
அத்தியாயம் 24
பர்விதா நினைத்து போன்று அபர்ஜித் அவளைப் பார்ப்பதற்கு வரவில்லை.
காலேஜை சுற்றி பார்வையை தினமும் ஓடவிட்டாள். எங்குமே அவன் இருப்பதற்கான சிறு தடையம் கூட இல்லை. மூன்று நாட்கள் பொருத்து பார்த்தாள்.
அதற்கு மேல் அவனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. தன் ஃபோனில் அவன் நம்பரை ப்ளோக் செய்து வைத்ததை எடுத்து விட்டாள்.
அவனிடம் இருந்து அழைப்பு வருமா என்று அன்றைய நாள் முழுவதும் காத்திருந்தாள். ஆனால் ஒரு மெசேஜ் கூட வரவில்லை.
அன்று இரவு தூங்கும் போது கதவை பூட்டாமல் லேசாக சாற்றி விட்டு படுத்திருந்தாள். திருடன் தனக்குத் தெரியாமல் தன்னை பார்க்க வருவான் என்று. அன்று இரவு முழுவதும் அவள் விழித்திருந்தது தான் மிச்சம் அவன் வரவில்லை.
காலையில் கண்கள் எரிந்தது. கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது. தூக்கம் இல்லாதனால் கிடையாது, அவன் தன்னை தவிர்க்கின்றான் என்பதால்.
இவள் அவனை தவிர்க்கும் போது தெரியாத வலி, அவன் இவளை தவிர்க்கும் போது தெரிந்தது .
கண்ணீரை துடைத்துக்கொண்டு வேகவேகமாக தயாரானவள் காலேஜ் வந்து சேர்ந்திருந்தாள். காலேஜ் வாசலில் வெகு நேரம் நின்று, அன்றாவது அவன் வரமாட்டானா என்று காத்திருந்தாள். அவன் வரவில்லை.
வகுப்பறையில் வந்து அமர்ந்தவளுக்கு மனதில் அவன் மட்டுமே, சுற்றி இருந்த எதுவும் அவள் கவனத்தில் இல்லை.
தொலைபேசியை எடுத்து அவனுக்கு அழைப்பு எடுத்தாள். ஒன்று, இரண்டு, மூன்று என்று அழைப்புகள் 20 30தை கடந்திருந்தது. அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
அவள் அழுது கரைய அவளது மனசாட்சியோ ((உன்ன தான் தேடி வரச் சொன்னாருல்ல.. ஒரு தடவ அவர் முன்னாடி போய் நின்னா எல்லாம் முடிய போகுது.. உனக்கு எதுக்கு இவ்ளவு வீம்பு)) என்று கேட்க
‘முடியாது! எனக்கு அவர் வேணும்.. ஆனாலும் தேடி போகலாம் முடியாது…’
((அப்போ எக் கேடோ கெட்டு ஒழி.. நேத்துல இருந்து என்ன போட்டு படுத்துற)) என்று திட்டிவிட்டு சென்றது அவளது மனசாட்சி.
நகத்தை கடித்து யோசித்தவள், காலேஜ் முடியவும் வெளியே வந்து வெகு நேரம் அங்கேயே நின்றாள். பின் அந்த வழியாக வந்த ஆடோவை கையை காட்டி ஏறிக்கொண்டவள் நேராக வந்ததென்னவோ கடற்கரைக்கு தான் .
கடற்கரைக்கு வந்தவள் ஒரு போர்ட் அருகே சென்று கடல் அலைகளை பார்த்துக் கொண்டிருக்க,
அவள் பின் “ஓய் கேடி!.. இங்க என்ன பண்ற…” என்று ஆபர்ஜித்தின் குரல். பர்விதாவின் இதழ்களில் அழகிய புன்னகை.
அவளை உரசுவது போல் வந்து நின்றவன், அவள் மார்பை மறைத்து போட்டு இருந்த துப்பட்டாவை உருவி எடுக்க, அவனை செல்லமாக முறைத்தவள்
“என் மானத்த வாங்குறதுலேயே குறியா இருக்க வேண்டியது…” என்று சொல்ல
“எனக்கு சொந்தமானது தானே!.. நான் வாங்கலாம் பரவால்ல…” என்று அவளுக்கு பதில் கூறியவாறு, அவளது துப்பட்டாவை மணலில் விரித்தான்.
“ஆஹா! யாரோட மானம் யாருக்கு சொந்தம்.. பட்டா போட்ட மாதிரி தான் பேச்சு…” என்று அவள் சொல்ல
பட்டா போட்டு பல மாசம் ஆயிடுச்சு.. அதுவும் மொட்ட மாடியில, இருட்டு அறையில…” சிரிக்காமல் அவன் கூறியதும்
பர்விதாவிற்கு வெட்கமும் சிரிப்பும் சேர்ந்தே வந்தது. எவ்வளவு முயன்றும் கன்னங்கள் சிவந்து, இதழ்கள் புன்னகைப்பதை மறைக்க முடியாமல் அவன் முகம் பார்க்காமல் கடற்கரையை திரும்பி பார்த்தாள்.
மணலில் விரித்த துப்பட்டாவில் அமர்ந்து “சரி வந்து உட்காரு ரொம்ப நேரமா நிக்கிற…” என்றான் அவளைப் பார்த்து,
தன் உணர்வுகளை மறைத்தவள், அவன் புறம் திரும்பி, “துப்பட்டாவ குடுங்க.. என்ன பழக்கம் இது.. நான் வீட்டுக்கு போகணும்…” என்று சொல்ல
“ஏன்டி இப்பவும் எதுக்குடி வீம்பு பண்ற.. இவ்ளவு தூரம் என்ன தேடி வந்தவ, அசையா நாலு வார்த்த பேசுவோம்.. ஒரு பத்து பன்னெண்டு முத்தம் கொடுப்போம்.. எதுவும் இல்ல.. போரேன் போரேன்னு எனக்கு கடுப்பேத்தாத…” என்று சொல்ல
“ஹலோ சார்!.. இது பீச்.. இங்க யார் வேணாலும் வரலாம்.. நான் உங்கள தேடி எல்லாம் வரல…”என்று சொல்ல
அவனோ எட்டி அவள் கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுக்க, அவன் மடியிலேயே கொண்டு விழுந்தாள் பர்விதா.
தன் மடியில் விழுந்த தங்கத் தாரகையை இடையோடு கையை படர விட்டு இறுக்கிக் கொண்டவன்,
“ஓய் ஃபிராடு!.. பீச்க்கு போகணும்னா உன் காலேஜ் பக்கத்துலயே இருக்கு.. அப்டி இல்லையா உன் வீட்டுக்கு போற வழியில கூட எங்கயாச்சும் போய் இருக்கலாம்.. எதுக்கு நம்ம வீட்டுக்கு பக்கத்துல வந்த..
…ஏன்டி என்ன போட்டு சாவடிக்கிற.. ஐ லவ் யூ ன்னு உன் வாயிலிருந்து அந்த வார்த்த வராதானு எவ்ளோ ஏங்கிட்டு இருக்கேன்.. எனக்காக தானே வந்த அதையாச்சும் ஒத்துக்கலாம் இல்ல…” என்று அவள் கன்னகதுப்பு, கழுத்து என்று கவ்வி விடுவித்து கவ்வி விடுவித்து என்று காதல் விளையாட்டு விளையாடியவாறு ரகசிய குரலில் அவன் கேட்க,
உடனே பதில் சொல்லும் நிலையில் தான் பர்விதா இருக்கவில்லை .
அவன் தடித்த அதரமும், தாறுமாறாக வந்த மூச்சு காற்றும், அவளை மோன நிலைக்கு இழுத்துச் செல்ல,
அலைகளின் சத்தத்தில் இருக்கும் இடத்தை உணர்ந்து அவனை தள்ளிவிட்டு பக்கத்தில் அமர்ந்து கொண்டவள்
“என்ன பண்றீங்க யாராவது பாத்திட போறாங்க…” என்று கடிந்து கொள்ள, அவள் தள்ளிவிட்டு விலகவும் கிரகத்திலிருந்து தெளிந்தவன்
“சாரிடி.. என்ன பண்ண சொல்ற.. உன்ன பாத்தாலே நான் அவுட் ஆப் கண்ட்ரோல்…” என்று சொல்லி பெருமூச்சு விட்டவன், அப்படியே சரிந்து அவள் மடியில் படுத்துக்கொண்டான் .
அவள் கைகள் தானாக அவன் தலை முடியை கோதி விட்டது. “ஓய் பர்வி ராத்திரி முழுக்க தூங்கலையா…” என்று கேட்க,
அவன் கன்னத்தை பிடித்து கிள்ளியவள்
“எப்டி தூங்க முடியும்.. தினமும் கண் முன்னாடி வந்து கொடச்சல் கொடுத்துட்டு.. இப்போ நீயா தேடி வானுட்டு மறைஞ்சிட்டீங்க..
நீங்க வருவீங்க வருவீங்கன்னு எவ்ளோ எதிர்பார்த்தேன் தெரியுமா.. சரி எனக்கு தெரியாம வீட்டுக்கு வந்து பாத்துட்டு போவீங்கன்னு கதவ திறந்து வச்சிட்டு நைட் ஃபுல்லாக முழிச்சிட்டு இருந்தேன்.. வரவே இல்ல…” என்றாள் கவலையாக
“ஆஆ.. வலிக்குதுடி அம்லு..” என்று தன் கன்னத்தை தடவியவன் “அச்சோ என் தங்க நிலவே!.. எனக்குமே கஷ்டமா தான் இருந்துச்சு உன்ன பாக்காம இல்ல.. நீ என்ன பாக்க முடியாம தவிக்கும் போது…”என்று சொல்ல அவள் கேள்வியாக அவனை பாரக்க
“ஆமா என்னால எப்டி உன்ன பார்க்காம இருக்க முடியும்.. தூரத்துல இருந்து உன்ன பார்த்துட்டு தான் இருந்தேன்.. ஆனாலும் உனக்கு என்ன வேணும்னு உனக்கே புரிய வைக்கணும்னு தான் இந்த கண்ணாமூச்சி ஆட்டம்.. இப்ப புரிஞ்சுதா.. உனக்கு நான் வேணும்டி…” என்று அவள் மூக்கை பிடித்து அட்ட
அவன் கையை தட்டி விட்டவள் “வேணும்தான்.. ஆனா யார் மனசும் புண்படாம.. எல்லாரும் ஆசீர்வாதம் பண்ணி நம்ம ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கணும்.. அது நடக்குமா?…” என்று கவலையாக அவள் கேட்க
“நீ ஃபீல் பண்றியா என்ன..உன் பேஸ என்னால பாக்க முடியல…” என்று அவன் சொல்ல
கடல் அலைகளை வெறித்தவள் குனிந்து அவனைப் பார்க்க
“ஹா.. இப்டி பாத்து பேசு.. நீ நிமிந்து இருந்தேன்னா உன் முகத்த உன்னோட மூலாம்பழம் ரெண்டும் மறைக்குது…” என்று கள்ளச் சிரிப்புடன் அவன் சொல்ல
சிறிது விநாடி கழித்தே அவனது விரசமான பேச்சு புரிய “ஐயே ச்சீ எந்திங்க…” என்று அவனை எழுப்ப
“முடியாது.. முடியாது.. எவ்ளவு சுகமா இருக்கு…” என்றவன் அவள் தொடையில் அழுத்தத்தை கொடுத்து, இடையோடு கட்டிக்கொண்டு, வயிற்றில் முகத்தை புதைக்க,
சுக வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தாது என்னவோ பெண்ணவள்தான்.
“நா..நான் என்ன..என்ன கேட்கிறேன்? நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க…?” என்று சொல்ல
விளையாட்டை கைவிட்டு எழுந்து அமர்ந்து, அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு
“நீ எதுக்கும் கவலப்படாத.. உனக்கும் எனக்கும் எல்லாரோட விருப்பத்தோடயும் எல்லாரோட ஆசிர்வாதத்தோடயும் கல்யாணம் நடக்கும்..
…உனக்கு ஒரு விஷயம் தெரியுமா பார்கவிக்கும் எனக்கும் கல்யாணம் பேசி முடிச்ச பிறகு, உங்க அப்பா உனக்கும் அஸ்வந்துக்கும் கல்யாணம் பண்ணனும்னு பேசி இருந்தாங்க..
…ஏன் தெரியுமா ரெண்டு பொண்ணுங்களையும் ஒரே இடத்துல கட்டி கொடுத்தா ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசயா இருப்பீங்க.. அது மட்டும் இல்லாம எங்க குடும்பத்த புடிச்சு போனதாலயும்..
…இப்போ என்ன ஜோடி மாறி போச்சு அவ்ளவுதான்.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் கண்டிப்பா பார்கவி மனசு மாறி அஸ்வந்தோட சந்தோஷமா வாழ்வா.. அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு குழந்த வரப் போற சந்தோஷமான செய்தி நமக்கு வந்ததும்..
…நம்ம விஷயத்த எல்லார்கிட்டயும் சொல்லி.. ஊர கூட்டி.. உன் கழுத்துல தாலி கட்ட வேண்டியது என் பொறுப்பு.. ஓகே…” என்று சொல்ல
அவன் நெஞ்சில் நாடியை குத்தி அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் “கண்டிப்பா நடக்கும் இல்ல.. எங்க அப்பா அம்மா முன்னாடி தான் நீங்க எனக்கு தாலி கட்டணும்.. அத தவிர்த்து வேற எதுக்கும் என்ன கட்டாயப்படுத்த கூடாது…” என்று சொல்ல
அவள் நெற்றியில் அழுத்தி முத்தம் பதித்தவன் “கண்டிப்பா உன் ஆச நிறைவேறும்.. சரி வா நம்ம வீட்டுக்கு போலாம்…” என்று அவன் கூப்பிட
“சரி கொஞ்ச நேரம் தான்.. எந்த சேட்டையும் பண்ண கூடாது.. நான் வீட்டுக்கு போகணும் லேட் ஆயிடும்…” என்று சொல்ல
“சரிடி வா…” என்று எழுந்தவன் அவள் கையை பிடித்து தூக்கி கைகளோடு கைகோர்த்தவாறு பீச் ஹவுஸ்க்கு வந்தான்.
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்ததும் “சரி வா படுக்கலாம்…” என்று அவன் கூப்பிட
“அடிங்க!.. நீங்க தான் வேணும்னு ப்ரூஃப் பண்ணதும் புத்திய காட்டுறீங்க இல்ல…” என்று கூறியவாறு சோஃபாவில் இருந்த குட்டி தலையணையை எடுத்து அவனை அடி வெழுக்க ,
“கொஞ்சம் பொறுடி.. பொறு…” என்றவாறு அவள் கைகள் இரண்டையும் தடுத்து பிடித்தவன்
“இப்ப நான் என்ன சொன்னேன்னு இப்டி கோபப்படுற…” என்று கேட்டவன் அவன் கூறிய வார்த்தையை யோசித்து விட்டு,
அவள் நெற்றியோடு நெற்றி முட்டியவன் “அட லூசு.. தூங்காம உன் கண்ணு ரெண்டும் சிவந்து இருக்கு கொஞ்ச நேரம் தூங்கலாமான்னு கூப்பிட்டேன்.. படுக்கலாம்னு சொன்னா உன் புத்தி அத எந்த மீனிங்ல எடுக்கிது.. நீ தான்டி பேட் கேர்ள்.. உன் புத்தி எங்க போகுது பாரு…” என்று அவன் திட்ட
நாக்கை கடித்தவள் “பொண்ணுங்க கிட்ட.. படுக்கலாமானு கூப்பிடக்கூடாது.. தூங்கலாம்னு சொல்ல வேண்டியது தானே…” என்று சமாளித்தாள்
“ஹலோ மேடம்.. பொண்ணுங்கள் கிட்ட எல்லாம் நான் போயிட்டு கூப்பிட மாட்டேன்.. ஆனா பொண்டாட்டி கிட்ட கூப்பிடலாம்ல…” என்று கண்ணாடித்தவன்
“கல்யாணம் ஆகட்டும்.. அப்போ கூப்பிடுறேன்..நீ வந்து தான் ஆகணும்.. இப்ப வா தூங்கலாம்…” என்று அவன் அழைக்க
அவனது வெட்கமில்லாத பேச்சில் நக கண் கூட கூசியது அவளுக்கு
“இல்ல.. நான் வீட்டுக்கு போய் தூங்கிக்கிறேன்.. என்ன வீட்ல கொண்டு விடுங்க…” என்று அவள் சொல்ல
நேரமானதை உணர்ந்தவன் “சரி வா.. நைட்டுக்கு சரி ரெண்டு பேரும் சேர்ந்து தூங்கலாம்…” என்று சொல்ல
“ஆஹா.. அஸ்கு புஸ்கு.. நான் இன்னைக்கு கதவ தாள் போட்டுட்டு தான் தூங்குவேன்…” என்று அவள் சொல்ல
கொடுப்புக்குள் நாக்கை சுழட்டியவாறு அவளை கேலி பார்வை பார்த்தவன் “நீ வீம்புக்கு என்ன ஒரு வேள தேடி வர மாட்டியோ என்ற டென்ஷன்ல.. இந்த நாலு நாளா நானும் தூங்கல.. அதனால உன் வீட்ல நீயும், என் வீட்ல நானும் இன்னைக்கு நைட்டு தூங்கலாம்னு நான் சொன்னேன்..
…எப்டி ரெண்டு பேரும் நம்ம வீட்ல தனித்தனியா.. ஆனா உன் மைண்ட் எப்டி போகுது.. உன்னோட விருப்பம் அதுதானா எனக்கு எந்த அஷ்டபனையும் இல்லை.. நைட்டுக்கு மதில் ஏறி குதிச்சிடுறேன்…” என்று அவன் கண்ணடிக்க
மறுபடியும் மறுபடியும் அவனிடம் அவசரப்பட்டு வார்த்தையை விட்டதை எண்ணி தன்னைத்தானே மனதுக்குள் கடிந்து கொண்டவள் அசடு வழிந்தபடி
“சாரி.. உங்க அலைஞ்சான் புத்தி தெரியுமா.. அதனால தப்பா, சரியா கெஸ் பண்ணிட்டேன் போல.. நீங்க திடீர்னு இவ்ளோ நல்லவரா மாறின நான் என்ன பண்றது.. என் மேல தப்பு கிடையாது…” என்று தோளை குலுக்கி கொண்டு அவள் முன் செல்ல,
அவள் கையைப் பிடித்து இழுத்து தன்னிடையோடு இறுக்கிக் கொண்டவன் “ஆமால்ல நான் இவ்ளவு நேரம் நல்லவனா இருந்தது போதும்.. உன்கிட்ட எப்பவுமே நான் அலஞ்சான் தான்டி…” என்றவன்
வழிந்து அவள் இதழ்களை கவ்விக்கொண்டான். பர்விதாவின் மனசுக்குள் ‘என்னடா புலி பதுங்குதேன்னு நினைச்சேன் பாஞ்சுடுச்சு’ என்றுதான் தோன்றியது.
இம்முறை அவனது இதழ் அசைவிற்கு அவளது இதழ்களும் இசைந்து கொடுத்தன
இசைந்து இசைத்து இதழ் தேன் பருகி இருவரும் களைத்து போக
உடலில் ஏற்பட்ட விபரீத அதீத உணர்வுகளால் இனியும் தாங்காது என்று விருப்பமே இன்றி அவன் அவள் இதழை விட
நாணத்தில் அவன் முகம் பார்க்காது அவள் முன்னே செல்ல, அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளை பார்த்துக்கொண்டு பின் சென்ற அபர்ஜித்
பர்விதாவை அவள் வீட்டின் அருகே விட்டு வந்தவன். இரவு முழுவதும் காதல் கனவுகளில் மிதந்தான்.
கனவுலகில் நிரந்தரமாக தங்கி விட முடியாதே! நிஜம் நெஞ்சை சுடும் வேளை நெருங்கியது.

