த பொட்டு கூட எங்கோ விழுந்திருக்க, தலை கலைந்து, ஆடை கலைந்து கணவனை இழந்த அபலை போன்று இருந்தாள்.

 

செவ்வந்தி இரண்டு மூன்று தடவை கதவை தட்டிப் பார்த்து விட்டார். அவளிடம் பதில் இல்லை. மதியம் வரை பார்த்தவர் அதன் பிறகு பயந்தவர், அஸ்வந்திற்கு ஃபோனை போட்டு சொல்ல ,

 

அவனும் அடித்து பிடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான். அவன் கதவை தட்டி சத்தம் போட்டும் அவள் திறக்கவில்லை.

 

“பார்கவி!..கவி நீ மட்டும் இப்ப கதவ திறக்கல நான் உடைச்சிட்டு உள்ள வந்துருவேன்…” என்று சொல்லி வேகமாக கதவை தட்டவும் தான், கதவை திறந்தாள்.

 

அவள் இருந்த கோலத்தை பார்த்து செவ்வந்திக்கு உள்ளம் திடுக்கிட்டது.

 

“அம்மாடி பார்கவி என்னடா ஆச்சு?, ஏன் காலையில இருந்து கதவ திறக்காம இருந்த…” என்று கேட்க அவளிடம் பதில் இல்லை.

 

யாரையும் கண்டு கொள்ளாமல் சென்று சோஃபாவில் கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்து விட்டாள்.

 

செவ்வந்தி தவிப்பாக அஸ்வந்தை பார்க்க, கண்களால் தாய்க்கு ஆறுதல் கூறியவன் “நீங்க போங்க.. நான் பாத்துக்குறேன்…” என்று விட்டு

 

உள்ளே வந்தவன் “பார்கவி என்னதான் ஆச்சு உனக்கு?.. நான் தான் கண்மணி கிட்ட இனி பேசலன்னு சொல்லிட்டேன்ல.. இந்த சின்ன விஷயத்துக்கு நீ இப்டி பண்றது சரி இல்ல…” என்று அவன் எவ்வளவு கூறியும் அவளிடம் எந்த மாற்றமும் இல்லை.

 

அவளது மனநிலை என்னவென்று அங்கு யாருக்கும் புரியவுமில்லை. வாயை திறந்து சொல்லவும் அவளுக்கு தோன்றவில்லை.

 

அன்றைய நாள் முழுவதும் அவள் உண்ணவுமில்லை. அஸ்வந் அதன் பிறகு அலுவலகம் செல்லவும் இல்லை. அவனும் உணவு எடுத்துக் கொள்ளவில்லை.

 

செவ்வந்தி கவலையாக அமர்ந்திருக்க, அபர்ஜித்தும் விடயம் தெரிந்து மனது வருத்தப்பட்டான். தன்னால் தான் அத்தனையும் என்று தனக்கு தானே திட்டியும் கொண்டான்.

 

ஆனால் பார்கவி மனதை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று தான் அவனுக்கு புரியவில்லை.

 

அடுத்த நாள் காலை, வேலையை பார்த்த செவ்வந்தி, காலை உணவிற்கும் அவள் வெளியே வரவில்லை என்றதும், அதற்கு மேல் பொறுக்க முடியாமல் விறுவிறுவென்று சென்றவர்,

 

அப்போதுதான் குளித்து விட்டு வந்த பார்கவியிடம் “பார்கவி என்ன தான் உனக்கு பிரச்சனை.. நீ இந்த வீட்டோட மருமக உனக்கு அது ஞாபகம் இருக்கா இல்லையா.. இப்படி அறைக்குள்ள அடைஞ்சு கிடக்கிறதுக்கா உன்ன கல்யாணம் பண்ணி இங்க கூட்டிட்டு வந்தோம்…” என்று அவ்வளவு தான் கேட்டிருப்பார்

 

அவரை ஒரு பார்வை பார்த்தவள் விறு விறுவென்று வெளியே வந்தாள். டைனிங் டேபிளில் இருந்த காய்கறிகளை கண்டவள் அதை எடுத்து அதில் இருந்த கொத்தவரங்காயை வேகமாக பொடிப்பொடியாக வெட்ட ஆரம்பித்தாள் .

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்